...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, May 31, 2019

நெல்லை கோட்டத்தின் முன்னாள் ASP -ராமநாதபுரம் ASP 
 திரு 
M .வீரபத்திரன் அவர்களுக்கு பணிநிறைவு வாழ்த்துக்கள் 

பெயரில் வீரத்தையும் -
உள்ளத்தில் ஈரத்தையும் 
ஒருங்கே அமைந்திட்டவரே !
இரக்கமும் -இன்முகமும் 
இயற்கை உங்களுக்கு அளித்திட்ட 
வரப்பிரசாதங்கள் 

கோபமும் -சாபமும் 
ஒருநாளும்  பார்த்ததில்லை 
அமைதியும் -அடக்கமும் 
எந்நாளும் உங்களை விட்டு விலகியதில்லை 

அதிகார சாட்டையை 
ஒருநாளும் சுழற்றியதில்லை 
தண்டிக்கவேண்டும் என்று 
ஒருவரையும் விரட்டியதில்லை 

ஏற்றத்தை கண்டு இறு மாப்பு கொண்டதில்லை 
இறக்கத்தை கண்டு இடிந்து போகவுமில்லை 
எல்லா சூழ்நிலையிலும் சமாளித்தவர் நீங்கள் 
எல்லா இடங்களிலும் நல்ல பெயர் சம்பாதித்தவரும் நீங்கள் 

உங்களை வரவேற்க புதியதொரு 
உலகம் காத்திருக்கிறது 
பணிநிறைவு காலங்கள் 
மனநிறைவோடு மகிழ்ந்திருக்க 
வாழ்த்துகிறோம் ! 
                                   வாழ்த்துக்களுடன் 
                                           -----------------------   SK .ஜேக்கப் ராஜ் ------------------------------
                                                     




அன்பார்ந்த தோழர்களே !
  இன்று 31.05.2019 அன்று நடைபெறும் மாதாந்திர பேட்டியில் நாம் விவாதிக்கும் பிரச்சினைகள் உங்கள் பார்வைக்கு தரப்பட்டுள்ளன .
NFPE
ALL INDIA POSTAL EMPLOYEES UNION GR-C                                                                 TIRUNELVELI DIVISIONAL BRANCH
TIRUNELVELI—627002
No.P3-MM/ dated at Palayankottai- 627002 the 27.05.2019

To
The Sr. Supdt. of Post Offices,
Tirunelveli Division
Tirunelveli-627002

Sir,
            Sub:    Subjects for monthly meeting -reg
*****
              The following subjects may kindly be included for discussion during the monthly meeting.

1.      As per the recent orders of the Department, the erstwhile LSG Treasurer posts are restored as T/S Treasurer and hence the same may please be filled up by calling volunteers among the eligible officials.
2.      It is requested to sanction sufficient advance of TA to officials deputed to PTC to full fill at least minimum financial mandatory payments and transport fare.  For example: For the officials who were deputed for PA Induction Training has to pay Rs.17000/- for food & accommodation whereas an advance was sanction only for Rs.15000/- which is unjust.
3.      It is requested to re-iterate the existing guidelines to all Post Offices issued by NSO  to ensure that the SAS/MPKBY Agents are not canvassing the direct customers and diverting the POSB business to other financial institutions by sitting inside the PO Premises.
4.      Request early sanction of the Treasury/Cash Handling Allowance to the Treasurers/SPMS (B+C) w.e.f 01.07.2017. 2018 as per the recommendation of 7th CPC Treasury allowance was subsumed with cash handling allowance
5.      Request to post/attach one PA to Vadakkangulam SO.
6.      Request to fill up the vacant 11 HSG-II posts and 1 HSG-I posts on temporary basis by calling volunteers among the eligible PAs as per the instructions issued by the Circle Office.
7.      As the next academic year is going to be started, it is requested to effect payment for the CEA already sanctioned by uploading in the SAP.  Further, the condition enforced that the financial payments should not be uploaded after 17th/20th every month needs to be withdrawn which is not supported by any rules and also against the welfare of the staff.
8.      It is requested to take a proposal for construction of Staff Quarters in the vacant space available at Palayankottai HO premises.
9.      It is requested to take proposals for construction of PO building for the JawaharNagar and Gandhi Nagar SO as the vacant plots are kept unutilised for years together.
10.     It is requested to take action to complete the maintenance work for Palayankottai HO.
11.     It is requested to sanction 80% of TA as advance whenever the officials are ordered to go for deputation.
12.     Request to set right the discrepancies reported in the Divisional Gradation List issued as on 01.07.2018.  For Example : Seniority is seen changed in the Confirmation order dated 19.07.2018.
13.     Request to set right the discrepancies n the Divisional LRPA List issued on 10.05.2019
14.     Request to sufficient supply of A4 Papers and LBT tags to all SOs.
15.     Scarcity of water problem and carry out the repairs work of bore well at Manur S.O.
16.     It is requested to nominate representative from sevice union (viz NFPE)for attending Periodical co-ordination meeting being held at CGHS.As of now only retired officials are being invited to the meeting.
17.     The municipal water connection of Ambasamudram HO was disconnetd.kindly take early action to restore the water connection thro municipal authorities .
1.      Maintenance work of Sankar Nagar SO has since been completed. After completion of electrical fitting, the building will be suitable for housing post office. It is requested to make arrangement for early shifting of PO.
2.      It is requested to issue suitable instruction to all  Postmasters , Tirunelveli HO to rotate the officials working in General branches once in a year as per the extant instructions.
3.      Shri Arumugam PA Manur(who was transferred to Manur from Tvl HO on 2018) was attached temporarily to Tirunelveli HO under medical grounds. As the period of attachment is going to be completed by 31.05.2019, it is requested to repatriate him and relieve Shri G Sivakumar, Treasurer of this union under immunity grounds (This case is also pending nearly one year)

                                                Pending Subjects
1.03/2019 Request to allot a room for female staff restroom at Palayamkottai
2.91/2018 revise MDW of Palayamkottai
3.05/2019 Request preparation of MDW for general &SB Branch of Tirunelveli HO
4..It is requested to refund deducted for the LTC availed by the officials for J&K  based on the audit observations.
5.Early implementation of Directorate   orders on counting of induction training period prior 01.01.1986 for grant of financial up gradation of TBOP/BCR
            The following officials will attend the meeting.
1.      S.K.Jacobraj  Divisional Secretary &LSG PA Tirunelveli HO
2.      S.Muthumalai PA Sankarnagar
3.      R.V.Thiyagaraja Pandian SPM Kilambur


             
                         Yours faithfully


[S.K.JACOBRAJ]


Thursday, May 30, 2019

CONFEDERATION NATIONAL SECRETARIAT MEETING
ON 04-07-2019 - NEW DELHI

NOTICE

No.Confdn/Notice/2016-19                               Dated 27-05-2019

Meeting of the National Secretariat of Confederation of Central Government Employees & Workers will be held on 04-07-2019 (04thJuly2019, Thursday) at 03-00pm    at NFPE Office, 1st Floor, North Avenue Post Office Building,    New Delhi – 110 001.

All National Secretariat Members (including office bearers of Women’s Subcommittee) are requested to attend the meeting in time.

The following shall be the agenda of the meeting:

- Agenda -

(1) Pending demands of the Central Government Employees - New Government and our approach including future course of action.
(2) Preparations for the next National Conference of Confederation.
(3) All India Trade Union Education Camp of Confederation.
(4) Financial review.
(5) Any other items with the permission of the Chair.

Yours fraternally,

             M.KRISHNAN
Secretary General,Confederation

தேனி கோட்டத்தின் முன்னணி தலைவர் -நமது பேரவையின் ஆற்றல்மிகு  தோழர் மோகன் அவர்கள் பணிநிறைவு விழா --
தோழர் மோகன் LSG PA உத்தமபாளையம் தேனி 
நாள் 31.05.2019 
தேனாய் இனித்திடுவார் 
தேனியாய் செயல்படுவார் --
தோழர் எவருக்கும் கேடு என்றால் 
தேளாய் மாறிடவும் தயங்கிடார் 
எங்கள் மோகன் வாழ்கவே !
எத்தனை சுறுசுறுப்பு --இன்னமும் 
எத்தனை ஈடுபாடு 
தேனி கோட்டத்தில் -நம் இயக்கம் 
தேயாமல் பார்த்திட்ட தோழர் இவர் 
இளையவர்களை ஈர்த்திடும் தன்மை உண்டு 
புதியவர்களை வார்த்திடும் திறமை அதிகம் உண்டு 
ஓய்விற்கு பிறகும் -உனக்கு 
ஓய்வில்லை இயக்கத்தில் --
ஓயவில்லை -நம் பயணம் 
ஒருநாளும் என உணர்ந்து 
ஆற்றிடுவாய் உன் பணியை ஆனந்தமாய் !
அடுத்த கட்டத்திற்கு புறப்படுவாய் ஆயத்தமாய் !
                                  வாழ்த்துக்களுடன் 
                           -------------------------  SK .ஜேக்கப் ராஜ் -----------------













Monday, May 27, 2019

          அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
 இந்த மாத மாதாந்திர பேட்டிக்காக இதுவரை 12 SUBJECTS வந்துள்ளது . வேறு ஏதேனும் இருந்தால் இன்று மாலைக்குள் கோட்ட செயலருக்கு தெரிவிக்கவும் .மாதாந்திரப்பே ட்டி வருகிற 31.05.2019 வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிக்கு நடைபெறுகிறது .
மாதாந்திர பேட்டிக்கு அஞ்சல் மூன்றின் சார்பாக 
தோழர்கள் ஜேக்கப் ராஜ் முத்துமாலை மற்றும் தியாகராஜபாண்டியன் அவர்களும் அஞ்சல்நான்கின் சார்பாக 
தோழர்கள் SK .பாட்சா புஷ்பா காரன் மற்றும் தங்கராஜ் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள் .
CEA சாங்க்ஷன் செய்தபிறகும் கிடைக்காத கொடுமை -டெபுடேஷன் அனுப்பும்போது கொடுக்கப்படும் DA வை அதிகரிப்பது -DGL சீனியாரிட்டி குளறுபடிகளை சரிசெய்வது என நமக்கு தோழர்கள் தெரிவித்த  பிரச்சினைகள் இடம்பெற்றுள்ளன .
               RULE 38 இன் கீழ் இடமாறுதல் பெற்ற தோழர்கள் நமது கோட்டத்திற்கு JOIN பண்ண தொடங்கிவிட்டார்கள் .தோழியர் சுதா கரூர் அவர்கள் இன்று மூ லைக்கரை பட்டியில் JOIN பண்ணுகிறார்கள் .அவர்களை NELLAI NFPE வாழ்த்தி வரவேற்கிறது .
நன்றி .தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Saturday, May 25, 2019

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
             நமது SSP அவர்களுடனான மாதாந்திர பேட்டி வருகிற 31.05.2019 அன்று நடைபெறுகிறது .இரண்டு மாத கால இடைவெளியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் விவாதிக்கவேண்டிய உங்கள் பகுதி பிரச்சினைகள் .பொது பிரச்சினைகள் இருப்பின் இன்று 25.05.2019 குள் கோட்ட செயலர்களிடம் தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம் .
                            குரூப் B பதவியில் இருந்து JTS குரூப் A  பதவி உயர்வு பெறுகின்ற பட்டியில் 23.05.2019 அன்று வெளியிடப்பட்டுள்ளது .இதில் 9 அதிகாரிகள் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளனர் ..இதில் நமது முன்னாள் SSP திரு .VPC மற்றும் SSRM (MA ) திரு .J.சாமுவேல் ஜவஹர் ராஜ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளார் .அவர்களுக்கு நெல்லை NFPE வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது .
         தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Wednesday, May 22, 2019

                                                    முக்கிய செய்திகள் 
       
தமிழகத்தில் GDS ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை கோரியவுடனே ஏற்கனவே இடமாறுதலுக்கு விண்ணப்பித்திருக்கும் GDS ஊழியர்க்ளுக்கு இடமாறுதல் கொடுத்துவிட்டு மீதி உள்ள இடங்களுக்கு புதிய ஆட்களை நியமிக்கலாம் என்ற நமது கோரிக்கைகளை நிர்வாகம் புறக்கணித்தநிலையில் நியாயம் கேட்டு திண்டுக்கல் GDS சார்பாக  நீதிமன்றம் சென்ற ஊழியர்களுக்கு நிவாரணமாக இந்த வழக்கைசென்னை CAT (VACATION COURT ) ஏற்று  ADG அவர்களின் 15.04.2019 தேதியிட்ட அறிவிப்பிற்கு பதில் அளிக்கவேண்டியும் மீண்டும் இந்த வழக்கு 10.06.2019 அன்று நடைபெறும் என்றும் 15.05.2019 அன்று இருதரப்பிற்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது .ஏற்கனவே இடமாறுதல் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு தகுதிகளின் அடிப்படையில் மாறுதல் வழங்கிய பின்பே ஆன்லைன் நியமனம் மேற்கொள்ளவேண்டும் என்பதே இந்த வழக்கின் சாராம்சம் .
                                                  --------------------------------------------------------------
நீதி கேட்டு வீதியில் போராடியகாலம் என்பது மெல்ல மெல்ல மறைந்து போய் இன்று கோரிக்கைகளை வெல்ல நீதிமன்ற கதவுகளை தட்டவேண்டிய நிலைக்கு எல்லா துறையிலும் ஊழியர்கள் தள்ளப்பட்டுள்ளது சர்வ சாதாரணமாகி விட்டது .
 உதாரணமாக MACP பதவிஉயர்வினை 01.01.2006 முதல் வழங்கிடவேண்டும் என்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் அளித்தாலும் அது DEFENCE ஊழியர்களுக்கு மட்டும் தான் சிவில் ஊழியர்களுக்கு பொருந்தாது என்ற பாரபட்சத்தை நீக்கிட நாமும் நீதிமன்றம் சென்றால் என்ன என்ற எண்ணம் நமக்குள் எழுகிறது .இந்த வழக்கை தொடுத்திட நமது முன்னாள் கோட்டசெயலர் தோழர் R .ஹரிஹரகிருஷ்ணன்மேனேஜர் PSD திருநெல்வேலி  நமக்கு ஆலோசனைகள் வழங்கிவருகிறார்கள் .இது குறித்து நமது மாநிலச்சங்கத்திடம் விரைவில் பேசி மாநிலசங்கமே இந்த வழக்கை எடுத்து நடத்திட நாம் வலியுறுத்தவுள்ளோம் .எல்லா பிரச்சினைகளிலும் முன்கையெடுத்து செல்லும் நம் மாநிலம் இந்த பிரச்சினையிலும் முன்னின்று நடத்த வேண்டும் என்பது எங்கள் நம்பிக்கை .
 தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Tuesday, May 21, 2019

    CCL  காலங்களிலும் LTC செல்லலாம் -DOPT உத்தரவு 
No. 13018/6/2013-Estt(L)
Government of India
Ministry of Personnel, Public Grievances and Pensions
Department of Personnel & Training
****
Old JNU Campus, New Delhi 110 067
Dated: 3rd April, 2018
OFFICE MEMORANDUM
Subject: Child Care Leave (CCL) — Clarification Reg.
The undersigned is directed to refer to DoPT’s O.M. No. 21011/08/2013- Estt.(AL), dated 25.03.2013 and to say that references have been received with regard to leaving Head Quarters/Station while on CCL and availing LTC during CCL.
2. In this regard, it is has now been decided that:
(i) An employee on CCL may be permitted to leave headquarters with the prior approval of appropriate competent authority.
(ii) LTC may be availed while an employee is on CCL.
(iii) An employee on CCL may proceed on foreign travel provided clearances from appropriate competent authorities are taken in advance.
3. Hindi version will follow.                                  


Monday, May 20, 2019

                                            முக்கிய செய்திகள் 
1.GDS பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு (ஊதியத்துடன் ) அந்தந்த கோட்ட அதிகாரியே வழங்குவார் .என்று அஞ்சல்  வாரியம் தனது 17.05.2019 தேதியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளது 
2.எழுத்தர் பதவி உயர்விற்கான  LGO தேர்வு எழுத நடைமுறையில் இருந்த 8 வாய்ப்புகள் என்பது நீக்கப்பட்டு எத்தனைமுறை என்றாலும் தேர்வெழுதலாம் என்று 13.05.2019 அன்று அஞ்சல் வாரியம் தெரிவித்துள்ளது .
3. தமிழகத்தில் GDS  பதவிகளை ஆன்லைன் மூலம் நிரப்பிடும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது .இதற்காக நமது நெல்லைக்கோட்ட SSP அவர்களும் இந்த பணிகளுக்காக சென்னைக்கு டெபுடேஷன் யில் சென்றுள்ளார்கள் . வருகிற 23.05.2019 வரை மதுரை கோட்ட SSP அவர்கள் நமது கோட்டத்திற்கு கூடுதல் பொறுப்பு ஏற்றுள்ளார்கள் .
4.ஆதார் பணிகளில் தகுதியுள்ள GDS /MTS ஊழியர்களை பணி அமர்த்திட மாநில நிர்வாகம் 14.05.209 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளது .இந்த பணிகளுக்கு தபால்காரர்களை அனுமதிக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
    நன்றி 
தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

HSG I &HSG II நியமனவிதிகளில் மாற்றம் செய்திட முனையும் திட்டத்தை கைவிட கோரி நமது மத்திய சங்கம் அஞ்சல் வாரியத்திற்கு எழுதிய கடிதம் .பதவி உயர்வில் பழைய நிலையே தொடரவேண்டும் .

              ALL INDIA POSTAL EMPLOYEES UNION GROUP ‘C’ CHQ 
         Dada Ghosh Bhawan, 2151/1, New Patel Road, New Delhi - 110008

Ref: P/4-3/Recruitment/HSG Gr’ II & I                                                                    Dated – 17.05.2019

To
The Secretary,
Dept of Posts,
New Delhi 110001

Sir,

Sub: - Regarding amendment of the Recruitment Rules for the post of Higher Selection Grade II & I 

Ref: -   Yr F.No X-3/1/2019-SPN II dated 13/5/2019

With reference to you above cited letter on the subject, we wish to record our strong resentment against the introduction of LDCE in HSG I and HSG II posts. 100% of these posts should be allowed to continue as if now under the seniority cum fitness.

It is pertinent to remind that the Secretary Posts have given the assurance in the Departmental Council meeting at the time of formulation of revised RR for HSG II & HSG I that it will take a proposal to DOPT to reduce the eligibility service condition of 6 years and five years to three years as per status quo ante provision. If the amendment is made, there will be no vacant posts in HSG II & HSG I and almost all the officials will get their due HSG II & I promotions.

Furthermore, we have requested several times to provide one time relaxation to the eligibility condition for filling up the vacant HSG II & I posts since bulk number of officials were promoted to LSG due to cadre restructuring and they will become eligible for HSG II promotion after six years and thereafter for the next promotion after five years. If the examination is introduced now, it will mar the fair chances to the LSG officials.

Therefore, it is requested to drop the proposal of introduction of LDCE in HSG II & HSG I in the proposed recruitment rules and allow the status quo in this regard.

Soliciting favourable response,

Yours faithfully,

 (R. N. Parashar) 
General Secretary

Tuesday, May 14, 2019


அன்பார்ந்த தோழர்களே !
 GDS TO PA தேர்விற்கு ஆயத்தமாகும் எனதருமை GDS தோழர்களின் வேண்டுகோளுக்கிணங்க பயிற்சிவகுப்புகள் நடத்தப்படுகின்றன .
2014 க்கு பிறகு நடைபெறும் தேர்வினை திறமையுள்ள GDS ஊழியர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறோம் 
2015-2016, 2016-2017, 2017-2018 and 2018 (01.04.2018 to 31.12.2018 ஆண்டிற்கான காலியிடங்களுக்காக நடத்தப்படுகிறது .+2 முடித்திருந்த 5 ஆண்டு GDS சேவை முடித்தவர்கள் இந்த தேர்வுக்கு தகுதியானவர்கள் 16.06.2019 அன்று நடைபெறவிருந்த தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதே தவிர ரத்து செய்யப்படவில்லை .பாடத்திட்டங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன .
                                       1. Paper – I 
General English/Hindi & grammar, Arithmetic and Tabulations.
                                       2. Paper – II 
There is two part in Paper – II examination. Part – A & Part – B. Part -A is for Postal Assistant & Part – B is for Sorting Assistant.
i. Part -A: Knowledge of Postal and mail operations with reference to post office guides.
ii. Part – B:- Postal Manual Volume -VII.
விருப்பமுள்ள GDS ஊழியர்கள் நமது பயிற்சியாசிரியர் 
திரு .பாலசுப்ரமணியன் RETD ASP திருநெல்வேலி அவர்களை நேரிடையாகவோ அல்லது தொலைபேசியிலோ தொடர்புகொள்ளலாம் .
திரு .பாலசுப்ரமணியன் RETD ASP (OD ) 9442149339 சமாதானபுரம் பாளையம்கோட்டை 
நன்றி .தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                  சுழல் மாறுதல் எனும் சூப்பர் மாறுதல்கள் 
  நமது கோட்டத்தில் நேற்று சுழல் மாறுதல் உத்தரவுகள் ,அதைத்தொடர்ந்து RULE 38 மாறுதல்கள் என மொத்தம் சுமார் 136 ஊழியர்கள் இடம்பெற்றுள்ள மெகா மாறுதல் உத்தரவுகள் வந்துள்ளன .ஆரம்பத்திலே கோட்ட நிர்வாகம் சொன்னபடி சீனியாரிட்டி முற்றிலும் கடைபிடிக்கப்படும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவும் வெளிப்படையாகவும் இருந்ததால் இந்த இடமாறுதல்கள் குறித்து நமது ஊழியர்கள் யாரும் எந்தவித பரபரப்போ -படபடப்போ இல்லாமல் இருந்தார்கள் என்பதும் உண்மை . சிலவருடம் சுழல் மாறுதல் சூறாவளியாக நம்மை தாக்கியதுண்டு -சூழ்ச்சிகள் நிறைந்த சுழல் மாறுதல்களையும் சந்தித்துள்ளோம் .ஆனால் இவ்வளவு பெரிய அளவில் நடைபெற்ற இடமாறுதல்களில் சிறுசிறு மாற்றங்களை தவிர ஊழியர்களின் விருப்பத்தின் அடிப்படையில் மாறுதல்கள் வழங்கிட்ட நமது முதுநிலை கண்காணிப்பாளர் அவர்கள்மற்றும்  அவர்களுக்கு உறுதுணையாக செயல்பட்ட உதவி (ய )கண்காணிப்பாளர்கள் கோட்ட அலுவலக ஊழியர்கள் என அனைவருக்கும் நெல்லை NFPE தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது  .
              கடந்த சிலவருடங்களாக டெபுடேஷன் விஷயத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட மூத்த ஊழியர்களுக்கு ஒரு விடிவு கிடைத்திருக்கிறது -எத்தனை வழிகாட்டுதல் வந்தும் நமது ஊழியர்களை குறிவைத்து விரட்டிய கொடுமைக்கு ஒரு முடிவு வந்துள்ளது ..குறிப்பாக ஆட்பற்றாக்குறையினால் தலைமை அஞ்சலங்களில் மூடப்பட்ட கவுண்டர்கள் ஆதார் சேவை ,BPC ,BACK OFFICE போன்ற பிரிவுகளில் இனி முழுமையாக ஆட்களை நியமிக்க கோட்ட சங்கம் உறுதிப்படுத்தும் .
    குறிப்பாக திருநெல்வேலி தலைமை அஞ்சலத்திற்கு அறிவிக்கப்பட்ட காலி இடங்கள் மொத்தம் -- 15 வ(த )ந்ததோ 18
பாளையங்கோட்டையில்  22 இடங்களுக்கு 20 இடங்கள் கிடைத்துள்ளன ..அம்பாசமுத்திற்கு 6 இடத்திற்கு 8 ஊழியர்கள் வருகிறார்கள் .அதுபோக மிக நீண்ட காலமாக அம்பாசமுத்திரத்தில் நீடித்து வந்த ஆட்பற்றாக்குறை அடியோடு நீக்கப்பட்டுள்ளது .ஆரம்பத்தில் இருந்தே நமது SSP அவர்களும் அம்பாசமுத்திரத்தில் ஆட்பற்றாக்குறையை முற்றிலும் நீக்குவேன் என்று சொல்லிவந்தார்கள் .அவர்களது எண்ணத்தின்படியே RULE 38 யில் வந்த ஊழியர்களில் முப்பத்தி மூன்றில் பதினைந்து ஊழியர்கள் அம்பாசமுத்திரம் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளனர் .இதுபோக கடந்த காலங்களில் தொலைதூர இடங்களுக்கு மாற்றப்பட்டு TENURE  முடிக்காமல் ஆனால் விண்ணப்பித்திருந்த பழைய விருப்பகடிதங்களின் அடிப்படையில் பல ஊழியர்களுக்கு இடமாறுதல்களை கொடுத்து பேருதவி செய்ததையும் மறக்கமுடியாது .அதேபோல் LRPA அட்டாச் செய்வதிலும் Re designate ஆன ஊழியர்களை அவர்களின் விருப்பங்களுக்கேற்ப  இடமாறுதல்கள் தந்ததையும் ஊழியர்கள் நன்றியோடு நினைவு கூறுகின்றனர் .இருந்தாலும் விடுபட்ட அல்லது புதிய விருப்பங்களையும்  கோட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு விரைவில் எடுத்துச்சென்றுமுற்றிலுமாக  நிவர்த்திசெய்வோம் என்று உங்களுக்கு உறுதி கூறுகின்றோம் 
                LSG இடமாறுதல்களை பொறுத்தவரை மண்டல அலுவலக ஒப்புதலுக்கு சென்றுள்ளன .அவைகளும் விரைவில் வந்தவுடன் நமது கோட்டத்திற்கு RE ALLOTMENT பெற்ற LSG ஊழியர்கள் பயன்பெறுவார்கள்          
          மேலும்  மண்டல  நிர்வாகத்தால் வெளியிடப்பட்ட போஸ்ட்மாஸ்டர் கிரேடு I  இடமாறுதல்கள் உத்தரவுகள் ஏற்கனவே வெளிவந்த கிரேடு III உத்தரவுகளையும் விரைந்து அமுல்படுத்த வேண்டும் எனவும் கோட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறோம் .
                 தோழர்களே ! மற்ற கோட்டங்களை ஒப்பிட்டு பார்க்கையில் ஆட்பற்றாக்குறை என்பது நமது கோட்டத்தில் இல்லை என்பதும் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் RULE 38 இடமாறுதல்களில் ஊழியர்கள் வந்ததும் நமது மாநிலச்சங்கம் எடுத்த மகத்தான முயற்சி என்பதை நினைவில் கொண்டு இந்த NFPE பேரியக்கத்தின் வலிமையை மீண்டும் நிலைநாட்ட தோழர்கள் உறுதிபூண்டு செயல்படவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் .
                                               BE PROUD BEING A MEMBER OF NFPE 
            நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Friday, May 10, 2019

 அன்பார்ந்த தோழர்களே !
                               COD யில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க அஞ்சலக பார்சல் வாரியம் 09.05.2019 அன்று அனுப்பியுள்ள கடிதத்தில் புதிய நடைமுறைகளை பின்பற்ற அறிவித்துள்ளது .தொடக்க காலம் முதலாகவே COD பார்சல் மூலமாக அஞ்சலக வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுவதையும் அதனால் பொதுமக்கள் மத்தியில் அஞ்சல்துறைக்கு உள்ள நற்பெயர் மெல்லமெல்ல சிதைந்து வருவதையும் நமது தொழிற்சங்கங்கங்கள் எல்லா மட்டங்களிலும் எடுத்துரைத்தும் பாராமுகமாக இருந்த நிர்வாகம் இப்பொழுதான் அதற்கான நடைமுறைகளை அறிவித்துள்ளது .இனிமேல் COD BULK /RETAIL  வாடிக்கையாளர்கள் அதில் உள்ளடக்கம் குறித்த விவரங்களை பொதுவான DECLARATION ஒன்றை கொடுக்கவும் ANNEXURE A படிவத்தையும் இணைத்து வழங்கிடவேண்டும் ..இதன்மூலமாகவாவது அப்பாவி பொதுமக்கள் விளம்பரங்களை கண்டு ஆன்லைன் மூலம் பொருள்களை வரவழைத்து பணம்கட்டி  அஞ்சல் அலுவலகங்கள் மூலமாக ஏமாறுவது தடைபட்டால்  நல்லது. 
                              IPPB குறித்த அடுத்த அறிவிப்பு 
 சென்ற ஏப்ரல் மாத கணக்கெடுப்பின் படி IPPB யின் பிசினஸ் வளர்ச்சி என்பது சொல்லும்படியாக இல்லை என்றும் அதை மேம்படுத்த செய்ய வேண்டிய வழிமுறைகளை குறித்தும் IPPB யும் PBI யும் கலந்தாலோசித்து சில முடிவுகளை எடுத்துள்ளதாக 9.05.2019 அன்று ஒரு அறிக்கையை அனைத்து மாநிலநிர்வாக அலுவலகங்களுக்கும் அனுப்பியுள்ளது .வழக்கம் போலவே IPPB பணிகளுக்கு நமது ஊழியர்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று தொடங்கி DOOR-STEP பரிவர்த்தனை வரை பொதுமக்கள் மத்தியில் அதிகமாக கொண்டுசெல்லப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது .
     கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலையும் கதைபோல --PLI வாடிக்கையாளர்களை தொழிற்சார் கல்வி முடித்தவர்கள்வரை விரிவு படுத்தியபிறகாவது PLI பிரிமியம் IPPB மூலம் செலுத்த  அஞ்சல்துறைக்கு வழங்கப்பட்ட ஆலோசனைகள் கிடப்பிலே போட்டுவிட்டு வெறும் RECHARGE மற்றும் EB BILL உள்ளிட்ட மூன்றாம் நிலை தயாரிப்புகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அஞ்சல் வாரியம் ஏன் நமது சொந்த தயாரிப்புகளுக்கு கொடுக்கவில்லை என்பது புரியாத புதிராக இருக்கிறது .IPPB மூலம் PLI -RPLI பிரிமியம் செலுத்துவதற்கு முயற்சித்தாலே IPPB சேவை தானாகவே பிரபலமாகும் என்பதே சாதாரன ஊழியர்களின் கருத்துக்கள் .
எங்கள் ஆலோசனைகள் ஏற்கப்படுமா ?
தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Thursday, May 9, 2019

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                நமது தென்மண்டல PMG அவர்களுடனான இருமாதாந்திர (BI -Monthly ) பேட்டி 17.05.2019 அன்று மதுரையில் நடைபெறுகிறது .
பேட்டியில் விவாதிக்க கொடுத்துள்ள சப்ஜெக்ட்கள் உங்கள் பார்வைக்கு ..............

  1.    Filling up of vacant HSG II & HSG I posts on adhoc basis on regional basis – regarding
(i)                  In specific circumstances in which strict adherence to the procedure as enjoined in Rule 50(1) and (2) of Postal Manual Vol. IV may not be practicable and desirable from the administrative point of view, the competent authority may at his discretion make acting arrangements according to administrative requirements, vide DG’s letter no. 137-64/2010-SPB.II   Dated 28th July, 2011.  According to this discretionary clause also, the PMG may kindly consider filling up of the above vacant posts on adhoc and temporary basis.
It is further learnt that in all the divisions the vacant HSG II & I posts are being managed by the staff locally without calling for the volunteers among the division for the period of less than 4 months and by the RO for the periods beyond 4 months. Even some temporary PAs are being posted to manage the posts under the local arrangements.
நமது கோட்டத்திலும் இரண்டுமுறை விருப்பமனுக்கள் கோரப்பட்டு பிறகு கிடப்பிலே போடப்பட்டுவிட்டது .மீண்டும் கோட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி HSG II & HSG I பதவிகளை ADHOC முறையில் நிரப்பிட வலியுறுத்துவோம் .இதுகுறித்து CPMG அலுவலகம் 16.02.2017 அன்று LOCAL ARRANGEMENT எவ்வாறு நிரப்புவது என்று அனைத்து மண்டலங்களுக்கும் தாக்கீது அனுப்பியுள்ளது .OFFICIATING பார்க்க விருப்பமுள்ள மூத்த தோழர்கள் /தோழியர்கள் இந்தவாய்ப்பு பயனுள்ளதாக இருக்கும் .இரண்டாவது TA BILL சம்பந்தப்பட்டது 
     2. Inadequate allotment of funds to clear pending TA bills in all the divisions under Southern region – request action
                                                                             FLASHNEWS 
சுழல் மாறுதல் /RULE 38 வந்தவர்களுக்கான மாறுதல்களுக்கான கமிட்டி நமது கோட்டத்தில் 10.05.2019 அன்று நடைபெறுகிறது .கமிட்டியின் தலைவராக நமது SSP அவர்களும் ஒரு உறுப்பினராக  கன்னியாகுமரி SSP அவர்களும் மற்றொரு உறுப்பினராக ASP(HOS) அவர்களும் இருப்பார்கள் .அண்டை கோட்டங்களில் எல்லாம் RT வெளிவந்துள்ளநிலையில் நமது கோட்ட தோழர்களின் ஆர்வம் கூடுதலாக இருப்பது இயற்கைதானே !
நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Wednesday, May 8, 2019

   தேனி கோட்ட அஞ்சல் நிர்வாகத்திற்கு பாராட்டுக்கள் 
1.1.86க்கு முன்னதாக பணியில் அமர்ந்த ஊழியர்களுக்கு அவர்களுக்கு உண்டான  பணிப் பயிற்சி காலமும் சேவைக் காலத்தில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு TBOP/BCR தேதி முன் கூட்டப்பட்டு அதற்குண்டான ஊதிய நிர்ணயம் மற்றும் நிலுவைத் தொகை வழங்க வேண்டு மென்ற இலாக்கா உத்திரவை  பல கோட்டங்களில் சரியாக செயல் படுத்தவில்லை. தற்போது தேனி கோட்டத்தில் கடந்த 3.5.19 ல் இதற்கான உத்திரவு 19 ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. .நமது கோட்டத்திலும் இதற்கான DPC அறிவிக்கப்பட்டு இரண்டுமுறை தள்ளிவைக்கப்பட்டது நினைவிருக்கும் .நெல்லை கோட்டத்திலும் விரைந்து இந்த பணிகள் முடித்திடவேண்டும் என்பதே ஊழியர்களின் எதிர்பார்ப்பு .
-----------------------------------------------------------------------------------------------------------------------
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் 
--------------------------------------------------------------------------------------------------------------------------

Tuesday, May 7, 2019

                                                முக்கிய செய்திகள் 
அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                                             நமது நெல்லை கோட்டத்தில் Rotational Transfer ,LSG Re allotment வந்தவர்களுக்கு இடமாறுதல்   .விருப்ப விண்ணப்பங்கள் பரிசீலனை மற்றும் Rule 38 யின் கீழ் வரும் ஊழியர்களுக்கு இடமாறுதல் என கிட்டத்தட்ட 100 ஊழியர்களுக்குமேல் இடமாறுதல் உத்தரவுகள் பிறப்பிக்கப்படவுள்ளன .இது குறித்து நமது SSP அவர்களை நேற்று சந்தித்து பேசினோ ம் .
1.Rotational Trasnfer யை  பொறுத்தவரை கூடுமானவரை ஊழியர்களின் முதல் விருப்ப இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன .என்றும் எந்த ஊழியர்களும் பாதிக்கப்படாத வண்ணம் இடமாறுதல்கள் இறுதிசெய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்கள் .
2.LSG Re -allotment பெற்றுள்ள ஊழியர்களுக்கும் இடமாறுதல் சேர்த்தே வெளியிடப்படவுள்ளன .
3.நமது கோட்டத்திற்கு கிருஷ்ணகிரி கோட்டத்தில் இருந்து 
LSG Re allotment மூலம் மீண்டும் இடமாறுதல் பெற்று வரும் தோழியர் சங்கரி SPM பெளத்தூர் அவர்களையும் வாழ்த்தி வரவேற்கிறோம் .
4.கடந்த LSG இடமாறுதலில் மேல்முறையிடு செய்த தோழர் துளசிராமன் அவர்களின் மனுவிற்கும் மண்டல அலுவலகத்தில் இருந்து SPECIFIC COMMANDANTS கேட்டு கடிதம் வந்துள்ளது .இதுகுறித்து ஏற்கனவே மாநிலச்சங்கமும் PMG SR அவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது .மாநிலச்சங்க  நடவடிக்கைகளுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம் .
    நன்றி .தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Saturday, May 4, 2019

அன்பார்ந்த தோழர்களே !
                              சுழல் மாறுதல் குறித்து இன்று நடைபெறும் நமது கோட்ட சங்க செயற்குழுவில் விவாதிக்கவிருக்கிறோம் .கோட்ட நிர்வாகமும் ஒரு வெளிப்படையான அணுகுமுறையை கையாண்டுவருவது வரவேற்கத்தக்கது .மொத்தமுள்ள 96      இடங்களுக்கு சுமார் 75  (73+2 ) ஊழியர்கள் இந்த சுழல் மாறுதலில் இருக்கிறார்கள் .நமது கோட்டத்தில் 01.07.2018 வரையிலான DIVISIONAL GRADATION LIST அடிப்படையில்  ஒரு வரிசைப்பட்டியலை தயாரித்து உங்கள் பார்வைக்கு தந்திருக்கிறோம் .இதில் இருந்தே உங்களுக்கு ஒரு புரிதல் கிடைக்கும் என்று நம்புகிறோம் .நமக்கு ஜூனியர் யார் ? சீனியர் யார் ? என்ற தெளிவும் கிடைக்கும் .மீதமுள்ள இடங்கள் முழுவதும் RULE 38 யில் வரும் ஊழியர்களை கொண்டு நிரப்பப்படும் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

                                              கோட்ட சங்க செயற்குழு கூட்டம் 
அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                          நாம் ஏற்கனவே அறிவித்தபடி நமது கோட்ட சங்கத்தின் செயற்குழு கூட்டம் 04.05.2019 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு கோட்டத்தலைவர் தோழர் T .அழகுமுத்து அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது .செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் .
                                                                    செயற்குழு கூட்டம் 
நாள் 04.05.2019    சனிக்கிழமை 
நேரம் மாலை 6 மணி 
இடம் திருநெல்வேலி HO
தலைமை .தோழர் .T .அழகுமுத்து அவர்கள் பொருள் --1.சுழல் மாறுதல் 2019
                        2.RULE 38 இடமாறுதல் 
                       3.டெபுடேஷன் விதிமீறல்கள் 
                        4. இன்னும் பிற (தலைவர் அனுமதியுடன் )
          செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் புதிய உறுப்பினர்கள் அனைவரும் செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் 
                                               நன்றி .
                                                               தோழமை வாழ்த்துக்களுடன் 
                                                                      SK .ஜேக்கப் ராஜ் 
                                                                          கோட்ட செயலர் நெல்லை 

Thursday, May 2, 2019

    அன்பார்ந்த தோழர்களே !
          இந்த ஆண்டு சுழல் மாறுதளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 03.05.2019 ஆகும் .ஆகவே நமது உறுப்பினர்கள் சுழல் மாறுதலுக்கு விண்ணப்பித்தவர்கள் அதன் தகவல்களை கோட்ட சங்கத்திற்கு தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .அதே போல் சுழல் மாறுதலோடு RULE 38 யின் கீழ் நெல்லை கோட்டத்திற்கு வருகின்ற அனைத்து ஊழியர்களும் இடமாறுதல் உத்தரவுகளும் பிறப்பிக்கப்படும் .ஆகவே RULE 38 யின் கீழ் வருகின்றவர்களும் ஏற்கனவே தகவல்கள் தெரிவித்திருந்தாலும் மீண்டும் ஒருமுறை (RT NOTIFICATION க்கு பிறகு ) 9442123416 என்ற கோட்ட செயலரின் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம் .
               நெல்லை அஞ்சல் மூன்று புதிய உறுப்பினர்களை வாழ்த்தி வரவேற்கிறோம் 
1.தோழர் M.ரமேஷ் PA பேட்டை 
2.தோழியர் A.வெற்றி செல்வி PA களக்காடு 
3.தோழர் M.சபரி மணிகண்டன் PA களக்காடு 
4.தோழர் P.ஜெய குமார் PA அம்பாசமுத்திரம் 
5.தோழியர் S.சுந்தரதேவி PA நாங்குநேரி 
6.தோழியர் J.ரோகினி PA அம்பாசமுத்திரம் 
7. தோழியர் V.முருகானந்தி PA அம்பாசமுத்திரம் 
8. தோழர் R.அதிநாராயணன் PA அம்பாசமுத்திரம் 
9.தோழர் S .நாராயணன் PA களக்காடு 
10.தோழர் M.ஆசை தம்பி PA திசையன்விளை 
                                           அவசர செயற்குழு கூட்டம் 
நாள் 04.05.2019    சனிக்கிழமை 
நேரம் மாலை 6 மணி 
இடம் திருநெல்வேலி HO
பொருள் --1.சுழல் மாறுதல் 2019
                        2.RULE 38 இடமாறுதல் 
                       3.டெபுடேஷன் விதிமீறல்கள் 
                        4. இன்னும் பிற (தலைவர் அனுமதியுடன் )
          செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் புதிய உறுப்பினர்கள் அனைவரும் செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் 
                                                    வாழ்த்தி வரவேற்கிறோம் 
 புதிய ASP (HOS ) திரு .மாரியப்பன் அவர்கள் இன்று நமது கோட்டத்தில் பொறுப்பேற்கிறார் .அவர்களை நெல்லை NFPE வாழ்த்தி வரவேற்கிறோம் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 
                                           


                           


Wednesday, May 1, 2019

தொழிற்சங்க இலக்கணம்


தொழிலாளர் இயக்கம்
பத்தாயிரம் முறை விழும்
எழும் வடுபடும் மறுபடியும் எழும்
அதன் குரல்வளை இறுக்கப்படும்
உணர்வற்றுப் போகும் வரை
தொண்டை அடைக்கப்படும்
நீதிமன்றம்
கேள்விக்கணைகளைத் தொடுக்கும்
குண்டர்களால் தாக்கப்படும்
பத்திரிகைகளால் வசைபாடப்படும்
பொதுமக்களின் புருவ நெரிப்பும் கூட போர் தொடுக்கும்
அரசியல்வாதிகளால் ஏய்க்கப்படும்
ஓடு காலிகளால் மறுப்புரைகள் கூறப்படும்
சூதாடிகளால் பலிகொடுக்கப்படும்
உளவாளிகளின் ஒற்றறியும் நோயால் பீடிக்கப்படும்
கோழைகளால் நடு வீதியில் விடப்படும்
துரோகிகளால் வஞ்சிக்கப்படும்
அட்டைகளால் உறிஞ்சப்படும்
தலைவர்களால் கூட விற்று விடப்படும்
ஓ………………..
இவ்வளவு சோதனைகள் இருந்தாலும்
இந்த வையகம்
இதுவரை கண்டிராத
உன்னத சக்தி வாய்ந்தது
உழைக்கும் மக்களின்
இயக்கம் ஒன்றுதான்.
ஆண்டாண்டு காலமாக
அடிமைப்பட்டிருக்கும் பாட்டாளிகளை
விடுதலை செய்வதே
வரலாற்று கடமையாகும்
இதன் வெற்றி சர்வ நிச்சயமே

(1940ம் ஆண்டு தி மெட்டல் ஒர்க்கர் பத்திரிகையில்
ஈகிள்ஸ்விடப்ஸ் என்னும் தொழிலாளியால் எழுதப்பட்டது)

தோழர்கள் /தோழியர்கள் அனைவருக்கும் மே -தின புரட்சிகர வாழ்த்துக்கள் 
1886-ம் ஆண்டு மே மாதம் 1-ம் தேதியன்று சிகாகோ நகரில் தொழிலாளர்கள் 8 மணி நேரம் வேலை கேட்டு நடத்திய மகத்தான வேலை நிறுத்தப் போராட்டத்தின் அடையாளமே இன்று உலகம் முழுவதும் மே தினமாக கொண்டாடப்படுகிறது.
இப்போராட்டத்திற்கு தலைமை தாங்கிய தோழர்கள் ஆல்பர்ட் பார் சன்ஸ், ஆகஸ்டு ஸ்பைஸ், ஜார்ஜ் ஏங் கல், அடால்ப் பிட்சர் ஆகியோர் தங்களது இன்னுயிரை இதற்காக விலையாக தரவேண்டியிருந்தது. தொழிலாளர் தலைவர்கள் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1887-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ம் தேதி அவர்கள் தூக்கிலிடப்பட்டனர். 
சிகாகோ நகர தொழிலாளர்களுக்கு 8 மணி நேரம் வேலை கேட்டு நடைபெற்ற போராட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்திய தோழர்களில் முதன்மையானவர் தோழர் ஆகஸ்டு ஸ்பைஸ் ஆவார். 
ஆகஸ்ட் ஸ்பைஸோ, ‘இந்த குற்றச் சாட்டே தனக்கு தற்காப்பு வாதமாக அமைந்து விட்டது” என எதிர்வாதம் செய்தார். காவலர்கள் மீது தான் குண்டு வீசியதாக அரசு தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டது இதன்மூலம் பொய் என நிரூபிக்கப்பட்டுவிட்டதாக வாதிட்டார். காவலர்கள் மீது வீசப்பட்ட குண்டு தன்னால் உண்மையில் வீசப்பட்டிருந்தால் அதை நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்வதில் தனக்கு எந்தவித தயக்கமும் கிடையாது என்று தைரியத்தோடு உரைத்தார்.
மற்றொரு தோழர் ஆல்பர்ட் பர்ஸன் நீதிமன்றத்தில் வாதாடுகையில், மரம் கனிகளால் அறியப்படுவதைப் போல் தொழிலாளர்கள், போர்க்குணம் மற்றும் தியாகத்தின் மூலம் தங்களது உண்மையான தலைவர்களை அடையாளம் கண்டுகொள்வார்கள். தங்களுக்கு அளிக்கப்படும் மரணதண்டனை தீப்பொறியாக உலகம் முழுவதும் பரவும் என ஆர்ப்பரித்தார்.
ஆஸ்கர் நீபி என்ற தோழர், கலவரம் விளைவிக்கப்பட்ட இடத்தில் நடந்த கூட்டத்திற்கு தான் தலைமை வகித்தேன் என்ற உண்மையை இந்த நீதிமன்றத்தில் ஒப்புக் கொள்வதாகவும், 8 மணி நேரம் வேலை கேட்டு போராடிய தொழிலாளர்களுக்கு நான் தலைவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப் படுவதாகவும் உரைத்தார்.
அடால்ப் பிட்சர் என்ற தோழர் நீதி மன்றத்தில் உள்ள காவலர்களைப் பார்த்து எள்ளி நகையாடி இவர்களா சட்டத்தின் காவலர்கள்? இவர்கள் திருடர்கள். அடுத்தவர்களின் சொத்தினை அபகரிப்பவர்கள் என எக்காளமிட்டார்.
தோழர் மைக்கேல் ஸ்வாப், நீதி மன்றத்தில் தங்களுடைய நோக்கம் கலகம் விளைவிப்பது அல்ல, சோசலிசத்தை அடைவதே என்று பிரகடனப்படுத்தினார்.
தோழர் ஜார்ஜ் ஏங்கல், தொழிலாளர்களின் தேவை, வேலை, ரொட்டி, அமைதி, இவை மூன்றுதான். இது கூட இவர்களுக்கு இன்று உத்தரவா தப்படுத்தப்படவில்லை என்று முழக்க மிட்டார்.
தோழர் சாமுவேல் பீல்டன் நீதி மன்றத்தில் உரையாற்றுகையில், நாங்கள் சோசலிசத்தைப் பேசினால் சிலர் பயப்படுகிறார்கள் நாங்கள் பிறரின் சொத்துக்களை சோசலிசத்தின் பெயரில் அபகரித்து விடுவோம் என நினைக்கிறார்கள். ஆனால் சோசலிசத்தின் நோக்கம் அது அல்ல.யார் ஒருவர் இன்னொருவருடைய சொத்துக்களை திட்டமிட்டு பறிக்கிறார்களோ அதை தடுத்து நிறுத்தக்கூடிய அமைப்பை உருவாக்குவதுதான் சோசலிசம் என விளக்கினார்.
எதிர்பார்த்தது போலவே அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தீரத்துடன் போராடிய அந்த தோழர்களுக்கு கிடைத்த மரண தண்டனையே முதலாளித்துவத்திற்கு அடிக்கப்பட்ட முதல் சாவு மணியாக மாறியது. 
அவர்களின் மரணமே உலகத் தொழிலாளர்களை ஒன்று சேர்த்திடும் மகத்தான சக்தியாகவும் உழைப்பாளர்கள் கொண்டாடி மகிழும் மே தினமாகவும் இன்று உருவெடுத்து உள்ளது.
வாழ்த்துக்களுடன் நெல்லை NFPE