...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, February 29, 2020

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
          நேற்று 28.02.2020 பணிநிறைவு பெற்ற கோட்ட அலுவலக ஊழியர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் நமது கோட்ட கண்காணிப்பாளர் திரு VPC உதவி கண்காணிப்பாளர்கள் திரு மாரியப்பன் (ASPHOS ) வேத ராஜன் ASP OD மற்றும் கோட்ட அலுவலக ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர் .பணிஓய்வு பெற்ற தோழியர்கள் K .அனுராதா மற்றும் MP.விஜயா அவர்களின் பணிஓய்வு காலங்கள் சிறப்பாக அமைய நெல்லை NFPE வாழ்த்துகிறது --SKJ 







Friday, February 28, 2020

அன்பு தோழியர் MP.விஜயா LSG OA  கோட்ட  அலுவலகம்அவர்களின் பணிநிறைவு  --சிறக்கட்டும் 29.02.2020

நான்காண்டுகளுக்கு ஒருமுறையாம் 
பிப்ரவரி 29 யில் பிறந்திட்ட 
அதிஷ்டசாலி யில் ஒருவர் நீங்கள் 
பிறப்பிற்கும் சிறப்பு சேர்த்திட்ட 
பிரபலமானவர்களின் வரிசையில் நீங்களும் ஒருவர் 

ஆரம்ப நாட்களில் --
எத்தனை வகையான விடுப்பு --எவையெல்லாம்
எதனோடு இணைப்பு என
விடுப்பு விதிகளுக்கெல்லாம்  -புது
விளக்கம் கண்டுபிடித்தவர்

அன்றுபோலவே இன்றும் என்றும் 
இயல்பாய் இருக்கும் இனிய வரத்தை
இறைவனிடம்  இலவசமாய் பெற்றவர் 
பணியாற்றிய இடங்களிலெல்லாம் 
தனக்கென்ற தடத்தை பதித்தவர் 

சொல்லப்போனால் நடமாடும் ஆங்கில அகராதி
ஆனாலும் ஒருநாளும் அவரிடம் இல்லை அகராதி
கேள்வி ஒன்று கேட்டால் போதும்
கொட்டும் அருவியாய் விளக்கங்கள் வந்து கொட்டும்
நாம் கேட்ட கேள்வியையும் தாண்டி 

கதைகளும் உவமைகளும்
வரலாறும் இலக்கியமும்
வற்றாத அருவிபோலல்லவா
நிற்காமல் இங்கு கொட்டும்

LSG பதவி உயர்வை ஏற்று -மிக ஆர்வத்தோடு
கோட்ட அலுவலக்திற்கு வந்தார்கள்
புதிய தொழில்நுட்பங்களும் இவரிடம் கட்டுப்பட்டன  
GPF யில் தொடங்கி CEA வரை சளைக்காமல்
சலிக்காமல் சமாளித்து காட்டியவர்
சமகால இளையவர்களைப்போல் 
சரிசமமாய் பணியாற்றியவர் 

இவர் காலத்தில் தான் குழந்தைகள் கல்விஉதவி
பழைய காலத்திற்க்கும் சேர்த்து கிடைத்திட 
நேர்த்தியாய் கோப்புகளை நகர்த்தியவர் 
புறநிலைஊழியர்களுக்கான  உத்தரவுகளை
தமிழில் சுற்றுக்குவிட்டு மெருகேற்றியவர் 

இப்போதுதான் 
விருதுநகரில் இருந்து வந்தது போல் இருந்தது
முப்பது வருடங்களை நெருங்கப்போகிறது 
அனாலும் அக்கா மாறவில்லை
மாறப்போவதில்லை
அதே பாசம் அதே நேசம்
அதே கேள்வி  அதே   பதில்

தொழிற்சங்கத்தில் அதே ஈடுபாடு
மாநாடுகளிலும் அதே பங்களிப்பு
வேலைநிறுத்தத்திலும் அதே அர்ப்பணிப்பு
ஓய்வுநாளிலும் அதே பரபரப்பு

அக்கா மாறவில்லை --இனி
மாறப்போவதுமில்லை
மாறாத அன்போடும் --மறவாத நினைவுகளோடும் 
ஓய்வுக்காலங்கள் சிறக்க வாழ்த்தி மகிழ்கின்றோம் 

                                           தோழமையுடன்-- NELLAI NFPE 

-----------------------------------------------------------------------------------------------------
அன்பு தோழியர் K .அனுராதா LSG ACCOUNTANT கோட்ட அலுவலகம் அவர்களின் பணிஓய்வு காலங்கள் சிறக்கட்டும் --29.02.2020

கணக்கு பிரிவிற்கு கிடைத்திட்ட
மற்றுமொரு நிறைகுடம்
LSG கணக்காளர் என்ற பெருமையோடு
ஓய்வு பெறுகிறார்.

தலைவர் சௌந்தர பாண்டியன்
காலம்தொட்டு --அவர் தம்பிகளாம்
எங்கள் காலங்களிலும்
NFPE என்ற பேரியக்கத்தின் 
பெருமைமிகு உறுப்பினராய்  இன்றுவரை
அங்கம் வகித்தவர் 

பரபரப்போ படப்பபோ
முணுமுணுப்போ ஏன்
முகசுளிப்போ சிறிதும்  இன்றி 
அலுவலக பணியை 
ஆர்வத்தோடு செய்து முடித்தவர் 

வேலைநிறுத்தம் என்று சொன்னாலும் சரி 
தொழிற் சங்க தேர்தல் என்றாலும் சரி 
என்னாளும் நமக்கு ஆதரவினை தந்து 
பெரும்பான்மைக்கு  துணை நின்றவர் 

நெருக்கடியான காலங்களிலும் 
NFPE  க்கு ஆதரவு அளித்தவர் 
அம்பைக்கு சென்ற நாட்களிலும் 
அசையாத கொள்கையை நிலைநாட்டியவர் 

தங்களின் பணிஓய்வு காலங்கள் 
சிறந்திட வாழ்த்துகிறோம் 
வாழ்த்தி மகிழ்கின்றோம் 

                                                                           --------- NELLAI  NFPE --------






















Thursday, February 27, 2020

                                                        நெல்லை கோட்ட செய்திகள் 
                                                            வாழ்த்தி வரவேற்கிறோம் 
GDS TO  MTS ஆக பதவி உயர்வு பெற்ற மூன்று தோழர்களும் நமது NFPE -P 4 சங்கத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர் .அவர்களிடம்  நமது அஞ்சல் மூன்றின் செயல் தலைவர் தோழர் கண்ணன் அவர்கள் உறுப்பினர் படிவங்களை பெற்று கொண்டார் .மூன்று தோழர்களும் GDS ஆக பணிபுரிந்த நாட்களில் தொழிற்சங்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
1.தோழர் M .ரெங்கநாதன் 2.M .அந்தோணி பூபாள ராயன் 3.S .முருகன் 
---------------------------------------------------------------------------------------------------------------------
இந்தமாதம் பணிநிறைவு பெறுகின்ற தோழியர்கள் 
1.K .அனுராதா LSG Accountant Divisional office 
2..M.P.விஜயா  LSG OA Divisional office 
தோழியர்களின் பணிநிறைவு காலங்கள் சிறக்க நெல்லை NFPE வாழ்த்துகிறது 
--------------------------------------------------------------------------------------------------------------------------
                             சில நேரத்தில் சில அதிகாரிகள் 
மேளா மெகா மேளா நாட்களில் ஒரே வாடிக்கையாளர் பெயரில் குறைந்த டெனாமினே சனில் பல கணக்குகளை தொடங்கி அஞ்சல் இலாக்காவையும் நிதி அமைச்சகத்தையும் ஏமாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட உபகோட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட பீகார் CPMG திரு அனில்குமார் IPS அவர்களின் நடவடிக்கையை நாங்கள் பாராட்டுகிறோம் ..
------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 



                      நெல்லை கோட்ட செய்திகள் 
வணக்கம் .டெபுடேஷன் குறித்து 24.02.2020 அன்று கோட்ட நிர்வாகத்தால் அனுப்பப்பட்ட உத்தரவு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது .நேற்று கன்னியாகுமரியில் இருந்த நமது கோட்டத்தின்  கூடுதல் பொறுப்பு வகிக்கும் நமது கண்காணிப்பாளர் திரு .VPC  அவர்களிடம் நாகர்கோயிலுக்கு சென்று  பேசியதன் விளைவாக நேற்றே 24.02.2020  தேதியிட்ட  டெபுடேஷன் உத்தரவை ரத்து செய்திட உத்தரவிட்டார்கள் .ஊழியர்களின் உணர்வுகளை புரிந்துகொண்ட செயல்படுத்திய நமது SSP மற்றும் ASP (HOS ) அவர்களுக்கு நமது நன்றியை தெரிவித்துக்கொள்கிரோம் .மேலும் நம்மோடு நேற்று நமது கோரிக்கைகளுக்காக  உடன்நின்ற அஞ்சல் நான்கின் கோட்ட செயலர் மாநில உதவி தலைவர் SK .பாட்சா அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்                            
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் - கோட்ட செயலர்நெல்லை 

Wednesday, February 26, 2020

 அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
வணக்கம் .டெபுடேஷன் குறித்து 24.02.2020 அன்று கோட்ட நிர்வாகத்தால் அனுப்பப்பட்ட உத்தரவு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது .நேற்று கன்னியாகுமரியில் இருந்த நமது கோட்டத்தின்  கூடுதல் பொறுப்பு வகிக்கும் நமது கண்காணிப்பாளர் திரு .VPC  அவர்களிடம் நாகர்கோயிலுக்கு சென்று  பேசியதன் விளைவாக நேற்றே 24.02.2020  தேதியிட்ட  டெபுடேஷன் உத்தரவை ரத்து செய்திட உத்தரவிட்டார்கள் .ஊழியர்களின் உணர்வுகளை புரிந்துகொண்ட செயல்படுத்திய நமது SSP மற்றும் ASP (HOS ) அவர்களுக்கு நமது நன்றியை தெரிவித்துக்கொள்கிரோம் .மேலும் நம்மோடு நேற்று நமது கோரிக்கைகளுக்காக  உடன்நின்ற அஞ்சல் நான்கின் கோட்ட செயலர் மாநில உதவி தலைவர் SK .பாட்சா அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
* நமது கோட்டத்தில் தபால்கார்களுக்கான VACANCY அறிவிக்கப்பட்டுள்ளது (மாறுதலுக்கு உட்பட்டது )
MTS TO POSTMAN  UR -1 SC -1 
GDS  TO POSTMAN  UR -1 SC -1  OBC-2 EWS-1 
                                  போராட்டங்கள் வெல்லட்டும் 
இன்று கோவில்பட்டியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு நெல்லை கோட்ட சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களையும் ஆதரவையும் தெரிவித்துக்கொள்கிறோம் 
இதோ கோவில்பட்டி கோட்டத்தின் பதிவு 
தோழர்களே ,        வணக்கம்                      நமது கோவில்பட்டி கோட்டத்தில் Target என்றபெயரில் ஊழியர்களை மிகவும் வேதனை படுமளவு நிர்வாகம் நடத்துகிறது உதாரணமாக IPPB mega log in day அன்று account பிடிக்கவில்லை என்பதற்காக, உங்கள் மேல் ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கூடாது என்று report கேட்கப்பட்டுள்ளது அதை எதிர்த்து நமது சங்கத்திலிருந்து கோட்ட நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்துள்ளோம், மேலும் வருகிற வியாழக்கிழமை 27.2.20 அன்று கோவில்பட்டி கோட்ட அலுவலகம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டமும் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.   
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 


Tuesday, February 25, 2020

                                                முக்கிய செய்திகள் 
அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
           புதிதாக எழுத்தராக பதவி உயர்வு பெற்று பணியில் ஊழியர்க்ளுக்கு PA  INDUCTION TRAINING மதுரை பயிற்சிமையத்தில் 02.03.2020 முதல் 11.05.2020 வரை அதாவது 55 வேலைநாட்கள் பயிற்சிகள் நடைபெறும் .முதல் பேட்சில் 125 ஊழியர்கள் இடம்பெறுகிறார்கள் .
*GDS இடமாறுதல்களில்  புதிய நடைமுறை 22-1-20 முதல் அமுலுக்கு வருகிறது. இது தொடர்பான பழைய ஆர்டர்கள் செயல்பாட்டிலிருந்து நீக்கப்படுகிறது..ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் ஜூன் மாதங்கள் வரை விண்ணப்பிக்க வேண்டும். ஜூலை மாதம்  அவர்களது சர்வீஸ் சீனியாரிட்டி அடிப்படையில் டிரான்ஸ்பர் வழங்கப்படும்..இலாகா ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல் Mutual transfer  வழங்கப்படும்.
  நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 



Monday, February 24, 2020

                                                நெல்லை கோட்ட செய்திகள் 
*மெக்..காமிஷ்  மென்பொருளில் ஏற்பட்டுள்ள அடுத்த மாற்றம் -இனி  PLI /RPLI  பாலிசிதாரருக்கு அவர்களது மொபைல் எண் மற்றும் ஈமெயில்  ID இவைகளை கவுண்டர் PA  மூலம் UPDATE செய்துகொள்ளலாம் .ஆன்லைன் மூலம் பிரிமியம் செலுத்துவதற்காக இந்த சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
* LGO வில் இருந்து PA ஆக தேர்ச்சிபெற்றுள்ள தபால்காரர் தோழர்கள் தங்களது புதிய ஊதியத்தை 01.07.2020 முதல்     நிர்ணயம் செய்திட  OPTION கொடுப்பது அதிக பயனுள்ளதாக இருக்கும் ..
*                            புதிதாக  எழுத்தர்களாக பணியில்  சேர்ந்துள்ள ஊழியர்களுக்கான சில நினைவுகள் -தோழர் சிவசங்கரன் தென்காசி  அவர்களின் பதிவினை தொடர்ந்து ....... 
           அன்பார்ந்த தோழர்களே தோழியர்களே வணக்கம்.
1.கடந்த காலத்தில் எழுத்தர் தேர்வில் தேர்ச்சி பெற்று மதுரைக்கு (PTC TRAINING CENTER) பயிற்சிக்கு செல்லும் தோழர் தோழியர்களுக்கும் கடந்த காலத்தில் உதவி தொகை ( STIPEND ONLY) மட்டுமே உண்டு.
2012 வருடத்திற்கு பிறகு  தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய ஊழியர்களுக்கு பயிற்சிக்கு செல்லும் போதே சம்பளத்துடன் கூடிய அனைத்துவிதமான படிகளும்  வழங்கப்படுகின்றன.
2இரட்டிப்பு மகிழ்ச்சி என்னவென்றால் பயிற்சி காலத்தையும் பணிக்காலத்தோடு சேர்த்துக் கொள்ளப்படும்.
3.பழைய நாட்களில் ரிசல்ட் வந்தபிறகும் வாரக்கணக்கில் /மாதக்கணக்கில்  காத்திருக்கவேண்டிய நிலை இருந்தது .ஆனால் இன்று PTC செல்லும்முன்பே IN HOUSING பயிற்சிகள் கொடுக்கப்பட்டு உங்களை எழுத்தராகவே மாற்றியதெல்லாம்  நமது இயக்கம் பெற்றுத்தந்த வாய்ப்புகள் என்பதனை நினைவில் கொண்டிடவேண்டும் .நமது கோட்டத்தில் அனைத்து புதிய எழுத்தர்களும் (25/25)நமது NFPE யில் இணைந்ததை நாடு வாழ்த்துகிறது -நாமும் வாழ்த்துவோம் 
                
சித்திரச் சோலைகளே
உம்மை நன்கு திருத்த இப் பாரினிலே
முன்னர் எத்தனை தோழர்கள் 
ரத்தம் சொரிந்தனரோ
உங்கள் வேரினிலே... 
உங்கள் வேரினிலே...

ஆர்த்திடும் யந்திரக் கூட்டங்களே
உங்கள் ஆதி அந்தம் சொல்லவோ
நீங்கள் ஊர் தொழிலாளர் உழைத்த உழைப்பில்
உதித்தது மெய் அல்லவோ 
உதித்தது மெய் அல்லவோ...(புரட்சி கவிஞர் )
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 



Friday, February 21, 2020

                                                  நெல்லை   கோட்ட செய்திகள் 
*நேற்று நமது கோட்டத்தில்  MACP க்கான பதவி உயர்வுகள் வெளியிடப்பட்டுள்ளது .(ARRIL 2019--SEP 2019) .
*GDS ஊழியர்களில் இருந்து பணிமூப்பு அடிப்படையில் மூன்று தோழர்கள் MTS ஆக பதவி உயர்வு பெறுகிறார்கள் .தோழர்கள் M .ரெங்கநாதன் அந்தோணி பூபாலராயன் மற்றும் முருகன் கல்லிடை குறிச்சி ஆகியோர்களை நெல்லை NFPE வாழ்த்தி வரவேற்கிறது .
*நமது கோட்டத்திற்கு LSG பதவி உயர்வில் RE ALLOTMENT கேட்ட ஊழியர்களுக்கு நமது கோட்டத்தில் இருந்து DECLINE செய்யப்பட்ட ஊழியர்களின் விவரங்கள் மண்டல அலுவலகத்திற்கு சென்றவுடன் RE ALLOTMENT கொடுக்கப்படும் என்ற தகவல்களை நமது மண்டல செயலர் அவர்கள் தெரிவித்தார்கள் .
*23.02.2020 அன்று சிவகாசியில் நடைபெறும் விருதுநகர் கோட்ட மாநாட்டில் நமது கோட்டத்தில் இருந்து தோழர் R .ஹரிகிருஷ்ணன் மேனேஜர்  PSD திருநெல்வேலி உள்ளிட்ட மூத்த தோழர்கள் நமது தலைவர் KVS அவர்களை சந்தித்து ஊழியர்களுக்கு எதிரான ஆடிட் ஆட்சேபணைகளை குறித்து பேசவுள்ளார்கள் .
ஏப்ரல் 23-25 வரை கர்நாடக மாநிலம் உடுப்பியில் நடைபெறும் அஞ்சல் நான்கின் அகிலஇந்திய மாநாட்டில் அஞ்சல் நான்கின் சார்பாக தோழர்கள் SK .பாட்சா ,புஷ்பா காரன் ,முருகேசன் ,இசக்கி ,ருக்மணி கணேசன் ,பாலகுருசாமி ,மெர்வின் செல்வின் துரை மற்றும் பார்வையாளராக தோழர்கள் ஜேக்கப் ராஜ்  வண்ணமுத்து பிரபாகர் சாகுல் மற்றும் இளங்கோ உள்ளிட்ட 13 தோழர்கள் செல்கிறார்கள் .
  நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Thursday, February 20, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                                             நெல்லை கோட்ட செய்திகள் 
புதிய எழுத்தர்கள் அனைவரும்( 25/25) நமது இயக்கத்தில் உறுப்பினர்களானார்கள் .இதன்மூலம் 100 சத வெற்றியை புதிய உறுப்பினர் சேர்ப்பில் நாம் பெற்றுள்ளோம் ..NFPE இயக்கத்தின் மேல் நம்பிக்கை வைத்து இணைந்துள்ள அனைவருக்கும் மீண்டும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் .
*இன்று தென்மண்டலத்தில் இருமாதந்திர பேட்டி நடைபெறுகிறது .நமது மாநிலசெயலர் தோழர் வீரமணி மற்றும் நமது மண்டல செயலர் தோழர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பங்கேற்கிறார்கள் .
நமது கோட்ட சங்கம் சார்பாக மண்டலச்செயலரின் கவனத்திற்கு கொண்டுசென்ற பிரச்சினைகள் 
1.MACP க்கன  கமிட்டி கடந்த 17.12.2019 அன்று நெல்லையில் கூடியது .அதனுடைய முடிவுகளை விரைந்து ஒப்புதல் கொடுக்க PMG அவர்களை வலியுறுத்த வேண்டும் .
2..நமது கோட்ட LSG ஊழியர்கள் 12 பேருக்கும் RE ALLOTMENT விரைந்து கிடைத்திட மண்டலநிர்வாகத்தை கேட்டிட வேண்டும் .
3.PSD OA இரண்டு பதவிகளுக்கான இடமாறுதல் விண்ணப்பங்கள் மண்டல அலுவலக ஒப்புதலுக்கு அனுப்பட்டுள்ளது .அதையும் விரைந்து கிடைத்திட நடவடிக்கை எடுக்கவேண்டும் .
4.HSGII  பதவிஉயர்வு இடமாறுதல்களை விரைந்து வழங்கிடவேண்டும் .
---------------------------------------------------------------------------------------------------------------
மற்ற கோட்டங்களை ஒப்பிட்டுப்பார்க்கையில்  நமது நெல்லை கோட்டத்தில் ஆள்பற்றாக்குறை என்பது இப்பொழுது இல்லை என பெருமையோடு நாம் சொல்லிக்கொள்ளலாம் .கடந்த RULE 38 யில் 33 ஊழியர்க்ளும் இப்பொழுது பதவிஉயர்வில் 25 எழுத்தர்களும் கிடைத்திருப்பது வரலாற்று நிகழ்வாகும் .இந்தமுறை வேலைப்பளு அதிகமுள்ள வடக்கன்குளம் மூன்றடைப்பு  அம்பை பகுதியில் உள்ள இடங்கள் மற்றும் பழைய B கிளாஸ் அலுவலகங்கள் அனைத்தும் நிரப்பபடவாய்ப்புகள் உள்ளன .கோட்டநிர்வாகமும் தொழிற்சங்கங்களும் இணைந்து ஊழியர்களின் நலன்காக்க  செயல்பட்டு நெல்லை கோட்டத்தின் மான்பை காத்திடுவோம் .
-------------------------------------------------------------------------------------------------------------------
                                                       இந்த வார நிகழ்வுகள் 
*22.02.2020 மாலை மதுரையில் புதிய மாநிலச்சங்க நிர்வாகிகளுக்கு பாராட்டுவிழா 
*23.02.2020 ஞாயிறு விருதுநகர் கோட்டக்கிளை மற்றும் சிவகாசி கிளை இணைந்த மாநாடு சிவகாசியில் நடைபெறுகிறது .
நமது தலைவர்கள் KVS ,JR மற்றும் மாநிலசெயலர் ஆகியோர் பங்கேற்கின்றனர் 
நன்றி .தோழமையுடன் SK ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Wednesday, February 19, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                                    நெல்லை கோட்ட செய்திகள் 
*நமது கோட்டத்தில் புதிதாக எழுத்தராக பதவி ஏற்ற( 3+22) 25 ஊழியர்களில் இதுவரை 24 ஊழியர்கள் நமது NFPE சங்கத்தில் தங்களை இணைத்துள்ளார்கள் என்பதனை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம் .இன்று இது 25/25 எனும் 100 சதத்தை நிச்சயம் எட்டிவிடும் .இதற்காக தலமட்டங்களில் உழைத்த NFPE இயக்கத்தின் முன்னனி தோழர்களுக்கு எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் .
*மேலும் இந்த ஆண்டு உறுப்பினர் சேர்க்கையில் தோழியர் மீனா கோமதி  போஸ்ட்மாஸ்டர் வண்ணார்பேட்டை மற்றும் கிளாடடிஸ் போஸ்ட்மாஸ்டர் பெருமாள்புரம் ஆகியோர் மீண்டும் NFPE யில் இணைந்துள்ளனர் .அவர்களையும் நாம் வாழ்த்தி வரவேற்கிறோம் .
*இந்த ஆண்டு LRPA பட்டியலில் இருந்து அனைத்து ஊழியர்களும்  PA ஆக RE DESIGNATE ஆகிறார்கள் .அப்படி PA ஆகும் ஊழியர்கள் தங்களுக்கு எந்த அலுவலகத்தில் PA ஆக வேண்டும் என்கின்ற விருப்பகடிதத்தை இன்றே கொடுத்துவிடுங்கள் . 
                          SB /RPLI  முடிஞ்சாச்சு இல்லை முடிச்சாச்சு ? இப்போ IPPB மேளா 
இந்த வாரம் முழுவதும் 17.02.2020 முதல் 22.02.2020 வரை மெகா IPPB மேளா நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது .இதை பயன்படுத்தி ஒவ்வொரு உபகோட்ட அதிகாரிகளும் அவரவர் பாணியில் ஊழியர்களை கடுமையாக நடத்த துவங்கியுள்ளனர் .நேற்று இதுகுறித்து நமது கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் கொடுத்துள்ளோம் .இதையும் மீறி ஊழியர்களின் மன உளைச்சலுக்கு ஆளாக்கும்  உபகோட்ட அதிகாரிகள் மீது மாநிலச்சங்கத்தின் மூலம் புகார் கொடுக்கப்பட்டு தொழிற்சங்கநடவடிக்கைகளில் நெல்லை கூட்டு போராட்டக்குழு களம் இறங்கும் என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம் .பணிமுடிந்தபின்பும் தபால்காரர்களை காக்க வைப்பது -குறிப்பிட்ட கணக்குகளை பிடிக்காவிட்டால் OFFICIATING வாய்ப்பை பறிப்பது என அப்பாவி  GDS ஊழியர்களின் வயிற்றில் அடிப்பது நியாயமா ?
                           தோழர்களே !சிந்தீப்பீர் ! குட்ட குட்ட குனிபவனும் முட்டாள் குனிய குனிய குட்டுபவனும் முட்டாள் !
                           சிறு புழு கூட தாக்குண்டால் தன் எதிர்ப்பை பதிவு செய்யும் .
                                நிமிரும் பொழுதெல்லாம் 
                                நசுக்க படுவதற்கு 
                                தொழிலாளி சாக்கடை புழுக்கள் அல்ல .......
நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 
                          

தமிழகத்தில் LGO மற்றும் GDS TO PA  தேர்வில் மேலும் தேர்ச்சிபெற்றவர்க்ளுக்கு மற்றுமொரு வாய்ப்பு இருக்கிறது--இதோ நமது NFPE -P 3  மாநிலச்சங்கத்தின் அறிக்கையை பாரீர் !
அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
மாநில நிர்வாகத்தின் தகவல்படி,
1. Postman/MTS ஊழியர்களுக்கு 2019 அறிவிக்கப்பட்ட காலியிடங்கள் 85 தவிர, SC/ST Back log vacancy சேர்த்தே தற்போது Select list கிட்டத்தட்ட 100 பேருக்கு வெளியிடப்பட்டுள்ளது.
 2. அடுத்தகட்டமாக,
முதலில் Postman/MTS to PA தேர்வில் வெற்றி  பெற்றவர்களுக்கு
Merit அடிப்படையில்,  நிரப்பப்படாத காலியிடங்களுக்கும், RMS/MMS பகுதியில் நிரப்பப்படாத  காலியிடங்களுக்கும் ஆக 140 வரை நிரப்பிட உரிய நடலடிக்கைகள் எடுக்கப்பட்டு பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் அதன்படி select list வெளியிடப்படலாம் எனவும் தெரிகிறது.
3. இதன்பிறகே GDS to PA தேர்வில் தகுதி பெற்றோருக்கும் merit அடிப்படையில் இதே வகையில் RMS/MMS வரை நிரப்பப்படாத அறிவிக்கப்பட்ட காலியிடங்களுக்கும் நிரப்பிட நடவடிக்கை எடுக்கப்படும். அநேகமாக இது இந்த மாதக் கடைசியிலோ அல்லது மார்ச் முதல் வாரத்திலோ நடக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்.
4.இந்த மாத இறுதியில் தற்போதைய CPMG அவர்கள் பணி நிறைவு பெற உள்ளதாலும், MTS/GDS to தபால்காரர் தேர்வுக்குப் பின்னரான DEST தேர்வு 8.3.2020 ல் நடைபெற உள்ளதாலும், MTS க்கான பதவி உயர்வுத் தேர்வு 15.3.2020 ல் நடைபெற உள்ளதாலும், நிர்வாக இயந்திரம் மேலே
கண்ட  வேலைகளில் முழுமையாக ஈடுபட்டுள்ளதால், 2019 தபால்காரர்/MTS to PA  காலியிடங்கள் மேலும் அதிகரிக்க  நமது தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கம் கோரியபடி (2019 LSG resultant vacancy) இதற்கான நடவடிக்கைகள்  இப்போது நடைபெற வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது.
5. ஆனால் இது நடக்க வாய்ப்பு உண்டா என்றால், உண்டு என்பதே நமது நம்பிக்கை. ஏனெனில் இப்படியான புதுப்புது வழிகளை உருவாக்கி புதிய கோரிக்கைகளை சரியான நேரத்தில்  முன்னெடுத்து வெற்றி பெறுவது என்பதே நமது NFPE யின் கடந்த கால வரலாறு.
6.. வரும் 29.2.2020 ல்
புதிய CPMG அவர்கள் பொறுப்பேற்றவுடன் அவரிடம் ஏற்கனவே நமது மாநிலச் செயலர் அளித்த இந்தக் கோரிக்கையை கொண்டு சென்று பேசுவார்.
7.. தேர்வு எழுதியவர்களில் Merit அடிப்படையில் தகுதியானவர்களை  காத்திருப்பு பட்டியலில் வைத்து,  இந்தக் காலிப் பணியிடங்கள் கணக்கிட்டவுடன் அவர்களுக்கு பணி ஆணை பெற முழு முயற்சியை  நம் தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கம் எடுக்கும் என்பதை உறுதியாக தெரிவிக்கிறது நமது NFPE பேரியக்கம் இந்த முயற்சியிலும் நிச்சயம் வெற்றிபெறும் .
ஆக்கபூர்வமான மற்றும் அறிவுபூர்வமான நடவடிக்கைகளில் செயல்படும் நமது NFPE பேரியக்கம் வலுபட துணைநிற்போம் !
தோழமைவாழ்த்துகளுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Tuesday, February 18, 2020

மதுரை PTC  க்கு பயிற்சிக்கு செல்லும் ஊழியர்களுக்கு  FULL DA வழங்கலாம் என்ற உத்தரவை அடுத்து இனிமேல் பயிற்சிக்கு செல்லும் ஊழியர்க்ளுக்கு  ADVANCE OF TA  உயர்த்தி கொடுக்கவேண்டும் என நமது NFPE சங்கம் நெல்லை கோட்ட அலுவலகத்திற்கு எழுதிய கடிதம் 
NFPE
            ALL INDIA POSTAL EMPLOYEES UNION GR-C                   TIRUNELVELI DIVISIONAL BRANCH
TIRUNELVELI—627002
No.P3-ORG  / dated at Palayankottai- 627002 the 18.02.2020

To
The Sr. Supdt. of Post Offices,
Tirunelveli Division
Tirunelveli-627002

Sir,       
Sub: Request to regulate the DA on training to PTC Madurai- reg
As per the clarification issued by R.O Madurai and PTC, Madurai, it is requested to pass the TA Bills for the entitled amount of the officials who are being deputed to PTC Training.

Further, we request to sanction advance of TA taking into consideration of this clarification.
                                                              Thanking you

            
                         Yours faithfully


[S.K.JACOBRAJ]




அன்பார்ந்த தோழர்களே !
                                   நெல்லை கோட்ட செய்திகள் 
1.  PTC க்கு பயிற்சிக்கு செல்லும் ஊழியர்களுக்கு முழு DA வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை நாம் கடந்த அக்டோபர் மாதம் முதல் வலியுறுத்திவருகிறோம் .(பார்க்க )
item no 6 Request passing of TA bills of officials deputed to PTC Training allowing full DA.  Claims passed with wrong interpretation needs to be reopened.
தற்சமயம் இந்தப்பிரச்சினையில் நமது மண்டலநிர்வாகம் கன்னியாகுமரி  கோட்ட அலுவலகம் கேட்ட விளக்கத்திற்கு FULL DA  வழங்கலாம் என்கின்ற விளக்க ஆணையை 30.01.2020 அன்று கொடுத்துள்ளது .இதுகுறித்து நாமும் நமது கோட்ட அலுவலகத்தில் நேற்று கன்னியாகுமரி கோட்டத்திற்கு வந்த விளக்க ஆணையை கொடுத்துள்ளோம் .விரைந்து அனைவருக்கும் விடுபட்ட தோகையுடன் TA பில் கிடைத்திட கோட்ட சங்கம் முயற்சிக்கும் .நமது  கோரிக்கைகளுக்கு  கிடைக்கும் அடுத்த வெற்றி  இது .
2.LRPA புதிய  பட்டியல் ஓரிருநாளில் வெளிவருகிறது .
3.புதிதாக எழுத்தராக பயிற்சியில் உள்ள தோழர்களுக்கு மதுரை PTC க்கு செல்லும் முன்பே இடமாறுதல் உத்தரவு கொடுக்கப்படவுள்ளது .புதிய தோழர்கள் இடமாறுதல் குறித்து கோட்ட சங்கத்திடம் ஆலோசனைகளை பெற்று விண்ணப்பங்களை அனுப்பும் படி கேட்டுக்கொள்கிறோம் .அதன் பிறகு தான் RT அறிவிப்புகள்  இருக்கும் 
4.புதிதாக எழுத்தர் பதவி உயர்வு பெற்ற தோழர்களுக்கு கீழ்கண்ட அடிப்படையில்  ஊதியம் பெற்றுக்கொள்வார்கள் 
PA Cadre (முழு மாத ஊதியம் ) தகவல்களுக்கு மட்டும் .
Pay was drawn on newly recruited PA
Basic pay          =          25500
DA 17%         =                4335
HRA 8%         =                2040
TA ( 1800 + 17%)      =   2106
                              -----------
Total                            =  33981
----------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா  கோட்ட செயலர்கள்  நெல்லை 

Monday, February 17, 2020

நமது மூத்த தோழர் பலவேசம் APM A/CS  (பணிஓய்வு ) அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த பதிவு 

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
      இன்று எழுத்தராக பயிற்சியில் சேரும் அனைத்து GDS ஊழியர்களையும் NELLAI NFPE வாழ்த்திவரவேற்கிறது .பயிற்சியில் சேரும் நாளே உங்களுக்கு பணியில் சேர்ந்த நாளாக கணக்கில் எடுக்கப்படும் .உங்களின் DATE OF APPOINTMENT இன்றுதான் .
ஆம் .இன்றே அஞ்சல் ஊழியர்களின் நலனில்  அக்கறைகொள்ளும் NFPE என்கின்ற பெரியக்கத்தில் இணைவீர் !
நமது முன்னணி தோழர்களே ! பயிற்சிக்கு வரும் தோழர் /தோழியர்களை NFPE யில் இணைத்திடுவீர் !
              புதிய தோழர்களே நீங்கள் ஏன் NFPE யில் இணையவேண்டும் ?
அன்பு தோழர்களே !!!
LGO எழுத்தர் தேர்வில் Residual vacancies என்பதை கண்டறிந்து ஆயிரக்கணக்கான எழுத்தர் பதவிகள் GDS தோழர்கள் பெற்றிட வழிவகுத்தது நமது NFPE  தான் .
மேலும் descriptive exams என்பதை objective exams என்கிற விதத்தில் மாற்றம் செய்யப்பட்டது நமது NFPE எடுத்த  முயற்சிகள் மூலமாக மட்டுமே!! இதன் மூலம் 3 வருடம் கழித்து DRPA தேர்வுக்காக எழுத்தர் பதவிகள் மடை மாற்றம் செய்யப்பட்டது தடுத்து அனைத்து பதவிகளும் (50 percentage) இலாகாவில் பணி புரியும் தபால்காரர் MT S ,/ GDS என்பது உறுதி செய்யப்பட்டது.  
காலி பணியிடங்கள் சரியாக assessment செய்திட தென்மண்டல  PMG தலைமை யில் committee அமைக்கப்பட்டது நமது தமிழக NFPE சங்கத்தின் முயற்சியால் மட்டுமே ! விளைவு 963 பதவிகள் இன்று GDS தோழர்களுக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ளது. இப்படி பதவி உயர்வு என்ற பட்சத்தில் NFPE அஞ்சல் மூன்று  பங்கு மகத்தானது. 
              இதைவிட உயிரோட்டமான சங்கம் என்பது அஞ்சல் துறையில் இல்லை .அகிலஇந்திய அளவில் மட்டுமல்ல நமது கோட்டத்திலும் தனிப்பெரும் சங்கம் NFPE ....
நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Saturday, February 15, 2020

அன்பார்ந்த தோழர்களே !
                      ஆட்சி மாறியது ! காட்சி மாறியது !
    பாளையம்கோட்டையில்  ஞாயிறு ஆதார் பணிசெய்யும் உத்தரவு ரத்துசெய்யப்பட்டுள்ளது .இது இன்றுமுதல் அமுலுக்குவருகிறது இது நமது ஒன்றுபட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி ! 
சட்டத்திற்கு புறம்பாக இனி நிர்வாகம் எந்த முடிவுகளையெடுத்தலும் அதை முடிவுக்கு கொண்டுவருவது நமது .தொழிற்சங்க கடமையாகும் .என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது ..கடந்த ஜூலை மாத இறுதியில் நெல்லை கோட்ட நிர்வாகம் தன்னிச்சையாக இட்ட உத்தரவு தான் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆதார் பணிசெய்ய ஊழியர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர் .முதலில் மாபெரும் ஆர்ப்பாட்டம் .அடுத்து நமது மாநிலங்களவை உறுப்பினர் திருமதி விஜிலா சத்தியானந்த் அவர்கள் மூலம் CPMG அவர்கள் வரை பிரச்சினை கொண்டுசெல்லப்பட்தது .அதனை தொடர்ந்து  மாநிலச்சங்கம் மூலம் பிரச்சினை தொடர்ச்சியாக எடுக்கப்பட்டு இன்று முடிவுக்கு வந்துள்ளது .இனி வாரநாட்களில்  EXTENDED WORKINHOURS அடிப்படையில் காலை 08.00 முதல் மாலை 08.00 வரை தனிக்கவுன்டெர் மூலம் நடைபெறும் .
ஊழியர்களின் நலன் பேனுவதில் நமது NFPE என்றுமே தவறியதில்லை என்பதற்கு இது மாபெரும் சாட்சி .இந்த போராட்டத்தில் நம்மோடு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து தோழர்களுக்கும்  அமைப்புகளுக்கும் குறிப்பாக மாநில சங்கத்திற்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
தோற்றதில்லை !தோற்றதில்லை ! தொழிற்சங்கம் தோற்றதில்லை !
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
    நெல்லை கோட்டத்தில் எழுத்தர் தேர்வில் வெற்றிபெற்று 17.02.2020 முதல் பயிற்சியில் சேரும் உங்கள் அனைவரையும் நெல்லை NFPE வாழ்த்திவரவேற்கிறது .தபால்காரரில் இருந்து மூன்று தோழர்கள் பாலசுப்ரமணியன் ராமேஸ்வரன் மற்றும் சங்கர்கணேஷ் தேர்ச்சிபெற்றுள்ளனர் .அதேபோல்  GDS யில் இருந்து 22 தோழர்கள் தேர்ச்சிபெற்றுள்ளனர் .இது ஒரு வரலாற்று நிகழ்வு .இதற்கு முன்பு இத்தனை VACANCY வந்ததில்லை .இனிமேல் வருமா என்பதிலும் நிச்சயமில்லை .ஆகவே உங்கள் வாழ்வில் கிடைத்திட்ட பொன்னான பாக்கியம் இது .
1.பிரேமலதா 2.பிரபாவதி 3.பொன்விஜயாலக்ஷ்மி 4.முத்துலட்சுமி 5.ஹரி 6.ஜெல்சி 7.சத்யா 8.பார்வதி 9.பழனிவேல் 10.கவுசல்யா 11.அருணா செல்வி 12.சோமசுந்தரி 13.ஆனந்த் 14.தமிழ்செல்வி 15.கிருஷ்ணவேணி 16.மகேஸ்வரி 17.சித்திரை செல்வம் 18.மஞ்சுளா 19.நந்தினி 20.இன்ப சத்யா 21.நதியா 22.சுப்புலட்சுமி 
  தாபால்காரர் மூலம் எழுதத்தேர்வில் நிரப்பப்படாத காலியிடங்களை OPENMARKET செல்லும்முன் அதை தகுதியுள்ள GDS மூலம் நிரப்பிடவேண்டும் என்ற வாய்ப்பை பெற்றுக்கொடுத்தது நமது NFPE சங்கம் என்பதனை மறந்துவிடக்கூடாது .இன்று பணியில் சேரும் உங்களுக்கு பழைய பென்ஷன் வேண்டும் புதிய பென்ஷனை ரத்துசெய்யவேண்டும் என போராடிவருவதும் நமது NFPE சங்கம் தான் .கோட்டமட்டத்தில் ஊழியர்களின் நலனுக்கு எதிராக எந்தஅதிகாரி செயல்பட்டாலும் அத்தகைய அதிகாரியை எதிர்த்து களம் கான்பதும் ஊழியர்களை பாதுகாப்பதும் நமது NFPE இயக்கம் தான் .ஆகவே நேற்றே அநேகமாக உங்களோடு தொடர்புகொண்டு இயக்கத்தில் சேர விண்ணப்பங்களை அனுப்பியுள்ளோம் .தொழிலாளர் நலன் காக்கும் NFPE இயக்கத்தில் இன்றே இணைந்திடுவீர் .உங்களுக்காக பணிசெய்ய காத்திருக்கும் உங்கள் தோழன் SK .ஜேக்கப் ராஜ் -(9442123416)

ன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
                            சங்கம்  சாதித்தது ! சோதனைகளை தகர்த்து நெல்லையில் NFPE சங்கம் சாதித்துக்கொண்டிருக்கிறது 
  பாளையம்கோட்டையில் பார்சல் நோடல் பட்டுவாடா மையம் தொடங்கப்படுவதை ஓட்டி இரண்டு தபால்காரர்களை குறைக்க போடப்பட்ட உத்தரவை நமது NFPE பேரியக்கத்தின் முயற்சியால் 
மாற்றப்பட்டுள்ளது .தற்காலிகமாக இரண்டு OUTSIDER களை வைத்து தினக்கூலி + 100 என்கிற அடிப்படையில் நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளது .இனிமேல் போஸ்ட்மேன் DIVERSION என்றால் தொழிற்சங்கத்தை கலந்து முடிவுகள் எடுக்கப்படும் என்று அறிவித்த நெல்லை கோட்ட  நிர்வாகத்திற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
     அடுத்த வெற்றிக்காக விரைவில் காத்திருப்போம் .
நேற்றைய அஞ்சல்நான்கின் செயற்குழுவில் எடுக்கப்பட்ட ஏனைய முடிவுகள் 
1.வள்ளியூர் பணசேர்ப்பாளர் மற்றும் பணகுடி கூடுதல் தபால்காரர் இவைகளை விரைந்துமுடித்திடவேண்டும் .
2.தபால்காரர் மொபெல் முழுமையாக மாற்றப்பட்டு அனைவருக்கும் புதிய  மொபெல் வழங்கவேண்டும் 
3.தமிழக அஞ்சல் மூன்று மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானமான புதியபென்ஷனை ரத்துசெய்யவேண்டும் என்ற ஒரேகோரிக்கையை மட்டும் வைத்து வேலைநிறுத்தம் செய்யவேண்டும் என்ற கோரிக்கையை அஞ்சல்நான்கு அகிலஇந்திய மாநாட்டில் தீர்மானமாக நிறைவேற்றவேண்டும் 
4.தபால்காரரில் இருந்து எழுத்தராக தேர்வுபெற்ற இளைய தோழர்  ராமேஸ்வரன் மற்றும் நமது கோ(கூ )ட்டத்திற்கு வந்திருந்த தோழர் தங்கமணி SPM முன்னிர்பள்ளம் ஆகியோருக்கு பொன்னாடைபோர்த்தி வரவேற்பு கொடுக்கப்பட்டது 
5. 2019 இல் LSG நிரப்பப்பட்ட இடங்களில் ஏற்கனவே 2019 ல் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற LGO. க்களை கொண்டு பதவி உயர்வு வழங்கிட கோரிதீர்மானம் நிறைவேற்றப்பட்டது .நேற்றே இதுகுறித்து NFPE அஞ்சல்மூன்று  மாநிலச்சங்கம் மாநில நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளதை  இந்தசெயற்குழு வரவேற்கிறது .
6.உடுப்பியில் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் அகிலஇந்திய மாநாட்டிற்கு இதுவரை 13 தோழர்கள் தங்கள் பெயர்களை பதிவுசெய்துள்ளனர் .
7 செயற்குழுவில் நல்லதொரு ஆலோசனைகளை வழங்கிய அஞ்சல் மூன்றின் செயல்தலைவர் தோழர் கண்ணன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
8.HSG II பதவி உயர்வு பெற்றவர்களில் விடுபட்டுப்போன நம் மண்ணின் மைந்தர் தோழர் ரவிமோகன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் 
                                    நெல்லையில் எழுத்தராக தேர்வுசெய்யப்பட்ட அனைத்து தோழர்களுக்கும் செயற்குழுவில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது .கிட்டத்தட்ட புதிய தோழர்களில் 16 தோழர்களை நமது NELLAI NFPE II வாட்ஸாப்ப் யில் இணைத்துள்ளோம் .விடுபட்ட தோழர்களின் வாட்ஸாப்ப் எண் பெற்றுக்கொண்டு மற்றவர்களையும் இணைத்திடுவோம் .
நன்றி ..நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் ..இப்படை தோற்கின் எப்படை வெல்லும் .
அஞ்சல் துறையை பாதுகாக்க NFPE யை வலுப்படுத்துவோம் .
போராடுவோம் !வாதாடுவோம் ! செயல்படுத்துவோம் !
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 





Friday, February 14, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                                         அஞ்சல் நான்கின் அவசர செயற்குழு கூட்டம் 
நாள் _-14.02.2020  வெள்ளிக்கிழமை 
நேரம் _ மாலை 05.30 மணி 
இடம் _  பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகம் 
தலைமை _ தோழர் A .சீனிவாச சொக்கலிங்கம் 
பொருள் _  1.பாளையம்கோட்டையில் அமுலாகவிருக்கும் பார்சல் நோடல் டெலிவரி சம்பந்தமாக 
                         2.அகிலஇந்திய மாநாடு (ஏப்ரல் 23--25) உடுப்பி கர்நாடகா 
                         3. போஸ்ட்மேன் மொபைல் போன் _ பிரச்சினைகள் 
                        4.இன்னும் பிற தலைவர் அனுமதியுடன் 
பாளையம்கோட்டையில் வருகிற 17.02.2020 முதல் பார்சல் நோடல் டெலிவரி மையம் செயல்படப்போகிறது .இதற்காக ஒரு எழுத்தர் 2 தபால்காரர் ஒரு GDS ஒதுக்கப்பட்டுள்ளது .பாளையம்கோட்டையில் இரண்டு தபால்காரர் பதவிகளை குறைத்து பார்சல் டெலிவரிக்கு கொடுக்கப்படுகிறது .இந்த இரண்டு தபால்காரர் மட்டும் திருநெல்வேலி க லக்ட்ரேட் வரை வரும் பார்செல்களை பட்டுவாடா செய்யவேண்டும் .பாளையம்கோட்டைக்கு மட்டும் சராசரி நாளொன்றுக்கு 60 க்கு மேற்பட்ட பார்சல் வருகிறது .இந்த பார்சல்களை இருவர் மட்டும் எப்படி சுமப்பது ?எத்தனை தூரம் பயணிப்பது ? உள்ளிட்ட பிரச்சினைகளில் நிர்வாகம் என்ன செய்யப்போகிறது ?நாம் என்ன செய்யவேண்டும் ? ஏற்கனவே பணகுடி அஞ்சலகத்திற்கு கூடுதல் தபால்காரர் வள்ளியூர் அஞ்சலகத்திற்கு CO பதவி இவைகளில் நிர்வாகம் மெத்தனப்போக்கை கடைபித்துவருகிறது 
இதுகுறித்து  விவாதிக்க நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் தாங்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டுகிறோம் .
இந்த செயற்குழுவில் அஞ்சல் மூன்றின் முன்னனி தோழர்களும் கலந்து கொள்ளும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் .
  தோழமையுள்ள SK .பாட்சா கோட்ட செயலர் அஞ்சல் நான்கு நெல்லை கோட்டம் 

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
     நமது கோட்டத்தில் தேங்கிக்கிடக்கும் பிரச்சினைகளை (MACP  க்கான கமிட்டி 17.12.2019 அன்று கூடியது .PSD திருநெல்வேலிக்கு 2 OA  நிரப்பிட மற்றும் ஊட்டி நாகப்பட்டினம் கோட்டத்தில் இருந்து வரவேண்டிய ஊழியர்கள் இவைகளை  விரைவில் தீர்த்திட வலியுறுத்தி மாநில /மண்டல செயலர்களுக்கு நேற்று எழுதிய கடிதம் உங்கள் பா ர்வைக்கு .......
                                                             NFPE
       ALL INDIA POSTAL EMPLOYEES UNION GR-C                 TIRUNELVELI DIVISIONAL BRANCH
TIRUNELVELI—627002
No.P3-org  / dated at Palayankottai- 627002 the 13.02.2020

To

The  Circle Secretary
AIPEU GR C
Tamilnadu Circle
Chennai-600002

Dear Comrade Vanakkam
We would request you to take up the following pending issues of Tirunelveli Division at appropriate level for early settlement.

1.      DPC for granting MACP to eligible officials for the period from Apr-2019 to Sep-2019 was convened on 17.12.2019 and submitted to RO for approval.  Hence, it is requested to take up the issue with PMG SR Madurai for early approval.
2.      2. The following officials are allotted to Tirunelveli Division under Rule 38 last year but they were not relieved for one reason or other.
                      i)Sri.E.PaulRaj Nilagiris Western Region
                     ii)Smt  Pornima Nagapattinam Central Region
                     iii)Sri.Peermohideen Nagapattinam Central Region
                    iv) Sri.Ramakrishnan Nagapattinam Central Region
Hence, it is requested to take up the issue with Chief PMG to ensure immediate relief of transferees to Tirunelveli Division.

3.      On inclusion of PSD Tirunelveli establishment with Tirunelveli Postal Division, willingness was called for from officials of Tirunelveli Division to fillup 2 OA posts of PSD Tirunelveli and submitted to R.O for consideration/approval which is yet to be received.   Hence it is requested to take up the issue with PMG SR Madurai for early approval.

Copy to
S.Krishnamoorthy
Regional Secretary
AIPEU GR-C                                                                                   S.K.JACOBRAJ
Southern Region                                                                    Divisional Secretary 

Thursday, February 13, 2020

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
                                                                முக்கிய செய்திகள் 
*நமது முன்னாள் பொதுச்செயலர் தலைவர் KVS  அவர்கள் தொகுத்துள்ள  அஞ்சல் ஓய்வூதியர் எனும் நூல் விற்பனைக்கு உள்ளது .ஓய்வூதியம் குறித்த அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய நூல் ஒன்றின் விலை ரூபாய் 100. தேவைப்படுவோர் கோட்ட சங்கத்தை தொடர்புகொள்ளவும் .
* அஞ்சல் நான்காம் பிரிவு சங்கத்தின் 28 வது அகிலஇந்திய மாநாடு கர்நாடகா மாநிலம் உடுப்பி நகரில்  வருகிற ஏப்ரல் 23 முதல் 25 வரை நடைபெறுகிறது .தபால்காரர் சங்க மாநாட்டிற்கு வரவிரும்பும் அஞ்சல் நான்கின் தோழர்கள் P 4 கோட்ட செயலர் தோழர் SK .பாட்சா அவர்களை தொடர்புகொள்ளவும் .வருகிற சனிக்கிழமை பயணத்திற்கான ரயில் முன்பதிவு செய்யப்படுகிறது ..
* கோவையில் நடைபெற்ற மாநில மாநாட்டில் தென்மண்டல செயலராக மதுரை கோட்ட செயலர் அண்ணன் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்கள் .நீண்ட நாட்களுக்கு பிறகு தென்மண்டலத்தில் மதுரையை சார்ந்த தோழர் மண்டலச்செயலராக பொறுப்பேற்றிருப்பது தென்மண்டல அஞ்சல் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது .தோழர் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பணிசிறக்க வாழ்த்துக்கள் .
*கோவையில் நடைபெற்ற மாநில மாநாட்டில் அமைப்புநிலை விவாதத்தில் கலந்துகொண்டு நமது கோட்ட சங்கம் சார்பாக நான் (ஜேக்கப் ராஜ் ) பேசும்பொழுது புதியபென்ஷன் திட்டத்தை மட்டுமே பிரதானப்படுத்தி தனி வேலைநிறுத்தம் செய்யவேண்டும் என வலியுறுத்தினேன் .அதையே NPS குறித்த கருத்தரங்கிலும் வலியுறுத்தப்பட்டது .மத்தியஅரசு ஊழியர்கள் மகா சம்மேளன மாபொது செயலராக தேர்ந்தெடுக்கப்பட்ட நம்முடைய பொதுச்செயலர் தனது உரையிலும் NPS க்கு எதிரான தனி போராட்டங்கள் நடைபெறும் என அறிவித்துள்ளார் ..மாநிலசங்கமும் அதற்கான தீர்மானத்தை முன்மொழிந்துள்ளது .
இளைய தோழர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க இயக்கங்களை நடத்திட  முடிவெடுத்துள்ள NFPE பேரியக்கம் 0வென்றெடுக்க வாழ்த்துகிறோம் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Wednesday, February 12, 2020

                                வாழ்த்துக்கள் ! வாருங்கள் !
அஞ்சல்எழுத்தராக தேர்ச்சி பெற்றிருக்கும் உங்கள் அனைவரையும் அன்போடு  வரவேற்கிறோம் .
நமது கோட்டத்தில்  போஸ்ட்மேன் TO எழுத்தர்   பதவிக்கு  இரண்டு UR  ஒரு SC  என காலியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன .தமிழகத்தில்  மொத்தம் 85 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன .நமது NFPE என்கின்ற பேரியக்கம் தொடர்ந்து எடுத்த முயற்சியின் காரணமாக தமிழகம் முழுவதும் மேலும் சுமார் 250 முதல்  300 வரையிலான கூடுதல் இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது .2019  டிசம்பர் மாதத்திற்குள் LSG  காலியிடங்களில்  பதவியுயர்வு பெற்ற எழுத்தர்கள் LSG பதவியை  ஏற்றுக்கொண்ட இடங்கள் எத்தனை என்பது  முழுமையாக  மாநில நிர்வாகத்திற்கு கிடைத்த பின்னர்  இரண்டாம் பட்டியல்  வெளிவர வாய்ப்புகள் அதிகம் உள்ளது.ஆகவே  .தேர்ச்சிபெற்றும்  பதவியுயர்வை  அடையமுடியவில்லையே என்கின்ற  கவலைகளை மறந்திடுவீர் .GDS TO PA  காலியிடங்களில் மாறுதல்கள் ஏதும் இல்லை .முதற்கட்டமாக மதுரை பயிற்சிமையத்தில் 03.03. 2020 ஆண்டு PA INDUCTION  பயிற்சிகள்  தொடங்கவிருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன .
 உங்கள் அனைவரையும் மீண்டும் NELLAI  NFPE வாழ்த்தி வரவேற்கிறது 
 தோழமையுடன் .SK .ஜேக்கப் ராஜ்  -SK .பாட்சா கோட்ட செயலர்கள்  நெல்லை 
                            

Saturday, February 8, 2020

                                                  முக்கிய செய்திகள் 
*IMO (INSTANT  MONEY ORDER ) சேவை 06.02.2020 முதல் முற்றிலுமாக நிறுத்தப்படுவதாக அஞ்சல் துறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது .
                                                * நன்றி !நன்றி !நன்றி !
            நமது மாநில மாநாட்டிற்கு செல்வதற்காக விடுப்பு விண்ணப்பித்த அனைத்து தோழர்களுக்கும் சிறப்புவிடுப்பு மற்றும் அவரவர் விண்ணப்பித்த விடுப்புகளை வழங்கியதோடு நில்லாமல் அனைவரையும் RELIVE செய்வதற்கும் கடுமையாக பணியாற்றிய நமது ASP (HQS ) அவர்களுக்கும் கோட்ட அலுவலக ஊழியர்களுக்கும் நெல்லை கோட்ட சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .20 உறுப்பினர்களுக்கு ஒருவர் என்கிற விகிதத்தில் சிறப்பு விடுப்பு வழங்கப்பட்டிருப்பதாக  தெரிவித்திருந்தாலும் இன்னும் சில தோழர்களுக்கு சிறப்பு விடுப்பு மாற்றித்தரப்படும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கிறேன் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Thursday, February 6, 2020

அன்பார்ந்த தோழர்களே !
                                      மாநில மாநாடு சிறப்பு அறிவிப்பு 
கோவையில் நடைபெறும் மாநில மாநாட்டிற்கு நமது கோட்டத்தில் இருந்து 34 தோழர்கள் செல்கிறார்கள் .அதில் 14 ஊழியர்களுக்கு முதற்கட்டமாக சிறப்பு விடுப்பு வழங்கப்பட்டுள்ளது .மற்றவர்களுக்கு அவர்கள் கேட்ட விடுப்பு வழங்கப்படுகிறது .இன்று மாலைமுதற்கட்டமாக  RELIVE செய்யப்படுவார்கள் .இதில் ஏதேனும் தாமதம் சிக்கல்கள் ஏற்படின் தோழர்கள் நமது கோட்ட தலைவர் தோழர் T .அழகுமுத்து(6381921437) அவர்களை தொடர்புகொள்ளவும் .நான் இன்று ஒருநாள் மதுரை PTC யில் CPC WORKSHOP க்கு செல்கிறேன் .*மாநில மாநாட்டிற்கு வருகிறவர்கள் 08.02.2020 சனிக்கிழமை இரவு 10 மணிக்கு நெல்லை ரயில் நிலையத்திற்கு வரவும் .
*மாநாட்டில் நடக்கும் ஊர்வலத்தில் கலந்துகொள்வதற்காக நமது கோட்ட உறுப்பினர்களுக்கு தனி யூனிபார்ம் சட்டை வழங்கப்படுகிறது .இதற்காக பொருளுதவி செய்த மூன்று தோழர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
                      மாநில மாநாடு வெற்றி மாநாடாக அமைய வாழ்த்துக்கள் 
 நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                    LSG பதவி உயர்வில் மற்ற கோட்டங்களுக்கு ALLOTMENT செய்யப்பட்ட 12 ஊழியர்களையும் மீண்டும் நமது நெல்லைகோட்ட்டத்திற்கு REALLOTMENT செய்திட கோரி கோட்டநிர்வாகத்திற்கும் நமது மாநில சங்கத்திற்கும் நேற்று கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது .மேலும் மாநில சங்கத்தில் இருந்து சம்பந்தப்பட்ட ஊழியர்களும் தனித்தனியாக REALLOTMENT கேட்டு விண்ணப்பித்து அதன் நகலை மாநில சங்கத்திற்கு அனுப்பும்படி நமக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது .ஆகவே REALLOTMENT குறித்த மாதிரி கடிதம் உங்களுக்காக அனுப்பப்பட்டுள்ளது .

NFPE
ALL INDIA POSTAL EMPLOYEES UNION GR-C                                                              TIRUNELVELI DIVISIONAL BRANCH
TIRUNELVELI—627002
No.P3-LSG / dated at Palayankottai- 627002 the 05.02.2020

To

The Sr. Supdt. of Post Offices,
Tirunelveli Division
Tirunelveli-627002

Sir,     

Sub:    Request for Re -allotment of the officials from Tuticorin & Kovilpatti to Tirunelveli Division – reg

             Ref:    1.R.O Madurai letter STA/80-7/LSG dtd 04.12.2019
                        2. CO Memo No ESB/15-MergerPMGRI dtd 27.01.2020

A kind reference is invited to the above references.

As per the Memo cited (1), 34 officials in PA cadre from Tirunelveli Division have been promoted to LSG cadre.   Out of which, 12 officials have been allotted to Kovilpatti and Tuticorin Division.  Remaining 22 Officials have to be posted in the existing vacant posts in Tirunelveli Division.

            Subsequently as per reference (2) there are 9 posts from HSG II have been downgraded into LSG in Tirunelveli Division.

            Hence, this union urges the SSPOs Tirunelveli Division to take appropriate action to cause re-allotment of officials posted to Tuticorin and Kovilpatti Divisions and be posted in the LSG posts of Tirunelveli Division.

 A line in reply is solicited.



Copy to
The Circle Secretary
AIPEU GR C TN Circle
600002 
                         Yours faithfully


[S.K.JACOBRAJ]
 ------------------------------------------------------------------------------------------------------------------------

From




To
The Chief Postmaster General,
Tamilnadu Circle,
Chennai - 600002.

                               (Through Proper channel.)

Respected Sir,
Sub:  Submission of request for re-allotment to Tirunelveli Division-reg
Ref:  RO Madurai  No. STA/80-7/LSG  dated 04.12.2019
               I humbly submit the following few lines for the kind consideration of the Chief PMG, Sir.
I am working as Postal assistant in -----------------HPO, Tirunelveli Division under Southern region. I got Promotion LSG cadre  .With respect to the reference cited above,   --------------Division is allotted to me                          
Consequent up on the Postmaster cadre merged with general line there are nine posts from HSG II have been downgraded in to LSG cadre in my parent Division (ie) Tirunelveli
Hence, I humbly request that kindly consider my request and please re allot me Tirunelveli Division for which act of kindness, I will be grateful to you sir
                                                Thanking you,
                                                                                                Yours faithfully,
 .
                                                                                                (                                )