...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, February 24, 2021

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                                                  நெல்லை கோட்ட செய்திகள் 

அஞ்சல் நான்கு மாநில மாநாட்டிற்கு வருகின்ற தோழர்களுக்கான தகவல் 

1.M .ரெங்கநாதன் S 11 --73  2.புஷ்பா கரன்  S 11 -76  3.ஸ்ரீனிவாச சொக்கலிங்கம்  S 11 -74   4.அருணாச்சலம்  S 11 =77 5.பாலகுருசாமி - S 11 -79 6.அருண்குமார் - S 11 -80-7---ரெங்கநாதன்  S 11 -8. மகேஸ்வரன்  S 11 -11 9..முருகேசன்  S 11 -13 10..ஜேக்கப் ராஜ்  S 11 --13. 11.குருசாமி  S 11 -14  12.சாகுல் -72 13.பாலமுருகன்  S 11 -43 14.மோகன்  S 11 -42 15.ஆசைத்தம்பி  S 11 -45  16.இளங்கோ  S 11 -34 17.SK .பாட்சா  S 11 -35 18. பிரபாகர்  S 11 

நாம் செல்லும் நெல்லை விரைவு வண்டி மதுரையில் இருந்து இயக்கப்படுவதால் மதுரைக்கு செல்ல அனைவரும் சரியாக இன்று மாலை 4.30 மணிக்கு நமது யூனியன் அலுவகத்திற்கு  (பாளை )வந்துசேரவும் ..அனைவரும் தங்களது அடையாளஅட்டை ஒரிஜினல் ஒன்றை கொண்டு வரவும் .தங்களது பயணத்தில் ஏதேனும் மாற்றம் இருந்தால் கோட்ட செயலர் தோழர் புஷ்பாகரன் அவர்களிடம் தெரிவிக்கவும் .

நன்றி .தோழமையுடன் T. புஷ்பாகரன் கோட்ட செயலர் நெல்லை 



Tuesday, February 23, 2021

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                                                             முக்கிய செய்திகள் 

1.24.02.2021 அன்று நடைபெறவிருந்த நமது கோட்ட அளவிலான மாதாந்திர பேட்டி 04.03.2021 க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது .

2.சென்னையில் 25.02.2021 முதல் 26.02.2021 வரை நடைபெறும் அஞ்சல் நான்கின் மாநாட்டிற்கு நமது கோட்டத்தில் 6 தோழர்களுக்கு சிறப்பு விடுப்பு வழங்கப்படுகிறது .1.புஷ்பாகரன் 2.ரெங்கநாதன் 3.பாலகுருசாமி 4.அருணாச்சலம் 5.மகேஸ்வரன் 6.V.தங்கராஜ் .20பேருக்கு ஒரு சார்பாளர் என்ற அடிப்படையில் சிறப்பு விடுப்பு வழங்கப்பட்டுள்ளது .ஏனைய தோழர்கள் தங்கள் சொந்த விடுப்பில் வந்திடுமாறு கேட்டுக்கொள்கிறோம் .நாளை மாலை சரியாக 5 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட தயாராகுங்கள் .மாநாடு நடைபெறும் இடம் POSTAL& BSNL  சமுதாய நலக்கூடம்  15 வது மெயின் ரோடு 2வது அவனியூ அண்ணாநகர் சென்னை -600040

3. Postman/MTS To PA/SA தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்று  28.2.2021 அன்று நடைபெறவுள்ள DEST தேர்விற்கு செல்லும் அனைத்து தோழர்களுக்கும் NELLAI  கோட்ட சங்கத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். 

நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

Saturday, February 20, 2021

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !

                     மருத்துவ விடுப்புகள் மறுக்கப்படுவது  நியாயமா ?

நமது கோட்ட கண்காணிப்பாளர் அவர்கள்  விடுப்பில் இருப்பதை தொடர்ந்து நமது கோட்டத்திற்கு கூடுதல் பொறுப்பேற்றிருக்கும் கன்னியாகுமரி SSP அவர்கள் நமது ஊழியர்களின் மருத்துவ விடுப்பில் கூட கடுமையாக நடந்து கொள்வது வருத்தமளிக்கிறது .உடல் நலக்குறைவை காரணம் காட்டி விடுப்பு விண்ணப்பித்த தோழியருக்கு SECOND MEDICAL OPINION செல்ல தாக்கீது அனுப்புவது எந்த வகையில் நியாயம் ? இன்றைய சூழலில் மீண்டும் கொரானா அச்சுறுத்தல் இருக்கும் போது மருத்துவ விடுப்பிற்கு கூட இவ்வளவு கடினமாக நடந்துகொள்வது ஏற்புடையதுதானா ? 

குறிப்பு -நமது கண்காணிப்பாளர் அவர்கள் மேலும் ஒருவாரம் தனது விடுப்பை EXTENSION செய்துள்ளார்கள் .

இதுவும் கடந்து போகும் ---NELLAI NFPE 

Friday, February 19, 2021

நம் நாட்டில் பொதுத்துறை நிறுவனங்கள் இறப்பதற்கென்றே பிறந்தவை.

1.இராணுவத்துறையில் கூட தனியார்மயம் அமலாக்கப்படுகிறது 

2.பெட்ரோலியத்துறையில் தனியார்மயம் கொண்டு வரப்படுகிறது.

3.அனல் மின் நிலையங்களுக்குத் தேவையான உபகரண உற்பத்தித் துறையில் அனைத்துத் தகுதிகளையும் கொண்ட இந்திய பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL) நிறுவனத்தின் நான்கு ஆண்டு கால மொத்த உற்பத்திக்கு சமமானதாகும். இப்போது BHEL நிறுவனம் 217 கோடி ரூபாய் நட்டத்தை சென்ற காலாண்டில் அறிவிக்கிறது. இதற்காகவே காத்திருந்தது போல் இந்நிறுவனம் நட்டத்தைக் காரணம் காட்டி தனியார்மயப்படுத்தப்படுகிறது. 

4. நம் நாடு பெட்ரோல் உள்ளிட்ட எண்ணெய்த் தேவைகளுக்கு இறக்குமதியையே பெருமளவில் நம்பியுள்ள நிலையில், லாபத்துடன் இயங்கி வரும் இந்திய கப்பல் துறைமுகக் கழகத்தை தனியார்மயப்படுத்துகிறது இந்த அரசு

4.மின்சாரத்துறை...

சண்டிகரில் உள்ள லாபத்தில் இயங்கும் மின் பகிர்மான நிலையத்தின் 100 சதவீத பங்குகளையும் விற்று தனியார் ஏகபோகமாக மாற்றப்படுகிறது. 

5.இன்றைய அரசாங்கம் வெறும் நிறுவனங்களை மட்டும் தனியார்மயப்படுத்தவில்லை. மாறாக அது தொலைத்தொடர்பு, உள்நாட்டு விமானப் போக்குவரத்து, எரிசக்தி, கனிமவளம், மின்சாரம் என்று நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத் துறைகளையே முழுக்க முழுக்க  தனியார்மயப்படுத்திக் கொண்டிருக்கிறது.

6.எல்.ஐ.சி பங்கு விற்பனை முடிவு

7.ரயில்வேயும் தற்போது தனியாமயமாக்கப்பட்டு வருகிறது 

8.பஞ்சாப் நேஷனல் மற்றும் பாங்க் ஆப் பரோடா ஆகியவற்றில் உள்ள அரசின் பிடி தளர்ந்து தனியார் கைகளுக்கு போகிறது!

நன்றி --பொதுத்துறை நிறுவன செய்திகளில் இருந்து ....SKJ 



 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் 

பெங்களூரில் கடந்த 13.02.2021 அன்று நடைபெற்ற NFPE சம்மேளன கவுன்சிலில் எடுக்கப்பட்ட போராட்ட அறிவிப்புகள் --வெல்லட்டும் 

பஞ்சப்படி முடக்கம் -HSGII &HSG I பதவிகளை நியமனவிதிகளை தளர்த்தி நிரப்பிடுக !--தொடரும் நெட் ஒர்க் பிரச்சினைகளை சரி செய்திடுக !-GDS ஊழியர்க்ளுக்கு விடுபட்ட கமலேஷ் சந்திரா கமிட்டி பரிந்துரையை நிறைவேற்றிடுக !வணிக இலக்கு என்ற பெயரில் நடக்கும் நிர்வாக நெருக்கடிகளை கட்டுப்படுத்துக ! உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் கீழ்கண்ட இயக்கங்களில் அனைவரும் பங்கேற்போம் !

ஏப்ரல் --கோட்ட அளவில் தர்ணா 

மே -மாநில அளவில் CPMG அலுவலகம் முன்பு தர்ணா 

 -மே -அகிலஇந்தியஅளவில் டெல்லி டாக் பவன் முன்பு தர்ணா 

ஜூன் --புதுடெல்லியில் கருத்தரங்கம் 

-----------------------------------------------------------------------------------------------------------------

இதர நிகழ்ச்சிகள் 

21.02.2021 தோழியர் உஷா PA மானுர் அவர்களின் இல்ல விழா -சங்கர்நகர் 

24.02.2021 மாதாந்திர பேட்டி 

25.02.201-26.02.2021 -அஞ்சல் நான்கின் மாநில மாநாடு சென்னை 

27.02.2021-மாலை 5 மணி தோழியர் சென்பகவள்ளி PA பாளை அவர்க்ளின் பணிநிறைவு விழா -பாளை 

27.02.2021-மாலை 6 மணி தோழர் M.சுந்தரராஜ் தபால்காரர் அவர்களின் பணிநிறைவு விழா -பணகுடி 

 நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

                                       

Thursday, February 18, 2021

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! 

                        நெல்லை -மாதாந்திர  பேட்டி 

நமது கோட்ட கண்காணிப்பாளருடனான மாதாந்திர பேட்டி 24.02.2021 அன்று நடைபெறுகிறது .மார்ச் 8 மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த மாத மாதாந்திர பேட்டியில் தோழியர்களையும் பங்கேற்க நாம் முடிவெடுத்துள்ளோம் அதன் அடிப்படையில் இந்த மாத மாதாந்திர பேட்டியில் பங்கேற்கும் நிர்வாகிகள் .

அஞ்சல் மூன்று --.SK .ஜேக்கப் ராஜ் -V.விஜயலட்சுமி LSG PA பேட்டை -RV.தியாகராஜபாண்டியன் 

அஞ்சல் நான்கு --T.புஷ்பா கரன் -ஜீவா பெல்சியா தபால்காரர் பாளை -V.தங்கராஜ் 

ஏற்கனவே அஞ்சல் மூன்று சார்பாக 10 அஞ்சல் நான்கு சார்பாக 6 பிரச்சினைகளையும் கொடுத்திருக்கிறோம் .மேலும் சேர்க்கவேண்டிய பிரச்சினைகள் இருந்தால் அதையும் கூடுதல் SUBJECTS ஆக சேர்த்துக்கொடுக்கப்படும் .

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பா கரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

Wednesday, February 17, 2021

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

*நமது கோட்டத்தில் மாதாந்திர பேட்டி வருகிற 24.02.2021 அன்று நடைபெறுகிறது .மாதாந்திர பேட்டியில் விவாதிக்கவேண்டிய பிரச்சினைகள் குறித்து இன்று கோட்ட நிர்வாகத்திற்கு கொடுக்கப்படவுள்ளது .

*சென்னையில் நடைபெறும் அஞ்சல் நான்கின் மாநில மாநாட்டிற்கு (25.02.2021-26.02.2021) செல்வதற்கு நமது கோட்டத்தில் இருந்து 17 தோழர்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது .வருகிற தோழர்கள் 24.02.2021 மாலை நெல்லை விரைவு ரயிலில் செல்ல குறிப்பிட்ட நேரத்திற்குள் நெல்லை ரயில் நிலையத்திற்கு வந்துசேர கேட்டுக்கொள்கிறோம் .மாநாட்டு நன்கொடை கொடுக்கவிரும்புகிறவர்கள் அஞ்சல் நான்கின் கோட்ட செயலர் தோழர் புஷ்பா கரன் அவர்களை அனுகவும் .நமது கோட்டத்தின் சார்பாக முதற்கட்டமாக ரூபாய் 5000 வழங்கப்பட்டுள்ளது .

*நமது கோட்ட சங்கத்திற்கு நன்கொடையாக ரூபாய் 1000 வழங்கிய தோழர் கோமதி நாயகம் RETD APM A/CS  அம்பத்தூர் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம் 

*இந்தமாதம் பணிஓய்வு பெறுகின்ற தோழர்கள் N.செண்பகவல்லி PA பாளை -M-சுந்தரராஜ் தபால்காரர் பணகுடி 

நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பா கரன் கோட்ட செயலர்கள் நெல்லை 


Tuesday, February 16, 2021

 அன்பார்ந்த தோழர்களே !

   நமது அஞ்சல் நான்கின் 31 வது தமிழ்மாநில மாநாடு சென்னையில் வருகிற 25.02.2021 -26.02.2021 ஆகிய இரண்டுநாட்கள் நடைபெறுவதை தாங்கள் அறிவீர்கள் .மாநாட்டில் கலந்துகொள்ளும் சார்பாளர் /பார்வையாளர் ஆகியோர் சிறப்பு விடுப்பு கேட்டு விண்ணப்பிக்கும் மாதிரி படிவம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது .நமது கோட்ட சங்கத்தின் சார்பாகவும் கோட்ட நிர்வாகத்திற்கு இன்று கடிதம் கொடுக்கப்படவுள்ளது .ஆகவே மாநாட்டில் கலந்துகொள்ளும் தோழர்கள் தங்களது சிறப்பு விடுப்பிற்கான கடிதத்தை இன்றே அனுப்பிடுவீர் 

1.ரெங்கநாதன் 2.மகேஸ்வரன் 3.கங்காதரன் 4.பாலகுருசாமி 5.முருகேசன் 6.பாலமுருகன் 7.சீனிவாச சொக்கலிங்கம் 8.மோகன் 9.அருணாச்சலம் 10.அருண்குமார் 11.புஷ்பா கரன் 12.தங்கராஜ் 13.பெரியசாமி --

நம்மோடு வரும் தோழமை நண்பர்கள் 

1.ஜேக்கப் ராஜ் 2.பிரபாகர் 3.சாகுல் 4.இளங்கோ 5.பாட்சா 6.ஆசைத்தம்பி 7.குருசாமி .அனைவருக்கும் வாழ்த்துக்கள் 

From


To

 

The Sr. Supdt. of Post Offices,

Tirunelveli Division

Tirunelveli-627002

 

Through –Proper Channel 


Sir,

             Sub : Request for grant of Special Casual Leave for attending Circle Conference of AIPEU Postman &MTS- reg

                                               *****

           I have to attend our Circle conference of AIPEU Postman &MTS as delegate which will be  held at Chennai from25.02.2021 to 26.02.2021 .

         Hence  I request you sir kindly grant me Special Casual Leave for  four days from 24.02.2021 to 27.02.2021                                              

                                                          Thanking you Sir

  Date

Station                                                                                                  Yours faithfully

நன்றி .தோழமையுடன் T .புஷ்பா கரன் கோட்ட செயலர் அஞ்சல் நான்கு நெல்லை 

 

 

 

 


Thursday, February 11, 2021

IPPB மொபைல்  போன் பழுதானால் அதை சம்பந்தப்பட்ட GDS ஊழியர்கள் தான் கட்டவேண்டும் என இரு தோழர்களுக்கு  வழங்கப்பட்ட கடிதங்களுக்கு அவர்கள் கொடுத்திருக்கும் பதில் கடிதம் 

From 


To

Thro proper channel

Sub

Ref

Sir

             The following few lines are submitted for your kind consideration and issue of favourable orders please. 

              The ippb mobile  supplied by our department was fully utilized for our official use only. 

              Whenever there was minor issues with the mobile, it was got settled by the DSM then and there.

                Also I submit that I  neither took the departmental mobile to home nor used it for my personal use.

                  Hence it is requested that the repairing cost of Rs.2850/- may  please be borne by the department,  as it is being done for other office system peripherals.

                                                                           Thanking you

                                                                                                                          Yours Sincerely

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                                                       நன்றி !நன்றி ! நன்றி ! 

மிக நீண்டகாலமாக நிலுவையில் இருந்த தோழர்கள் C .சங்கர் மற்றும் S. கோமதிநாயகம்  அவர்களது LTC பில்லை (ஜம்மு -காஷ் மீர் ) சாங்ஷன் செய்திட்ட நமது மதிப்பிற்குரிய SSP  .L .துரைசாமி அவர்களுக்கும் அதற்கு உறுதுணையாக இருந்த ASP (OD) திரு TS .ரகுநாத் அவர்களுக்கும் நெல்லை NFPE சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் ..சென்ற மாதம் நடைபெற்ற மாதாந்திர பேட்டியில் இந்த பிரச்சினையை மீண்டும் விவாதிக்கப்பட்டு நமது கண்காணிப்பாளர் அவர்களால் சட்டத்திற்குட்பட்டு பரிசீலிக்கப்படும் என்ற உறுதி தரப்பட்டதையும் நன்றியோடு நினைவு கூறுகிறோம் .

*அஞ்சல் நான்கின் தமிழ் மாநில மாநாடு --தமிழக அஞ்சல் நான்கின் மாநில மாநாடு வருகிற 25.02.2021 மற்றும் 26.02.2021 ஆகிய இரண்டு தினங்கள் சென்னையில் நடைபெறுகிறது .அதற்கான நன்கொடை புத்தகங்கள் மாநில சங்கத்தின் மூலம் வந்துள்ளது .விருப்பமுள்ள தோழர்கள் தலா ரூபாய் 100 நன்கொடை வழங்கிட கேட்டுக்கொள்கிறோம் .

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

Saturday, February 6, 2021

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                                        RT 2021 - நோட்டிபிகேஷன் வெளியீடு 

இந்த ஆண்டிற்கான சுழல் மாறுதல் அறிவிப்புகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளது .மொத்தம் 30 T/S ஊழியர்க்ளுக்கும் இரண்டு LSG ஊழியர்க்ளுக்கும் TENNURE முடிவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

1.விருப்ப விண்ணப்பங்கள்  கோட்ட அலுவலகத்தில் சேரவேண்டிய கடைசிநாள் 16.02.2021

2.EXTENSION வேண்டுவோர் விண்ணப்பங்களை கோட்ட அலுவலகத்திற்கு அனுப்பவேண்டிய கடைசி நாள் 11.02.2021

3.அறிவிப்புகளில் விடுதல் /சேர்த்தல் இருந்தால் விண்ணப்பிக்கவேண்டிய கடைசிநாள் 09.02.2021

4.வெளியிடங்களுக்கு  சென்ற LSG ஊழியர்கள் TENNURE முடிக்கவில்லை என்றாலும்  தங்களது விருப்பமனுக்களை அனுப்பலாம் .அனுப்பும் முன்பு கோட்ட சங்கத்திடம் ஆலோசனைகளை கேட்டால் VACANCY குறித்து முழுமையான தகவல்களை தெரிந்துகொள்ளலாம் 

            முன்னதாக LSG VACANCY யில் செப்டம்பர் 2021 வரை எழுகின்ற காலியிடங்களையும் சேர்த்து அறிவிக்கபடாமல் இருந்ததை நமது ஊழியர்களின் ஆதங்கங்களுக்கு இடையே நாம் நமது ASP(HOS) அவர்களை தொடர்புகொண்டு செப்டம்பர் 2021 வரை எழுகின்ற LSG மற்றும் TS இடங்களை சேர்த்து அறிவிக்கவேண்டும் என்று கோரினோம் . நமது கோரிக்கையை ஏற்று சுமார் 1மணி நேரத்தில் நோட்டிபிகேசன்  மாற்றி அனுப்பிய கோட்ட நிர்வாகத்திற்கு NELLAI -NFPE சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .மேலும் கடந்த RT யில் பாதிக்கப்பட்ட ஊழியர்களின் குறைகளை குறிப்பாக தோழர் நியூட்டன் அவர்களின் இடமாறுதல்களை நம்முடைய தொடர் வற்புறுத்தலுக்கிணங்க நிறைவேற்றி கொடுத்ததையும் தோழர் மகாராஜன் (விருதுநகர் ) அவர்களின் கோரிக்கையையும் பரிசீலித்த கோட்ட நிர்வாகத்திற்கு நன்றியை தெரிவித்துக்கொள்க்கிறோம் .

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 



Tuesday, February 2, 2021

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                     நமது மாநில சங்கத்தின் சார்பாக வெளியிடப்பட்ட காலண்டர் நேற்று கிடைத்தது .நேற்று மாலை ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட தோழர்கள் மூலம் முதற்கட்டமாக திருநெல்வேலி HO டவுண் TVLRS மஹாராஜாநகர் பெருமாள்புரம் வீரராகவபுரம் காந்திநகர் திலி தெற்கு முன்னிர் பள்ளம் சங்கர்நகர் சுத்தமல்லி பேட்டை IC பேட்டை யூனிவர்சிட்டி தச்சநல்லூர் மானுர் உக்கிரன்கோட்டை கங்கைகொண்டான்பர்கிட் மாநகரம்  ஆகிய அலுவலகங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது ..மீதமுள்ள அலுவலகஙக்ளுக்கு இன்று அனுப்பிவைக்கப்படும் .மாநில சங்கத்தால் விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் நாம் நமது கோட்ட சங்கத்தின் சார்பாக இலவசமாக கொடுக்கிறோம் .யாரும் பணம் அனுப்பவேண்டாம் .நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Monday, February 1, 2021

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் 

                                    பஞ்சப்படி முடக்கத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் 

நாள் --01.02.2021      மாலை 6 மணி 

இடம் --பாளையங் கோட்டை  தலைமை அஞ்சலகம் முன்பு 

தலைமை --தோழர்கள் T .அழகுமுத்து கோட்டத்தலைவர் P 3 

                                          A .சீனிவாச சொக்கலிங்கம் கோட்டத்தலைவர் P 4

அன்பார்ந்த தோழர்களே!!

தொடர்ந்து மூன்று பஞ்சபடிகளை முடக்கி வைத்திருக்கும் மத்திய அரசு --வருகிற ஜூலையில் கூட முடக்கப்பட்ட பஞ்சபடியை கொடுக்குமா என்ற உறுதியற்ற நிலை இந்தநிலையில்  முக்கிய கோரிக்கைகளான , 2016இல் மத்திய அமைச்சர்கள் கொடுத்த ஏழாவது ஊதிய குழு சம்பந்தமான உறுதிமொழி நிறைவேற்றப்படவேண்டும், ஊழியர்களை கட்டாயமாக வீட்டுக்கு அனுப்பும் சட்டங்களை(56J) ரத்து செய்ய வேண்டும் , தொழிலாளர் நல சட்டங்களில் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் மீது மத்திய அரசு எந்தவித நடவடிக்கைகளும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகிறது. ஜனவரி மூன்றாவது வாரத்தில் மத்திய அமைச்சரவை செயலரை சந்தித்த NJCM கன்வீனர் தோழர் சிவகோபால் மிஸ்ரா அவர்களிடம் மீண்டும் நிதி நிலையை காரணம் காட்டி கோரிக்கைகளை ஏற்க அரசு மறுத்து வருகிறது.

எனவே மத்திய அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க மறுக்கும் மத்திய அரசினை ஊழியர் விரோத போக்கினை கண்டித்து நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தினமான 01.02.2021  அன்று நாடு முழுவதும் எதிர்ப்பு தினமாக  அறிவித்து  ஆர்ப்பாட்டம் நடத்தவும் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் அறைகூவல் விடுத்துள்ளது. இந்த அறைகூவலை ஏற்று நமது கோட்டத்தில் இன்று (01.02.2021) நடைபெறும் ஆர்பாட்டத்தில் தாங்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம் 

                                           ஆர்ப்பாட்ட வாழ்த்துக்களுடன் 

SK .ஜேக்கப் ராஜ் --T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை