...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, February 28, 2018

                          தோழர் சேர்முக பாண்டியன் முதுநிலை கணக்கு அதிகாரி (Senior Accounts Officer) அவர்கள் , புது டில்லி CCA முன்னாள் கோட்ட செயலர் மானாமதுரை அவர்களுக்கு பணி ஓய்வு வாழ்த்துக்கள் 28.02.2018 


சேர்முக பாண்டியன் எனும் -கொள்கையின் 
நேர்முக பாண்டியனே !
சீர்மிகு சிவகங்கையில் அஞ்சல் இயக்கங்களை 
போர் முகத்தில் வளர்த்தவனே !

பதவி உயர்வு வந்தால் 
பழசெல்லாம் பறந்துபோகும் என்ற 
பதத்தை பொய்யாக்கி -அதே 
பழக்கத்தை பாதுகாத்துவரும் 
அதிசய தோழனே !
ஒப்பற்ற தலைவர்கள் 
OP குப்தா -பிரேம் -ஞானையா 
வழிவந்தவனே --
ஒற்றுமை எனும் தீபம் காக்கவே 
புதிய தலைமுறைக்கும் சிவகங்கையில் 
வழி கட்டுபாவனே ! 
மதுரை மண்டல அலுவலகத்தில் 
கொந்தளிப்பு காலங்களில் கணக்கு அதிகாரி நீ -
RO க்கு வந்துசெல்லும் தொழிற்சங்க நிர்வாகிகளை 
ஆரத்தழுவி வரவேற்றது அன்று நீ மட்டும் தான் 
 அலுவல் நிமித்தமாய் கோட்டங்களுக்கு செல்லும் போதும்  
நிர்வாகிகளின் இடம் தேடி 
தோழமை விசாரிக்கும் உயர் குணம் உனக்குண்டு 
இயக்கமும் -இலக்கியமும் உனக்கு 
இரண்டு கண்கள் 
இரண்டிலும் ஆழமாய் 
வேரூன்றி நிற்கிறாய் 
பணம் கேட்டால் கடனாக தரும் 
நண்பர்கள் உண்டு -ஆனால் 
வச்சிருக்கும் புத்தகத்தை கடனாக தர 
பல நண்பர்கள் தயங்குவார்கள் 
புத்தகத்தை அனுப்பி -மீண்டும் 
பத்திரமாய் பெற்றுக்கொள்ளும் 
பழக்கமும் இன்னும் உண்டு 
தோற்றத்திலும் கம்பீரம் -தொழிற்சங்கம் 
தோற்பதில்லை என்பதே உன் மந்திரம் 
சுறுசுறுப்பிற்கும் பஞ்சமில்லை -ஒருநாளும் 
இறுமாப்போடு பேசியதில்லை 
நீங்களும் அண்ணன் செல்வராஜும் 
இரட்டை குழல் துப்பாக்கிகள் தான் 
அன்றைய மானாமதுரை-அதிகாரிகளிடம் 
அடிபணியாமல் வளர்ந்ததற்கு 
நீங்கள் சிந்திய  தியாகங்கள் தான் 
உன் அடையாளமாய் 
பாரதியை வைத்திருந்தாய் --
இலக்கிய உலகின் வித்தகர்களையும் 
நெருக்கத்திலே பெற்றிருந்தாய் 
பணிஓய்வு நாட்கள் சிறக்கவும் -
இனி வரும் நாட்கள் மீண்டும் சிலிர்க்கவும் 
விட்டுப்போன பணிகளை 
செப்பனிடு ! சீர்படுத்து !
வாழ்க !என வாழ்த்தி மகிழ்கிறேன் 
  தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 












Monday, February 26, 2018

மாநில செயலர் தோழர் JR அவர்களுக்கு 02.03.2018 நடைபெறும் ஆர்ப்பாட்ட கோரிக்கைகளில் McCamish Softwareமற்றும் CPC பிரச்சினைகளையும் ஒரு கோரிக்கையாக இணைக்க வேண்டுகிறோம் .

NFPE
 ALL INDIA POSTAL EMPLOYEES UNION GR-C                                                                         TIRUNELVELI DIVISIONAL BRANCH, TIRUNELVELI—627002
No.P3-CPC/dlgs dated at Palayankottai- 627002 the 26.02.2018

To
Com. J. Ramamoorthy
Circle Secretary
AIPEU Group ‘C’
Chennai-600018

Dear Comrade,

            Sub:    Problems faced due to improper functioning of McCamish
                        Software – reg
****

            We wish to bring the following to your notice in order to take up the said issues with the Circle Administration for a remedial action.

1.      Since first week of February, the “Collection” menu in McCamishmodule is not working and the SOs are accounting the RPLI Premia Collection of BOs manually in the SO Daily Accounts.  Hence, CPC has to feed the collection details and it consumes the time of most of the day.
2.      Whenever any software change is incorporated regarding feeding/updating of new proposals, the changes done should be communicated to all CPC by the Circle level CPC which is not being done as of now.
3.      ECMS is not working for the last one month due to reported ‘over load’ problem and hence all the service requests (Maturity, Death Claim, Revival etc.,) are being settled with much delay which creates customer dissatisfaction.
4.      Menu related to income tax is not working properly.
5.      Pressure should be created on the Administration to give due/proper attention to settle the McCamish related problems in order to provide better services to the customers and to avoid apathies of the working staff.
6.      Further, it is requested to include the above said CPC (McCamish) related issues in the charter of demands of the Demonstration to be held on 02.03.2018 for an early settlement.
                         Yours fraternally,

[S.K.JACOBRAJ]
                       

GDS TO போஸ்ட்மேன்/MTS தேர்விற்க்கான புத்தகங்கள் குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன .ஆர்வமுள்ள தோழர்கள் இதில் குறிப்பிட்ட நிபந்தனைகளின் படி பின்பற்றலாம் .


Sunday, February 25, 2018

முன்னாள் மாநிலசெயலர் தோழர் V.பார்த்திபன் அவர்களின் துணைவியார் திருமதி சசிகலா பார்த்திபன் LSG TR கே கே நகர் தென்சென்னை அவர்கள் தன் விருப்ப ஓய்வு --26.02.2018

                                                   வாழ்த்துகிறோம் 
சகோதரி சசிகலா 
பணி ஓய்வு காலங்கள் சிறக்கட்டும் 
சரிசமமாய் சுக துக்கங்களை 
பகிந்துகொண்ட தம்பதியர்களின் 
வரும் நாட்களும் இனிக்கட்டும் 
அண்ணாசாலையில் ஆரம்பித்து 
அறிமுக பயிற்சியாம் 
மயிலையில் மலர்ந்து 
பயணித்தது உங்கள் பணிகள் மட்டுமல்ல 
பார்த்திபனும் என்னும் இனிய நண்பனோடு 
நீங்கள் கொண்ட வாழ்க்கையும் தான் .
சத்தியவான் சாவித்திரியைவிட -இந்த 
சசிகலாவின் சக்தி பெரியதாய் இருந்தது போலும் 
சங்கடங்கள் பட்டிருந்தாலும்  -நன்பனை 
சாமர்தியமாய் காத்துக்கொண்டாய் 
வேலைப்பளுவை காரணம் காட்டி 
வெளியேறுபவர்கள் மத்தியில் 
உன் விருப்ப துணைவனுக்காக 
தன் விருப்ப ஓய்வை தரித்தவர் நீ 
வேலை முடிந்து வீடு எப்போது திரும்புவோம் 
என்ற கவலையில்லை 
விடுப்பு கேட்டால் கிடைக்குமா 
என்ற தயக்கம் இல்லை 
முப்பது ஆண்டுகால 
முழுநேரசேவை -இனி 
முப்பொழுதும் 
முன்போல் பாச பணிவிடைகள் 
குடும்பம் -குழந்தைகள் 
பேரப்பிள்ளைகள் என 
மகிழ்ந்திருக்க வாழ்துகிறேன் 
                                                    தோழமையுடன் 
                                   SK .ஜேக்கப் ராஜ் நெல்லை 

Saturday, February 24, 2018

தமிழகமுழுவதும் நேற்றைய குரல் --என்ன செய்ய போகிறோம் -ஒன்றுபட்ட போராட்டத்தை முன்னெடுப்போம் -வருகிற 02.03.2018 முதற்கட்ட ஆர்ப்பாட்டத்தை முழுவெற்றிபெற செய்வோம் 
---------------------------------------------------------------------------------------------------------------------
இந்த மாதிரி பிரச்சினை மாசத்துல குறைந்தது 4 நாளாவது வருது அப்போலா யாருக்கும் என்ன பண்ணணும் தெரிய மாட்டேங்குது இன்னும் எத்தனை காலம் தான் இப்படி பேசியே நம்மள நாமளே ஏமாத்த போறோம்னு தெரியலை... தொழிற்சங்கத்துல பெரிய ஆளுமைகள் நிறைய பேர் இந்த குருப்ல இருக்கிறீங்க இத ஓரு முக்கியமான விவாத பொருளா கையில எடுக்கவும்-- மனோகர் -தூத்துக்குடி 
---------------------------------------------------------------------------------------------------------------------------

-: அன்னைக்கு கிளம்புறத பத்தி மட்டுமே பேசுறோமே.. அடுத்த நாளும் நாமதானே போய் பாக்கனும் அடுத்த நாள் தினசரி வேலையோட சேர்த்து??
: வேல கம்மியா இருக்க ஆபீஸ் ஓ.கே..ஏதோ manage செய்யலாம்
 எல்லா அலுவலகத்திலும் அதையே எதிர்பார்க்க முடியுமா என்ன--
கிருஷ்ணகிரி 
------------------------------------------------------------------------------------------
நமது அனைத்து பிரச்னைகளுக்குமான தீர்வு அல்ல இப்பொழுது நாம் பேசுவது. Finacleகிடைக்காத நாட்களில் என்ன செய்வது என்பதற்கு இரவில் வெகுநேரம் காத்திருக்க தேவையில்லை என்பதை சொல்கிறோம். வேலைப்பளு, மறுநாள் எப்படி பார்ப்பது இவை அனைத்திற்கும் பொதுவான தீர்வு கடினம். இன்னமும் நாம் நிறைய வேலையை அன்றே முடிக்க வேண்டும் என்ற புள்ளியை சுற்றியே யோசிக்கிறோம்.-செல்வ கிருஷ்ணன் மா .தலைவர் 
-------------------------------------------------------------------------------------------------------------------
Sir in banks they can keep the amount in suspense and later they can tally by giving head adjustment. Heard like that from friends. But in our department the name is DAILY account. செழியன் 
--------------------------------------------------------------------------------------------------------------------
Leave applied for 4 days. btained aftr a struggle for two days...but cant relieve due to this finacle issues...how pitiful...how bad....its too hard to bear 🤦‍♀
---This is one post from a young lady comrade in Kanchipuram group....
-------------------------------------------------------------------------------------------------------------------

Dvn WhatsApp group ல் தங்களுடைய கோபத்தையும் இயலாமையும்  வெளி படுத்தும் நிறைய தோழர்கள் உண்மையில் அதிகாரிகள் முன் பேச நேர்ந்தால் பெட்டி பாம்பாய்  அடங்கிப்போய்  விடுகின்றனர்....சரி சார் சரி சார் என்பதே நிறைய பேருடைய தாரக மந்திரம்.... சரி union நடத்தும் போராட்ட ங்களை ஏன் எதற்கு என்று கூட தெரியாமல் வேலை யில்  ஆழ்ந்து விடுவார்கள்..... இன்று தவிக்கிறோம்...பற்றி எரிகிறது.....பயம்....பயம்    ..இது நம்ம பலவீனம்... அதிகார வர்கத்தின்  பலம்....ஒற்றுமை யாய்  நமது எதிர்ப்பையம்  கோபத்தையும் காட்ட வேண்டிய இடத்தில் காட்ட வேண்டிய நேரத்தில் காட்டி அடிமை யாய்  நம்மை  நடத்தும் அதிகார வர்கத்துக்கு புரிய வைப்போம்.ஒற்றுமை யான போராட்டம் தான் தீர்வாய் இருக்கும்.....நாகலட்சுமி -மகிளா கமிட்டி 
-------------------------------------------------------------------------------------------------------------------
அய்யா. ஒருநாள் பினாக்கள் கிடைக்கலன்னு இத்தன பேர் புலம்புறீங்க. தெனமும் மெக்காமிஸ்ஸோட மாரடிக்கவரங்க புலம்பல் யாருக்கும்தெரியலயா இல்ல மைனாரிட்டி ஆளுங்க தானேன்னுகண்டுகிறதில்லயா----தணிகாசலம் 
--------------------------------------------------------------------------------------------------------------------
தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு சொல்லவில்லை ஒட்டுமொத்த சிக்கல்களுக்கும் நமது tech committee சீராய்வு கூட்டம் நடத்திட வேண்டுகிறேன்.-புகழேந்தி 
--------------------------------------------------------------------------------------------------------------
Publics are angry with our employees and department we alone suffer a lot officers of our department escaping from answering pu  --மோகன் 
--------------------------------------------------------------------------------------------------------------
You pl give the cell phone numbers of Officers to the public . 

They will reply. Employees are not responsible for this debacle. 

The Department and the bureaucrats are the sole responsible persons , who cldnt able to control the Infodys or to slap with a penalty for the deficiency in their service.--JR 
----------------------------------------------------------------------------------------------------------------------
Why the CPC or any other authorities not giving any prior intimation to SOLS about the Finacle slow down. Ultimately the sufferers are the public and our staff at the grossroot level -AG .சந்திரசேகரன் 
-------------------------------------------------------------------------------------------------------------------
Mccamish software அறிவிக்க படாத மாற்றங்களால் Sub office ஊழியர்கள் கடந்த சில நாள்கள் சிரமத்திற்கு ஆளானார்கள்..
போராட்ட பொருளில் சேர்க்கலாமே sir...-புருசோத்தமன் -நெல்லை 
----------------------------------------------------------------------------------------------------------------------
தற்போது  5.41 மணிக்கு Dy  Director அவர்களே நம்மைத் தொடர்பு கொண்டு பணி நேரம் முடிந்த உடனே அவரவர் system Close செய்துவிட்டு இல்லம் திரும்பலாம் என Mail கொடுத்துவிட்டதாகவும் உஞனே ஊழியருக்கு நீங்களும் இதனை whatsapp மூலம் தெரிவியுங்கள் எரன்று கூறினார்.--மாநிலசெயலர் 
----------------------------------------------------------------------------------------------------------------------

போஸ்ட்மாஸ்டர் கேடர் பிரிவிற்கு வருகிறது இரண்டாவது கேடர் சீரமைப்பு 

அஞ்சல் துறை ஊழியர்களுக்கான வழிகாட்டும் சில முக்கிய தகவல்களின் தொகுப்புகள் -பகுதி -5


Friday, February 23, 2018

கணக்குகளை பிடிக்க  கோட்ட மட்டங்களில் ஊழியர்களை மோசமாக நடத்தும் நிர்வாகத்தை கண்டித்து 
தமிழ் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் 
                                  நாள் 02.03.2018 வெள்ளிக்கிழமை 
இடம் பாளையம்கோட்டை HO- மாலை 6 மணி 

வழக்கத்தை விட இந்தஆண்டு தமிழகம் முழுவதும் கணக்குகளை தொடங்க நிர்வாகம் காட்டும் வேகம் அதிகமாகத்தான் இருக்கிறது .
                                               தவறான முன்னுதாரணம் 
மத்திய மண்டலத்தில் ஒரே நாளில் ஒருகோட்டத்தில் 25000 கணக்குகள் தொடங்கியிருக்கிறார்களாம் .ஒரே நாளில் 25000 வாடிக்கையாளர்கள் கணக்குகளை தொடங்க தீர்மானித்தார்களா ? ஒரே நாளில் தான் ஆயிரக்கணக்கான கணக்குகளை தொடங்கவேண்டும் என்று யார் சொல்லிக்கொடுத்தது ? ஒரே நாளில் தொடங்கினால் தான் கணக்கில் சேருமா ?அந்த கோட்டம் செய்துவிட்டது இந்த கோட்டம் செய்துவிட்டது என்று இன்று தமிழகம் முழுவதும் கோட்ட அதிகாரிகளுக்கு இந்த புதுவித வியாதிதொற்றிக்கொண்டுள்ளது .இது ஆபத்தான விஷயம் .கோட்டத்திற்கு இலக்கை கொடுத்திருக்கிறீர்கள் .மார்ச் 31 வரை இந்த நிதி ஆண்டின் ஆயுள் இருக்கிறது .ஆகவே தலமட்ட ஊழியர்களின் நிலைமையை புரிந்துகொண்டு -ஒவ்வொரு பணியிடத்தில் இருக்கும் உட் கட்டமைப்புகளை கருத்தில் கொண்டு நிர்வாகம் செயல் படவேண்டும் .
               நேற்று தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத சிவராத்திரி 
மீண்டும் பினாகில் தன் சுயரூபத்தை காட்டிவிட்டது .வேலைக்கு வந்தோம் வேலையை முடித்தோம் விரைவாக வீட்டிற்கு சென்றோம் மறுநாள் விடியலுக்காக கொஞ்சம் ஓய்வெடுப்போம் என்ற நிலைமாறி புதுவித படபடப்போடு -பரப்பப்போடு நேற்றைய நாள் க(ஒ )ழிந்தது .வேலைமுடியாவிட்டால் வீட்டிற்கு போகலாம் நாளை வந்து பார்த்துக்கொள்ளலாம் என்ற மனநிலை அஞ்சல் ஊழியர்கள் பழக்கத்தில் இல்லாத ஒன்று 
.இந்த அர்ப்பணிப்பும் -ஈடுபாடுமும் தான் நிர்வாகம் நினைக்கும் அத்தனை புதிய பணிகளை நம் அஞ்சல் ஊழியர்களால் மட்டும் நிறைவேற்றப்படுகிறது .
  இந்த கள நிர்வாகத்தை புரிந்து கொண்டு மாநில நிர்வாகம் செயல்படவேண்டும் .பொய் கணக்குகள் -போலி கணக்குகள் இலாகா உத்தரவை மீறி தொடங்கும் குறைந்த  ரூபாய் கணக்குகள் ஒருவருக்கே பலநூறு கணக்குகள் இவைகளால் துறைக்கு லாபமா ?நஷ்டமா ?என்பதனை சீர்தூக்கி பார்க்க வேண்டும்  .இந்த நிர்வாகத்தின் தவறான நடவடிக்கை அச்சுறுத்தல் சில எடுபிடிகளின் கெடுபிடிகள் இவைகளை எதிர்த்து தமிழக NFPE -FNPO ஒருங்கிணைப்புக்குழு அறைகூவல் விடுத்திருக்கும் முதற்கட்ட போராட்டத்தை வெற்றி பெறச்செய்வோம் .
பரவட்டும் தீ பரவட்டும் -போராட்ட தீ தமிழகமெங்கும் பரவட்டும் 
வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் --SK பாட்சா  கோட்ட செயலர்கள்நெல்லை 

Thursday, February 22, 2018

 இன்று இணைந்ததல்ல -1954 யிலே இணைந்து கைகள் நம் கைகள் 



நேற்று நடிகர் கமலஹாசன் அறிமுகப்படுத்திய கொடியை பார்த்தவுடன் நமது தோழர்கள் இது நமது சம்மேளன லோகோ போல் உள்ளது என்றார்கள் .ஆறு இணைந்த கைகளை காட்டப்பட்டிருந்தது .நமக்கோ ஒன்பது சங்கங்களை குறிக்கும் வகையில் ஒன்பது கைகள் இணைந்திருக்கும் .இளைய தோழர்களின் விருப்பங்களுக்காக இந்த ஒன்பது கைகளின் தோற்றத்தை சிறிது பார்ப்போம் .தபால் -தொலைதொடர்பு ஒரே துறையாக இருந்தகாலங்களில் அஞ்சல் பகுதியில் P 3 P 4(போஸ்டல் ) R 3 R 4 (RMS)
தந்தி பிரிவில் T 3 T 4 தொலைபேசி பகுதியில் E 3 E 4 மற்றும் நிர்வாக பிரிவு என ஒன்பதுசங்கங்கள் ஒரே குடையின் கீழ் NFPTE என்ற சம்மேளன அமைப்பு 24.11.1954 யில் அமைந்தது .NFPTE சம்மேளன முதல் கூட்டத்திலே இரண்டாவது சம்பளக்குழு அமைக்கவேண்டும் உள்ளிட்ட  30 அம்ச கோரிக்கைகயை வடித்தெடுத்து அரசுக்கு சமர்ப்பித்தது .வழக்கம் போல் அன்றைய அரசால்  நமது  கோரிக்கைகள் உதாசீனப்படுத்தப்பட்ட சூழலில் 08.08.1957முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என்று 15.07.1957 அன்று அரசுக்கு நோட்டிஸ் கொடுத்தது இதற்கிடையில் 03.08.1957 அன்று அரசு 2வது ஊதியகுழுஅறிவிப்பை வெளியிட்டது .ஆனாலும் நமது போராட்ட அறிவிப்பை தொடர்ந்து 05.08.1957 அன்று மத்தியஅரசு ESMA சட்டத்தை அறிவித்து வேலைநிறுத்தம் செய்தால் 6 மாதம் சிறைதண்டனை 500 ரூபாய் அபராதம் என்றும் வேலைநிறுத்தத்தை தூண்டினால் ஒரு வருடம் சிறை ரூபாய் 1000அபராதம்  என்றும் அறிவித்தது .அன்றைய பிரதமர் திரு .நேரு அவர்கள் வானொலி மூலம் நம் போராட்ட அறிவிப்பை கைவிட கூறி வேண்டுகோள் விடுத்தார் .சுதந்திரத்திற்கு பின் ஒரு பிரதமரே வானொலி மூலம் வேலைநிறுத்தம் குறித்து உரையாற்றியது அதுதான் முதல்முறை .இப்படி பட்ட வரலாற்று பேருண்மைகளை தன்னகத்தே அடக்கி வைத்திருக்கும் பெருமை நம் NFPE க்கு மட்டுமே உண்டு . -இது தியாக தலைவர்களின்ர த்தத்தில் வளர்க்கப்பட்ட  பாசறை . 24.11.1954 முதல் NFPTE ஆகவும் 01.01.1985 முதல் தபால் மற்றும் தொலைத்தொடர்பு தனி தனி துறை ஆனதுமுதல் NFPE ஆகவும் பணியாற்றிவருகிறோம் .அதன் பிறகு ஒன்பது சங்கங்கள் ஏழாக மாறியது .இந்த தியாக இயக்கத்தை மென்மேலும் வளர்த்திடுவோம் .சிலர் நினைப்பது போல் வந்து வந்து போவதற்கு NFPE சத்திரமல்ல -ரத்த சரித்திரம் .நினைவில் கொள்வோம் .NELLAI NFPE யின் மான்பை காப்போம் .BE PROUD BEING A MEMBER OF NFPE 
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Wednesday, February 21, 2018

                                                     வருந்துகிறோம் 
நமது அன்பிற்கினிய தோழர் வெங்கடேசன் DSM அவர்களின் தாயார் திருமதி .அருணாச்சலதம்மாள் அவர்கள் 21.02.2018 காலை11 மணியளவில் இயற்கை எய்தினார்கள் என்பதனை வருத்தத்தோடு தெரிந்துகொள்கிறோம் .அன்னாரது இறுதி சடங்கு 22.02.2018 நாளை வண்ணாரப்பேட்டையில் நடைபெறும் .தாயாரை இழந்து தவிக்கும் தோழருக்கு நெல்லைNFPE இன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம் -

அஞ்சல் எழுத்தர்களின் பிரத்யோக பிரச்சினைகள் -சவால்களை சந்திப்போம் 

  ஒரு பக்கம் டார்கெட் -ஒருபக்கம் CSI அமுலாக்கம் -இதற்கிடையில் தற்காலிகமாக மறந்துபோன கேடர் சீரமைப்பு இரண்டாம் பட்டியல் என நம்மை துரத்தும் துயரங்கள் குறைந்தபாடில்லை .டார்கெட்டையை பொறுத்தவரை மற்ற கோட்டங்களை ஒப்பிட்டு பார்க்கையில் நமக்கு தனிப்பட்ட முறையில் அதிகாரிகளின் அர்ச்சனைகள் -கோபதாபங்கள் -விடுப்பு மறுப்பு -MACP நிறுத்திவைப்பு -குற்ற பத்திரிக்கை -உருட்டல் -மிரட்டல் -என சிரமங்கள் இல்லை என்பது உண்மைநிலை 
சுழல் மாறுதலுக்கான ஆரம்பப்பணிகள் நடந்துகொண்டிருந்தாலும் கேடர் சீரமைப்பு இரண்டாம் பட்டியல் வெளிவருவதை பொறுத்துத்தான் RT இருக்கும் என்று சில கருத்துக்கள் நிலவுகின்றன .கேடர் சீரமைப்பின் இரண்டாம் பட்டியலில் மதிப்பெண் அடிப்படையில் சீனியாரிட்டி என்ற புதிய முறையினால் பல்வேறு குழப்பங்கள் நீடிக்கின்றன .உண்மையை சொன்னால் சுமார் 600 ஊழியர்களுக்கான சான்றிதழ்களை கண்டுபிடிக்க முடியவில்லையாம் .அப்படி கேடர் வருவதற்கு தாமதித்தால் அதற்கு முன்பு RT முடிந்தாலும் செப்டெம்பரிலோ அல்லது அக்டோபரிலோ கேடர் (சீனியாரிட்டி சரிபண்ணாமலே ) வந்தால் மீண்டும் ஒரு இடமாற்றங்கள் பெருமளவில் இருக்கத்தான் செய்கிறது .மாநிலநிர்வாகம் இது குறித்து என்ன முடிவுகள் எடுக்கப்போகிறது என்பதனை பொறுத்துதான் ஊழியர்களின் அச்சஉணர்வை நாம் முழுமையாக போக்கிட முடியும் .
தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Tuesday, February 20, 2018

தோழர் P .ராமகிருஷ்ணன் PA நாகப்பட்டினம் அவர்களின் மண விழா -மணமக்கள் வாழ்க பல்லாண்டு 
நெல்லை அஞ்சல் நான்கின் முன்னணி தோழர் பொன்னுசாமி (Retd )அவர்களின் புதல்வர் ராமகிருஷ்ணன் --தனலட்சுமி இவர்களது திருமணம் 19.02.2018 அன்று பாளையில் சிறப்பாக நடைபெற்றது .மணமக்களை நெல்லை கோட்ட தலைவர் தோழர் KG.குருசாமி மற்றும் தோழர் வைகுண்டராஜா PA கடையம் அகியோர்களுடன் வாழ்த்தினோம் .இவரது சகோதரி B .சுந்தரவள்ளி அவர்களும் கடலூரில் PA ஆக பணியாற்றுகிறார்கள் .அஞ்சல் குடும்பம் வாழ்க !


                               RTP ஊழியர்களுக்கு  ஒரு நல்ல தகவல்
1986 க்கு முன் INDUCTION TRAINNG முடித்த ஊழியர்களுக்கு அவர்களது பயிற்சிக்காலத்தையும் TBOP /BCR பதவியுயர்விற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளலாம் என்ற  உத்தரவு 05.05.2016  அன்று வந்தது(முன்னதாக இது 1986 க்கு பிறகு என்று இருந்தது ) .அதை தொடர்ந்து  07.02.2018  வந்த விளக்க ஆணை படி 1986 க்கு முன்  பயிற்சி முடித்து உடனடியாக பணி  கிடைக்காமல்  பிறகு பணியில் சேர்ந்த RTP  ஊழியர்களுக்கும்  சேர்த்து பயிற்சி காலத்தை பதவிஉயர்விற்கு கணக்கிடலாம் என்று தெரிவிக்கிறது  .ஆகவே 1986 க்கு முன் பயிற்சியெடுத்து 1986 க்கு பிறகு ரெகுலர் ஆன RTP தோழர்களுக்கும் 90 நாட்கள் முன்னதாக அதாவது INDUCTION TRAINING காலத்தையும் கணக்கிட்டு அதன் அடிப்படையில் TBOP மறுநிர்ணயம் செய்யப்படும் .இவ்வாறு 1982-1983 காலகட்டங்களில் RTP (RESERVED TRAINED POOL ) ஆக தேர்ந்தெடுக்கப்பட்டு 1987-1989 காலங்களில் நிரந்தரம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் .உதாரணமாக நமது நெல்லை கோட்டத்தில் தோழர்கள் A.ஆதிமூலம் தோழர் T.சுடலையாண்டி -தோழியர் ராமாத்தாள் தோழியர் ராஜகுமாரி தோழியர் குமாரி உள்ளிட்ட மற்றும் அவர்களோடு பணிபுரிந்த ஊழியர்களுக்கும் பொருந்தும் .இந்த சலுகை MACP வரை நீட்டிக்கப்பட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் .
 நன்றி .தோழமையுடன் SK ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Monday, February 19, 2018

தோழர் S .காலப்பெருமாள் அவர்களின் குடும்ப நிதி அளிப்போர் இனி அவரது துணைவியார் திருமதி முருகம்மாள் அவர்களது அஞ்சலக சேமிப்பு கணக்கு எண் 3366495367 என்ற கணக்கில் நேரிடையாக டெபாசிட் செய்யவும் .இன்றுடன் தோழர் நம்பி அவர்களின் கணக்கில் பணம் செலுத்த வேண்டாம் என அன்போடு கேட்டுக்கொள்கிறோம் .
                                                          15.02.2018 பிரிந்ததொகை 
தோழர் மாரி கண்ணு --1000
V.சுவாமிநாதன்                     200
                                                       16.02.2018
தோழியர் ஜோதி SPMS RJV       300
ராஜதுரை பாரதி                         1000
களக்காடு SO                                  1400
R .நடராஜன்SPM( ஓய்வு )           500
T.சுபாஷ் சிந்து                              1000
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 
-------------------------------------------------------------------------------------------------------------------

அன்பார்ந்த தோழர்களே !
                                    நமது கோட்டத்தில் உள்ள கணினி -பிரிண்டர்-பாட்டரி இவைகளின் செயல்பாடுகள் குறித்து RTI மூலம் கேட்ட கேள்விகளுக்கு நெல்லை கோட்ட நிர்வாகம் கொடுத்திருக்கும் பதிலை ஏற்கனேவே பதிவிட்டிருந்தோம் .மொத்தமுள்ள 299 சிஸ்டம் மொத்தமுள்ள 292 பிரின்டர்கள் 106 பாஸ்புக் பிரின்டர்கள் அனைத்தும் பயன்பாட்டில் இருப்பதாக தெரிவித்திருந்தார்கள் .ஒருசில அலுவலகங்களான முக்கூடல் -நாவல பேஸ் தவிர NET -CONNECTION பிரச்சினையும் இல்லை என்றார்கள் இதை நமது கோட்டத்தில் உள்ள DSM தோழர்கள் மூலம் உறுதிப்படுத்தி கொண்டோம் .இதை தவிர வேறு பிரச்சினைகள் இருப்பினும் உடனே தெரிவிக்கவும் .RTI யில் பதில் கிடைக்காத கேள்விகள் குறித்து மேல்முறையீடு செய்திருக்கிறோம் .அதன் நகல் உங்கள் பார்வைக்கு ..
Appeal under Section 19(1) of RTI Act, 2005


To

          Appellate Authority &
          Director Postal Services
          Southern Region (TN)
          Madurai-625002


1.   Name of the applicant              :         S.K. JACOBRAJ

2.   Address                                    :         Divisional Secretary,
AIPEU Group-C, Tirunelveli Division
Tirunelveli-627001
3.   Date of Submission of
Application :         15.01.2018

4.   Date on which thirty days from
submission of application was
over                                          :         15.02.2018

5.   Reasons for appeal                   :         Aggrieved by the response received within
Prescribed period (Copy of the reply attached)

6.   Grounds for appeal                  :         CPIO is reluctant to give complete
Information citing Section 2(j) of RTI
Act, 2005 as the information needs to be
Compiled.  The reply is wrong as the
Information is readily available in the
form of asset register, history sheets, stock
register etc., Further, he will be exposed
of his lapse, if full information is given.

7.   Late date for filing the appeal  :         14.03.2018

8.   Relief sought for                      :         Appellate Authority is requested to direct
          the CPIO to given correct and full
           Information requested vide my request
          dated 15.01.2018



Place: Tirunelveli
Date : 17.02.2018
                                                                   /S.K. JACOBRAJ/
                                                                                                Divisional Secretary
                                                                                                AIPEU Group C
                                                                                                Tirunelveli Division
                                                                                                @ Tirunelveli HO-627001


Saturday, February 17, 2018

அன்பார்ந்த தோழர்களே !
திருநெல்வேலியில் CSI அமுலாக்கம் 27.03.2018 என நமக்கும் நாள் குறித்திருக்கீறார்கள் .மற்ற கோட்டங்களை ஒப்பிடுகையில் நமக்கு நமது மண்டலத்தில் கடைசிக்கு முந்தைய கோட்டமாக அறிவித்திருக்கீறார்கள் .ROLLOUT க்கு முந்தைய பிரச்சினைகளை சரி செய்யவேண்டும் என்ற கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு ROLLOUT திட்டமிட்ட நாட்களில் நடைபெற்று வருகின்றன .DSM கள் தவிர இதர USERCHAMPION  பயிற்சி எடுத்தவர்கள் மட்டுமின்றி எடுக்காதவர்களும் மற்ற கோட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள் .இந்த சூழலில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் -கணினிகளின் வேகம் -பாட்டரி களின் செயல்பாடு -ஜெனரேட்டர் இயக்கம் -நெட்ஒர்க் இவைகளை சரிசெய்யவேண்டியது கோட்டநிர்வாகத்தின் கடமை என்றாலும் அதை கோட்ட சங்கத்திற்கும் கோட்டநிர்வாகத்திற்கும் கொண்டு செல்வது நம் ஒவ்வொருவரின் கடமை .அந்த அடிப்படையில் கோட்ட சங்கம் சார்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின்  கீழ் சில கேள்விகளை கேட்டு அதில் பதில் பெற்றுள்ளோம் .பதில் வராத கேள்விகளுக்கு மேல்முறையிடு செய்ய இருக்கிறோம் .3 தலைமை அஞ்சலகங்கள் 92 துணை அஞ்சலகங்கள் கொண்ட நம் கோட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள லேசர் பிரின்டர்கள் -பாஸ்புக் பிரின்டர்கள் -ஜெனெரேட்டர் குறித்த உங்கள் அலுவலக எதார்த்த தன்மையை கோட்ட அலுவலகத்திற்கு இன்றே எழுதிவிட்டு அதன் நகலை கோட்ட சங்கத்திற்கு அனுப்புமாறு கேட்டு கொள்கிறோம் .வருகிற 23.02.2018 அன்று நடைபெறும் மாதாந்திர பேட்டியில் விவாதிக்க ஏதுவாக 19.02.2018 குள் தகவல் தெரிவிக்கவும் .நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை .







Friday, February 16, 2018

                                       முக்கியசெய்திகள்
நெல்லை கோட்டத்தில் இன்று MACP பதவியுயர்விற்கான DPC கூடுகிறது .கன்னியாகுமரி -ராமநாதபுரம் கோட்டத்தில் உள்ள அதிகாரிகள் இதில் உறுப்பினராகவும் நமது கண்காணிப்பாளர் அவர்கள் சேர்மன் ஆகவும் உள்ள இந்த கமிட்டி MACP I II மற்றும் III பதவியுர்வுக்கு 31.03.2018 வரை உள்ள காலத்திற்கான ஊழியர்களை தேர்ந்தெடுக்கிறார்கள்
---------------------------------------------------------------------------------------------------------------------.
சுழல் மாறுதலுக்கான LSG முதல் HSG I வரையிலான காலியிடங்கள் குறித்தகோவை JCA சார்பாக 20.02.2018 அன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு நெல்லை கோட்டத்தின் வாழ்த்துக்கள் . தகவல்கள் மண்டல அலுவலகத்திற்கு சென்றுவிட்டன .விரைவில் ஏனைய ஊழியர்களுக்கான RT NOTIFICATION வெளிவரும்
-------------------------------------------------------------------------------------------------------------------------
                           கோவை கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் வெல்லட்டும்
கணக்குகளை பிடிக்க நிர்வாகம் கொ(தொ )டுக்கும் தாக்குதலை கண்டித்து கோவை JCA சார்பாக 20.02.2018 அன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு நெல்லை கோட்டத்தின் வாழ்த்துக்கள் .
                             வருடத்திற்கு ஒரு முறை
                             நடந்தால் தான் மேளா --.
                            நித்தம் நித்தம் நடந்தால்
                           அதன் பெயரென்ன தோழா ?
-------------------------------------------------------------------------------------------------------------------------
15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் நடைபெற்று வரும் 5 நாள் தர்ணா 16.02.2018 இன்றுடன் நிறைவுபெறுகிறது .போராட்டத்தில் பங்கேற்ற அனைத்து தோழர்களுக்கும் எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் .
தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா  கோட்ட செயலர்கள் நெல்லை .
--------------------------------------------------------------------------------------------------------------------
                           

Thursday, February 15, 2018

அன்பார்ந்த தோழர்களே !
  தோழர் S .காலப்பெருமாள் அவர்களின் குடும்பநல உதவி --
அலி சகோதரர்கள் 
SK .பாட்சா -S .செய்யது ஜாபார் ஷா   15000
அப்துல்காதர்                                                        200
MP.விஜயா                                                                200
ஹாஜி அலி  ME                                                   1000
சுடலைமுத்து PA TVL                                          200
KS .ஷியாம்                                                               500
சங்கரன் RETDPA                                                    200
சிவராமகிருஷ்ணன்                                        200       
சங்கரன் GDSTKK                                                   500
C .சங்கர் SPM                                                            1000
ஜெயகுமார் பன்னீர் தாஸ்                             1000
ஏஞ்சல் GDSBPM                                                          500
சிவனருள் செல்வி                                                1000
அந்தோணிசாமி                                                      1000
மூன்றடைப்பு                                                          4000
அம்பாசமுத்திரம்                                                 4500
மாரிமுத்துராஜா &அம்பிகா                         5000
கண்மணி                                                                  1000
தலைவாய்ப்பாண்டி                                           500
U.ராமசந்திரன் டோனவூர்                                 500
இறுதி பட்டியல் மற்றும் விடுபட்ட பெயர்கள் நாளை வரும் .அதிகமாக ரூபாய் 1200 இருக்கிறது .யாருடைய பெயராவது (நேரிடையாக கொடுத்தவர்கள் ) விடுபட்டிருந்தால் தெரிவிக்கவும் 
இன்னும் ஓரிரு நாளில் இந்த கணக்கை முடிக்கவிருக்கிறோம் .நாம் கொடுத்த 175000 போக இன்னும் 11000 இருக்கிறது .நமது நெல்லை கோட்ட ஊழியர்களின் பங்களிப்பை பாராட்டி ஒட்டுமொத்த தமிழக அஞ்சல் ஊழியர்கள் பாராட்டு பதிவினை
 ப திவிட்டிருக்கிறார்கள் .இது எந்த தனிப்பட்ட ஊழியருக்கு கிடைத்த பாராட்டல்ல -நம் நெல்லை ஊழியர்கள் அனைவருக்கும் கிடைத்த அங்கீகாரம் என தெரிவித்துக்கொள்கிறேன் 
arayanan Krishnaiyer A good gesture congrates
Manage
LikeShow more reactions
Reply23h
Murugadas Dindigul இனிய தொழிற்சங்க சேவை.. வாழ்த்துக்கள் ஜேக்கப்... தொடரட்டும் இது போன்ற சமூக தொழிற்சங்கப் பணிகளும்..
Manage
LikeShow more reactions
Reply23h
Nataraj Meera Jacob sir , u r really super work congrats..,
Manage
LikeShow more reactions
Reply22h
Srivenkatesh Jayaraman நன்றியை நவில
செய்த பணி
பாராட்டுதலுக்குரியது.
...See More
Manage
LikeShow more reactions
Reply22h
Kovilpatti Kannan அன்பு அண்ணன் ஜேக்கப் ராஜ் அவர்களுக்கும் உடனிருந்து பணியாற்றிய மாமா SK.பாட்சா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.. பாராட்டுக்கள்.
க.கண்ணன்
Manage
LikeShow more reactions
Reply21h
Shyam Sundar இதுதான் உண்மையான சங்கப்பணி...
Manage
LikeShow more reactions
Reply21h
Babu KC நற்பணிகள்....வாழ்த்துக்கள்...
Manage
LikeShow more reactions
Reply21h
Murugeswaran Chidambaram அருமையான பணி .. நெல்லை கோட்ட தோழர்களுக்கும் வாழ்த்துக்கள் ...
Manage
LikeShow more reactions
Reply21h
Thiagarajan Somasundaram அரிய பணி தொடரட்டும் தொண்டறம்
Manage
LikeShow more reactions
Reply20h
Jeyarajan NP Ramasamy தோழர்களுக்கு தோள் கொடுப்பதில் நெல்லை கோட்டம் சிறந்து விளங்குகிறது அருமைத்தோழர்கள் Sk.J Sk.B அவர்களுக்கு உங்களின் பணி மென்மேலும் சிறக்கட்டும் வாழ்த்துக்கள்
Manage
LikeShow more reactions
Reply20h
LikeShow more reactions
Reply20h
Natarajan Nachimuthu அரியபணியறிய. Jacopraj. அவா்கள். வழ்த்துகள்
Manage
LikeShow more reactions
Reply20h
Dastagir Babulal Jacob...You are a go-getter and a tower of strength in Nellai Kottam... Congrats... Keep it up...
Manage
LikeShow more reactions
Reply19h
LikeShow more reactions
Reply19h
Perumal Krishnamoorthy Gds தோழர்களுக்கு தோள் கொடுப்பதில் நெல்லை கோட்டம் சிறந்து விளங்குகிறது அருமை உங்களின் பணி மென்மேலும் சிறக்கட்டும்
Manage
LikeShow more reactions
Reply19h
Rajalingam Egambaram தொழிற்சங்கத்திற்கு தன்னை அர்ப்பணித்த தோழரின் குடும்பத்தார்க்கு செய்த உதவி பாராட்டுக்குரியது.வாழ்த்துக்கள் நெல்லை அஞ்சல் கோட்ட தொழிற்சங்க தோழர்கள்
Manage
LikeShow more reactions
Reply18h
Aearasu Elavarasan இது போன்ற சங்க பணியோடு சேர்ந்த சமூக பணி.ஒத்துழைப்பு நல்கிய அனைத்து தோழர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி.
Manage
LikeShow more reactions
Reply17h
Venkat Ramani தங்களின் இந்த பணி.பாராட்டதக்கது.வாழ்த்துக்கள்.
Manage
LikeShow more reactions
Reply17h
Rajendran P வாழ்த்துகள்!
Manage
LikeShow more reactions
Reply15h
Subramanian I Well-done Jacob Raj.Congratualations--IS
Manage
LikeShow more reactions
Reply15h
Naganathan Simmam பாராட்டிற்குரிய பணி!
Manage
LikeShow more reactions
Reply13h
Meena Ganapathi சகோதர ர்கள் இருவரின் ஆன்ம சாந்திக்கு இறைவனை வேண்டுகிறேன்
Manage
LikeShow more reactions
Reply12h
Meena Ganapathi தம்பி ஜேக்கப் மற்றும் தம்பிக்கு உறுதுணையாக பணியாற்றும் அனைத்து தம்பிகளுக்கும் வாழ்த்துக்கள் உங்கள் அனைவரின் ஊக்கமும் ஒற்றுமையும் வளர்க
Manage
LikeShow more reactions
Reply12h
Rajendran Dindigul தோழர் ஜேக்கப் சார் அவர்களே, உங்களின் பணி மென்மேலும் சிறக்கட்டும் வாழ்த்துக்கள்
Manage
LikeShow more reactions
Reply10h
Sethuraman Jagannivasan Great thing com Jacob
Manage
LikeShow more reactions
Reply9h
Ilangovan Murugesan மனித நேயம் வாழ்க!
Manage
LikeShow more reactions
Reply6h
Iyyakkannu Murugesan super super I'M barugur
Manage

நன்றியுடன் SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள்