...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, March 1, 2016

                            பட்ஜெட் தாக்கலா ? தாக்குதலா ?

        பொதுவாக பட்ஜெட் என்றாலே ஏதாவது சலுகைகள் இருப்பது வழக்கம் .வரி வசூலிப்பது என்பதுகூட நேர்முக வரிவிதிப்பாக இல்லாமல் மறைமுக விதிப்பாக இருக்கும் .இந்த ஆண்டு ஊதியக்குழு அமுல்படுத்தவேண்டிய வேண்டிய நேரம் என்பதால் மத்திய அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்புகள் வழக்கத்தைவிட அதிகமாகத்தான் இருந்தது .சம்பளத்தை அதிகமாக கொடு என்பதை எல்லாம் மறந்து வாங்குகிற சம்பளமாவது குறையாமல் இருக்க வேண்டும் என்ற நிலை வந்தது ஏன் ?ஆம் இன்று  நடப்பது என்ன ? ஊதியக்குழு வந்து புதிய ஊதியம் வாங்கும் போது Take Home Pay பழைய ஊதியத்தை விட அதிகமாக இருக்க வேண்டும் .போகிற போக்கை பார்த்தால் அதுவும் நடக்காது போல் இருக்கிறது .
                               தனி மனித வருமான வரி உச்சவரம்பை அதிகரிக்காமல் புதிய சம்பளத்தை வாங்குவதால் நம் கையில் மிஞ்சுவது என்ன ?
 ஆண்டு வருமானம் 5 லட்சம் வரை 10 சதம் வரி .5 இலட்சத்துக்கு மேல் 20 சதம் வருமான வரி கட்ட வேண்டும் என்றால் இப்பொழுது எவ்வளவு வரி பிடித்தமோ அதைவிட இருமடங்கு நாம் வரி செலுத்தியாக வேண்டும் .
கோடி கோடியாய் சம்பாதிப்பவர்கள் எல்லாம் தப்பித்து கொள்ளும் இந்த நாட்டில் அரசு ஊழியர்களாகிய நாம் மட்டும் வரி கொடுமையில் இருந்து தப்ப முடியாதது ஏனோ ?
                           மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளனமே !
      தனிமனித வருமானவரி விலக்கு வரம்பை குறைந்தபட்சம் 5 லட்சமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளையாவது முன் எடுத்து செல்வீர்களா ? செய்வீர்களா ? 
இது குறைந்தபட்ச கோரிக்கை -இதையாவது  செய்வீர்களா ?
                                           சிந்திப்பீர் தோழர்களே !     
                                    தோழமையுடன் SK .ஜேக்கப்ராஜ்  

0 comments:

Post a Comment