மே 1 - - பாகுபாடு அற்ற ஒரு சர்வதேச விழா!
மே மாதம் முதல் தேதி, தொழிலாளர் வர்க்கத்தினருக்குப் பொன்னாள். உலகம் எங்குமுள்ள பாட்டாளி மக்கள் இத்தினத்தைக் கொண்டாடுகிறார்கள். தினம் 12 மணி நேர வேலையை 8 மணியாகக் குறைக்கத் தொழிலாளர்கள் போராடி வெற்றி பெற்றது, மே முதல் தேதியன்றுதான்.
1837-ல் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த வான்ப்யூரன், 14 மணி நேர மாக இருந்த வேலைத் திட்டத்தை மாற்றி, அரசாங்க அலுவலகங்களில் வேலை செய்வோர் 10 மணி நேரம் வேலை பார்த்தால் போதும் என்ற சட்டத்தைக் கொண்டு வந்தார். 'இந்தப் பத்து மணி நேரம் கூட அதிகம்; எட்டு மணி நேர வேலையே நிர்ணயிக்க வேண்டும்' என்று தொழி லாளர்கள் போராட்டம் தொடங் கினர்.
இதனால் ஏற்பட்ட ஆர்ப்பாட்டங்களை அடக்க முதலாளிகள் முயன்றனர். துப்பாக்கிப் பிரயோகம் நடைபெற்றதில் ஆறு தொழிலாளிகள் மாண்டனர். ஏராளமான பேர் காயம் அடைந்தனர். இதைக் கண் டிக்க 'ஹேய் மார்க்கெட்' என்ற இடத் தில் 30,000 தொழிலாளர்கள் ஒன்று கூடினர். இக்கூட்டத்தினர் மீதும் அடக்குமுறை கையாளப்பட்டது. இப் போராட்டத்தில் கைதான பலர் சிரச்சேதம் செய்யப்பட்டனர்.
1888-ல் அமெரிக்காவில் கூடிய தொழில் கூட்டு மகாநாடு, 8 மணி நேர வேலைத் திட்டத்தை வற்புறுத்தி யது. இப்போராட்டங்கள், மே மாதம் நடைபெற்றதால் இவை 'மே தினப் போராட்டம்' என்று பிரசித்தி பெற்றன. எவ்வளவோ இன்னல்களுக்குப் பின் இப்போராட்டம் வெற்றியடைந்தது.
1904-ல் ஆம்ஸ்டர்டாமில் கூடிய தொழிலாளர்கள் மாநாட்டில் ஒவ் வொரு மே 1-ம் தேதியன்றும் இவ் விழாவைக் கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
தொழிலாளர்களின் உரிமைகளை ஸ்தாபிக்கும் நாள்தான் மே தினம். இவ்விழா எந்த ஓர் அரசியல் கட்சிக் கும் சொந்தமானதல்ல. இது சாதி, சமயம், மொழி, நாடு, அரசியல் என்ற பாகுபாடு அற்ற ஒரு சர்வதேச விழா!
0 comments:
Post a Comment