...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, January 31, 2018

இன்று பணி ஓய்வு பெறும் நெல்லை தோழர்களை வாழ்த்துவோம் !
             தோழர் அன்சாரி SBCO திருநெல்வேலி HO 
அன்சாரி என்ற அமைதியே !
அறுபது உனக்கென்று யார் சொன்னார் !
தோற்றத்திலும் தெரியவில்லை 
தொய்வில்லா பணியிலும் தெரியவில்லை 
அன்பு அடக்கம் அமைதி என்ற 
அடையாளங்களின் அணிவகுப்பாய் 
அனைவரின் உள்ளங்களையும் 
அலங்கரித்த அன்சாரி வாழ்க !
விழா -திருநெல்வேலி HO மாலை 5 மணி  
-------------------------------------------------------------------------------------------------------------------------
தோழர் தர்மர் GDSMD மதவக்குறிச்சி மானுர் பணி ஓய்வு வாழ்த்துக்கள் 
ED சங்கமெனும் அமைப்பு 
அழைப்பு விடும் பொழுதெல்லாம் 
சிங்கமென சிலிர்த்துவரும் தர்மரே !
நீயா -கமிட்டியா -
எது முந்தும் என பார்த்ததில் 
கமிட்டியை முந்தியவனே !
தளரா உறுதி -தயங்கா உள்ளம் 
தடம்மாறா பயணம் -நீடு வாழ 
உன்னை வாழ்த்துகிறேன் 
நிகழ்ச்சி -மானுர் அஞ்சலகம் மாலை 5 மணி 
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் 

வாழ்த்துக்கள் -சாக்கரடீஸ் எனும் சாதனையாளனின் வெற்றிகள் சிறக்க வாழ்த்துகிறோம் 
அகில இந்திய கூடை பந்தாட்ட கழக சம்மேளனம் சார்பாக நடந்த கூடைப்பந்து போட்டியின் நடுவராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் நெல்லை அஞ்சல் நான்கின் உதவி கோட்ட செயலர் தோழர் சாக்கரடீஸ் தபால்காரர் மஹாராஜநகர் அவர்களின் சாதனைகள் தொடர வாழ்த்துகிறோம் .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --SK பாட்சா 

இன்று பணிஓய்வு பெறும்  வெங்கட்ராமன் முன்னாள் மாநில உதவி தலைவர் ACCOUNTS OFFICER -சென்னை அவர்களை வாழ்த்துகிறேன் 




வெங்கட்ராமன் எனும் வேங்கையே !
வேகம் நிறைந்தவனே !
வேஷம் மறந்தவனே !
கோஷத்திற்கு\ உயிர் கொடுத்தாய் !
கொண்ட கொள்கைகாய்  பதவி இழந்தாய் !
சென்னை மாநகரில் நீ 
பணியாற்றாத கோட்டங்கள் குறைவு 
அணி கூட்டங்கள் என்றால் -நீ 
பங்கேற்காத கூட்டங்களும் குறைவு 
தனி ஆளாய் நின்றும் -உன் கருத்தை 
தயங்காமல் பதிந்தாய் 
அனுசரித்து பழகியிருந்தால் 
அஞ்சல் மூன்றில் மட்டும் இடம் கிடைத்திருக்கும் 
அடிபணியா காரணத்தால் -எங்கள் 
அனைவர் உள்ளத்திலும் நீங்கா இடம் பெற்றாய் 
வாழ்க ! நீங்கள் பல்லாண்டு !
வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் 

இன்று பணிநிறைவு பெறும் நாகப்பட்டினம் கோட்ட செயலர் தோழர் S .மீனாட்சி சுந்தரம் அவர்களின் பணி ஓய்வு காலம் சிறக்க வாழ்த்துக்கள் 

நாகை தந்திட்ட 
நல்லதொரு தலைவனே !
வாகை சூடி படைநடத்திய 
மற்றுமொரு ராஜ் மோகனே !

நாகை புயல் தாக்கும் பகுதிதான் -உன் 
நாவன்மையால் புயலை தடுத்தாய் 
வாதத்தில்  வல்லமை உனக்குண்டு -
பிடிவாதத்தை ஒருபோதும் பார்த்ததில்லை 

தகவல் அறியும் சட்டத்தை 
சரியாக பயன்படுத்தியவன் நீ 
தவறறியா ஊழியர்களை 
தற்காத்து காத்தவன் நீ 

விரல் நுனியில் சட்டங்கள் 
கர்வங்கள் கொண்டதில்லை 
விடாப்பிடியும் விடாமுயற்சியும் -உன் 
வெற்றிக்கு உதவிய ஆயுதங்கள் 

கோட்ட செயலராய் மட்டுமல்ல 
கோட்ட அலுவலகத்திலும் மிளிர்ந்தவன் 
கொள்கை முரண் ஏதுமின்றி -ஒரு 
கோடுபோட்டு வளர்ந்தவன் 

சமரசம் இல்லா போராளி -அதிகாரியிடம் 
சாமரம் வீசா ராஜாளி 
விருப்பு வெறுப்பு இருந்ததில்லை -பெரிய 
பொறுப்பு தேடியும் அலைந்ததில்லை 

தலைமைக்கு ஏற்ற அத்தனை பண்புகளையும் 
தன்னகத்தே கொண்டிருந்தாலும் 
தன்னடக்கத்தோடு இருந்தாய் 
தன்னை கொடுத்து சங்கம் காத்தாய் !
வாழ்க ! உன் புகழ் ஓங்குக !
                                               வாழ்த்துக்களுடன் 
S.பேராட்சி                                                                               SK .ஜேக்கப் ராஜ் 
தலைவர் PSD நெல்லை                                         கோட்ட செயலர் நெல்லை 

Tuesday, January 30, 2018

GDS சங்க நெல்லை கோட்ட செயலர் தோழர் காலப்பெருமாள் அவர்களின் உடல் தகனம் -இறுதி அஞ்சலியில் பெருந்திரளாக தோழர்கள் பங்கேற்பு 
28.01.2018 அன்று சாலை விபத்தில் மரணமடைந்த தோழர் காலப்பெருமாள் அவர்களின் இறுதிச்சடங்கு விஜயநாராயணம் அருகே அவரது சொந்த கிராமத்தில் நடைபெற்றது .அதனை தொடர்ந்து அஞ்சலி கூட்டம் நடந்தது .நமது முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் திரு .VPC -ASP கள் திரு பொன்னையா திரு குமரன் திரு செந்தில் குமார் AIGDSU தமிழ்மாநில செயலர் தோழர் இஸ்மாயில் அஞ்சல் மூன்றின் மாநில உதவி தலைவர் தோழர் ஐயம்பெருமாள் SC /ST சங்க கோட்ட செயலர் தோழர் சுப்பிரமணியன் SBCO மாநில அமைப்பு செயலர் தோழர் செல்வபாரதி அவர்களும் கலந்துகொண்டனர் .தொலைபேசி மூலம் தனது இரங்கலை தெரிவித்த அஞ்சல் மூன்றின் மாநில செயலர் தோழர் JRஅண்ணன் காந்தி முத்துசாமி LS ஜான் பிரிட்டோ GDSஅகிலஇந்திய பொதுச்செயலர் தோழர் மஹாதேவையா அகிலஇந்திய தலைவர் தோழர் ராஜாங்கம் நமது மாநிலதலை வர் தோழர் செல்வ கிருஷ்ணன் வாட்ஸாப்ப் மூலம் தங்களது இரங்கலை பதிவிட்ட அனைத்து அஞ்சல் மூன்று அஞ்சல் நான்குகோட்டசெயலர்களுக்கும் நெல்லை NFPE தனது நன்றியை கண்ணீர் மல்க தெரிவித்துக்கொள்கிறது மேலும் முதல்நாள் இரவுமுதல் மறுநாள் வரை இறுதிச்சடங்கிற்க்கான உதவிகளை உடன் இருந்து செய்த அஞ்சல் நான்கின் கோட்டசெயலர் தோழர் பாட்சா அவரது சகோதரர் தோழர் ஜாபர் ஷா (அலி ஜூவல்லர்ஸ் ) அவர்களுக்கும் குடும்பத்தார் சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .குடும்பத்தலைவனை இழந்துதவிக்கும் மனைவி மற்றும் இரு குழந்தைகளுக்கு எல்லாம்வல்ல இறைவன் வழிகாட்டுவாராக !









Monday, January 29, 2018

                                          வருந்துகிறோம் 
நெல்லை AIGDSU சங்கத்தின் கோட்ட செயலர் -
தோழர் S .காலப்பெருமாள் GDSMD விஜயநாராயணம் நாவல்பேஸ் அவர்கள் நேற்றிரவு நாங்குநேரி -திசையன்விளை சாலை ஏமென்குளம் அருகில் சாலைவிபத்தில் சிக்கி அபார மரணமடைந்தார்கள் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் .அன்னாரது இறுதிச்சடங்கு இன்று 29.012018 நண்பகல் நடைபெறும் .
  தோழர் காலப்பெருமாள் அவர்கள் AIGDSU சங்கத்தின் நெல்லை கோட்ட செயலர் -மாநில உதவி செயலர் என்று பல்வேறு பொறுப்புகளில் மிளிர்ந்தவர் -மிடுக்கான மேடைப்பேச்சும் எடுப்பான கோஷமும்அவரை மாநிலம் முழுவதும் விரைவிலே அடையாளம் காட்டியது .அஞ்சாநெஞ்சன் அண்ணன் பாலு அவர்களின் உண்மை பற்றாளனாய் திகழ்ந்தவர் .நெல்லை அஞ்சல் மூன்றுசங்கத்திற்கு பேருதவி புரிந்தவர் .அவருடைய மரணச்செய்தியை கேட்டு அதிர்ந்து போனேன் .இரவோடுஇரவாக தோழர்கள் பாட்சா ஜாபர் மற்றும் செல்வம் ஆகியோருடன் நான்குனேரி அரசு மருத்துவமனைக்கு சென்று -தோழரின் இறுதிச்சடங்கு தொடர்பாக எடுக்கவேண்டிய உதவிகளை குடும்பத்தாருடன் செய்து வந்தோம் .இறுதிச்சடங்கு அவரது சொந்த கிராமமான விஜயநாராயணத்தில் நடைபெறுகிறது .
தோழரை இழந்துவிடும் அவர்தம் குடும்பத்திற்கு நெல்லை NFPE -ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது 

Thursday, January 25, 2018

DEPARTMENT OF POSTS, INDIA

O/o Sr. Supdt.of Post Offices, Tirunelveli Division, Tirunelveli 627 002


Memo No. ASP/SU/Dlgs/2017 dated 25/01/2018
           
             The union meeting is to be held on 29/01/2018.   Special CL /Permission is granted to the below mentioned Officials  as detailed below. Heads of Offices are requested to relieve the officials for the meeting.
  

AIPEU P III at 1130 Hours.
S. Koilpillai Jacobraj,
 CPC PA, Tirunelveli HO
Permission
..do..
T. Alagumuthu
SPM, Tirunelveli Merku SO
Special CL.  PM, Tirunelveli HO –   Please depute one PA to relieve the official.
..do..
R.V.Thiyagarajapandian
SPM (Offg.), Alwarkurichi SO
Special CL – Under office arrangement

AIPEU P IV at 1130 Hours
Syed Kader Batcha
CO, Tirunelveli HO
Special CL
..do..
T. Pushpakaran,
Postman, Palayankottai HO
Special CL
                     ..do..
S. Athi Narayanan, Mailoverseer,  Ambasamudram HO
Special CL


                                            முக்கிய செய்திகள் 
புதிய பென்ஷன் சம்பந்தமாக அமைக்கப்பட்ட கமிட்டி தனது அறிக்கையை அரசிடம்  சமர்ப்பித்துள்ளது .இதுகுறித்து ஊழியர் தரப்பு கருத்துக்களை அறியவும் அரசின் முடிவுக்கு முன்பாக தேவையான திருத்தங்களை மேற்கொள்ளவும் அறிக்கையை NJCM அமைப்புக்கு வழங்கும் படி தோழர் சிவகோபால் மிஸ்ரா 06.01.2018 அன்று அமைச்சக செயலருக்கு கடிதம் எழுதியுள்ளார் .இதுகுறித்து ஊழியர்களிடம் விழிப்புணர்வு ஏற்படவும் -எழுச்சியை உருவாக்கவும் நெல்லை கோட்ட சங்கத்தின் சார்பாக ஒரு சிறப்பு அமர்வை நடத்த உத்தேசித்துள்ளோம் புதிய பென்ஷன் குறித்த வல்லுனர்களும் -தலைவர்களும் கலந்துகொள்ள  இருக்கிறார்கள் .MAY 2018 முதல் வாரத்தில் இந்த சிறப்பு கூட்டம் நடைபெற திட்டமிட்டுளோம் .விரைவான விவரங்கள் விரைவில் கோட்ட சங்கத்தின் சார்பாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் .
-------------------------------------------------------------------------------------------------------------------------
MACP பதவி உயர்வை 01.01.2006 முதல் அமுல்படுத்தவேண்டும் என்ற டெல்லி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சுட்டி காட்டி NJCM சார்பாக அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது .ஆறாவது சம்பளக்குழு அடிப்படையில் கொடுக்கப்பட்ட MACP பதவியுயர்வு 01.09.2008 முதல் அமுல்படுத்தியது தவறென்றும் 01.01.2006 முதல் அமுல்படுத்துவது தான் நியாயம் இன்றும் கூறப்பட்டுள்ளது .
------------------------------------------------------------------------------------------------------------------------
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Wednesday, January 24, 2018

                                         நெல்லை கோட்ட செய்திகள் 
ஒரு நீண்ட முயற்சிக்கு பிறகு நமது கோட்டத்தில் BUNCHING OF INCREMENT உத்தரவு தோழர் KS .ஷியாம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது .பிப்ரவரி 2017 இல் வைக்கப்பட்ட கோரிக்கை -இடையில் மண்டல நிர்வாகம் நிறுத்திவைத்து மீண்டும் இலாகாவால்  செப்டம்பரில் கொடுக்கப்பட்ட வழிகாட்டுதல் ஆணை -இதர கோட்டங்களில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு இவைகளின் அடிப்படையிலும் கோட்ட சங்கத்தின் அயரா முயற்சியாலும் -பாதிக்கப்பட்ட தோழரின் தளரா உறுதியாலும் --பெறப்பட்ட இந்த உத்தரவிற்கு நெல்லை கோட்ட நிர்வாகத்திற்கு எங்கள் நன்றிதனை தெரிவித்து கொள்கிறோம் .
                    வேலூர் கோட்டத்தில் CSI அமுலாக்கம் 
மிகுந்த எதிர்ப்பு மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் தமிழகத்தில் முதன்முதலாக CSI அமுலாக்கம் 23.01.2018 அன்று வேலூரில் அமுலாகியுள்ளது .சென்னை மண்டல அதிகாரி மரியாதைக்குரிய திரு .ஆனந்த் அவர்கள் தொடங்கி வைத்தார்கள் .தேர்தல் முடிவுகளை போல் அவ்வப்போது நடந்த நிகழ்வுகளை வேலூர் கோட்ட செயலர் மற்றும் மாநில உதவி செயலர் தோழர் வீரன் அவர்கள் பதிவிட்டுக்கொண்டிருந்தார்கள் .மாநில செயலரும் தன் பங்கிற்கு அவ்வப்போது கள நிலவரங்களை அதிகாரிகளுக்கு தெரிவித்து கொண்டிருந்தார் எத்தனை அலுவலகத்தில் DAILY ACCOUNT  .வந்தது இன்னும் என்னென்ன பிரச்சினைகளை சந்திக்க வேண்டும் என்ற ஆவல் தமிழகம் முழுவதும் பற்றி கொண்டது CBS அமுலாகும் போது எப்படி அலங்கரிக்கப்பட்ட அலுவலகங்களில் வரவேற்றோமோ அதே போல் வேலூர் அஞ்சலகத்திலும் பார்க்க முடிந்தது .எந்த சவால்களையும் தாங்கிக்கொள்ளும் பக்குவம் ஊழியர்களிடமும் எந்த தடைகளையும் தகர்க்க கூடிய ஆற்றல் நம் சங்கத்திற்கு உண்டு என்று தமிழகத்தில் நாம் நிருபித்திருக்கிறோம் .வேலூர் கோட்ட ஊழியர்களுக்கும் மாநில சங்கத்திற்கும்  எங்கள் வாழ்த்துக்கள் 
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 













மதுரை MMS க்கு FC க்கு அனுப்பப்பட்ட திருநெல்வேலி மெயில் வேன் 
இன்னும் பணி முடிந்தபாடில்லை .நான்கு மாதங்களுக்கு மேலாகியும் MMS மதுரை காட்டும் மெத்தனத்தால் அஞ்சல் துறையின் தேவையற்ற பண விரயத்தை நிறுத்துவது யார் ? நான்கு மாதங்களாக இரண்டு ஓட்டுனர்களுக்கு DA -நான்கு மாதங்களுக்கு மேலாக நெல்லையில் இயக்கப்படும் தனியார் வாகனத்திற்கு வாடகை -இவைகளை கணக்கிட்டு பார்த்தால் ஒரு புதிய வேண் சொந்தமாக வாங்கியிருக்கலாம் .இத்தனைக்கும் மதுரை MMS இல் நான்கு மெக்கானிக் மற்றும் ஒரு பெயிண்டர் இருக்கிறார் .உத்தேசமாக   நிர்வாகம் செலவழிக்கும் தொகையை பாரீர் Accordingly, the following are the approximate expenditure per vehicle for one month :-DA இருவருக்கு 30000 தனியார் வேண் வாடகை 62500 ஆக மொத்தம் 92500 -.இது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோட்ட சங்கம் மூலம் கேட்ட தகவல்கள் உங்கள் பார்வைக்கு 

REQUESTING INFORMATION UNDER RIGHT TO INFORMATION ACT 2005.

                          To
                             The Central Public Information Officer,
                             O/o the Sr. Superintendent of Post Offices,
                             Tirunelveli Division, TIRUNELVELI 627 002.

                   Respected Sir,

                             Sub:-Seeking information under RTI Act 2005-Requesting of –
                                    reg.
                                     
                                      --------------------
                  
The following information may kindly be caused to be supplied. It is certified that the under mentioned information is available at the Office of  Sr. Superintendent of Post Offices, Tirunelveli   Divn.  And the information is not related to the:-

1.   issue of  Defense force of the Union
2.   issue of Parliamentary affairs.

Information required:-

A.   Date on which the DMMS vehicle of  Tirunelveli  Division
(i.e.TN 59 AH 5671) was sent to DMMS Madurai for F.C work.

B.   In this connection number of    Drivers deputized to DMMS Madurai

C.   Total Amount of Advance of T.A. paid so far  to such drivers in consequences of such deputation.

D.   Details of expenditure towards private vehicle:-

                                                     I.        Amount of rent for the  private vehicle per day utilized in the  place of regular mail van.

                                                   II.        Amount of rent paid sofar to such private vehicle.


-2-

Remittance of fee for the RTI:-
Fee for information under RTI Act 2005 Rs.10/-  and Rs.10/-  fee for copying charges of note sheets,  remitted in the form of Indian Postal Order, No.
      ( Rs.10 Denomination)

An early information is requested.
         
                    Thanking you, Sir.

Tirunelveli  627 002.                                      Yours faithfully,
            22-01-2018

                                                                               S.K.JACOB RAJ,
                                                                             Divisional Secretary,
     All India Postal Employees    
         Union  -Group ‘C’
       TIRUNELVELI 627 002.     

  

Tuesday, January 23, 2018

                                           நெல்லை செய்திகள் 
இன்று 23.01.2018 நடக்கவிருந்த மாதாந்திர பேட்டி 29.01.2017 தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது .ஏற்கனவே  சென்ற மாத பேட்டியும் நடக்கவில்லை .நிறைய பிரச்சினைகள் விவாதிக்க கொடுத்திருக்கிறோம் .HSG II மற்றும் HSG I  OFFICIATING கோரிக்கையில் குறிப்பிட்ட பதவிகள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன .மீதமுள்ள பதவிகள் முழுமைக்கும் ஊழியர்களின் விருப்பத்தின் அடிப்படையில் நிரப்படவேண்டும் -சூழல் மாறுதல் -LSG TREASURER பதவிகளுக்கான மாற்று பதவிகளை ஊழியர்களுக்கு அறிவித்தல் -BUNGING OF INCREMENT -LRPA பட்டியல் --நிரப்பப்படாமல் இருக்கும் இதர ATR பதவிகள் -திருநெல்வேலி HO வில் பராமரிப்பு பணிகள் -புதிய புதிய சேவைகளுக்கான வழிகாட்டுதல்கள்  என்று பிரச்சினைகள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன .மாதாந்திர பேட்டியின் முக்கியத்துவம் அறிந்து மேற்கொண்டு பேட்டியை தள்ளிவைக்காமல் திட்டமிட்டபடி 29.01.2018 அன்று மாதாந்திர பேட்டியை நடத்திட கோட்ட நிர்வாகத்தை வலியுறுத்துகிறோம் .
நன்றி .வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

அஞ்சல் துறை ஊழியர்களுக்கான வழிகாட்டும் சில முக்கிய தகவல்களின் தொகுப்புகள் -பகுதி -1

தொடரும் -தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Monday, January 22, 2018

                                                    வருந்துகிறோம் 
நம் அன்பிற்குரிய தோழர் GS .சுந்தரம் PA பேட்டை அவர்களின் தாயார் திருமதி G.லட்சுமி  (74) அவர்கள் நேற்று 21.01.2017 இரவு 10.30 மணி அளவில் இயற்கை ஏய்தினார்கள் என்பதனை வருத்தத்தோடு தெரிவித்து கொள்கிறோம் .அன்னாரது இறுதி சடங்கு இன்று மதியம் 3 மணியளவில் வெள்ளாளன்குளம் கிராமத்தில் நடைபெறுகிறது .தாயாரை இழந்து வாடும் தோழருக்கு நெல்லை NFPE இன் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம் .
        நெல்லை NFPE  

                                           முக்கிய செய்திகள் 
இன்று நெல்லை அஞ்சல் கோட்டத்தில் இரு சேவை பிரிவுகள் தொடங்கப்படவுள்ளன .BPC திருநெல்வேலி HO விலும்  மற்றும் LOGISTIC பாளையம்கோட்டை HO விலும்  தனி மையங்கள் தொடங்கப்படவுள்ளன .இருக்கிற ஊழியர்களை கொண்டே புதிய பிரிவுகள் இயங்கும் என்ற அஞ்சல்துறையின் நடைமுறை இங்கேயும் கடைபிடிக்கப்படுகிறது .
--------------------------------------------------------------------------------------------------------------------------
சுத்தமல்லி துணைஅஞ்சலகத்திற்கு கீழ் சுத்தமல்லி விலக்கு என்ற புதிய கிளை அஞ்சலகம் 25.01.2018 அன்று முதல் செயல்படவுள்ளது .நமது தென்மண்டல இயக்குனர் அவர்கள் கலந்து கொண்டு கிளை அஞ்சலகத்தை திறந்து வைக்கிறார்கள் 
--------------------------------------------------------------------------------------------------------------------------

Saturday, January 20, 2018

                    அன்பார்ந்த தோழர்களே !
அஞ்சல் துறையின் சமீபத்திய சவால்கள் பெரும்பாலும் அஞ்சல் எழுத்தர்கள் மட்டும் சந்தித்து வருகிறோம் .இது நமது தோழர்களின் 
சாமர்த்தியத்தினாலோ அல்லது சகிப்பு தன்மையினாலோ சமாளித்து வருகிறோம் .CBS அமுலாக்கம்  CR அறிமுகம் இன்று .CSI.
முந்தைய காலங்களை போலவே இந்தத்திட்டத்தை நிறுத்திவைக்கவேண்டும் அமுலாக்கத்திற்கு முன்பு அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளை செய்துதரவேண்டும் என்று வாதப்பிரதிவாதங்கள் நம்மிடையே வர தொடங்கியுள்ளன .

இது குறித்து மாநில சங்கத்தின் பதில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது 
CSI Roll out என்பது ஏற்கனவே நமது துறை மூலம் முடிவெடுக்கப்பட்டு 
பல மாநிலங்களில் மூன்றாவது கட்டமாக அமலாவதாகவும், 
இது குறித்து துறை அமைச்சகம் வரை 
தொடர்பில் உள்ளதால் தன்னால் நிறுத்த முடியாது எனவும் , தன்னளவில் 
என்ன உதவி வேண்டுமானாலும் உடனே நிச்சயம் 
செய்து தருவதாவும்   நிர்வாக தரப்பில் கூறப்பட்டுள்ளது 
-----------------------------------------------------------------------------------------------------------------------
இது குறித்துசென்னை வடகோட்ட சங்கத்தின் பதிவு 
முதலில் தொழிற்சங்க ரீதியாக நாம் செய்ய வேண்டியது :
1. முதலில் அஞ்சல் இயக்குனரகத்திடம் CSI அமலாக்கத்தை உடனடியாக நிறுத்த சொல்ல வேண்டும்.
ஊழியர் தரப்புடன் கீழ்கண்ட தகவலுடன் ஒரு பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும்.

i. Revenue earned before CSI implementation (Circle-wise)
ii. Revenue earned after CSI implementation (Circle-wise)
iii. Shortfall in revenue / Increase in revenue (Circle-wise)

இந்த முக்கிய தகவலுடன் ஊழியர் தரப்புடன் விவாதம் நடத்தாமல் CSI விரிவாக்கத்தை செய்ய கூடாது என்பதில் நாம் கறாராக இருக்க வேண்டும்
(இந்த தகவலை அலசினாலே CSI திட்டம் ஒரு தோல்வி திட்டம் என்பது பட்டவர்த்தனமாக தெரிந்துவிடும். CSI Migration முற்றிலும் நிறுத்துவது குறித்து வாதாட நமக்கு மேலும்  scope கிடைக்கும். )
------------------------------------------------------------------------------------------------------------------------

இது ஈரோடு கோட்டத்தில் இருந்து 
#துறையின் வருவாய் இழப்பு
#துறை சார்ந்த முக்கிய  தகவல்களின்  பாதுகாப்பற்ற நிலை.
#SIFY போன்ற தனியார் ஒப்பந்தக்காரர்களால் நமது துறை வஞ்சிக்கப்படும் நிலை
#துறையில் உள்ள vacancies-ஜ நிரப்புவதில் வேகம் காட்டாமல்  outsourcing முறையை அதிவிரைவில் அமல்படுத்துவதில் நமது மத்திய அரசு காட்டி வரும் முனைவு..
---------------------------------------------------------------------------------------------------------------------
இது தூத்துக்குடி கோட்ட சங்கத்தின் பதிவு 
CSI-ல் இன்னும் அது network பிரச்சனையா?, Server பிரச்சனையா? Software பிரச்சனையா எனத் தெரியாமல், பல பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் இருக்கின்றன. எனவே, முழுமையாக சரி செய்த பின்பே அமுல்படுத்துவதே சரியாக இருக்கும்.  ஆனால், நம் விருப்பங்களும், வேண்டுகோள்களும், எச்சரிக்கைகளும் கவனிக்கப்பட போவதில்லை என்றாலும், இதை சொல்வது நம் கடமை.
-------------------------------------------------------------------------------------------------------------
 தோழர்களே !இது குறித்து உங்கள் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன .என்ன சொன்னாலும் அரசாங்கத்தின் கொள்கை முடிவு என்று இருந்திடப்போகிறோமா ? அமுலாக்கத்தை எதிர்கொண்டு அதிலிருந்து ஊழியர்களின் .
சிரமங்களை குறைக்க போகிறோமா ? கருத்துக்களை பகிருங்கள் 
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Friday, January 19, 2018

                                       மண விழா வாழ்த்துக்கள் 
பாளையம்கோட்டை SBCO வில் பணிபுரியும் தோழர் அஸ்வின் அவர்களுக்கு இன்றுதிருமணம் ..

மணமகன் VSR.அஸ்வின் ஸ்ரீதர் B .E ; M B A 
மணமகள் G.உமா  M B A
நாள் 19.01.2018
இடம் நாகர்கோவில் 
வரவேற்பு  லட்சுமி காயத்திரி ஹோட்டல் விக்னேஷ் மஹால் வண்ணார்பேட்டை  மாலை 6 .30 மணி 
  மண விழா சிறக்கவும் மணமகள் இன்று போல் என்றும் சிறக்கவும் 
நெல்லை NFPE வாழ்த்தி மகிழ்கிறது .....
--------------------------------------------------------------------------------------------------------------------------
23.01.2018 அன்று நடைபெறும் இந்த மாத மாதாந்திர பேட்டியில் கலந்து கொள்ளும் தோழர்கள் 
                                              அஞ்சல் மூன்று 
SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் 
T.அழகுமுத்து (முன்னதாக தோழர் நெல்லையப்பன் கலந்துகொள்வதாக தெரிவிக்கப்பட்டிருந்தது .அவர் MACP III பயிற்சிக்கு செல்வதால் மாற்றப்பட்டுள்ளது )
RV. தியாகராஜ பாண்டியன் அம்பை கிளை செயலர் 
                                           அஞ்சல் நான்கு 
SK .பாட்சா கோட்ட செயலர் 
T.புஷ்பாகரன் உதவி செயலர் .
R.  ஆதி நாராயணன் அம்பை கிளை செயலர் 
-------------------------------------------------------------------------------------------------------------------------

Thursday, January 18, 2018

                          நெஞ்சம் நிமிர்ந்து சொல்வோம் --
                          நேர்மையின் அடையாளம் நாம் -
தம்பி பிரபாகரனை வாழ்த்துவோம் -வணங்குவோம் 



தோழர் பிரபாகரன் களக்காடு SO வில் தபால்காரராக பணியாற்றிவருகிறார் .நேற்று இவர் தனது கிராமத்தில் உள்ள வயலுக்கு சென்று திரும்பும் போது வழியில் கிடந்த இரண்டு சவரன் தங்க சங்கிலியை எடுத்து களக்காடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார் .இவரது நேர்மையை பாராட்டி காவல்துறை அதிகாரிகளும் பொதுமக்களும் தோழர் பிரபாகரனை வெகுவாக பாராட்டினார் .நேர்மைக்கு இலக்கணமான அஞ்சல்துறைக்கு மேலும் புகழ் சேர்த்த தம்பி பிரபாகரனை வாழ்த்துவோம் .
தோழர் பிரபாகாரன் செல் எண் 9789124229
வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்டசெயலர் நெல்லை .

Wednesday, January 17, 2018

                                                    வருந்துகிறோம் 
நமது கோட்ட சங்கத்தின் உறுப்பினர் தோழியர் D.முத்துலட்சுமி PA வண்ணார் பேட்டை அவர்களின் தாயார் திருமதி லட்சுமி (75) அவர்கள் 17.01.2018 அதிகாலை இயற்கை ஏய்தினார்கள் என்பதனை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறோம் அன்னாரது இறுதி சடங்கு 17.01.2018 நண்பகல் பாளையஞ் செட்டிகுளத்தில் நடைபெறும் .தாயாரை இழந்து வாடும் தோழியர் முத்துலட்சுமி அவர்களுக்கு நெல்லை NFPE தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது 
--------------------------------------------------------------------------------------------------------------------------

Tuesday, January 16, 2018

                                         முக்கிய செய்திகள் 
இந்த ஆண்டிற்க்கான சுழல் மாறுதல் உத்தரவுக்கான அறிவிப்புகள் ஒரு சில கோட்டங்களில் கொடுக்கப்பட்டுள்ளன .தென்மண்டலத்தை பொறுத்தவரை எந்த கோட்டத்திலும்  சுழல் மாறுதலுக்கான அறிவிப்புகள் கொடுக்க படவில்லை .கேடேர் சீரமைப்பு இரண்டாம் பட்டியல் எதிர்பார்த்து ஒருபுறமும் -ரெகுலர் TENURE முடித்த LSG அல்லாத ஊழியர்கள் மறுபுறம் என காத்திருக்கின்றனர் .
-----------------------------------------------------------------------------------------------------------------
LRPA பட்டியலும் பழைய உத்தரவு படியே வெளியிட வழிகாட்டுதல்கள் உள்ளன .இருந்தாலும் நமது கோட்டத்தில் முந்தைய அண்டிற்க்கான முடிவுகளே கிடப்பில் கிடக்கின்றன 
-------------------------------------------------------------------------------------------------------------------------
GDS கமிட்டி யை பொறுத்தவரை அமைச்சரவையின் ஒப்புதலுக்காக இருப்பதாக தெரிகிறது .எப்படி இருந்தாலும் அடுத்த வார இறுதிக்குள் மத்திய அமைச்சகம் ஒப்புதல் கொடுக்க வாய்ப்புகள் உள்ளது .
-----------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Monday, January 15, 2018

அன்பார்ந்த தோழர்களே !
  CSI அமுலாக்கம் என்பது நாம் தடுத்தாலும் -வரவேற்றாலும் நிர்வாகம் அமுல்படுதுவதில் அதி வேகம் காட்டி வருகிறது .CSI அமுலாக்கத்திற்கு முன்பாக அந்த கோட்டங்களில் உட்கட்டமைப்பு அனைத்தும் சரிசெய்யப்படும் என்ற உத்தரவாதத்தை மாநில நிர்வாகமும் வழங்கியுள்ளது .இருந்தாலும் அந்தந்த கோட்டங்களில் என்னென்ன குறைபாடுகள் இருக்கின்றன என்பதனை மாநில சங்கத்திற்கு தெரிவிக்கும் படி கோட்டசெயலர்களுக்கு மாநிலசெயலர் கேட்டுள்ளார்கள் .அதன் அடிப்படையில் நெல்லை கோட்ட நிர்வாகத்திற்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி கீழ்கண்ட தகவல்களை கேட்டுள்ளோம் .அதன் தகவல்களை உங்கள் பார்வைக்கு தந்துள்ளோம் 
-------------------------------------------------------------------------------------------------------------------
From
S.K.Jacob Raj
L S G PA
Tirunelveli HO
627001,

To
The CPIO
O/o the SR, Supdt of Pos
Tirunelveli Division
Tirunelveli 627002

Respected Sir,

             Sub: Information required under RTI Act 2005-reg
The following information may kindly be supplied under RTI Act-2005

1.Total no of systems available in each SOs and HOS In Tirunelveli Division(Separate list office wise )

2.out of which no of systems in working condition in  Tirunelveli Division(Separate list office wise )

3.Total no of dot matrix printers  Laser printers in each SOs and HOS  working and  
non working conditions  in  Tirunelveli Division(Separate list office wise )

   4  No of PassBook printers Supplied to each SOs and HOS (Separate list office wise)

5. Battery back up condition    (Separate list office wise )
              
6 .Generator condition    (Separate list office wise )  

      7 Name of CSI trained  and non trained officials  in Tirunelveli Division.
   
                           A sum of Rs.20/ is credited into UCR towards RTI fee & Cost of documents. The UCR receipt is pasted herein.

Thanking You, Sir.


                                                                                                             Yours faithfully,
13.01.2018
Tirunelveli
                                                                                                       /S.K. JACOBRAJ/