போனஸ் சீலிங் 3500 என்பது அகற்றப்படுமா ?
இந்த ஆண்டும் பழைய கணக்கில் தான் போனசா ?
இந்த ஆண்டும் பழைய கணக்கில் தான் போனசா ?
போனஸ் சட்டம் 2007 இல் ரூ. 2500/- இல் இருந்து ரூ. 3500/- ஆக உயர்த்தப்பட திருத்தம் செய்யப் பட்டது. ஆறாவது ஊதியக்குழுவுக்குப் பிறகு அடிப்படை ஊதியம் பல மடங்கு உயர்ந்தபின்னும் ரூ. 3500/- என்பது உயர்த்தப் படாமலேயே இன்னமும் உள்ளது. ஆகவே இதில் மத்திய அரசு உரிய சட்டத் திருத்தம் செய்திட வேண்டும் என்று கோரி மத்திய ரயில்வே துறை அமைச்சருக்கு AIRF பொதுச் செயலர் தோழர். சிவ கோபால் மிஸ்ரா அவர்கள் கோரியுள்ளார். இவர்தான் அனைத்து மத்திய அரசு ஊழியர் அமைப்புகளுக்குமான JCM (NATIONAL COUNCIL ) இன் ஊழியர் தரப்பு செயலரும் (SECREARY STAFF SIDE ) ஆவார். எனவே இதே கோரிக்கையை அவர் நேரடியாக மத்திய அரசுக்கும் செய்திட வேண்டுகிறோம்.
0 comments:
Post a Comment