...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, August 13, 2013

 கோட்ட/ கிளைச் செயலர்கள் கூட்டம்

மறுநாள், 10.08.2013 காலை 10.00 மணி அளவில்  தென் மண்டல கோட்ட/கிளைச்  செயலர்கள் கூட்டம் மாநிலத் தலைவர் தோழர். J . ஸ்ரீவெங்கடேஷ் அவர்கள் தலைமையில்   துவங்கியது. மாநில உதவிச் செயலர் தோழர் S .K . ஜேக்கப் ராஜ் அவர்கள் வரவேற்கமுன்னாள் துணைப் பொதுச்செயலர் தோழர். S . சுந்தரமூர்த்தி அவர்கள்  துவக்கி வைத்து தென் மண்டல பிரச்சினைகளை விளக்கியும் மண்டல இயக்குனரின் அடாவடிகளை விரிவாகவும் எடுத்துரைத்து உரை யாற்றினார். பின்னர் சம்மேளன செயல் தலைவர் தோழர். மனோகரன் அவர்கள் கூட்டத்தை வாழ்த்திப்  பேசினார். 

தொடர்ந்து  மாநில அமைப்புச் செயலர் தோழர் V .ஜோதி  தென் மண்டலப் பிரச்சினைகளை  சுருக்கமாக எடுத்துரைத்தார். அதன் பிறகு மாநிலச் செயலர் தோழர் J .R .அவர்கள் மாநில மாநாட்டில் எடுத்த முடிவு குறித்தும் ,முதல் கூட்டம், இரண்டு மாதங்களில்  தென் மண்டலத்தில் நடத்துவது குறித்தும்கூட்டத்தின் நோக்கம்  குறித்தும் விரிவாக  எடுத்துரைத்து ,கலந்து கொண்டுள்ள அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்களும்  அவரவர் பகுதிப் பிரச்சினைகளையும்  பொதுப் பிரச்சினைகளையும்  விரிவாக விளக்குமாறு   வேண்டுகோள் விடுத்தார். 

பின்னர்  தென் மண்டலத்தில் 17 கோட்ட/ கிளைச் செயலர்கள் தங்களது பகுதிப் பிரச்சினைகளை எடுத்துரைத்தனர்.   இதில் பெரும்  பகுதியினர் தென் மண்டல இயக்குனரின் அடாவடி நடவடிக்கைகளைப் பற்றியும் ,சட்ட விரோத செயல்பாடுகள்  குறித்தும், காட்டு தர்பார் நடத்துவது குறித்தும் கோபத்துடன் விளக்கிப் பேசினார் . ஊழியர்களின்  சுழல் மாற்றல்  உத்திரவுகளில்,  மேல் முறையீடுகள் அனைத்தும்  அவர் தள்ளுபடி செய்த விதத்தை எடுத்துக் கூறினார் . அவர் மட்டும் வருடம் திருச்சியிலும் , 4வருடம் மதுரையிலும்  மேலும் வருடம் கோவையிலும் தன்  சொந்த இடத்திற்கு அருகில்  இருந்து கொள்ள ஆசைப்படுவதும் பெண் தோழியர்களுக்கும் முதியோர்களுக்கும் கூட ஈவிரக்கம் இன்றி மனுக்களை தள்ளுபடி செய்வதும்  வாடிக்கையாக  உள்ளது என்றும்   கோபத்துடன் கூறினார் . 

மேலும்,  கீழ் அதிகாரிகள் வழங்கிய தண்டனைகள் அனைத்தும்  REVIEWஎன்ற பெயரில் SADIST  மனப்பான்மையுடன்  அதிகப் படுத்தப் பட்டுள்ளதாகவும் மேல் முறையீடு என்பதே கேலிக்குரியதாகவிட்டதாகவும் கூறினார் . 

ஊழியர்கள் எந்த வித சட்டத்திலும் இல்லாமல் பண்ணையார் போலமண்டல அலுவலகத்திற்கு  தொலைபேசியில் வரவழைக்கப் படுவதும் ,விசாரணை என்ற பெயரில்  காலை முதல் மாலை வரை காக்க வைக்கப்பட்டு அலைக்கழிக்கப்பட்டு கன்னியாகுமரிக்கு மாற்றல் போடுவேன் என்று மிரட்டுவதும் இங்கேயே தங்கு......நாளை விசாரிக்கிறேன் என்று கூறுவதும் ...  மத்திய அரசுத்துறையில் இடி அமீன் ஆட்சி போல  காட்டு தர்பார் நடக்கிறது  என்றும்  கோபத்துடன் .தெரிவித்தனர். 

கீழ் அதிகாரிகள் அனைவரும் இரவு நேரத்தில் கைபேசியை எடுக்கவே பயப்படுகின்றனர். . ஏனெனில்  இரவு நேர கொச்சை வசனங்களை கேட்கவே பயமாக உள்ளது என்று அந்த அதிகாரிகள்கோட்டச் செயலர்களிடம் கூறிப் புலம்புவதாக  பேசிய  செயலர்கள் கூறினார்.  இதுபோல மதுரை வந்தால்  அடிக்கடி எங்கு தங்குகிறார் என்பது குறித்த விபரங்களும்  புகாராக எழுத்து  மூலம் தெரிவிப்பதாகவும்  CPMG /DG மூலம் மாநிலச் சங்கமும் அகில இந்திய சங்கமும் உரிய உயர்மட்ட விசாரணை  செய்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும் அதற்கான ஆவணங்களை அளிப்பதாகவும் கூறினார். 

இதன் மீது  இறுதியில் பேசிய  மாநிலச் செயலரும் முன்னாள் அகில இந்திய பொதுச் செயலரும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கமாக பேசினார் . ஒரு வாரத்தில் இந்த  பிரச்சினைகள் மீது MEMORANDUM  தயாரிக்கப் பட்டு மண்டல மற்றும் மாநில உயர் அதிகாரிக்கு  அளிக்கப் படும்  என்றும் 15 நாட்களுக்குள் பிரச்சினைகள் தீர்க்கப் படவில்லையானால்  தொடர்  போராட்டங்கள் நடத்தப் படும் என்றும் தெரிவித்தனர். 

மேல் முறையீட்டு அதிகாரி ,  தண்டனை வழங்கும் அதிகாரியின்DISCIPLINARY  POWER  ஐ தானே எடுத்துக் கொண்டு நேரடி விசாரணை செய்வேன் என்பதும் மதுரைக்கு உடன் தொலைபேசியில் அழைக்கப் படுவதும் சட்ட விரோதம் ஆகும் .அப்படி செய்தால் அவர் தானாகவேAPPELLATE  அதிகாரி  என்ற இடத்தை இழக்கிறார் . அவர் அளிக்கும் APPEAL  மீதான உத்திரவு எதுவும்  சட்டப் படி செல்லாது .  இது குறித்து  பாதிக்கப் பட்ட நபர்களின் புகாருடன் மாநிலச் சங்கம்  சேர்ந்து  மத்திய தீர்ப்பாயத்தில்  வழக்கு தொடர  உள்ளது என்றும் தெரிவித்தனர் . 

மேலும்,  இவை குறித்து  பாதிக்க பட்ட அனைத்து ஊழியர்களிடமிருந்தும் புகார்களை கோட்ட/ கிளைச் செயலர்கள் பெற்று மாநிலச் சங்கத்திடம் தற்போது அளித்துள்ளனர் . இது குறித்து உரிய உயர்மட்ட விசாரணை நடத்திட  CPMG  அவர்களிடமும் , MEMBER (P ) அவர்களிடமும்  SECRETARY POSTS  அவர்களிடமும்  மாநிலச் சங்கம்  மற்றும் அகில இந்திய சங்கம் மூலம் அளிக்கப் பட உள்ளது என்றும் தெரிவித்தனர். 

கிட்டத்தட்ட ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை மண்டலத்தில் மாநிலச் சங்கம் சார்பில்  இப்படி ஒரு சிறப்பான கூட்டத்தை ஏற்பாடு செய்துநடத்திக் கொடுத்த  மதுரை கோட்ட சங்கத்திற்குகுறிப்பாக அதன் செயலர் தோழர்.முருகேசன்,  உதவிச் செயலர் தோழர். கிருஷ்ணமூர்த்திதலைவர் தோழர். தமிழ்செல்வன்முன்னாள் மண்டலச் செயலர் தோழர் நாராயணன் மற்றும் இவர்களுடன் இறுதிவரை உடன் நின்று கூட்டத்தினை வெற்றியடைய  முழு உதவி புரிந்த தோழர். சுந்தரமூர்த்தி ஆகிய அனைவருக்கும் மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றி !

0 comments:

Post a Comment