...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, June 28, 2017

                    புதுப்பிக்கப்பட்ட ராஜபாளையம் கிளைமாநாடு 
ராஜபாளையம் கிளையின் புதுப்பிக்கப்பட்ட மாநாடு 18.06.2017 அன்று ராஜபாளையத்தில்மாநில அமைப்பு செயலர் தோழர் பொன்னுசாமி அவர்கள் தலைமையில்  மிக சிறப்பாக நடைபெற்றது .மாநாட்டில் தலைவராக தோழர் A .மணிமாறன் செயலராக தோழர் S .சுப்பையா மணி நிதிச்செயலராக தோழர் T .மாரிமுத்து ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர் .தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு பேரவையின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் .
                                         நெல்லை NFPE 
---------------------------------------------------------------------------------------------------------------------

                 MACP பதவி உயர்வுக்கு மிக நன்று (VERY GOOD )அவசியம் -ரயில்வே வாரியம்உத்தரவு 

Tuesday, June 27, 2017

                                       முக்கிய செய்திகள் 
சென்னையில் இன்று கேசுவல் லேபர் கோரிக்கைகளுக்காக நடக்கும் உண்ணாவிரத போராட்டம் வெல்லட்டும் .மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு தொடர்ந்து மறுத்து வரும் சூழலில் போராட்டம் ஆர்ப்பாட்டம் ஊர்வலம் மனிதசங்கிலி என இயக்கத்தை சோர்வில்லாமல் நடத்தும் தோழர் M .கிருஷ்ணன் அவர்களின் தலைமையில் நடைபெறும் போராட்டம் வெல்லட்டும் .
------------நண்பர் பார்த்திபன் இல்ல திருமண வரவேற்பு வாழ்த்துக்கள் !
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
தமிழ் மாநில அஞ்சல் மூன்றின் முன்னாள் மாநிலச் செயலர் தோழர். V. பார்த்திபன் அவர்களின் புதல்வன் மணமகன் திரு. P. உதயசங்கர்- மணமகள் குமாரி. P. அர்ச்சனா அவர்களின் திருமண வரவேற்பு இன்று ( 25.6.17) சென்னை ராமாபுரம் MGR தோட்டம் ஜீவன் ஜோதி மகாலில் சிறப்பாக நடைபெற்றது .
பல்வேறு அரசியல கட்சிகளின் பிரமுகர்கள், மூத்த தொழிற்சங்கத் தலைவர்கள் , தமிழகமெங்கிருந்தும் அஞ்சல் தொழிற்சங்கத் தோழர்கள் கலந்து கொண்டு மணமக்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துத் தெரிவித்தனர்.
வரவேற்பு நிகழ்வில் அஞ்சல் மூன்று அகில இந்திய சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலர் தோழர். KVS , அஞ்சல் மூன்று மாநிலச் செயலர் மற்றும் அகில இந்தியத் தலைவர் தோழர் J.R., அஞ்சல் மூன்று அகில இந்திய உதவிப் பொதுச் செயலரும் தமிழ் மாநில நிதிச் செயலருமான தோழர் வீரமணி,அஞ்சல் மூன்று மாநில உதவித் தலைவர் செங்கை தோழர். G. இராமமூர்த்தி,நெல்லை கோட்ட உதவி செயலர் C .வண்ணமுத்து   மத்திய சென்னை முன்னாள் கோட்டச் செயலர் தோழர். D.இரவி, மு.தலைவர் தோழர்.R. தேவேந்திரன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .தமிழகம் முழுவதும் இருந்து வந்து வாழ்த்திய அனைவருக்கும் எங்கள் நன்றிகள் --------------

01.01.1986 க்கு முன்பாக நியமனமான PA /SA களுக்கு அவர்களது பயிற்சிக்காலத்தை TBOP /BCR பதவியுர்வுக்கு எடுத்துக்கொள்ள மேலும் ஒரு விளக்க ஆணை 

Counting of Induction Training Period for grant of Financial Upgradation under TBOP / BCR Schemes


Counting of Induction Training Period for grant of Financial Upgradation under TBOP / BCR Schemes


Monday, June 26, 2017

                      செங்கையில் சங்கமித்த முகவை 
எழுச்சிப்பாசறையா?
பேரெழுச்சி பாசறையா ?
செங்கை இன்னும் எத்தனை வெற்றி 
சங்கை முழங்கப்போகிறது ?
ஸ்ரீரங்க மகிச்சியே இன்னும் 
மனதை விட்டு துளிகூட மறையாத  நிலையில்
புது நிகழ்ச்சியில் 
உள்ளமும் உறவும் திக்குமுக்காடுகிறது 
ஆட்சியாளர்களின் அகந்தைக்கு முக்காடுஇடு கிறது 
இதுஎன்ன 
KVS -பாலு தம்பியர்களுக்கு கிடைத்த 
புது மகுடமா ? 
பேரவையே !
உன் செட்டையை இன்னும் அகலமாக்கிக்கொள் !
உன்அஸ்திவாரத்தை முன்னைவிட ஆழமாக்கிக்கொள் !
இது அரசியல் மாற்றத்துக்கு அறிகுறி -வெறும் 
பருவமாற்றம் என அலட்சியம் செய்துவிடாதீர் 
துருவங்கள் இணைவது அதிசயம் தான் 
இணைந்து கொண்டே இருப்பது ஆச்சர்யம் அல்லவா ?
இலைகள் உதிரும் 
கிளைகள் முறியும் -இங்கே 
கிளைகள் இணைகிறது 
இலைகள் துளிர்கின்றது !
பேரவையே !உனக்கென்ன 
இத்தனை வேகம் !எத்தனைஆர்வம் 
ஒட்டு மொத்த தென்மண்டலத்தையும் 
வாரி அனைத்துகொண்டாயே !
விட்டு போன மண்டலத்திலும் 
தேதி குறித்தாயாமே !   
கீர்த்தி புகழ் மூர்த்திகள் 
பேரவைக்கு கிடைத்த பொக்கிஷங்கள் 
பரமக்குடி -ராமநாதபுரம்  நம் 
பட்டியலில் மட்டுமல்ல    நம் 
பராமரிப்பில் -நம் பாதுகாப்பில் 
பேரவையின் கிளைகளை 
அதிகார வல்லுருகளிடம் இருந்து 
பாதுகாப்போம் -
பரமக்குடி ராமநாதபுரம்-பாரம்பரியமிக்க 
பழையநிலையை புதுப்பிப்போம் 
                                          நன்றி .SK .ஜேக்கப் ராஜ் 
(பரமக்குடி ராமநாதபுரம் நம் எழுச்சி பேரவையோடு செங்கல்பட்டு கோட்ட மாநாட்டில் அண்ணன் KVS -JR முன்னிலையில் இணைந்த நிகழ்ச்சிகளை குறித்து )Saturday, June 24, 2017

                                        நெல்லை கோட்ட செய்திகள் 
 நமது கோட்டத்தில் GDS ஆக பணியில் சேர்ந்துநேரடி  எழுத்தராக தேர்வு பெற்ற தோழியர்கள் ஞான சுந்தரி கலா மற்றும்  சொர்ண வித்யா அவர்களை வாழ்த்துகிறோம் .தோழியர்கள் விருப்பப்பட்டு கேட்ட இடங்கள் இருந்தும் தொலைதூரத்திற்கு மாற்றப்பட்டு நிர்வாகம் தனது கடமையை செய்திருக்கிறது .சொந்த கோட்டத்தில் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு தொலைதூரம்(நரகம்) --RULE 38 இல் வருபவர்களுக்கு நகரம் 
 இந்த புன்னியத்தை  செய்தது யார் ? யார் ? யார் ?

   RPLI இன்சென்டிவ் நமது கோட்டத்திற்கு சுமார் 1 கோடிவரை ஒதுக்கப்பட்டுள்ளது .இதுவரை கிடைக்காதவர்கள் --விண்ணப்பிக்காதவர்கள் உடனே சம்பந்தப்பட்ட ASP களை தொடர்பு கொள்ளவும் .மேலும் பழைய பிரிமியத்திற்கான இன்சென்டிவ்வை  ஒரு வருடம் வரை காத்திருக்காமல் மாதாமாதம் விண்ணப்பிக்கவும் அறிவுறுத்த படுகிறார்கள் 
                                           நெல்லை NFPE 

Friday, June 23, 2017

                                       விடை தருமா  தடை ?
கேடர் உத்தரவுகளை அமுல்படுத்துவதை நிறுத்த கோரி சென்னை GPO கிளை சார்பாக 52 தோழர்கள் தொடர்ந்த வழக்கில் அதை அமுல்படுத்த இடைக்கால தடை பிறப்பித்து இருக்கும் இன்றைய நிலை தொடரும் என  தீர்ப்பு கிடைத்துள்ளது .இந்தத்தகவல்களை தொடர்ந்து இது தமிழகம் முழுவதும் அமுலாகுமா என பாதிக்கப்பட்ட ஊழியர்கள் கேட்க தொடங்கியுள்ளனர் .இது குறித்து நாம் வழக்கறிஞர் திரு .மலைச்சாமி அவர்களிடம் கேட்ட போது இது தற்போது GPO தோழர்களுக்கு மட்டும் தான் பொருந்தும் GPO போன்ற யூனிட்டுகளில் C மற்றும் B அலுவலகங்கள் இல்லை பிறகு எங்கிருந்து LSG பதவிகளை அடையாளம் காட்டுவது மற்றும் GPO CHIEF போஸ்ட்மாஸ்டர் பரிந்துரைத்த 42 பதவிகளை GPO வில் LSG ஆக உயர்த்தலாம் என்ற கோரிக்கை நிராகரிக்கபட்டதை சுட்டி காட்டி இந்த தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது .பிற கோட்டங்களில் உள்ள குளறுபடிகளை சுட்டிக்காட்டினால் மட்டுமே அந்தந்த கோட்டங்களில் அம்முப்படுத்துவதை தடை செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்தார் .
 நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Thursday, June 22, 2017

                             நெல்லை கோட்ட செய்திகள் 
தற்சமயம் வெளிவந்துள்ளRT அறிவிப்பில் ஏதேனும் விடுதல் /சேர்த்தல் இருந்தால் தெரிவிக்கவும் .தங்கள் அலுவலக SANCTIONED STRENGTH  அடிப்படையில் காலியிடங்கள் சரியாக காட்டப்பட்டுள்ளதா என்பதனையும் உறுதி படுத்த கேட்டு கொள்கிறோம் .
              LSG பதவி இடமாறுதலில் மேல் முறையிடு செய்த தோழர்களுக்கு உத்தரவு வந்த 15 நாட்களுக்குள் புதிய பதவியில் சேர வில்லையென்றால் தானாகவே அவர்கள் DECLINE செய்ததாக எடுத்துக்கொள்ள கூடாது என்று நமது PMG அவர்களிடம் நமது மாநிலச்சங்கத்தின் சார்பாக இன்று வலியுறுத்தப்படும் என்று தெரிகிறது .
 தென்மண்டலத்தில் புனரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன .அதிகார மீறல் /வரம்புமீறல் /இலாகா விதிமீறல் இவைகளை குறித்து பல்வேறு கோட்டங்களில் இருந்து தகவல் உரிமை சட்டத்தின் கீழ் மேற்சொன்ன தகவல்களை திரட்டும் பணிகளில் பல தோழர்கள் ஈடுபட்டுள்ளனர் .முன்னதாக மதுரை MMS இல் இருந்து PTC க்கு கொடுக்கப்பட்ட வாகனம் திரும்ப பெறப்பட்டுள்ளது .
                   நன்றி தோழமை வாழ்த்துக்களுடன் 
                   SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 
        

Wednesday, June 21, 2017

Leave Entitlement of Casual Labourers with temporary status


Leave Entitlement of Casual Labourers with temporary status

                                            முக்கிய செய்திகள் 
                                     புதிய இயக்குனர் பொறுப்பேற்பு 
நமது தென்மண்டல இயக்குனராக திரு .பவன் குமார் சிங் அவர்கள் 20.06.2017 அன்று பொறுப்பேற்று கொண்டார்கள் .அவர்களை நெல்லை NFPE வாழ்த்தி வரவேற்கிறது .
                    LSG பதவி உயர்வுகளில் மேல் முறையீ டு  
 தென்மணடலத்தில் ஒரு சில கோட்டங்களில் பல சீனியர் தோழர்கள் LSG இடமாறுதலில் பாதிக்கப்பட்டுள்ளனர் .அவர்கள் அது குறித்து அஞ்சல் துறை தென்மண்டல தலைவருக்கு மேல் முறையீ டு செய்துள்ளனர் .15 நாட்களுக்குள் புதிய பதவிகளில் JOIN பண்ணவில்லை என்றால் தானாகவே அவர்கள் பதவி உயர்வை மறுப்பது போல் ஆகும் .இந்நிலையில் நமது பொறுப்பு PMG அவர்கள் 02.07.2017 முதல் 07.07.2017 வரைமதுரையில் இருக்கிறார்கள் .அதற்குள் 15 நாட்கள் முடிவடைந்து போகும் என்பதால் நாளை நமது PMG அவர்களின் கவனத்திற்கு தென்மண்டல LSG பிரச்சினைகளை எடுத்து செல்ல மாநில செயலர் அனுமதியுடன் கோவை கோட்ட செயலர் தோழர் காந்தி அவர்களிடம் கேட்டுள்ளோம் .
                      அஞ்சல் நான்கின் மாநில செயற்குழு 
 தமிழ் மாநில அஞ்சல் நான்கின் மாநில செயற்குழு நெல்லை ராஜ்மஹாலில் 22.07.2017 மற்றும் 23.07.2017 அன்று நடைபெறுகிறது .முன்னதாக 22.07.2017 சனிக்கிழமை மாலை நெல்லை அஞ்சல் நான்கின் 37 வது கோட்ட மாநாடும் நடைபெறுகிறது .இவ்விரு விழாக்கள் சிறப்புடன் அமைய நமது தோழர்கள் அனைவரும் சிறப்பான ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் .
இதற்கான நன்கொடை புத்தகங்கள் வந்துள்ளன .விருப்பமுள்ளவர்கள் எங்களிடம் கேட்டு பெற்று கொள்ளலாம் .மேலும் 01.07.2017 மற்றும் 02.07.2017 அன்று 03.07.2017 ஆகிய நாட்களில் நன்கொடை பிரிக்க கோட்டம் முழுவதும் செல்கிறோம் .ஆர்வம் உள்ள தோழர்கள் எங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம் .
 நன்றி .தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ்                                                                SK .பாட்சா 
கோட்டசெயலர் P3                                                 கோட்டசெயலர் P4

Tuesday, June 20, 2017

நெல்லையில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .P 3கோட்டத்தலைவர் தோழர் KG குருசாமி அவர்கள் தலைமை தாங்கினார்கள் .P 4கோட்ட தலைவர் தோழர் சீனிவாச சொக்கலிங்கம் அவர்கள் முன்னிலை ஏற்றார்கள் .ஆர்ப்பாட்டத்தில் 
தோழர் புஷ்பாக ரன்( P 4 )ஞானபாலசிங்( AIGDSU )
குமார் (NFPE காசுவல் ஊழியர் சங்கம்) ருக்மணி கணேசன்
 ( P 4) சிவகுமார் ( P 3 வண்ண முத்து ( P3 )பாட்சா( P 4 ) போஸ்
  ( P 3 ஆகியோர் பேசினார்கள் .
தோழர் SK .ஜேக்கப் ராஜ் சிறப்புரை யும் தோழர் நமச்சிவாயம்  
( P 3 நன்றி கூற ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது .


 இதனை தொடர்ந்து அஞ்சல் நான்கின் செயற்குழு நடைபெற்றது .கூட்டத்தில் நெல்லை அஞ்சல் நான்கின் 37 வது கோட்ட மாநாடு 22.07.2017 அன்று நெல்லை ராஜ் மஹால் (பூர்ணகலா தியேட்டர் எதிரில் )நடத்துவது என்றும் அஞ்சல் நான்கின் மாநில செயற்குழு நெல்லையில் 22.07.2017 மற்றும் 23.07.2017 சிறப்பாக நடத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது .தோழர்கள் அனைவரும் இவ்விரு விழாக்கள் சிறக்க ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டு கொள்கிறோம் .                                  நெல்லை கோட்ட செய்திகள்
LSG பதவியுயர்வில் இடமாறுதலில் மாற்றம் கேட்டு விண்ணப்பித்த ஊழியர்களின் மேல் முறையீடுகள் மண்டல அலுவலகத்திற்குச்சென்று விட்டது .நமது கோட்டத்தில் 7 ஊழியர்கள் விண்ணப்பித்திருக்கிறார்கள் .
---------------------------------------------------------------------
இன்று 20.06.2017 நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தாங்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளும் படி கேட்டு கொள்கிறோம் .அதனை தொடர்ந்து பாளையங்கோட்டையில் நடைபெறும் அஞ்சல் நான்கின் செயற்குழுவிலும் தாங்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறோம் .
நெல்லையில் காலியாகவுள்ள HSG II மற்றும் HSG I பதவிகளை தற்காலிகமாக நிரப்ப இன்னும் ஓரிரு நாட்களில் விருப்பமனுக்கள் கோரப்படவிருக்கின்றன .இது CPMG அலுவலக 2017 பெப்ருவரி கடித அடிப்படையில் நிரப்பப்படும் 
---------------------------------------------------------------------------
 விடுபட்ட நமது தோழர்கள்  KG.குருசாமி C.நமச்சிவாய மூர்த்தி அவர்களுக்கும் LSG பதவி உயர்வுகள் கொடுக்கப்பட்டுவிட்டன .நிர்வாக  தவறுகளை சுட்டிக்காட்டியஉடன்  மிக துரிதமாக செயல்பட்ட கோட்ட /மண்டல நிர்வாகத்திற்கு நன்றிகள் .
                    மாநில சங்கத்தில் இருந்து வந்த தகவல் 
திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்தில் நடந்த FSC முறைகேடுகளை விசாரித்து நீதி வழங்க கோரி நாம் நடத்திய ஆர்ப்பாட்ட கோரிக்கைகளில் வெற்றி  கிடைத்திருக்கிறது .அதன் மீதான விசாரணை முடிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவருக்கு தங்கள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கூடாது என்று விளக்க கடிதம் கேட்டு கோட்ட அலுவலகத்தில் இருந்து தாக்கீது அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .இந்த தகவல்களை கோட்ட நிர்வாகமும் மண்டல அலுவலகத்திற்கு தெரிவித்துள்ளது .
                      மினி டார்கெட்டில் நமது தோழர்களின் பங்கு 
  கடந்த மே 16முதல் ஜூன் 15 வரைக்காலத்திற்கான அறிவிக்கப்பட்ட மினி டார்கெட்டில் நமது கோட்டசங்கத்தின் அமைப்பு செயலர் தோழர் S.முத்துமாலை அவர்களின் தனிப்பட்ட முயற்சியால் 400கணக்குகளுக்கு மேல் தொடங்கப்பட்டுள்ளது என்பதனை தெரிவித்து கொள்கிறோம் .தோழர் முத்துமாலை அவர்களுக்கு நம் பாராட்டுக்கள் .
                   சென்னையில் LSG புயல் 
மிக மிக ஆய்வுக்கு பின் சென்னை மண்டலத்தில் வெளியிடப்பட்ட LSG இடமாறுதல்களில் பல நூறு தோழர்கள் சென்னையில் இருந்து வெளி கோட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர் .
          தோழமையுடன்  SK ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் 

Monday, June 19, 2017


                   நெல்லையில் சுழல் மாறுதல் அறிவிப்பு 
ஏற்கனவே கொடுத்த விருப்பகடிதங்கள் செல்லாது விருப்ப இடங்களை தேர்வு செய்யும் போது கவனமாக நிரப்புங்கள் .வேண்டாத இடங்களை 3வதாகவும் கேட்காதீர் 
விருப்ப மனுக்கள் வந்தடைய வேண்டிய கடைசி நாள் 28.06.2017
                       கோட்ட அலுவலகம்        காலியிடங்கள்          6
1.R .சுகிர்தா  2.K .மீனா 3.P .அண்ணாமலை 
                  பாளை தலைமை அஞ்சலகம்  காலியிடங்கள்  18+1
1.M .ராஜேஸ்வரி 2.A .மேபல்  3.SS .முத்துவடிவு 4.D.பிரபாகர் 5.A .சிவனருள் செல்வி 6.D.முத்துலட்சுமி 7.D.சுடலைமுத்து 
8.N .முத்துக்குமாரசாமி 9.S .ஐசக் 10.M .செல்வி 11.M .முருகலக்ஷ்மி 
                      திருநெல்வேலி தலைமை அஞ்சலகம்   8
1.S .முத்துகுமாரி 2.R .பரதன் 
                                   அம்பாசமுத்திரம் காலியிடங்கள்  5+1
1.K .அனுராதா S .S .திவ்யா 3.S .சாலமான் ஜீவராஜ் 4.N .வேல்முருகன் 
5.P .சக்திவேல் 6.N பத்மாவதி 
                               புறநகர் பகுதி 
1.P.சந்திரகுமார் 2.V.சசிகலா 3.P.பெருமாள் 4.S.வீர லட்சுமி 5.JG.அன்புராஜன் 6.S.கனகராஜேஸ்வரி 7.D.அஜிதா 8.A.கோவிந்தராஜன் 
                                     மாநகர பகுதி
1.S.ராமசந்திரன் 2.A .ஜஹாங்கீர் 3.M .ஹைருன்னிஷா பேகம் 
4.C.மந்திரமூர்த்தி 5.D.மும்தாஜ் 6.P.மைக்கேல்  
                                  அம்பாசமுத்திரம் பகுதி 
1.V.  அறம்வளர்த்த அம்மாள் 2.D.ப்ரீத்தா 3.R .ஜமுனா 4.R.சுதா ஹரி 
5.S.செல்லப்பாண்டி 6.K.ரத்ன கிருத்திகா 7.M .கீதா 

                  LSG  நிரப்பப்பட்டதால் இடமாறுதலுக்கு வந்தவர்கள் 


1 V. Hariramakrishnan,   2 S. Kasirajan,  3 C. Sivakumar,4 N. Jothi, 5 E. Suba, 6 E. Thilagavathi, 7 K. Umamaheswari,   8 K.S. Shyam,  9 S. Ramachandran,  10 N.SUJA  11 M. Nambirajan, 
12 V. Gopalakrishnan,  13 V. Sharavanan, 14 P. Selvaraj15 M. 16 R. Raghumadhavan, 17 S. Ramalakshmi, 18 A. Senthilnayagi, 19 B. Alfred Joe Samuel,
-------------------------------------------------------------------------------                                மணவிழா வாழ்த்துக்கள் 
தோழியர் ஷைனி (PA பர்கிட் மாநகரம்) ஜெபதீஸ்   அவர்களின் திருமணம் 19.06.2017 அன்று பாளையில் சிறப்பாக நடைபெற்றது .மணமக்கள் பல்லாண்டு வாழ நெல்லை NFPE வாழ்த்துகிறது .


தமிழக அஞ்சல் தொழிற்சங்க வரலாற்றில் ஒரு திருப்பு முனை --
தலைவர் NCA பேரவை --NCA எழுச்சி பேரவை இணைப்பு விழா 18.06.2017 அன்று ஸ்ரீரங்கத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது .சுமார் 400கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர் --55 தோழர்கள் உறையாற்றினார்கள் .இந்த இணைப்பின் மூலம் NFPE தமிழக அஞ்சல் மூன்று மட்டுமல்ல NFPE என்ற பேரியக்கம் தமிழகத்தில் தனி பெரும் சக்தியாக மாறும் என்பதில் ஐயமில்லை .முன்னதாக அண்ணன் பாலு அவர்களின் காலம் தொட்டு பணியாற்றி வந்த அத்தனை மூத்த தோழர்களும்  மேடையில் கவுரவிக்க பட்டனர் .தலைவர் NCA அண்ணன் பாலு ,VS அவர்களின் நினைவஞ்சலி மற்றும் மறைந்த அஞ்சல் மூன்றின் தென்மண்டல செயலர் தோழர் ஜோதிகுமார் அவர்களின் அஞ்சலியோடு கூட்டம்  தொடங்கி தொய்வில்லாமல் மாலை 3 மணி வரை நடைபெற்றது .விரிவா  னஅறிக்கை பேரவை சார்பாக வெளிவரும் .பேரவையின் புதிய நிர்வாகிகள்
தலைவர் தோழர் KVS
செயல் தலைவர் தோழர் எபனேசர் காந்தி
இணை செயலர்கள் தோழர் J.ராமமூர்த்தி --SK .ஜேக்கப் ராஜ்
மண்டல செயலர்கள்  தோழர் S சுந்தர மூர்த்தி (SR )
                                  தோழர் A .வீரமணி (CCR )
                                  தோழர் N சுப்ரமணியன் (WR )
                                  தோழர் A .மனோகாரன்(CR )
பொருளாளர்             தோழர் S.வீரன்
உதவி பொருளாளர்  தோழர் S.அய்யம் பெருமாள்
அமைப்பு செயலர்கள் தோழர் V.பார்த்திபன் (CCR )
                                    தோழர் திண்டுக்கல் சுப்ரமணியன் (SR )
                                     தோழர் புகழேந்தி (WR )
                                     தோழர் R.குமார் (CR )
இணைப்புவிழாவை மிக குறுகிய காலத்தில் சிறப்பாக செய்துமுடித்த ஸ்ரீரங்கம் கோட்ட தோழர்களுக்கும் குறிப்பாக தோழர்கள் தமிழ்செல்வன் கோட்ட செயலர் தோழர் சசிகுமார் மாநில அமைப்பு செயலர் அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .


Saturday, June 17, 2017

                               ஸ்ரீ(தரன்)ரங்கம்   அழைக்கிறது
ஸ்ரீ ரங்கம்  நம்மை அழைக்கிறது --
சீக்கிரம் புறப்பட்டு வா ! 
பிரிவால் குடியேறிய கவலை 
சிலந்திகளை அப்புற படுத்திவிட்டு 
சிங்கமென சிலிர்த்து வா !
தம்மை குறித்தோ -எம்மை குறித்தோ  என்றில்லாமல்
நம்மை குறித்து மட்டுமே நாம் பேசப்போகிறோம்
கோட்ட கிளைகளில் மீண்டும் ஒற்றுமை எனும்
வேர் ஊடுருவ போகிறது -
தோழமை மீண்டும் எங்கள்
தோழ்களில் தவழ போகிறது
உன்னை காட்டி என்னையும் ---
என்னை காட்டி உன்னையும் நடக்கும்
பேரங்களுக்கு இங்கு வாய்ப்பில்லை 
தமிழக அஞ்சல் மூன்று -மீண்டும் ஒரு
சிங்க கர்ஜனையை பார்க்க போகிறது -
தட்டிக்கழித்த நிர்வாகங்கள் இனி பழைய
சிம்ம சொப்பனங்களை சந்திக்க வேண்டியுள்ளது
அலட்சியமாய் பார்த்த அதிகாரிகள் --நம்மை
அச்சத்தோடு பார்க்கும் பழைய காலங்கள் மலரப்போகிறது
சற்று தளர்ந்து போன எங்கள் உள்ளங்களில்
உறுதி தன்னை உயிர்ப்பித்து கொள்ள போகிறது --அப்பாவிகளை
தண்டிக்க துடித்த அதிகாரங்கள் எல்லாம் இனி எப்படியாவது
தப்பித்து கொள்ள தன்னை தயார்படுத்த போகிறது
கோட்ட கிளைகளில் --எங்கள் கொடிமரங்களில்
NFPE எனும் செவ்வண்ண கொடி பட்டொளி வீசி பறக்க போகிறது
NCA தந்த அணி
அரசியல் சாரா அணி எங்கள் அணி --.
அண்ணன் பாலு கடந்து வந்த கடினமான பாதை
தலைவர் KVS செப்பனிட்டு தந்திருக்கும் அழகான பாதை
கோட்டங்களில் தோன்றியிருக்கும் புது புது தளபதிகள்
நாளைய தலைமையை ஏற்கும் எங்கள் இளைய பாசறைகள் -என்ற
எங்கள் பயணம் புதிய பாதையில் பயணிக்க போகிறது
வீறு கொண்டு வா !வெற்றி எப்போதும் நம் பக்கம் என்றாலும்
நேர் கொண்டு வா !
வாகை சூட -காவேரி கரையில்
வசந்த அழைப்புகள் காத்திருக்க
 கசந்த காலங்களை மறந்து நீயும் வா !
தம்மை பற்றியா ?எம்மை பற்றியா !என்பதனை கடந்து
நம்மை பற்றி பேச மட்டுமே என்ற நம்பிக்கையோடு வா ..வா ..வா .
                           ----------------    SK .ஜேக்கப் ராஜ் -------------------------

திருநெல்வேலி PSD கண்காணிப்பாளர் தோழர் A .சொர்ணம் அவர்களின் இல்ல மணவிழா 
மணமகள்                                              மணமகன் SPA .மிரியம் B .T ech                   D.காட்சன் DME .B .T ech
நாள் 16.06.2017 இடம் பரி .பேதுரு ஆலயம் வீ கே புரம் மணமக்களை நெல்லை NFPE மனதார வாழ்த்துகிறது
Friday, June 16, 2017

                                                      வாழ்த்துகிறோம் 
நெல்லை அஞ்சல் பொருள் கிடங்கு --கண்காணிப்பாளர் திரு A .சொர்ணம் அவர்களின் இல்ல மண விழா சிறக்க வாழ்த்துகிறோம் 
மணமகள்                                              மணமகன் 
SPA .மிரியம் B .T ech                   D.காட்சன் DME .B .T ech
நாள் 16.06.2017 இடம் பரி .பேதுரு ஆலயம் வீ கே புரம் 

இல்லறம் எனும் இன்ப சோலையில் 
இனையும் இனிய தம்பதிகளே !
நல்லறம் பேனும் குடும்ப பின்னணியில் 
வளர்ந்த இளையவர்களே !
சொல்லறம் காத்து -சொல்லினில் சுவைகூட்டி
சோர்வறியாத அண்ணன் சொர்ணம் பெற்றெடுத்த 
மிரியம் எனும் அதிசயமே !
கண்ணின் கதகதப்பில் -
அன்பின் அரவணைப்பில் 
ஆசையினால் அடைகாத்து 
பாசத்தால் பராமரித்த நந்தவனமே !
உன் இல்லற வாழ்வு சிறக்க வாழ்த்துகிறோம் ...
உன் தந்தையின் திருமணத்திற்கும் 
வாழ்த்துப்பா பாட வாய்ப்பு கிடைத்தது --
உன்னை வாழ்த்தவும் புது வார்த்தை கிடைத்தது ..
வாழ்க ! பல்லாண்டு 
------------------------------------------------------------------------------------------------------
----அண்ணன் சொர்ணம் இன்றைய SP PSD
அன்று நமது கோட்ட சங்க பொருளாளர் 
1993 வீ கே புரத்தில் அவரது திருமண விழாவில் நமது கோட்ட சங்கம் சார்பாக வாசித்தளித்த கவிதை வரிகளில் சில ........
தானாக வந்து தமயந்தியிடம் 
சொல்லும் அளவிற்கு எங்கள் 
நளன் இன்னும் பக்குவப்படவில்லை -.................
விருந்துகள் பல சென்றாலும் 
விரதத்தில் வாழ்ந்துவிட்ட விசித்திர முனிவன் ...............
பசுமை மாறா நினைவுகளோடு SK .ஜேக்கப் ராஜ் 

Thursday, June 15, 2017

அன்பார்ந்த தோழர்களே !
   மத்திய அரசு நமது கோரிக்கைகளை எட்டி உதைக்கிறதா ? தட்டி கழிக்கிறதா ?
      ஒவ்வொரு வாரமும் செய்தி சேனல்கள் தவறாமல் ஒரு செய்தியை சளைக்காமல் சொல்லிக்கொண்டு வருகிறது .அதுதான் மீண்டும் மத்திய அரசு ஊழியர்களுக்கு யோகம் ! படிகள் அனைத்தும் உயர்த்தப்படும் !இந்த அமைச்சரவை கூட்டத்தில் வெளியாகும் என்று பரப்பிக்கொண்டு வருகிறது .நாமும் நமது பங்கிற்கு அதை நம்பவும் முடியாமல் நமது தோழர்களுக்கு ஒரு ஆசை வார்த்தைகளை கூறி கொண்டு வருகிறோம் .அமைச்ச கூட்டத்தின் ஆய்வில் இருக்கிறது என்பதெல்லாம் எந்தளவிற்கு உண்மை என்று தெரியவில்லை .அதை உறுதி படுத்தவேண்டிய கடமை ஊழியர் சங்கங்களுக்கு இருக்கிறது .ஒருவேளை மத்திய அரசு ஊழியர் மஹா சம்மேளன செயல்பாடுகள் அஞ்சல்துறையோடு நின்றுவிட்டதா ?இதர துறைகளில் இதன் தாக்கம் ஏன் பெரிதாக தெரியவில்லை என்பதையெல்லாம் நாம் சிந்திக்க வேண்டிய ஒன்று .இல்லையென்றால் மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளனத்தை வழிநடத்துவது --NJCA சார்பாக பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வது ஓய்வு பெற்ற நிர்வாகிகள் என்பதால் மைய அரசு அவர்களை ஊதாசின படுத்துகிறதா என்றும் தெரியவில்லை .
               தானாய் மாறும் என்பதெல்லாம் பழைய பொய்யடா !என்ற வரிகளே நம் நினைவுக்கு வருகிறது .இன்னும் எத்தனை காலம் தான் ............
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை .

அன்பார்ந்த தோழர்களே !
20.06.2017 ஆர்ப்பாட்டத்தை வெற்றிபெற செய்வோம் .அதனை தொடர்ந்து நடைபெறும் அஞ்சல் நான்கின் கோட்ட செயற்குழுவிலும் முழுமையாக பங்கேற்போம் --திருநெல்வேலியில் நடைபெறவுள்ள தபால் காரர் சங்கத்தின் மாநில செயற்குழுவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம் --தாராளமாய் பொருளுதவிகளை அளிப்போம்

Wednesday, June 14, 2017அன்பார்ந்த தோழர்களே !
                    ஆர்ப்பாட்டம் --20.06.2017
நமது சம்மேளன அறைகூவலை ஏற்று வருகிற 20.06.2017 அன்று கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது .தாங்கள் அனைவரும் தவறாமல் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் .


நாள் 20.06.2017 செவ்வாய்
நேரம் மாலை 6 மணி
இடம் பாளையம்கோட்டை
கூட்டு தலைமை   KG.குருசாமி P 3
                              A .சீனிவாச சொக்கலிங்கம் P 4
கோரிக்கைகள்


.1.அஞ்சல் பகுதியில் காலியாகவுள்ள அனைத்து இடங்களையும் நிரப்ப வேண்டும் .

2.GDS ஊழியர்களுக்கான கமேலேஷ் சந்திரா பரிந்துரையை உடனே அமுல்படுத்த வேண்டும் 
3.அஞ்சலகத்தில் புகுத்தப்படும் புதுப்புது திட்டங்களின் பெயரில் ஊழியர்களை துன்புறுத்த கூடாது 
4.பார்ட் டைம்  கன்டிஜென்ட் ஊழியர்களுக்கு 01.01.2006 மற்றும் 01.01.2016 தேதிகளில் அமுல்படுத்தப்பட்ட ஊதியக்குழு அடிப்படையில் ஊதியம் வழங்கு 
5.அஞ்சல் துறையில் தனியார் மயத்தை புகுத்தாதே 
6.அஞ்சலகங்களுக்கு வாரம் 5  நாள் வேலைநேரத்தை அமுல்படுத்த !எல்லா சனிக்கிழமைகளிலும் பொது விடுமுறையாக்கு 
7.NPS திட்டத்தை கைவிடு -குறைந்தபட்சம் 50 சதம்( LASTPAY DRAWN )பென்ஷன் என்பதனை உறுதிப்படுத்து 
 உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் முதற்கட்ட ஆர்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்க கேட்டு கொள்கிறோம் .
                                    தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ்                                       SK .பாட்சா    
கோட்ட செயலர் P3                             கோட்ட செயலர் P4  
-----------------------------------------------------------------------------
               நெல்லை அஞ்சல் நான்கின் செயற்குழு 
நாள் 20.06.2017 நேரம் மாலை 6.30 மணி 
இடம் பாளையங்கோட்டை 
தலைமை தோழர் A.சீனிவாச சொக்கலிங்கம் 
பொருள் 1.நெல்லை கோட்ட 37 வது கோட்ட மாநாடு நடத்துவது சம்பந்தமாக 
              2.மாநில சங்கத்தின் வேண்டுகோளின் படி நெல்லையில் ஜூலை மாதம் மாநில செயற்குழு நடத்துவது சம்பந்தமாக 
              3.இன்னும் பிற (தலைவர் அனுமதியுடன் )
                  அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு தங்களின் மேலான ஒத்துழைப்பை நல்கும் படி கேட்டு கொள்கிறோம் .
                           தோழமையுடன் 
                                                               SK .பாட்சா 
   12.06.2017                              கோட்ட செயலர் அஞ்சல் நான்கு நெல்லை 
--------------------------------------------------------------------.

Tuesday, June 13, 2017

                                                         முக்கிய செய்திகள்
LSG உத்தரவுகள் மாநிலம் முழுவதும் முழுமையாக )வந்தும் வராத நிலையில் நேற்று 12.06.2017 அன்று கோவில்பட்டி கோட்டத்தில் இடமாறுதலை அமுல்படுத்திட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .(SENIORITY குழப்பங்கள் உள்ள நிலையில் )ஏற்கனேவே C கிளாஸ் அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் அருகிலுள்ள பெரிய அலுவலகங்களுக்கு /தலைமை அஞ்சலகங்களுக்கு தற்காலிகமாக இணைக்கப்பட்டுள்ளனர் .
 நமது கோட்டத்தில் புதிதாக அடையாளம்காணப்பட்ட HSG II மற்றும் HSG I பதவிகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன .
                                        HSG I அலுவலகங்கள் /பதவிகள்
                                              HSG II அலுவலகங்கள் /பதவிகள்
    HSG II /HSG I பதவிகளை தற்காலிகமாக நிரப்பிட மாநில நிர்வாகத்தின் வழிகாட்டுதல் ஆணை 
2800GP பெறுபவர்கள் LSG பதவியிலும் 4200GP பெறுபவர்கள் HSG II பதவிகளிலும் 4600GP பெறுபவர்கள் HSG I பதவிகளிலும் OFFICIATING பார்க்க தகுதி உள்ளவர்கள் .
 தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Monday, June 12, 2017

AGITATIONAL PROGRAMME
Phase- I           – Mass Dharna in front of all Divisional offices.
Date -              -  20.06.2017
Phase – II        - Mass Dharna in front of all Circle/Regional offices.
Date –             - 12.07.2017
Phase – III       - Mass dharna in front of Postal Directorate, Dak Bhawan, New Delhi.
Date –                         - 26.07.2017
Phase IV          - One day nationwide strike on 23.08.2017 (Formal notice of the strike will be served later.)
CHARTER OF DEMANDS
1.    Filling up of all vacant posts in all cadres of Department of Posts i.e. PA, SA, Postmen, Mailguard, Mailmen, Drivers and Artisans in MMS,MTS, PACO, PASBCO, Postal Accounts and GDS.
2.    Implementation of positive recommendations of GDS committee Report. Grant of Civil Servant status to GDS.
3.    Membership verification of GDS and declaration of result of regular employees membership verification.
4.    Stop all types of harassment and victimization in the name of new schemes and technology induction and under contributory negligence factor and Trade Union victimization.
5.    Payment of Revised wages and arrears to the casual, part-time, contingent employees and daily rated mazdoors as per 6th& 7th CPC and settle other issues of casual labourers.
6.    Stop Privatization, Contractorization and outsourcing.
7.    Implement Cadre Restructuring for left out categories i.e. RMS, MMS, PACO, PASBCO, Postmaster Cadre Postal Accounts etc. and accept the modifications suggested by Federation before implementation of cadre restructuring in Postal Group ‘C’.
8.    Provision of CGHS facilities to Postal Pensioners also as recommended by 7th CPC.
9.    Withdraw NPS (Contributory Pension Scheme). Guarantee 50% of last pay drawn as minimum pension.
10.  Implement five days week working for operative staff in the Postal department.

தோழர்களே ! தோழியர்களே !
 LSG பதவி உயர்வு பெற்ற அனைத்து தோழர்களையும் வாழ்த்துகிறோம் .உடல்நிலை மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக யாராவது பதவி உயர்வை மறுக்கும் நிலை ஏற்பட்டால் அவர்கள் இந்த படிவத்தை நிரப்பி இரண்டு காப்பிகள் அனுப்பவும் .

Declaration (in duplicate)

1.       I,------------------------------------------------------------------- hereby
unconditionally decline the promotion to the cadre of LSG  offered to me vide
Memo No_LSG -STA/80-61 dated 09.06.2017 of Postmaster General , Southern Region (TN),Madurai 625002.
2.       I am aware that on my declining the promotion, I will forfeit the
seniority and I will not be eligible for consideration for promotion to LSG  cadre
for a period of one year subject to eligibility.

Station  : -------------------------
Date      -----------------                                                                 -------------------------------

Declaration (in duplicate)

1.       I-------------------------------------------------------------------hereby
unconditionally decline the promotion to the cadre of LSG  offered to me vide
Memo NoLSG -STA/80-61 dated 09.06.2017 _of Postmaster General , Southern Region (TN),Madurai 625002.
2.       I am aware that on my declining the promotion, I will forfeit the
seniority and I will not be eligible for consideration for promotion to LSG  cadre
for a period of one year subject to eligibility.

Station  : ---------------------------------                                -------------------------------------------
Date      : ------------------------

 ------------------------------------------------------------------------------------------------------

                  அம்பாசமுத்திரம் கிளை சங்க மாநாடு 
11.06.2017 அன்று நடைபெற்ற அம்பாசமுத்திரம் கிளைசங்க மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளை கோட்ட சங்கம் வாழ்த்துகிறது .நமது கோட்டசங்கத்தின் சார்பாக கலந்துகொண்ட கோட்ட உதவி செயலர் தோழர் G.சிவகுமார் அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .
தலைவராக தோழர் கரிசல்குயில் கிருஷ்ணசாமி 
செயலராக  தோழர் RVT.பாண்டியன் 
பொருளாளராக தோழர் கந்தசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர் .அம்பை மீண்டும் புதிய அவதாரம் எடுக்க வாழ்த்துக்கள் .Friday, June 9, 2017


LSG  பதவியுயர்வு பட்டியல் நேற்று நமது மண்டல அலுவலகத்தால் வெளியிடப்பட்டுள்ளது .கோட்ட அலுவலகத்தின் தனியான உத்தரவு வந்தவுடன் தோழர்கள் தங்களது புது பதவிகளில் சேரலாம் .இடமாறுதலில் குறைகள் இருப்பின் PMG அவர்களுக்கு மேல்முறையிடு செய்யலாம் .பதவி உயர்வே வேண்டாம் என நினைப்பவர்கள் இந்த உத்தரவு கிடைத்த 15 நாட்களுக்குள் மறுதலிக்கலாம் .
மேல்முறையிடு மற்றும் மறுப்பவர்களுக்கு கோட்ட சங்கம் வழிகாட்ட தயாராக உள்ளது என்பதனை தெரிவித்து கொள்கிறோம் .நமது கோட்டத்தில் தொலைதூர இடங்களுக்கு மாற்றப்பட்ட தோழர்களில் பெரும்பாலோனோர் பணி மூத்ததோழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .இருந்தாலும் எந்த பார்முலா பின்பற்றப்பட்டது என்றும் நடைமுறைப்படுத்துவதற்க்கு முன்னால் எந்தெந்த பதவிகள் LSG என்று மறைத்தது மௌனித்தது நெல்லை கோட்ட நிர்வாகத்தின் மாபெரும் அலட்சியம் ஆகும் .நிச்சயம் ஊழியர்களின் குறைகள் மாநிலச்சங்க துணையோடு நிவிர்த்தி செய்யப்படும் என்று உறுதி கூறுகிறேன் .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை


Thursday, June 8, 2017

இயக்குனர்களுக்கான இடமாற்ற உத்தரவுகள் -

Transfers and Postings in the Junior Administrative grade (JAG) of Indian Postal Service, Group 'A'Wednesday, June 7, 2017

                                         கேடர் விருப்பமனுக்கள் .....
ஏற்கனவே அனைத்து கோட்டங்களிலும் முறையாக பதவிகள் அடையாளம் காணப்பட்டு விருப்பமனுக்கள் பெறப்பட்டபோதிலும்  நமது கோட்டத்தில் நமது தொடர் தலையீ ட்டின் பேரில் 25.05.2017 அன்று அவசர அவசரமாக ஊழியர்களிடம் விருப்பமனுக்கள் பெறப்பட்டு அனுப்பப்பட்டுள்ளன  .அதில் நேற்று மீண்டும் 14 தோழர்களுக்கு 51 இடங்களை குறிப்பிட்டு விருப்ப இடங்களை தேர்வு செய்ய சொல்லி வந்திருக்கிறது (30 C கிளாஸ்  16 B கிளாஸ் மற்றும் அம்பை  களக்காடு  நாங்குநேரி மேலப்பாளையம் அம்பை CPC ).இதில் பல மூத்த தோழர்களும் அடங்குகிறார்கள் விசாரித்து பார்த்ததில் ஒருவர் கொடுக்கும் முதல் மற்றும் இரண்டாம் இடங்கள் கொடுக்க முன்னுரிமை வழங்க படுவதாகவும் அப்படி முடியாத பட்சத்தில் அவருடைய மூன்றாம் இடத்தில் ஜூனியர் ஒருவர் சீனியரின் மூன்றாம் இடத்தை  முதலாம் விருப்பமாக தெரிவிக்கும் பட்சத்தில் ஜூனியருக்கு முன்னுரிமையும் சீனியருக்கு மூன்றாவது இடமும்  கிடைக்க வாய்ப்பில்லாமல் போனதாகவும் தெரிகிறது . (இதோ நேற்று வந்த பட்டியல் )
Please obtain the willingness from the following officials and submit to this office by return mail.
The officials may be instructed to select at least three place of postings from the list attached herewith.
S/s
1. M.P. Vijaya, PA, Palayankottai HO
2. I. Maharajan, SPM, Parappadi SO
3. N. Shenbagavalli, PA, Maharajanagar SO
4. E. Ezhilarasi, PA, Tirunelveli HO
5. B. Palaniachi, PA, Pettai SO
6. R. Rajakumari, PA, Maharajanagar SO
7. K.R. Kannan, PA, Tirunelveli HO
8. K.G. Gurusamy, PA, Palayankottai HO
9. M. Balasubramanian, PA, Collectorate SO
10. A. Rajadurai Bharathi, PA, Tirunelveli HO
11. C. Namachivayamoorthy, PA, Tirunelveli HO
12. P. Subramanian, PA, Palayankottai HO
13. G.R. Thulasiraman, Pa, Palayankottai HO
14. S. Sudalaimuthu, PA, Tirunelveli Town SO
 LSG பதவிகளில் பணியில் சேரும் நாள் தான் அடுத்து வரும் பதவி உயர்வுகளுக்கு சீனியாரிட்டி யை நிர்ணயிக்கும்  என்பதால் மாநிலம் முழுவதும் ஒரே நாளில் இடமாறுதல் உத்தரவுகள் வெளிவர வேண்டும் .ஏற்கனவே HSG II இடமாறுதல்களில் ஒவ்வொரு மண்டலமும் தனித்தனியாக உத்தரவுகளை பிறப்பித்ததால் மாநிலம் முழுவதும் பல மூத்த தோழர்கள் HSG I பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளனர் .
           தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

                                           முக்கிய செய்திகள் 
 கேடர் சீரமைப்பின் அடுத்த கட்டமாக HSG I (NFG ) தமிழகத்தில் உள்ள 26 இடங்களுக்கான பதவிகளை நிரப்ப 26 ஊழியர்களின் APARS உடன் சிறப்பு அறிக்கையை 07.06.2017 குள் அனுப்ப மாநில நிர்வாகம் கேட்டுள்ளது .இதில் நமது கோட்டத்தை சார்ந்த தோழர்கள் Vகடற்கரையாண்டி தோழியர் R .விக்டோரியா தோழர் N .ராமச்சந்திரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் .அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள் .

Tuesday, June 6, 2017

                                              முக்கிய செய்திகள் 
அரசு ஊழியர்களின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளின் வழக்கை  6 மாத காலத்திற்குள் முடிக்க வேண்டும் .நடைமுறையில் எந்த விதமான காலஅளவீடுகளும் வரையறுக்காத நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .
----------------------------------------------------------------------------------------------------------------------
  போலி ஜாதி சான்றிதழ் கொடுத்து அரசு பணிகளில் சேர்ந்தது குறித்து தகவல் கிடைத்தவுடன் ஒழுங்கு நடவடிக்கை அதிகாரி விசாரணையை தொடங்கவும் குற்றம் நிரூபிக்கப்படும் நிலையில் அந்த ஊழியரை டிஸ்மிஸ் செய்யவும் மேலும் ஒரு வலியுறுத்தல் ஆணை வந்துள்ளது Fake Caste Certificate – Compilation of information about appointments made on the basis of fake/ false caste certificates and follow up action taken thereonNo.36027/1/2017-Estt. (Res)
----------------------------------------------------------------------------------------------------
வாழ்த்துகிறோம் 
தோழியர் பிரமிளா PA பத்தமடை அவர்களின் புதல்வன் CBSE 10ம் வகுப்பு தேர்வில் 10/10  என்ற சாதனையை  தொட்டதற்கு நெல்லை NFPE வாழ்த்துகிறது .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

-------------------------------------------------------------------------------------------------------------