...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, December 31, 2018

                     கரிசல் குயில் கிருஷ்ணசாமி SPM மேலச்செவல் அவர்களின் பணி ஓய்வு விழா --31.12.2018  

குயிலே --இனிதான் -உன் 
குரல் இன்னும் வலிமையாக ஒலிக்கப்போகிறது -ஆம் 
உன் அழைப்பிதழில் அச்சிட்ட மாதிரி 
விட்டு விடுதலை ஆகி நிற்பாய் --இந்த 
சிட்டு குருவியை போல --

ஆரம்ப நாட்களில் -அஞ்சல் அரங்கில் 
இரண்டு குயில்கள் -
ஒன்று சந்திரசேகர் எனும் இசைக்குயில்
 சங்கரன்கோயிலோடு  நிறுத்திக்கொண்டது 
கரிசல் குயில் மட்டும் தான் 
எல்லையைத்தாண்டி பறக்க தொடங்கியது 
பட்டி தொட்டியெல்லாம் அதன் புகழ் 
சிறக்க தொடங்கியது 


அஞ்சல் துறைக்கு கிடைத்திட்ட 
அரிய கலை பொக்கிஷங்களில் நீயும் ஒருவன் 
அழியா புகழ் கொண்ட கலைஞர்களின் 
அணிவகுப்பினில் நீ தான் முதல்வன் 

நரிகுளம் எனும் நந்தவனம் 
தந்திட்ட நாடறிந்த குயிலே !
எட்டுத்திக்கும் உன் குரல் ஒலித்து கொண்டிருந்தாலும் 
ஏதுமறியா சராசரி ஊழியனைப் போலல்லவா 
அஞ்சலக பணிகளில் தொடர்ந்தாய் ! 

கலை இலக்கிய இரவுகளில் --விடியவிடிய 
சாமான்யர்களும்  விழித்திருந்த து -இடையிடையே 
உன் காந்த குரலை  கேட்பதற்கு தான் 
அரசுத்துறை எனும் இரும்பு வளையத்தை தாண்டி 
அரசியல் அரங்கிலும் உன் தடம் பதிந்தது 
ஆச்சர்யம் தான் -அதிசயம் தான் 

கோவில்பட்டி எனும் கொள்கை பட்டறையில் 
செதுக்கப்பட்ட சிற்பங்களில் நீயும் ஒருவன் 
கொண்ட கொள்கைகளில் நமக்குள் சில 
வேறுபாடுகள் என்றிருந்தாலும் 
விமர்சனங்கள் என்ற பெயரில் ஒருபோதும்  நீ 
காயப்படுத்திடவில்லை -

அஞ்சல் பொருள் கிடங்கிற்கு நீ 
அடியெடுத்து வைத்தபிறகுதான் நமக்குள் 
அறிமுகம் ஏற்பட்டது -
அப்பொழுது 1992 சாதி பிரச்சினையில் 
நெல்லை பற்றி எரிந்த நேரம் 
நான் எழுதி கொடுத்து -
நீங்கள் மெட்டுப்போட்டு ஒரு மேடையில் 
பாடிய வரிகள் எனக்கு நினைவுக்கு வருகிறது 

திருநெல்வேலி அல்வா கூட -இப்ப 
ரொம்ப கசக்குது --அதை 
பொதிந்து தந்த காகிதத்தில் 
ரத்த வாடை எடுக்குது 
பள்ளிக்கூட சண்டைகூட 
படு கொலையில் முடியுது 
அங்கே ஒன்னு இங்கே ஒன்னு என 
விக்கெட்டு போல வீழுது 
பழைய நிலைமை திரும்பணும் -முதலில் 
பஸ்சு ஒழுங்கா ஓடணும் 

உங்களிடம் 
கொள்கையின் பிடிப்பை கற்று கொண்டோம் 
போராட்ட பிடிப்பினை கற்று கொண்டோம் 
அணி மாட்சியங்களை கடந்து 
ஆரோக்கிய நட்பை கற்று கொண்டோம் 

அஞ்சல் துறையில் பணியாற்றி -இன்று 
அரசியல் மற்றும் சினிமாக்களில் மின்னும் 
தமிழ்செல்வனாய் --வேலு ராமமூர்த்தியாய் 
கிருஷ்ணசாமி எனும் இந்த கரிசல் குயிலும் 
புகழ் வானில் சிறகடிக்க வாழ்த்துகிறோம் 
               தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 
Thursday, December 27, 2018

அன்பார்ந்த தோழர்களே !
   அஞ்சல் நான்கின் 31 வது மாநில மாநாடு 29.12.2018 மற்றும் 30.12.2018 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது .நெல்லையில் இருந்து 
தோழர்கள் SK .பாட்சா  சீனிவாச சொக்கலிங்கம் T .புஷ்பாகரண் G.சாக்ரடீஸ் K .முருகேசன் P செல்வின் துரை S .இசக்கி  
.P .பாலகுருசாமி மகேந்திரன் T சுபாஷ் சிந்து மற்றும்  SK .ஜேக்கப் ராஜ் D.பிரபாகர் K .குத்தாலிங்கம் KG.குருசாமி KSYசாகுல்  ஞானசேகரன் 
ஆகியோர் செல்கின்றனர் .நெல்லையில் இருந்து புறப்படுகிற தோழர்கள் 28.12.2018 இரவு 10.40 மணி 22667 கோவை விரைவு வண்டிக்கு வரவும் .சார்பாளர் /பார்வையாளர் கட்டணம் ரூபாய் 1100 .
                                 கோவை மாநாடு வெல்லட்டும் 
கோவை மாநாடு வெல்லட்டும் --
கொள்கை மறவர்கள் கோலோச்சும் -
கோவை மாநகரில் நடக்கும் மாநாடு 
வெல்லட்டும் -புதிய வரலாற்றை சொல்லட்டும் 

காக்கி சட்டைக்கென்று -தனி ஒரு 
கர்வம் உண்டு -இங்கே 
கருப்பு மற்றும் சிகப்பு தலைவர்களின் 
கருத்தொற்றுமை உண்டு 

வெள்ளைக்காரன் காலத்திலேயே 
வீறுகொண்டு போராடிய வரலாறு உண்டு 
 84 ளில் தனித்து நின்று வேலைநிறுத்தம் செய்திட்ட 
வெற்றி சரித்திரம் இங்கு உண்டு 

அடுக்கடுக்கான தாக்குதல்களை -மாநில 
அஞ்சல் நிர்வாகம் தொடுத்த போதெல்லாம் 
அடுத்தடுத்து களம்கண்டு -ஆபத்துகளை 
அணைபோட்டு தடுத்திட்ட ஆற்றல் உண்டு 

அடுத்தவன் வேலையை (IPPB ) செய்வதற்கு 
அதிகாரம் தந்தது யார் என்று 
ஆவேச குரல் கொண்டு அதிகாரிகளை 
அச்சுறுத்திய நிகழ்வுகளும் நினைவில் உண்டு 

சம்பளக்குழு செய்திட்ட சதி ஆணையை 
உச்சநீதிமன்றம் வரை சென்று உடைத்து 
லட்சங்களை ஊழியர்களுக்கு பெற்று தந்த 
பேராற்றல் அஞ்சல் நான்குக்கு உண்டு 

மிச்சமிருக்கும் கோரிக்கைகளை வென்றெடுக்க -தலைவர்கள் 
விட்டுச்சென்ற ஒற்றுமையை பற்றி கொண்டு 
வெற்றி கீதம் பாட 
வீறு கொண்டு வா என் தோழா !
                                  தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Monday, December 24, 2018

அனைவருக்கும் எங்கள் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் 
   No man can serve two masters .for eighter he will hate the one and  love the other 
 இரண்டு எஜமானர்களுக்கு  ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது .ஒருவனைபகைத்து மற்றவனை சிநேகிப்பான் .
உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள் .ஒருவன் உன்னை வலது கண்ணத்தில் அறைந்தால் மறு கண்ணத்தையும் திருப்பி காட்டு 
(WHOSOEVER SHALL SMITE THEE ON THY RIGHT CHEEK TURN TO HIM THE ALSO ) என்ற சாகா அருளுரைகளை தனது மலைப்பிரசங்கத்தின் மூலம் அருளியவர் . யுத  இனத்திற்கு ராஜாவாக பிறந்தவர் யூதர்களாலே சிலுவையில் அறையப்பட்டவர் .


அன்பார்ந்த தோழர்களே !
திருநெல்வேலி மாநகரமும் CGHS (CENTARAL GOVERNMENT EMPLOYEES HEALTH SCHME ) எனும் திட்டத்திற்கு தகுதிபெறுகிறது .இதுகாறும் இயங்கிவந்த  திருநெல்வேலி தபால் மருத்துவமனை 01.01.2019 முதல் CGHS க்கு மாறுகிறது .
CGHS வரையறுக்கப்பட்ட எல்கைக்குள் குடியிருப்பவர்கள் இந்த சலுகைகளை பெறலாம் .
யார் யாரெல்லாம் இதற்கு தகுதி படைத்தவர்கள் 
1.CGHS எல்கைக்குள் குடியிருக்கும் அனைத்து மத்திய அரசு ஊழியர்கள் --ஓய்வூதியர்கள் 
2.நடப்பு மற்றும் முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினர்கள் 
3.கவர்னர் மற்றும் முன்னாள் கவர்னர்கள் 
4.சுதந்திரபோராட்ட வீரர்கள் 
5.தன்னாட்சி நிறுவன ஊழியர்கள் 
6.ரயில்வே ஊழியர்கள் 
பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு மாத ஊதியத்தில் சந்தா பிடித்தம் செய்யப்படும் .ஓய்வூதியர்களுக்கு ஆண்டு சந்தா அல்லது வாழ்நாள் சந்தா (பத்து ஆண்டுகளுக்கு ) இவைகளில் ஒன்றை அவர்கள் தெரிவு செய்யலாம் 
லெவெல் 1-5  GP  2800 வரை  மாதம் -250
லெவல்      6    GP  4200                               - 450
லெவல்      7-11  GP 4600-6600 வரை    -650         
லெவல்     12        GP  7900                      -   1000 
பயன்கள் 
1.அனைத்து அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறலாம் 
2.CASHLESS  ட்ரீட்மெண்ட் 
3.உள் மற்றும் புற நோயாளிகளுக்கான சிகிச்சை 
4.CMO பரிந்துரைத்தால் வெளி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று   கொண்டதற்கு REIMBURSEMENT வசதி 
5.ஆயுர்வேதிக் --ஹோமியோபதி -சித்தா -யுனானி மருத்துவ வசதிகள் 
குடும்ப உறுப்பினர்கள் 
மகன் --திருமணம் ஆகாத --அல்லது 25 வயது -அல்லது சுய சம்பாத்தியம்   இவைகளில் எது முதலோ அது வரை 
மகள்  -சுய சம்பாத்தியம் அல்லது திருமணம் வரை   இவைகளில் எது முதலோ அது வரை 
 தற்சமயம் நமது மருத்துவமனை கட்டிடத்திலே இயங்கும் 
              ஒரு தரமான மருத்துவ சிகிச்சை நம் ஊழியர்களுக்கும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் நிச்சயம் கிடைக்கும் .
நன்றி 
தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 
                                            


Saturday, December 22, 2018

                                      நெல்லை கோட்ட செய்திகள் 
நெல்லையில் அஞ்சல் மூன்று மற்றும் அஞ்சல் நான்கு சங்கங்களின் கூட்டு பொதுக்குழு கூட்டம் தோழர்கள்
 T .அழகுமுத்து -தலைவர் P 3சீனிவாசசொக்கலிங்கம் தலைவர்
 P 4 அவர்கள் தலைமையில் நடைபெற்றது .செயல் தலைவர் தோழர் N .கண்ணன் அவர்கள் பொதுக்குழுவை தொடங்கிவைத்து தனது ஆலோசனைகளை வழங்கினார்கள் .கூட்டத்தின் முக்கிய முடிவுகள் 
1.அஞ்சல் நான்கின் மாநில மாநாடு --வருகிற டிசம்பர் 29மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் அஞ்சல் நான்கின் மாநில மாநாட்டிற்கு அஞ்சல் நான்கின் மாநில உதவி தலைவர் தோழர் SK .பாட்சா அவர்கள் தலைமையில் 19 தோழர்கள் நெல்லையில் இருந்து செல்கிறார்கள் .மாநில மாநாட்டு நன்கொடையாக விருப்பமுள்ள தோழர்களிடம் ரூபாய் 100 மட்டும் வசூலிப்பது என்றும் துணை அஞ்சலகங்களில் பணியாற்றுவோர் தோழர் ஜேக்கப் ராஜ் அவர்களின் SB கணக்கில் 0072773482 செலுத்தவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது .பணம் செலுத்தியவர்கள் தகவல்களை உடனே தெரிவிக்கவும் கேட்டு கொள்ளப்படுகிறது ..மாநாட்டில் எடுக்கவேண்டிய தீர்மானங்களை தோழர்கள் புஷ்பாகரண் தோழர்  சாக் ரடீஸ் மற்றும் இளைய /புதிய தோழர் பாலகுருசாமி ஆகியோர்கள் தயாரித்து கொடுப்பது என்று முடிவெடுக்கப்பட்டது .
2.வருகிற ஜனவரி 8 மற்றும் 9 ஆகியதேதிகளில் நடைபெறும் வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்துவது என்றும் புதிய பென்ஷன் ரத்து என்ற நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி பிரசாரங்களை மேற்கொள்ளவும் முடிவெடுக்கப்பட்டது .
3.டெபுடேஷன் உத்தரவில் தபால்காரராக பணியாற்றி எழுத்தராக பதவிஉயர்வு பெற்ற தோழர்களின் MACP II என்ற வரையறையை தெளிவு படுத்தி இரண்டாம் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு விலக்கு அளிக்க கோட்ட நிர்வாகத்தை அனுகுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது .
4.திருநெல்வேலி தபால் மருத்துவமனை உள்ளிட்ட 33 மருத்துவமனைகள் CGHS உடன் 01.01.2019 முதல் இணைவது தொடர்பாக தோழர் குத்தாலிங்கம் அவர்கள் விளக்கி கூறினார்கள் .இதன் பயன்களை அனைவருக்கும் கிடைக்கும் வகையில் NFPE சங்கம் தனியாக குழு அமைத்து விலகிச்சென்ற அனைத்து ஓய்வூதியர்களுக்கும் மீண்டும் CGHS யில் இனைவது குறித்து மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க அகிலஇந்திய சங்க கவனத்திற்கு கொண்டு சென்று  பிரச்சினைகளை  தீர்க்க  முடிவெடுக்கப்பட்டது .இந்த பொறுப்பை தோழர் குத்தாலிங்கம் அவர்கள் தலைமையேற்று கோரிக்கை மனுவை தயாரிக்க தோழர் குத்தலிங்கம் அவர்களிடம் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது 
                                           இதர பிரச்சினைகள் குறித்து கோட்ட செயலர் தோழர் SK .ஜேக்கப் ராஜ்  விளக்கி கூறினார்கள் .
1.HSG II /HSG I பதவிகளை தற்காலிகமாக நிரப்ப கோட்ட நிர்வாகம் நேற்று புதிய WILLINGNESS கோரியுள்ளது .மூத்த தோழர்கள் அதாவது LSG வந்தவர்களும் LSG அல்லாத  GP 4200 பெறுகிறவர்கள் HSG II பதவிக்கும் GP 4600 பெறுகிற தோழர்கள் HSG I (பாளையம்கோட்டை -திருநெல்வேலி DYPM )  பதவிக்கும் விண்ணப்பிக்கலாம் .
2.போஸ்ட்மாஸ்டர் கேடெர் ஜெனரல் லைன் உடன் இனைக்க 20.12.2018 அன்று புதுடெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் அஞ்சல் வாரியம் ஒப்புக்கொண்டுள்ளது .அதனால் போஸ்ட்மாஸ்டர் தனி கிரேடு என்று நமது NFPE யில் இருந்து விலகி சென்ற அனைவரையும் மீண்டும் நமது NFPE சங்கத்தில் அவர்களை சேர்க்க நமது முன்னணி தோழர்கள் முயற்சி எடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டது ..
3.பாளையம்கோட்டை  தலைமை அஞ்சலகத்தில் ஊழியர்களுக்கு குறிப்பாக தோழியர்களுக்கு டைனிங் ரூம் தனியாக அமைத்து அனைத்து வசதிகளையும் செய்து தர தோழர்கள் N.கண்ணன்செயல்தலைவர்  உதவி செயலர்கள்  தளவாய் மற்றும் சரவணன் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது .இவர்களது ஆலோசனைகளை பெற்று கோட்ட நிர்வாகத்திற்கு நாம் கோரிக்கை வைக்கவும் தீர்மானிக்கப்பட்டது .
4.கேடர் சீரமைப்பு அமலாக்கத்தில் நமது மாநிலச் சங்கம் பல கட்டங்களில் அளித்த கோரிக்கைக் கடிதங்கள் மீது முழு முடிவுகள் இன்னமும் நிர்வாகத்தால் தெரிவிக்கப் படவில்லை. 
இதில் முக்கியமாக Treasury Replacement உள்பட 854 பதவிகள் புதிதாக Identify செய்வதில் ஏற்கனவே 19.3.2018 ல் ஊழியர் தரப்புடன் 
பேசி Minutes record செய்யப்பட்ட விஷயங்களில் தற்போது மாற்றி முடிவுகள் எடுப்பதாகத் தெரிகிறது.  LSG பதவி உயர்வின்போது வெளியில் சென்ற ஊழியர், Decline செய்த ஊழியர், Treasury ல் இருந்து வெளியேறும் ஊழியர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் முன்னுரிமை, விதி 38 இடமாறுதல் உள்ளிட்ட அனைத்துப்  பிரச்னைகள் குறித்தும் மீண்டும் பேசி முடிவெடுத்திட 
மீண்டும்  ஒரு ஊழியர் தரப்புடனான கூட்டம் கட்டாயம் நடத்திட CPMG ஒப்பு கொண்டுள்ளதாக மாநிலச்சங்க செய்தி கூறுகிறது .
   நேற்றைய பொதுக்குழுவில் ஆர்வமுடன் கலந்துகொண்ட அனைவருக்கும் கோட்ட உதவி நிதி செயலர்தோழர் G.நெல்லையப்பன் அவர்கள்  நன்றி கூற பொதுக்குழு ஒரு பயனுள்ள கூட்டமாக நிறைவுபெற்றது .நேற்றைய பொதுக்குழுவிற்கு ஸ்னாக்ஸ் வழங்கிய தோழர் S.முருகன் SPM ஹைகிரவுண்ட்ஸ் அவர்களுக்கும் நன்றி .நன்றி !
 ஒற்றுமையே நமது பலம் --கூட்டு செயல்பாடே நமது தொடர் வெற்றி ! 
வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை  

Friday, December 21, 2018

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
     இன்று மாலை நடைபெறும் பொதுக்குழு கூட்டத்திற்கு அனைவரும் வாரீர் ! வாரீர் !
நாம் ஏற்கனவேஅறிவித்தபடி நமது கூட்டு பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது .இதில் தாங்கள் தவறாது கலந்துகொண்டு தங்களின் மேலான கருத்துக்களை தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம் 
                    
நாள் --21.12.2018 வெள்ளிக்கிழமை 
நேரம் --மாலை 6 மணி 
இடம் --பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் 
கூட்டு தலைமை-- தோழர்கள் T .அழகு முத்து கோட்ட தலைவர் P 3
                                        A .சீனிவாச சோக்கலிங்கம் கோட்ட  தலைவர் P 4 
பொருள் --1.ஜனவரி 8 -9  வேலைநிறுத்தம் (NFPE &FNPO இணைந்த வேலைநிறுத்தம் )
                         2.  கோவையில் நடைபெறும்  அஞ்சல் நான்கின் மாநில மாநாடு --(தீர்மானங்கள்-- நன்கொடை  சம்பந்தமாக )
                        3. கோட்ட மட்ட பிரச்சினைகள் ..
                       4. கேடர் சீரமைப்பு  - தற்போதைய நிலை 
                       5. இன்னும் பிற  
   ஜனவரி 8 மற்றும் 9 ஆகிய தினங்களில் நடைபெறும் வேலைநிறுத்தத்தை வெற்றிபெறவைப்போம் .

Confederation Strike Notice served to Cabinet Secretary, Govt. of India on 12.12.2018

PJCA STRIKE NOTICE SERVED

TO THE SECRETARY /DIRECTOR GENERAL , DEPARTMENT OF POSTS FOR 2 DAYS STRIKE ON 08th /09th JANUARY-2019
வெல்லட்டும் ! வேலைநிறுத்தங்கள்  வெல்லட்டும் 
போராட்ட வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் --கோட்ட செயலர்  P3
RV.தியாகராஜ பாண்டியன்  கிளை செயலர்  P3
SK .பாட்சா  கோட்ட செயலர்  P 4
V.தங்கராஜ்  கிளை  செயலர்  P4 
E.காசிவிஸ்வநாதன்  NFPE -GDS 
            

Wednesday, December 19, 2018

                                            முக்கிய செய்திகள் 
GDS ஊழியர்களின் வேலைநிறுத்தம் இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது ..நேற்று 18.12.2018 நடந்த பேச்சுவார்த்தையில் நிர்வாகம் தரப்பில்  நமது இலாகா செயலர் திரு 
AN .நந்தா திரு .சலீம் ஹயூ மெம்பெர் (TECNOLOGY) திரு .வினித் பாண்டே மெம்பெர் (PLI) DDG( SR ) மற்றும் DDG (ESTT)  ஆகியோர் கலந்துகொண்டனர் .
          இலாகா தரப்பில் மீண்டும் பழைய பல்லவி பாடப்பட்டது .வேலைநிறுத்தத்தை முடித்துக்கொண்டு வாருங்கள் பேசலாம் .ஏற்கனவே கமலேஷ் சந்திரா அறிக்கையின் பல சிபாரிசுகள் அமுல்படுத்தப்பட்டுவிட்டன .இன்னும் சில சிபாரிசுகள் தீவீர பரிசீலனையில் இருக்கிறது என்று தெரிவித்து வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறச்சொல்லி இரண்டுபக்க கடிதம் கொடுக்கப்பட்டது .
    மத்திய அரசு ஊழியர்கள் -பொதுத்துறை ஊழியர்கள் இணைந்து போராட்டம் ஜனவரி 8 -9 ஆகிய இருநாட்கள் நடைபெறுகிறது .மத்திய அரசு ஊழியர்களின் பிரதான கோரிக்கையான புதிய பென்ஷன் திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும் என்பதே .2019 ஆண்டின் துவக்கமே போராட்டத்தோடு துவங்குகிறது .இதற்கு முன்னேற்பாடாக 21.12.2018 வெள்ளிக்கிழமை நடைபெறும் கூட்டு பொதுக்குழுவிற்கு தாங்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டுகிறோம் 
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர் நெல்லை 
.Tuesday, December 18, 2018

அன்பார்ந்த தோழர்களே !
    10  அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் பங்கேற்கும் எங்கள் GDS தோழர்களுக்கு நெல்லை NFPE சார்பாக வீர வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் .
                   அமைப்பு ரீதியாக NFPE சம்மேளனம் --AIGDSU பிளவு பட்ட போதிலும் GDS ஊழியர்களின் வர்க்க போராட்டத்தை பார்த்து நம்மால் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது .
                         கடந்த மே திங்களில் நடைபெற்ற போராட்டங்களில் NFPE சங்கமும் கலந்து கொண்டதால் அஞ்சல் மூன்று -அஞ்சல் நான்கு சங்கங்கள் நான்கு முதல் ஐந்து நாட்கள் வேலைநிறுத்தம் செய்தோம் .வேலைநிறுத்தத்தின் முடிவில் அரசும் -அஞ்சல் வாரியமும் ஒப்புக்கொண்ட கோரிக்கைகளை முற்றிலுமாக இன்னும் நிறைவேற்றிடவில்லை .விளைவு அன்றைய களத்தில் சேர்ந்து நின்ற AIGDSU -NUGDS சங்கமும் இன்று போராடுகின்றன .
                        தமிழக அரசுஊழியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்கிறோம் -போக்குவரது ஊழியர்களின் போராட்டத்தில் வீதிக்கு வந்து போராடினோம் .நம்மோடு உயிராய் கலந்து நிற்கும் GDS ஊழியர்களின் போராட்டங்கள் வெல்ல வாழ்த்துகளையாவது அள்ளி தெளிப்போம் .
                                GDS தோழர்களின் போராட்டங்கள் வெல்லட்டும் !
மாலை நேரங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்போம் ! தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் --SK பாட்சா  கோட்ட செயலர்கள் நெல்லை 

Monday, December 17, 2018

அன்பார்ந்த தோழர்களே !
                         நெல்லை அஞ்சல் மூன்று -அஞ்சல் நான்கு சங்கங்களின் கூட்டு பொதுக்குழு கூட்டம் 
நாள் --21.12.2018 வெள்ளிக்கிழமை 
நேரம் --மாலை 6 மணி 
இடம் --பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் 
கூட்டு தலைமை-- தோழர்கள் T .அழகு முத்து கோட்ட தலைவர் P 3
                                        A .சீனிவாச சோக்கலிங்கம் கோட்ட  தலைவர் P 4 
பொருள் --1.ஜனவரி 8 -9  வேலைநிறுத்தம் (NFPE &FNPO இணைந்த வேலைநிறுத்தம் )
                         2.  கோவையில் நடைபெறும்  அஞ்சல் நான்கின் மாநில மாநாடு --(தீர்மானங்கள்-- நன்கொடை  சம்பந்தமாக )
                        3. கோட்ட மட்ட பிரச்சினைகள் ..
                       4. கேடர் சீரமைப்பு  - தற்போதைய நிலை 
                       5. இன்னும் பிற  

          தோழர்களே ! ஜனவரி 8 மற்றும் 9 ஆகிய நாட்கள் நடைபெறும் வேலைநிறுத்தத்தின் பிரதான கோரிக்கையான புதிய பென்ஷன் ஒழிப்பு எனும் கோரிக்கையை வலுவாக ஊழியர்கள் மத்தியில் கொண்டு செல்லவேண்டும்என்ற அடிப்படையில் ஜனவரி முதல் வாரத்தில் பாளையம்கோட்டையில் வேலைநிறுத்த சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது .
குறிப்பு --அஞ்சல் நான்கின் மாநில மாநாட்டிற்கு நன்கொடைகள் பிரிக்கப்பட்டுவருகின்றன .அஞ்சல் மூன்று தோழர்கள் இன்றே தங்கள் அலுவலகங்களில் பணியாற்றும் தோழர்களிடம் தலா ரூபாய் 100 மட்டும் நன்கொடை பிரித்து அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
                                     நன்றி .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை Saturday, December 15, 2018

                                                      முக்கிய செய்திகள் 
FINMIN ORDER – OPPORTUNITY FOR REVISION OF OPTION TO COME OVER TO REVISED PAY STRUCTURE 
Subject: Central Civil Services (Revised Pay) Rules, 2016 – opportunity for revision of option to come over to revised pay structure dtd 12.12.2018 இந்த உத்தரவு படி 2016 க்கு பிறகு ஊழியர்கள் தங்கள் ஊதிய நிர்ணயத்தை மாற்றிக்கொள்ள மேலும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது .இதுகுறித்து நமது அன்பிற்குரிய 
திரு .நேசராஜ் செல்வம் ACCOUNTS OFFICER (R ) அவர்களின் கருத்து இங்கு தரப்பட்டுள்ளது .
This order speaks only about exercise of option to switch over to 7th CPC pay structure. So the official can opt for the revised pay fixation either from 1.1.2016 or from a later date. If the MACP is due after 1.1.2016 an official can wait up to that date and get his pay fixed in the 7th CPC pay matrix by giving option if it is beneficial to him
----------------------------------------------------------------------------------------
RECRUITMENT OF GDS / CASUAL LABOURER TO THE POST OF MTS (Click the link below to view)https://drive.google.com/file/d/1HkbfFxm6QVzvpnMB4FGpVWADW3skGNUK/view
இதன் படி GDS மூலம் சீனியாரிட்டி அடிப்படையில் MTS ஆக இருந்த வயது வரம்பு தளர்த்தப்படுகிறது .இதனால் இனி வயது கடந்துவிட்டது பதவி உயர்வு இல்லை என்ற நிலை மாறுகிறது .உதாரணமாக 2019  காலியிடங்களை  31.12.2018 குள் நிரப்பவும் உறுதிசெய்யப்படுகிறது .


Friday, December 14, 2018

GDS ஊழியர்களுக்கு தன் விருப்ப ஓய்வு -உடல்நலம் குன்றியதால் மருத்துவ  அடிப்படையில் ஓய்வு அறிமுகம் .
அன்பார்ந்த தோழர்களே !
 அஞ்சல் வாரியம் இன்று 14.12.2018 புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது .
அதன்படி 20 வருடம் சேவைக்காலம் முடித்த ஊழியர்கள் இலாகா ஊழியர்களை போல் VOLUNTARY RETIREMENT யில் செல்லலாம் .மேலும் மருத்துவ காரணங்களால் உடல்நலம் குன்றி பணியாற்ற முடியாத ஊழியர்கள்  10 வருட  சேவை  முடித்திருந்தால்  INVALIDATION அடிப்படையில் DISCHARGE செய்யப்படுவார்கள் .
 இவர்களுக்கு கிரா ஜூடி உள்ளிட்ட சலுகைகளில் எந்தப்பாதிப்பும் இல்லாமல் சேவைக்காலத்தை கணக்கிட்டு கொடுக்கப்படும் .இந்த உத்தரவு 14.12.2018 முதல் அமுலுக்கு வருகிறது 

                                          திருமண நல் வாழ்த்துக்கள் 
நமது NFPE சொந்தங்களின் திருமண விழாக்கள் 
 தோழர் S .முத்துமாலை அவர்களின் இல்லமனவிழா 12.12.2018 அன்று மேலநீதநல்லூரில் வைத்துநடைபெற்றது .
                                                  மணமக்கள் 
                   S .மனோஜ் பிரபாகரன் -- M .பிரேமா 
-------------------------------------------------------------------------------------------------------------------
தோழர் C .வண்ணமுத்து அவர்களின் இல்ல மணவிழா 13.12.2018 அன்று பாளையம்கோட்டையில் வைத்து நடைபெற்றது .இந்த விழாவில் நமது முன்னாள் மாநில செயலர் தோழர் V.பார்த்திபன் தோழர் சேர்முகபாண்டியன் (SR .ACCOUNTS OFFICER ) தோழர் புகழேந்தி சேலம் மேற்கு கோட்ட செயலர் தோழர் அருள்செல்வம் பட்டுக்கோட்டை தலைவர் TV சென்னை உள்ளிட்ட முக்கிய விருந்தினர்கள் மற்றும் நமது முன்னாள் SSP திரு .VPC  அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் .
                                                            மணமக்கள் 
                                V.செல்வ லட்சுமி -- S. பிரகாஷ் 
------------------------------------------------------------------------------------------------------------
தம்பதிகள் அனைவருக்கும் நெல்லை NFPE தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது .

                                                மாநில சங்க செய்திகள் 
         இன்று(13.12.2018)  CPMG அவர்களுடன் பேசிய சில முக்கிய பிரச்னைகள் குறித்து கீழே உங்கள் பார்வைக்கு:-(மாநில சங்க பதிவில் இருந்து )
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
1.. மதுரை தலைமை அஞ்சல் அதிகாரி திரு. நாகநாதன் அவர்களின் அத்துமீறல்கள், ஊழியர் விரோதப்போக்கு , பழிவாங்கும் நடவடிக்கைகள் குறித்தும், இதன் 
மீது விசாரிக்க அமைக்கப்பட்ட மூன்று அதிகாரிகள் குழுவின் தெளிவான பரிந்துரைக்குப் பின்னரும் மேல் நடவடிக்கை எடுக்காமலும் அவர் இடமாற்றம் செய்யப் படாமலும்  இருப்பது குறித்தும் CPMG அவர்களிடம் கடிதம் அளித்து விவாதிக்கப் பட்டது. PMG, SR அவர்களும், DPS, SR அவர்களும் கமிட்டியின் அளிக்கையை ஒத்துக் கொண்டு இன்று காலை நமது தென் மண்டலச் செயலருக்கு தனியே கடிதம் அளித்து புகாரில் அளிக்கப்பட்ட பிரச்னைகளைத் தீர்த்திட நிர்வாகத்திற்கு உத்திரவு அளித்துள்ள போதிலும், அவரை இடமாற்றம் செய்திடாமல்  ( ஏற்கனவே Independent charge அளிக்கக் கூடாது என அவருக்கு ரகசியக் கோப்புக் குறிப்பு உள்ளதாலும், தென் மண்டலத்தில் வேறு Sr.PM இடம் இல்லாததாலும் என)பல்வேறு காரணங்கள் கூறி இடமாறுதல் செய்திட அளிக்கப்பட்ட பரிந்துரை மற்றும்  உறுதி மொழியை மீறுதல் கூடாது ; அவர் மாநில அளவில் எங்காவது உடன் மாற்றப்பட வேண்டும் எனக் கோரினோம். இதனை ஒப்புக் கொண்ட CPMG அவர்கள் நாளை இது குறித்து தென் மண்டல அதிகாரியுடன் பேசுவதாகவும், இது குறித்த அனைத்துக் கோப்பினையும் பெற்று ஆய்வு செய்து வெகு விரைவில் சாதகமான நடவடிக்கை எடுத்திடவும் உறுதியளித்தார். 

2. தபால் காரர்களுக்கு உச்ச நீதி மன்றத் தீரப்பு மற்றும் இலாக்கா உத்திரவுப்படி 11.10.97 முதல் வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை JCA போராட்டத்தின்போது அளித்த உறுதி மொழியின்படி மேலும் கால தாமதம் செய்திடாமல் உடனே வழங்கிட வேண்டினோம். இது குறித்து Clarification கேட்டதன் அடிப்படையில் இலாக்காவிடமிருந்து பெறப்பட்ட விளக்க ஆணையை சென்ற வாரமே அனைத்து மண்டலங்களுக்கும் அனுப்பி விட்டதாகவும் மேலும் இது குறித்து 
IFA (GM Finance) க்கு கேட்கப்பட்ட வழிகாட்டுதலுக்கு இதுவரை பதில் வரவில்லை என்றும் CPMG தெரிவித்தார்.  இலாக்காவிலிருந்து விளக்க ஆணை பெறப்பட்டபின் IFA ன் ஒப்புதல் பெறத் தேவையில்லை என்றும் இது ஏற்கனவே கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் வழங்கப்பட்டு விட்டதால் தமிழகத்திலும் முழுமையாக நாளையே வழங்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்திக் கோரினோம். நீண்ட விவாதத்திற்குப் பின்னர் நமது வாதத்தை ஏற்றுக் கொண்ட CPMG அவர்கள் நாளை இலாக்காவின் தெளிவாணைக்குப் பின்னரும் வழங்க மறுக்கும் கோட்டங்கள் குறித்து மண்டல ரீதியாக கேட்டு உடனடி அறிவுறுத்தல்கள் வழங்கி ஓரிரு நாட்களுக்குள் முழுமையாக பட்டுவாடா உறுதி செய்யப்படும் என சாதகமான பதிலை அளித்தார். 

3. தற்போது கேடர் சீரமைப்பில் நிரப்பப் படாத காலியிடங்களில் 50%  LGO தேர்வுக்கு அறிவிக்கப் 
பட்டுள்ளதால் மீதமுள்ள 50% காலியிடங்களில் கோட்ட வாரியாக தேங்கிக் கிடக்கும் விதி 38 இடமாற்றங்களை
அளித்திட
 விரைவில் உத்திரவு இட வேண்டினோம். இதனை ஏற்றுக் கொண்ட CPMG அவர்கள் விதி 38 இட மாறுதல் கேட்புகள் குறித்து ஏற்கனவே கோட்ட வாரியாக விபரங்கள் கேட்டுப் பெறப்பட்டு வைப்பில் உள்ளதாகவும் இவை உடன் பரிசீலிக்கப்பட்டு டிசம்பர் இறுதி அல்லது அதிகபட்சம் ஜனவரி 2019க்குள் இருக்கும் காலியிடங்களுக்கு ஏற்ப Communal Vacancy அடிப்படையில் இடமாறுதல்கள் அளித்திட ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்தார். 

4.. நடப்பு ஆண்டுக்கான உரிய HSG I I , HSG I, PMGrade II, PM Grade III பதவி உயர்வுக்கான DPC இன்னமும் கூட்டப்படவில்லை என்றும் இதனால் நிரப்பப்படக் கூடிய குறைந்த அளவு உயர் பதவிகள் கூட நிரப்பப்படாமல் தகுதியான ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே உரிய DPC கூட்டப்பட்டு பதவி உயர்வுகள் மேலும் 
காலதாமதமின்றி வழங்கப்பட வேண்டும் என கடிதம் 
அளித்துப் பேசி வலியுறுத்தினோம்.
இதன்மீது உடன் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு பதவி உயர்வுகள் கூடிய விரைவில் வழங்கப்படும் என்று CPMG அவர்கள் உறுதியளித்தார்.
                                  நன்றி .தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா  கோட்ட செயலர்கள் நெல்லை 

Tuesday, December 11, 2018

அன்பார்ந்த தோழர்களே !
            வருகிற ஜனவரி 8 மற்றும் 9 ம் தேதிகளில் நடைபெறும் இரண்டுநாட்கள் வேலைநிறுத்த போராட்ட கோரிக்கையாக அஞ்சல் பகுதியில் NFPE -FNPO சம்மே ளனங்கள் கூட்டாக கொடுத்துள்ள கோரிக்கைகளில் சில
                       CHARTER OF DEMANDS
1.. Implement 5 days week in Postal and RMS
2.Scrap Bench Mark in MACP .
3.Implement all High Court and Supreme Court decisions in C/W MACP, RTP and others.
4.Restore Special Allowance to PO & RMS Accountants and OSA to RMS/MMS Staff.
5.. Permission to all Staff of Circle Office, Postmaster Cadre, SBCO, Postal Accounts and RMS/MMS Staff to appear in Departmental Examination for promotion to PSS Group-B. ....

6.Fill up all Vacant Posts in all cadres of Deptt of Post i.e P.A/S.A, Postmen, Mail Guard ,  Mailmen, MMS, MTS, GDS, Postal Acctts, P.A  Admn Offices, P.A SBCO & Civil Wing etc  within a time frame  and separate identity of all cadres.
7.Settle all the problems arisen out of implementation of C.S.I & R.I.C.T.
.    Withdraw NPS and Guarantee minimum pension 50% of last pay drawn.

.  
8. Implement Cadre Restructuring for left out categories i.e RMS, MMS, Postman/MTS, PACO, PASBCO, Postal Acctts, Postmaster Cadre and Civil Wing etc.
9.  Stop Privatization, Corporatization and out sourcing in Postal Services.
                   நமது பகுதியில் வேலைநிறுத்த சிறப்பு கூட்டம் 06.01.2019 அன்று மாலை பாளையம்கோட்டையில் வைத்து நடைபெறுகிறது .முக்கிய அகிலஇந்திய தலைவர்கள்  கலந்துகொள்ளவிருக்கிறார்கள் .
      வெல்லட்டும் போராட்டம் வெல்லட்டும் !
தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா  கோட்ட செயலர்கள் நெல்லை 
.    


Saturday, December 8, 2018

அன்பார்ந்த தோழர்களே !
   நமது கோட்டசங்கத்தின் சார்பாக வெளியிடப்படும் புத்தாண்டு டைரியில் இடம்பெறும் நமது உறுப்பினர்களின் பெயர் மற்றும் செல்போன் எண்கள் புதிதாக அச்சிடப்பட்டு உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது .இரண்டாம் கட்டமாக நெல்லை அஞ்சல் நான்கு  மற்றும் அம்பை  அஞ்சல் மூன்று &அஞ்சல் நான்கு தோழர்களின் எண்கள்  கொடுக்கப்பட்டுள்ளது .இதில் மாற்றங்கள் திருத்தங்கள் இருந்தால் கோட்ட செயலருக்கு 9442123416 என்ற எண்ணில் தெரிவிக்கவும் .
-------------------------------------------------------------------------------------------------
 தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் 
  கோட்டச்செயலர் நெல்லை 

Friday, December 7, 2018

அன்பார்ந்த தோழர்களே !
   நமது கோட்டசங்கத்தின் சார்பாக வெளியிடப்படும் புத்தாண்டு டைரியில் இடம்பெறும் நமது உறுப்பினர்களின் பெயர் மற்றும் செல்போன் எண்கள் புதிதாக அச்சிடப்பட்டு உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது .முதற்கட்டமாக நெல்லை பாளை மற்றும் அதன் கீழுள்ள அலுவலகங்களில் பணியாற்றும் எழுத்தர்களில் 178பேருக்கு கொடுக்கப்பட்டுள்ளது .இதில் மாற்றங்கள் திருத்தங்கள் இருந்தால் கோட்ட செயலருக்கு 9442123416 என்ற எண்ணில் தெரிவிக்கவும் .நாளை அஞ்சல் நான்கு அதனைத்தொடர்ந்து அம்பாசமுத்திரம் மற்றும் PSD பெயர்கள் வெளியிடப்படும் .
     இது நாம் வெளியிடும் 13 வது ஆண்டின் டைரி .அஞ்சல் துறை மற்றும் தொழிற்சங்க படைப்புகள் இருந்தால் உங்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ்--SK .பாட்சா  கோட்ட செயலர்கள் நெல்லை 

Thursday, December 6, 2018

                                                   வருந்துகிறோம் 
நமது NFPE இயக்கத்தின் முன்னணி தோழர் P .அருணாச்சலம் (67) (SPM 
கைலாசபுரம் பணிஓய்வு ) அவர்கள் நேற்று இரவு காலமானார்கள் என்பதனை மிகுந்த வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறோம் .அன்னாரது இறுதிச்சடங்கு இன்று 06.12.2018 மாலை 3 மணிக்கு கொக்கிரகுளம் பேராசிரியர் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிறது .தோழரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு நெல்லை NFPE தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது .
      -------------------------------------------  NELLAI NFPE -----------------------------------------------

அன்பார்ந்த தோழர்களே !
LSG HSG-II  HSG-I பதவிகள் பூர்த்தி செய்யப்படும் வரை எழுத்தர் பதவிகளாகவே கணக்கில் கொள்ளப்படும்.- அஞ்சல் துறை உத்தரவு
                              எழுத்தர் காலியிடங்களுக்கான உத்தரவு நேற்று அஞ்சல் வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளது ..அதன் படி 
தற்போது  உரிய தகுதி பெற்ற நபர்கள் மூலம் நிரப்ப  இயலாத நிலையில் உள்ள HSG II பதவிகள் 818 ஐயும் 
HSG I பதவிகள் 99 ஆக மொத்தம் 917 எழுத்தர் பதவிகளில் பாதியையும் (50%),  
இந்த மாதம் கேடர் சீரமைப்பு மூலமான 
LSG பதவி உயர்வால்   காலியாகவிருக்கும் ஏழுத்தர் பதவிகளையும் இணைத்து அதில் 50% மும் நிரப்பிட ஆவன செய்யுமாறும் இன்று மாலை மாநில நிர்வாகத்திடம் மாநில சங்கம் கோரியுள்ளது .
இதன் விளைவாக ஏற்கனவே நூற்றுக் கணக்கில்  தேங்கியுள்ள விதி 38 இடமாறுதலையும் இந்த மாதமே அளிக்க வாய்ப்புகள் அதிகரித்துள்ளது 
  -----------------------------------------------------------------------------------------------------------
நெல்லை கோட்டத்தில் எழுத்தர் தேர்வு எழுதும் தோழர்களுக்கு தேர்வு அனுமதி சீட்டு நேற்று கோட்ட அலுவலகத்தால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது .இன்று அனைவருக்கும் கிடைக்கும் .
தேர்வு எழுதும் ஊழியர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி வகுப்புகள் நமது கோட்ட அலுவலகத்தால் நடத்தப்படுகிறது வருகிற 06.12.2018 மற்றும் 07.12.2018 ஆகிய இருநாட்கள் மாலை 6-7 மணிவரை நமது அன்பிற்குரிய ASP OD திரு .வேதராஜன் அவர்களால் நடத்தப்படுகிறது ..இந்த அரிய வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்கிறோம் .
இது குறித்து கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு இதோ !

From                                                                               
Sr. Superintendent of Post Offices,                                
Tirunelveli Division,                                                     
Tirunelveli  627 002                                                          
B3/Misc/ Dlgs dt at Tirunelveli 627 002 the 05.12.2018
Sub: Coaching/Training Classes for  LGO Exam to be held on  09.12.2018- reg
A coaching / Training class in connection with LGO Exam will be conducted by ASPOs(OD) , Tirunelveli Division at O/o Senior Superintendent of Postoffices, Tirunelveli Division, Tirunelveli 627002 for two days on 06.12.2018 & 07.12.18 (from 6 00 PM to 7 00PM).
You may perhaps make use of the above classes.
நன்றி .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Wednesday, December 5, 2018

அன்பார்ந்த தோழர்களே !
   மத்திய அரசு ஊழியர்கள் மகாசம்மேளனத்துடன் இணைந்து அஞ்சல் பகுதியில் NFPE --FNPO சம்மேளனங்கள் பங்கேற்கும் இரண்டு நாள் வேலைநிறுத்தம்   08.01.2019 & 09.01.2019 வெல்லட்டும் 
          கடந்த 15.11.2018 அன்று புதுடெல்லியில் கூடிய போஸ்டல் JCA (NFPE -FNPO) அஞ்சல் துறையில் புகுத்தப்படும் கார்ப்பரேஷன் முடிவுகளை கட்டுப்படுத்த வருகிற ஜனவரி 8 மற்றும் 9 ஆகிய இருநாட்கள் நடைபெறும் NJCA வேலைநிறுத்த அறிவிப்போடு நாமும் சேர்ந்து வேலைநிறுத்தத்தில் பங்கேற்பது என முடிவெடுத்துள்ளது .
கார்ப்பரேசனின் முதல்படியாக IPPB  அதனை தொடர்ந்து பார்சல் இயக்குனரகம்  அடுத்த ப(அ )டி  PLI &RPLI  தனி வாரியம் என எதிர்கால அஞ்சல் துறையை அச்சுறுத்தும் அரசின் கொள்கைமுடிவுகள் -எல்லா மட்டங்களிலும் நிலவும் ஆட்பற்றாக்குறை -உச்ச நீதிமன்றம் உயர்நீதிமன்றம் வழங்கிய MACP மற்றும் RTP சம்பந்தமான ஊழியர்கள் நலன் சார்ந்த தீர்ப்புகளை அமுல்படுத்துதல் கமலேஷ் சந்திரா கமிட்டியை முழுமையாக அமுல்படுத்துதல்  என நமது பகுதிப்பிரச்சினைகள் 
NJCA வின் பிரதான கோரிக்கையான புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்தல் என கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் இரண்டுநாள் வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம் .
               நமது கோட்டத்தில் வேலைநிறுத்த கூட்டங்களை டிசம்பர் மூன்றாம் வாரத்தில் நடத்தவும் உத்தேசித்துள்ளோம் .
                அந்தந்த பகுதி தோழர்கள் நமது கோட்டத்தில் வேலைநிறுத்தத்தை சிறப்பாக நடத்த இன்றே தயாராகும் படி கேட்டுக்கொள்கிறோம் .
                                                  தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் 
RV.தியாகராஜ பாண்டியன் --V .தங்கராஜ் கிளைசெயலர்கள் 
E.காசிவிஸ்வநாதன் கோட்ட செயலர் NFPE GDS 

Monday, December 3, 2018

அன்பார்ந்த தோழர்களே !
 தபால் காரர் TO எழுத்தர் பதவிக்கான தேர்விற்கு அறிவிக்கப்பட்ட காலி பணியிடங்களில் திருநெல்வேலி மட்டுமல்ல தென்மண்டலத்திற்கே VACANCY எப்படி தேடினாலும் இல்லை என்பது ஏமாற்றமே ? கேடர் அறிவிப்பிற்கு பிறகாவது VACANCY வருமா ? என ஏக்கத்தில் தோழர்கள் 
         பருவமழையை எதிர்பார்த்து நிற்கும் விவசாயிகள்போல் எங்கள் தோழர்கள் ஏக்கப்பெருமூச்சோடு .....
                                         

Saturday, December 1, 2018

                          சென்னையில் நாளை( 04.12.2018) தர்ணா  
SAP -RICT பிரச்சினைகளை தீர்த்திட ......
டார்கெட் தரும் டார்ச்சரை ஒழித்திட ........
IPPB பணிகளை அஞ்சல் ஊழியர்களிடம் புகுத்துவதை நிறுத்திட .....
01.01.1996 முதல் தபால் காரர்களுக்கு வழங்கவேண்டிய நிலுவை தொகையினை உடனே வழங்கிட 
        உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை CPMG அலுவலகம் முன்பு 04.12.2018 காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தர்ணா நடைபெறுகிறது .
நெல்லையில் இருந்து தோழர்கள் ஜேக்கப் ராஜ் மற்றும் பாட்சா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள் .

                                    நெல்லை   மாதாந்திர பேட்டி --நவம்பர் 18
நேற்று 30.11.2018 அன்று நடைபெற்ற மாதாந்திர பேட்டி முடிவுகள் உங்கள் பார்வைக்கு தரப்பட்டுள்ளன .
1.ஏழாவது சம்பளக்குழு அடிப்படையில் Treasury அலவன்ஸ் cash handling allowance ஆக மாறியதால் அதனடிப்படையில் காசாளர்கள் மற்றும் SPM களுக்கு  cash handling allowance வழங்கிட வழிகாட்டுதல் உத்தரவு வழங்கப்படும் அனைத்து SPM தோழர்களும் TREASURY STATISTICS தயாரித்து கோட்ட அலுவலகத்திற்கு அனுப்பிட வேண்டும் .மாதம் சராசரி ரூபாய் 5 லட்சம் வரை ரூபாய் 700 5 லட்சத்திற்கு மேல் கையாளும் அலுவலகங்களுக்கு ரூபாய் 1000 CASH HANDLING ALLOWANCE வழங்கப்படும் .இந்த உயர்வு 01.07.2017 முதல் அமுலாகிறது .ஆகவே நமது தோழர்கள் அனைவரும் இதற்கான பணிகளை செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம் .(SPPED போஸ்ட் பில்களையும் அனைத்து தோழர்களும் அனுப்பிவைக்கவும் .நிறுத்திவைக்கப்பட்ட SPEEDPOST இன்சென்டிவ் நமது கோட்ட சங்க முயற்சியால் மீண்டும் வழங்கப்பட்டுவருகிறது )
2.A 4 பேப்பரை பொறுத்தவரை நேற்றே முடிவெடுக்கப்பட்டு  அனைத்து அலுவலங்களுக்கும் தேவைகளை கேட்டறிந்து அதன் அடிப்படையில் (80G) பேப்பர்கள் தங்கு தடையின்றி கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்கப்படும் .இந்த அளவு இருமாதங்களுக்கு பரிச்சார்த்த அடிப்படையில் வழங்கப்படும் .மேற்கொண்டு தேவைப்படும் அலுவலங்களுக்கு மட்டும் மெயில் அனுப்பி பெற்றுக்கொள்ளலாம் .யாரும் தங்கள் சொந்தக்காசுகளில் அலுவலக உபயோகத்திற்கு காகிதங்கள் வாங்கவேண்டாம் .
3.இடமாறுதல்கள் குறித்து விவாதிக்கப்பட்டு பெண்டிங் விருப்பமனுக்கள் பரிசீலிக்கப்படும் .நேற்றே ஓரிரு உத்தரவுகள் பிறப்பிக்க ஏற்றுக்கொள்ளப்பட்டது .
4.புதிய கணினிகள் நமது கோட்டத்திற்கு 40 வரவிருக்கின்றன .பழைய மாடல் கம்ப்யூட்டர்கள் அனைத்தும் மாற்றிக்கொடுக்க  முன்னுரிமை கொடுக்கப்படும் .
5.கலக்ட்ரேட் அலுவலகத்தில் உள்ள பழைய MIS பில்கள் (2014-2017 ) PASS பண்ணப்படும் .
6.2006 முதலான ஆரம்ப ஊதியத்தை மறுநிர்ணயம் செய்ய பாளை மற்றும் அம்பை போஸ்ட்மாஸ்டர்களுக்கு வலியுறுத்தப்படும் .சராசரியாக நிலுவைத்தொகை 95000 என்பதால் சில அதிகாரிகள் தயக்கம் காட்டுவது தேவையற்றது என எடுத்துரைக்கப்பட்டது .
7.ATR பதவிகள் கேடேர் பதவியுயர்வு உத்தரவு வரும் வரை நிரப்பப்படாமல் இருக்கும் .
8.HSG II மற்றும் HSG I பணியிடங்களுக்கு மீண்டும் OFFICIATING பார்க்க விருப்பமனுக்கள் கோரப்படும் .
9.விடுபட்ட எழுத்தர்களுக்கான CONFORMATION குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் .
10.தோழர் வெண்ணிக்குமார் அவர்களின் இரண்டு கோரிக்கைகளும் மிக விரைவாக முடிக்கப்படும் 
11.திருநெல்வேலி உப கோட்ட அதிகாரி தான் செல்லும் இடங்களிலெல்லாம் தேவையில்லாமல்  ஊழியர்களிடம் நீங்கள் ஸ்டேட்மென்ட் கொடுக்கவேண்டியதிருக்கும்  என  திரும்ப திரும்ப சொல்லிவரும்  புதுவித மிரட்டல் பழக்கத்தை கைவிடவேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளது .
12.எந்த தலைமை அஞ்சலகத்திலாவது டெபுடேஷன் TURN மீறப்பட்டதாக உணர்ந்தால் உடனே கோட்ட செயலருக்கு தகவல்களை தெரிவிக்கவும் .கண்காணிப்பாளர் அவர்கள் இந்த விஷயத்தில் மிக முறையாக நடத்த உறுதியளித்துள்ளார்கள் .
 (அஞ்சல் நான்கு சப்ஜெக்ட் கள் தனியாக வெளியிடப்படும் )
        நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள்  நெல்லை .

Friday, November 30, 2018

அன்பார்ந்த தோழர்களே !
 நமது சென்ற மாத மாதாந்திர பேட்டியில் விவாதித்த பிரச்சினைகளில் ஒன்றான 
 Request to re-fix the pay of the officials w.e.f 01.01.2006 who are promoted in the light of the Directorate Lr No. 7-2/2016-PCC(Pt.)  dated 03.10.2018 communicated in RO Lr No. EST/121-21/CPC-Rlg/2016 dated 11.10.2018 என்ற  பிரச்சினை இன்று முடிக்கப்பட்டு திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்தில் மூன்று ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியம்  மாற்றியமைக்கப்பட்டுள்ளது .
தோழர் ஐசக் பால்பாண்டியன்  34000 (பழைய ஊதியம் ) 35300 (புதிய ஊதியம் )
தோழர் விவேகானந்தன் 33300 (பழைய ஊதியம் )  34300 (புதிய ஊதியம் )
தோழர்  நமசிவாயம் 34000 (பழைய ஊதியம் ) 35300 (புதிய ஊதியம் ) 
விரைந்து செயல்பட்ட கோட்ட நிர்வாகத்திற்கும் திருநெல்வேலி கணக்கு பிரிவு ஊழியர்கள் அனைவருக்கும் நெல்லை NFPE தனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறது .நிலுவைத்தொகை அடுத்தவாரம் பட்டுவாடா ஆகும் .
நன்றி .SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர்  நெல்லை 

அன்பார்ந்த தோழர்களே !
                                                புத்தாண்டு டைரி 2019 
நமது நெல்லை கோட்டத்தில் கடந்த 12 ஆண்டுகளாக வெளியிடப்பட்டு வரும் டைரி இந்த ஆண்டும் வெளிவர இருக்கிறது 
உங்கள் படைப்புகள் இருந்தால் அனுப்பிவைக்கலாம் .மேலும் இலாகா மற்றும் தொழிற்சங்கம் சார்ந்த குறிப்புகளையும் அனுப்பிவைக்கலாம் .அலைபேசி எண்களில் மாற்றம் செய்திருந்தாலோ அல்லது திருத்தம் செய்யவேண்டியதிருந்தாலும் வருகிற 07.12.2018 குள் கோட்ட செயலருக்கு (94421 23416 என்ற வாட்ஸாப்ப் அல்லது SMS மூலம் தெரிவிக்கவும் .
            -------------------------------------------------------------------------------
                          கேடர் சீரமைப்பு இரண்டாம் பட்டியல் வருவதற்கு முன் 1.ஏற்கனவே பதவி உயர்வை மறுத்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்கிட வேண்டும் ..2.காசாளர் பதவிகளுக்கு மாற்றாக 600க்கு  மேற்பட்ட பதவிகள் உருவாக்கிட வேண்டும் என்ற எதார்த்தமான கேள்விகள் எழுந்துள்ளன .பெரும்பாலும் கோட்ட அளவிலே இடமாற்றங்கள் உறுதிசெய்ய படும் என்றும் .LSG பதவிஉயர்வில் வெளி கோட்டங்கள் வெளி மண்டலங்கள் செல்ல விரும்புவர்களுக்கு RE ALLOTMENT கிடைக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது .
                                   -------------------------------------------
நன்றி .வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Wednesday, November 28, 2018

      அன்பார்ந்த தோழர்களே !
           இந்த மாத மாதாந்திர பேட்டி 30.11.2018 மதியம் 2 மணிக்கு நடைபெறுகிறது .அஞ்சல் மூன்றின் சார்பாக தோழர்கள் ஜேக்கப் ராஜ் G.நெல்லையப்பன் &RVT பாண்டியன் ஆகியோர்களும் அஞ்சல் நான்கின் சார்பாக தோழர்கள் SK .பாட்சா P  மாணிக்கம்   (களக்காடு ) V.தங்கராஜ் ஆகியோர்களும் கலந்து  கொள்கிறார்கள் .அஞ்சல் மூன்றின் சார்பாக கொடுக்கப்பட்ட சப்ஜெக்ட்ஸ் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளன .இதுபோக வேறு பிரச்சினைகள் இருப்பினும் கோட்ட செயலர்களுக்கு தகவல் தெரிவிக்கவும் .
        
NFPE
 ALL INDIA POSTAL EMPLOYEES UNION GR-C                                                                         TIRUNELVELI DIVISIONAL BRANCH
TIRUNELVELI—627002
No.P3-MM / dated at TVL 627002 the 28.11.2018

To

The Sr. Supdt. of Post Offices,
Tirunelveli Division
Tirunelveli-627002

Sir,

            Sub:    Subjects for monthly meeting -reg
*****

              The following subjects may kindly be included for discussion during the monthly meeting.

1.        Request early passing of Transfer TA Bill – c/o Shri. Vennikumar, PA, Tirunelveli Pettai who was repatriated from APS during the year 2017.  It is requested to accord priority in passing his Transfer TA as per the instructions pertaining to the officials served in APS.

2.        Shri. Vennikumar, PA, Tirunelveli Pettai was deputed to APS on 29.09.1997 as Group D and promoted as Postman w.e.f 02.06.2005 as such he eligible for the old pension scheme.  In this regard, he had already submitted a representation to D.O.  But still then 10% contribution under NPS is being deducted.  It is requested to dispose his representation early.

3.        As per the recommendation of the 7th CPC, Treasury allowance was subsumed with ‘Cash handling allowance’ vide Dte F No. 4/6/2017-Estt (Pa-II) and hence it is requested to draw cash handling allowance to all SPMs of B & C Class offices and Treasurers under Tirunelveli Division w.e.f 01.07.2017.

4.        Request supply of separate scanner for Aadhaar Enrolment/updation at Tirunelveli HO.

5.        Request to consider the transfer requests of the officials pending at D.O for transfer/deputation at their choice.

6.        There is acute shortage of staff in this Division and the Time Scale PAs are manning the LSG/HSG-II/HSG-I Posts as such drafting PAs for canvassing/target team and attaching to Sub Division  Hence, it is requested to utilise the services of the willing GDS staff for canvassing/target team and they are the right person to target the rural population.

7.        Request to service the Generator of Ravanasamudram S.O. Which is under repair and not working     from the last three months and the UPS back up is also not good .In the CSI environment it is much difficult to work in the office during the frequent power failure.
8.        .Request fill up the vacant PA post of Pottalpudur and Pattamadai. Both the offices are running by single handedly in a years together.
9.         Request to supply of one new system to Tirunelveli Collectrate P.O.
10.    Request arrange to shift the PO building of Ambasamudram Angadi S.O. since the accommodation is very less and there is no basic amenities in the present building.
11.    Request to shift the PO building of Manimuthar Project S.O. since the roof of the building is in leaky condition and unsafe.
12.    Request to address the landlord of Brahmadesam S.O. to carry-out the repair work of the restroom attached with the building.
13.    Request to supply of sufficient A4 papers to all sub offices


The following officials will attend the meeting.

1.      S.K. Jacobraj  Divisional Secretary & LSG PA Tirunelveli HO
2.      G.Nellaiappan LSG TR Maharajanagar
3.      R.V.Thiyagarajapandiyan Branch Secretary& SPM Alwarkurichi


             
                         Yours faithfully


[S.K.JACOBRAJ]