...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, February 19, 2020

தமிழகத்தில் LGO மற்றும் GDS TO PA  தேர்வில் மேலும் தேர்ச்சிபெற்றவர்க்ளுக்கு மற்றுமொரு வாய்ப்பு இருக்கிறது--இதோ நமது NFPE -P 3  மாநிலச்சங்கத்தின் அறிக்கையை பாரீர் !
அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
மாநில நிர்வாகத்தின் தகவல்படி,
1. Postman/MTS ஊழியர்களுக்கு 2019 அறிவிக்கப்பட்ட காலியிடங்கள் 85 தவிர, SC/ST Back log vacancy சேர்த்தே தற்போது Select list கிட்டத்தட்ட 100 பேருக்கு வெளியிடப்பட்டுள்ளது.
 2. அடுத்தகட்டமாக,
முதலில் Postman/MTS to PA தேர்வில் வெற்றி  பெற்றவர்களுக்கு
Merit அடிப்படையில்,  நிரப்பப்படாத காலியிடங்களுக்கும், RMS/MMS பகுதியில் நிரப்பப்படாத  காலியிடங்களுக்கும் ஆக 140 வரை நிரப்பிட உரிய நடலடிக்கைகள் எடுக்கப்பட்டு பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் அதன்படி select list வெளியிடப்படலாம் எனவும் தெரிகிறது.
3. இதன்பிறகே GDS to PA தேர்வில் தகுதி பெற்றோருக்கும் merit அடிப்படையில் இதே வகையில் RMS/MMS வரை நிரப்பப்படாத அறிவிக்கப்பட்ட காலியிடங்களுக்கும் நிரப்பிட நடவடிக்கை எடுக்கப்படும். அநேகமாக இது இந்த மாதக் கடைசியிலோ அல்லது மார்ச் முதல் வாரத்திலோ நடக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்.
4.இந்த மாத இறுதியில் தற்போதைய CPMG அவர்கள் பணி நிறைவு பெற உள்ளதாலும், MTS/GDS to தபால்காரர் தேர்வுக்குப் பின்னரான DEST தேர்வு 8.3.2020 ல் நடைபெற உள்ளதாலும், MTS க்கான பதவி உயர்வுத் தேர்வு 15.3.2020 ல் நடைபெற உள்ளதாலும், நிர்வாக இயந்திரம் மேலே
கண்ட  வேலைகளில் முழுமையாக ஈடுபட்டுள்ளதால், 2019 தபால்காரர்/MTS to PA  காலியிடங்கள் மேலும் அதிகரிக்க  நமது தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கம் கோரியபடி (2019 LSG resultant vacancy) இதற்கான நடவடிக்கைகள்  இப்போது நடைபெற வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது.
5. ஆனால் இது நடக்க வாய்ப்பு உண்டா என்றால், உண்டு என்பதே நமது நம்பிக்கை. ஏனெனில் இப்படியான புதுப்புது வழிகளை உருவாக்கி புதிய கோரிக்கைகளை சரியான நேரத்தில்  முன்னெடுத்து வெற்றி பெறுவது என்பதே நமது NFPE யின் கடந்த கால வரலாறு.
6.. வரும் 29.2.2020 ல்
புதிய CPMG அவர்கள் பொறுப்பேற்றவுடன் அவரிடம் ஏற்கனவே நமது மாநிலச் செயலர் அளித்த இந்தக் கோரிக்கையை கொண்டு சென்று பேசுவார்.
7.. தேர்வு எழுதியவர்களில் Merit அடிப்படையில் தகுதியானவர்களை  காத்திருப்பு பட்டியலில் வைத்து,  இந்தக் காலிப் பணியிடங்கள் கணக்கிட்டவுடன் அவர்களுக்கு பணி ஆணை பெற முழு முயற்சியை  நம் தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கம் எடுக்கும் என்பதை உறுதியாக தெரிவிக்கிறது நமது NFPE பேரியக்கம் இந்த முயற்சியிலும் நிச்சயம் வெற்றிபெறும் .
ஆக்கபூர்வமான மற்றும் அறிவுபூர்வமான நடவடிக்கைகளில் செயல்படும் நமது NFPE பேரியக்கம் வலுபட துணைநிற்போம் !
தோழமைவாழ்த்துகளுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

1 comment: