அன்பார்ந்த தோழர்களே !
தினக்கூலி அடிப்படையில் தபால்காரர்/ MTS பணிகள் பார்க்கும்பதிலிகளுக்கு (CASUAL LABOURER) அவர்கள் பார்க்கும் பதவியின் குறைந்த பட்ச ஊதியம், மற்றும் அதே பணி நேரம்,மற்றும் விடுமுறை சம்பளம் ஆகியவை வழங்கப் பட வேண்டும்.
இப்படி தற்போது வழங்கப் படவில்லை என புகார் பரவலாக எழுந்துள்ளது. அதனால் , பாதிக்கப் பட்ட ஊழியர்கள் முதலில் ஊதியம் வழங்கிடும் அதிகாரிகளுக்கு ,அந்தந்த ஊழியரின்பணிக்காலம் தற்போதைய பணி உள்ளிட்டவைகளை குறிப்பிட்டு அவர்களுக்கு அவர்கள் பார்க்கும்பதவியின் குறைந்த பட்ச ஊதியம் மற்றும் விடுமுறை ஊதியம் வழங்கிட முதலில் மனுச் செய்யவும்.
15 நாட்களுக்குள் பதில் அளிக்கப்படவில்லை எனில் ,தொழிற்சங்கம் மூலமாக அந்தந்த ஊழியரின் மனு நகலை இணைத்து அந்தந்த பணி நியமன அதிகாரிக்கு புகார் செய்யவும் . 15 நாட்களுக்குள் இதற்கும் பதில் அளிக்கப் படவில்லை எனில், இரண்டு மனுக்களின் நகல்களையும் இணைத்து ,
REGIONAL LABOUR COMMISSIONER(CENTRAL), NO. 26, IIIrd BLOCK,
5TH FLOOR, SHASTRI BHAVAN, HADDOWS ROAD, NUNGAMBAKKAM, CHENNAI 600 006
என்ற முகவரிக்கு பதிவுத்தபாலில் புகார் மனு அளிக்கவும் அதன் மீது தொழிலாளர் நல ஆணையர் உங்கள் நியமன அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்பி conciliation talks க்குஉங்களையும், உங்கள் அதிகாரியையும் அழைப்பார். அதில் உங்களுக்கு சாதகமான முடிவு நிச்சயம் கிடைக்கும். அதற்கான சட்ட விதி தான் மேலே குறிப்பிடப் பட்டுள்ளது.
இதில் பதிவு செய்யப் படும் minutes அமல் படுத்தப் படவில்லையானால் , நிச்சயம் உங்களுக்கு ஆதரவாக மத்தியநிர்வாகத் தீர்ப்பாயம்(CAT ) சென்னையில் உங்களுக்கு தீர்ப்பு கிடைக்கும் .
அதற்கு உதவிட மாநிலச் சங்கம் தயாராக உள்ளது . இந்த செய்தியை அனைத்து தோழர்களுக்கும் தெரிவிக்கவும்.
0 comments:
Post a Comment