...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, December 31, 2015

                             அனைவருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

                           பரிந்துரையா?பரிகாசமா ?
 ஊதியகுழுவே ! உனக்கென்ன 
ஊழியர்கள் மேல் இத்தனை  கோபம் 
வரங்களை கேட்டால் சாபங்களை தந்திருகிறாயே    !
வட்டியில்லா    அலவன்சுகளை  எல்லாம் 
வெட்டி மகிழ்ந்திருக்கிறாயே !
பொட்டி பொட்டியாய் கொட்டி கொடுத்தோம் என 
பெட்டி கடைதோறும் புலம்ப வைத்திருக்கிறாயே !
தொழிலாளிகளுக்கு அளந்து கொடு 
அய்யாக்களுக்கு  அள்ளிகொடு --இதுதானே 
சம்பளகுழுவின் சாஸ்திரம் --எப்படி 
கூட்டினாலும் கூடவில்லை -ஊதியக்குழுவின் சூத்திரம் 
ஆண்டு உயர்வும் சமமாக இல்லையே!
ஆளைபார்த்துத்தான் அடுத்தது என்றால் -மீண்டும்
 ஆண்டான் அடிமை பிறக்காதா ?
புதைக்கப்பட்ட பிரபுத்துவம்  முளைக்காதா?
கோடி  கோடியாய் சேர்பவருக்கு வரிச் சலுகை 
ஓடி தேடி பிளைப்பவனுக்கு வரி கொடுமை 
பழைய அரசாவது தொழிலாளியின் வியர்வையை குடித்தது 
புதிய அரசோ உதிரத்தையும் சேர்த்து உறிஞ்சுகிறது 
மாத்துரார் கணக்கிலும் பிழை இருக்கிறது --அதை 
மாற்றுவதில்தான் நம் பிழைப்பு இருக்கிறது 
மாற்றிடவேண்டும்  என குரல் ஒலிக்கிறது
மறுபடியும் களம் காண அழைப்பு வந்திருக்கிறது 
பரிந்துரையா? பரிகாசமா ? பரிசளிப்பா ? பரிதவிப்பா ?
Matrix மாயஜாலம் அதிகாரிகளுக்கு கை கொடுத்தது 
அடிமட்ட   ஊழியர்களை  கை  விட்டது 
அடிமாட்டுக்கு காட்டுகிற இரக்கம் -ஏனோ 
அரசு ஊழியர்கள் மேல் இல்லையே !   
                                 --- ஜேக்கப்ராஜ் ----
( 2016 நெல்லை கோட்ட டைரியில் இருந்து )

 தோழர்கள் மற்றும்  தோழியர்கள் அனைவருக்கும் நெல்லை கோட்ட சங்கங்களின் சார்பாக புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் 
New year decoration,Closeup on 2016. - stock photo

                   இந்த ஆண்டு நமது கோட்ட சங்க கையேடு தயார் --இது ஒன்பதாவது ஆண்டு -அதரவு கொடுத்த அனைத்து தோழர்கள் அனைவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள் .
 
 -
 எங்கள்கோட்டம்--NFPE மலர்கள் முழுவதுமாக
 பூத்து குலுங்கும் தோட்டம் - -
புதிதாய் பூக்கும்  அத்தனை மலர்களுக்கும் NFPE வாசம் வீசும் .
தொழிலாளி புகழ் பேசும் --இனி 
இங்கே உதிரிகள் இல்லை -
எதிரிகள் என்பதும் இல்லை! இல்லை !இல்லவே இல்லை !

                                        புத்தாண்டு வாழ்த்துக்களுடன் 
      அஞ்சல் மூன்று                                                                 அஞ்சல் நான்கு 
SK .ஜேக்கப்ராஜ்                     நெல்லை                                  SK .பாட்சா 
N .வேல்முருகன்                அம்பை                                        R .ஆதி நாராயணன் 
M. முத்து லட்சுமி                PSD                                                 S.குமரேசன்  

                                                    செய்திகள் 

Sh. Ravi Shankar Prasad Today Announced That India Post Would Be Launching Payment Banking By March 2017
Press Information Bureau 
Government of India
Ministry of Communications & Information Technology
28-December-2015 18:47 IS

Sh. Ravi Shankar Prasad

Shri Ravi Shankar Prasad Inaugurates Good Governance Week Celebration

23 New Products Launched
Payment Bank to Begin from March 2017


 A week-long celebration of Good Governance Week was organized by Department of Electronics and Information Technology starting from 25th December 2015. A National event on Good Governance was inaugurated on 28th December 2015 by Shri Ravi Shankar Prasad, the Hon’ble Minister of Communications & Information Technology (MoCIT) in India Habitat Centre at New Delhi. This event involved active participation from Department of Electronics and Information Technology (DeitY), Department of Telecommunications (DoT) and Department of Posts (DoP) and their agencies.


Speaking on the occasion, Shri Ravi Shankar Prasad reiterated the commitment of the Government towards the successful implementation of ‘Digital India’ which would help to transform India into a truly digitally empowered society and knowledge economy in the 21st century. He said the government is aiming at empowering people of India through digitalization. Millions of citizens have already joined in this initiative and invited others to do so. He said e-services should reach more people at the earliest and sought cooperation from State Governments, industry and acadmecia in the early achievement of this objective.


Sh. Ravi Shankar Prasad also announced that India Post would be launching Payment Banking by March 2017. He said after the successful turn around of BSNL, new initiatives have been taken for improving performance of MTNL. He also announced launch of free incoming all over the Country by MTNL from New Year.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
MMS மேனேஜர் , உதவி மேனேஜர் புதிய நியமன 

விதிகள் 
---------------------------

Proposed revision of Revised Recruitment Rules : Assistant Manager MMS and Dy. Manager MMS


 please CLICK HERE.
--------------------------------------------------------------------------------------------------------------
--------------------------  கோவை வலைத்தளத்தில் இருந்து சில

NEWS IN BRIEF


1. No Interviews in Group C Jobs from Jan 2016 - Skill Test will Continue

2. Post Bank will be Launched from March 2017 

3. Departments Prepare their Comments on the Pay Commission Report for submission to the Implementation Committee.

4. Unions have requested for a copy of the Comments and Suggestions of the Department submitted to the Implementation Committee

5. Digital Connectivity for Rural Post Offices soon

6. Employees are requested to be present on 01.01.2016 for Pay Fixation in the new scale.

7. Pay scales likely to change after fixing the Minimum Entry Pay Scale. Sources say that the Government is to enhance the Minimum Scale to Rs 20000/- against the Union demand for 26000/-

8. The Multiplication Factor may be enhanced to 2.87 in total for all the scales.

9. MACP fixation are like to get modified.

10.  Only 12% reservations are found for OBC against mandal Commission recommendation of 27%

11. Grant of MACP on court decisions applies only to the Specific Officials of the case.. Dopt Clarification.

12. Cadre restructuring of Group C is being processed Vigorously - Directorate. . All clarifications have been answered to the Finance Department queries.  The proposal is expected to be approved soon and implemented before the implementation of new Pay scales..

13. Central Government Employees Confederation are planning for a massive indefinite strike against the retrograde recommendations of the 7th Pay commission in March 2016..


 ...................-

Wednesday, December 30, 2015

ஊதியக்குழு பரிந்துரையில் எல்லோருக்கும் உயர்வு சமமாக  இல்லை .சராசரி 14 மடங்கு கீரேடு  பே என்றால் கடைநிலை ஊழியர்களுக்கு 1800x 14= 25200 வரவேண்டும் .பழைய  கீரேடு  பே 10000 வாங்குபர்களுக்கு 14.42மடங்கு  உயர்வு MTS ஊழியர்களுக்கு 10மடங்கு 1800X 10 =18000 .பழைய  கீரேடு  பே 4200 வாங்குபவர்களுக்கு 8.42 தான் உயர்வு .எப்படி பார்த்தாலும் நமக்கு மட்டும் கூடமறுக்கிறது இந்த கணக்கு !

PB I Rs 5200-20200
Grade Pay
Minimum recommended @ entry level by 7th CPC (Rs) in the Pay MatrixMultiplication factor by VII th pay Commission
18001800010 times
190019900 (difference +1900)10.47
200021700(difference +1800)10.85
240025500(difference +3700)10.62
280029200(difference +3800)10.42


PB II Rs 9300-34800 
Grade Pay
Minimum recommended @ entry level by 7th CPC (Rs) in pay matrixMultiplication factor by VII th pay Commission
420035400(difference +6200)8.42 times
460044900 (difference +9500)9.76
480047600(difference +2700)9.91
540053100(difference +5500)9.83
Initially for Rs1400/- GP difference the corresponding increase proposed is Rs6200/- but in next stage for Rs400/-GP the proposed hike is mind blowing Rs9500/-,in next stage for Rs200/-GP the increase is Rs2700/- and for Rs600/-GP hike further increase is Rs5500/-


PB III Rs 15600-39100 
Grade Pay
Minimum recommended @ entry level by 7th CPC (Rs) in the Pay matrixMultiplication factor by VII th pay Commission
54005610010.38times
660067700 (difference +11600)10.25
760078800(difference +11100)10.36
For a GP of Rs1200/- difference the hike proposed is Rs11600/- and for another Rs1000/- GP increase the increase given by CPC is Rs 11100/-


PB IV Rs 37400-67000 
Grade Pay
Minimum recommended @ entry level by 7th CPC (Rs)in the Pay matrixMultiplication factor by VII th pay Commission
8700118500(difference +39700)13.62 times
8900131100 (difference +12600)14.73
10000144200(difference +13100)14.42
For a GP increase of Rs1100/- the CPC proposed a hike of Rs39700/- and for a GP difference of Rs200/- the CPC recommended a increase of Rs12600/- and for a GP increase of Rs1100/- the CPC recommended a hike of Rs13100/-

                                       
போனஸ் திருத்த மசோதா Bill No 265-of  2015 பாராளுமன்ற ஒப்புதல் நகல் 
 பிரிவு C மற்றும் D ஊழியர்களுக்கு போனஸ்  உச்சவரம்பு ரூபாய் 3500 இல் இருந்து  ரூபாய் 7000 ஆக உயர்கிறது .இது கெசெட்டட் அலுவலர்களுக்கு பொருந்தாது .  

THE PAYMENT OF BONUS (AMENDMENT) BILL 2015

தேவைக்கேற்ற குறைந்தபட்ச ஊதியம் கனவு தானா ?
             நாடு சுதந்திரம் பெற்று 68 ஆண்டுகள் ஆகின்றது .ஊழியர்களின் முக்கிய கோரிக்கையான     தேவைக்கேற்ற குறைந்தபட்ச ஊதியம் என்பது வெறும் கனவாகவே இருக்கின்றது .1957 இல் நடைபெற்ற ச ர்வதேச தொழிலாளர்கள் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின் படி டாக்டர் .அக்ராய்டு பார்முலா அடிப்படையில் தேவைக்கேற்ற குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படும் என்று ஒத்துகொண்ட போதிலும் இன்று வரை அது நடைமுறைபடுதபடவில்லை .
இந்தமுறைகூட கடைநிலை ஊழியர்களுக்கு ( lowest class employees) குறைந்தபட்ச ஊதியம் ரூபாய் 26000 வழங்க நாம் கேட்டு இருந்தோம்   ஆனால் சிபாரிசோ ரூபாய் 18000 என அறிவித்தது .விலைவாசியை பொறுத்தவரை அதற்கு மட்டும் எப்போதும் ஏறுமுகம்தான் . 01.01.2014 இல் மளிகை பொருட்கள் ரூபாய் 11344 இதன் சராசரி மற்றும் இந்தியா முழுவதும் இருக்கும் விற்பனை விலை ,கல்வி ,சமுக நடவடிக்கைகள் இவைகளின் அடிப்படையில் தான் நாம் குறைந்தபட்ச ஊதியம் கடைநிலை ஊழியர்களுக்கு ரூபாய் 26000 நிர்ணயம் செய்ய கேட்டு இருந்தோம் .

            The website of Agriculture Ministry also maintains the record of prices of commodities which are required to compute the minimum wage. Though these prices also vary from the real retail market. But if these prices had been taken by the pay commission as an all India average of the prices as on 01.07.2015. It will work out Rs. 10810. Thus the computation of minimum wage will arrive as Rs. 19880. After adding 25% for arriving at MTS scale it will come as Rs. 24850 and to convert it as on 01.01.2016 after adding 3% as suggested by 7th CPC. The final computation will come as 25596 when rounded off it shall be Rs. 26000/-
                                    பெரிய பெரிய நடிகர்களுக்கும் 
                                     ஒருநாள்  மார்க்கெட்  விழும் --ஆனால் 
                                     மார்க்கெட் விழாமல் கூடுவது 
                                      விலைவாசி மட்டும் தான் 
                                      யார் யாருக்கு எல்லாமோ இறங்குமுகம் 
                                      விலைவாசிக்கு மட்டும் ஏன் எப்பொழுதும் ஏறுமுகம் ?
                                                     தோழமையுடன்         SKJ 

Tuesday, December 29, 2015

                                  நெல்லை கோட்ட செய்திகள் 
28.12.2015 அன்று நடைபெற்ற மாதாந்திர பேட்டியில் ஏற்றுகொள்ளபட்ட சில முடிவுகள் 

1.Accounant பாளையங்கோட்டைக்கு உடனடியாக விருப்ப விண்ணபங்கள் கோரப்படும் .
2. காலியாக உ ள்ள அனைத்து காசாளர் பதவிகளுக்கும் விண்ணபங்கள் கோரப்பட்டுள்ளன .அந்தந்த அலுவலக ஊழியர்களுக்கு முன் உரிமை வழங்கப்படும் .
3. பழுதான இலாகா ஆட்டோ வரும்வரை MMS க்கு  வாடகை VAN இயக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது .இது 30.12.2015 முதல் நடைமுறைக்கு வருகிறது .இனிமேல அலுவலக வேலைநேரம் முடிந்தபிறகும் தேவையில்லாமல் ஊழியர்கள் காத்திருக்க தேவையில்லை 
4.நமது கோட்டத்திற்கு 44 UPS பேட்டரிகள்  வாங்க மண்டல அலுவலகத்தால் ஒப்புதல் வந்து விட்டது .மின்சாரம் போனவுடன் உடனடியாக  கணினிகள் செயலிழக்கும் நிலை  இனி Single hand அலுவலகங்களில் கூட ஓரளவு  இருக்காது   
5.LSG இரண்டாம் பட்டியல் வரை நெல்லையில் Place of Posting போடப்பட்டுள்ளது .மூன்றாவது பட்டியல் படி vigilance clearance முடிந்து அனுப்பப்பட்டுள்ளது .விரைவில் அவர்களுக்கும்  Place of Posting வரும் ..
6.LSG கலக்ட்ரேட் SPM ஆக  முன்னாள் பாளை கிளை தலைவர் தோழர் N.சங்கரசுப்பு அவர்கள் 01.01.2016 அன்று  Join பண்ணுகிறார் .அவர்களை தோழமை உள்ளத்தோடு வாழ்த்தி வரவேற்கிறோம்   
                                               மற்றவை விரைவில் 
                                                  தோழமையுடன்  SK .ஜேக்கப்ராஜ் 

Attestation of Certificate by Gazetted Officers Abolished by Government
Path-breaking initiatives like discontinuation of affidavits for host of government services and ending job interviews for various posts from January 1 among other initiatives kept the Ministry of Personnel in news during 2015.

“The most revolutionary and path-breaking decision is abolition of attestation of certificates by gazetted officers instead promoting self-attestation,” Minister of State for Personnel, Public Grievances and Pensions Jitendra Singh told.

He said the government took this decision as it was willing to trust citizens, more importantly it’s youth who will not give wrong information while submitting self-attested documents.

This decision has come as a big relief to common people, especially those living in rural areas, who had to take lot of pain in getting documents attested.

The Ministry also recently discontinued the practice of submission of affidavit by the family members of deceased government employees for the appointment on compassionate grounds.

Now people are required to submit self-declaration at the time of applying for compassionate appointment. All states and union territories have also been asked by the Centre to do away with practice of getting gazetted officer-signed affidavit and seek self-attestation.

Singh, a Lok Sabha member from Jammu and Kashmir’s Udhampur constituency, said soon after Prime Minister Narendra Modi’s announcement to end interviews from government jobs, his Ministry has acted on it.

“We have decided that from January 1, next year, the process of interview for Group C and D recruitments will be abolished,” he said, adding that these are some steps which nobody thought of in past over 60 years after country’s independence.

Monday, December 28, 2015

                                            சாட்டையை  சுழற்றாதீர் 
GDS ஊழியர் விடுப்பு விண்ணப்பித்தால் கீழ்க்கண்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் இல்லை என்றால் சம்பந்தப்பட்ட SPM கள் பதில் தர வேண்டும் என்று நமது கோட்டத்தில் ஒரு உப கோட்டத்தில் இருந்து  கடிதம் அனுப்பப்பட்டுள்ளது .அதன் நகலை கீழே பார்க்க 

1. please intimate whether the substitute is already approved

2. please obtain and forward the explanation of the GDS for not obtaining prior permission for leave 

GDS Substitute கள் ASP கும் திருப்திகரமாணவராக இருக்கவேண்டும் .போதுமான கல்வி தகுதி இருக்க வேண்டும் .ஏற்கனவே உப கோட்டம் அங்கீகரித்த பட்டியலில் உள்ள Out-sider களை தான் விடுப்பு பதவியில் நியமிக்க வேண்டும் என்பது இலாகா விதி .நிர்வாகத்திடம் நாம் கேட்கும் கேள்வி .நெல்லை கோட்டத்தில் உப கோட்டம் வாரியாக இதுவரை அங்கீகரிக்கப்பட்ட Out -sider  பட்டியலை அனைத்து SPM களுக்கும் அனுப்ப வேண்டும்.இதற்கு முன்பு அனுப்பி வைக்கபட்டுள்ளதா ?  ..
   இரண்டாவதாக முன் கூட்டி அனுமதி பெற்று தான் GDS ஊழியர்கள் விடுப்பில் செல்ல வேண்டும் .இன்று ஒரு முக்கியமான உறவினர் மரணம் என்றால் ASP களிடம் முன் அனுமதி பெற்று அங்கீகரிக்கப்பட்ட Out sider வந்த பிறகுதான் செல்லவேண்டும் என்பதெல்லாம் நடைமுறை சாத்தியமா ?   தன்னிடம் ஒரு GDS ஊழியர் ஒரு கேள்வி கேட்டார் என்பதற்காக இத்தனை கேள்விகளா ?  
                                 வேலியே பயிரை மேய்வதா !   
                    இலாகா விதியும் அப்படித்தான் --  ஈடி 
                    தலை விதியும் இப்படி தான் -அதிகாரிகளே 
                    மீண்டும் மீண்டும் சாட்டையை  சுழற்றாதீர்-பழைய 
                    சவுக்கடிகளின் தடம் இன்னும் ஆறவில்லை 1
                    

GDS கமிட்டி -

GDS COMMITTEE- LATEST ORDER

Saturday, December 26, 2015

                                                            செய்திகள் 
                            கோட்ட நிர்வாகத்திற்கு நன்றி 
                 எங்களுடைய நீண்ட நாள் கோரிக்கைகளான எழுத்தர் தேர்வில் வெற்றி பெற்று தொலை தூரத்தில் பணியாற்றிய தோழர்களை மீண்டும் அவரவர் சொந்த ஊர்களில் பணிமாற்றம் செய்து கொடுத்த கோட்ட நிர்வாகத்திற்கு குறிப்பாக நமது  முதுநிலை கண்காணிப்பாளர் திரு .VP .சந்திர சேகர் அவர்களுக்கு    எங்கள் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .
       G .சின்ன துரை -- கல்லிடைகுறிச்சி 
      P .சுப்ரமணியன் -- அம்பாசமுத்திரம் 
           செல்வ சுந்தரி -- வீகே புரம் 
2..          01.01.2016 அன்று கண்டிப்பாக Duty இல் இருக்கவேண்டும் .இல்லையென்றால் Increment தள்ளிபோகும் என பரவலாக ஒரு செய்தி உலா வருவதால் பல தோழர்கள் நம்மிடம் தொலைபேசி மூலம் இது குறித்து கேட்கிறார்கள் .அவர்களுக்கு நாம் சொல்லும் பதில் .01.01.2016 என்பது புதிய ஊதியத்தை நிர்ணயம் செய்யும் நாள் .எப்படி  ஜூலை 1 ம் தேதி பணியில் இல்லை என்றால் Increment தள்ளிபோகுமோ அதே
 பார்முலா தான் இதற்கும்   பொருந்தும் .
3..Accounts பிரிவில் LSG பதவி உயர்வுக்கு Option கொடுக்க மாநில நிர்வாகம் அழைப்பு 

OPTION CALLED FOR LSG PROMOTIONS IN ACCOUNTS LINE

DPC / PRIORITY

Department of Posts

O/o the Chief Postmaster General, Tamilnadu Circle, Chennai 600 002
To
The Divisional Heads concerned.

NO. STA/5-21/OPT/2015               DATED AT CHENNAI 600 002 THE        22.12.2015

 

Sub: Option to be obtained from PO & RMS Accountant examination qualified officials for  
         considering their promotion to LSG in POs/LSG Accountants in POs for the vacancy year   
         2015-16– Reg
-----------
Kindly obtain “Option” for LSG in POs / LSG Accountants in POs for the vacancy year  
2015-16 irrespective of their earlier option given by them from the PAs who have qualified in the PO & RMS Accountant examination in the Annexure-I and forward the same  to C.O. on or before 31.12.2015 along with consolidation  in the proforma.given below.


                                             வாழ்த்தி வரவேற்கிறோம் 
      இன்று 26.12.2015 அன்று பயிற்சி முடித்துவிட்டு தபால் காரர்களாக பணியில் புதிதாக சேரும் தோழர்களை NFPE வாழ்த்தி வரவேற்கிறது .
1.R .வேல் முருகன் --கல்லிடைகுறிச்சி 
2.B .சிவராமன்  -------- வடக்கன்குளம்
3.E .சக்திவேல் -------- கங்கைகொண்டான்
4.M.முத்துசாமி  ----- மகாராஜாநகர்   
மேலும் புதிதாக எழுத்தராக பணியில் சேரும் தோழர் சுரேஷ் குமார் PA சேரன்மகாதேவி  அவர்களையும் NFPE வாழ்த்தி வரவேற்கிறது .
                                               வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப்ராஜ்                                       SK .பாட்சா 

Wednesday, December 23, 2015

அனைவருக்கும் எங்கள் அன்பின் கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள் 
            கண்ணீரோடு விதைக்கிறவர்கள்-கம்பீரத்தோடு அறுவடை செய்வார்கள் 
christmas greetings
                     SK .ஜேக்கப் ராஜ்            SK .பாட்சா              S.கால பெருமாள்  

அன்பார்ந்த தோழர்களே ! 
                                             இந்த மாத மாதாந்திர பேட்டியில் நாம் விவாதிக்க இருக்கும் பிரட்சினைகள் உங்கள் பார்வைக்கு 
மாதந்திர சந்திப்பு --நாள் 28.12.2015

NFPE
ALL INDIA POSTAL EMPLOYEES UNION GROUP ‘C’ UNION,
TIRUNELVELI DIVISION,
TIRUNELVELI 627 002.
----------------------------------------------------------------------------------------------------------------------

No PIII/Dlgs     dated      at    Tirunelveli  627 002           the 22..12.2015

To
The Sr. Supdt of Post Offices,
Tirunelveli Division,
Tirunelveli 627 002.

 Sir,     
Sub;     Subjects to be discussed in the Union monthly meeting to be held on 29.12.15  –reg.

The following new subjects may kindly be included for discussion in the above monthly meeting.

1.  Request to fill up the post of Accountant, Palayankottai H.O early.

2.  Request to carry out the maintenance work at Gents Dining Hall, Palayankottai H.O.

3. Request to fill up the post of Treasurer, Chermadevi S.O early.

4. Request to pass the Honorarium Bill of TNPSC  Exam early.

5. Request to issue the transfer orders of P.As finalized in the  Transfer Committee held on 15.12.15.

6. Request to supply the minutes of the Transfer Committee held on 15.12.15.

6. Request to issue the order of LSG cadre at D.O level which was recently issued by R.O.

7. Request to make arrangement for early receipt of second mails in the morning at all Town H.Os and S.Os since the mails are received very late and could not be delivered on the same day.

8. Request to engage private auto for dispatch of mails in the evening by all Town H.Os and S.Os since the officials working at the H.O/ S.Os have to wait more than 2 hours daily in the evening beyond their working hours

9. Request to repair the Pass Book Printer to Tirunelveli H.O.


10..  Request to grant advance to TA to the officials who have deputed to Manjolai SO        & Nalumukku SO.

11.. Request to grant early sanction for cleaning of walls and trimming of trees in the          Ambasamudram HO premises.


The following officials may kindly be permitted to attend the above meeting.

1.Shri.S.K. Jacobraj, Divl Sec, P. A, Palayankottai H.O.

2. Shri. C.Vannamuthu,Asst Sec, P.A, Tirunelveli H.O.

3.S hri. N.Velmurugan, Br Sec and P.A, Ambasamudram H.O.

                                                                                                Yours faithfully,

                                                                                                (S.K.JACOBRAJ)


                                                                                                Divisional Secretary.
----------------------------------------------------------------------------------------------------------------
அஞ்சல் நான்கு சார்பாக கொடுத்திருக்கும் பிரட்சினைகள் 
1.பாளையங்கோட்டை HO விற்கு கூடுதலாக இரண்டு Scanner வழங்கவேண்டும். .
2.பாளையங்கோட்டை HO வில் காலை Duty க்கு வரும் ஊழியர்களுக்கு பிரிண்டர் சரி செய்து தர வேண்டும் .
3.புதிய கணக்கெடுப்பின் படி வீகேபுரம் அஞ்சலகத்திற்கு ஒரு தபால் காரரை நியமிக்க வேண்டும் .
4.மகாராஜநகர் அலுவலக வேலைப்பளுவை கணக்கில் கொண்டு  KTC நகர் அஞ்சலகத்தை பட்டுவாடா அலுவலகமாக (1+ 2) தரம் உயர்த்த வேண்டும் .
5. ஊதிய வித்தியாசம் உள்ள ஊழியர்களுக்கு .Stepping up pay வழங்க வேண்டும்உதா S.ஆறுமுகம் தபால் காரர் பாளை )  .
6.Full timeCLR பணிக்காலத்தை Pensionary சலுகைக்கு சேர்த்து கொள்ள வேண்டும் (.உதா .எல்லம்மாள் MTS பாளை )
7.மகாராஜநகர் அலுவலகத்திற்கு ஒரு Sorting போஸ்ட்மன் பதவி உருவாக்கப்பட வேண்டும் (தற்சமயம் 18 பீ ட்டுகள் உள்ளன )
8.கடந்த தேர்வில்OBC  பிரிவில் தேர்ச்சி யாகி  பின்பு நேரடி PA  ஆக சென்ற பதவியை அடுத்த மதிப்பெண் எடுத்த ஊழியரை தபால் காரராக பதவி உயர்வு வழங்க வேண்டும் .
9.நமது கோட்டத்தில் அனைத்து தபால் காரர் /MTS களுக்கு சீருடைகள் வழங்க வேண்டும் .
10மெயில் ஓவர்சீயர் /CO களுக்கு குறைந்தபட்ச  CELL BILL வழங்க வேண்டும் .
11.விடுபட்ட அனைவருக்கும் CMA வழங்க வேண்டும் .
12.திருநெல்வேலி /பாளை /HO  CO களுக்கு  CASH BAG புதிதாக வழங்க வேண்டும் .
13.தபால் காரராக Officiating பார்த்த MTS ஊழியர்களுக்கு அடுத்த Grade pay இல் ஊதியம் வழங்க வேண்டும் .
14.தபால் காரர் /MTS ஊழியர்களுக்கான இடமாறுதல் கமிட்டி உடனே அமைக்க வேண்டும் .
 கீழ்க்கண்ட நிர்வாகிகள் பேட்டியில் கலந்து  கொள்வார்கள் .
1.SK .பாட்சா  கோட்ட செயலர்  திருநெல்வேலி HO 
2.S. சாக்ரடீஸ்   தபால்காரர் மகாராஜநகர் 
3.R .ஆதி நாராயணன் கிளை செயலர் அம்பை HO 
                                                    நன்றி 
                                                           வாழ்த்துக்களுடன் 
                                                           SK .பாட்சா  கோட்ட செயலர் 

BO களில் வேலையை சேர்த்து பார்க்க பணிக்க கூடாது --முடிந்தவரை Redeployment மூலமாக  GDSMC /MD பதவிகளை நிரப்பிட வேண்டும் 


கீழே  பார்க்க   உத்திரவின் நகலை !

GDS கமிட்டி -கேசட்டட் அறிவிப்பு 
 

Tuesday, December 22, 2015

CONSTITUTION OF A GDS COMMITTEE - ORDER DATED 21.12.2015 CLICK HERE FOR DETAILS

-------------------------------------------------------------------------------------------------------------------------------

ஓய்வூதியர் சங்க இரண்டாம் மாநில மாநாடு --கோவை 

Tuesday, December 22, 2015

பட்டணத்தில் பாதி

பட்டணத்தில் பாதி இவன் வாங்கி முடித்தான்
அந்த பட்டயத்தில் கண்டதுபோல் வேலி எடுத்தான்
எடுத்தான்.... முடித்தான்.... ...
பட்டணத்தில் பாதி இவன் வாங்கி முடித்தான்
அந்த பட்டயத்தில் கண்டதுபோல் வேலி எடுத்தான்
அதில் எட்டடுக்கு மாடி வைத்து
கட்டிடத்தை கட்டி விட்டு
எட்டடிக்குள் வந்து படுத்தார்
மண்ணை கொட்டியவன் வேலி எடுத்தான்.....வாலி 

                                                முக்கிய செய்திகள் 

மிலாடி நபி விடுமுறை 24.12.2015 க்கு மாற்றம் .கடைசியாக சேமித்து வைத்த RH ரத்து 
மாதாந்திர பேட்டி 29.12.2015 க்கு பதிலாக 28.12.2015 அன்று நடைபெறுகிறது .
-----------------------------------------------------------------------------

Monday, December 21, 2015

                மிலாடி நபி விடுமுறை 24.12.2015 ஆக மாற்றம்

CHANGE OF CLOSED HOLIDAY FOR "MILAD - E - NABI" FROM 23.12.2015 TO 24.12.2015 - ORDER ISSUED BY CGEWCC, TAMILNADU

Income Tax Slabs for Financial Year (FY) 2015-16


 
FY 2015-16 tax rate applies to income earned between 1st April 2015 and 31st March 2016. Income Tax rates for individuals are same for FY 2015-16 and FY 2014-15.

  • Income Tax Rates for taxpayers less than 60 years old
Tax SlabFY 2015-16 & FY 2014-15
Tax Rate
Tax SlabFY 2013-14
Tax Rate
Up to Rs.2,50,000No TaxUp to Rs.2,00,000No Tax
Rs.2,50,000 - Rs.5,00,00010%Rs.2,00,000 - Rs.5,00,00010%
Rs.5,00,000 - Rs.10,00,00020%Rs.5,00,000 - Rs.10,00,00020%
Rs.10,00,000 and beyond30%Rs.10,00,000 and beyond30%
Surcharge: 10% of the Income Tax, where total income exceeds Rs.1 crore.
Education cess: 3% on sum of total income tax and surcharge.
Share this article :