...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, November 18, 2015

            ஒன்று பட்ட போராட்டம் --காலத்தின் கட்டாயம் 
மத்திய அரசு ஊழியர்களின் மகா சம்மேளனம் சார்பாக வைக்கப்பட்ட கோரிக்கைகளில் முக்கியமான கோரிக்கைகளில் ஒன்றான GDS ஊழியர்களை ஊதியக்குழுவின் வரையறைக்குள் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை முடிந்து போய் விட்டது (பஞ்சப்படி இணைப்பு ,இடைக்கால நிவாரணம் ,01.01.2014 முதல் அமுல்உள்ளிட்ட  கோரிக்கைகள் என்ன ஆனது ?),.ஏனென்றால் ஊதியக்குழு தன் பணிகளை முடித்துவிட்டு அறிக்கையை 19.11.2015 அன்று அரசிடம் கொடுக்க போகிறது .ஆக இன்னும் ஊதியக்குழுவில் GDS   கோரிக்கையை சேர்க்க வேண்டும் என்ற கோ(வே )ஷத்தை விட்டு எதார்த்தத்தை பார்க்க வேண்டும் .
                              ஓய்வுபெற்ற  நீதிபதி தலைமையில் GDS கமிட்டி வேண்டும் 

எப்படி 1968 இல் நம்மை விட்டு பிரிந்து தனி சங்கம் கண்ட FNPO ,அதன்பிறகு வந்த BPEF சங்கங்களுடன் JCA என்ற பெயரில் இனைந்து இயக்கங்கள் நடத்த முடியும் போது ஏன் AIGDSU சங்க பொது செயலர் தோழர் SS .மகாதேவ்வை யா  அவர்களையும் இனைத்து ஒன்று பட்ட போராட்டம் நடத்த கூடாது.அப்படி நடந்தால் அதுவே  .GDS ஊழியர்களுக்கு நாம் செய்யும் பெரிய உதவி இதுவாகும் .இது குறித்து உழைக்கும் வர்க்கம் நவம்பர் இதழில் கீழ்கண்டவாறு முன்மொழிய பட்டுள்ளது 
             :NFPE .FNPO அஞ்சல் சம்மேளனங்களும் அவற்றில் இணைந்துள்ள அனைத்து நிரந்தர ஊழியர்கள் சங்கங்களும்தோழர்  .மகாதேவ்வையா தலைமையில் இயங்கும் AIGDSU சங்கமும் கௌரவம் பார்க்காமல் ,தங்களுக்குள் எந்த வேறுபாடும் இன்றி  ஒன்றுபட்டு பெரும் போராட்டத்தில் இறங்க வேண்டிய தருணம் இது :
ஆக ஒரு கை தட்டி ஓசை வராது இரண்டு கைகளும் சேரவேண்டும் .NFPE ,AIGDSU சங்கம்  இனைந்து போராட வேண்டும் .ஒரு குரலில் வாதட வேண்டும் இதுவே அடித்தட்டு  உறுப்பினர்களின் எண்ணங்கள் மற்றும் ஏக்கங்கள் 
                     இதற்காக முயற்சிகள் எடுக்கும் தலைவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள் 
                                                    தோழமையுடன்  SKJ 

0 comments:

Post a Comment