புதுடில்லி: முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை, 136 அடியிலிருந்து, 142 அடியாக உயர்த்தும் தமிழக அரசின் கோரிக்கைக்கு எதிராக, கேரள மாநில அரசு இயற்றிய சட்டம் செல்லுபடியாகாது; அந்த சட்டம், அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என, சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன, பெஞ்ச் நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.மேலும், அணையின் பாதுகாப்பு கருதி, தேவையான பராமரிப்பு வேலைகளை, தமிழக அரசு மேற்கொள்வதற்கு, கேரளா எந்த இடையூறும் செய்யக் கூடாது என்றும், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment