...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, March 30, 2016

மீண்டும் தலை தூக்கும் டார்கெட் நெருக்கடி 
அன்பார்ந்த தோழர்களே !
                டார்கெட் விஷயமாக எந்த ஊழியர்களையும் அச்சுறுத்த கூடாது ,வீணாக மண உளைச்சலுக்கு ஆளாக்க கூடாது --கூடுமானவரை ஊழியர்களை Educate செய்து  business நடக்க முயற்சி எடுக்க வேண்டும் என்று CPMG அலுவலகம் எத்தனை முறை கூறினாலும் மேலிடத்தில்? நன்மதிப்பை பெறவேண்டும் என்கிற ஆர்வத்தில் இன்னும் சில உப கோட்டங்களில் சில அதிகாரிகள் சுதந்திர காலத்து முன் இருந்த பிரிட்டிஷ் அதிகாரிகள் போல் GDS ஊழியர்களை மிக அர்பமாக நடத்த தொடங்கி உள்ளார்கள் .
 என் அலுவலகத்திற்கு வராதே ! வெளியே போ ! நான் சொன்ன  50 கணக்குகளை பிடிக்காவிட்டால் நீ Officiating பார்க்க முடியாது என தன் கோபத்தை கொப்பளித்து இருக்கிறார் .
          மிரண்டு போன அந்த GDS ஊழியரோ நான் தீக்குளிக்க போகிறேன் என்றும் என் சாவாவது GDS ஊழியர்களின் கண்ணீரை  நிரந்தரமாக துடைக்கட்டும் என்று நம்மை அணுகினார் .உடனே நாமும் ,GDS கோட்ட தலைவர் திரு .பாலசிங் அவர்களும் மாலை நமது SSP அவர்களை சந்தித்து பேசினோம் .நமது SSP அவர்கள் சம்பந்தப்பட்ட ASP அவர்களிடம் Proper Guidelines கொடுப்பதாக உறுதி கூறினார்கள் .
 வேட்டை நாய் முயலை விரட்டுவதை போய் GDS ஊழியர்களின் இரத்தத்தை ருசி பார்க்க துரத்தலாமா  !
          மனித  பிறப்பில் ஒரு வஞ்சிக்கப்பட்ட பிறப்பு அஞ்சல் துறையில் ED என்ற பிழைப்பு ..கூலி தொழிலாளியை வீட  மிக கேவலமான ஊதியம் .
அரசு துறையில் பணியாற்றினாலும் அரை வயீறு நிரம்பாத ஒரு சாபக்கேடு -அவனும் இந்த  குறைந்த வருமானத்தை வைத்து கொண்டு மானத்தோடு வாழ விரும்புவது அவன் தவறா ?
      எத்தனை ஊழியர்கள் ASP களுக்கு டீ வங்கி கொடுக்கிறான் --இது சட்டத்தில் இருக்கிறதா ? அடிமை வேலை பார்ப்பதை அவன் சுயமரியாதை இன்னும் எத்தனை காலத்திற்கு ஏற்று கொள்ளும் ?
           ED களின்  உயிரோடு விளையாடா தீர்கள் !
 அன்பார்ந்த GDS தோழர்களே !
 எந்த அதிகாரியாவது டார்கெட் பிடிக்கவில்லை என்று ஒருமையில் பேசினாலும் /ஏசினாலும் உடனடியாக கோட்ட அலுவலகத்திற்கு எழுத்து பூர்வமாக எழுதிவிட்டு கோட்ட சங்கத்திற்கு தகவல் கொடுங்கள் .
        வாழ்த்துக்களுடன்   SK .ஜேக்கப்ராஜ் --------------------------------------------
                             

0 comments:

Post a Comment