...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, October 28, 2022

 


அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் 

அஞ்சல் எழுத்தராகப்போகும் எங்கள் அன்பு தோழமைகளுக்கு நெல்லை NFPE யின் வெற்றி வாழ்த்துக்கள் 

நாம் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் PA/SA தேர்வு முடிவுகள் முழுமையாக 30.10.2022 க்குள் முடித்திருக்கவேண்டும் என அஞ்சல் வாரியம் காலநிர்ணயம் செய்திருப்பதை யாவரும் அறிவீர்கள்.

கடந்த இரண்டு நாட்களாக நமது மாநில நிர்வாக அலுவலகத்திலும் பதவி உயர்வு சம்பந்தமான கூட்டங்கள் நடந்துவருவதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்பெல்லாம் தேர்வு முடிவுகள் அறிவிக்க இது போன்ற காலநிர்ணயம் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை..

புதிய நியமனவிதிகள் நடைமுறைக்கு வந்தபின் நடைபெற்ற முதல் தேர்வு..மாநில அளவில் தேர்ச்சிப்பட்டியல் என எல்லாமே புதியவைகள்...

அதுபோக காலியிடங்களும் ஆயிரத்தை தொடும் அளவில்...பிரிவு A யில் அனைவரும் தேர்வாகும் ஓர் மகிழ்வான சூழல் ..பிரிவு B யில் கூட பாதிக்கு மேல் ஊழியர்கள் எழுத்தராக ஒரு பொன்னான வாய்ப்பு...

இத்தனை காலியிடங்களை கண்டுபிடித்தது, காலியிடங்களை எல்லாம் பூர்த்திசெய்திட தொடர் நடவடிக்கைகள் எடுத்தது என எல்லா பெருமையும் நமது  NFPE பேரியக்கத்திற்கே சாரும்...

பதவிஉயர்வின் வெற்றி விளிம்பில் நிற்கும் அனைவருக்கும் நெல்லை NFPE யின் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் .

தோழமையுடன்   SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 





Thursday, October 27, 2022


 

இது நெல்லை கோட்ட உதவி செயலர் தோழர் R .மகாராஜன் அவர்கள் தினமும் பதிந்துவரும் ஒரு பதிவு ...
 

Wednesday, October 26, 2022


 On the occations of  farewel party invitation of com. V.Parthiban .Apm, Mylapore.HPO, Chennai, to be held on 31.10.2022 being served to our beloved shri.B.Selvakumar.CPMG.T N Circle, Chennai.2. He assured that he will probably attend to this farewell party.

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !

தபால்காரர் COMBINED DUTY  மற்றும் விடுமுறை நாட்களில் பணிபுரியும் போது  கொடுக்கப்படும் இழப்பீடு தொகை குறித்து ஏற்கனவே அஞ்சல் வாரியம்14.08.2015 அன்று  தெளிவான உத்தரவுகளை வழங்கியும் கூட பல போஸ்ட்மாஸ்டர்கள் இதுகுறித்து சரியான புரிதல் இல்லாமல் இருக்கிறார்கள் .

ஆகவே ஊழியர்கள் நலன் பெறும் வகையில் மீண்டும் இலாகா உத்தரவை அமுல்படுத்திட வலியுறுத்தி சென்னை பெருமண்டல PMG திரு .நடராஜன் IPS அவர்கள் மீண்டும் அனைத்து கோட்ட அதிகாரிகளுக்கும் 26.10.2022 அன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்கள் 

.அதன்படி COMBINED DUTY பார்க்கின்ற தபால் காரருக்கு ரூபாய் 94 என்றும் இரண்டு தபால்காரர்கள் சேர்த்து ஒரு BEAT வேலையை பார்த்தால் ரூபாய் 47 கொடுக்கப்படவேண்டும் .மேலும் விடுமுறைநாட்களில் பட்டுவாடா செய்யும் தபால்காரருக்கு ரூபாய் 282 என்றும் MTS ஊழியர்களுக்கு  ஒரு மணி நேரத்திற்கு Rs.29 விகிதம்   மூன்றுமணிநேரம் வரைக்கும்  , எழுத்தர் மூன்றுமணிநேரத்திற்குள் என்றால்  ரூபாய் 41 Per hour , என்றும் சூப்பர்வைசர் மூன்றுமணிநேரத்திற்குள் என்றால்  ரூபாய் 47 per hour  என்றும் வழங்கப்படவேண்டும் .மூன்று மணிநேரத்திற்கு மேல் என்றால் மூன்றுமணிநேர ஊதியம் வழங்கிடவேண்டும் 

இதுபோன்ற ஊழியர்கள் நலன் காக்கும் அதிகாரிகளை நாம் வாழ்த்துவோம் !இதே  PMG அவர்கள் மதுரையில் PMG  ஆக பணியாற்றிய  போது தபால்காரர் பணியிடங்களில் GDS ஊழியர்கள் இல்லை என்றால் வெளியாட்களை அனுமதிக்கலாம் என்ற வரலாற்று உத்தரவை பிறப்பித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

ஆகவே இனியாவது தலமட்டத்தில் தபால்காரர் தோழர்கள் தயக்கங்கள் ஏதுமின்றி COMBINED DUTY அலவன்ஸை CLAIM செய்திடவேண்டும் ....

நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை