இதர செய்திகள்
COD மூலம் நடக்கும் மோசடிக்கு முற்று புள்ளி வைப்போம்
வாயை கட்டி ,வயிற்றை கட்டி ஏழை மக்கள் சேர்க்கும் பணத்தை -ஆசை வார்த்தைக்காட்டி தள்ளுபடியில் இதை அனுப்புகிறோம் /அதை அனுப்புகிறோம் என்று விளம்பரப்படுத்தி அனுப்பப்படும் பார்ஸல்களில்
ஏதும் இல்லை என்பது தொடர்கதை ஆகிவிட்டது ..அஞ்சலகத்தில் வந்துபணத்தை செலுத்தி விட்டு ஆர்வத்தில் பிரித்து பார்க்கும் எத்தனை பேர் அதிர்ச்சியில் ஆடி போகிறார்கள் ?எத்தனை பேர் அழுது தொலைக்கிறார்கள் ? இதில் வேறு COD வந்தவுடன் எத்தனை பெரிய ,பெரிய இடங்களில் இருந்து தொலைபேசி விசாரிப்புகள் ?
இந்த முறைகேட்டிற்கு நாம் துணைபோக கூடாது --
COD பார்சல் மூலம் சர்வசாதாரணமாக நடக்கும் இந்த முறைகேட்டை தடுக்க அஞ்சல் வாரியம் இனியாவாது விழிப்புடன் இருக்க வேண்டும் . குறைந்தபட்சம் பதிவு செய்யப்பட்ட கம்பெனிகள் தவிர வேறு நிறுவனங்களிடம் COD ஒப்பந்தம் போடக்கூடாது .லாபம் சம்பாதிக்கவேண்டும் ,இலாகாவின் வருவாயை பெருக்க வேண்டும் இதில் மாறுபட்ட கருத்துக்கள் கிடையாது அதற்காக இந்த மோசடிகள் நமக்கு தெரிந்த பிறகும் அதை நாம் கட்டுப்படுத்த கூடாதா ? தவறு செய்யும் நிறுவனங்களில் COD ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாதா ?
வருவாயை ஈட்ட --அஞ்சல் துறையின் நற்பெயரை கெடுக்கலாமா ?
எப்படி ஒரு காலத்தில் UTI போன்ற நிறுவனங்களுக்கு அஞ்சல் வாரியம் அதி தீவிர முக்கியத்துவம் /விளம்பரம் கொடுத்து பொதுமக்களிடம் இருந்து நம் மூலம் திரட்டி கொடுக்கப்பட்ட டெபாசிட் என்னானது ? முதலுக்கு மோசம் வரவில்லையா ?
வருவாயை பெருக்குவோம் --நம்
வருங்கால நம்பிக்கையை விற்று அல்ல !
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ்

0 comments:
Post a Comment