...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, March 24, 2015

                                போராட்ட கோரிக்கைகளில் ஒருசில 

உள்ளூர் பயிற்சி மையங்களை மூட சொல்லுவது ஏன் ?

     10 பேர் .10 நாட்கள் பயிற்சி என்ற பெயராலே வருவதும் .போவதுமாக இருக்கிறார்கள் .இருக்கின்ற ஆட்பற்றாக்குறையில் SINGLE HAND SPM என்றால் அவருக்கு பதில் ஆள் அனுப்பவேண்டும் .அந்த அலுவலகத்திற்கு மேலும் SHORTAGE .பயிற்சி முடித்து வருவதற்குள் மீண்டும் அதே அலுவலகத்தில் இருந்து மீண்டும் வேறொருவருக்கு பயிற்சி இதனால் கோட்ட அளவில் செயற்கையான ஆள் பற்றாகுறை சராசரியாக நாள் ஒன்றுக்கு 20 என்பது உறுதி ஆகிறது ,மேலும் சாதரண விடுப்புகள் /DEPUTATION என்பது வேறு 

 பயிற்சி மையங்களுக்கு ஆள் தேவை என்பதற்காக இந்த ஆட் பற்றாக்குறையில் கதறுவது நாம் தானே !

   காலுக்கு தகுந்தாற்போல் செருப்பு போட்ட காலம் மாறி 
   செருப்புக்கு தகுந்தாற்போல்  காலை வெட்ட சொல்வது நியாயமா ?
   செருப்புக்கு தோல் வேண்டி செல்வ குழந்தைகளை பழி கொடுப்பதா ?  

                            தலை பெருக்கிறது  --உடல்  சிறுக்கிறது   

கோட்ட அலுவலகத்தில் உட்கார நாற்காலி /மேஜை இல்லாமல் பாளையம்கோட்டையில் இருந்து மட்டும் பெருமளவில் ஊழியர்கள் DEPUTATION அனுப்ப சொல்வதையும் கோட்ட நிர்வாகம் மறு பரிசிலனை செய்ய வேண்டும் 
விளைவு பாளை CBS கவுன்ட்டர் 6 இயங்குவது 3அல்லது 4
SB  Back office அனாதை குழந்தைபோல் போனது .ACCOUNTS BRANCH அடுத்த வீட்டு பிள்ளை ஆனது .
        தொடரும்     SK .ஜேக்கப் RAJ  கோட்ட செயலர் 

0 comments:

Post a Comment