...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Sunday, November 22, 2015

நேஷனல் JCA -அழைப்பு - ஊதியக்குழுவின் பிற்போக்கான பரிந்துரைகளை கண்டித்து 27.11.2015 அன்று கருப்பு பேட்ஜ்  அணிந்து                   ஆர்ப்பாட்டம்
               அதிகாரிகளுக்கு அள்ளிகொடுத்த குழு 
                      ஊழியர்களுக்கு  கிள்ளி  கூட கொடுக்கவில்லை 
                       சொல்லி கொடுத்தாரோ  ஜெட்லி ?
                 நாள் 27.11.2015  நேரம் மாலை 6 மணி 
           இடம் .பாளையங்கோட்டை HO முன்பு 
             அனைவரும் பங்கேற்போம் 
     
ஊதியகுழுவில் குறைகள் இருந்தால் அனாமலி கமிட்டிக்கு போகலாம் ! ஊதிய குழுவே குறையானால்?
ஊதியகுழு  அமுல் படுத்துவதால் அரசுக்கு ஒரு லட்சம் கோடி அதிக செலவு என்ற பொய் பிரச்சாரத்தை முறியடிப்போம் .குறிப்பாக நமது இலாகாவில் மட்டும் 59000 எழுத்தர் பதவிகள் காலியாக உள்ளது சராசரி புதிய எழுத்தருக்கு மாதசம்பளம் 29340 என்றால் 59000 எழுத்தர் பதவிகள் மூலம் அரசுக்கு மிச்சம் 180 கோடி.நமது உழைப்பை சுரண்டி அரசு மறைமுக லாபம் சம்பாதிப்பது ஆண்டுக்கு  சுமார்ரூபாய்  2160  கோடி.அப்படி என்றால் ஒட்டுமொத்த துறையில் காலி பணிஇடங்கள் மூலம் அரசுக்கு கிடைக்கும் லாபம் எவ்வளவு ?
                     ஊதிய உயர்வு என்ற பெயரில் ஊதிய பிடித்தம்(கொடுத்தவனே பறித்து கொண்டான்   
தற்போது MTS  ஊழியர் வாங்கும் ஆரம்ப நிலை சம்பளம் : ரூ. 7000/-

1.1.2016 முதல் வழங்க வேண்டிய   D .A .  125%                             :  ரூ. 8750/-
ஆக 1.1.2016 இல்  பெறும்  மொத்த ஊதியம்                               :   ரூ.15750/-

தற்போது ஊதியக் குழு 125% D.A. சேர்த்து நிர்ணயித்துள்ள 
ஆரம்ப நிலை அடிப்படை  ஊதியம்                                              :  ரூ.18000/-
======================================================================
இரண்டிற்கும் வித்தியாசமான  ஊதிய உயர்வு                      :  ரூ. 2250/- மட்டும்.
======================================================================
ஆனால் தற்போது அவர் கட்டவேண்டிய 
NPS  CONTRIBUTION       10%                                                                  :  ரூ. 1800/-
தற்போதைய திட்டப்படி  அவர் கட்டவேண்டிய 
CGEGIS  PREMIUM  தொகை                                                               : ரூ. 1500/-
(இரண்டு தொகைகளுமே  அரசிடம்தான் செல்லும் . 
உடனே ஊழியருக்கு  திரும்ப வராது . )
மொத்தம் அவர்  உடனடியாக கட்டவேண்டிய  தொகை      : ரூ. 3300/-

உயர்த்தப் பட்டது  ரூ. 2250/- கட்டவேண்டிய ரூ. 3300/-. அப்படியானால் TAKE  HOME PAY  என்னவாகும்  ? HRA  யும் குறைக்கப்பட்டு விட்டது.  TPA  மட்டும் பஞ்சப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைப்பதால்  உயருகிறது. அப்படியானால் அரசுக்கு செலவினம் என்பது  எவ்வளவு ?

                ஊதிய குழுவில் நாம் கேட்டது என்ன ?கிடைத்தது என்ன ?என்ன ?
                                               கேட்டது                                             கிடைத்தது 
-------------------------------------------------------------------------------------------------------------------
அமுலாகும் தேதி      01.012014                                                    01.01.2016
---------------------------------------------------------------------------------------------------------
MIN .Max இடைவெளி        ரூ .26000                                                      ரூ 18000
----------------------------------------------------------------------------------------------------------
Max pay                              40 சதம்                                                        14.29 சதம் 
----------------------------------------------------------------------------------------------------------
நிர்ணயம்                      3.7 மடங்கு                                                  2.57 மடங்கு 
------------------------------------------------------------------------------------------------------------
பதவி உயர்வில் FIXATION  2 Increment                                        மறுப்பு 
----------------------------------------------------------------------------------------------------------
பதவிஉயர்வு                  5 கட்ட ம்                                                    மறுப்பு 
------------------------------------------------------------------------------------------------------
MIN -Max  வேறுபாடு            1:8                                                                  1:11:4
--------------------------------------------------------------------------------------------------------------
அலவன்சுகள்              உயர்த்தவேண்டும்                 52 அலவன்சுகள் ரத்து 
---------------------------------------------------------------------------------------------------------------------
HRA                                  60% 40% 20% வேண்டும்          24% 16% 8% ஆக குறைப்பு 
-----------------------------------------------------------------------------------------------------------------------
MMS ஓட்டுனர்கள்           உயர் ஊதியம்                              மறுப்பு 
---------------------------------------------------------------------------------------------------------------
DAபார்முலா                மாற்றம் வேண்டும்                  மறுப்பு 
-----------------------------------------------------------------------------------------------------------------
லீவு                                  மாற்றம் வேண்டும்                CL கூட மாறவில்லை 
மாறாக CCL  இல் புது நிபந்தனை ,ஒரு சலுகை (ஆண்டிற்கு 3 Spell )  
----------------------------------------------------------------------------------------------------------------------
போக்குவரத்து படி         மாற்றம் வேண்டும்               பெரிய ( ஏ )மாற்றம்/
---------------------------------------------------------------------------------------------------------------------
CEA                                    தொழில் நுட்ப படிப்புவரை         இல்லை .மாதம் ரூ 2250  
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------   
Performance related pay           கனவில் கூட இல்லை                        அறிமுகம் 
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
GDS    பிரச்சினை                  பரிசீலிக்க வேண்டும்                        திட்டவட்ட மறுப்பு      
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------                                                



-ஆக நமது மத்திய அரசு மகா சம்மேளன கோரிக்கைகளான 
ஊதிய குழுவிற்கு பதில் Pay Revision (ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை)
01.01.2011 முதல்அமுல் ,பஞ்சப்படி இணைப்பு .குறைந்த பட்ச ஊதியத்திற்கும் அதிக பட்ச ஊதியத்திற்கும் உள்ள இடைவெளி ,DA பார்முலா மாற்றம் ,GDS ஊழியர் பிரச்சினை , 5 கட்ட பதவி உயர்வு,MACP குளறுபடிகளை நீக்க வேண்டும்  என எந்த கோரிக்கையும் ஏற்றுகொள்ள படவில்லை இதற்கெல்லாம் என்ன பின்னணி என்று நாம் சுய பரிசோதனை செய்து பார்க்க வேண்டும் .ஆர்ப்பாட்டம் ஏதும் இல்லாமல் IP /ASP கள்  ஊதிய உயர்வுக்கு அவர்கள் ஊதிய குழுமுன் எடுத்து வைத்த வாதமும் ஒரு காரணம் என்கிறார்கள் .அஞ்சல் எழுத்தருக்கு  உயர் ஊதியம் வழங்க நாம் வைத்த வாதம் கல்வி தகுதியை உயர்த்தி அதிக ஊதியம் வழங்க வேண்டும் என்பது எடுபடாமல் போனது .அஞ்சல் பகுதியை பொறுத்தவரை நாம் பெற்றது ஏதும் இல்லை விட்டது தான் ஏராளம் .
            மகாகூட்டணிக்கு முன் வெற்றி பெற முடியாத அரசு --நம் 
           மகா சமேளனத்தின் கோரிக்கையையாவது  ஏற்றிருக்க  வேண்டும் .
மத்திய அரசு முன் மாதிரியான எஜமானாக (Model  employer ) ஆக  இருந்திருக்க வேண்டும் .இல்லை  நாம் தான் நம் முன் தெரியும் ஒற்றுமை என்னும் கயிற்றை இறுக்கமாக பற்றி கொள்ள  வேண்டும் 
ஆம் ஆரம்பத்தில்    ரயில்வே ,பாதுகாப்பு துறையுடன் ஏற்படுத்திய ஒற்றுமையை மீண்டும் கடைபிடித்து  முன்னேற வேண்டும் .குறைந்தபட்சம் GDS கமிட்டி அமைக்கும்  பிரட்சினைகளிலாவது 
கூட்டு முயற்சிகள்   எடுக்க வேண்டும் .நீதிபதி தலைமையில்கமிட்டி அமைக்க நாமும் அந்த புனித போராட்டத்தில் இணைய வேண்டும்      
                           ஒன்று படுவோம் ! போராடுவோம் !
                       வாழ்த்துக்களுடன்  
                       SK .ஜேக்கப்ராஜ் P 3                   SK பாட்சா P 4

ஊதிய குழு குறித்து தோழர் நமச்சிவாயம் PA திசையன்விளை  அவர்களின் கருத்து  இங்கே .  
Sir,

   With heavy hearted feeling I write this msg regarding the Grade Pay
hike by 7th cpc to IPO/ASPOs wef 01.01.2016 by ignoring the LSG/HSG
cadres in our department.In what way they are having higher
responsibilities than our LSG/HSG postmsters.All the responsibilities
with regard to CR/LEAVE/Nominal roll of Postmen/Gr.D staff and manning
of their office and also achieving the targets in all premium
services,SB as and when the administration oredered and also pulling
the office with minimum man power and computer accessories.

   Why our union is not responded immediately on the information come
out in the report.I personnaly request our CS kindly look into it and
needy action to settle the issue infavour of General line staff.


*Warm Regards,*
**
*R.Namasivayam,*
 9952537270*

 தஞ்சாவூரில் இருந்தும் தோழர் ஒருவர் இதே கருத்தை பதிவு செய்திருந்தார் .அவருடைய கடிதம் வந்துடன் பிரசுரிக்க படும் .
தோழர்களே !
  குறிப்பு           உங்கள்  கருத்துகளை நீங்கள் தெரிவித்தால் அது நமது வலைத்தளத்தில் வெளியாகும் .உரிய  இடத்திற்கும் தெரிவிக்கப்படும் 
------------------------------------------------------------------------------------------------------------------------

       2.தோழர் பாலு (முன்னாள் மாநில செயலர்) அவர்களின் குடும்ப நல நிதி வழங்குவோர் கீழ்கண்ட POSB கணக்கில் DEPOSIT செய்யவும் 

                                      PLC SB   0072773482  பெயர் SK .ஜேக்கப்ராஜ் 

    இதுவரை நன்கொடை அனுப்பியவர்கள் - பட்டியல் -4
1. தோழர் S .மீனாட்சி சுந்தரம் ஸ்ரீவைகுண்டம்  1000
2.தோழர் .S .அப்பாதுரை ( Retd ) அம்பை                 200 
பணம்  அனுப்ப நினைக்கும் தோழர்கள் 24.112015 செவ்வாய் கிழமைக்குள் அனுப்பவும் 
                                                               நன்றி    SKJ  
----------------------------------------------------------------------------------------------------------------








0 comments:

Post a Comment