அஞ்சல் மூன்றின் மாநில தலைவர் தோழர் எம் .செல்வகிருஷ்ணன் அவர்களின் பணி நிறைவு பாராட்டு மடல்
நாள் 31.05.2021 இடம் .திருநெல்வேலி HO
-------------------------------------------------------------------------------------------------------
உந்தன் பெயரின் தொடக்கமே
உன்னை அடையாளப்படுத்தும்
நீ யார் என்று !
எங்கள் என்று உன்னை என்னாலே அழைத்திட முடியாது
உம் தோழர்கள் அழைப்பது தான் சரியான பதம்
எம் செல்வ கிருஷ்ணன் வாழ்கவே !
கோவில்பட்டி எனும் கந்தக பூமி தந்திட்ட
மற்றுமொரு செம்மலரே !
கொள்கை வழி பிறழாமல் வாளர்ந்திட்ட
மிச்சமொரு தோழனே !
உன் உயரத்தை போலவே -பொறுப்புகளில்
உச்சம் தொட்டாய் --
உன் எண்ணம் போலவே
ஊழியர்களின் நலன் காத்தாய் !
பாலு -போஸ் அணியின் அனல் பறந்த
நாட்களில் நீயும் நானும் எதிரெதிரே !
தலைவர் KVS வாகைசூடிய
திண்டுக்கல் மாநாட்டிற்கு பிறகு
நாமிருவரும் அருகருகே !
அடுத்தடுத்து மாற்றங்கள் மாநிலத்தில்
அரங்கேறியபோதிலும்
அடுத்துக்கெடுத்திடும் எண்ணம் -நம்
இருவருக்குள்ளும் எழுந்ததில்லை
மீண்டும் நாங்கள் பேரவைக்குள் வந்த பொழுதும்
எங்கிருந்தாலும் வாழ்க என வாழ்த்தி நின்றாய்
கூட்டணி முறிந்திட்ட நாட்களில் கூட --நம்
தோழமையை முறியாமல் பார்த்துக்கொண்டாய்
நெல்லை கோட்ட மாநாட்டில்
நீயும் நானும் எதிரெதிர் வேட்பாளர்கள்
தேர்தலில் நான் வெற்றிபெற்றேன் -காலப்போக்கில்
தேர்ந்த அனுபவத்தால் என்னையும் நீ
வெற்றிகொண்டாய் !
பணிதனிலே ஒரே அலுவகத்தில்
பணியாற்றிட வாய்ப்புகள் கிடைத்திருந்தாலும்
அவரவர் அணி சார்ந்த காரணத்தினால்
அவ்வளவாய் அளாவிட முடியவில்லை
இருந்தாலும் NFPE எனும் பேரியக்கம்
நம்மை ஒரே கொடியின் கீழ் நின்று
உரிமை குரல் கொடுக்க ஒன்றுபடுத்தியது
ஒற்றுமையாய் நெல்லையில் இயக்கத்தை
கட்டி காத்திட வைத்தது !
கருத்தை முகத்திற்கு நேரே சொன்னோம் !
களத்தில் கூட
முதுக்கு பின்னால்
ஒருநாளும் இல்லை இல்லவே இல்லை ...
என்ற தோழமை பகிர்தலோடு வாழ்த்தி மகிழ்கின்றேன் ..
தோழமையுடன்---- SK .ஜேக்கப் ராஜ் ----