...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, November 5, 2015

     டிசம்பர் 1 மற்றும் 2 இரண்டு நாள்     வேலைநிறுத்தம் 

செப்டம்பர் 2 -2015  ஒரு நாள் வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நடந்தது --விளைவு போனஸ் சீலிங் உயர மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்தது .இரண்டு மாத இடைவெளியில் அஞ்சல் துறையில் மட்டும் இரண்டு நாள் போராட்டம் (டிசம்பர் 1 மற்றும் 2 தேதிகளில் ) அனைவரும் பங்கேற்போம் .
                                             கோரிக்கைகள் 

1.GDS பிரட்சினைகளையும்  ஊதிய குழு சேர்த்து பரிசீலிக்க வேண்டும் .(மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன அறிக்கையில் ஊதியகுழுவின் வேலைகள் எல்லாம் முடிந்து விட்டன .டிசம்பரில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தகவல் )

2.கேடர் சீரமைப்பை உடனே அமுல் படுத்த வேண்டும் ( இரண்டு ஆண்டு களுக்கு முன்பாகவே இறுதிசெய்யப்பட்டு JS&FA  ம்  ஒப்புதல் கொடுத்ததும் DOP &T எந்த மறுப்பும் சொல்லா த பின்னனியில்  இந்த தாமதம் ஏன் )

3.அனைத்து காலியி டங்களையும் நிரப்ப வேண்டும் (அஞ்சல் துறையில் ஒட்டு மொத்தமாக 50% காலி இடங்கள் இருக்கிறதாம் )

4.புதிய பணிகளை அமுல்படுத்துகிறோம் என்ற பெயரில் நடக்கும் அதிகாரிகளின் அத்துமீறல்கள் ,தொழிற்சங்க பழிவாங்கல்கள் நிறுத்தப்பட வேண்டும் .இதற்கான வேலைநிறுத்த அறிவிப்பு 6.11.2015 அன்று கொடுக்க படுகிறது 

STRIKE NOTICE WILL BE SERVED TO THE SECRETARY DEPARTMENT OF POSTS ON 06.11.2015 AND IN ALL PLACES

நம்முடைய  NFPE  சம்மேளனத்தின் அறைகூவலை ஏற்று எதிர்வரும் டிசம்பர் 1 மற்றும் 2, 2015  இரண்டு நாட்களிலும்  48 மணிநேர   வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக  நடத்திடுவோம். 

வேலை நிறுத்தத்திற்கான  சட்ட பூர்வமான நோட்டீஸ் எதிர்வரும் 06.11.2015 அன்று டெல்லி  DAK  BHAWAN  முன்பாக மிகப்பெரும்  கண்டன  ஆர்ப்பாட்டத்துடன் , இலாக்கா  முதல்வரிடம் வழங்கப்பட உள்ளது. 

இதேபோல , தமிழகத்தில் CPMG  அலுவலகம் முன்பாக எதிர்வரும் 06.11.2015 அன்று  ஒரு மாபெரும் உணவு இடைவேளை ஆர்பாட்டம் நம்முடைய NFPE  இயக்கத்தின் 9 சங்கங்கள் சார்பாக  தமிழ் மாநில இணைப்புக் குழு மூலம் நடத்தப்பட்டு அதன் முடிவில்  வேலை நிறுத்தத்திற்கான சட்ட பூர்வமான நோட்டீஸ் அனைத்து மாநிலச் செயலர்கள்  கையெழுத்திட்டு  CPMG  அவர்களிடம் வழங்கப்படும். இதற்கான  விரிவான சுற்றறிக்கை   NFPE  தமிழ் மாநில இணைப்புக் குழு சார்பாக  வெளியிடப்படும்.

எனவே  தமிழகத்தின்  அனைத்துக் கோட்டங்களிலும்  இதேபோல எதிர்வரும்  06.11.2015 அன்று NFPE  இன் அனைத்து  உறுப்பு  சங்கங்களும் ஒன்று சேர்ந்து அந்தந்த பகுதி  கோட்ட  அலுவலக/ தலைமை  அஞ்சலக வாயிலில்  கண்டன ஆர்பாட்டம் நடத்தி  கீழே  அளிக்கப் பட்டுள்ள   வேலைநிறுத்த நோட்டீஸ்  நகல் மற்றும் கோரிக்கைகளை  இணைத்து அனைத்து  கோட்ட  கண்காணிப்பாளர்களிடமும்  வழங்கிட வேண்டுகிறோம்.  வேலை நிறுத்தத்திற்கான  ஆயத்தப் பணிகளை  இன்றே தொடங்கிட வேண்டுகிறோம்.

 வெல்லட்டும் !  வெல்லட்டும்   வேலை நிறுத்தம்  வெல்லட்டும் !



CHARTER OF DEMANDS


(i)        Include GDS in 7th CPC for wage revision and other service related       matters.


(ii)       Implement cadre Restructuring proposals in all cadres including Postal          Accounts      & MMS.


(iii)      Fill up all vacant posts in all cadres of Department of Posts (i.e. PA, SA,          Postmen, Mail Guard, Mail Man, GDS Mail Man, MMS Driver & other staff in         MMS, PA       CO, PA SBCO, Postal Accounts, Civil & Electrical         Wing Staff, as          per actual sanctioned       strength.


(iv)      Stop all types of harassment in the name of implementation of various            new    services and schemes and Trade Union Victimization.
 _____________________________
Note: All Circle/Divisional /Branch Secretaries are also requested to serve Strike Notice to their respective authorities by organizing mass demonstration.

0 comments:

Post a Comment