...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, August 31, 2018

நமது சம்மேளன செயலர் -அஞ்சல் மூன்றின் உதவி பொதுச்செயலர் தோழர் S .ரகுபதி அவர்களின் தன்விருப்ப ஓய்வு -01.09.2018 

         அஞ்சல் தொழிற்சங்கத்திற்கு கிடைத்திட்ட 
         அபூர்வ தோழனே !
         ஆழமான கொள்கைகளை அடிமனதில் தாங்கியும் 
          ஆர்ப்பாட்டங்கள் ஏதுமின்றி -
        ஆசைகளுக்கு அசைந்துகொடுக்காத 
        அதிசய தலைவனே !
        காட்சிக்கு எளியவனே ! தான்சார்ந்த 
         கட்சிக்கு  வலிமையானவனே !
         ஒப்பனை கிடையாது --உன் 
         தோற்றத்திலும் -வார்த்தைகளிலும் 
         ஒப்புக்காக எதையும் 
          ஏற்றதும் கிடையாது 
          அஞ்சாநெஞ்சன் பாலுவால்  -அதிகமாய் 
          வியந்து பேசப்பட்ட 
          ஆச்சர்யம் நிறைந்த ஆளுமை உனக்குண்டு 
            திண்டுக்கல் மாநாட்டில் கூட்டணி மலர்ந்த போதும் 
          திருநெல்வேலியில் உதிர்ந்தபோதும் 
          அதே அடக்கத்தோடும் -அமைதியோடும் 
          முடிவை அறிவித்தவன் நீ 
          சில நேரங்களில் -நாம் விரும்பியும் 
          சேர்ந்து பணியாற்ற வாய்ப்பு கிட்டாத போதும் 
           நாகரீகமாய் நடந்துகொண்டவன் நீ -
           அடுத்தவர் மீது பழிபோடாமல் மௌனமாய் 
           நகர்ந்து சென்றவன் நீ 
          செம்மலரே ! செங்கதிரே !
           உன்னை வாழ்த்துகிறோம் ! 
          பொதுவாழ்வில் உன் பணி தொடர வரவேற்கிறோம் 
                தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் நெல்லை 


அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
            நமது புதிய கண்காணிப்பாளர் அவர்களுடனான முதல் மாதாந்திர பேட் டி வருகிற 06.09.2018 அன்று நடைபெறுகிறது .மாதாந்திர பேட்டியில் விவாதிக்க வேண்டிய பிரச்சினைகள் மற்றும் ஏற்கனவே விவாதித்து நிலுவையில் இருக்கும் பிரச்சினைகள் இருந்தால் உடனே கோட்ட செயலருக்கு தெரிவிக்கவும் .
தோழமையுடன் ஜேக்கப் ராஜ் -பாட்சா  கோட்ட செயலர்கள் நெல்லை 

                        திருமண நாள் நல் வாழ்த்துக்கள்
இன்று 34 வது திருமணநாள் கானும் அஞ்சல் நான்கின் மாநில உதவி தலைவரும் நெல்லை கோட்ட செயலரும் -மனித நேய அடிப்படையில் பல நற்பணிகளையும் -ஏழை மாணவ /மாணவியருக்கு தன்னாலான உதவிகளை தாராளமாக செய்துவருபவரும் -எல்லா அதிகாரிகளிடமும் நற்பெயர் பெற்று -கள்ளம் கபடம் இல்லா எங்கள் அன்பு மாமா -அனிதாபேகம் இணை அல்லாவின் அருட்கருணையால் பல்லாண்டு வாழ்க !வாழ்க என எங்கள் நெஞ்சம் நிறைந்து வாழ்த்துகிறோம் .

Thursday, August 30, 2018

                                                  முக்கிய செய்திகள் 
.1.01.07.2018 முதல் பஞ்சபடி 2 சதம் அதிகரிக்கிறது .
2 மேலும் நேற்று கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் IPPB க்கு புதிய செலவு மதிப்பீடு  ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது .அதன்படி டிசம்பர் 2018 குள் அனைத்து அஞ்சலகங்களுக்கும் IPPB சேவை விரிவு படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
                                        AN OFFICIAL ANNOUNCEMENT 
இன்று திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்திற்கு IPPB ஊழியர்கள் வருகை புரிகிறார்கள் .IPPB கணக்கு தொடங்க விரும்புகிறர்வர்கள் தங்களது ஆதார் எண்ணை கொடுத்து  கணக்கு தொடங்கலாம் .பல இடங்களில் IPPB ஊழியர்களுக்கும் அஞ்சல் ஊழியர்களுக்கும் நிலவும் பணி போர் அதிகமாக இருப்பதாக தெரிகிறது ஆனால் நம் கோட்டங்களில் அப்படி ஒரு பிரச்சினை இதுவரை எழவில்லை  ..IPPB அமுலாக்கத்திற்கு பிறகு IPPB கான மார்க்கெட்டிங் என்பது முற்றிலும் IPPB ஊழியர்களையே சாரும் என்றும் நமது பங்கு நம்மை அனு கும் ஊழியர்களுக்கு I IPPB கணக்குகளை தொடங்கி கொடுக்க வேண்டும் என்பதுதான் ஒப்பந்தத்தின் சாராம்சம்..
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 


Wednesday, August 29, 2018

அன்பார்ந்த தோழர்களே ! 
 01.09.2018 மாலை 6 மணிக்கு நடைபெறும் அஞ்சல் மூன்று -அஞ்சல் நான்கு கூட்டு செயற்குழுவிற்கு செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி மீண்டும் நினைவூ ட்டுக்கிறோம் .முன்னதாக அன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் IPPB தொடக்க விழாவிற்கும் கோட்ட நிர்வாகத்தின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது .வாய்ப்புள்ள தோழர்கள் விழாவில் கலந்துகொள்ளும்படி கேட்டு கொள்கிறோம் .
-------------------------------------------------------------------------------------------------------------------------
                                              நீதி மன்ற தீர்ப்புகள் 
DOB 01 01 1956 and got retired on 31.12.2015, Hon.CAT Principal Bench, New Delhi given verdict favourable to Govt Servant treating deemed retired on 1st Jan. 2016 and all retirement benefits shall be extended as per 7th CPC vide OA No.571 of 2017 in the case of Shri G C Yadav vs Union of India.
This is information to all the concerned.
--------------------------------------------------------------------------------
Chief Post Master General, Kerala Circle Smt . Sharada Sampath handing over a cheque for Rs. 27 lakhs to the Chief minister of Kerala, Shri. Pinarayi Vijayan as our Circle contribution till date to CM's Disaster Relief fund
--------------------------------------------------------------------------------
பாளையம்கோட்டை ,திருநெல்வேலி தலைமை அஞ்சலகங்கள் மற்றும் PSD திருநெல்வேலி இவைகளில் போஸ்ட்மேன் /MTS பதவிகளுக்கு OFFICIATING பார்க்க விரும்பும் GDS தோழர்கள் இருந்தால் கோட்ட செயலர்களுக்கு தகவல்களை தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம் .
--------------------------------------------------------------------------------------------------------------------------
-






Tuesday, August 28, 2018

                                       DOP VS IPPB போட்டிகள் இனிதே துவக்கம் 
நாடுமுழுவதும் IPPB தனது சேவையை 01.09.2018 முதல் தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன்னதாகவே IPPB கணக்குகளை தொடங்க அஞ்சல் ஊழியர்களை அதிகாரிகள் வி (மி )ரட்ட தொடங்கி விட்டார்கள் .குறிப்பாக தபால் காரர்கள் மற்றும் GDS ஊழியர்களை இலக்குகளை நிர்ணயித்து IPPB கணக்குகளை பிடிக்க நிர்பந்திக்க தொடங்கிவிட்டார்கள் .IPPB -DOP அடிப்படை ஒப்பந்தமே மார்க்கெட்டிங் சம்பந்தமான அனைத்து வேலைகளையும் IPPB பணியாளர்கள் தான் செய்ய வேண்டும் என்று இருக்கும் போது இன்று அஞ்சல் ஊழியர்களை அனுப்புவது ஏற்புடையது தானா ?பல கோட்டத்தில் தபால்காரர் பணியினை COMBINED செய்துவிட்டு ஒவ்வொருநாளும் ஒவ்வொரு தபால் காரர் IPPB கணக்கு பிடித்து கொடுக்க வாய்மொழி உத்தரவுகள் கொடுக்கப்பட்டுள்ளன .சில கோட்டங்களில் IPPB மானேஜர்கள் அஞ்சல் ஊழியர்கள் தங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுப்பதாக புகார் கொடுக்க தொடங்கி உள்ளார்கள் .தபால் காரர்களுக்கு கொடுக்கப்பட்ட உபகரணங்கள் நிலையோ அதைவிட மோசமாக இயங்கி வருகிறது .மிக அதிகநேர சுற்றலுக்கு பிறகே ஒவ்வொரு நிலையை கடக்க முடிகிறதாம் .இதுபோக முதல் 100 நாட்களுக்குள் அதாவதுஆகஸ்ட் 20முதல் நவம்பர் 30 குள் இலக்கை எட்டும் அதிகாரிகளுக்கு Foreign Educational Tour to Asia Pacific Postal college, Bangkok Thailand மற்ற ஊழியர்களுக்கு தலைநகரில் ஒரு நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது .அதனால் தான் என்னவோ நாடெங்கிலும் IPPB மார்கெட்டிங்கை அஞ்சல் ஊழியர்களை கொண்டு நடத்திட தீவீரமாக அதிகாரிகள் முனைப்பு காட்டுகிறார்கள் .இது குறித்து மாநிலச்சங்க வாட்ஸாப்ப் குரூப்பில் 
 ஆந்திர மாநில ஒரு குழு பகிர்ந்திட்ட  வாட்ஸ் அப் விவாதங்களின் பகிர்வு. இதோ 
மேலும்  அந்த வியாதி இங்கு வரலாம். நாம்தான் விழிப்புடன் எதிர்க்க வேண்டும். தல மட்டத்தில் பரவலாக எதிர்ப்பு தெரிவித்து ஒத்துழையாமை நடத்திட வேண்டும். இப்போதே தோழர்களிடம் எடுத்துச் சென்று எதிர் மனநிலையை ஏற்படுத்துங்கள்.என மாநில சங்கம் எச்சரித்துள்ளது .ஆகவே எல்லாவித கொள்கை முடிவுகளை தீவிரமாக எதிர்த்து போராடும் நமது தமிழ் மாநிலச்சங்கம் மற்றும் ஒருங்கிணைப்புக்குழு இனைந்து சரியான வழிகாட்டுதல்களை ஊழியர்களுக்கு வழங்கினால் நிச்சயம் ஒத்துழையாமை இயக்கம் என்பதை ஒருங்கிணைந்து வெற்றிகரமாக நடத்திடுவோம் என்பதனை தெரிவித்து கொள்கிறோம் .
                    நேற்று கூட  ஒரு GDS ஊழியர்   தற்கொலைக்கு போகும் அளவிற்கு மயிலாடுதுறையில் குட்டி அதிகாரிகளின் கொட்டம் அதிகரித்துள்ளதை நினைக்கும் பொழுது ஒரு ஒன்றுபட்ட இயக்கத்தை தமிழகம் தழுவிய அளவில் நடத்தியாக வேண்டும் (மாநிலச்சங்கத்தின் நேற்றைய அதிவேகதலையீடு பாராட்டுதலுக்குரியது ) .பலகட்டமாக தருமபுரியில் இளைய தோழர்கள் தலைமையேற்று போராடி வருகிறார்கள் .அவர்களுக்கு ஆதரவாக குறைந்தபட்சம் மண்டலஅளவிலாவது கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்திடவேண்டும் .அப்பொழுதுதான் போராடும் எந்த கோட்டமும் தனித்து விடப்பட்ட கோட்டமல்ல -தமிழகமே அதன் பின்னால் நிற்கும்  என்பதை நாம் நிலை நிறுத்த வேண்டும் .
                                               அதிகார மமதையில் 
                                               ஆட்டம் போடும் அதிகாரிகளை 
                                              ஆட்டம் காண வைப்போம் 
                                              புதிது புதிதாக கொடுக்கு முளைக்கும் 
                                             குட்டி அதிகாரிகளின் 
                                              கொட்டத்தை அடக்குவோம் 
                                              பரவட்டும் தீ பரவட்டும் -இது 
                                              வார்த்தை அல்ல -தொழிலாளியின் 
                                               வாழ்க்கை என்பதனை நிரூபிப்போம் .
நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Monday, August 27, 2018

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! 
               நெல்லை அஞ்சல் மூன்று -அஞ்சல் நான்கு சங்கங்களின் 
                                               கூட்டு செயற்குழு கூட்டம் 
நாள் -01 .09.2018 சனிக்கிழமை 
நேரம்- மாலை 6 மணி 
இடம் -பாளையம்கோட்டை HO 
தலைமை- தோழர் T .அழகுமுத்து கோட்ட தலைவர் P 3
                       தோழர் A .சீனிவாச சொக்கலிங்கம் கோட்ட தலைவர் P 4 
பொருள் - 
1.15.11.2018 ஒருநாள் வேலை நிறுத்த சிறப்பு கூட்டம் -முன்னாள் மாநில செயலர் தோழர் பாலு அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டம் அக்டோபரில் சேர்த்து நடத்துவது சம்பந்தமாக 
2.ஜனவரி 5 மற்றும் 6 தேதிகளில் கோவையில் நடைபெறும் தபால் காரர் சங்க மாநில மாநாடு -நன்கொடைகள் பிரிப்பது சம்பந்தமாக 
3.IPPB அமுலாக்கமும் --நமது நிலையும்  
4.கோட்ட மட்டத்தில் நிர்வாகத்துடன் எடுத்து செல்ல வேண்டிய பிரச்சினைகள் 
5.இன்னும் பிற (தலைவர் அனுமதியுடன் ) 
              அக்டோபரில் நடைபெறும் வேலைநிறுத்த சிறப்பு கூட்டத்திற்கு மாநில அளவிலான தலைவர்களை அழைத்து புதிய பென்ஷன் திட்ட எதிர்ப்பு நிலையை பறை சாற்ற உங்கள் ஆலோசனைகள் பங்களிப்புகள் அவசியம் தேவை .
   தாங்கள் அனைவரும் செயற்குழுவில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் .
                                           தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ்                                                                           SK .பாட்சா 

Saturday, August 25, 2018

நமது கோட்ட சங்க நடவடிக்கைகளை பார்த்து மாயவரம் தந்திட்ட மகத்தான தலைவர் முன்னாள் மாநில உதவி செயலர்
 தோழர் மருத சாமி அவர்கள் அனுப்பியுள்ள வாழ்த்து செய்தி .
தம்பிஜேக்கப்வணக்கம் உங்கள்செயல்கள்தோழர்பாலு காலமாநிலச்சங்கசெயல்கள்நினைவுவருகிறது.
தொடரட்டும்வாழ்த்துக்கள்  ==மருதசாமி

                                          மாநில சங்க செய்திகள் 
1. கேடர் சீரமைப்பு குறித்த 854  புதிய பதவிகள் அடையாளப் படுத்தும் 2..  4.12.92 க்குப் பின்னதான மாநில அளவிலான எழுத்தர் பணி மூப்புப் பட்டியல் இன்றைய தேதியிலோ அல்லது அடுத்த வாரத்திலோ வெளியிடப்படும்.
3. இதன்மீது 15 நாட்கள் அவகாசத்தில் பணிமூப்பு பட்டியலில்  பிரச்னைகள் 
இருப்பின் அவை சரி  செய்யப்படும்.த்திரவு வரும் வாரத்தில் வெளியிடப்படும். 
4.தேங்கிக் கிடக்கும் விதி 38 ன் கீழான இடமாற்ற மனுக்கள் கேடர் சீரமைப்பு 
பதவி உயர்வுடன் இணைக்கப்பட்டு,  ஏற்படும் எழுத்தர் காலியிடங்களில் Community வாரியாக கூடுமானவரை 5 ஆண்டு சேவை முடித்த அனைவருக்கும் முன்னுரிமை அடிப்படையில் இடமாற்றம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன்பின்னரும் 
இடம் இருப்பின் தகுதி அடிப்படையில் 
5.எழுத்தர் காலியிடங்களில் விருப்பமுள்ள  தபால்காரர்,MTS,GDS களை உபயோகப் படுத்திட வேண்டி நீண்ட விவாதம் நடைபெற்றது. இதுவும் CPMG அவர்களிடம் பேசிய பிறகு இறுதி முடிவெடுக் கப்படும் என உறுதி யளிக்கப்பட்டது.  4 ஆண்டு சேவை முடித்தவர்கள் மனுக்கள் பரிசீலிக்கப்படும். 
                                                     கோட்ட செய்திகள் 
தோழியர் பிரம்மநாயகி MTS கோட்ட அலுவலகம் அவர்களின் தன் விருப்ப ஓய்வை ஒட்டி நெல்லை NFPE சார்பாக நமது செயல் தலைவர் தோழர் N.கண்ணன் அவர்கள் தலைமையில் தோழியரை வாழ்த்தினோம் .தோழியரின் ஓய்வு காலம் சிறக்க வாழ்த்துக்கள் 

Friday, August 24, 2018

                                             நெல்லை கோட்ட செய்திகள் 
நேற்று நமது SSP அவர்களை சந்தித்து சில பிரச்சினைகளை குறித்து பேசினோம் .குறிப்பாக  இதுவரை வழங்கப்பட்டு வந்த SPEED POST INCENTIVE  கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை விரைந்து வழங்கிட கோரினோம் .SSP அவர்களும் விரைந்து ஆவண செய்வதாக தெரிவித்தார்கள் .ஆகவே நமது தோழர்கள் இனி SPEED POST INCENTIVE கிடைக்காது என்ற எண்ணத்தில் யாரும் CLAIM பண்ணாமல் இருந்திட வேண்டாம் என கேட்டு கொள்கிறோம் .கீழ்கண்ட வகையில் SPEED POST INCENTIVE வழங்கப்படுகிறது என்பதனை நினைவில் கொள்க !

                                                     Speed Post Incentive
1)   Rs.0.50 is payable for each SP article booked where no seperate booking counter is provided for speed post work.
2)  Incentive of Rs.0.75 per article booked over and above the threshold specified where seperate post has been sanctioned for speed post work. 
3)  Incentive of Rs.0.50 per article delivered in addition to his other normal duties.
4)  Rs 5/- per customer in respect of articles booked under special journal.
5)  No incentive is payable to postman whose return is morethan 2%
-----------------------------------------------------------------------------------------------------------------
புதிய இடமாறுதல் வழிகாட்டுதல்களை குறித்து நமது மத்திய சங்கம் அஞ்சல் வாரியத்திற்கு எழுதியுள்ள கடிதம் 


NFPE WRITES TO DEPARTMENT
National Federation of Postal Employees
1st Floor North Avenue Post Office Building, New Delhi-110 001
Phone: 011.23092771                                          e-mail: nfpehq@gmail.com
       Mob: 9868819295/9810853981            website: http://www.nfpe.blogspot.com

         No.PF-68-16/2018                                                                                 Date: 23rd  Aug 2018
         
To
                  Shri A.N. Nanda,
                  Secretary,
                  Department of Posts,
                  Dak Bhawan,  New Delhi-110 001


Sub: Guide lines for transfer to regulate transfer of Group ‘C’ officials – Amendments – Reg.
Ref: DPC .FNO.141-141/2013 – SPM-II Dt. 31st July 2018

Respected Sir,
                  Some suggestions are submitted on the Guide lines for transfer to regulate transfers of Group ‘C’ officials issued vide Dte. No. as referred above for your kind and sympathetic consideration.

                  Para 5-1 (i)Present  post tenure of 4 years should not be reduced to three years, because it will create more disturbance for officials and consequently it will adversely affect the postal services also.

          (ii)  The station tenure of 6 years should also not be made applicable on Group ‘C’ officials. In Cities, Departmental Post Offices are more in no and less in rural areas. Therefore more difficulty will arise in adjustment.
                                  
                 Further some bigger cities are having more than one division. How there officials will be accommodated. Eg.- Delhi, Mumbai, Calcutta, Chennai, Hyderabad, Bangalore etc.
                    
                 It is therefore requested to kindly consider sympathetically on these two aspects and take decision favourably so that the Group ‘C’ officials may get relief and Postal Services should also not be affected adversely.
Hoping for a positive action.
With regards
                                                                                                     Yours Sincerely,
                                                                                           
                                                                                         (R.N. Parashar)
                                                                                                     Secretary General

Thursday, August 23, 2018

                                  திருமண வரவேற்பு விழா 
நமது நெல்லை NFPE இன் தீரமிகு தோழியர் விஜயராணி SPM ஜவஹர்நகர் அவர்களின் இல்ல திருமண வரவேற்பு விழா 
நாள் 23.08.2018           இடம் அன்னை திருமண மண்டபம் 
          மணமக்கள் பல்லாண்டு வாழ நெல்லை NFPE வாழ்த்துகிறது 


                                      நெல்லை கோட்ட செய்திகள் 
அன்பார்ந்த தோழர்களே !
                                             நமது கோட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள திரு .R .சாந்தகுமார் அவர்களின் ஊழியர் நலன் சார்ந்த செய்லபாடுகளுக்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டு .இதோ !
 தோழர் ஆனந்தராஜ் GDS வடுக்கன்பட்டி அவர்கள் தனக்கு GDS கமிட்டி சிபாரிசு அடிப்படையில் CONBINED DUTY அலவன்ஸ் உயர்த்தி கொடுக்க படவில்லை என நமது வழிகாட்டுதலின் பேரில் மனு செய்திருந்தார் .அவரது மனுவின் மேல் உடனடி நடவடிக்கை எடுத்ததுமட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட ஊழியருக்கு கோட்ட நிர்வாகத்தால் பதில் கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது .உள்ளபடியே நமது கண்காணிப்பாளர் அவர்களின்இந்த  செயல் பாராட்டுதலுக்குரியது .மேலும் கோட்ட அலுவலகத்தில் இருந்தே தங்கள் அலுவலகங்களுக்கு என்னென்ன தேவைகள் என எழுத்து பூர்வமாக கேட்கப்பட்டுவருகின்றன .ஆகவே தோழர் /தோழியர்கள் தங்கள் அலுவலக குறைகள் எதுவாயினும் கோட்ட நிர்வாகத்திற்கு எழுத்து பூர்வமாக தெரிவித்து விட்டு அதன் நகலை கோட்ட சங்கத்திற்கு அனுப்பவும் .குறிப்பாக குடும்பத்துடன் தங்குவதற்கு அடிப்படை வசதியில்லாத அலுவலகங்களை DE QUARTERS செய்ய முன்னுரிமை வழங்கப்படும் என்றும் நம்மிடம் தெரிவித்துள்ளார்
                                                              வருந்துகிறோம் 
தோழர் மரிய மைக்கேல் GDSMD கீழநத்தம் அவர்கள் 22.08.2018 அன்று உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்கள் என்பதனை    வருத்தத்தோடு தெரிவித்து கொள்கிறோம்    அன்னாரது    இறுதி சடங்கு இன்று 23.08.2018 மதியம் நடைபெறுகிறது .தோழரை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கு நெல்லை       NFPE ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை   

Tuesday, August 21, 2018

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
      சுழல் மாறுதல் உத்தரவு நேற்று வெளியிடப்பட்டுள்ளது .சீனியாரிட்டி அடிப்படையில் ஊழியர்களின் விருப்ப இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன .கோட்ட அலுவலகத்திற்கு பல புதிய ஊழியர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன .மூன்று இடங்களில் ஒன்று கொடுக்கமுடியாத ஊழியர்களிடம் அவர்களிடம் மறு விருப்பங்கள் கேட்டு இடமாறுதல்கள் கொடுத்த விதம் நிச்சயம் பாராட்டுதலுக்குரிய அம்சமாகும் .நேற்று RT உத்தரவு வந்தவுடன் நமது கோட்ட கண்காணிப்பாளர் அவர்களிடம் தொலைபேசியில் நன்றி தெரிவித்து பேசும்போது குறைகள் உள்ள ஒரு சில  ஊழியர்களின் கோரிக்கைகள் கூடிய விரைவில் நிவிர்த்தி செய்யப்படும் என அவர்களாகவே நம்மிடம் சொன்னது நமக்கு புது நம்பிக்கையை கொடுத்திருக்கிறது .இந்த நேர்மையான இட மாறுதல் உத்தரவுகளை பிறப்பித்த நமது முதுநிலை கண்காணிப்பளார் திரு .R.சாந்த குமார் அவர்களுக்கு நெல்லை NFPE சார்பாக நெஞ்சார்ந்தநன்றியை தெரிவித்து கொள்கிறோம்  .பல தோழர்கள் தங்கள் நன்றியை தொலைபேசி வாயிலாக தெரிவித்திருந்தார்கள் .சிலர் வாட்ஸாப் மூலம் தங்களது கருத்தை பதித்திருந்தார்கள் .அவைகளில் சில 
தோழியர் ஆனந்த கோமதி This is the first time i am getting the place i intended...
தோழர் சிவகுமார் Rt seems very much friendlier to us that's good. 
தோழர் வண்ணமுத்து This was a great success for our movement.Well done jacob ..
தோழர் அழகு முத்து- சில ஆண்டுகளாகவே நாம் மதுரைக்கு சென்று RT உத்தரவுகளை மாற்ற வேண்டும் என்ற நிலை ஏற்படவில்லை .இந்த ஆண்டும் அது நடந்திருக்கிறது கோட்ட சங்கத்திற்கு நிர்வாகம் கொடுத்திருக்கும் உறுதியையும் விரைவில் பெற்று தர வேண்டுகிறேன் 
----------------------------------------------------------------------------------------------------------------------
அனைவருக்கும் நன்றி .நிச்சயம் நமது SSP அவர்கள் தெரிவித்தபடி ஒருசில GRIEVANCES நிச்சயம் விரைவில் தீர்த்து வைக்கப்படும் என்று நம்பிக்கையோடு தெரிவித்துக்கொள்கிறோம் ..நன்றி 
தோழமையுடன்  -ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Saturday, August 18, 2018

                                                IPPB- அமுலாக்கம் யார் குற்றம் ?
விதியின் குற்றமா ?விதியின் பெயரை சொல்லி பிழைப்பு நடத்தும் வீணர்களின் குற்றமா ?என பராசக்தி திரைப்பட வசனம் தான் நினைவுக்கு வருகிறது .                           
ஜூன் 2016 இல் மத்திய அமைச்சரவை IPPB தொடங்குவதற்கு ஒப்புதல் கொடுத்தது .2016 சுதந்திர தினத்தன்று நமது பிரதமர் அவர்களும் பெருமைப்பட இதை தெரிவித்தார் .முதற்கட்டமாக செப்டம்பர் 2017 குள் 650 கிளைகளை நிறுவ திட்டமிட பட்டிருந்தது .முன்னதாக 2015 இல் RESERVE வங்கியின் ஒப்புதலை பெற்றிருந்தது .அதன் அடிப்படையில் தான் பெருநிறுவன அமைச்சக (MINISTRY OF CORPORATE AFFAIRS ) கீழ் இயங்கும் நிறுவனங்கள்  2013 சட்டத்தின் படி பெறு நிறுவனங்களோடு IPPB இணைப்பு சான்றிதழை பெற்றது .இந்தப்பின்னணியில் தான் அதற்கான தனி வாரியம் அமைக்கப்பட்டு அதற்கான நிர்வாக இயக்குனர்கள் உள்ளிட்ட BOARD OF DIRECTORS நியமிக்கப்பட்டார்கள் .அதனை தொடர்ந்து ஆட்சேர்ப்பு மற்றும் DEPUTATION அடிப்படையில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டார்கள் .இந்த சூழ்நிலையில் மாவட்டத்திற்கு ஒரு தலைமை அஞ்சலகம் வீதம் 650 கிளைகளை நிர்வகிக்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அதனுடைய உட்கட்டமைப்புகள் அனைத்தும் மின்னல் வேகத்தில் பணிகள் முடிக்கப்பட்டு இன்று திறப்பு விழாவை எதிர்நோக்கி காத்திருக்கிறது .அஞ்சல் வாரியமும் அனைத்து அஞ்சல் ஊழியர்களுக்கும் சம்பள கணக்கை IPPB யில் தொடங்க உத்தரவிட்டுள்ளது .இது அனைவருக்கும் அறிந்த செய்திதான் .பலருக்கும் தெரிந்திருந்தும் மறந்த ஒரு செய்தி  கடந்த 07.03.2018 அன்று நமது துறைசெயலர் திரு .நந்தா IPPB சார்பாக சுரேஷ் சீதை CEO &MD IPPB இவர்கள் தலைமையில் ஒருபுறமும் அனைத்து சங்க பிரதிநிதிகள் (NFPE FNPO BPEF மற்றும் GDS சங்கங்கள் (AIGDSU  NFPE -GDS NUGDS &BPEDA ) என அஞ்சல் துறையில் உள்ள பிரதிநிதிகள் கலந்துகொண்ட பட்டறை (WORKSHOP) நடத்தப்பட்டு IPPB யின் வணிகத்திறன் கண்ணோட்டம் -IPPB ஒருங்கிணைப்பதால் ஏற்படும் நன்மைகள் -IPPB யால் அஞ்சல் ஊழியர்கள் மற்றும் GDS ஊழியர்களுக்கு உள்ள வாய்ப்புகள் மற்றும் DOP -IPPB இயக்கங்கள் என முதற்கட்டமாக விளக்கி கூறப்பட்டுள்ளது .அதனை தொடர்ந்து நடந்த இரண்டாவது அமர்வில் ஒரு INTERACTION SESSION யில் நமது NFPE சார்பில் நமது கருத்துக்களும் சமர்ப்பிக்கப்பட்டது 
1.முதற்கட்டமாக இந்த கார்ப்பரேட் நடவடிக்கைக்கு NFPE தனது எதிர்ப்பினை பதிவு செய்தது 
2.இதை  கார்ப்பரேட் நிறுவனம் என்பதனை மாற்றி அரசு சார்ந்த நிறுவனமாக மாற்ற வேண்டும் 
3.இந்த பணிகளுக்கு 100 சதம் அஞ்சல் ஊழியர்களையே பயன்படுத்த வேண்டும் .வெளி ஆளெடுப்பு கூடாது 
4.இருக்கின்ற நெட் குளறுபடிகளை நீக்கி அஞ்சல் துறைக்கென்று தனியாக நெட் வசதிகள் (ரயில்வே போன்று ) அமைத்து தரவேண்டும் 
  இதில் நமது கோரிக்கைகளில் எதையும் ஏற்காமல் IPPB அமுல்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது .
                            2015 முதல் அரசு IPPB தொடர்பான முயற்சிகளை எடுத்த சூழ்நிலையில் இருந்து இன்றுவரை நமது தரப்பில் இருந்து எந்த அளவிற்கு அழுத்தம் கொடுத்திருக்கவேண்டும் -கொடுத்தோம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று .மற்றொரு தரப்பில் இருந்து NET BANKING மைக்ரோ சிம் FUND TRANSFER  என காலசூழலுக்கு ஏற்ப நாமும் மாறினால் என்ன என்ற கேள்விகளும் கேட்க படுகிறது .எப்படி 1990 களில் கம்ப்யூட்டரை புகுத்தாதே என்ற நமது கோஷமும் இன்று புதிய கம்ப்யூட்டர் கொடு தரமான கட்டமைப்பு வசதிகளை செய்துகொடு என நமது கோரிக்கையும் வர்ணம் பூசப்பட்டு மாற்றப்பட்டிருக்கிறது என்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்  . (தொடரும் )
நன்றி தோழமை வாழ்த்துக்களுடன் ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 
              

கேரளா பெரும்மழை -பேரழிவு -தாராளமாக உதவிடுங்கள் -மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனம் வேண்டுகோள் 

KERALA FLOOD HAVOC -- DONATE GENEROUSLY TO CHIEF MINISTER'S RELIEF FUND
Dear Friends and Comrades ,
As you are aware, the people of Kerala is in the grip of unprecedented flood havoc. Please see below published APPEAL of Com. Pinarayi Vijayan, Hon'ble Chief Minister of Kerala which explains the seriousness of the situation. All affiliated organisations and COCs and also all well-wishers are requested to donate maximum amount to the Chief Minister's Relief fund in the address and Bank account shown in the below appeal,  UNDER INTIMATION TO CONFEDERATION CHQ .
M. Krishnan,Secretary General,Confederation Mob & WhatsApp: 09447068125.
----------------------------------------------------------------------------------------------------------------------
வருகிற 21.08.2018 அன்று நடைபெறவிருந்த IPPB துவக்கவிழா மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது 
--------------------------------------------------------------------------------------------------------------------இன்று பணிநிறைவு பெறும் தோழர் சுப்ரமணியன் GDS மஹாராஜநகர் அவர்களின் பணி ஓய்வு காலங்கள் சிறப்புடன் அமைய நெல்லை NFPE வாழ்த்துகிறது 
---------------------------------------------------------------------------------------------------------------------
வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK பாட்சா -கோட்ட செயலர்கள் நெல்லை 

Friday, August 17, 2018

அன்பார்ந்த தோழர்களே ! 
 மறைந்த முன்னாள் பிரதமர் மாண்புமிகு .வாஜ்பாய் அவர்களின் இறுதி சடங்கை முன்னிட்டு மத்திய அரசு அலுவலகங்களுக்கு இன்று அரைநாள் (பிற்பகல் ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது .இந்த அரைநாள் விடுப்பை நமது அஞ்சல் துறையில் எப்படி நடைமுறை படுத்துவது என்ற சந்தேகங்களை நமது தோழர்கள் கேட்டு வருகின்றனர் .
*கிளை அஞ்சலகங்களில் பெரும்பாலும் 2 மணி வரை இயங்குவதை அவர்களாகவே ஒரு CUT OFF TIME நிர்ணயித்து கொள்ள வேண்டும் .
* பட்டுவாடாவிற்கு அனுப்பப்படும் தபால் காரர்கள் வேலை நேரத்தை மதியம் வரை நிர்ணயித்துகொண்டு அதற்கேற்றாற்போல் செயல்படவேண்டும் 
* பொதுவாக மெயில் பைகள் அனுப்புவது இன்று சாத்தியம் இருக்காது .நாளை சேர்த்து அனுப்ப வேண்டியதாக இருக்கும் 
              இதுகுறித்து கோட்ட நிர்வாகம் விரிவான சுற்றறிக்கை விரைவில் அனுப்பும் என எதிர்பார்க்க படுகிறது 
-------------------------------------------------------------------------------------------------------------------------
Half day Holiday on 17th August 2018 - Demise of Shri Atal Bihari Vajpayee, Former Prime Minister of India: DoPT Order

MOST IMMEDIATE

F. No. 12/2/2007-JCA2
Government of India
Ministry of Personnel Public Grievances and Pensions
Department of Personnel and Training
JCA Section

North Block, New Delhi
Dated the 16th August, 2018

OFFICE MEMORANDUM

Subject: Half day holiday on 17th August, 2018 - Demise of Shri Atal Bihari Vajpayee, Former Prime Minister of India.

It has been decided that there will be half-day holiday in the afternoon of 17th August, 2018 in all Central Government Offices and CPSUs throughout the country to enable the people to attend the State Funeral which will take place at “Smriti Sthal”, New Delhi/ pay homage to former Prime Minister Late Shri Atal Bihari Vajpayee.
2. All Ministries/ Departments may bring the above decision to the notice of all concerned.

Sd/-
(Juglal Singh)
Deputy Secretary to the Government of India

Thursday, August 16, 2018

        தோழியர் ராஜேஸ்வரி SPM சமாதானபுரம் அவர்கள் இன்று பணிநிறைவு பெற்று செல்கிறார்கள் .அவர்களுக்கு நெல்லை NFPE சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் .
ஒரு வாழ்த்து கவிதையோடு 
விடை பெற்றிருக்கிறார்கள் 
தோழியர் ராஜேஸ்வரி 
வழக்கமாக நமது 
வாழ்த்துகள் தான் முந்தி நிற்கும் -
அவரும் ஒரு கவிஞர் என்பதால் 
நம் வேலையை சுலபமாக்கி சென்று விட்டார் 
பணி ஓய்விற்கு பிறகு 
அவரது தேடல் அர்தமுள்ளதாகட்டும் ....
அஞ்சலகம் தந்திட்ட 
மற்றுமொரு படைப்பாளி --
எனது கவிதைகளை படித்து விட்டு 
வாழ்த்தும் பல தோழர்களில் 
தோழியரும் ஒரு பங்காளி .....
உங்கள் எண்ணங்கள் சிறக்கட்டும் -
கனவுகள் கற்பனைகளாய் 
சிறகினை விரிக்கட்டும் 
புதிய உலகினில் 
சுதந்திரமாய் -பிரவேசியுங்கள் 
வாழ்த்துக்களுடன்              -----ஜேக்கப் ராஜ் ----------------





                                               முக்கிய செய்திகள் 
பாளையம்கோட்டை PRI (P ) பதவியினை  OFFICIATING அடிப்படையில் நிரப்பிட விருப்பமனுக்கள் கோர பட்டுள்ளன .
தகுதி ஊதியம் 4200 பெறும் ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம் .கடைசி தேதி 17.08.2018 
-----------------------------------------------------------------------------------------------------------------------
                                                                 IPPB --சில தகவல்கள் 

Three Types of Savings Accounts

The India Post Payments Bank (IPPB) will give the option of opening three types of different savings account with the bank. Citizens will have the option of opening a regular savings account, digital savings account or a basic savings account. All three will offer different types of services with them. However, the interest rate across all the accounts will be the same – 4%.

Current Accounts for Small Businessmen

Small merchants/ Kirana stores and individual business people will also have the option of opening a current account in the IPPB for commercial purposes. The bank will also be providing its customers with a merchant app which will help the account openers in meeting business requirements. The merchants will be able to open their account very easily at post office counters or their doorstep.

Doorstep Banking Services

Existing customers or new customers interested in opening an account with the IPPB will have to call the toll-free number 155299 to avail doorstep banking services. Using this, the customers will be able to quickly open an account or carry other baking activities right from the comfort of their home. The doorstep banking service will be chargeable for existing customers, however, for new account holders, this will be free of cost.

Mobile Banking Facility

Like the other banks in the present time, the IPPB will also offer a mobile banking facility for its customers. The mobile app for IPPB will be a simple, secure and easy-to-use tool for carrying out mobile transactions, checking account balance and much more. In addition to mobile banking services, customers will also be able to pay for their DTH bills, phone bills or recharges via the India Post Payments Bank.

The India Post Payments Bank won’t be able to issue loans or credit cards to its account holders, individuals or businessmen, however, the bank will accept a deposit of Rs 1 lakh from its customers. Across the 650 branches, account holders will have the facility of services as mentioned above in addition to the service of transferring money to other bank accounts. The bank will also offer multilingual customer support.                                

Tuesday, August 14, 2018

                          இந்தியா போஸ்ட் பேமைண்ட் பேங்க்  IPPB 
                             போஸ்டல் வங்கி  அஞ்சலக சேமிப்புக்கு 
                              நிகரானதா ? எதிரானதா ?
வருகிற 21.08.2018 முதல் நாடுமுழுவதிலும் IPPB என்ற வங்கி சேவை தொடங்கப்படவிருக்கிறது .பிரதம அமைச்சர் தொடங்கி வைக்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மாநில முதமைச்சர் முதல் மக்கள் பிரதிநிதிகள் வரை பங்கேற்க அழைப்புக்கள் விடப்பட்டுள்ளது .விழா மற்றும் விருந்து செலவுகளுக்கு தொகைகள் நிர்ணயிக்க பட்டு திருமண மண்டபங்கள் மற்றும் கலையரங்குகளில் நிகழ்ச்சிகள் நடத்தப்படவிருக்கின்றன .வழக்கம்போலவே இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு தமிழகத்திற்கு 1 லட்சம் கணக்குகள் ஒவ்வொரு கிளைக்கும் 3500 கணக்குகள் தொடங்க படவிருக்கிறன்றன .அதற்காக வருகிற 17.08.2018 20.05.2018  வரைக்கும்  புதிய கணக்குகளை தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது .ஏற்கனவே சம்பள கணக்குகளை IPPB யில் தொடங்க அறிவிப்புகள் வந்துள்ளன .
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு நிகராக அனைத்து சேவைகளையும் இங்கு வழங்கப்படும் என்ற அறிவிப்புகள் நமக்கு ஆனந்தத்தையும் வங்கிகளுக்கு அதிர்ச்சியையும் ஒருவேளை தந்திருக்கலாம் .ஏற்கனவே பரந்து விரிந்துள்ள அஞ்சலக சேமிப்புகளிலே இந்த வசதிகளை செய்திருக்கலாம் என்ற நமது ஆதங்கங்கள் குறித்து யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை .நமது கோட்டத்தில் பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் களக்காடு துணை அஞ்சலகம் மற்றும் அதன்கீழுள்ள மூன்று கிளை அஞ்சலங்களிலில் வங்கிசேவை தொடங்கப்படவுள்ளன .
                       
                             மேளாவுக்கும் -விழாவுக்கும் 
                             வித்தியாசம் கொஞ்சம் தான் 
                             பிரபலங்கள் வந்தால் விழா 
                             நீயும் நானும் என்றால் மேளா! 
                   

                            விழாவிற்கு அன்போடு அழைக்கிறார்கள் 
                            மேளாவிற்கு எச்சரிக்கையோடு அழைப்பார்கள் 
                            பளபளக்கும் தளங்களில் விழா நடக்கும் 
                            பெஞ்சிக்கும் நாற்காலிக்கும் -மேளாவில் 
                            பஞ்சம் இருக்கும் .

                            பலமுறை -இந்த துறையால் 
                            நாங்கள் ஏமாற்றப்பட்டிருப்போம் 
                           பழசையெல்லாம் மறந்தபடி 
                            பச்சை கொடி காட்டி மகிழ்கிறோம் 

                            எங்களோடே நாங்கள் 
                           போட்டிக்கு போகிறோம் 
                           என்பதை கூட புரியாமல் 

                           வங்கிகளோடு போட்டிக்கு போகிறோம் என்று 
                            வரிந்து கட்டி கொண்டு போகிறோம் 
                           பட்டி தொட்டியெ ல்லாம்  -எங்கள் 
                          முத்திரையை பதிக்க போகிறோம் -என்று 
                          முழக்கங்களை முன் வைக்கிறோம் .

                          அஞ்சல் துறையே ! உன் 
                          அஸ்திவாரத்தை 
                         அழகுபடுத்தாவிட்டாலும் பரவாயில்லை 
                          அங்கீகரிக்க மறந்துவிடாதே !
                          வீடுதோறும் அஞ்சல் அட்டையை அனுப்பி 
                          விளம்பரம் படுத்து !
                           வீடு தேடி மணிஆடர் போகும் என்று 
                           பெருமை படுத்து ! 
                          அரசாங்க தஸ்தாவேஜுகளுக்கு -இங்கு 
                          உத்தரவாதம் உண்டு என்று 
                         ஊரெல்லாம் தண்டோரா சாற்று 
                         எத்தனை நூற்றாண்டு என்றாலும் 
                         நிலைத்து நிற்கும் என்று 
                         சத்தியம் பேசு 
                           இங்கு மட்டும் தான் 
                          ஒரே குடையில் 
                           அனைத்து சேவைகளும் உண்டென்று 
                            உரக்க சொல்லு -ஆம் 
                             பெருமை கொள்வோம் 
                            அஞ்சல் ஊழியர் என்பதில்
                             பெருமை கொள்வோம் 
                           அப்பழுக்கற்ற சேவை என்பதில் 
                           ஆனந்தம் கொள்வோம் 
                                                                        -----------------    ஜேக்கப் ராஜ் -------------