சாட்டையை சுழற்றாதீர்
GDS ஊழியர் விடுப்பு விண்ணப்பித்தால் கீழ்க்கண்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் இல்லை என்றால் சம்பந்தப்பட்ட SPM கள் பதில் தர வேண்டும் என்று நமது கோட்டத்தில் ஒரு உப கோட்டத்தில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது .அதன் நகலை கீழே பார்க்க
1. please intimate whether the substitute is already approved
GDS ஊழியர் விடுப்பு விண்ணப்பித்தால் கீழ்க்கண்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் இல்லை என்றால் சம்பந்தப்பட்ட SPM கள் பதில் தர வேண்டும் என்று நமது கோட்டத்தில் ஒரு உப கோட்டத்தில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது .அதன் நகலை கீழே பார்க்க
2. please obtain and forward the explanation of the GDS for not obtaining prior permission for leave
GDS Substitute கள் ASP கும் திருப்திகரமாணவராக இருக்கவேண்டும் .போதுமான கல்வி தகுதி இருக்க வேண்டும் .ஏற்கனவே உப கோட்டம் அங்கீகரித்த பட்டியலில் உள்ள Out-sider களை தான் விடுப்பு பதவியில் நியமிக்க வேண்டும் என்பது இலாகா விதி .நிர்வாகத்திடம் நாம் கேட்கும் கேள்வி .நெல்லை கோட்டத்தில் உப கோட்டம் வாரியாக இதுவரை அங்கீகரிக்கப்பட்ட Out -sider பட்டியலை அனைத்து SPM களுக்கும் அனுப்ப வேண்டும்.இதற்கு முன்பு அனுப்பி வைக்கபட்டுள்ளதா ? ..
இரண்டாவதாக முன் கூட்டி அனுமதி பெற்று தான் GDS ஊழியர்கள் விடுப்பில் செல்ல வேண்டும் .இன்று ஒரு முக்கியமான உறவினர் மரணம் என்றால் ASP களிடம் முன் அனுமதி பெற்று அங்கீகரிக்கப்பட்ட Out sider வந்த பிறகுதான் செல்லவேண்டும் என்பதெல்லாம் நடைமுறை சாத்தியமா ? தன்னிடம் ஒரு GDS ஊழியர் ஒரு கேள்வி கேட்டார் என்பதற்காக இத்தனை கேள்விகளா ?
வேலியே பயிரை மேய்வதா !
இலாகா விதியும் அப்படித்தான் -- ஈடி
தலை விதியும் இப்படி தான் -அதிகாரிகளே
மீண்டும் மீண்டும் சாட்டையை சுழற்றாதீர்-பழைய
சவுக்கடிகளின் தடம் இன்னும் ஆறவில்லை 1
0 comments:
Post a Comment