அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம்
அஞ்சல் எழுத்தராகப்போகும் எங்கள் அன்பு தோழமைகளுக்கு நெல்லை NFPE யின் வெற்றி வாழ்த்துக்கள்
நாம் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் PA/SA தேர்வு முடிவுகள் முழுமையாக 30.10.2022 க்குள் முடித்திருக்கவேண்டும் என அஞ்சல் வாரியம் காலநிர்ணயம் செய்திருப்பதை யாவரும் அறிவீர்கள்.
கடந்த இரண்டு நாட்களாக நமது மாநில நிர்வாக அலுவலகத்திலும் பதவி உயர்வு சம்பந்தமான கூட்டங்கள் நடந்துவருவதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்பெல்லாம் தேர்வு முடிவுகள் அறிவிக்க இது போன்ற காலநிர்ணயம் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை..
புதிய நியமனவிதிகள் நடைமுறைக்கு வந்தபின் நடைபெற்ற முதல் தேர்வு..மாநில அளவில் தேர்ச்சிப்பட்டியல் என எல்லாமே புதியவைகள்...
அதுபோக காலியிடங்களும் ஆயிரத்தை தொடும் அளவில்...பிரிவு A யில் அனைவரும் தேர்வாகும் ஓர் மகிழ்வான சூழல் ..பிரிவு B யில் கூட பாதிக்கு மேல் ஊழியர்கள் எழுத்தராக ஒரு பொன்னான வாய்ப்பு...
இத்தனை காலியிடங்களை கண்டுபிடித்தது, காலியிடங்களை எல்லாம் பூர்த்திசெய்திட தொடர் நடவடிக்கைகள் எடுத்தது என எல்லா பெருமையும் நமது NFPE பேரியக்கத்திற்கே சாரும்...
பதவிஉயர்வின் வெற்றி விளிம்பில் நிற்கும் அனைவருக்கும் நெல்லை NFPE யின் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
தபால்காரர் COMBINED DUTY மற்றும் விடுமுறை நாட்களில் பணிபுரியும் போது கொடுக்கப்படும் இழப்பீடு தொகை குறித்து ஏற்கனவே அஞ்சல் வாரியம்14.08.2015 அன்று தெளிவான உத்தரவுகளை வழங்கியும் கூட பல போஸ்ட்மாஸ்டர்கள் இதுகுறித்து சரியான புரிதல் இல்லாமல் இருக்கிறார்கள் .
ஆகவே ஊழியர்கள் நலன் பெறும் வகையில் மீண்டும் இலாகா உத்தரவை அமுல்படுத்திட வலியுறுத்தி சென்னை பெருமண்டல PMG திரு .நடராஜன் IPS அவர்கள் மீண்டும் அனைத்து கோட்ட அதிகாரிகளுக்கும் 26.10.2022 அன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்
.அதன்படி COMBINED DUTY பார்க்கின்ற தபால் காரருக்கு ரூபாய் 94 என்றும் இரண்டு தபால்காரர்கள் சேர்த்து ஒரு BEAT வேலையை பார்த்தால் ரூபாய் 47 கொடுக்கப்படவேண்டும் .மேலும் விடுமுறைநாட்களில் பட்டுவாடா செய்யும் தபால்காரருக்கு ரூபாய் 282 என்றும் MTS ஊழியர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு Rs.29 விகிதம் மூன்றுமணிநேரம் வரைக்கும் , எழுத்தர் மூன்றுமணிநேரத்திற்குள் என்றால் ரூபாய் 41 Per hour , என்றும் சூப்பர்வைசர் மூன்றுமணிநேரத்திற்குள் என்றால் ரூபாய் 47 per hour என்றும் வழங்கப்படவேண்டும் .மூன்று மணிநேரத்திற்கு மேல் என்றால் மூன்றுமணிநேர ஊதியம் வழங்கிடவேண்டும்
இதுபோன்ற ஊழியர்கள் நலன் காக்கும் அதிகாரிகளை நாம் வாழ்த்துவோம் !இதே PMG அவர்கள் மதுரையில் PMG ஆக பணியாற்றிய போது தபால்காரர் பணியிடங்களில் GDS ஊழியர்கள் இல்லை என்றால் வெளியாட்களை அனுமதிக்கலாம் என்ற வரலாற்று உத்தரவை பிறப்பித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது .
ஆகவே இனியாவது தலமட்டத்தில் தபால்காரர் தோழர்கள் தயக்கங்கள் ஏதுமின்றி COMBINED DUTY அலவன்ஸை CLAIM செய்திடவேண்டும் ....
நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
அன்பார்ந்த தோழர்களே !நாளை நடக்கும் கூட்டு ஆர்ப்பாட்டத்தில் நாம் முழங்கும் கொள்கை முழக்கம் --நண்பர்கள் சிலரின் வேண்டுகோள்களுக்கிணங்க .......
வெல்லட்டும் வெல்லட்டும்
அஞ்சல் ஊழியர் போராட்டம்
நாடுதழுவிய போராட்டம்
வெல்லட்டும் வெல்லட்டும் !
மத்திய அரசே ! மத்திய அரசே !
மத்தியில் ஆளும் BJP அரசே
மக்கள் சேவை செய்திடும்
அஞ்சல் துறையினை
தனியாருக்கு விற்காதே !
விற்காதே விற்காதே !
ஏழை மக்களின் காவலாம்
கிராமப்புற அரசானம்
அஞ்சல் துறையினை
தனியாருக்கு விற்காதே !
தனிநபருக்கு கொடுக்காதே !
சுதந்திர இந்தியாவில்
மிச்சமிருக்க்கும் ஒரே துறை
மீண்டுவந்த ஒரே துறை
எங்கள் துறை அஞ்சல் துறை
கூறுபோட்டு விற்காதே
காரணம் ஏதும் சொல்லாதே
பொதுமக்கள் சேவை செய்யும்
அஞ்சல் துறையிலே
லாப நாட்டம் பார்க்காதே !
பார்க்காதே பார்க்காதே!
லாப நட்டம் பார்க்காதே !
நாளும் பொழுதும் நாங்கள் இங்கே
தேடி ஓடி சேர்த்த கணக்காம்
பலகோடி கணக்குகளை
தாரை நீ வார்க்காதே
வரலாற்று பிழை செய்யாதே !
எங்கள் படைப்பு சொந்த படைப்பு
அஞ்சல் காப்பீடு திட்டத்தில்
பல்லாங்குழி ஆடாதே !
பணம் கிடைக்கும் என்பதற்காக
படுகுழியில் தள்ளாதே !
அனுமதியோம் அனுமதியோம்
அஞ்சல் துறையில் தனியாரை
அனுமதியோம் அனுமதியோம்
பல கோடி கணக்குகள்
பல கோடி வாடிக்கையாளர்
சொந்தம் கானும் எங்கள் சேமிப்பை
IPPB க்கு மாற்றாதே !
நட்டத்தில் பிறந்த குழந்தை
IPPB எனும் குழந்தைமீது
நூற்றாண்டு கடந்த துறையை
மூனு தலைமுறை பார்த்த துறையை
விற்றிட துணியாதே !
அமுதசுரபி ஒவ்வொன்றையும்
அடிமாட்டு விலைக்கு விற்றபின்
நாடு கண்ட லாபமென்ன ?
நாங்கள் கண்ட மாற்றமென்ன !
வெள்ளையனை வெளியேற்ற
போராடிய சங்கம் இது !
எல்லை கடந்த போராட்டத்தில்
நாட்டை காத்த கூட்டமிது !
புரிந்துக்கோ புரிந்துக்கோ !
எங்கள் பங்கை புரிந்துக்கோ !
தெரிந்துக்கோ தெரிந்துக்கோ !
பழைய வரலாறை தெரிந்துக்கோ !
மக்கள் சேவை செய்திடும் எங்கள்
துறையை பாதுகாப்போம்
பாதுகாப்பு துறையை கூட விற்க
நீயும் துணிந்த பின்பும்
தொடர்வண்டி சேவையைக்கூட
தனியாருக்கு கொடுத்தபின்பும்
தொலைத்தொடர்பு சேவையை
துண்டித்து பார்த்த பின்பும்
உழைக்கும் மக்கள் கேட்கும் கேள்வி
உன்னை பார்த்து கேட்கும் கேள்வி
கார்டு கவர் எல்லாத்தையும்
காடு மேடு தேடி சென்று
வீடுதேடி விலாசம் தேடி
கொண்டுசேர்க்கும் எங்கள் துறையை
விற்றுதான் வாழணுமா ?
அரசுத்துறைகளை விற்றுத்தான் பிழைக்கனுமா ?
SK .ஜேக்கப் ராஜ் மாநில உதவி செயலர் அஞ்சல் மூன்று --நெல்லை
NFPE PJCA FNPO
அஞ்சல் கூட்டு போராட்ட குழு --நெல்லை
அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ ?நாங்கள் சாகவோ ? அழுது கொண்டிருப்போமோ ? --பாரதி
அஞ்சல் துறையில் தனியார்மய நுழைவினை எதிர்த்து உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் -- அகிலஇந்திய கூட்டு போராட்ட குழு அறைகூவல்
நாள் --22.06.2022 நேரம் மதியம் 1 மணி
இடம் ----பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு
அஞ்சல் துறை படுவேகமாக அமுல்படுத்திவரும் டாக்மித்ரா ,CSC பார்சல் புக்கிங் என எந்த திட்டத்தையும் தொழிற்சங்கங்களோடு கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்படுத்திவருகிறது ....எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றும் செயலாக நாம் நூறாண்டுகளுக்கு மேல்அலைந்து திரிந்து சேமித்து சேர்த்துவைத்த அஞ்சல் சேமிப்பு கணக்குகள் ,சேமிப்பு காப்பீடு பிரிவுகள் அனைத்தும் ஒரே உத்தரவில் IPPB யின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு சென்றுவிட்டது ...மேலும் நெட்ஒர்க் கான்ட்ராக்ட் அனைத்தும் இனி IPPB தான் மேற்கொள்ளும் என்பதுமட்டில்லாமல் IPPB யும் அசுர வேகத்தில் தன் நெட்ஒர்க் சம்பந்தமாக டெண்டர் கோரியிருக்கிறது ..ஒரே நாளில் நமது கட்டுப்பாட்டில் இருந்த போஸ்டல் ATM IPPB க்கு கைமாறிவிட்டது ..
அஞ்சல் துறையின் இந்த தனியார்மய மோகத்திற்கு முடிவுகட்டிட நமது அஞ்சல் கூட்டு போராட்டக்குழு (NFPE --FNPO)சம்மேளனங்கள் நிர்வாகத்துடன் பலசுற்று பேசியும் --எழுதியும் இதுவரை அஞ்சல் இலாகா தனது நிலையில் இருந்து மாறிடவில்லை ...ஆகவே நமது இலாகாவின் இந்த செயல்பாட்டினை கண்டித்தும் அஞ்சல் துறையில் தனியார் நுழைவினை எதிர்த்தும் முதற்கட்டமாக அனைத்து இடங்களிலும் உணவு இடைவேளை ஆர்ப்பாட்டத்தை நடத்திட அறைகூவல் விடுத்துள்ளது ..
தொடர்ந்தது அஞ்சல் இலாகா நமது கோரிக்கைகளின் மீது கவனம் செலுத்தவில்லை என்றால் ஒரு காலவரையற்ற வேலைநிறுத்தத்தை செய்திட முடிவெடுக்கப்பட்டுள்ளது
ஆகவே நமது துறைக்கு நெருங்கிவரும் தனியார் மய ஆபத்தை தடுத்து நிறுத்திட நடைபெறும் அனைத்து இயக்கங்களிலும் தாங்கள் அனைவரும் முழுமையாக கலந்துகொள்ளும்படி கூட்டு போராட்டக்குழுவின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்
நன்றி
தோழமையுடன்
SK .ஜேக்கப் ராஜ் கன்வீனர் கூட்டு போராட்டக்குழு
G.சிவகுமார் தலைவர் கூட்டு போராட்ட குழு
அஞ்சல் மூன்று --அஞ்சல் நான்கு --புறநிலை ஊழியர்கள் சங்கம் -அஞ்சல் பொருள் கிடங்கு ---மற்றும் RMS-- திருநெல்வேலி கோட்டம்
அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
அஞ்சல் இலாகாவை IPPB எனும் நிறுவனத்திற்கு தாரைவார்க்கும் முயற்சியா ?-
அஞ்சல் துறையில் தொழில்நுட்ப பிரிவில் ஏற்பபடப்போகும் அதிரடி மாற்றங்கள் தான் IT .2.O .. இந்த ஒப்பந்தங்கள் நவீனமயமாக்கல் மற்றும் நடைமுறைப்படுத்திட IPPB க்கு நேரடியாக வழங்கப்பட்டுள்ளது .இதற்காக ரூபாய் 5785 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது ..இந்த நிதி 2022-2023 முதல் 2029-2030 நிதியாண்டு வரை பயன்படுத்தப்படும் .
இனிமேல் இரண்டு கட்டமைப்புகள் என்பதில்லாமல் IPPB மட்டுமே BANKING ,இன்சூரன்ஸ் மற்றும் இதர நிதி நிலைக்குரிய திட்டங்களை பார்த்துக்கொள்ளும் .DOPஅதாவது நமது அஞ்சல் இலாகா மெயில் செயல்பாடுகளை மட்டுமே நிர்வகிக்கும் .இதர செயல்பாடுகள் அனைத்தும் IPPB யோடு இணைக்கப்பட்டுவிடும் .
ஒப்பந்த காலங்கள் முடிந்துவிட்ட அனைத்துமே IPPB மேற்பார்வைக்கு சென்றுவிடும் .1.டேட்டா சென்டர் --01.04.2022 2.நெட்ஒர்க் --01.04.2022 3.BANKING ,இன்சூரன்ஸ் 29.08.2022 .
BANKING ,இன்சூரன்ஸ் மற்றும் ரூரல் DEVICE எல்லாமே IPPB கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிடும் .DOP இக்கு மெயில், கவுண்டர் OPERATION, ACCOUNTING AND மற்றும் BACK OFFICEE மற்றும் களத்திலுள்ள நெட்ஒர்க் இவைகளை மட்டுமே விட்டு சென்றுள்ளன .
எல்லா நிர்வாக செயல்பாடுகளையும் கண்காணிக்க PROJECT STEERING COMMITEE புதிதாக அமைக்கப்பட்டுள்ளது .இதில் IPPB மற்றும் DOP உயர் அதிகாரிகள் இடம்பெறுவார்கள்
பல ஆண்டுகளாக நாம் சொல்லிவந்த மெயில் என்கின்ற இதய பகுதியை மட்டுமே அஞ்சல் இலாகாவிடம் ஒப்படைத்துவிட்டு இதர பாகங்கள் அனைத்தையும் கூறுபோட்டு பிரித்தெடுக்கும் TSR.சுப்பிரமணியம்கமிட்டி அறிக்கையின் பெருந்தாக்கம் ....DOP--IPPB என பிரிக்கப்பட போகிறது ..IPPB க்காக பணியாற்றினால் IPPB சம்பளம் கொடுக்கும் ..DOP யோடு இருந்தால் DOPபொறுப்பெடுக்கும் ....
தொலைத்தொடர்பு துறை DOT --BSNL என பிரிக்கப்பட்ட மாதிரி இங்கேயும் DOP--IPPB எனும் இரண்டு அமைப்புகளுக்கிடையில் பலமான தடுப்பு சுவர் எழுப்பப்படப்போகிறது ......என்ன செய்யப்போகிறோம் ?
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
விடுப்பினை வழங்க மறுக்கும் கோட்ட நிர்வாகம் -கூடுதல் பொறுப்பேற்றியிருக்கும் கன்னியாகுமரி முதுநிலை கண்காணிப்பாளர் தொடுக்கும் புது தாக்குதல்கள்
நெல்லை கோட்டத்தில் கடந்த 31.05.2022முதல் கூடுதல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றிருக்கும் கன்னியாகுமரி கண்காணிப்பாளர் அவர்கள் ஊழியர்களின் விடுப்புகளை வழங்குவதில் கடுமையான முறைகளை கையாளுகிறார் ..மருத்துவ விடுப்பு கேட்டு மருத்துவ சான்றிதழுடன் அனுப்பினாலும் மறு OPINION கேட்டு MEDICAL BOARD க்கு அனுப்புகிறார் .அதற்குள் அவரது விடுப்பு நாட்கள் முடிந்துவிடும் .இதில் இதய நோயாளிகள் தங்களது வழக்கமான பரிசோதனைக்கு கூட செல்லமுடியாமலும் வெளியே சொல்லமுடியாமலும் மிகப்பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்கள்
..CCL விடுப்புகள் முற்றிலுமாக மறுக்கப்படுகிறது .அடுத்த நிதியாண்டிற்கு குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு நமது தோழியர்கள் விண்ணப்பித்திருந்தாலும் விடுப்புகள் மறுக்கப்படுகிறது .உடல் நலம் பாதித்த குழந்தைகளின் நலன் பாதுகாக்க படவும் ,குழந்தைகளின் கல்வி தொடர்பான உதவிகள் செய்திடவும் அறிமுகப்படுத்தப்பட்ட CCL இன்று ஒவ்வொரு அதிகாரிகளின் மன நிலைக்கு தகுந்தாற்போல் CCL கேலி கூத்தாகிவிட்டது ..
அதேபோல் மகப்பேறு விடுப்பு முடிந்தபிறகு தொடர்ந்து குழந்தைகளை பராமரிக்க CCL தவிர ஏனைய விடுப்புகள் கேட்டாலும் விடுப்பு நாட்களை குறைத்து விண்ணப்பிக்க அறிவுறுத்த படுகிறார்கள் ...
மற்றகோட்டங்களை ஒப்பிடும் போது நமது கோட்டத்தில் அவ்வளவாக ஆட்பற்றாக்குறை இல்லை ..பிறகு எதற்காக இவ்வளவு கடினமாக அதிகாரிகள் விடுப்பு விஷயத்தில் நடந்து கொள்கிறார்கள் என்பது தெரியவில்லை
இதுகுறித்து நேற்று நமது கோட்ட நிர்வாகத்திற்கு ஒரு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது ..அதன் மீது நிர்வாகம் எடுக்கின்ற நிலைப்பாட்டை தொடர்ந்து நாம் நமது உறுப்பினர்களிடம் கலந்துபேசி அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு செல்ல தயாராகுவோம் ..
தொழிலாளி கையேந்தும் பிச்சைக்காரன் அல்ல ....அவன் இந்த மண்ணின் உயிர்சத்து .....
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
அன்பார்ந்த தோழர்களே !
செய்தி சிதறல்கள்
*சர்வதேச பார்சல்களை அஞ்சலகம் மூலம் அனுப்பும்பொழுது அளவீட்டு முறைகளை (Volumetric weight ) பின்பற்றி கட்டணங்கள் ஏதும் வசூலிக்க வேண்டாம்
என்றும் VOLUMETRIC முறை அதாவது( நீளம் X அகலம் X உயரம்) என்ற அளவுகோல்கள் என்பது உள்நாட்டு பார்சல்களுக்கு மட்டுமே பொருந்தும் என பார்சல் இயக்குனரகம் 07.06.2022 தேதியிட்ட தனது கடிதத்தில் கூறியுள்ளது
* இதுவரை நிறுத்திவைக்கப்பட்ட தபால் சேவைகள் சீனாவிற்கு 07.06.2022 முதல் மீண்டும் துவக்கப்பட்டுள்ளதாக அஞ்சல் வாரியம் அறிவித்துள்ளது . இருந்தாலும் நமது டெலிவரி Norms படி உரிய நேரத்தில் பட்டுவாடா ஆகும் என்று சொல்லமுடியாது என்பதை வாடிக்கையாளர்களிடம் தெரிவித்திட வேண்டும்
*PLI /RPLI இன்சென்டிவ் வழங்குவது தொடர்பாக கடந்த நிதியாண்டிற்கும்
நடப்பு நிதியாண்டிற்கும் தேவையான வழிகாட்டுதலை PLI இயக்குனரகம் 07.06.2022 அன்று வெளியிட்டுள்ளது
அதன் படி
ஒரு நிதியாண்டிற்கு குறைந்தபட்சம் நான்கு பாலிசிகள் பிடித்துக்கொடுத்திட வேண்டும் .அவ்வாறு குறைந்தபட்சம் நான்கு பாலிசிகள் பிடித்திடாத விற்பனையாளர்களின் லைசென்ஸ் ரத்துசெய்யப்படும் . ஆனாலும் அவர்கள் புதிதாக லைசன்ஸ் நம்பர் வாங்கி கொள்ளலாம்.
அன்பார்ந்த தோழர்களே !
CSC மூலம் பார்சல் சேவைகள் --சீரமைப்பா ?சீரழிவா ?
ஸ்பீட் போஸ்ட் பார்சல் மற்றும் பதிவு பார்சல்களை CSC யின் கீழ் கொண்டு வந்து அதை தனியாக நம்மிடம் இருந்து பிரித்து கொண்டு செல்லும் வேகத்தையும் ஆர்வத்தையும் நமது இயக்குநரகத்தின் 31.05.2022 தேதியிட்ட கடிதத்தில் பார்க்க முடிகிறது .
ஏற்கனவே பரீட்சார்த்த முறையில் மூன்று மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட பின்னணியில் வருகிற 06.06.2022 திங்கள் முதல் இந்தியா முழுவதிலும் துவக்கிட முடிவெடுக்கப்பட்டுள்ளது .
இதுவரை மற்ற துறைகளின் /நிறுவனங்களின் பணியை CSC யில் நாம் செய்திட கட்டாயப்படுத்தப்பட்டோம் .இன்றோ நமது சொந்த பணிகள் அதாவது நமது ஏகபோகம் என சொந்தம் கொண்டாடிக்கொண்டிருந்த நமது பார்சல்களை நாம் ஸ்பீட் பார்சல் என்றும் பதிவு பார்சல் என்றும் வெளியாட்களுக்கு அதாவது CSC VLE களுக்கு நாம் செய்யப்போகிறோம் .
இதுகுறித்து நமது அஞ்சல் கூட்டு போராட்டக்குழு 03.06.2022 அன்று நமது துறை செயலருக்கு கடிதம் எழுதியுள்ளது .CSC மூலம் பார்சல் சேவையை தொடங்குவது என்பது முழுக்க முழுக்க பார்சல் பிரிவினை தனியாருக்கு கொண்டுசெல்லும் முயற்சியே தவிர வேறொன்றும் இல்லை .இதற்கு மாறாக நமது கட்டமைப்புகளை மேம் படுத்திக்கொடுத்தல் ,நெட்ஒர்க் பிரச்சினைகளை சீராக்கி கொடுத்தால் நமது ஊழியர்களாலே பார்சல் சேவையயை சிறப்பாக செய்திடமுடியும் ஆகவே இத் திட்டத்தை உடனடியாக கைவிடவில்லையென்றால் . NFPE -FNPO சம்மேளனங்கள் கூட்டாக தொழிற்சங்க நடவடிக்கைகளில் இறங்கும் என இலாகாவை எச்சரித்துள்ளது ..
உங்களுக்கெல்லாம் நன்றாக ஞாபகம் இருக்கும் என நினைக்கிறோம் .நமது துறையில் பதிவுதபால் முறை இருக்கும்போதே நமது துறை விரைவு தபால் திட்டத்தை அறிமுகப்படுத்தி பொதுமக்களிடம் பதிவு தபாலை குறைத்தும் விரைவு தபாலை முன்னிறுத்தியும் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டதை போல இன்றும் நம்மிடம் உள்ள பார்சல் சேவையை சீர்குலைத்திட CSC சேவையை முன்னிறுத்துவதை அனுமதிக்க கூடாது ...இதுகுறித்து நமது சம்மேளனங்கள் எடுக்கும் முடிவுக்கு நமது தமிழ்மாநில சங்கம் முழு ஆதரவினை கொடுக்கும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்
நன்றி --NFPE -P3 தமிழ் மாநிலம்
அன்பார்ந்த தோழர்களே !வணக்கம்
SB உத்தரவு 9/2022 DTD 02.06.2022 இன் சாராம்சங்கள்
இந்த உத்தரவு நமது OPERATIVE பிரிவு ஊழியர்களுக்கு தொடர்புடையது இல்லை என்றாலும் வட்டி கணக்கீட்டில் ஏற்படும் வேறுபாடுகளை எவ்வாறு அட்ஜஸ்ட் செய்யப்படுகிறது என்பது குறித்து நாமும் தெரிந்து வைத்திருப்பதில் ஒன்றும் தவறில்லை என்பதற்காக சில முக்கிய அம்சங்களை மட்டும் உங்கள் தகவல்களுக்காக தருகிறோம்
SBCO பிரிவில் வட்டி மற்றும் ஆரம்ப இருப்புத்தொகைஇவைகளை சரிகட்டிட நேரும்பொழுது SBCO ஊழியர்களால் HIARM மெனு மூலம் சரிசெய்யப்பட்டு அதை HACINT மெனு மூலம் செயல்படுத்துவார்கள் .இந்த பணியை இதுகாறும் CEPT செய்துவந்தது .தற்சமயம் இந்த திருத்தங்களை செயல்படுத்தும் முறையை பரவலாக்கப்பட்டு அந்தந்த CBS-CPC இக்கு கொடுக்கப்பட்டுள்ளது .
பொதுவாக IBB அடிப்படையில் வட்டி கணக்கிடப்படும் திட்டங்களான SB /PPF/SSA/NSS87/NSS92 மற்றும் PFF கடன் கணக்கு இவைகளில் ஏற்படும் வட்டி திருத்தங்கள் அதிகரித்திக்கொண்டே செல்வதால் இதை CEPTயில் இருந்து எடுத்து CBS-CPC இக்கு கொடுக்கப்பட்டுள்ளது
CBS-CPC பிரிவில் உள்ள இன்சார்ஜ் அதிகாரி தான் இனிமேல் HACINT மெனுவை செயல்படுத்துவார் .இதற்கான பயிற்சிகள் 13.0.2022அன்று CPC ஊழியர்க்ளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது
அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
COULD NOT GET RESPONSE FROM SERVER என்ன நமது அன்றாட மன்றாட்டு வழிபாடா ? RUNTIME ERROR என்பது நமக்கென்ன மூல மந்திரமா ?SERVICE NOT ACCESSIABLE என்ன நமது வேத வசனமா ? நமது அன்றாட சிலுவை பாடுகளுக்கு நமது மாநில சங்கம் கொடுத்துள்ள கடிதத்தை பாரீர் !பாரீர் !
நமது மாநில சங்கத்தின் சார்பாக நெட்ஒர்க் சம்பந்தமாக கடந்த 12.04.2022 CPMG அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தை நீங்களும் பார்த்திருப்பீர்கள் என நினைக்கின்றேன் ...ஒரு சராசரி அஞ்சல் எழுத்தராக ஒரு C அல்லது B கிளாஸ் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியரின் ஆதங்கத்தை அப்படியே படம்பிடித்து காட்டிருந்தது
.இதுபோன்ற ஊழியர்கள் நலன் சார்ந்த விஷயங்களை இவ்வளவு எதார்த்தமாக நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்ற திறமையும் பெருமையும் நமது NFPE பேரியக்கத்திற்கு மட்டுமே உண்டு என்பதில் நாமும் பெருமைகொள்வோம் ...
SAP BACKOFFICE IPVS ,MCCAMISH FINACLE ,IPPB மற்றும் CSCவரை நாம் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகள் ,நெட்ஒர்க் குறைபாடுகளினால் ஏற்படும் DOUBLE ENTRY,தேவையில்லாமல் REVERSAL என அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய முழுமையான நமது உள்ளக்கிடக்கை அப்படியே படம் பிடித்து காட்டியிருக்கிறது
SAP மூலமாக கொடுக்கப்படும் CASH REMITTANCE ,கிளை அஞ்சலகங்களுக்கு பணம் அனுப்புவதில் TCB க்கு REFELCT ஆக மறுக்கும் பிரச்சினைகள் ,காலை முதலே DPMS யில் ஏற்படும் SLOWNESS EMO பிரின்டிங்யில் ஏற்படும் சிக்கல்கள் POS CASH பிரச்சினை ,,MCCAMISH யில் ஏற்படும் DOUBLE ENTRY அதேபோல் FINACLE ,அதனை தொடர்ந்து IPPB ரிப்போர்ட் தாமதம் CSCயில் ஏற்படும் காலதாமதம் என அனைத்து பிரச்சினைகளையும் மாநில நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுசென்றது அருமை .
அதிலும் குறிப்பாக ஒவ்வொருமுறையும் FINACLE யில் லாகின் ஆவது என்பது ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் பேரானந்தத்திற்கு சமம் என குறிப்பிட்டிருப்பது மிகவும் சரியே ..ஒரு சராசரி ஊழியரின் அனுதின முனங்கல்களை அப்படியே படம்பிடித்துக்காட்டிய மாநில சங்கத்திற்கு வாழ்த்துக்கள் .....நன்றி
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
மாற்றங்களை வரவேற்போம் ! வர்த்தக ரீதியான போட்டிகளை எதிர்கொள்வோம் !
அஞ்சல் சேமிப்பு பிரிவின் மற்றுமொரு பரிணாம வளர்ச்சி தான் நமது POSB யில் இருந்து வாடிக்கையாளர்களின் பணத்தை இதர வங்கிகளுக்கும் ,பிற வங்கிகளில் இருந்து நமது POSB கணக்கிற்கும் பணத்தை நமது அஞ்சலக வேலைநேரத்திற்குள் மாற்றிக்கொள்ளலாம் .இதற்காக NEFT மற்றும் RTGS வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன .NEFT என்பது PERIODICAL TRANSFER எனஒரு கால இடைவெளிக்குள் பணம் பரிமாற்றம் செய்யப்படும் .RTGS என்பது உடனே பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுவிடும் ..தற்சமயம் நமது துறையில் NEFT மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது .சில தொழிற்நுட்ப காரணங்களால் RTGS வசதி இப்பொழுது இல்லை .குறைந்தபட்சம் ரூபாய் 1 முதல் 15 லட்சம் வரை பண பரிமாற்றம் செய்யலாம் .NET பாங்கிங் மூலமாக நாளொன்றுக்கு 5 TRANSACTIONS ஒவ்வொரு முறையும் அதிகபட்சம் ரூபாய் 2 லட்சம் என 10 லட்சம் வரை பண பரிமாற்றம் செய்யலாம் .நமது அஞ்சலக IFSCCODE IPOS00000DOP ஆகும் .இதற்காக 16 இலக்கம் கொண்ட UTR எண் வழங்கப்படும் .இது FINACLE ,INTERNET BANKING மற்றும் MOBILEBANKING மூலமாக செயல்படுத்தப்படும் .இதற்காக தனி FINACLE (URL ) IPPB போல பயன்படுத்தப்படும்
முன்னதாக நெட் பாங்கிங் வசதி மட்டுமே நம்மிடம் இருந்தது .அதுவும் நமது POSB யில் இருந்து நமது SSA-- RD--TD உள்ளிட்ட கணக்குகள் சம்பந்தமான பரிவர்த்தனைகள் மட்டுமே செய்ய முடிந்தது .அதனை தொடர்ந்து ECS முறை அறிமுகப்படுத்தப்பட்டது .அதிலும் குறிப்பிட்ட சேவைகளுக்கு மட்டுமே வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கிற்கு மாற்றம் செய்யும் வசதி இருந்தது .
தற்சமயம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள NEFT மற்றும் RTGS வசதிகள் நமது அஞ்சல் சேமிப்பு மற்றுமொரு மைல் கல்லை எட்டும் என்பதில் ஐயமில்லை .ஆனால் இதுபோன்ற புது புது சேவைகளுக்கு ஊழியர்களுக்கு முறையான பயிற்சிகள் கொடுப்பதில்லை .நிர்வாகம் வழக்கம் போல் SOP எனும் STANDARD OPERTTION PROCEDURE விளக்க கடிதத்தை பக்கம் பக்கமாக அனுப்பிவிட்டு இருந்து விடுகிறது ..
நமது துறையின் புதுப்புது திட்டங்கள் பொதுமக்களிடம் சென்றடைகிறதோ இல்லையோ சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு முழுமையாக சென்றடைய வேண்டும் ..இல்லையென்றால் இதுவும் காகித திட்டங்களாக ஒருசில இடங்களோடு நின்றுவிடும் ..ஆனாலும் இதுவரை கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் எல்லாமே எந்தவித பயிற்சிகள் இல்லாமல் நமது தோழர்களின் தனிப்பட்ட ஆர்வத்தால் ,முயற்சியால் முழுமையாயாக செயல்படுத்தப்பட்டிருப்பது நமக்கு பெருமையே !
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
மாற்றங்களை வரவேற்போம் ! வர்த்தக ரீதியான போட்டிகளை எதிர்கொள்வோம் !
அஞ்சல் சேமிப்பு பிரிவின் மற்றுமொரு பரிணாம வளர்ச்சி தான் நமது POSB யில் இருந்து வாடிக்கையாளர்களின் பணத்தை இதர வங்கிகளுக்கும் ,பிற வங்கிகளில் இருந்து நமது POSB கணக்கிற்கும் பணத்தை நமது அஞ்சலக வேலைநேரத்திற்குள் மாற்றிக்கொள்ளலாம் .இதற்காக NEFT மற்றும் RTGS வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன .NEFT என்பது PERIODICAL TRANSFER எனஒரு கால இடைவெளிக்குள் பணம் பரிமாற்றம் செய்யப்படும் .RTGS என்பது உடனே பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுவிடும் ..தற்சமயம் நமது துறையில் NEFT மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது .சில தொழிற்நுட்ப காரணங்களால் RTGS வசதி இப்பொழுது இல்லை .குறைந்தபட்சம் ரூபாய் 1 முதல் 15 லட்சம் வரை பண பரிமாற்றம் செய்யலாம் .NET பாங்கிங் மூலமாக நாளொன்றுக்கு 5 TRANSACTIONS ஒவ்வொரு முறையும் அதிகபட்சம் ரூபாய் 2 லட்சம் என 10 லட்சம் வரை பண பரிமாற்றம் செய்யலாம் .நமது அஞ்சலக IFSCCODE IPOS00000DOP ஆகும் .இதற்காக 16 இலக்கம் கொண்ட UTR எண் வழங்கப்படும் .இது FINACLE ,INTERNET BANKING மற்றும் MOBILEBANKING மூலமாக செயல்படுத்தப்படும் .இதற்காக தனி FINACLE (URL ) IPPB போல பயன்படுத்தப்படும்
முன்னதாக நெட் பாங்கிங் வசதி மட்டுமே நம்மிடம் இருந்தது .அதுவும் நமது POSB யில் இருந்து நமது SSA-- RD--TD உள்ளிட்ட கணக்குகள் சம்பந்தமான பரிவர்த்தனைகள் மட்டுமே செய்ய முடிந்தது .அதனை தொடர்ந்து ECS முறை அறிமுகப்படுத்தப்பட்டது .அதிலும் குறிப்பிட்ட சேவைகளுக்கு மட்டுமே வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கிற்கு மாற்றம் செய்யும் வசதி இருந்தது .
தற்சமயம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள NEFT மற்றும் RTGS வசதிகள் நமது அஞ்சல் சேமிப்பு மற்றுமொரு மைல் கல்லை எட்டும் என்பதில் ஐயமில்லை .ஆனால் இதுபோன்ற புது புது சேவைகளுக்கு ஊழியர்களுக்கு முறையான பயிற்சிகள் கொடுப்பதில்லை .நிர்வாகம் வழக்கம் போல் SOP எனும் STANDARD OPERTTION PROCEDURE விளக்க கடிதத்தை பக்கம் பக்கமாக அனுப்பிவிட்டு இருந்து விடுகிறது ..
நமது துறையின் புதுப்புது திட்டங்கள் பொதுமக்களிடம் சென்றடைகிறதோ இல்லையோ சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு முழுமையாக சென்றடைய வேண்டும் ..இல்லையென்றால் இதுவும் காகித திட்டங்களாக ஒருசில இடங்களோடு நின்றுவிடும் ..ஆனாலும் இதுவரை கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் எல்லாமே எந்தவித பயிற்சிகள் இல்லாமல் நமது தோழர்களின் தனிப்பட்ட ஆர்வத்தால் ,முயற்சியால் முழுமையாயாக செயல்படுத்தப்பட்டிருப்பது நமக்கு பெருமையே !
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !வணக்கம்
நமது துறையில் உள்ள VACANCY POSITION ( PA ,SA ,MTS,POSTMAN,MAIL GUARD ) குறித்த அறிக்கையை அனுப்புவதில் மேலும் சில தகவல்களை சேர்த்து வழங்கிட மாநில நிர்வாகத்திற்கு 09.04.2022அன்று இயக்குனரகம் கேட்டுள்ளது .
அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட்ட பதவிகள் LDCE,SOPRTS QUOTA ,COMPOSINATE APPOINTMENT இவைகளை நிரப்பட்ட இடங்களாக எ டுத்துக்கொள்ளவேண்டும் .அதேபோல் OPEN MARKET கணக்கெடுக்கும் போது நிரப்பப்படாத நமது DEPARTMENT UNFILLED VACANCY அனைத்தும் OPEN MARKET க்கு சென்றுவிடும் ..
GDS பதவிகளை நிரப்பிட அதிகாரபூர்வ அறிவிப்பு 02.02.2022 அன்று வெள்ளியிடப்படும் .விண்ணப்பங்கள் 02.05.2022 முதல் 05.06.2022 வரை ஆன்லைன் மூலம் ஏற்றுக்கொள்ளப்படும் .முடிவுகள் 10.06.2022 முதல் வெளியிடப்படும்
நேற்றைய நன்கொடையாளர்கள் திருமதி MP.விஜயா( RETD)தோழர் GS .கங்காதரன் தபால்காரர் பாளை
அனைவருக்கும் நன்றி --தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !வணக்கம் .
அஞ்சல் மூன்றின் அகிலஇந்திய மாநாட்டிற்கு (16.04.2022 முதல் 25.04.2022) வரை பஞ்சாப் மாநிலம் அனந்தசாஹிபுர் செல்லவிருப்பதால் இந்த ஆண்டின் புதிய உறுப்பினர்களின் விண்ணப்ப படிவங்களை (அஞ்சல் மூன்று )கோட்ட நிர்வாகத்திடம் வழங்கப்பட்டுள்ளது ...புதிய உறுப்பினர்கள் அனைவரையும் NELLAI --NFPE வாழ்த்தி வரவேற்கிறது
அஞ்சல் நான்கின் மாநில செயற்குழு கூட்டம் 25.04.2022மற்றும் 26.04.2022 ஆகிய இருநாட்கள் கரூர் மாநகரில் நடைபெறுகிறது ..இந்த செயற்குழுவில் PMA செயல்பாட்டிற்கு தபால்காரர்களை சொந்த போனை பயன்படுத்த நிர்பந்திக்கும் நிர்வாக செயல்பாட்டை தடுத்திட நமது கோட்டத்தின் சார்பாக தீர்மானம் முன்மொழியப்படுகிறது ...மேலும் திருநெல்வேலி PSDNFPE -P4 கிளையை புதுப்பித்து தரவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது
அஞ்சல் மூன்றின் மாநில மாநாடு --நேற்றைய நன்கொடையாளர் திருமதி .பரிதிமாலினி அவர்களுக்கு நன்றி ..இதுவரை 54பேர் நன்கொடை வழங்கியுள்ளார்கள் ...மீதமுள்ளவர்கள் விரைந்து நன்கொடைகளை வழங்கிட கேட்டுக்கொள்கிறோம் ..
நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --E.அருண்குமார் கோட்ட செயலர்கள் நெல்லை
அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே ! வணக்கம் .
நேற்று நடைபெற்ற மாதாந்திர பேட்டியில் நாம் ஏற்கனவே கொடுக்கப்பட்ட சப்ஜெக்ட்ஸ் மீதான விவாதங்கள் சுமூகமாக நடைபெற்றது .குறிப்பாக காலியாகவுள்ள ATR மற்றும் TR பதவிகள் உடனே CALL FOR செய்து நிரப்பப்படும் .நீண்ட நாட்களாக காலியாகவுள்ள அக்கௌன்டன்ட் திருநெல்வேலி HOமிக விரைவில் நிரப்பப்படும் .MMSஊழியர்களுக்கான TA BILL பென்டிங் இருப்பதால் இனி மாதந்தோறும் ADVANCE OF TA அவர்களின் விண்ணப்பத்தின் அடிப்படையில் வழங்கப்படும் .தலைமை அஞ்சலகங்களுக்கு HEAVY WITHDRAWAL MEMO PSD மூலமாக வழங்க ஏற்பாடு செய்யப்படும் .HEAVY WITHDRAWALVERIFICATION அனுப்ப எந்தெந்த B கிளாஸ் அலுவலகங்களில் SINGLE OPERATOR பணி புரிகிறார்களோ அதன் விவரங்கள் வாராந்திர அடிப்படையில் மூன்று தலைமை அஞ்சலகங்களுக்கும் அனுப்பப்படும் .வள்ளியூர் மெயில் பிரைவேட் MMSஒப்புதல் அளிக்கப்பட்டும் விரைவில் அதற்கான E.கான்ட்ராக்ட் முடிக்கப்பட்டு அமுல்படுத்தப்படும் ..என்பன விவாதிக்கப்பட்டன .
அதன்பிறகு நடைபெற்ற விவாதத்தில் LSG இடமாறுதலில் கோட்ட அலுவலகத்தின் மாறுபட்ட நடைமுறைகள் பின்பற்றப்படுவதை சுட்டிக்காட்டினோம் ..அதில் கொஞ்சம் கடுமையான வாக்குவாதங்களுக்கு பிறகு நாம் கொடுத்த கடிதத்திற்கு கோட்டநிர்வாகம் கொடுக்கும் பதிலின் அடிப்படையில் மணடல அளவில் இந்த பிரச்சினைகளை எடுக்க முடிவெடுக்கப்பட்டது .மேலும் நமது மூத்த தோழியர் ஒருவருக்கு மருத்துவ காரணங்களின் அடிப்படையில் இடமாறுதல் வழங்கிட ஒப்புக்கொள்ளப்பட்டது .மேலும் அம்பையில் இருந்து நெல்லை மற்றும் தபால்காரரில் இருந்து எழுத்தர் ஆன தோழர்களின் இடமாறுதல்கள் குறித்தும் பேசப்பட்டது .இறுதியாக GPF கான்ட்ரிபியூஷன் இந்தமாதம் கிரெடிட் ஆகாதா விஷயங்கள் ,இந்தமாதம் பணிஓய்வு பெறுகின்ற தோழியர் ஒருவருக்கு கொடுக்கப்பட்ட சோகாஷ் நோட்டீஸ் இவைகளை முடித்துவைத்திடவும் பேசப்பட்டது ........
நேற்றைய நமது நன்கொடையாளர்கள் தோழர் R.மகாராஜன் VS .கிருஷ்ணன் ஆசை தம்பி தோழியர்கள் பாப்பா ,ஹைருனிசா பேகம் மற்றும் அஞ்சல் நான்கின் நிர்வாகிகள் E.அருண்குமார் மகேஸ்வரன் நிஷாகர் அனைவருக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் ...நன்கொடை அனுப்பிட POSB எண் 0072772744 இதில் கிரெடிட் செய்யவும் ..
நன்றி தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம்
துணை அஞ்சலகங்களில் சேமிப்பு பிரிவில் பணிபுரியும் எழுத்தர்கள் மற்றும் SPM தோழர்கள் ஏப்ரல் மாதம் முதல் தங்கள் கீழுள்ள கிளைஅஞ்சலகங்களில் SB பரிவர்த்தனைக்கு வருகின்ற பாஸ்புக் அனைத்தையும் INTREST பதிந்திட வருகிறதா என்பதை கண்காணிக்கவேண்டும் .அதற்காக ஸ்பெஷல் ERROR BOOK ஒன்றையும் பராமரித்திட வேண்டும் .அவ்வாறு வட்டி பதிய வராத புத்தகங்கள் குறித்து ஜூலை மாத இறுதியில் உபகோட்ட அதிகாரிகளுக்கு அந்த பட்டியலை அனுப்பவேண்டும் ..நமது கோட்டத்தில் இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னால் இரண்டு கிளை அஞ்சலகங்களில் BPM மற்றும் ஆக்ட்டிங் BPM செய்திட்ட தவறுகளுக்கு இன்று துணை அஞ்சலக எழுத்தர்கள் போஸ்ட்மாஸ்டர் என தொடங்கி கோட்ட அலுவலக OA வரை விதி 16 யின் கீழ் குற்றப்பத்திரிக்கை வழங்கப்பட்டுள்து .ஆகவே நமது தோழர்கள் துணை அஞ்சலகங்களில் அன்றாடம் பராமரிக்கவேண்டிய பதிவேடுகளில் ஸ்பெஷல் ERROR BOOK என்பதும் அவசியமான ஒன்று ...வேலைப்பளு ,B கிளாஸ் அலுவலகத்தில் தனி ஆளாக வேலைப்பார்த்தேன் என்ற எந்த வாதமும் நிர்வாகத்தின் காதுகளுக்கோ ,கண்களுக்கோ எட்டப்போவதில்லை .....
நமது கோட்டத்தில் LSG ஊழியர்க்ளுக்கு APAR எழுதிட (PART 1&PART II ) சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கே அனுப்பட்டுள்ளது .இதுகுறித்து இன்று நடைபெறும் மாதாந்திர பேட்டியில் விவாதித்து விளக்கம் தரப்படும் .
இன்றுமுதல் தபால்காரர் புதிய தோழர்களுக்கு மண்டல அளவில் மதுரை தலைமை அஞ்சலகத்தில் வைத்து IN HOUSING TRAINING ஒரு வாரத்திற்கு நடைபெறுகிறது .நமது தோழியர்கள் தங்குவதற்கு வசதியாக லேடீஸ் ஹாஸ்டெல் உள்ளிட்ட பல தகவல்களை தந்துதவிய மதுரை கோட்ட நிர்வாகிகளுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்
HSG II இடமாறுதல் நேற்று வந்துள்ளது .நமது தோழியர் திருமதி கிளாடிஸ் அவர்கள் APMSB திருநெல்வேலி HO விற்கு வருகிறார்கள் .அவர்களுக்கு NELLAI -NFPE யின் சார்பாக வாழ்த்துக்கள்
நேற்றைய நன்கொடையாளர் திரு .S.முருகன் LSG PA திருநெல்வேலி HO.
நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் --E.அருண்குமார் கோட்ட செயலர்கள் நெல்லை
அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே ! வணக்கம்
GDS யில் இருந்து தபால் காரர்களாக தேர்ச்சி பெற்றுள்ள தோழர்கள் /தோழியர்களை நமது NELLAI -NFPE சார்பாக வாழ்த்துகிறோம் ..அவர்களுக்கு IN HOUSING பயிற்சி மதுரையில் நடைபெறுகிறது .பல தோழியர்களின் வேண்டுகோளின் படி மதுரையில் தங்கிட அனைத்து உதவிகளையும் நமது மதுரை கோட்ட அஞ்சல் நான்கு நிர்வாகிகள்மற்றும் அஞ்சல் மூன்று நிர்வாகிகள் செய்துதர தயாராக உள்ளனர் .மதுரை தலைமை அஞ்சலகம் அருகில் பெண்கள் விடுதி இருக்கிறது .ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் எங்களை அனுகவும் .உங்களது பயிற்சி தொடங்கும் நாள் முதல் APPOINTMENTஆனதாக எடுத்துக்கொள்ளப்படுவதால் உங்களுக்கு நாளொன்றுக்கு பயணப்படி மற்றும் உணவு படி ரூபாய் 500உண்டு என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம் .
நாளை 07.04.2022 அன்று நமது SSP அவர்களுடனான மாதாந்திர பேட்டி நடைபெறுகிறது .சமீபத்தில் போடப்பட்ட LSG உத்தரவு மற்றும் நமது மூத்த ஊழியர்களுக்கு மறுக்கப்படும் இடமாறுதல் ,உள்ளிட்ட பிரச்சினைகள் விவாதிக்கப்படும் .
மதுரையில் நடைபெறும் அஞ்சல் மூன்றின் மாநில மாநாட்டிற்கு நமது உறுப்பினர்கள் தாராளமாக நன்கொடை வழங்கிவருகிறீர்கள் .குறிப்பிட்ட தொகை எதுவும் நிர்ணயிக்கவில்லை ..உங்கள் விருப்பம்போல் நன்கொடை கொடுக்கலாம் .நன்கொடை அனுப்புவோர் நமது சங்க கணக்கு எண் 0072772744 யில் செலுத்தவும் .நேற்றைய நன்கொடையாளர்கள் தோழர்கள் மாரிமுத்து -பாளை KG.குருசாமி ஓய்வூதியர் சங்க செயலர் ,மகபூப் ஜான் ஆட்சியர் அலுவலகம் மற்றும் தோழியர் வளர்மதி ..அனைவருக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்
நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -E.அருண குமார் கோட்ட செயலர்கள் நெல்லை
அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே ! வணக்கம்
பார்சல் பிரிவு நவீனமயமாக்கப்படுகிறது ---அமேசன் பிளிப்கார்ட் போன்று பார்சல்கள் இனி பேக்கிங் செய்யப்பட்டால் மட்டுமே அஞ்சலகங்களில் ஏற்றுக்கொள்ளப்படும் .பேக்கிங்க்கு தேவையான பொருட்கள் ,நாம் கோட்ட அலுவலகங்களில் முன் அனுமதி பெற்று வாங்கிக்கொள்ளவேண்டும் ..
01.04.2022 முதல் நமது துறையில் பார்சல் அனுப்புவதில் பெரிய மாற்றங்களை அஞ்சல் வாரியம் அறிவித்துள்ளது .பார்சல் பேக்கிங் பாலிசி என்கின்ற புதிய பெயரில் ALL-INDIA POSTAL ROAD TRANSPORT NET WORK என்கின்ற வழிகாட்டுதலில் கவனம் மற்றும் பாதுகாப்பு என்கின்ற முழக்கத்தோடு பார்சல் பிரிவு செயல்படப்போகிறது .அதனடிப்படையில் பார்சல் பேக்கிங் யூனிட்ஸ் பெரிய அலுவலகங்களில் அறிமுகபடுத்தப்படவுள்ளது .நமது கோட்டத்தில் பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் பேக்கிங் அலுவலகமாக மாற்றப்பட்டுள்ளது
*துணிகளினால் சுற்றப்பட்ட பார்சல் அனுமதிக்கப்படாது
*500 கிராம் முதல் 35கிலோ வரையிலான (20 கிலோ பதிவு பார்சல் ,35கிலோ விரைவு பார்சல் } அனுப்புவதற்கான பெட்டிகள் நமது அஞ்சலகத்திலே கிடைக்கும் ..
*INTERNAL பேக்கிங் ,EXTERNAL பேக்கிங் மற்றும் SELFADHESIVE SPECIALHANDLING LABEL என மூன்று வகைப்படுத்தப்பட்ட பேக்கிங் இருக்கிறது
*அதற்கான சர்வீஸ் சார்ஜ் ரூபாய் 10 வசூலிக்கப்படும்
*பேக்கிங் மெட்டி ரியல்ஸ் -RETAIL POST பிரிவின் கீழ் கணக்கில் கொண்டுவரப்படும் .
இவ்வாறு நவீனமயமாக்கப்படும் பார்சல் பிரிவுகள் வெற்றிகரமாக செயல்படவேண்டும் .அஞ்சல் துறையின் மகத்துவமும் முக்கியத்துவமும் வாடிக்கையாளர்களுக்கு சென்றடையவேண்டும் என்கின்ற நோக்கத்தில் செயல்பட்டால் நாம் வரவேற்போம் .
நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
01.04.2022 முதல் அஞ்சல் சேமிப்பு திட்டங்களான MIS /SCSS/TD கணக்குகளுக்கான வட்டி தொகையினை அஞ்சலக சேமிப்பு கணக்கிலோ அல்லது வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கிலோ தானாகவே வரவு வைக்கப்படவேண்டும் என்பது கட்டாயமாக்க படுகிறது .
01.04.2022 முதல் SUNDRY OFFICE ACCOUNT நிறுத்தப்டும் .இதனால் இதுகாறும் MIS /SCSS/TD இவைகளுக்கான காலாந்திர வட்டி எடுக்கப்படாமல் இருந்தால் அது SUNDRY OFFICE ACCOUNT யில் சேர்ந்திடும்போது அதற்கான கூடுதல் வட்டி இல்லாமல் இருந்தது .இனிமேல் அவ்வாறு இல்லாமல் வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கிற்கு செல்வதால் அதற்கான வட்டியும் கிடைக்கும் .இதை நாம் நமது வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்துவது அவசியம்
..இனிமேல் ஒரு அலுவலகத்தில் இருந்து வேறு அலுவலகத்திற்கு மாறுதல் செய்யும் போது அந்த கணக்கில் எந்த OUTSTANDING வட்டி தொகையும் இல்லை என்பதை உறுதிசெய்தபின்தான் அந்த கணக்கை ஒரு அலுவலகத்தில் இருந்து வேறு அலுவலகத்திற்கு மாற்றமுடியும் .இது 02.04.2022முதல் அமுலுக்கு வருகிறது .இதை தலைமை அஞ்சலக APM உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும்
இந்த புதிய நடைமுறை சேமிப்பு பிரிவில் பணியாற்றும் தோழர்களுக்கும் SPM தோழர்களுக்கும் அவசியம் தெரிந்திருக்கவேண்டிய முக்கிய ஆணை ..மேலும் விவரங்களுக்கு நாம் மேலே பதிவிட்டுள்ள வீடியோவை பார்க்கவும்
நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே ! வணக்கம்
வெல்லட்டும்! வேலைநிறுத்தம் வெல்லட்டும் ! பரவட்டும் தீ பரவட்டும் ! போராட்ட தீ பரவட்டும் !
வருகிற மார்ச் 28 மற்றும் 29 தேதிகளில் நடைபெறும் வேலைநிறுத்தம் நிச்சயம் இந்த அரசாங்கத்தை ஊழியர்களின் பிரச்சினைகளின் மீது தனது கவனத்தை திருப்பும் என்பதில் ஐயமில்லை ...நமது ஒன்றுபட்ட போராட்ட அறிவிப்பு வந்தபின் அஞ்சல் வாரியம் நமக்குவேண்டுகோள் விடுக்கிறது ...இத்தனை நாட்களாய் பாராமுகமாய் இருந்த அஞ்சல் வாரியம் நம்மை பேச்சுவார்த்தைக்கு அழைகிறது என்றால் இது வழக்கமான ஒன்று என யாரும் எளிதில் கடந்துபோக கூடியதல்ல ..கவனிக்கத்தக்கது ..
பழைய வரலாறுகளை திரும்பி பார்த்தால் எத்தகைய நெருக்கடிகளுக்கு இடையில் இந்த இயக்கத்தை நமது தலைவர்கள் வழிநடத்தி இருக்கிறார்கள் என்பது புரியும் .அரசாங்கத்தால் விலைபேசப்பட்டபோதும் எத்தனை தலைவர்கள் அதை நிராகரித்து கடும் விலை கொடுத்து ஊழியர்களின் நலன் காத்தார்கள் என்பது விளங்கும் . வானவில் போன்ற வண்ணமுடைய நமது இயக்கம் என்பதால் கருத்தோட்டங்கள் பலவற்றையையும் ஏற்று ஒருங்கிணைத்து ஒரு ஒற்றுமையை கட்டுவது என்பது சாதாரண விஷயமல்ல ..
நமது சங்கம் எத்தனை சோதனைகளை கடந்து வந்திருக்கிறது .ஆட்சி மாற்றங்களினால் ஏற்பட்ட அரசின் கொள்கை முடிவுகள் நம்மை நேர்முகமாகவோ மறைமுகமாகவோ தாக்கியபோது தயங்காமல் தளராமல் போராடிய பெருமை நமக்குண்டு
இன்றைய தினம் நமது சங்கத்தில் பல இளைய தோழர்கள் அணிவகுத்து நிற்கிறார்கள் ...அவர்களின் போராட்ட குணம் ,போராட்டத்தில் அவர்கள் காட்டும் ஆர்வம் நம்மை வியக்கவைக்கிறது ...புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்ற ஒற்றைக்கோரிக்கைக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள் ....நமது பகுதி கோரிக்கைகளை மட்டுமே முன்னிறுத்தி போராட வேண்டும் என்று நமது தமிழ் மாநிலசங்கமும் எல்லா அரங்கிலும் நமது நிலைப்பாட்டை அழுத்தம் திருத்தமாக எடுத்துரைக்கிறது ...தற்சமயம் புதுப்பிக்கப்பட்ட போஸ்டல் JCA வும் இந்த ஒன்றுபட்ட போராட்டம் நமது துறை சார்ந்த கோரிக்கைகளுக்குக்காகவும் தொடரும் என அறிவித்துள்ளார்கள்
ஆகவே இந்த வேலை நிறுத்தத்தை வெற்றிபெற வைப்பது நமது ஒவ்வொருவரின் கடமை .அதுவும் நாடெங்கிலும் தொழிலாளிகள் ஒருகுடையின் கீழ் ,அஞ்சல் துறையில் நீண்ட நாட்களுக்கு பிறகு அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் ஒருங்கிணைந்த போராட்டம் --இதை சரியாக பயன்படுத்துவோம் ..இந்த துறையை காக்கவேண்டிய கடமையை நாம் நிறைவேற்றுவோம்
பரவட்டும் தீ பரவட்டும் ! போராட்ட தீ பரவட்டும் !
தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
வணக்கம் .இன்று நமது கூட்டு போராட்டக்குழுவின் சார்பாக தென்பகுதிகளில் வேலைநிறுத்த விளக்க சுற்றுப்பயணம் தொடங்குகிறது .In CHARGE யில் உள்ள SPM தோழர்கள் /தோழியர்கள் சனிக்கிழமை கோட்ட அலுவலகத்திற்கு தாங்கள் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளும் தகவலை தெரிவிக்கவும் .அதற்கான மாதிரி படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது ..கோட்ட அலுவலகம் வழிகாட்டுதல் படி யாராவது ஒரு ஊழியர் உங்கள் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டால் அவர்களிடம் உங்கள் சார்ஜ் யை முறைப்படி கொடுத்துவிட்டு வேலைநிறுத்தத்தில் கலந்துகொள்ளவும் .
நேற்றைய நன்கொடையாயாளர்கள் தோழியர்கள் ரத்தினகீர்த்திகா ,பார்வதி முகிலா சிதம்பரம் ராமலட்சுமி வளர்மதி வண்ணாரப்பேட்டை கலாதேவி DO ராஜகுமாரி அனைவருக்கும் நன்றி
தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் --E .அருண்குமார் கோட்ட செயலர் நெல்லை
அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !வணக்கம் .
வருகிற 28.03.2022 மற்றும் 29.03.2022 இரண்டு நாட்கள் நாடெங்கிலும் நடைபெறும் வேலைநிறுத்தம் குறித்தான சுற்றறிக்கை உங்கள் அனைவருக்கும் கிடைத்திருக்கும் என நம்புகிறோம் ...நாளை 24.03.2022 அன்று புறநகர் பகுதிகளில் நமது வேலைநிறுத்த சுற்றுப்பயணம் நடைபெறுகிறது ..
இந்த மாத மாதாந்திர பேட்டிக்கான சப்ஜெக்ட்ஸ் ஏதும் இருந்தால் வருகிற 30.03.2022 க்குள் அனுப்பவும் .
நேற்றைய நன்கொடையாளர்கள் தோழியர் ஆனந்தகோமதி ,ஜோதி ராமையா ,இசக்கி தபால்காரர் ,சேக் பீர் முகைதீன் ,கோபாலன் சுமதி (ராதா புரம் ] கௌரி திலகவதி மற்றும் முத்துபேட்சியம்மாள் அனைவருக்கும் நன்றி .அதற்கான ரசீதுகள் உடனுக்குடன் அனுப்பப்பட்டு வருகின்றன ...
நன்றி தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் -E .அருண்குமார் கோட்ட செயலர்கள் நெல்லை
நாம் போராளிகள்
அவர்களை அப்படியே
விட்டு விடுங்கள்
எதுவும் சொல்லாதீர்கள் !
அவர்கள் அப்படி தான் !
நாம் வேலை நிறுத்தம்
செய்யும் போதுதான்
அவர்கள் வேலை செய்ய
புறப்படுவார்கள் !
ஆண்டுமுழுவதும் நாம்
வேலை செய்வோம்
அன்று மட்டுமே அவர்கள்
விழுந்து விழுந்து வேலை செய்வதாய்
நடித்து கொண்டிருப்பார்கள்
நாம் அரசை எதிர்த்து
ஆர்ப்பரிக்கும் போதெல்லாம்
அவர்கள் நம் மீது வெறுப்பை
உமிழ்வார்கள்
நாம் அரசின் கொள்கைகளை எதிர்த்து
அணி திரட்டுவோம்
அவர்கள் நமக்கு எதிராக
செயல்பட தொடங்குவார்கள்
நேற்று தொடங்கி -நாளை
முடியப்போவதில்லை நமது போராட்டம்
என்றென்றும் தொடரும் இந்த
வர்க்க போராட்டம்
நாம் போராளிகளாக திரிவோம்
அவர்கள் ராஜ விசுவாசியாக திரியட்டும்
வேலைநிறுத்தம் முடியும் அவர்களை
எதுவும் சொல்லாதீர்கள் !
நாம் போராளிகள்
அவர்கள் ராஜ விசுவாசிகள்
ஆம் நாம் பிறவி போராளிகள்
------- ஜேக்கப் ராஜ் ---------
அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே ! வணக்கம்
GDS ஊழியர்களுக்கு பதிலிகள் போடுவது சம்பந்தமாக 11.02.2022 அன்று இலாகா வெளியிட்ட ஆணைக்கு நாடெங்கிலும் கிளம்பிய எதிர்ப்பினை அடுத்து 21.03.2022 அன்று அதற்கான விளக்க ஆணையை இலாகா பிறப்பித்துள்ளது .எந்த ஊழியர்களுக்கும் பதிலிகள் இல்லை என்று விடுப்பை மறுக்கக்கூடாது என்றும் பதிலிகளை நியமிக்கும் போது அதற்கான justification இருக்கிறதா என பார்க்கவேண்டும் என்று விளக்கம் கொடுத்துள்ளது .இந்த விளக்க ஆணை இலாகா அல்லது அரசு தானாக வந்து கொடுக்கவில்லை .தலமட்டம் முதல் அகில இந்தியா வரை நாம் எழுப்பிய உரிமையின் குரல் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது .ஒன்றுபட்ட போராட்டம் வென்று காட்டும் நிச்சயம் என்பது எவ்வளவு உண்மை பார்த்தீர்களா ?
நமது அஞ்சல் மூன்றின் தமிழ் மாநில மாநாட்டிற்கு நமது தோழர்கள் தொடர்ந்து நன்கொடை அளித்து வருகிறார்கள் அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள் நேற்றைய நன்கொடையாளர்கள் V.சரவணன் S.துர்காதேவி P .கிருஷ்ணவேணி V.விஜயலக்ஷ்மி ரகுமாதவன் P.சுந்தரவள்ளி P.ராமகிருஷ்ணன் B.குமாரி N .கண்ணன் கிருஷ்ண குமாரி K.துளசி D.ஹேனா S.ராஜலக்ஷ்மி JAB .மேரி .இதில் யார் பெயரும் விடுபட்டிருந்தால் தெரிவிக்கவும்
நடைபெறவிருக்கின்ற இரண்டு நாட்கள் வேலைநிறுத்தம் தொடர்பாக நாம் இரண்டுநாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறோம் .தோழர்கள் ஆனந்தராஜ் செல்வம் அருண்குமார் ஆகியோர் நம்முடன் சேர்ந்து வருகிறார்கள் 24.0.2022 அன்று புறநகர் பகுதி 25.02.2022அன்று மாநகர் பகுதி 25.02.2022 அன்று மாலை பாளை மற்றும் அம்பை தலைமை அஞ்சலகத்தில் கூட்டு போராட்ட குழுவின் சார்பாக போராட்ட விளக்கக்கூட்டம் நடைபெறும்
நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --E.அருண்குமார் கோட்ட செயலர்கள் நெல்லை
அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே ! வணக்கம் .
நிதியாண்டின் இறுதி நாட்களில் நாம் இருக்கிறோம் . நிர்வாகத்தின் எதிர்பார்ப்புகள் எல்லாம் இருக்கின்ற நாட்களில் டார்கெட் எட்டப்பமா ?எந்தெந்த பிரிவுகளில் நாம் நாம் சிறப்பாக செய்தியிருக்கிறோம் என்ற கணக்கெடுப்பு .மார்சு இறுதி நாளில் அவசர அவசரமாக இருக்கின்ற தொகையை செலவு செய்ய நிர்வாகம் தனக்கு தகுந்தாற்போல் செலவு செய்யும் .சில அதிகாரிகள் செலவு செய்யாமல் திருப்பியும் அனுப்புவார்கள் .இந்த நிலை மாறவேண்டும் .ஒரு C கிளாஸ் அலுவலகம் முதல் அனைத்து அலுவலகங்களுக்கும் தேவைகள் இருக்கும் .உடைந்த நாற்காலிகள் ,கம்ப்யூட்டர் சாதனங்கள் ,ஸ்டேஷனரி என ஓராண்டிற்க்கான உங்கள் தேவைகளை இன்றே நீங்கள் ஒவ்வொருவரும் கோட்ட அலுவலகத்திற்கு எழுத்துமூலமோ அல்லது இமெயில் மூலமோ தெரிவித்துவிட்டு அதன் நகலை கோட்ட சங்கத்திற்கு தெரிவிக்கவும் .அதற்கான மாதிரி கடிதமும் உங்களுக்குக்காக கொடுக்கப்பட்டுள்ளது ..
நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
நித்தமும் நெட்ஒர்க் பிரச்சினை எனும் தீராத அவதி -அன்றாட பணிகளை முடிக்க பல மணிநேர போராட்டம் --இதற்கு விடிவு உண்டா ?இல்லை முடிவுதான் உண்டா ?கலைய வேண்டும் நிர்வாகத்தின் மெத்தனம் --மீண்டும் ஒலிக்கவேண்டும் நமது தோழர்களின் உரிமை குரல்
இந்த ஆண்டு ஜனவரி தொடக்கத்தில் இருந்தே நாம் நித்தமும் நெட்ஒர்க் பிரச்சினையில் சிக்கி தவித்து கொண்டிருக்கிறோம் ....நெட்ஒர்க் கோளாறா ?இல்லை FINACLE குளறுபடியா என்ற விவாதத்தில் மேல்மட்ட அதிகாரிகள் தங்கள் பொறுப்பை தட்டி கழித்து வருகிறார்கள் .தங்கள் அதிகார வரையறைக்குள் பணியாற்றுகின்ற ஊழியர்கள் ஒவ்வொருநாளும் இவ்வாறு போராடி போராடி தங்களது அன்றைய நாள் கணக்கை முடிக்கிறார்கள் என்பதை தெரிந்திருந்தாலும் எந்த அதிகாரிகளிடம் இருந்தும் பதில் வருவதில்லை .ஆனால் மேல்மட்டத்தில் விசாரித்தால் பல திடுக்கிடும் தகவல்கள் வருகின்றன ..
நம்முடன் நெட்ஒர்க் ஒப்பந்தம் போட்டிருந்த SIFI யின் ஒப்பந்தம் முடிந்துவிட்டது .FINACLE மென்பொருளை நமக்கு வழங்கிய இன்போசியஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் வருகிற ஜூலை மாதத்தோடு நிறைவடைகிறது .மீண்டும் இன்போசியஸ் உடன் ஒப்பந்தம் போட நமது மேல்மட்ட அதிகாரிகள் விரும்பவில்லை ...ஏற்கனவே IPPB கம்பெனியுடன் POSB சேர்க்கப்படுவதாக வந்த செய்தி உறுதியானது மட்டுமல்ல IPPB -POSB யோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் நமது PLI /RPLI யும் அதோடு சேர்த்து நமது DATA சென்டர்யையும் சேர்த்து எடுத்துக்கொள்ள பேரம் நடந்துகொண்டிருக்கிறது .ஏற்கனவே CEPT முழுவதும் IPPB கம்பெனியுடன் வருகிற ஆகஸ்ட் மாதம் முதல் செல்லவிருக்கிறது .இனி மிச்சமிருக்கும் CSCமட்டுமே நம்மிடம் அதுவும் 2023 வரை தான் இருக்ககூடும் என்கின்ற நிலையில் அஞ்சல் அலுவலகங்களில் நெட்ஒர்க் பிரச்சினையை குறித்து நாம் யாரிடம் பேச போகிறோம் ?எந்த அதிகாரிகளால் நெட்ஒர்க் பிரச்சினையை தீர்த்திட முடியும் ..
இவ்வளவு நெருக்கடிகளுக்கு மத்தியில் தான் ஊழியர்கள் ஒவ்வொரு கணக்கிற்கும் PAN UPDATION ,SILENT கணக்குகளை புதுப்பித்தல் மற்றும் CC BRIGDE மற்றும் FINACLE இவைகளுக்கிடையில் இன்னும் DISCHARGE செய்யப்படாத பல ஆயிரம் NSC /KVP பத்திரங்களை DISCHARGEசெய்து முடிக்க கொடுக்கப்பட்ட பணி இவைகள் எல்லாம் 31.03.2022குள் முடிக்கப்படவேண்டும் .இதற்கிடையில் லொகின் மேளா என சூழ்நிலைகளை புரிந்துகொள்ளாத அதிகாரிகளின் கெடுபிடிகள் ......இவை ஒருபுறம்
மறு புறம் இன்னும் எத்தனை நாட்களுக்கு நாம் சொல்லும் சப்பை காரணங்களை கேட்டுக்கொண்டு வாடிக்கையாளர் போவார்கள் ? உங்கள் கம்ப்யூட்டரை குப்பையில் தூக்கி போடு --பூட்டு இருந்தால் உங்கள் ஆபீசை மூடுங்கள் என்று அங்கங்கே நாம் கேட்டுக்கொள்ளும் கோப வார்த்தைகள் --இதெற்கெல்லாம் முடிவு உண்டா ?எங்கள் ஊழியர்களுக்கு விடிவுதான் உண்டா ?
பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ? நாங்கள் சாகவோ ?
இனியொரு விதி செய்வோம் ---தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !வணக்கம் .
இறுதி வெற்றி நமதே !
நமது முன்னாள் அகில இந்திய பொதுச்செயலர் தோழர் RN .பராசர் அவர்களுக்கு அவரது ஓய்வு நாள் அன்று கொடுக்கப்பட்ட விதி 14 குற்றப்பத்திரிக்கை பிறகு விதி 9 யின் கீழ் கொண்டுவரப்பட்ட நடவடிக்கை ரத்துசெய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறோம் ..தொழிற்சங்க பணி செய்திட அவர் மேற்கொண்ட அயற்பணி விண்ணப்பித்ததில் ஏற்கனவே அயற்பணியில் அவர் இருந்ததை மறைத்து விண்ணப்பித்தார் என்ற அற்ப காரணத்தை சொல்லி மதுரா SSP தொடுத்திட்ட வழக்கு இன்று CPMG UP அவர்களின் பரிந்துரையின் பேரில் இந்திய குடியரசு தலைவர் அவர்களால் ரத்து செய்யப்பட்டிருக்கிறது .அற்ப காரணங்களுக்காக தொழிற்சங்க நிர்வாகிகளை முடக்கிவிடலாம் என தப்பு கனக்குபோடும் அதிகாரிகளுக்கு இந்த சம்பவம் ஒரு பாடம் .நமது பொதுச்செயலர் தோழர் RN .பராசர் அவர்களுக்காக களம் கண்ட அனைத்து தோழர்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --E.அருண் குமார் கோட்ட செயலர்கள் நெல்லை
அஞ்சல் கூட்டுப் போராட்ட குழு நெல்லை கோட்டம்
அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !வணக்கம் .
எதிர்வரும் மார்ச் 28 மற்றும் 29 தேதிகளில் நடைபெறும் இரண்டு நாள் பொது வேலைநிறுத்தத்தில் பங்கேற்பது குறித்து நமது அஞ்சல் துறையில் நீண்ட நாட்களுக்கு பிறகு NFPE --FNPO சங்க நிர்வாகிகள் புதுடெல்லியில் கூடி மீண்டும் POSTAL JCA எல்லா மட்டங்களிலும் அமைப்பது என்றும் நமது துறை சார்ந்த கோரிக்கைகளை வென்றெடுக்க ஒன்றுபட்ட போராட்டம் நடத்துவது என்றும் முடிவெடுத்தார்கள் .
அதன் அடிப்படையில் 14.03.2022 திங்கள் மாலை பாளை தலைமை அஞ்சலகத்தில் (NFPE ,FNPOமற்றும் AIGDSU ) கோட்ட செயலர்கள் கூட்டம் நடைபெற்றது .இதில் NFPE சார்பாக தோழர்கள் SK .ஜேக்கப் ராஜ் E .அருண்குமார் மற்றும் T .புஷ்பாகரன் அகியோர்களும் FNPO சார்பாக தோழர் G.சிவகுமார் S .ராம்குமார் பால கிருஷ்ணன் ஆகியோர்களும் AIGDSU சார்பாக தோழர் I.ஞான பாலசிங் ஆகியோரும் கலந்துகொண்டனர்
நடக்கவிருக்க இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தில் நெல்லை கோட்டத்தில் முழுமையாக நடத்துவது என்றும் அதனை தொடர்ந்து கீழ்கண்ட முடிவுகள் ஏகமனதாக எடுக்கப்பட்டது
1.நெல்லை அஞ்சல் கூட்டு போராட்ட குழுவின் தலைவராக தோழர் சிவகுமார் .G. கன்வீனராக தோழர் SK .ஜேக்கப் ராஜ் பொருளாளராக தோழர் I.ஞானபாலசிங் ஆகியோர் செயல்படுவார்கள்
2.வேலைநிறுத்த சுற்றறிக்கை அம்பைகிளைகள் (NFPE -FNPO மற்றும் AIGDSU ) ,RMS R3 R4 PSD திருநெல்வேலி P4 மற்றும் SBCO ஆகிய அனைவரையும் இனைத்து வெளியிடுவது
3.வேலைநிறுத்த சுற்று பயணங்கள் சேர்ந்து செல்வது
24.03.2022 வியாழன் புறநகர் பகுதிகள்
25.03.2022 வெள்ளி மாநகர் பகுதிகள்
25.03.2022வெள்ளி மாலை 5.45 மணிக்கு பாளை தலைமை அஞ்சலகத்தில் வேலைநிறுத்த ஆயத்த கூட்டம்
28.03.2022 அன்று முதல் நாள் வேலைநிறுத்தம் அன்று அனைத்து சங்கங்களையும் உள்ளடக்கிய ஆர்ப்பாட்டம் --ஊர்வலம்
தோழர்களே !நடக்கவிருக்கும் போராட்டம் நமது துறையை காக்கும் போராட்டம் .ஏற்கனவே IPPB எனும் கம்பெனி நமது சேமிப்பு பிரிவினை கொள்ளை கொண்டு போக நெருங்குகிறது ,CEPT எனும் தொழிற் நுட்ப அமைப்பு முற்றிலும் IPPB பிடிக்குள் போக போகிறது ..ஆம் அஞ்சல் துறை தனியார் பிடிக்குள் செல்லாமல் இருக்க இனி ஒன்றுபட்ட போராட்டம் மட்டுமே சாத்தியம் என்பதை உணர்ந்துகொண்டு செயல்படுவோம் ஆதரவளிப்போம் !
விரிவான சுற்றிக்கையுடன் விரைவில் சந்திப்போம் !
நன்றி --அஞ்சல் கூட்டு போராட்ட குழு நெல்லை
அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
அஞ்சல் வாரிய இடமாறுதல் கொள்கை 17.01.2019 குறித்தான விளக்க ஆணை ---நாள் 03.03.2022
*விதி 38 யின் கீழ் இடமாறுதல் பெற ஓராண்டு சேவை போதுமானது .முந்தைய உத்தரவில் probation காலத்தில் இடமாறுதல் விண்ணப்பிக்க முடியாது என்பது மாற்றப்பட்டுள்ளது
*இனிமேல் category மற்றும் mode of recruitment (அதாவது direct recruit or promotive என மாநிலங்களுக்குள் நடக்கும் இட மறுதல்களுக்கு பார்க்க தேவையில்லை .பிற மாநிலஙக்ளுக்கு செல்லும் போது category மற்றும் mode of recruitment பார்க்கவேண்டும்
*இனி மாதாந்திர அடிப்படையில் இடமாறுதல்கள் பரிசீலிக்கப்படுவதால் temporary transfer என்ற முறை வேண்டுமா என்பதற்கு rule 38 என்பது நிரந்தரமானது temporary transferஎன்பது short term பயனுக்கானது .ஆகவே temporary transfer முறையும் தொடரும்
*ஏற்கனவே waiting list உள்ளவர்களின் நிலை அதே நிலையில் தொடரும் .2018க்கு முன்னதாக விண்ணப்பித்தவர்க்ளுக்கு விண்ணப்பிக்கப்பட்ட தேதியும் 2019முதல் 2021வரை விண்ணப்பித்தவர்களுக்கு சேவையின் காலம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்
*விதி 38 க்காக கணக்கில் எடுத்துக்கொள்ள முந்தையமாதம் வரையுள்ள vacancy கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டாலும் composinate மற்றும் sports கோட்டாவிற்க்கான ஒதுக்கீடுகள் கழித்து தான் கணக்கில் எடுக்கப்படும்
rule 38யின் விண்ணப்பிக்க இனி ஒரு வருடம் சேவை முடித்தால் போதும் மற்றும் மாதந்தோறும் விண்ணப்பிக்கலாம் என்கின்ற உத்தரவு நமக்காகவா ?இல்லை SSAமூலம் தேர்ச்சி பெற்றுவரும் மற்றவர்களுக்காகவா ?
நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !GDSஊழியர்களுக்கு இலாகா கொடுக்கும் இன்னுமொரு நெருக்கடி
கமேலேஷ் சந்திரா கமிட்டியின் சாதகமான பரிந்துரைகளான கிராஜூட்டி 5 லட்சம் SEVARANCE தொகை 5லட்சம் என சாதகமான பரிந்துரைகளை அமுல்படுத்துவதை விட்டுவிட்டு ஊழியர்களுக்கு பாதகமான பரிந்துரைகளை அமுல்படுத்திட அஞ்சல் வாரியம் காட்டும் வேகத்தை பார்த்தீர்களா ?
GDS.பணியிடங்களில் ஏற்படும் காலியிடங்களில் மாற்றுஆட்களை நியமித்திட .SHORT TERM VACANCY மற்றும் LONG TERM VACANCY என இருவகையாக பிரிக்கப்பட்டு அதில் பதிலிகளை நியமனம் செய்திட அஞ்சல் வாரியம் 11.02.20222அன்று பிறப்பித்துள்ள வழிகாட்டுதல் உத்தரவின் சாராம்சம்
*GDS ஊழியர்கள் விடுப்பு எடுக்கும் காலங்கள் 45 நாட்களுக்குள் இருப்பின் அது குறுகிய கால VACANCY ஆக எடுத்துக்கொள்ளப்பட்டு பின்வரும் நடைமுறைகள் பின்பற்றப்படும்
.SHORT TERM VACANCY களுக்கு எந்த மாற்றுஆளும் நியமிக்கக்கூடாது .முடிந்தவரை பணிகளை இணைத்து பார்த்திடவேண்டும் .அவ்வாறு பணிகளை இணைத்து பார்க்க சாத்தியமில்லாத இடங்களில் பதிலிகளை 45நாட்களுக்கு மிகாமல் அனுமதிக்கலாம் .இலாகா அலுவலகங்களில் ஏற்படும் SHORT TERM VACANCY கள் இருக்கின்ற இடத்தில் MTSஇருந்தால் அவரை கொண்டு அந்த வேலையை பார்த்திட பணிக்கவேண்டும் ..மேற்சொன்ன எந்த சாத்தியக்கூறும் இல்லாத பட்சத்தில் பதிலிகளை அனுமதிக்கலாம்
*45நாட்களுக்கு மேல் செல்லும் VACANCY அதாவது LONG TERM VACANCYயிலும் கூடுமானவரை காம்பினேஷன் டூட்டி போடவேண்டும் .அது இல்லாத பட்சத்தில் பதிலிகளை அனுமதிக்கும் போது அந்த கிளை அஞ்சலகத்தின் வருவாய் மற்றும் பரிவர்த்தனைகள் போதுமானதாக இருந்திடவேண்டும் .45 நாட்களுக்கு மேல் LEAVE SANCATION அதிகாரி அதற்கு மேல் உள்ள அதிகாரிகளிடம் அனுமதி பெறவேண்டும் .90நாட்களுக்கு மேல் என்றால் மண்டல அதிகாரியிடம் அனுமதி பெறவேண்டும் ...
APS /மற்றும் IPPB டெபுடேஷன் செல்லுகின்ற GDS இடங்களும் இனி நிரப்பப்படும் .அவ்வாறு நிரப்பப்படும் போது அதை ப்ரொவிஷியனால் நியமனமாக எடுத்துக்கொள்ளப்பட்டு DEPUTATION சென்ற GDSவரும்பொழுது அவருக்கு வசதியான இடம் கிடைக்கவில்லை என்றால் அந்த புதிய நியமனம் டெரிமினட் செய்யப்பட்டு பழைய GDS அந்த பதவியில் நிரப்பப்படுவார்
கூடுமானவரை 90 நாட்களுக்குள் காலியாகவுள் ள பதவிகளை நிரப்பிடவேண்டும் .சம்பளம் வினியோகிக்கும் அதிகாரி பதிலிகளுக்கு சம்பளம் வழங்கும் போது நியமன அதிகாரி கொடுக்கின்ற பதிலிகள் குறித்த தகுதிகள் அடங்கிய CERTIFICATE இணைக்கப்பட்டிருக்கிறதாஎன்பதை உறுதி செய்ய வேண்டும் .........பார்ப்போம் 90நாட்களுக்குள் எல்லா பதவிகளும் நிரப்பப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டில் அஞ்சல் வாரியம் காட்ட போகும் வேகத்தை ?
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !வணக்கம்
முக்கிய செய்திகள்
எழுத்தர்களுக்கான கேடேர் மேனேஜ்மென்ட் 31.01.2021 சொல்வதென்ன ?
*இதுவரை VACANCY என்பது கோட்ட அளவில் இருந்தது இனி மாநில அளவில் என மாற்றப்படுகிறது
*மாநில அளவில் மெரிட் பட்டியல் தயாரிக்கப்பட்டு மாநிலம் முழுவதும் உள்ள காலியிடங்கள் நிரப்பப்படும் .இனிமேல் கோட்ட அளவில் VACANCY இல்லை என்பதால் ஒருவரின் பதவி உயர்வின் வாய்ப்புகள் பறிபோகாது
*மாநில அதிகாரி RECRUITING அதிகாரியாகவும் மாநில அலுவலகம் RECRUITING யுனிட் ஆகவும் இருக்கும்
கோட்ட அதிகாரி நியமன அதிகாரியாகவும் ஒழுங்கு நடவடிக்கை அதிகாரியாகவும் செயல்படுவார்கள்
*இதுகாறும் தேர்வு அறிவிப்பு வரை எழுகின்ற காலியிடங்கள் தான் எடுத்துக்கொள்ளப்படும் என்கின்ற நிலை மாறி தேர்வு முடிவுகள் அறிவிப்பு வரும்வரை எழுகின்ற காலியிடங்கள் நிரப்பப்படும்
*வெளிக்கோட்டங்களுக்கு தேர்வாகும் ஊழியர்கள் விதி 38 இன் படி விண்ணப்பித்து மீண்டும் தாய் கோட்டத்திற்கு வரலாம்
இந்த உத்தரவுகள் 2022 நியமன வருடம் அதாவது 01.01.2022 முதல் அமுலுக்கு வருகிறது
தகவல் மற்றும் விளக்கம் --YOURS KVS தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது ......
அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !வணக்கம் .
எழுத்தர் தேர்வில் வெற்றி பெற்ற தோழமை சொந்தங்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் .தேர்ச்சி பெற்றும் போதுமான Vacancy இல்லாமல் எழுத்தர் வாய்ப்பை இழந்த தோழர்கள் அடுத்துவரும் தேர்வில் தேர்ச்சிபெற உங்களையும் வாழ்த்துகிறோம்
.2018 க்கு முன்பெல்லாம் தேவைக்கு குறைவான ஊழியர்கள் தேர்ச்சி பெற்ற வரலாறுகள் உண்டு ..Vacancy என்பதும் ஒவ்வொரு கோட்டத்திலும் ஒன்று அல்லது இரண்டு என்றெல்லாம் வந்ததுண்டு ....இல்லை VACANCY இல்லை என நிர்வாகம் அறிவித்தபோதிலும் VACANCY களை கண்டுபிடித்து இமாலய சாதனையை படைத்தது நமது பேரியக்கம் ஆம் நமது NFPE பேரியக்கம் எடுத்திட்ட தொடர் முயற்சியின் காரணமாக தமிழகத்தில் எழுத்தர் தேர்விற்க்கான எண்ணிக்கைகள் பெருமளவில் உயர தொடங்கின ..CADER சீரமைப்பு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் கோட்டங்களில் எழுத்தர் பதவிகள் உயர்ந்தன ..எழுத்தர் பதவிகள் உயர உயர எழுத்தர் தேர்வில் தேர்ச்சி விகிதத்தையும் அதிகரிக்க வேண்டியது அவசியம் என்கின்ற அடிப்படையில் நமது NFPE அஞ்சல் மூன்று தமிழ்மாநில சங்கம் எடுத்திட்ட மாபெரும் முயற்சியால் அன்புத்தலைவர் அண்ணன் KVS மாநிலசெயலர் சகோதரர் வீரமணி அவர்களின் வழிகாட்டுதலில் நடைபெற்ற இலாகா தேர்விற்க்கான பயிற்சி வகுப்புகள் இன்று பெருமளவிற்கு கைகொடுக்க எந்த கோட்டத்திலும் VACANCY க்கு குறைவான தேர்ச்சி இல்லாமல் பங்கேற்ற அனைவரும் தேர்ச்சி பெற்றிருப்பது நமது NFPE பேரியக்கம் காட்டிய வழிகாட்டுதல்கள் என்பது மிகையாகாது .தேர்ச்சி பெற்ற அனைவரையும் மீண்டும் NELLAI --NFPE வாழ்த்துகிறது ..அஞ்சல் மூன்று சங்கத்திற்கு உங்களை அன்போடு அழைக்கிறது வாருங்கள் ---வாழ்த்துக்கள்
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே ! வணக்கம்
நேற்று 08.02.2022அன்று நடைபெற்ற மாதாந்திர பேட்டியில் விவாதிக்கப்பட்ட விசயங்கள் உங்கள் பார்வைக்கு தரப்பட்டுள்ளன .
1.தோழர் R .சண்முக சுப்ரமணியன் (APS ) LSG PA பாளை அவர்களுக்கு முன்னதாக மறுக்கப்பட்ட TRANSFER TA மண்டல நிர்வாக பரிந்துரையை அடுத்து TRANSFER TA BILL ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது ..
2.வள்ளியூர் அஞ்சலகத்தில் நிலவிவந்த மெயில் பிரச்சினைக்கு தீர்வு கானும் வகையில் வள்ளியூர் உள்ளிட்ட தென்பகுதிகளுக்கு புதிய மெயில் வேன் SCHEDULE மண்டல நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்டுள்ளது ..விரைவில் முதல்கட்டமாக வாடகை குறித்த டெண்டர் கோரப்பட்டு அறிமுகப்படுத்தப்படுகிறது
\3.சமீபத்தில் வெளியிடப்பட்ட LSG ஊழியர்களுக்கான கோட்ட அளவிலான வரைவு சீனியாரிட்டி பட்டியல் குறித்து விவாதிக்கப்பட்டு கேடெர் சீரமைப்பு வந்தபின் மாநில அளவிலான சீனியாரிட்டி தான் நடைமுறையில் இருக்கிறது என்றும் கோட்ட அளவிலானLSG சீனியாரிட்டி பட்டியலை ரத்துசெய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது
4.கோவிட் மூன்றாம் அலையில் கொரானாவால் பாதிக்கப்பட்ட ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களால் தனிமைப்படுத்திக்கொண்ட நமது தோழியர்களுக்கு வழங்கப்பட்ட விடுப்பினை CCL ஆக மாற்றிக்கொள்ள ஏற்றுக்கொள்ளப்பட்டது
.5புதிய .DSM நியமிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது .ஆனால் தற்சமயம் இருக்கின்ற DSM நான்குபேர் போதுமென்று கோட்டநிர்வாகம் விடாப்பிடியாக இருந்தது .நீண்ட விவாதத்திற்கு பிறகு DSM தரப்பில் இருந்து REPRESENTATION ஏதும் வந்தால் பின்னர் பரிசீலிக்கப்படும் என முடிக்கப்பட்டது
6.சங்கர்நகர் SO விற்கு புதிய PASSBOOK பிரிண்டர் வழங்கப்படும்
7.களக்காடு SO விற்கு சேமிப்பு பிரிவு வேலைநேரம் மாற்றம் குறித்து ASP TVL அவர்களின் ரிப்போர்ட் வந்தவுடன் முடிவெடுக்கப்படும்
8.திருநெல்வேலி HO அக்கௌன்டன்ட் பதவி விரைவில் நிரப்பப்படும்
பேட்டி முடிந்தபின் SSP அவர்களும் கணக்குகள் பிடிப்பது சம்பந்தமாக உங்களிடம் நான் பேசவேண்டும் என்று டார்கெட் குறித்த விளக்கங்களை கூறினார்கள் .நாமும் நமது NFPE யை பொறுத்தவரை டார்கெட் புதியவணிகம் இவைகளுக்கு நாங்கள் எதிரிகள் அல்ல என்றும் ஆனால் டார்கெட் என்கின்ற பெயரில் ஊழியர்க்ளுக்கு மனஉளைச்சல் ஏற்படுத்தும் அதிகாரிகளின் நடவடிக்கைகளை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்கின்ற நமது நிலைப்பாட்டை எடுத்து கூறினோம் .SSP அவர்களும் அதை ஏற்றுக்கொண்டு WELFARE விசயத்தில் தான் எப்பொழுதும் ஊழியர்க்ளுக்கு சாதகமாக இருப்பேன் என்றும் தெரிவித்தார்கள் ...அதையே தான் நாங்களும் விரும்புகிறோம் என்கின்ற ஒரு புரிந்துணர்வோடு மாதாந்திர பேட்டி சுமுகமாக முடிவுற்றது ...இந்தமாதம் தோழர் ராமேஸ்வரன் புதிதாக பேட்டிக்கு அழைத்து செல்லப்பட்டார் ..அடுத்த மாத பேட்டி 09.03.2022 அன்று நடைபெறுகிறது .மகளீர் தினத்தை முன்னிட்டு முற்றிலும் தோழியர்களுக்கு பேட்டியில் கலந்துகொள்ள வாய்ப்புகள் வழங்கப்படும் --
நன்றி ..தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர்
அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம்
முக்கிய செய்திகள்
நமது துறைக்கு IT Modernisation Project 2.0 திட்டத்தின் கீழ் ரூபாய் 5785 கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளது .இதன்மூலம் நமது நெட்ஒர்க் ,சேமிப்பு , இன்சூரன்ஸ் ,டேட்டா சென்டர் மற்றும் CSI உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலிலும் நவீனமயமா க்கப்படுகின்றன .தற்சமயம் நம்மிடம் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் உள்ள ஒப்பந்தங்கள் முடிவுக்கு வரும் சூழலில் இந்த மாற்றங்கள் செய்யப்படவுள்ளன .
ஏற்கனவே e -PAN UPDATION நாம் மேற்கொண்டுவருகிறோம் .இனி e -TDS முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது .நமது சேமிப்பு கணக்குளில் ஈட்டப்படும் அனைத்து வகையான வட்டிகளும் சாதாரண SB உட்பட அனைத்தும் வாடிக்கையாளரின் TDS கணக்கில் பிரதிபலிக்கும் ....
மேலும் நிதி அமைச்சர் அறிவித்தபடி அஞ்சலகங்கள் வங்கிகளோடு இணைக்கப்படும் என்கின்ற அறிவிப்பு நமது IPPB யை மனதில் வைத்துக்கொண்டு அறிவிக்கப்பட்ட திட்டமாக கூட இருக்கலாம் .அஞ்சலக சேமிப்பு கணக்குகள் எல்லாம் IPPB க்கு மடைமாற்றம் செய்யக்கூடிய அறிகுறிகள் தெரிகின்றன
பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ? – நாங்கள் சாகவோ?’என்று கேட்டார் மகாகவி பாரதி.
அந்த அடிப்படையில் தான் நவீனப்படுத்துதல் என்ற பெயரில் அஞ்சல் துறையை அழகு படுத்துவது எதற்க்காக ?என்பதையும் நாம் சிந்திக்கவேண்டிய விசயங்கள் ...நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே ! வணக்கம் .
இந்த ஆண்டிற்க்கான சுழல் மாறுதல் அறிவிப்பு வந்துள்ளதை தாங்கள் அறிவீர்கள் .PA கேடரில் 47ஊழியர்களும் LSG கேடரில் 17 பேரும் இந்த ஆண்டு TENURE முடிக்கிறார்கள் PA கேடரில் நமது கோட்ட பணிமூப்பு பட்டியலின் படி சீனியாரிட்டி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது .தோழர்கள் தங்கள் சீனியாரிட்டி அடிப்படையில் தங்கள் விருப்ப தேர்வை தேர்வு செய்துகொள்ள அறிவுறுத்த படுகிறார்கள் ...கொரானா பாதிப்புக்குள்ளானவர்கள்/பிற மருத்துவ காரணங்கள் உள்ளவர்கள் EXTENSION கேட்டு பெறலாம் .
நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
முக்கிய செய்திகள்
*சுழல் மாறுதல் 2022-23 ஆண்டிற்க்கான வழிகாட்டுதலை அஞ்சல் வாரியம் 28.01.2022 அன்று வெளியிட்டுள்ளது .
*வழக்கம் போலவே non -sensitive பதவிகளில் உள்ளவர்கள் ஒரு ஆண்டு extension வழங்கப்படும்
*அதேபோல் sensitive பதவிகளில் உள்ளவர்கள் அவர்களுக்கான பழைய பணிக்காலங்களில் உள்ள நடத்தைகளை பொறுத்து வழங்கப்படும்
*C மற்றும் B கிளாஸ் அலுவலகத்தில் தனியாக பார்த்தவர்க்ளுக்கு EXTENSION கிடையாது .இதில் கோவிட் பாதிப்பு போன்ற மிகவும் பாதிப்புள்ள ஊழியர்களுக்கு CPMG அவர்களால் 6 மாதம் EXTENSION வழங்கப்படும்
*சென்ற ஆண்டு EXTENSIONபெற்றவர்களுக்கு இந்தாண்டு EXTENSIONகிடையாது
*OUT OF SATATION இடமாறுதல் கிடையாது
இந்த EXTENSION போன்ற வசதிகளை நாம் பெருகிறோமோ இல்லையோ அதிகாரிகள் STATIONT TENNURE மற்றும் EXTENSION சலுகைகளை பெற்றுக்கொண்டுதான் வருகிறார்கள் .......
நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !வணக்கம்
நெல்லையில் இன்று 27.01.2022 நமது இரண்டாவது கட்ட இயக்கமான கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றுதல் ----வெற்றிபெற செய்வீர் ! அதன் புகைப்படங்களை கோட்ட செயலர்களுக்கு அனுப்புங்கள்
நன்றி ! நன்றி !நன்றி !
டார்கெட் நெருக்கடிகளுக்கு எதிரானநெல்லை கோட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகளை கண்டித்து நடைபெற்ற 25.01.2022 ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் கூட்டு போராட்ட குழுவின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .பாளையம்கோட்டை மற்றும் அம்பாசமுத்திரம் கிளைகளில் தலமட்ட போராட்டம் என்பது ஒருசேர ஒற்றுமையாக நடைபெற்றது NELLAI --NFPE க்கு மேலும் புதிய உத்வேகம் தந்துள்ளது .அதேபோல் GDS ஊழியர்களும் பெருமளவில் கலந்துகொண்டு சிறப்பித்ததும் இந்த ஆர்ப்பாட்டத்தின் மாபெரும் வெற்றியே !குறிப்பாக திசையன்விளை பகுதி தோழர்களின் பங்களிப்பு அவர்களை ஓரணியில் திரட்டி கொண்டுவந்த அன்பு தோழர் தொழிற்சங்க தீவிர பற்றாளர் சண்முகம் SPMதிசையன்விளை அவர்க்ளுக்கும் வள்ளியூர் பகுதிகளில் GDSதோழர்களை ஒருங்கிணைத்து அழைத்துவந்த தெற்கு கருங்குளம் -தோழர் ஐயப்பன் அவர்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் ..
மாநில சங்கங்களுக்கு நன்றி நன்றி
நமது ஆர்ப்பாட்ட அறிவிப்பு கிடைத்த நாளில் இருந்து நமக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கிய அஞ்சல் மூன்றின் மாநில செயலர் தோழர் வீரமணி மண்டல செயலர் அண்ணன் R.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும் R3 மாநில செயலர் தோழர் ரமேஷ் அவர்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் ..---அதேபோல் நமக்கு ஆதரவாக 25.01.2022அன்று ஆதரவு இயக்கங்களை அறிவித்து கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றிய அஞ்சல் நான்கு கிளை /கோட்ட சங்கங்களுக்கும் ஆர்ப்பாட்ட தினத்தன்று நம்மோடு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அஞ்சல் நான்கின் மாநில செயலர் தோழர் G.கண்ணன் அவர்களுக்கும் ,CPMG மற்றும் தென்மண்டல அதிகாரிகளுக்கு கடிதங்களை கொடுத்து விரைந்து செயல்பட்ட பொறுப்பு மாநில செயலர் தோழர் வேதகிரி அவர்களுக்கும் தென்மண்டல செயலர் ராஜசேகர் மற்றும் மாநில உதவி தலைவர் தோழர் சோலையப்பன் அவர்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
நன்றி ...போராட்ட வாழ்த்துக்களுடன் கூட்டு போராட்ட குழு
அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
டார்கெட் நெருக்கடிகளை கண்டித்து இன்று மாலை 05.45 மணிக்கு பாளை தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தாங்கள் அனைவரும் பங்கேற்குமாறு மீண்டும் நினைவூட்டுகிறோம் ..
அதேபோல் 27.01.2022 அன்று நடைபெறும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றிடவும் அதன் புகைப்படங்களை கோட்ட சங்கத்திற்கு அனுப்பிடவும் கேட்டுக்கொள்கிறோம் .கருப்பு பேட்ஜ் அனைத்து அலுவலகங்களுக்கும் கிளை அஞ்சலகங்கள் உட்பட அனைவருக்கும் இன்று அனுப்பிவைக்கப்படும் .27.1.2022 அன்று காலையில் அனைவருக்கும் கிடைக்கும் .
இன்னும் மார்ச் இறுதிவரை நமது ஊழியர்க்ளுக்கு தொடுக்கப்படும் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைத்திடவேண்டும் .பணிபுரிகின்ற இடத்தில அது GDS என்றால் என்ன ?தபால்காரர்களாக இருந்தால் என்ன ?SPM ஆக இருந்தால் என்ன ?அனைவரும் நிம்மதியாக பணியாற்ற வேண்டும் ..மணிக்கொருமுறை தொலைபேசி கணக்கில இருந்து விடுபடவேண்டும் ...அச்சமில்லாமல் பணியாற்ற வேண்டும் .
நமது ஆர்ப்பாட்டத்திற்கு இன்று நாடு முழுவதும் ஆதரவு கிடைத்துள்ளது .மாநில சங்கங்கள் சார்பாக மாநில /மண்டல அதிகாரிகளுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன ...போராடும் எந்தவொரு கோட்டமாக இருந்தலும் அது தனித்து விடப்பட்டதில்லை ...கோடி கால் பூதமடா ! கோரிக்கைகளின் ரூபமடா !என்ற வரிகள் இன்று மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது ..
ஒற்றுமையே நமது பேராயுதம் ! போராட்டமே நமது தீர்வு !
போராட்ட வாழ்த்துக்களுடன் -கூட்டு போராட்ட குழு நெல்லை
அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
சேமிப்பு கணக்கு நெருக்கடிகளை கண்டித்து நெல்லை கூட்டு போராட்டக்குழு (NFPE -P 3 -P 4 NFPE -GDS மற்றும் AIGDSU சார்பாக இரண்டு கட்ட போராட்டங்கள்
25.01.2022 செவ்வாய் கிழமை மாலை ஆர்ப்பாட்டம் (பாளையம்கோட்டை மற்றும் அம்பாசமுத்திரம் தலைமை அஞ்சலகங்கள் முன்பு )
27.01.2022 அன்று (மெகா லாகின் அன்று )கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றுதல்
கொரானா பேராபத்தை கணக்கில் கொள்ளாமல் நெல்லை கோட்டத்தில் அதிகாரிகளின் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து போகின்றது .ஊழியர்களின் உயிரை விடவும் டார்கெட் தான் முக்கியம் என நித்தம் நித்தம் புதுக்கட்டளைகளை SSP முதல் ASP வரை பிறப்பித்து ஊழியர்களை மிருகத்தை விட மிக கேவலமாக நடத்த தொடங்கிவிட்டார்கள்
அம்பாசமுத்திரம் தலைமை அஞ்சலகத்தில் தபால் காரர்களிடம் கட்டாயப்படுத்தி ஸ்டேட்மென்ட் இன்று மாலைக்குள் 20 கணக்கு தொடங்குவேன் என்று எழுதி வாங்கியுள்ளார்
ஒவ்வொரு GDS ஊழியர்களிடம் மெயில் ஓவர்சியர் மூலம் எத்தனை கணக்கு பிடிக்கமுடியும் அதில் SB எத்தனை /? RD எத்தனை ? என புலன் விசாரணைகள்
அனைத்து உபகோட்ட அலுவலகத்தில் இருந்தும் வாட்சாப்ப் டார்ச்சர் தொலைபேசி தொந்தரவுகள்
வருகிற 27.01.2022 SB மெகா லாகின் அன்று ஒவ்வொரு கிளை அஞ்சலகம் தொடங்கி துணை அஞ்சலகம் வரை கொடுத்த இலக்கை எட்டவில்லை என்றால் ?என அன்பான மிரட்டல்கள்
இதனால் மீண்டும் ஊழியர்கள் தங்கள் பெயரிலே கணக்குகளை ஸ்ப்ளிட் செய்து தொடங்கி தங்களை தப்பித்துக்கொள்ள தவறான முடிவுகளை எடுக்கிறார்கள் .பழைய கலஙக்ளில் இவ்வாறு இலாகா விதிகளை மீறி பலநூறு பொய்கணக்குக்களை தொடங்கியதன் விளைவு இன்று அனைத்து கணக்குகளும் காலாவதி ஆகிவிட்டது அல்லது மொத்தமாக CLOSUER ஆகிவிட்டது .அதனை வைத்துக்கொண்டு NET -அக்கௌன்ட் குறைகிறது என புது விஞ்ஞான கணக்கெடுப்பு
இந்த கொடுமைகைளை தடுத்து நிறுத்திட உழைக்கும் மக்கள் எவருக்கும் அடிமை இல்லை என உணர்த்திடவும் டார்கெட் என்கின்ற பெயரில் தொடரும் டார்ச்சர்க்கு முற்றுப்புள்ளி வைத்திடவும் நமது கூட்டு போராட்ட குழு அறிவித்துள்ள மேற்கண்ட இரண்டு இயக்கங்களையும் வெற்றிபெற செய்வோம் .
நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் P3 I.உதய குமார் P4 E.காசிவிஸ்வநாதன் NFPE-GDS கோட்ட செயலர்கள் நெல்லை --P.சுப்பிரமணியன் P3 அம்பை V.தங்கராஜ் P4 அம்பை I.ஞான பாலசிங் AIGDSU நெல்லை R.ஹரிஹர சுதன் AIGDSU அம்பை
அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே ! வணக்கம் .
முக்கிய செய்திகள்
அஞ்சல் மூன்றின் 33வது அகிலஇந்திய மாநாடு 28.03.2022 முதல் 30.03.2022வரை பஞ்சாப் மாநிலத்தில் ரோபர் மாவட்டத்தில் ஸ்ரீ அனந்தபூர் சாகிப் எனும் இடத்தில நடைபெறுகிறது .பொதுவாக பல ஆயிரம் தோழர்கள் சங்கமிக்கும் நமது அகிலஇந்திய மாநாட்டில் கொரனா பரவலை அடுத்து சார்பாளர்களை மட்டுமே கொண்டு மாநாடு நடைபெறவிருக்கிறது .அதையும் தாண்டி பார்வையாளராக கலந்துகொள்ளும் தோழர்கள் அவர்களதுதனிப்பட்ட முறையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளார்கள் . செல்லும் போது ரயில் மூலமும் திரும்பி வருவது விமான பயணமும் என உத்தேசிக்கப்பட்டுள்ளது ..வரவிரும்பும் தோழர்கள் நாளை மாலைக்குள் தகவல்களை தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
தோழியர் R .சுகிர்தா OA அவர்கள் இன்று விருப்ப ஓய்வில் செல்கிறார்கள் .அவர்களின் பணி ஓய்வு காலங்கள் சிறக்க வாழ்த்துக்கள் ..
தோழியர் சுகிர்தா !
நீண்ட காலமாக --கோட்ட அலுவலகத்தில்
சீரிய பணியாற்றிய ஒரு தோழியர் ...
கோட்ட அலுவலகம் மீண்டும் மீண்டும்
அழைத்து கொள்ளுமளவிற்கு --
பேராற்றால் தோழியருக்கு உண்டு
STAFF--II எனும் அதி முக்கிய பிரிவில்
ஆரவாரம் ஏதுமின்றி --தன்
முழுநாட்களும் பணியாற்றியவர் !
அமைதியும் -பொறுமையும்
சுகிர்தாவுக்கு அடையாளங்கள்
எதைக்கேட்டாலும் --ஒரு மெல்லிய
சிரிப்போடு பதிலளிப்பவர்
அரசாங்க ரகசியத்தை --அப்படி
பாதுகாத்தவர்
பணிக்கு வந்த நாள் முதல்
இன்றுவரை --தான் ஏற்றுக்கொண்ட
NFPE --இயக்கத்தின்
அசைக்கமுடியா அடிப்படை உறுப்பினர் -என்ற
கூடுதல் பெருமையோடு
விருப்ப ஓய்வில் செல்லும்
தோழியரை வாழ்த்துகிறேன் ------SKJ
அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !வணக்கம் .
முக்கிய செய்திகள்
*HSG -II பதவி உயர்வுக்கான நடவடிக்கைகளை மாநில நிர்வாகம் மேற்கொண்டுள்ளது .அதன்படி நமது கோட்டத்தில் தோழர்கள் S .சுப்பிரமணியம் (LSG PA COLLECTRATE ) S பாப்பா (LSG PA TVL HO ) N .கண்ணன் (LSG PA TVL HO ) ஆகியோர் பெயர்கள் பரிசீலனைக்கு கோரப்பட்டுள்ளது .இதனால் வருகிற RT நேரங்களில் கூடுதலாக இரண்டு LSG காலியிடங்கள் மாநகர பகுதியில் உருவாக வாய்ப்புள்ளது .
*தொண்டர் பஜார் அலுவலகத்தை ராமையன் பட்டி அருகில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரி வளாகத்திற்குள் RELOCATE செய்வதாக இருந்த நடவடிக்கைகளை நெல்லை சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு .திரு .N.நயினார் நாகேந்திரன் அவர்களின் நேரடி முயற்சியின் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன .இந்த முயற்சியில் முழுக்கவனம் செலுத்திய முன்னாள் நெல்லை அஞ்சல் நான்கின் கோட்ட செயலர் தோழர் SK .பாட்சா ,நெல்லை ஓய்வூதியர் சங்க செயலர் தோழர் KG.குருசாமி அவர்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் '
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !வணக்கம் .
தங்கம் குவித்த தமிழகம் !ஆனாலும் அங்கீகரிக்க மறுக்கும் நிர்வாகம் !
கடந்த 10.01.2022முதல் 14.01.2022 வரை விற்பனை செய்யப்பட்ட தங்கபத்திரத்தின் பட்டியல் உங்கள் பார்வைக்கு தரப்பட்டுள்ளது .இந்த தொடரில் நமது மாநிலம் 31271கிராம் விற்று இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது . குஜராத் மாநிலம் 37526 கிராம் விற்று முதலிடம் பெற்றுள்ளது . ஆனாலும் அதிகாரிகளின் கவலை எல்லாம் தமிழகம் ஏன் பின் தங்கியது என்று தான் .பீகார்மற்றும் டெல்லி தலா வெறும் 10கிராம் விற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது . ஹரியானா 3 கிராம் விற்று திருப்தி அடைந்துள்ளது .மத்திய பிரதேசம் ஒடிசா மற்றும் பஞ்சாப் 20 முதல் ---22கிராம் என தன் நிலையை வெளிப்படுத்தியுள்ளது .தங்க பத்திர விற்பனை இன்றோடு முடிவதில்லை .தொடர் ஓட்டம் தான் .ஒவ்வொரு தொடரிலும் நாம் விற்று கொடுக்கின்ற விகிதங்களில் ஏனோ நிர்வாகம் திருப்தி அடைவதில்லை .நம்மைவிட பெரிய மாநிலங்கள் எட்டாத இலக்கை ஒவ்வொரு தொடரிலும் நாம் பெற்ற சாதனைகளை ஏனோ நிர்வாகம் அங்கீகரிக்க மறுக்கிறது .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !வணக்கம் .
POSB உத்தரவு 01/2022 ---13.01.2022 உத்தரவின் முக்கிய அம்சங்கள்
*அஞ்சல் சேமிப்பு கணக்குகளில் ஏற்படும் முறைகேடுகளை தடுக்கவும் ,சேமிப்பு பிரிவில் சுமுகமான செயல்பாடுகளை உறுதிப்படுத்தவும் இந்த உத்தரவு சொல்லுகிறது .குறிப்பாக POSB உத்தரவு 17/2017 23.10.2017 உத்தரவு மீண்டும் வலியுறுத்துகிறது .அதாவது அஞ்சலகங்களில் தொடங்கப்படும் எல்லா வகையான சேமிப்பு கணக்குகளிலில் வாடிக்கையாளர் தொலைபேசி எண்களை சேர்த்துவிடுவது கட்டாயமாக்க படுகிறது .
*ரூபாய் 20000இக்கு மேல் பரிவர்த்தனை செய்யப்படும் அனைத்து கணக்குக்களிலிலும் தொலைபேசி எண்னும் ரூபாய் 50000 க்கு மேல் நடைபெறும் அனைத்து கணக்குக்களிலிலும்பான் எண் கட்டாயமாக்கப்படுகிறது
\*கவுண்டர் PA ஒவ்வொரு கணக்கிலும் பரிவர்த்தனையை தொடங்கும் பொழுது CICD மெனு மூலம் இதை உறுதிசெய்ய வேண்டும் .அதை அந்தந்த வவுச்சரில் குறிக்கவும் வேண்டும் .
* ரூபாய் 50000 க்கு மேல் நடைபெறும் அனைத்து கணக்குக்களிலிலும்பான் எண் இல்லையென்றல் படிவம் 60/61 பெற்றுக்கொண்டு அனுமதிக்கலாம் .அந்த வாடிக்கையாளர் 6 மாதத்திற்குள் பான் எண் கொடுத்திடவேண்டும்
*வாடிக்கையாளர் தொலைபேசி எண்ணை மாற்றியிருந்தால் அதை அவரிடம் ஒரு கடிதம் மூலமாகவோ அல்லது AOF பெற்றுக்கொண்டு CMRC மெனுவில் மாற்றம் செய்து கொடுக்கவேண்டும்
*இனிமேல் Cமற்றும் B கிளாஸ் அலுவலகங்களில் நடைபெறும் SB தவிர அனைத்து வகையான கணக்குகள் CLOSE செய்யப்பட்டாலோ /PMC செயயப்பட்டாலோ அந்த புத்தகத்தை வவுச்சர் உடன் இனைத்து SBCO விற்கு அனுப்பவேண்டும்
*அவ்வாறு புத்தகத்தை பெற்றுக்கொள்ளும் போது HPR மெனுவில் சென்று CLOSUER ரிப்போர்ட் எடுத்து வாடிக்கையாளரிடம் கொடுக்கவேண்டும்
*கோட்ட அலுவலகம் அந்தந்த SBCO விற்கு Cமற்றும் B கிளாஸ்அலுவலகங்கள் குறித்து தகவல்களை தெரிவிக்கவேண்டும்
*CEPT இந்த பரிவர்தனைகளில் வாராந்திர ரிப்போர்ட் எடுத்து எந்தெந்த கணக்குகளில்தொலைபேசி எண்கள் இல்லையோ /PAN குறிப்பிடவில்லையோ அதை CPC மூலம் கோட்ட அலுவலகத்திற்கு தெரியப்படுத்தும்
*ஆய்வுக்கு வரும் அதிகாரிகள் இனிமேல் இதையும் ஆய்வு செய்வார்கள் .இந்த நடைமுறையினை பின்பற்றாத ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் .
வேலைப்பளு மற்றும் நெட்ஒர்க் பிரச்சினை இவைகளுக்கிடையில் இவையெல்லாம் செய்யமுடியுமா என நாம் மலைத்து நின்றாலும் நாம் மறுத்திட முடியாத பணிகளில் இதுவும் ஒன்று .எங்காவது முறைகேடு நடக்கும் பொழுது அதை சரிகட்ட யார் யாருக்கு பங்கு போடலாம் என நிர்வாகம் நினைக்கும் போதுதான் இதுபோன்ற உத்தரவுகளை காட்டி அப்பாவி ஊழியர்களையும் இதில் நிர்வாகம் எளிதில் சிக்கவைக்கும் .ஆகவே கவனமுடன் பணியாற்றுவோம் .
நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
கொரானா மூன்றாம் அலை நாடெங்கும் பெருகிவரும் சூழலில் அஞ்சல் அலுவலகங்களில் மட்டும் வழக்கம்போலவே பொதுமக்கள் வந்து செல்கின்றனர் .பழைய காலங்களில் நமது அலுவலகங்களில் எத்தகைய பாதுகாப்புகளை நாம் மேற்கொண்டோமோ அதைவிட கூடுதலாக கவனமாக இருக்கவேண்டியது நமது கடமை .பொதுமக்களை நேரடியாக சந்திக்கும் தபால்காரர் GDS மற்றும் கவுண்டர்களில் பணியாற்றும் எழுத்தர்களுக்கு தேவையான முகக்கவசங்கள் ,கையுறைகள் மற்றும் சானிடைசர் இவைகளை வழங்கவேண்டிய பொறுப்பு கோட்ட நிர்வாகத்திற்கு இருந்தாலும் அந்தந்த துணை அஞ்சலகத்தில் இருந்து தங்கள் தேவைகளுக்கு என்னென்ன வேண்டும் எவ்வளவு வேண்டும் என்பதை இன்றே ஈமெயில் மூலம் கோட்ட அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கவும் .கோட்ட அலுவலகத்தில் இருந்து எந்த நடவடிக்கையும் இல்லையென்றல் கோட்ட சங்கத்திற்கு தெரிவிக்கவும் .
நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
நமது அஞ்சல் மூன்றின் பொதுச்செயலர் தோழர் RN .பராசர் அவர்கள் 31.12.2021அன்று SUPERANU VATION மூலம் பணி ஓய்வு பெற இருந்தார்கள் .இந்த சூழ்நிலையில் அவருக்கு விதி 14 ளின் கீழ் குற்றச்சாட்டுகளை கொடுத்து அவர் மீது அஞ்சல் துறை கொடூரமான தாக்குதலை மிக துணிச்சலாக தொடுத்துள்ளது .தோழர் RN .பராசர் அவர்கள் நமது அஞ்சல் மூன்றின் பொதுச்செயலர் மட்டுமல்ல.NFPE பேரியக்கத்தின் பொதுச் செயலர் ,மத்திய அரசு ஊழியர்களின் மகாசம்மேளனத்தின் மாபொது செயலரும் கூட .
இந்த சூழ்நிலையில் தொழிற்சங்கத்தில் நாம் போராடி பெற்ற FOREIGN SERVICE அயற் பணி சேவையில் அவர் 7ஆண்டுகளுக்கு மேல் சலுகைகளை பெற்றுவிட்டார் என்கின்ற அற்ப காரணங்களை காட்டி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .
இந்த தாக்குதல் வருங்காலங்களில் தொழிற்சங்க பொறுப்புக்கு வரும் தோழர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு மறைமுக மிரட்டல் என்றாலும் தோழர் RN .பராசர் அவர்கள் இதை மிக துணிச்சலுடனும் உறுதியுடனும் எதிர்கொள்வர் என்கின்ற நம்பிக்கை நமக்கு இருந்தாலும் நமக்காக உழைத்திட்ட அந்த தலைவருக்கு ஆதரவாக நாம் குரல் கொடுக்கவேண்டியது நமது கடமை
எப்படி இந்த அரசும் அஞ்சல் துறையும் தொழிற்சங்கத்தில் நிர்வாகிகளாக தொடர்வதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நமது அஞ்சல் மூன்று தமிழ் மாநில சங்கம் நமது தலைவர் அறிவுஜீவி அண்ணன் KVS தலைமையில் நமது மாநிலசெயலர் சகோதரர் வீரமணி அவர்கள் பெயரில் வழக்கினை இந்த நிர்வாகத்திற்கு எதிராக துணிச்சலோடு தொடுத்து தடையாணை பெற்றதோ அதைபோல் நமது பொதுச்செயலர் தோழர் RN .பராசர் மீதான விதி 14 யை நமது தலைவர் அறிவுஜீவி அண்ணன் KVS அவர்களின் வழிகாட்டுதலில் விதி 14 யை உடைத்து பொதுச்செயலரை மட்டுமல்ல அகிலஇந்திய அளவில் நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த அச்சுறுத்தலை விரட்டி காட்டுவோம் .என்பதுமட்டுமல்ல மீண்டும் நமது அஞ்சல் மூன்று தமிழ் மாநில சங்கம் முன்கையெடுத்து வெற்றி கொடி நாட்டுவோம் என்பதில் ஐயமில்லை .
இருந்தாலும் நமது பொதுச்செயலருக்கு விடுக்கப்பட்ட இந்த அநீதியை ரத்துசெய்ய கோரி அகிலஇந்திய அளவில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை நாமும் நமது பகுதியில் வெற்றிகரமாக நடத்திக்காட்டுவோம் .நிர்வாகத்திற்கு தக்க பாடத்தை புகட்டுவோம்
ஆர்ப்பாட்டம்
நாள் 03.01.2022 திங்கள் கிழமை நேரம் மாலை 5.45 மணி இடம் பாளையம்கோட்டை தலைமை அஞ்சலம் அனைவரும் வாரீர் !ஆதரவு தாரீர் !
போராட்ட வாழ்த்துக்களுடன்
SK .ஜேக்கப் ராஜ் --I.உதய குமார் கோட்ட செயலர்கள் நெல்லை