...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, November 4, 2015

                                    தோழர்களின் கவனத்திற்கு 

           நாட்டில் நடக்கும் பண மோசடிகள் குறித்து அவ்வப்போது நமக்கு செய்திகள் வந்தாலும் நாம் அதை ஒரு பொருட்டாக எண்ணுவதில்லை காரணம் நமக்கும் /அல்லது நமது துறைக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்பதே ஒரு காரணம் .ஆனால்  சமீபத்திய சில நிகழ்வுகள் நமது துறையில் உள்ள சில அப்பாவி ஊழியர்களும் பல சிக்கல்களில் மாட்ட வைக்கிறது என்பது வருத்த படவேண்டிய ஒன்று .
                                லட்ச கணக்கில் நடக்கும் செக் மோசடி 
               உதாரனமாக நெல்லையில் ஒரு நபருக்கு ஒரு முகவரிக்கு பதிவு தபால் /விரைவு தபால் வருகிறது அந்த முகவரியில் அந்த நபர் குடியி ருப்பதில்லை .அவர் தபால் அலுவலகத்திற்கு ஒரு Redirection கடிதம் கொடுத்து வேறு விலாசத்திற்கு அனுப்ப சொல்கிறார் .தபாலும் பட்டுவாடா ஆகிறது .வங்கி ஆவணங்களில் இல்லாத முகவரியும் /தபால் அலுவலகத்தில் இல்லாத நபருக்கும் பட்டுவாடா ஆகிறது .அதில் இருப்பது பல லட்சம் பெறுமான காசோலை .காவல் துறையும் விசாரணையில் இறங்கி இருக்கிறது .ஆகவே போதிய சான்றுகள் இல்லாமல் Redirection செய்வதும் /பட்டுவாடா செய்வதும் தவிர்க்கப்பட வேண்டும் .மேலும் Instruction Registor யை  முறையாக வரிசை எண் ,தேதி போட்டு பராமரிக்க வேண்டும் (ஊழியர்களின் நலன் கருதி வெளியி டபடுகிறது )
                              பலிகிடா ஆகும் அப்பாவி ஊழியர்கள் 
                    தபால்களை திருப்பா தே எப்படியாவது பட்டுவாடா செய் 100சதம் டெலிவரி Performance வேண்டும் என்று பேசும் நிர்வாகம் பாளையம்கோட்டையில் மட்டும் நடந்த விதத்தை பாரீர் ! பாரீர் !
                பாளையங்கோட்டை உபகோட்ட அதிகாரி தற்காலிக பணிநீக்கத்தில் இருக்கிறார் .அவருக்கு நமது இலாகாவில் இருந்து பதிவு தபால் அவர் கொடுத்த வீட்டு முகவரிக்கு வருகிறது .வீ ட்டில்  அவர் இல்லை தபாலை அவர் மனைவியி டம் பட்டுவாடா செய்து விட்டு போஸ்ட்மன் ( Officiating )வந்துவிடுகிறார் .சில நாட்கள் கழித்து நிர்வாகம் அந்த ASP யிடம் தங்கள் அலுவலக கடிதத்திற்கு பதில் கேட்கிறது .ASP தான் அந்த கடிதத்தை வாங்கவில்லை என்கிறார் .விசாரணை செய்த நிர்வாகம் ASP மனைவியி டம் பட்டுவாடா செய்த தபால் காரரை தண்டிக்கிறது .ஏன் Authorization இல்லாமல் பட்டுவாடா செய்தாய் என்று  ? இது எப்படி இருக்கு ?
                                                                       தோழமையுடன் 
                                                                    SK.ஜேக்கப்ராஜ்   

0 comments:

Post a Comment