...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, December 1, 2015

அன்பார்ந்த தோழர்களே !
           ஐந்தாவது ஊதிய குழுவில் 40% ஊதிய உயர்வு எப்படி வந்தது ?
                                ஐந்தாவது ஊதியக்குழு 1994இல் அமைக்கப்பட்டது .மூன்று ஆண்டுகள் கழித்துதான் அதாவது 1997 ஜனவரியில் தனது அறிக்கையை சமர்ப்பித்தது .வழக்கமாக ஊதியக்குழு என்றால் மத்தியில் பழக்கமான காங்கிரஸ் ஆட்சி என்ற நிலை மாறி,மாற்று அரசு என்ற .பாரதிய ஜனதாவும் இல்லாத ஜனநாயக முற்போக்கு கூட்டனி ஆட்சியில் இருந்தது .சம்பளகுழுவின் பரிந்துரைப்படி 20% Fitment Formula கொடுத்தால் அரசுக்கு அளவற்ற நிதிசுமை ஏற்படும் என்று அன்றைய நிதியமைச்சர் திரு .சிதம்பரம் அவர்கள் மிகவும் சங்கடபட்டார் .ஊழியர் தரப்போ 20%   போதாது என்று கடும் அதிர்ச்சியில் இருந்தனர் .இருந்தாலும் அமைச்சர்கள் குழுவில் இருந்த  நிதியமைச்சர் திரு .சிதம்பரம் அவர்களை புறந்தள்ளிவிட்டு(சென்னைக்கு அனுப்பி விட்டு ) உள்துறை அமைச்சர் திரு .இந்திரஜித்குப்தா அவர்கள் தலைமையில் ,ராணுவ அமைச்சர் முலாயம் சிங் யாதவ் , ரயில்வே அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் கொண்ட அமைச்சர்கள் குழு பொருத்த அளவுகோலை(   Fitment Formula ) 40% என்று இருமடங்காக உயர்த்தி கொடுத்தது ..இன்று அதே போல் அதிசயங்கள் நடக்குமா ? ஆய்வு குழு என்ன   செய்ய போகிறது பொறுத்திருந்து பார்போம் .
 ஒரு  கவிதை ஒன்று நினைவிற்கு வருகிறது
                        ஒருவன் (மத்திய அரசு ஊழியன் )
                         பட்டு துணிக்கு ஆசைப்பட்டு கிடக்கையில்
                         அவன் கட்டியிருந்த இடுப்பு துணியும்
                          களவாடபட்டதாம் !
குறிப்பு :அஞ்சலக எழுத்தருக்கு அதிக ஊதியம் பெற்றதும் 5 வது சம்பள குழுவில் தான் .மற்ற துறைகளுக்கு 975 அடிப்படைசம்பளம் 3200 ஆக மாறியது .நமக்கு மட்டும் தான் அடிப்படை சம்பளம் 4000 ஆனது .அஞ்சல் எழுத்தருக்கு ஏன் தனி ஊதியம் தர வேண்டும் என்ற வாதத்தை சரியான நேரத்தில் ,சரியான இடத்திற்கு கொண்டு சென்ற அன்றைய மாநில சங்கதிற்கே  அந்த பெருமைகள் சாரும் . 
----------------------------------------------------------------------------------------------------------------------
                                                               GDS பக்கம் 

ஆறாவது ஊதியழுவை தொடர்ந்து அமைக்கப்பட்ட நடராஜ மூர்த்தி கமிட்டி அறிக்கையை பார்த்தவுடன் அதை தீயிட்டு  கொளுத்தும் அளவிற்கு ஊழியர்களின் கோபம் இருந்தது .அதை தொடர்ந்து அஞ்சல் வாரியம் சீனியர் அபீசர்  கமிட்டியாக   டெல்லி CPMG கோபிநாத் தலைமையில் பரீசிலனை கமிட்டி அமைத்தது .அப்பொழுது நாம் ஒன்றாக இருந்தோம்.ஆனாலும் அஞ்சல் வாரியம் அசைந்து கொடுக்கவில்லை .மாறாக அதிகாரிகள் கொடுத்த பரிந்துரையைதான் அமுல்படுத்தியது .
கீழ உள்ள பட்டியலை பாருங்கள் .நடராஜமூர்த்தி அறிக்கை ---கோபிநாத் அறிக்கை ,ஒன்று பட்ட NFPE (AIPEDEU ) ன் கோரிக்கை பட்டியலிட்டு    காட்டப்பட்டுள்ளது  .

Cadre
Nataraja Murti
Gopinath Committee
NFPE Demand
GDS SPM

4800-100-7800
5075/- + 3%
GDS BPM [75 Pts]
2745-50-4245
2880-60-4680
3045/- + 3%
      -do- [75 – 100]
3660-70-5760
3840-80-6240
4060/- + 3%
     -do- [Above 100
4575-85-7125
4800-100-7800
5075/- + 3%
GDS SV [3 Hrs]
2665-50-4165
2840-60-4640
2880/- + 3%
   -do- [3Hrs 45 Mt
3330-60-5130
3550-75-5800
3840/- + 3%
  -do- [Above 3.45
4220-75-6470
4500-90-7200
4800/- + 3%
GDS MC [3 Hrs]
2295-45-3695
2295-50-3795
2805/- + 3%
  -do- [ 3-3.45 Hrs]
2870-50-4370
2870-60-4670
3740/- + 3%
 -do- [Above 3.45]
3635-65-5585
3640-75-5890
4675/- + 3%

     ஒன்றாய் இருந்தபோதே நம் கோரிக்கைகளில் இத்தனை பின்னடைவு என்றால்  துண்டாடப்பட்ட நிலையில் அரசு /அஞ்சல் வாரியம் துள்ளி குதிக்காதோ? எள்ளி நகைக்கதோ ?    
                                                              தோழமையுடன்  SKJ 







0 comments:

Post a Comment