...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, March 22, 2016

                                                புரட்சி வெடிக்கட்டும் 

      கடந்த எட்டு நாட்களாக Finacle  வேலை செய்யவில்லை .ஊழியர்கள் வீடு திரும்ப இரவு எட்டு மணி என்பது சர்வ சாதாரணமாக போய் விட்டது .கோட்ட அலுவலகத்தில் முறையிட்டால்  சென்னையை கை காட்டு கி றார்கள் .சென்னையை கேட்டால் டெல்லியை சொல்கிறார்கள் .அவரவர் தனக்கு அடுத்தநிலையில் உள்ளவரை கை  கை காட்டு கி றார்கள் .ஊழியர்களோ கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் .தொழிற்சங்கங்கள் என்ன செய்கிறது என கேட்கிறார்கள் .மாநில சங்கம் கடிதம் எழுதியிருக்கிறது என்றால் ஒருவிதமாக நகைகிறார்கள் .எப்படி மீனவர் பிரட்சினையில் மாநில மாநில அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதை மாதிரியா ?என எதிர் கேள்வி    கேட்கிறார்கள் .
                                    தேவையில்லை  .அனுதாபம் 
 மாநிலசங்கம் தனது வலைத்தளத்தில் பக்கம் பக்கமாக நம் அவலங்களை எழுதுகிறது .கடிததுக்கு மேல் கடிதம்   எழுதுகிறது .எங்கள் எதிர்பார்ப்பு  ஆறுதல் அல்ல --ஆர்பரிக்கும் போராட்டம் .போராட்ட அறிவிப்பிற்கு பிறகு பிரட்சினைகள் கூடியிருக்கி றதே தவிர குறைய வில்லை 
                            கேரளாவை  பாருங்கள் 
    கேரளா இடுக்கியில் அஞ்சல் ஊழியர்கள் 5 மணிக்கு மேல் அலுவலகத்தில் இருக்க மாட்டோம் என முடிவெடுத்து போரட்ட பாதையை அறிவித்துள்ளனர் .
                           களம் சாதகமாக உள்ளது 
          .ஊழியர்களின் உணர்வை மதித்து Infoysis நிறுவனம் செய்துவரும் முறைகேடுகளை வெளி கொண்டுவரவும் .ஒரு 2G  போல் CBS லும் பல பரிமாற்றங்கள் நடந்துள்ளதை வெளி கொணரவும் மாநில சங்கம்  விரைந்து முடிவெடுக்க வேண்டும் என எதிர் பார்கிறோம் .
 செத்த பிறகு ஊழியர்களுக்கு மலர்மாலை வைப்பதை விட ,நித்தம் ,நித்தம் செத்து கொண்டிருக்கும் ஊழியர்களை காப்பாற்றுங்கள் 
                             --------------------  ஜேக்கப்ராஜ்  நெல்லை ----------------------
   

0 comments:

Post a Comment