...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, April 30, 2019

                                                     மே தின கொடியேற்றுவிழா 
நாள் 01.05.2019
 காலை 8 மணி பாளையம்கோட்டை 
காலை 9  மணி திருநெல்வேலி  HO
    அந்தந்த பகுதி தோழர்கள் கொடியேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கேட்டுக்கொள்கிறோம் .
                                           தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா -

                                             முக்கிய செய்திகள்  
RULE 38 இன் கீழ் இடமாறுதல் வழங்கப்பட்ட அனைவருக்கும் நமது தென்மண் டலத்தில் 30.04.2019 குள் அந்தந்த கோட்டத்தில் PLACE OF POSTINGS வழங்கிட வேண்டும் என மண்டல அலுவலகத்தில் இருந்து தாக்கீது வந்துள்ளது .இருந்தாலும் சுழல் மாறுதல் உத்தரவோடு RULE 38 யில் வந்தவர்களையும் சேர்த்து இடமாறுதல்கள் வழங்கிட கோட்ட நிர்வாகங்கள் மண்டல அலுவலகத்திற்கு தெரிவித்துள்ளனஅனுமதி கேட்டுள்ளன ..ஆகவே நமது கோட்டத்திலும் RT விண்ணப்ப கடைசி நாள் 03.05.2019 நிறைவுற்றவுடன் விரைந்து இடமாறுதல்கள் பிறப்பிக்கப்படும் .
                 இன்று பணி நிறைவு பெறுகின்ற தோழர்கள் 
I .மகாராஜன் SPM NAVAL BASE 
2.ஆறுமுகம் போஸ்ட்மேன் பெருமாள்புரம் 
3.பெருமாள் MTS நான்குனேரி 
              ஆகிய அனைவருக்கும் NELLAI NFPE சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் .
  நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Saturday, April 27, 2019

                                             முக்கிய செய்திகள் 
கருணைஅடிப்படையிலான வேலை வழங்குவதில் 2010 யில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாயிண்ட் அடிப்படையில் பல தோழர்களுக்கு வேலைவாய்ப்பு CIRCLE  SELECTION கமிட்டியினால் நிராகரிக்கப்பட்டது .தற்சமயம் மீண்டும் பழைய விண்ணப்பங்களை மறுபரிசீலனை செய்து மாநில நிர்வாக அலுவலகத்திற்கு அனுப்பும் பணி மண்டல வாரியாக நடைபெற்றுவருகிறது .அதன்படி நமது தென்மண்டலத்தில் இந்த வார துவக்கத்தில் இரண்டு நாட்கள் இந்த சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன .இதன்படி நமது கோட்டத்தில் மட்டும் நிலுவையில்  மனுக்களும்  பரிசீலனைக்கு எடுக்கப்பட்டுள்ளன .புதிய முறை அறிமுகப்படுதுவதற்கு முன்பு பழைய ஊழியர்களின் குடும்பங்கள் பலன் பெற வாழ்த்துகிறோம் .
நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Friday, April 26, 2019

தமிழக அஞ்சல் மூன்று தென் மண்டல கோட்ட/ கிளைச் செயலர்கள் கூட்டம். 
~~~~~~
தமி்ழக அஞ்சல் மூன்று தென் மண்டல கோட்ட/கிளைச் செயலர்கள் கூட்டம் இன்று (25.4.19) காலை 10.00 மணி தொடங்கி மதுரை மேல மாசி வீதி  வடுகர் (எ) கம்மவர் நாயுடு மகாஜன சங்கக் கட்டிடத்தில் மாநிலத் தலைவர் தோழர்.M. செல்வகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. 
தென்மண்டலத்தில் உள்ள கோட்ட/கிளைச்செயலர்கள் ஒவ்வொருவரும் விரிவாக தங்கள் பகுதிப் பிரச்னைகளை எடுத்து வைத்துப் பேசினார்கள். 
 நமது கோட்டத்தின் சார்பாக நான் (ஜேக்கப் ராஜ் ) கலந்துகொண்டு நமது நெல்லை கோட்டம் தொடர்பான 5 கோரிக்கைகளை வலியுறுத்தி பேசி அதன் கடிதமும் கொடுக்கப்பட்டது .
1.தோழர் துளசிராமன் இடமாறுதல் மேல்முறையீடு மண்டல அலுவலகத்தில் இன்னும் முடிவெடுக்காமல் இருப்பது 
2.பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் ஊழியர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் தரும் வகையில் இருக்கும் கட்டிடங்களில் சில பகுதியை உடனே பராமரித்தல் .அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியினை கொண்டு சிவில் பணியினை விரைவாக தொடங்க வேண்டும் 
3.திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்தில் IQ பராமரிப்பு -கோட்ட அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்ட பரிந்துரையின் அடிப்படையில் விரைந்து பணியை தொடங்க வேண்டும் 
4.ஜவஹர் நகர் மற்றும் காந்திநகர் அலுவலகங்களுக்கு சொந்தமாக வாங்கப்பட்ட நிலத்தில் புதிய கட்டிடங்கள் கட்டுவது 
5.அஞ்சல் துறையில் அறிமுகப்படுத்தப்பட்ட பாஸ்போர்ட் ,ஆதார் ,FINACLE ,CSI,IPPB உள்ளிட்ட பணிகளுக்கு புதிய TIME FACTOR நிர்ணயிக்க அகிலஇந்திய சங்கம் /சம்மேளனம் மூலம் வலியுறுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகள் கொடுக்கப்பட்டது 
                   பொதுவான கோரிக்கையாக ஆதார் பணிகளை B கிளாஸ் அலுவலகத்திற்கும் விலக்கு அளிப்பது மற்றும் சமீபத்தில் ஆதார் பணிகளுக்காக தலைமை அஞ்சலகங்களில் வேலைநேர நீட்டிப்பை ரத்து செய்வது என்ற கோரிக்கைகளும் பல கோட்ட செயலர்களால் வலியுறுத்தப்பட்டது 
இந்தக் கூட்டத்தில் கொடுக்கப்பட்ட பிரச்னைகள் ஒரு 
வார காலத்திற்குள் கோரிக்கை மனுவாக தயாரிக்கப்பட்டு மண்டல PMG அவர்களிடம் அளிக்கப்பட்டு 
இதன் மீது குறுகிய காலத்தில் தீர்வு கோரப்படும். நிச்சயம் இதில் தீர்வு ஏற்படும். 
 பிரச்னைகளில் தீர்வு ஏற்படவில்லையெனில் நிச்சயம் கோட்ட/மண்டல அளவிலான போராட்டங்கள் 
நடத்தப்பட்டு அதற்கான தீர்வு ஏற்படுத்தப்படும். 
           நன்றி தோழமை வாழ்த்துக்களுடன் 
         SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 


Monday, April 22, 2019

அன்பார்ந்த தோழர்களே !
  நமது தென் மண்டல கோட்ட செயலர்களின் கூட்டம் வருகிற 25.04.2019 அன்று மதுரையில் நடைபெறுகிறது .இந்த கூட்டத்தில் முதல்கட்டமாக நமது நெல்லை கோட்ட சங்கம் சார்பாக கீழ்கண்ட கோரிக்கைகளை மாநில சங்கத்தின் கவனத்திற்கு அனுப்பியுள்ளோம் .நேற்றே நமது மண்டலச்செயலர் தோழர் சுப்ரமணியன் அவர்கள் பிரச்சினைகளை முதலில் தனது ஈமெயில் க்கு அனுப்பும்படி கேட்டுக்கொண்டார்கள் .அதன்படி நமது கோட்ட பிரச்சினைகளை நேற்றே மாநில செயலர் /மாநில தலைவர் மற்றும் நமது மண்டல செயலருக்கு அனுப்பியுள்ளோம் .அதன் நகல் நமது உறுப்பினர்களின் பார்வைக்கு தந்துள்ளோம் .

NFPE
            ALL INDIA POSTAL EMPLOYEES UNION GR-C                              TIRUNELVELI DIVISIONAL BRANCH
TIRUNELVELI—627002
No.P3-org  / dated at Tirunelveli - 627002 the 22.04.2019

To
The Circle Secretary
AIPEU GR C
Tamil nadu Circle –Chennai-600002
Dear Com     
We bring the following pending issues of Tirunelveli Division for taking up the same with appropriate authorities for immediate settlement.
1. The Appeal against the transfer order issued by SSP Tirunelveli Division by Shri G Thulasiraman, LSG Treasurer Nanguneri is still pending at R.O Madurai for disposal.  Copy of his representation is also sent to circle union /PMG SR which is self explanatory.
2.In connection with building maintenance of Palayankottai HO, proposal has been submitted by D.O to R.O and Civil Wing people have surveyed the site also.  It is requested to take up the issue at circle level so that the maintenance work can be started immediately as a special case as it may cause injury to the staff at any time.
3..  Proposal for maintenance and re-opening of IQ available at Tirunelveli HO was submitted by D.O to R.O which is pending at RO for a long period.
4.. There are vacant plots for Jawahar Nagar SO and Gandhi Nagar SO.  It is requested to take up the issue with circle level for construction of PO building in these plots.
5.           Off late, several new works have been added like processing passports, Aadhaar enrollment, implemention of Finacle, CSI, IPPB and many more for which no time factor is prescribed so far and our employees are crushed in the name of new such projects/schemes. Hence, we request our Circle Union to take initiation to settle the issues with CHQ/Federation and set an example to all circle unions.
We would request our Circle Secretary to look into the above issue for early settlement and a reply may kindly be given for the information of our Members.

                                                                                                           Fraternally yours

                         Yours faithfully
Copy to
1.The Regional Secretary
AIPEU GR C                                                                                              S.K.JACOB RAJ
@Dindugul
2.The Circle President
AIPEU GR C
@Sankarankoil HO

Saturday, April 20, 2019

                                       முக்கிய செய்திகள் 
டெபுடேஷன்  விஷயத்தில்  கோட்ட நிர்வாக உத்தரவு சில  இடங்களில்  மீறப்படுவதை  16.04.2019 அன்று நமது SSP அவர்களை சந்தித்து முறையிட்டோம் .SSP அவர்களுக்கும்  தனது கவனத்திற்கும் இந்த பிரச்சினை வந்ததாகவும்  விடுப்பு  முடிந்து வந்தவுடன்  இதுகுறித்து  நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள் .
கடந்த பெப்ருவரி மாத மாதாந்திர பேட்டியில்  விவாதித்ததை தங்கள் பார்வைக்கு தருகிறோம் .
    It is requested to instruct the Postmasters to depute officials to next offices only after re-joining the HQ Office.  It is seen that same official is being deputed from the place he/she is on deputation.
----------------------------------------------------------------------------------------------------------------
தென்  மண்டல  கோட்ட செயலர்கள் கூட்டம் மதுரையில்  25.04.2019 அன்று நமது மாநில தலைவர் தோழர்  செல்வ கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் வடுகர் என்ற கம்மவார் நாயுடு மகாஜன சங்கம் மதுரை    கோபால சுவாமி கோவில் சன்னதி தெரு மேல மாசி வீதி மதுரை 625 001 என்ற இடத்தில் நடைபெறுகிறது .நமது கோட்டத்தின் சார்பாக மாநில /மண்டல அளவில் எடுக்கவேண்டிய பிரச்சினைகள் இருந்தால் உடனே தெரிவிக்கவும் .
----------------------------------------------------------------------------------------------------------------
புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணிகள் தொடங்கியுள்ளன .நமது  கோட்டத்தில் ஏற்கனவே   பதவியுயர்வு பெற்ற  6 தோழர்கள்  நமது  அஞ்சல் மூன்றில்  உறுப்பினர்களாகிவிட்டனர் .மேலும் தபால்காரர் சங்கத்தை பொறுத்தவரை   பதவி உயர்வில் வந்த இரண்டு தோழியர்கள் மற்றும் RULE 38 யில் வந்த 2 தோழர்கள் உதயகுமார் மற்றும் மெர்வின்  நமது  உறுப்பினர்களாகி விட்டார்கள் .RULE 38 இடமாறுதல் மூலம் ஊழியர்கள்  JOIN செய்தவுடன்   இந்த எண்ணிக்கை குறைந்தபட்சம்  மேலும் 25 க்கும்  கூடுதலாக கிடைக்கும் என்பதனையும் மகிழ்ச்சியோடு  தெரிவித்து  கொள்கிறோம் 
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா  கோட்ட செயலர்கள் நெல்லை 
-------------------------------------------------------------------------------------------------------------







Saturday, April 13, 2019

                                                     வருந்துகிறோம் 
நெல்லை NFPE யின் முன்னனி தோழர் அன்பிற்குரிய அண்ணன் ராதா (68)Rted SPM குலவணிகர் புரம் அவர்கள் நேற்று இரவு 12.04.2019 அன்று சென்னையில் காலமானார்கள் என்பதனை வருத்தத்தோடு தெரிவித்து கொள்கிறோம் .அன்னாரது இறுதி சடங்கு நாளை 14.04.2019 காலை 9 மணி அளவில் NGO காலனி ஜெபா கார்டன் அருகில் நடைபெறுகிறது .அண்ணன் ராதா அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு NELLAI NFPE தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது .
       சுமார் 30 ஆண்டுகளுககு மேலாக நமது NFPE மாநாடுகளில் உணவு சமைப்பது சம்பந்தமான பொறுப்புகளை சுமந்து ஏற்று நடத்தியவர் .ஓய்வு பெற்ற பிறகும் அதே சுறுசுறுப்போடு நமக்கு உதவி செய்தவர் .அண்ணன் ராதா அவர்களின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு . ---NELLAI NFPE 
        

Thursday, April 11, 2019

                                       மத்திய சங்க செய்திகள் 

MEETING WITH MEMBER (P)
Today on dated 10th April,2019, I met Shri P.K. Bishoi, Member (P) and discussed  issues related to P-III Staff particularly Rotational Transfer, Station Tenure, Post Tenure, relaxation as one time measure for promotion to HSG-II & HSG-I .
He has assured to take positive action and most probably clarification will be issued soon.
Further I requested for holding a meeting to discuss all the issues submitted through Memorandum on P-III related matters.
He has assured to hold meeting early

          R.N. PARASHAR
  GENERAL SECRETARY
     AIPE Union Group-C

Wednesday, April 10, 2019

  பொறுமை !பொறுமை ! பொறுமை ! பஞ்சப்படி தாமதம் இன்னும் தாமதித்தால் பொறுமைக்கு ஏது பெருமை !
A solution for the DA arrears has been agreed upon  and is being formulated by HR Team /TCS and they are working on it and most likely in a day or two this will be available for Offcycle.
Request All to bear with this slight delay.
This message is from the Sr AO HR
------------------------------------------------------------------------------
சென்றவாரம் தென்மண்டல ASP/IP இடமாறுதல்கள் வெளிவந்தது .இந்த வாரம் HSG 1& போஸ்ட்மாஸ்டர் கிரேடு இடமாறுதல்கள் உத்தரவு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
----------------------------------------------------------------------------------------------------------------------

Friday, April 5, 2019

                                         FLASHNEWS         தென்மண்டல ASPOS   இடமாறுதல்கள் இன்று வெளிவந்துள்ளது .
திருநெல்வேலி ASP{ HQS } திரு .மாரியப்பன் 
பாளையம்கோட்டை SUBDN திரு .தீத்தாரப்பன் 
  இருவர்களையும் NELLAI NFPE வாழ்த்தி வரவேற்கிறது .

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே ! வணக்கம் 
1.LSG இரண்டாம் பட்டியலில் பிற கோட்டங்களுக்கு செல்லவேண்டிய ஏழு தோழர்களுக்கும் மீண்டும் நமது கோட்டத்திற்கு பணியாற்றிட வாய்ப்புகள் கிடைத்துள்ளது .நமது கோட்ட நிர்வாகத்தின் துரித நடவடிக்கைகளால் நமது தோழர்களுக்கு மீண்டும் நெல்லை கோட்டம் ஒதுக்கப்பட்டுள்ளது .அவர்கள் தங்கள் விருப்பங்களை வருகிற 08.04.2019 குள் தெரிவித்திடவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள் .அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் .
2. RULE 38 யின் கீழ் நமது கோட்டத்திற்கு வரவிருக்கும் தோழர்களுக்கு வருகிற சுழல் மாறுதலோடு உத்தரவுகள் சேர்த்து பிறப்பிக்கப்படும் .விரைவில் சுழல் மாறுதலுக்கான அறிவிப்புகள் வெளிவரவிருக்கின்றன .
3.திருநெல்வேலி தபால் மருத்துவமனை 01.04.2019 முதல் CGHS நல மையமாக செயல்பட தொடங்கிவிட்டது .5 KM சுற்றளவில் குடியிருக்கும் ஊழியர்களுக்கு இந்த வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது .ஓய்வூதியர்களுக்கு அவர்கள் ஏழாவது ஊதியக்குழுவில் நிர்ணயிக்கப்பட்ட PAY LEVEL அடிப்படையில் ஆண்டு சந்தா நிர்ணயிக்கப்பட்டுள்ளது .
PAY LEVEL 1-5 GP 2800வரை                      RS   3000
PAY LEVEL 6 GP 4200                                        RS  5400
PAY LEVEL 7-11 GP 4600-6600 வரை           RS 7800
என்ற விகிதத்தில் DD வாங்கி விண்ணப்பத்தோடு கொடுக்கவேண்டும் .
DD எடுக்கவேண்டிய முகவரி 
PAY AND ACCOUNTS OFFICER   MINISTRY OF HELTH & FAMILY WELFARE CHENNAI
நன்றி .தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Wednesday, April 3, 2019

ஸ்டேஷன் டென்னுர் குறித்து விரிவான விளக்கங்கள் கேட்டு மத்திய சங்கத்தின் கடிதம் 
ALL INDIA POSTAL EMPLOYEES UNION GROUP 'C'
CHQ: Dada Ghosh Bhawan, 2151/1, New Patel Road, New Delhi - 110008

Ref: P/4-1/Transfer                                                                                         Dated:  02.04.2019

To
            Shri P.K. Bishoi,
            Member (P),
            Department of Posts,
            Dak Bhawan, New Delhi-110 001

Sub: Issue of clarificatory instructions on Station Tenure.

Ref:- Directorate No. 141-141/2013-SPB II dated 17.1.2019.

Sir,
            Your kind attention is invited towards this union letter No. even dated 26.02.2019, under which we had requested to restore 4 years tenure  period and the condition of  station tenure for 6 years should not be applied for non-gazetted Group-C officials as it is not practically feasible also. 

            In majority cases majority of staff is working in one city or urban area. In comparison to that less officials are working in rural areas. If on the basis of station tenure all are transferred,  it will be very difficult to accommodate all of them.

            Though in Para VIII  for rotational transfer guide lines issued under Dte. Letter No. 141-141/20/3-SPB-II dated 31.07.2018, it is clearly mentioned “that the officials belonging to various cadres are waiting since long for their posting to particular stations and it has not been found possible to accede to their request for one reason or other, such pending requests for transfer may be acceded to in really deserving cases by transferring out officials having longest stay in such stations.”

            If the spirit of this para if followed in true sense at lower level, there will be no problem. But the officers at lower level i.e. Divisional level are making preparations to transfer the officials enbloc who have completed 6 years at a particular station. This large scale transfer of officials will create so many problems administratively also  including huge expenditure on TA.

            It is therefore, requested to kindly cause necessary clarification on this subject and issue orders to all concerned to follow the spirit of para VIII of Dte. Letter No. 141-141/2013-SPB-II dated 31.07.2018 in true sense so that the large scale dislocation may be avoided and all employees should not be put in unnecessary trouble.

An early action is highly solicited.

With regards.
Yours Sincerely,

(R.N. Parashar)
General Secretary

Tuesday, April 2, 2019

                              அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
திருநெல்வேலி தபால் மருத்துவமனை 01..04.2019 முதல் CGHS கெல்த் மையமாக செயல்பட துவங்கிவிட்டது .ஓய்வூதியதாரர்கள் அவரவர்களின் ஓய்வூதிய அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கு DD எடுத்து மருத்துவமனையில் இருக்கும் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து கொடுக்கவேண்டும் .CGHS திட்டத்தில் சேர தகுதியுள்ள பணியில் உள்ள ஊழியர்களுக்கு இந்த மாத ஊதியத்தில் இருந்து SUBSCRIPTION  பிடித்தம் செய்யப்படும் .
               சுத்தமல்லி அலுவலகம் B கிளாஸ் அலுவலகமாக தகுதி உயர்த்த பட்டதோடு நில்லாமல் அந்த அலுவலகத்திற்கு ஒரு எழுத்தரையும் அட்டாச் செய்துள்ளார்கள் .
   நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Monday, April 1, 2019

30.03.2019 அன்று நடைபெற்ற நமது தோழர்களின் பணி நிறைவு விழாவில் ........தோழர்கள் சமுத்திரம் -TAP ஷேக் மாதர் மற்றும் 
முத்துகிருஷ்ணன் அவர்களின் ஓய்வு காலங்கள் இனிதாக அமைய வாழ்த்துகிறோம் 











நமது தென்மண்டல இயக்குனர் திரு .பவன்குமார் அவர்களுடன் ஒரு இனியசந்திப்பு -தென்மண்டல அலுவலகத்தில் பணிபுரியும் தோழியர் செல்வேஸ்வரி பாரதி BE -PA RO மதுரை --விஜயபால ராஜா BSC -SR -SSA {MINISTRY OF Labour & Employment )   அவர்களின் மணவிழா 31.03.2019 அன்று சாத்தான்குளத்தில் நடைபெற்றது .இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நமது  இயக்குனர் அவர்களுடன் ஒரு இனிய சந்திப்பு