NFPE -P3
தமிழ் மாநிலம்
627006
---------------------------------------------
அன்பார்ந்த தோழர்களே!
தோழியர்களே!
ஊதியக்குழு அறிவிப்பும் -ஊழியர்களின் எதிர்(பார்ப்)பும்
-------------------------------------
எட்டாவது ஊதியக்குழுவின் பரிசீலனை பட்டியலில் உள்ள அம்சங்கள் ஊழியர்களுக்கும் /ஓய்வூதியர்களுக்கும் மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை ,மாறாக பாதாகமாக இருப்பதாக ஊழியர்கள் சங்க பிரதிநிதிகள் (NJCM )தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்யத்தொடங்கியுள்ளனர். இது குறித்து நம் மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளனம் மாண்புமிகு பாரத பிரதமருக்கு இன்று ஒரு கடிதத்தை எழுதியுள்ளது.
மற்ற ஊதியக்குழுவினில் பயன்படுத்தப்பட்ட Revision of Pension என்ற பதம் இந்த ஊதியக்குழுவில் Review of Pension அதிலும் Unfunded cost of Non -contributory Pension என்பது பழைய ஓய்வூதிய திட்டத்தை குறிவைத்து தொடுக்கப்பட்ட தாக்குதல்களாக உணர முடிகிறது.
Defered wage கொடுபடாத ஊதியமே பென்சன் என்றும் அதனால் திரட்டப்பட்ட பல இலட்சம் கோடிகளை பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு செலவழித்திட இந்த அரசு விரும்பவில்லை எனத்தெரிகிறது. பழைய பென்ஷன் திட்டத்தில் ஒவ்வொரு ஊழியருக்கான அரசின் பங்கு பணத்தினை அரசு மாதாமாதம் தருவதில்லை. மாறாக ஊழியர் ஒய்வு பெரும் போது அரசின் பங்கு மொத்தமாக வைக்கப்பட்டு அந்த பணத்திலிருந்து தான் பழைய பென்ஷன் தரப்படுகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் 58 சதம் பஞ்சப்படி உயர்வு என்பது விலைவாசி உயர்வு புள்ளிகள் சரியாகத்தான் நிர்ணயம் செய்யப்பட்டுருக்கிறதா என புது சந்தேகங்கள் எழுந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்கள். Consumer Price Index கணக்கீட்டில் அடிப்படை வருடம் மாற்றப்பட்டு முன்பு இருந்த விலைவாசி அதிகம் உள்ள திருச்சி போன்ற நகரங்கள் நீக்கப்பட்டு விலைவாசி குறைவாக உள்ள நகரங்கள் சேர்க்கப்பட்டதன் விளைவாக இன்றுவரை ஒவ்வொரு அரையாண்டும் அகவிலைப்படி 2% முதல் 4% வரை தான் உயர்வு கண்டுள்ளது. இது சந்தையில் உள்ள விலைவாசியை ஒட்டி இல்லாததால் ஊழியர்கள் இன்று அனைத்து ஊழியர்களும் ஒரு நிதி நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர்.
ஊதியக்குழு பலன்களை அடைய இன்னும் 18 மாதங்கள் காத்திருக்க வேண்டிதுள்ளது.
இந்த தேவையற்ற காலதாமத்தால் ஏற்படப்போகும் கூடுதல் செலவுகளை ஈடுகட்ட
ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தில் 01.01.2026 முதல் 5வது ஊதிய குழுவின் போது கொடுத்தது போல் 30 சதம் இடைக்கால நிவாரணம் (Interim Relief ) வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையும் நியாயமானதுதான்.
ஊதியக்குழு இடைக்கால அறிக்கை சமர்ப்பித்திட வாய்ப்பிருந்தால் நிச்சயம் இடைக்கால நிவாரணம் கொடுத்திட நிர்பந்திக்க வேண்டும்.
மேலும் 01.01.2024 முதல் அடிப்படைசம்பளத்துடன் 50 சத பஞ்சப்படியை இணைத்திடவும் கோரிக்கை வலுக்கிறது. 6வது ஊதிய குழுவிற்கு முன் 2004 ஆண்டு 50% பஞ்சப்படி இணைக்கப்பட்டது குறிப்பிடத்தத்தக்கது.
பஞ்சப்படி கணக்கீட்டில் மாற்றம் கொண்டுவரப்போவதாகவும்,01.01.2026 முதல் நோஷனலாக ஊதியத்தை நிர்ணயம் செய்து நிலுவைத்தொகை கொடுத்திடாமல் தவிர்த்திடவும் வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.
ஊதியக்குழு அமுலாக்கம் எந்த தேதியில் வந்தாலும்
01.01.2026 முதல் நிலுவைத்தொகை வழங்கிட வேண்டும் என்பதிலும் நாம் உறுதியாக இருக்கவேண்டும்.
மற்ற துறைகளை விட நமது துறையில் GDS ஊழியர்களையும் சம்பளக்குழு வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறது.
இதுபோன்ற முக்கிய கோரிக்கைகளை வென்றெடுக்க மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளனங்கள் ,இரயில்வே தொழிற்சங்கங்கள் ,பாதுகாப்புத்துறை ஊழியர் சம்மேளனங்கள் மற்றும் ஓய்வூதியர் அமைப்புகள் என அனைவரும் ஒன்றினைய
வேண்டும்.ஒன்றினைக்க வேண்டும்.
பழைய நாட்களைப் போல பக்கம் பக்கமாக கோரிக்கை மனுவினை கொடுத்து அதை படித்திடும் நிலையில் ஊதியக்குழு இல்லை எனத் தெரிகிறது.
கேள்வி பதில் அடிப்படையில் கோரிக்கைகளை கேட்டு பெற்று அதை பதிவேற்றம் செய்திடும் டிஜிட்டல் அமைப்பு அறிமுகப்படுத்தப்படலாம் எனத் தெரிகிறது.
இடைக்கால நிவாரணம் ,நியாயமான ஊதியம் , பாகுபாடில்லாத ஓய்வூதியம் இவைகளை உறுதிப்படுத்த வலுவான இயக்கங்கள் தான் அவசியம்.
நன்றி
தோழமையுடன்
S.K.ஜேக்கப் ராஜ்
மாநிலச் செயலாளர்