...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, June 30, 2018

30.06.2018 இன்று பணிநிறைவு பெறுகின்ற தோழர் அப்துல் ரஹீம் SPM ஏர்வாடி அவர்களின் பணி ஓய்வு காலம் சிறக்க வாழ்த்துகிறோம் !

மாமா ரஹீம் வாழ்க !
ஆரம்பம் முதல் இன்றுவரை 
அசைக்கமுடியாத ஆதரவாளர்
அப்துல் ரஹீம் !
தென்பகுதியில் ஏற்பட்ட திடிர் 
நிலச்சரிவில் சிக்காத மாமனிதன் அப்துல் ரஹீம் 
ஆசைக்கு அசையாமல் -ஆணித்தரமாய் 
நம் பக்கம் இருந்தவர் மாமா ரஹீம் 
சோதனைகள் ஒருபோதும் அவரை 
சோர்வுக்குள்ளாக்கியது இல்லை 
இன்னல்கள் ஒருபோதும் அவரை 
நிரந்தரமாய் தாக்கியதில்லை 
பழகுவதற்கு இனியவர் 
மென்மையானவர் -உண்மையானவர் 
அன்றும் -இன்றும் -என்றும் -
NFPE என்று நெஞ்சம் நிமிர்த்துச்சொல்லும் 
மாமா வாழ்க !வாழ்க !
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

இன்று பணிநிறைவு பெறுகின்ற முன்னாள் பாளையம்கோட்டை கிளையின் செயலர் தோழர் M .அந்தோணி சாமி அவர்களை வாழ்த்துகிறோம் .வணங்குகிறோம் !

அண்ணன் அந்தோணி சாமி வாழ்க !
அல்லல்பட்ட ஊழியர்களின் -அத்தியாவசிய 
தேவையை சுமந்து வந்த தோணி 
எங்கள் அண்ணன் அந்தோணி !
தோழனாகவும் தோள்கொடுத்தாய் !
அண்ணனாகவும் தொடர்ந்திட்டாய் !
நண்பனாகவும் இருந்திட்டாய் -நல்ல 
ஒரு ஆலோசகராகவும் கண்டித்திட்டாய் !
அன்பு -அடக்கம் -அமைதி -இவைகளின் 
இருப்பிடமே !
பன்பு -பாசம் -பந்தம் -இவைகளின் 
பிறப்பிடமே !
உண்மை -உழைப்பு -உறுதி இவைகளின் 
உறைவிடமே !
நம்பிக்கை -நல்லெண்ணம் -நட்பு இவைகளின் 
புகலிடமே !
இந்த சிறப்புகளையெல்லாம் தாண்டி -
இன்றுவரை இருந்த இடத்திற்கு 
நீ காட்டிய விசுவாசம் தான் -
உன்னை உயர்த்தி காட்டுகிறது -பணி ஓய்வின் 
பிரிவு உண்மையில் எங்களை வாட்டுகிறது 

பாரம்பரியமிக்க பாளை NFPE இன் 
செயலராய் இருந்தவன் நீ -இயக்கம் 
சந்தித்த சோதனையான நாட்களிலும் 
சந்தேகத்திற்கு இடமின்றி துணை நின்றவன் நீ !
ஒரு மாநாட்டில் நடைபெற்ற தேர்தலில் -நீ 
பெற்ற வாக்குகளின் வித்தியாசம் 
புதிய சரித்திரத்தை எழுதி சென்றது 
அதன்பிறகுதானே -நம்மை எதிர்த்து 
போட்டி என்பதும் இல்லாமல் போனது !

பொதுவாக சொல்வதுண்டு --ஒருவரது  ஓய்வுக்கு 
பிறகு பெரிய வெற்றிடம் ஏற்பட்டது என்று --இது 
ஒப்புக்காக மற்றவர்களுக்கு சொல்வது -
ஒத்துக்கொள்கிறோம் -உன் பணி  ஓய்வில் தான் 
உண்மையான அர்த்தம் தெரிகிறது 
உன் இடத்தை நிரப்பவும் ஆள் இல்லை -
உனக்கு நிகர் இனி இங்கு  யாரும்  இல்லை !

பழுதான பொருளையெல்லாம் 
உயிர்பித்தவன் நீ -
தேறாது என எரிந்ததை கூட -தேடி பிடித்து 
தேற்றியவன் நீ 
பழைய விலைக்கு என ஒதுக்கியதைக்கூட 
பராமரித்து பளிச்சிட செய்தவன் நீ 
அலுவலகத்தை ஒளிர வைத்தாய் -அனைவரின் 
அன்றாட எதிர்பார்ப்புகளை தீர்த்து வைத்தாய் 

அந்தோணி சாமி 
அஞ்சலகத்திற்கு கிடைத்த ஒரு அதிசய சக்தி  
ஆண்டவன் நமக்காக கொடுத்த அபூர்வ வரம் 
விலைமதிப்பில்லா பொக்கிஷம் -எவரும் 
விலைபேச முயற்சிக்காத அதிசயம் 
உன்போன்ற விசுவாசமிக்க 
தோழர்களின் காற்றில்தான் 
இந்த இயக்கத்தின் சுவாசம் 
இன்னும்  கலங்காமல் இருக்கிறது 
கலப்படமில்லாமல் சிரிக்கிறது 
வாழ்க அண்ணா !
           தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் 


Friday, June 29, 2018

இன்று பணிநிறைவு பெறுகின்ற தோழர்கள் தனசேகரன் அஞ்சல்  பொருள் கிடங்கு நெல்லை -
பகவதி குமார் ஸ்டெனோ ஆகியோர்களை வாழ்த்துகிறோம் 

தோழர்கள்   தனசேகரனும்  பகவதி   குமாரும்  
ஒரு கொடியில் பூத்த இரு மலர்கள் 
ஒரு கொள்கையில் வளர்ந்த நறு மலர்கள்                     
நாணயனத்தின் இரண்டு பக்கங்கள் மாதிரி !
நிர்வாக சுழற்சிக்கு சேர்ந்தே பயணிக்கும் 
இரண்டு சக்கரங்கள் மாதிரி !
இவர்களுக்குள் ஆயிரம் ஒற்றுமைகள் 
இருவருக்குள்  இல்லை     வேற்றுமைகள் 
அதனால் சேர்த்தே பார்க்கிறோம் 
சேர்ந்தே வாழ்த்துகிறோம் 
தனசேகரன் தச்சு பிரிவின் நவீன சிற்பி 
பகவதி தட்டச்சு பிரிவில் அன்பின் சொருபி 
தனசேகரன் அஞ்சல் நான்கின் தலைவர் 
பகவதி சுருக்கெழுத்தாளர் சங்க பொறுப்பாளர் 
தனசேகரன் பொருள்கிடங்கின் பொக்கிஷம் 
பகவதி நிர்வாக அலுவலகத்தின் நிதர்சனம் 
தனசேகரன் பழகுவதில் இனிமையானவர் 
பகவதி இனிமையாய் பழகுபவர் 
இருவரும் இருக்கும் இடத்திற்கு
 சிறப்பு சேர்த்தவர்கள் -
நிர்வாகத்தின் பக்கத்தில் இருந்தாலும் 
தோழர்களிடம் உறவை தொடர்ந்தவர்கள் 
அதிகாரிகளுக்கு உண்மையாகவும் 
ஊழியர்களுக்கு நன்மையாகவும் இருந்தவர்கள் 
இந்த அபூர்வங்கள் எப்போதாவது நடக்கும் 
எங்காவது நடக்கும் -அது 
 இன்று நடக்கிறது -ஆம் 
நெல்லையில் நடக்கிறது -வாருங்கள் 
இருவரையும் 
 சேர்ந்து வாழ்த்துவோம் !
                                  வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ்   -SK .பாட்சா --
M.ரவி PSD P3                 S.பரமசிவம் PSD P4 

Thursday, June 28, 2018

                                 GDS கமிட்டி இதர உத்தரவுகள் 
கீ ராஜூடி -செவேரென்ஸ் தொகை அனைத்தும் 01.07.2018 முதல் அமுலாகிறது 
Date effect : 01-07-2018
Ex-gratia Gratuity named as 'GDS Gratuity'
Maximum of Rs.1,50,000/-
Severance Amount : 
@ Rs.4000/- from 01-01-2016
Maximum ceiling Rs.1,50,000/-
Service Discharge Benefit Scheme:
Monthly contribution @ Rs.300/- (for both sides)
 பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்புகளும் 01.07.2018 முதல் அமுல் 
Date effect from : 01-07-2018
Leave period : 180 days ( less than two surviving children)
Leave period : 45 days ( miscarriage/abortion)

Tuesday, June 26, 2018

GDS ஊதியம் நிர்ணய முறை 
2295-45-3645 என்ற நிலையில் உள்ள ஒரு GDS MP/MC 01.07.2018 யில் 2880 வாங்கினால் அவரது புதிய ஊதியம் 
2880 X 2.57  = 7406 
கீழே உள்ள பட்டியல் 1 இல் 
அடுத்த நிலை = ரூபாய் 10000
01.07.2019 இல்    = 10300
------------------------------------------------------------------------
3635-65-5585என்ற நிலையில் உள்ள ஒரு GDS MP/MC 01.07.2018 யில் 4740 வாங்கினால் அவரது புதிய ஊதியம் 
4740 X 2.57 =12182
அடுத்த நிலை =12360
01.07.2019 இல் =12740
--------------------------------------------------------------------------------------------------------------------
4220-75-6470 என்ற நிலையில் உள்ள ஒரு GDSMD 01.07.2018 இல் 4670 வாங்கினால் அவரது புதிய ஊதியம் 
4670X 2.57     =12002
அடுத்த நிலை =12360
01.07.2019 யில்= 12740
-----------------------------------------------------------------------------------------------------------------------
4114-75-6365 என்ற நிலையில் உள்ள ஒரு GDSBPM  01.07.2018 யில் 4115வாங்கினால் அவரது புதிய ஊதியம்
4115 X =10576
அடுத்த நிலை =14500
01.07.2019 யில்= 14940
--------------------------------------------------------------------------------------------------------------------
4575-85-7125 என்ற நிலையில் உள்ள ஒரு GDSBPM  01.07.2018 யில் 5850வாங்கினால் அவரது புதிய ஊதியம் 
5850 X 2.57 =  15035
அடுத்த நிலை =15390
01.07.2019 யில்= 15860
---------------------------------------------------------------------------------------------------------------


Monday, June 25, 2018

GDS கமிட்டி -அமுலாக்க உத்தரவுகள் 

மத்திய அமைச்சக உத்தரவிற்கு பின்பு சுமார் 20 நாட்களுக்கு பிறகு  ஊதிய நிர்ணயம் மற்றும் படிகள் சம்பந்தமான உத்தரவுகள் மட்டும் 25.06.2018  இன்று வெளியாகியுள்ளன .TRCA உள்ள 11 நிலைகள் 3 நிலைகளாக மாற்றப்பட்டுள்ளது .அதாவது GDS களுக்கு  3 முதல் 3.45 மணிவரையிலான பணிகளை லெவல் 1 மற்றும்  4மணிவரையிலான BPM களுக்கு லெவல் 1 என்றும் இதர அணைவருக்கும் லெவல் 2 எனவும் பகுக்கப்பட்டுள்ளது .
GDS லெவல் 1 10000--24470
         லெவல் 2  12000--29380
BPM லெவல் 1  12000--29380
          லெவல் 2  14500--35480
புதிய சம்பளம் 01.07.2018 முதல் அமுலுக்கு வருகிறது .31.07.2018 ஜூலை மாதம் புதிய சம்பளம் கிடைக்கும் .
அரியர்ஸ் 01.01.2016 முதல் 30.06.2018 வரையிலான TRCA வை 2.57 ஆல் பெருக்கி அதை ஏற்கனவே வாங்கிய 01.01.2016 முதல் 30.06.2018 வரையிலான TRCA+ DA வை கழித்தால் கிடைப்பது தான் நிலுவை தொகை .இதை 15.07.2018 குள் வழங்கிட வேண்டும் 
அதிகபட்ச நிலுவை தொகை 40000 வரையிலும் குறைந்தபட்ச நிலுவை தொகை 16000 வரை இருக்கும் .
சராசரி ஊதிய உயர்வு 600 முதல் 1200 வரை இருக்கும் .ஆண்டு ஊதிய உயர்வு 3 சதம் .
பஞ்சபடி மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகரான பஞ்சபடி .
போனஸ் இலாகா ஊழியரை போன்று 7000 உட்சவரம்புடன் கிடைக்கும் .
இனி கிளை அஞ்சலகங்களில் பணிபுரியும் GDS APMS என்றும் இதர GDS கள் அனைவரும் டாக் சேவாக் (DAK SEVAKS ) என்றும் அழைக்கப்படுவார்கள் .
OMA  அலுவலக பராமரிப்பு படி ரூபாய் 100 இல் இருந்து 250 மற்றும் 500 என மாற்றப்பட்டுள்ளது 
சைக்கிள் அலவன்ஸ் 180 ஆகிறது .
பின்னடைவுகள் 
1.பழைய  சேவை காலத்திற்கு வெயிட்டேஜ் எதுவும் வழங்கப்படவில்லை .
2.ஆண்டு ஊதிய உயர்வு என்பதில் ஆண்டுமுழுவதும் தொடர்ச்சியாக பணியாற்றிடவேண்டும் .ஒரு நாள் சேவை 
விடுபட்டாலும் INCREMENT அடுத்த ஆறு மாதத்திற்கு தள்ளிப்போகும் 

இன்று 23.06.2018 நெல்லை வந்த நமது PMG
  திரு .VENNAM UPENDER  IPS அவர்களை மரியாதை நிமித்தமாக நமது கோட்ட சங்கங்களின் சார்பாக அஞ்சல் நான்கின் கோட்ட செயலர் SK .பாட்சா மற்றும் அஞ்சல்  மூன்றின் கோட்ட செயலர் தோழர் ஜேக்கப் ராஜ் சந்தித்து ஒரு கோரிக்கை மனுவினையை அளித்தனர் .PMG அவர்கள் மனுவை படித்து  CSI அமுலாக்கத்திற்கு பின்பு  உட்கட்டமைப்புகள் சம்பந்தமாக என்னென்ன தேவை என்ற விவரத்தை உடனே அனுப்புமாறு உத்தரவிட்டார்கள் .மேலும் விஜயநாராயணத்திற்கு லேசர்பிரிண்டர் சம்பந்தமாக உடனடி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்கள் .ஊழியர்கள் கோரிக்கையின் மீது உடனடி நடவடிக்கை எடுத்த நமது PMG அவர்களுக்கு நெல்லை NFPE இன் சார்பாக நன்றிதனை தெரிவித்து கொள்கிறோம் 

NFPE
               ALL INDIA POSTAL EMPLOYEES UNION GR-C                                                                         TIRUNELVELI DIVISIONAL BRANCH
TIRUNELVELI—627002
No.P3-CSI/dlgs dated at Palayankottai- 627002 the 22.06.2018

To

The Postmaster General
Southern Region (TN)
Madurai-625002 - On Camp at : Tirunelveli

Respected Sir,

            Sub:    Post-migration issue of CSI Roll Out in Tirunelveli Division
****
            With due respect and regard, we bring the following for the kind perusal of the PMG for a remedial action.

            CSI Roll Out was successfully carried out in Tirunelveli Division and started working in the CSI environment w.e.f 12.06.2018.  But a large number of offices are facing with hardware issues and power problems such as

1.      Non-supply of Laser printers& Non-working of printers
2.      Non-supply of Batteries to the UPS
3.      Non-rectification of Genset problems.

Office-wise issues were already taken up with the Divisional Administration vide this union letter No. P3-CSI/dlgs dated 28.05.2018 well before the migration of CSI and still the problems are persisting which creates unrest among the staff.

Sir may well aware of the technical issues of CSI due to which tallying the accounts are taken much time and nearly all staff are going to home late hours.  But,  the above mentioned hardware and other issues are like adding fuel to the fire and the apathy of the staff cannot be explained in words.

Hence, we request our beloved PMG to take appropriate action so that the hardware issues faced by the offices under Tirunelveli Division are rectified.

                         Yours faithfully


[S.K.JACOBRAJ]

Saturday, June 23, 2018                                    மூன்றுநாள் கருப்பு அட்டை /ஆர்ப்பாட்டம் இவைகளில் பங்கேற்க உங்கள்  அனைவருக்கும் கோட்ட சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களையும் நன்றிதனையும் தெரிவித்து கொள்கிறோம் .தமிழகம் தழுவிய எழுச்சியின் எதிரொலியாக மாநிலநிர்வாகம் நமது மாநிலச்சங்கத்திற்கு அளித்திட்ட பதில் உங்கள் பார்வைக்கு
, pending EOD, voucher feeding உள்ளிட்டவை இருந்தாலும் ஊழியர்கள் மாலை காத்திருக்காமல் வீட்டுக்குச் செல்லலாம் என CEPT மூலம் உரிய வழிகாட்டுதல் மாலை  6.47 க்கு   நாடு முழுவதும் உள்ள அனைத்து அஞ்சல் வட்டத்திற்கும்  அளிக்கப்பட்டது ;  
நமது அஞ்சல் வட்டத்திற்கு அளிக்கப் பட்ட வழிகாட்டுதலின் நகல் உங்களுக்கு ஏற்கனவே நாம் மாலை  6.57 மணிக்கு  அளித்திருந்தோம். பார்த்திருப்பீர்கள். 
இது முற்றிலும் நமது அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் முயற்சியால் கிடைத்த வெற்றியே !
இதனை ஒட்டி இன்று
(22.6.18)  இரவு 7.00 மணியளவில்  நமது CPMG அவர்கள் நமது மாநிலச் செயலரை தொலைபேசியில் அழைத்தார்.
முக்கியமான கூட்டத்தில் இருந்ததால் சந்திக்க முடியவில்லை என்றும், நம்முடைய பிரச்னைகள் , 
அஞ்சல் மூன்று 
மாநிலச் சங்கத்தின்  போராட்டத்தின் கோரிக்கைகள் இயக்குநரகத்திற்கு மாநில நிர்வாகத்தால் கொண்டு செல்லப்பட்டுள்ளது எனவும், அதன்மீது தானே பலமுறை Member Tech, DDG ஆகியோரிடம் பேசியுள்ளதாகவும், இதனடிப்படையில் TCS மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் , தற்போது ஒரளவு நிலைமை  மேம்படுத்தப்பட்டுள்ளதாக தமக்கு தெரிவித்துள்ளனர் என்றும்,  

இன்னும் குறுகிய 
கால அவகாசத்தில்  முழுமையான தீர்வு காண்பதாக உறுதியளித் துள்ளதாகவும் 
CPMG அவர்கள் நமது மாநிலச் செயலரிடம் தெரிவித்தார். 

மேலும் இன்றைய தினத்தின்  Sify Network/Finacle பிரச்னைகள் குறித்து Dte ல் பேசியதன் அடிப்படையில் இரவு காத்திருப்பு எதுவும் இல்லாமல் ஊழியர்கள் வீடு திரும்ப வழிகாட்டுதல் அளித்ததாகவும் தெரிவித்தார். 
எனவே மாநில  நிர்வாகம் எந்த நேரத்திலும் தங்கள் அளவில் இந்தப் பிரச்னைகளில் ஊழியர்களுக்கு எந்த அளவு முடிந்தாலும் அந்த அளவு 
உதவி செய்யக் காத்திருப்பதாகவும் , எந்த நேரத்தில் பிரச்னை என்றாலும் தன்னை அணுகலாம் என்றும் ஊழியர்களுக்கும் இதனைத்  தெரிவிக்குமாறும் CPMG அவர்கள் தெரிவித்தார். 

நம்முடைய போராட்டங்களை மாநில நிர்வாகம் தவறாக பார்க்க வில்லை என்றும் ஆனால் தங்கள் எல்லை மீறிய பிரச்னைகளில் முழுமையாக உதவிட முடியவில்லை என்றும் தெரிவித்தார். 

TCS கடந்த பிப்ரவரி 2017 லேயே கர்நாடக மாநிலம் மைசூரில் பரீட்சார்த்த ரீதியில் CSI அமல்படுத்தி, பின்னர் பல மாநிலங்களில் செயல்படுத்தி Phase II வில்தான் தமிழ் நாட்டில் அதுவும் நான்கு மாதங்கள் ஒத்திவைத்தபின் தற்போது 2018 ல் அமல் படுத்தும் போது கூட அதன் கோளாறுகளை சரி செய்யவில்லை என்றால்,  இது எந்த வகையில் சரி என நாம் அவரிடம் கேட்டதற்கு, இது முற்றிலும் சரியே;
எங்களுக்கும் இந்த கேள்வி உள்ளது; ஆனால் மேல்மட்ட அழுத்தம் காரணமாகவே 
தாங்கள் CSI  அமல் படுத் வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது எனக் கூறினார். 

மேலும் பிரச்னைகள் இருப்பின் 27 ந்தேதி நடைபெற உள்ள நான்கு மாதப் 
பேட்டியில் பேசுமாறும் கேட்டுக் கொண்டார். 

 3 ஆண்டு காலத்திற்கு பின்னராக புதிதாக RJCM அமைக்கப்பட உள்ளதால் அதற்கான நியமன ஒப்புதல்களை திங்களன்று வழங்குவதாகவும், அதற்கான ஊழியர் தரப்பு தலைவர், செயலாளர் தேர்ந்தெடுத்து அறிவித்தபின் 
Subjects பெற்று 
விரைவில் கூட்டம் கூட்டப்படும் எனவும் தெரிவித்தார். 

அதில் எல்லா பிரச்னைகளையும் விவாதிக்கலாம் என்றும் உறுதியளித்தார். 

இன்றைய நிலையில் ஊழியர் படும் அவதியையும் மக்கள் சேவை பாதிக்கப் படுவதையும், பொதுமக்களுக்கும் ஊழியர்களுக்கும் சேவை பாதிப்பால் பல இடங்களில்  தகராறு 
 ஏற்படுவதையும் சுட்டிக்காட்டினோம்.

இதே நிலை தொடர்ந்தால் 2015 ல் CBS பிரச்னையில் வேலை நிறுத்தம் செய்தது போன்ற நிலைமை எங்களுக்கு ஏற்படும் என்றும் மாநிலச் செயலர் 
சுட்டிக் காட்டிப்  பேசினார். 

இவைகள் அனைத்தையும் தாங்கள் உணர்வதாகவும்
தங்கள் கவனத்துக்கு தொழிற்சங்கத்தால் கொண்டுவரப்பட்ட பிரச்னைகளை 
மேலே எடுத்துச் சென்றுள்ளதாகவும், இனி அளிக்கப்படும் பிரச்னைகளளையும் மேலே எடுத்துச் சென்று பிரச்னைகளின் தீர்வுக்கு தாம் உதவுவதாகவும் உறுதியளித்தார். 

S.O  Summary, 
ECB Memo , SMR உள்ளிட்டவை என நாம் அளித்த பிரச்னைகளை ஏற்கனவே TCS க்கு எடுத்துச் சென்றுள்ள தாகவும் நிச்சயம் ஒருவாரத்தில் இதில் தீர்வு காணப்படும் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்தார். 

தொழில் நுட்பக் கோளாறு காரணமாக எழும் எந்த தவறுகளுக்கும் ஊழியர்கள் எவரும் எந்த இடத்திலும் கண்டிப்பாக பழிவாங்கப்பட மாட்டார்கள் என்றும், அப்படி ஏதும் ஏற்படும் பட்சத்தில் தனது கவனத்திற்கு கொண்டுவந்தால் 
உடன் தலையிட்டு தீர்ப்பதாகவும் உறுதியளித்தார்.

இரவுக் காத்திருப்பு என்பது எப்போதும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதாகவும், அப்படி பிரச்னை ஏதும் ஏற்படும் பட்சத்தில் 
தனது கவனத்துக்கு கொண்டுவந்தால் 
உடன் தலையிட்டுத் தீர்ப்பதாகவும் உறுதியளித்தார்.
                                     -------------------------------------------
எனவே எதிர்வரும் திங்களன்று 
இந்தப் பிரச்னைகள் குறித்தும் Software கோளாறுகள் குறித்தும் CPMG அவர்கள் மூலம் துறையின் செயலருக்கு 
அஞ்சல் மூன்று மாநிலச் சங்கம் மூலம் கோரிக்கை மனு அளிக்கப்படும்.

 நமது மாநிலச் சங்க போராட்டத்தின் மீது கவனம் செலுத்தி பிரச்னைகளை தீர்க்க  நமது பிரதிநிதியான மாநிலச் செயலரை திறந்த மனதுடன்  அழைத்துப் பேசி,  பிரச்னைகளின் தீர்வுக்கு உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்த நமது CPMG திரு. சம்பத் அவர்களுக்கும்,  நமது PMG,CCR திரு. ஆனந்த் அவர்களுக்கும் நமது மாநிலச் சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இது -மாநில சங்க பதிவில் இருந்து ...........
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 
----------------------------------------------------------------------------------------------------------------
Friday, June 22, 2018

                                                    வருந்துகிறோம்           
நெல்லை கோட்டத்தின் முன்னாள் GDS கோட்ட செயலர் தோழர் C .சரவணகுமார் @ கனகராஜ் GDSSV பாளையம்கோட்டை அவர்கள் இன்று 22.06.2018 அன்று அதிகாலை மரணமடைந்தார்கள் என்பதனை வருத்தத்தோடு தெரிவித்து கொள்கிறோம் .தோழரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு நெல்லை NFPE தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் .

Thursday, June 21, 2018

அன்பார்ந்த தோழர்களே !
 நேற்று இரண்டாம் நாள் ஆர்ப்பாட்டம் பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் நமது கோட்ட செயல் தலைவர் தோழர் கண்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது .PSD கிளை செயலர் தோழர் ரவி P 4 கோட்ட உதவி செயலர் தோழர் புஷ்பாகரண் 
ஓய்வூதியர் சங்க செயலர் தோழர்  ச ண்முகசுந்தரராஜா ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள் .இன்றும் கருப்பு பேட்ஜ் இயக்கம் தொடர்கிறது .கருப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்தல் -உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நெல்லையில் சிறப்பாக நடைபெற்றது .ஐந்து முன்னணி தினசரி செய்திதாள்கள் நம் போராட்ட செய்தியை வெளியிட்டு மாவட்டம் முழுவதும் பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டு சென்றது .மாலைமலர் தினகரன் தினத்தந்தி தினமலர் தினமணி பத்திரிக்கை நண்பர்களுக்கு நெல்லை NFPE இன் சார்பாக நன்றிதனை தெரிவித்து கொள்கிறோம் .காலை முதலே அனைத்து அலுவலகங்களில் இருந்து அனுப்பட்ட செய்திகள் குறித்து மகிழ்ச்சி அடைகிறோம் இன்றும் நாளையும் தொடர வேண்டும் என கேட்டு கொள்கிறோம் .நேற்று திருநெல்வேலி தலைமை அஞ்சலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் குத்தாலிங்கம் அவர்கள் தலைமை தாங்கினார்கள் .APMSB திரு .ராஜேந்திரன் மகிளா கமிட்டி கன்வீனர் APM A/CS  தோழியர் பசுமதி மற்றும் தோழியர் சூரியகலா ஆகியோர் உரையாற்றினார்கள் .நமது அமைப்பு செயலர் தோழர் முத்துமாலை நன்றி கூறினார்கள் .இன்று மதியம் 1 மணிக்கு பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் கோட்ட செயல் தலைவர் தோழர் N.கண்ணன் அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் .பாளை மற்றும் கோட்ட அலுவலக ஊழியர்கள் பங்கேற்குமாறு கேட்டு கொள்கிறோம் .நன்றி .தோழமையுடன் ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 
                                                             தினமணி 
                                                              தினமலர்
                                                              தினமணி
                                                                  தினகரன்

Wednesday, June 20, 2018

                           சுழல் மாறுதல் 2018  மறு அறிவிப்பு 
கடைசி தேதி 29.06.2018 
அறிவிப்பில் விடுதல் /சேர்த்தல் இருந்தால் விண்ணப்பிக்க கடைசி தேதி 25.06.2018 
மொத்தம் 66 ஊழியர்கள் இடமாறுதலுக்கு உள்ளாகிறார்கள் .

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
       நமது மாநிலச்சங்க அறைகூவலுக்கினங்க இன்று முதல் மூன்று நாட்களுக்கு பணியிடத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து நமது எதிர்ப்பை நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டுகிறோம் .நேற்றே அனைத்து அலுவலகங்களுக்கும் பேட்ஜ் அனுப்பப்பட்டுள்ளது .கிடைக்காதவர்கள் கோட்ட செயலரை தொடர்பு கொள்ள கேட்டு கொள்கிறோம் .மேலும் இன்று மதியம்  1மணிக்கு திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்தில் நமது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது .அருகில் உள்ள தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள கேட்டு கொள்கிறோம் .
பல கோடி ரூபாய்கள் பெற்றுக்கொண்டு ஒப்பந்தம் செய்துக்கொண்ட TCS, CSI SAP அறிமுகப்படுத்தி ஒராண்டு ஆன பின்னரும் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண இயலாமல் தவிக்கின்றது.இந்த நிலையை சீர் செய்ய எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்காத அஞ்சல் நிர்வாகத்தின் மெத்தன போக்கை கண்டிக்கிறோம் 
இது போல் CSI யை, அஞ்சல் கணக்கு பிரிவில் அறிமுக படுத்தி, அரசாங்க பணத்தை காக்கும் இவர்களின் பணியை முழுவதும் முடக்கி விட்டது அஞ்சல் நிர்வாகம்.
பல கோடிக்கணக்கான ரூபாய்க்களை Suspense account டிலும், ODயிலும் வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்த செயலற்ற நிலையை நிர்வாகம் களைய வேண்டும் என்றும், இந்த நிலை மாறாவிட்டால் போராட்ட ங்கள் தீவிரமாகும் என்று Nfpe CoC தமிழ்நாடு எச்சரிக்கை விடுகிறது. 
CBS போராட்டம் போல் CSI பிரச்னைகளின் தீர்வுக்கும், 
முதல் போர் கொடியை தமிழகமே எழுப்புவோம். 
போராட்ட வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Tuesday, June 19, 2018

                        அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் குரூப் C 
                           திருநெல்வேலி கோட்ட கிளை --627002
------------------------------------------------------------------------------------------------------------------
சுற்றறிக்கை 3-/2018-2020                                                              19.06.2018
-----------------------------------------------------------------------------------------------------------------
அன்பார்ந்த தோழர்களே !
                                உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் 
நாள் 21.06.2018                        நேரம் மதியம் 1 மணி 
இடம் பாளையம்கோட்டை  HO   
தலைமை தோழர் N .கண்ணன் கோட்ட உதவி தலைவர் 
------------------------------------------------------------------------------------------------------------------------
-CSI- SAP பிரச்னை சம்பந்தமாக  நிர்வாகத்திற்கு பல முறை புகார் செய்தும், ஒரு வாரம் கடந்த பின்னும், உறுதி அளித்தபடி  தேவையான முன்னேற்றம் 
அளிக்கப்படவில்லை. 
CSI அமலாக்குவதில் இருந்த வேகம் பிரச்னையைத் தீர்ப்பதில் காட்டப்பட வில்லை.
கோடிக்கணக்கான ரூபாய்கள் பெற்றுக் கொண்டு ஒப்பந்தம் செய்த TCS பன்னாட்டுநிறுவனம் CSI அறிமுகப் படுத்தி ஓராண்டு கடந்த பின்னும் பிரச்னைகளை தீர்த்திட இயலாமல் கையாலாகாத நிலையில் உள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது
இது,  மக்கள் சேவையை சீர்குலைப்பது மட்டுமல்லாமல் , கடுமையான ஆட்பற்றாக்குறை 
உள்ள சூழலில் ஊழியர்களை பணி செய்திட இயலாத நிலைக்குத் தள்ளி 
கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. 
TCS என்ற ஒரு தனியார் நிறுவனத்தின் கையை எதிர்பார்த்து,  ஒரு அரசுத் துறையும் இலாக்கா ஊழியர்களும், பொது மக்களும் காத்துக் கிடக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது வேதனை அளிக்கும் நிலையாகும். 
எனவே அஞ்சல் நிர்வாகத்தின் மெத்தனப் போக்கைக் கண்டித்து 
நமது எதிர்ப்பைத் தெரிவிக்கும் பொருட்டு 
ஊழியர்களைத் திரட்டி  தொடர் முழக்கப் போராட்டம் நடத்துவது என முடிவெடுக்க பட்டுள்ளது .
ஆகவே தோழர் /தோழியர்கள் யாவரும் இந்த முதற்கட்ட போராட்டமான பணியிடங்களில் 20.06.2018 முதல் 22.06.2018 ஆகிய மூன்று நாட்களுக்கு கருப்பு பேட்ஜ் அணிந்து நமது எதிர்ப்பை காட்ட வேண்டுகிறோம் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை                                                           FLASH NEWS 
                                                    நன்றி !நன்றி !
நமது கோட்ட சங்க 15.06.2018 வாட்ஸாப்ப் செய்திக்கு நமது கோட்ட கூடுதல் கண்காணிப்பாளர் திருமதி நிரஞ்சலா தேவி SSP அவர்களின் பதில் பதிவு --இதோ 
Good morning. Whatever possible at my level, i will do. Thanks for sharing your genuine grievances.
-------------------------------------------------------------------------------------------------------------------
நமது SSP திரு .VP.சந்திரசேகர் அவர்கள் கன்னியாகுமரி SSP ஆக இடமாற்றம் செய்ய பட்டுள்ளார்கள் .மேலும் திருநெல்வேலி கோட்டத்திற்கு கூடுதல் பொறுப்பையும் ஏற்றுள்ளார்கள் .
------------------------------------------------------------------------------------------------------------------------
தென்மண்டல அளவிலான அதிகஅளவில் கணக்குகள் பிடித்தவர்களுக்கான பாராட்டு /பரிசளிப்பு விழா இன்று மதுரையில் நடைபெறுகிறது .OVER ALL PERFORMANCE என்ற அடிப்படையில் நெல்லை கோட்டம் முதலிடம் பிடிக்கிறது . இது நமது கோட்டத்திற்கு கிடைத்த மற்றுமொரு பெருமை .இந்த சாதனையை படைத்த அனைவருக்கும் நெல்லை NFPE இன் வெற்றி வாழ்த்துக்கள் .குறிப்பாக சாதனையாளர்கள் பரிசினை பெறும் SPM ராஜவல்லிபுரம் SPM சங்கர்நகர் மற்றும் BPM கட்டாரன் குளம் BPM பத்தை BPM மகாதேவன்குளம் ஆகியோருக்கும் நெல்லை NFPE வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது .
------------------------------------------------------------------------------------------------------------------------
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் ---SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 
அன்பார்ந்த தோழர்களே !
 அஞ்சல் துறையில் அறிமுகப்படுத்தப்படும் அனைத்து சேவைகளையும் நாம் மாலை போட்டு வரவேற்கிறோம் -ஆரத்தி எடுத்து மகிழ்கிறோம் .ஒரு அடி(ப )மட்ட  ஊழியர்களிடம் உள்ள இந்த அர்ப்பணிப்பு ஆர்வம் மேல்மட்ட அதிகாரிகளிடம் கடுகளவும் இல்லை என்பது தான் வேதனையான விஷயம் .எப்படி CBS அமுலாகும் போது நாம் பட்ட சங்கடங்கள் இன்று CSI அமுலாக்கத்திலும் தொடர்கிறது 
CSI- SAP பிரச்னை சம்பந்தமாக  நிர்வாகத்திற்கு பல முறை புகார் செய்தும், ஒரு வாரம் கடந்த பின்னும், உறுதி அளித்தபடி  தேவையான முன்னேற்றம் அளிக்கப்படவில்லை. 
CSI அமலாக்குவதில் இருந்த வேகம் 
பிரச்னையைத் தீர்ப்பதில் காட்டப்பட வில்லை
கோடிக்கணக்கான ரூபாய்கள் பெற்றுக் கொண்டு ஒப்பந்தம் செய்த TCS பன்னாட்டு
நிறுவனம் CSI அறிமுகப் படுத்தி ஓராண்டு 
கடந்த பின்னும் பிரச்னைகளை 
தீர்த்திட இயலாமல் கையாலாகாத நிலையில் உள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது
இது,  மக்கள் சேவையை சீர்குலைப்பது மட்டுமல்லாமல் , கடுமையான ஆட்பற்றாக்குறை 
உள்ள சூழலில் ஊழியர்களை பணி செய்திட இயலாத நிலைக்குத் தள்ளி 
கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. 
TCS என்ற ஒரு தனியார் நிறுவனத்தின் கையை எதிர்பார்த்து,  ஒரு அரசுத் துறையும் இலாக்கா ஊழியர்களும், பொது மக்களும் காத்துக் கிடக்க வேண்டிய சூழல் 
உருவாகியுள்ளது வேதனை அளிக்கும் நிலையாகும். 
எனவே 
அஞ்சல் நிர்வாகத்தின் மெத்தனப் போக்கைக் 
 கண்டித்து தமிழக 
NFPE அஞ்சல் மூன்று சார்பில் மூன்று  போராட்டம் நடத்திட முடிவுகள் எடுக்கப் பட்டுள்ளன.அதன் படி நமது கோட்டத்தில் நடைபெறும் இயக்கங்களை வெற்றி பெற செய்வோம் .
1.20.06.2018 முதல் 22.06.2018 வரை கருப்பு சின்னம் அணிந்து பணியாற்றுதல் (கருப்பு பேட்ஜ் அனுப்பி வைக்கப்படும் )
 2.20.06.2018  புதன் உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் --திருநெல்வேலி HO (மதியம் 1 மணி )
3.21.06.2018 வியாழன் உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் --பாளையம்கோட்டை HO (மதியம் 1 மணி )
     தோழர்கள் அனைவரும் இந்த முதல்கட்ட இயக்கமான கருப்பு பேட்ஜ் கட்டாயம் அணிந்து நிர்வாகத்திற்கு நமது எதிர்ப்பை காட்ட வேண்டுகிறோம் .
                           நன்றி .போராட்ட வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ்    --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை Monday, June 18, 2018

கோட்ட அலுவலகத்தில் தேங்கி கிடக்கும் ஊழியர் பிரச்சினைகள் --
LRPA பட்டியல் என்னானது ? RT மறு அறிவிப்பு எப்போது ? எழுத்தர்களுக்கான CONFORMATION  உத்தரவு வருமா ? UPS பேட்டரிகள் மாற்றுவது எப்பொழுது? -என ஊழியர்களின் அன்றாட கேள்விகளின் அடிப்படையில் கோட்ட நிர்வாகத்திற்கு கோட்ட சங்கம் எழுதியுள்ள கடிதம் உங்கள் பார்வைக்கு 


NFPE
 ALL INDIA POSTAL EMPLOYEES UNION GR-C                                                                         TIRUNELVELI DIVISIONAL BRANCH
TIRUNELVELI—627002
No.P3-Deptn/dlgs dated at Palayankottai- 627002 the 18.06.2018
To

The Sr. Supdt. of Post Offices,
Tirunelveli Division
Tirunelveli-627002

Sir/Madam,

            Sub:    Settlement of long pending issues – reg
****
            We regret to bring the following long pending issues for the personal notice of the SSPOs., Tirunelveli Division though the same were insisted during several discussions.

1.      LR lists were not issued since the year 2017.  It was informed that some clarifications were sought from RO. Even after receipt of such clarification, no action is seen taken by the D.O for the reason best known to them.

2.      After identification sensitive/non-sensitive posts for calculating tenure vide Directorate letter dated 08.03.2018, till date Re-notification of RT is not issued due to which staff face hardships due to admission in schools/shifting of residences etc.,

3.      Confirmation of the Postal Assistants recruited since 2015 is pending and no action is so far taken by the D.O

4.      Nearly all offices are facing UPS/batteries and other hardware issues and no action is taken so far by the D.O and the staff are facing untold difficulties after migration to CSI.

Hence, it is requested that the issues mentioned above shall be settled to create confidence among the staff and to ensure smooth working environment.

                         Yours faithfully

COPY TO
1.The Circle Secretary Chennai
2. The Regional Secreatry Dindugal

[S.K.JACOBRAJ]


நேஷனல் மற்றும் இன்டெர் நேஷனல் போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க உத்தரவு -இந்த 
உயர்வு 01.07.2017 முதல் அமுலாகிறது 

Sunday, June 17, 2018

Leave rule relaxed for women govt staff with differently-abled kids BY INDIA POST

Women government employees having differently-abled children can now avail of child care leave (CCL) irrespective of the age of the child. Rule 43 C of the Central Civil Services (Leave) Rules, 1972, which permitted CCL in case of a disabled/mentally challenged child upto 22 years of age, has been amended to accommodate “offspring of any age”.

Another amendment made to the child care leave norms was to allow grant of CCL for a period not less than five days at a time, against 15 days at present.

The amended rule allowing women government employees to avail child care leave for their physically and mentally challenged ward of any age is bound to come as a big relief as they need to act as caregivers at all stages in the child’s life.

As per CCL norms, child care leave may be granted for a maximum 730 days during the entire service of a women employee for taking care of up to two children, whether for rearing or to look after any of their needs like examination, sickness etc. CCL is admissible if the child is upto 18 years of age. In case of mentally challenged and differently-abled children, this age limit was earlier 22 years.

CCL may not be granted in more than 3 spells in a calendar year. CCL cannot be sanctioned during probation period except in cases of extreme situations and minimal leave should be sanctioned. LTC cannot be availed during CCL period.

Thursday, June 14, 2018


அன்பார்ந்த தோழர்களே !
  நமது கோட்டத்திற்கு டெபுடேஷன் வந்த DSM அனைவரும் மேலும் இரண்டு நாட்களுக்கு நெல்லையில் பணியாற்ற உத்தரவு வழங்கிய மண்டல /கோட்ட நிர்வாகத்திற்கு நன்றி .இது குறித்து நேற்று மாலை மண்டல அலுவலகத்தில் இருந்து வந்த தகவல்களை நாம் தெரிவித்திருந்தோம் .அதனை தொடர்ந்து நமது SSP அவர்களிடம் இந்த  தகவல்களை விரைந்து தெரிவிக்க சொன்னவுடன் அதிகார பூர்வமாக SSP அவர்கள் பதிந்த  பதிவு இதோ !
Kind Attention to all DSMs/UC POs.
Approval for Extension for deputation for further two days 14.06.2018 & 16.06.2018 accorded from RO.
All r act accordingly-
------------------------------------------------------------------------------------------------------------------------
நமது அன்பிற்கினிய இஸ்லாம் தோழர்கள் /தோழியர்கள் அனைவருக்கும் நெல்லை NFPE இன் புனித ரமலான் வாழ்த்துக்கள் 

Wednesday, June 13, 2018

                       நெல்லையில் நடந்த CSI  அமுலாக்க விழா 
நேற்று 12.06.2018 அன்று நெல்லை கோட்டத்தில் CSI ROLLOUT  சிறப்பாக நடைபெற்றது .மூன்று தலைமை அஞ்சலகத்திற்கும் நமது தென்மண்டல இயக்குனர் திரு .பவன்குமார் சிங் அவர்கள் கலந்துகொண்டு தொடங்கிவைத்தார்கள் .திருநெல்வேலி HO வில் நடைபெற்ற விழாவில் நமது கோட்ட சங்கத்தின் சார்பில் நமது இயக்குனர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க பட்டது .மேலும் விழாவின் போது நமது கோட்ட சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று நமது கோட்ட சீனியர் DSM திரு .ரசூல் அவர்களுக்கு இயக்குனர் அவர்கள் பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தார்கள் .  
 வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்ட தோழர் அந்தோணி சாமி 
நமது கோட்டத்தில் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக எலெக்ட்ரிஷன் என்ற பெயரில் கோட்டம் முழுவதும் எலக்ட்ரிகல் மற்றும் ஜெனெரேட்டர் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் ஏற்று மிக சிறப்பாக பணியாற்றி வரும் முன்னாள் பாளை கிளை செயலர் தோழர் அந்தோணி சாமி அவர்கள் இந்தமாதம் பணி ஓய்வு பெறுவதை ஒட்டி அவரது சீர்மிகு சேவையை பாராட்டி நமது இயக்குனர் அவர்கள் பொன்னாடை போர்த்தி பாராட்டினார்கள் .இதுவரை தன்னை எந்த மேடையிலும் முன்னிலை படுத்தாத தோழர் அந்தோணி சாமி அவர்களின் பன்முக திறமைகளை நமது இயக்குனர் முன் பாராட்டி வெளிக்கொணர்ந்த நமது திருநெல்வேலி ASP திரு .G.செந்தில்குமார் அவர்களுக்கு கோட்டசங்கத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் .Tuesday, June 12, 2018

அன்பார்ந்த தோழர்களே !
 GDS TO தபால்காரர் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் பாளையம்கோட்டையில் நடைபெற்று வருகிறது .ஜூலை மாதம் நடைபெறும் தேர்விற்கு தகுதியானவர்கள் விரும்பினால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள கேட்டு கொள்ளப்படுகிறார்கள் .
வகுப்புகள் தினமும் மாலை 6 முதல் 8 மணிவரை நடைபெறுகிறது 
ஆசிரியர் .திரு .பாலசுப்ரமணியன் Retd ASP @ சமாதானபுரம் பாளையம்கோட்டை 
மேலும் தொடர்புக்கு 94421 49339
------------------------------------------------------------------------------------------------------------------
இன்று பிறந்தநாள் கானும் தோழர்கள் புஷ்பாகரன் மற்றும் ராமலிங்கம் அவர்களுக்கு நெல்லை NFPE இன் வாழ்த்துக்கள் 
--------------------------------------------------------------------------------------------------------------------
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Monday, June 11, 2018

தோழியர் MP.விஜயா PA திருநெல்வேலி HO அவர்களின் இளைய மகன் திருமண விழா 10.06.2018 அன்று பாளையில் சிறப்பாக நடைபெற்றது .மணமக்கள் பல்லாண்டுவாழ்க என நெல்லை NFPE வாழ்த்துகிறது 

அன்பார்ந்த தோழர்களே !
 நமது நெல்லை கோட்டமும் 12.06.2018 முதல் CSI எனும் புதிய தொழிற்நுட்பத்திற்குள் நுழைகிறது .ஆரம்பத்தில் CSI அமுலாக்கத்தின் போது அந்தந்த கோட்ட ஊழியர்கள் பட்ட சிரமங்கள் நமது தோழர்கள் பட்டுவிட கூடாது என்ற அடிப்படையில் நமது கோட்ட மாநாட்டின் போதே CSI விளக்க கையேடு வழங்கப்பட்டது .மேலும் கோட்ட மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் நேற்று பாளையம்கோட்டையில் நமது தோழர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது .இந்த பயிற்சி வகுப்பினை மிக சிறப்பாக நடத்தி காட்டிய நமது கோட்ட சங்கத்தின் மூத்த DSM திரு .ரசூல் முகைதீன் அவர்களுக்கு எங்கள் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம் .புனித ரமலான் மாதத்தில் அவர் மேற்கொண்டிருக்கும் நோன்பு நேரத்திலும் தளராமல் முழுநேர வகுப்புகளை எடுத்தது பாராட்டிற்குரியது .அத்துடன்CSI அமுலாக்கத்திற்கு பிறகு சந்திக்கும் பிரச்சினைகளை குறித்து எடுத்துரைத்த விளாத்திகுளம் போஸ்ட்மாஸ்டர் திரு .சந்திரபோஸ் அவர்களுக்கும் நன்றி .முக்கியமாக சுமார் 79 தோழர்கள் இந்த பயிற்சி வகுப்பில் மிக ஆர்வத்தோடு பங்கேற்று சிறப்பித்ததும் பயிற்சிக்கு பிறகு தோழர்கள் தந்த feedback  உள்ளபடியே நமக்கு ஒரு சிறப்பான பணியினை செய்ததை போல் இருந்தது .இந்த பயிற்சி வகுப்பினை தலைமை அஞ்சலத்திற்குள் நடத்த அனுமதி அளித்த கோட்ட நிர்வாகத்திற்கும் நன்றி .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Saturday, June 9, 2018

                                                   முக்கிய செய்திகள் 
HSG I  கேடருக்கான சுழல் மாறுதல் உத்தரவு நேற்று தென் மண்டலத்தில் பிறப்பிக்கப்பட்டது ..
தோழியர் விக்டோரியா Deputy PostMaster திருநெல்வேலி --போஸ்ட்மாஸ்டர் தென்காசி ஆகவும் நமது கோட்டத்தை சார்ந்த தோழர் R .ஹரிஹர கிருஷ்ணன் போஸ்ட்மாஸ்டர் ஸ்ரீவைகுண்டம் அவர்கள் மேனேஜர் PSD திருநெல்வேலி  க்கும்  இடமாறுதல் பெறுகிறார்கள் .அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள் .
---------------------------------------------------------------------------------------------------------------------
 சுழல் மாறுதல் தாமதம் -
ஜூன் மாதம் பாதி முடிவடைந்துவிட்டது .இன்னும் RT கான மறுஅறிவிப்பு நமது கோட்டத்தில் வெளியிடப்படவில்லை .புதிய கல்வி ஆண்டில் குழந்தைகளை புதிய இடங்களில் சேர்க்கைக்காக ஒரு முடிவும் எடுக்காத நிலையில் பல ஊழியர்கள் அவதிப்படுகிறார்கள் .CSI யை காரணம் காட்டி ஊழியர் நலன்கள் தாமத படுத்துவதை ஏற்க முடியாது .இந்த நிலையில் நமது கோட்ட SSP அவர்கள் மீண்டும் SP PSD க்கு மாற்றப்பட்டுள்ளார் .நமக்கு விருதுநகர் SSP திருமதி நிரஞ்சலாதேவி அவர்கள் கூடுதல் பொறுப்பை கவனிக்கிறார்கள் .RT   குறித்து கோட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம் .
--------------------------------------------------------------------------------------------------------------------------
                                    CSI பயிற்சி வகுப்புகள் -வாய்ப்புகளை பயன்படுத்துங்கள் 
நமது கோட்ட சங்கத்தின் சார்பாக நமது ஊழியர்களுக்கு CSI குறித்த வகுப்புகளை நடத்த வேண்டும் என நமது மூத்த DSM தோழர் A.ரசூல் அவர்களை நாம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது இன்முகத்துடன் சம்மதித்தார் .முதலில் திருநெல்வேலி HO வில் நடத்த திட்டமிட்டிருந்தோம் .ஊழியர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டு வந்ததால் இந்த வகுப்பை பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் நடத்த முடிவெடுக்கப்பட்டது .இதற்கு அனுமதி நல்கிய பாளை போஸ்ட்மாஸ்டர் அவர்களுக்கும் கோட்ட நிர்வாகத்திற்கும் நன்றிதனை தெரிவித்து கொள்கிறோம் .சரியாக காலை 10.00 மணிக்கு பயிற்சிகள் (ON LINE ) மூலம் நடத்தப்படுகிறது .பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளும் ஊழியர்களுக்கு மதிய உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
----------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Friday, June 8, 2018

                                      போராட்டம் சொல்லும் பாடம் என்ன ?
போராடிய GDS ஊழியர்களை அரசாங்கத்தின் தூதுவராக சென்னையில் நேரில் சந்தித்து உரையாடினார் நமது பாதுகாப்பு துறை அமைச்சர் மாண்புமிகு நிர்மலா சீதாராமன்
  இன்று சென்னை T .நகரில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் மாண்புமிகு  நிர்மலா சீதாராமன் அவர்கள் சென்னை மண்டல GDS ஊழியர்களுடன் கலந்துரையாடினார் .நமது பாரத பிரதமர் மோடிஜி அவர்களின் ஆலோசனையின் பேரில் தான் வந்ததாகவும் உங்கள் (GDS) உண்மை நிலைகளை இந்த போராட்டத்தின் மூலம் தான் முழுமையாக தங்களுக்கு தெரியும் என்றும் தெரிவித்தார் .மேலும் இந்த போராட்டத்தில்  கூட தமிழகத்தில் ஒரு அசம்பாவிதம் கூட நடக்காவண்ணம் மிகுந்த கட்டுப்பாட்டோடு நீங்கள் நடந்து கொண்டது பாராட்டிற்குரியது என்றார் .மேலும் இப்பொழுது கொடுத்துள்ளதை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள் என்றும் இதர கோரிக்கைகள் குறித்து ஒரு மூன்று மாத இடைவெளிக்கு பிறகு பரிசீலிக்கலாம் என்றார் .அமைச்சரின் பேச்சும் அணுகுமுறையும் நேரில் வந்த ஊழியர்களுக்கு பரவசமாகவும் இன்ப அதிர்ச்சியாகவும் இருந்தது .GDS ஊழியர்களின் போராட்டம் நமது கோரிக்கை வெற்றியோடு நிற்கவில்லை .அரசையே திரும்பிப்பார்க்கவும் அமைச்சரே ஊழியர் சந்திப்பை நடத்த சொல்லி வந்திருந்தது இன்றைய ஆட்சியின் திருப்புமுனை தான் என்றால் மிகையாகாது .மத்திய பாதுகாப்பு அமைச்சர் மாண்புமிகு  நிர்மலா சீதாராமன் அவர்கள்தமிழகத்தை  பூர்விகமாக கொண்டவர்கள் என்பதும் இனிய தமிழில் உரையாற்றியது மேலும் ஊழியர்களுக்கு மண நிறைவை தந்திருந்தது ...இந்த நிகழ்ச்சியில் சென்னை மண்டலத்தை சார்ந்த PMG கள் /DPS HQS  ஆகியோர்களும் கலந்து கொண்டனர் .கலந்து கொண்டு கருத்து சொன்ன ஊழியர்கள் GDS ஊழியர்களுக்கு தனி சீருடை வழங்கவேண்டும் என்று புதிய கோரிக்கையை வைத்ததும் குறிப்பிடத்தக்கது .
.நன்றி .தகவல் தோழர் V.பார்த்திபன் முன்னாள் மாநில செயலர் அஞ்சல் மூன்று 

அன்பார்ந்த தோழர்களே !
  16 நாள் வேலைநிறுத்தத்தின் எதிரொலியாக தேங்கிக்கிடக்கும் தபால்களை பட்டுவாடா செய்திட குறைந்தபட்ச கூலியை வழங்கிட நிர்வாகம் முன் வந்தபோதிலும் சில அலுவலகங்களில் எதுவும் கொடுக்கவில்லை என்ற தகவல்கள் வருகிறது .சம்பந்தப்பட்ட SPM தோழர்கள் கோட்ட அலுவலகத்தை தொடர்புகொண்டு பழைய நாட்களுக்கான தபால்களை பட்டுவாடா செய்ய அனுமதி கேட்டு பெற்று கொடுக்க கேட்டு கொள்ளப்படுகிறார்கள் 
-----------------------------------------------------------------------------------------------------------------
CSI பயிற்சி வகுப்புகளுக்கு நாம் எதிர்பார்த்ததை விட அதிக தோழர்கள் கலந்துகொள்ள ஆர்வம் தெரிவித்திருப்பதால் 10.06.2018 ஞாயிறு பயிற்சி வகுப்புகள் பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் வைத்து சரியாக காலை 10 மணிக்கு தொடங்குகிறது .தலைமை அஞ்சலக ஊழியர்களுக்கு ஆங்காங்கே பயிற்சி பெற வாய்ப்புகள் இருப்பதால் துணை அஞ்சலக ஊழியர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள கேட்டு கொள்ள படுகிறார்கள் .தங்கள் வருகையை உறுதிபடுத்த கேட்டு கொள்கிறோம் .
-------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 
-------------------------------------------------------------------------------------------------------------

Thursday, June 7, 2018

அன்பார்ந்த தோழர்களே !
  16 நாள் GDS போராட்டம் வரலாற்று வெற்றி ! இந்த புனித போரில் பங்கேற்ற உங்கள் அனைவருக்கும் நெல்லை NFPE இன் புரட்சிகர வாழ்த்துக்கள் .
                                                 வேலைநிறுத்த சிறப்புகள் 
1.இந்திய சுதந்திரத்திற்கு பின் முதன்முதலாக அதிக நாள் மத்திய அரசு துறையில் வேலைநிறுத்தம் நடந்தது இப்பொழுது தான் .
2. போராட்டத்தின் நடுவிலே அரசாங்கம் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட அதிசயமும் இங்குதான் .
3.BJP சர்க்காரின் நான்காண்டு ஆட்சிக்காலத்தில் போராட்டத்தின் மூலம் கோரிக்கையை தீர்வு கண்டதும் இன்று தான் .
4.2012 யில் ஏற்பட்ட சங்கங்களின் பிளவிற்கு பிறகு AIGDSU -NFPE (GDS) சங்கங்கள் சம்மேளனங்களின் துணை இல்லாமல் அவர்களாகவே JCA அமைத்து போராடியது மட்டுமல்ல இறுதிவரை ஒற்றுமை எனும் கவசத்தை இறுக பற்றிக்கொண்டதும் சிறப்புதான் .
               நமது கோட்டத்தில் GDS தோழர்களுக்கு ஆதரவாக இரண்டு முதல் நான்கு நாட்கள் வரை வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற அனைத்து அஞ்சல் மூன்று & அஞ்சல் நான்கு தோழர்கள் /தோழியர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
--------------------------------------------------------------------------------------------------------------------------
நமது நெல்லை கோட்டசங்கத்தின் வாட்ஸாப்ப் ஆன நெல்லை NFPE தளத்தில் இளைய தோழர்கள் /தோழியர்கள் முதல் மூத்த தோழர்கள் வரை மிக ஆர்வமாக கருத்துக்களை பதிவதும் தங்கள் பிரச்சினைகளை தெரிவிப்பதும் நாளுக்குநாள் அதிகரிப்பதை நினைத்து மிக்க மகிழ்ச்சி அடைகிறோம் .தொடர்ந்து உங்கள் ஆதரவுகளை கோட்ட சங்கத்தின் ஒவ்வொரு நடவடிக்கைகளுக்கும் தந்திடுமாறு கேட்டு கொள்கிறோம் .
---------------------------------------------------------------------------------------------------------------------
CSI பயிற்சி வகுப்புகளிலும் தோழர் /தோழியர்கள் காட்டும் ஆர்வம் மிக சிறப்பாக இருக்கிறது .நிச்சயம் கோட்ட சங்கம் விரிவான ஏற்பாடுகளை செய்து கொடுக்கும் .
 நன்றி .வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 


Wednesday, June 6, 2018

                                      வெற்றி வாழ்த்துக்கள் 
                                    அதிகார பூர்வ அறிவிப்பு 
கமேலேஷ் சந்திரா கமிட்டி அமுலாக்கத்திற்கு இன்று கூடிய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது .செய் ! அல்லது செத்துமடி என்று சாதித்து காட்டிய GDS தோழர்களுக்கு நெல்லை கோட்டத்தின் சார்பாக புரட்சிகர வாழ்த்துக்கள் .
01.1.2016 முதல் ஊதியம் மாற்றப்படுகிறது .நிலுவை தொகை ஒரே தவணையில் கிடைக்கும் .போனஸ் உச்சவரம்பு ரூபாய் 7000 ..இன்னும் விரிவான தகவல்களுடன் விரைவில் .......
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா -I .ஞான பாலசிங் E .காசி விஸ்வநாதன் நெல்லை கூட்டு போராட்ட குழு