...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, February 28, 2019

அன்பார்ந்த தோழர்களே !
   நீதி வென்றது ...........மீதி வெல்வது நிச்சயம் ...........
  2002& 2003 ஆண்டிற்கான காலிப்பணியிடங்களில் ஊழியர்களை  ..1..1.2004 க்கு பிறகு பணியமர்த்தப்பட்டிருந்தாலும் அவர்களுக்கு பழைய பென்ஷன் தான் வழங்கவேண்டும் என்று நமது கோட்ட சங்கத்தின் வழிகாட்டுதலின் பேரில் எட்டு தோழர்களுக்கு வழக்கு தொடர்ந்தோம் .
ஐசக் பால்பாண்டியன் -ஹைருனிசா பேகம் -சங்கரநாராயணன் -ராமலக்ஷ்மி -முருகன் (Dispensary ) -டால்வி -முருகன் (போஸ்ட்மேன் )மற்றும் மூர்த்தி (தேவகோட்டை )
இந்த வழக்கில் 2002-2003 ஆண்டிற்கான காலியிடங்களை தாமதமாக நிரப்பியது அஞ்சல் வாரியத்தின் தவறுதானே தவிர ஊழியர்கள் பொறுப்பேற்கமுடியாது ஆகவே YEAR OF VACANCY (OA 21193/2015)அடிப்படையில் இவர்களுக்கு பழைய ஓய்வூதியம் அனுமதிக்கவேண்டும் என்றும் -இலாகா சேவை 10 வருடங்களுக்கு குறைவாக  இருந்தால் GDS சேவையை கணக்கில் எடுக்கவேண்டும் (OA 1676/2014) என்றும் எடுத்துரைக்கப்பட்டு வாதிக்கப்பட்டது .வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏற்கனவே பழைய ஓய்வூதியம் வழங்கவேண்டும் என்ற தீர்ப்பு இவர்களுக்கு பொருந்தும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டியதோடு நில்லாமல் அரசு தரப்பில் மேல்முறையிடு செய்யமுடியாது என்று உன்னத தீர்ப்பை நல்கி வழக்கை முடித்துவைத்தது .இந்த வழக்கில் நமது தரப்பு சார்பாக மதிப்பிற்குரிய R .மலைச்சாமி MA ,ML அவர்கள் பங்கேற்றார்கள் .இந்த வழக்குகளுக்கு எங்களுக்கு உதவி செய்த முன்னாள் மண்டலச்செயலர் அண்ணன் S.சின்ராஜ் அவர்களுக்கும் நெல்லை NFPE சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
                                 மத்திய மண்டலம் முன்னணி.....
தபால்காரரில் இருந்து எழுத்தராக பதவி உயர்வு பெற்ற தோழர்களுக்கு 25.02.2019 முதல் 14.03.2019 வரை IN -HOUSING பயிற்சி அளிக்க உத்தரவை நேற்றே மத்திய மண்டலம் பிறப்பித்துள்ளது .இன்று நமது மண்டலத்தில் உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
    நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Wednesday, February 27, 2019

                                        LGO (தபால்காரர் -எழுத்தர் ) தேர்வு முடிவுகள் 
வெற்றிக்கனியை ருசித்து கொண்டிருக்கும் அனைத்து தோழர் /தோழியர்களுக்கு நெல்லை NFPE சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது .முன்னதாக வினாத்தாளில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டிய பின் மொத்த மதிப்பெண்கள் PAPER I -96
PAPER II 94 என நிர்ணயிக்கப்பட்டு UR பிரிவிற்கு தகுதி மதிப்பெண்கள் தலா 38 எனவும் SC /ST பிரிவினருக்கு 31 யில் இருந்து 30 ஆக RELAXATION கொடுக்கப்பட்டு தேர்வு முடிவுகள் அறிவிக்க முடிவெடுக்கப்பட்டது .
நெல்லை கோட்டத்தில் கிட்டத்தட்ட மொத்தம் 28 இடங்கள் இருந்தாலும் ஆறு தோழர்கள் தான்  தேர்ச்சி பெற்றுள்ளார்கள் .எழுத்தராக தேர்ச்சிபெற்ற தோழர்களை வாழ்த்துவதுடன் அஞ்சல் மூன்று சங்கத்திற்கு வாழ்த்தி வரவேற்கிறோம் .ஏற்கனவே அனைவரும் நமது NFPE P 4 யில் மகத்தான பங்களிப்பை செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
1.S .சுந்தர தேவி (முலைக்கரைபட்டி ) 60+68= 128
2.J .ரோகினி (கல்லிடை குறிச்சி ) 54+74=            118
3.V.முருகானந்தி (பெருமாள் புரம் ) 46+66=        112
4.R.ஆதி நாராயணன் (அம்பை )      38+ 68 =       106
5.S. நாராயணன் (M.O தி.லி )                 40+ 60=       100
6.M.ஆசை தம்பி  (ராதாபுரம் )             40+60=        100
  இன்று மதுரையில் நடக்கும் கூட்டத்திற்கு அனைத்து கோட்ட அதிகாரிகளும் செல்கிறார்கள் .அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் கூட்டம் முடிந்தபின் வெளியிடப்படும் .
                                           மாதாந்திர பேட்டி 
நமது கோட்டத்தில் மாதாந்திர பேட்டி வருகிற 05.03.2019 அன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது .மாதாந்திர பேட்டியில் சேர்க்கவேண்டிய பிரச்சினைகள் இருந்தால் இன்று 27.02.2019 மாலைக்குள் தெரிவிக்கவும் .
                                               இருமாதந்திர பேட்டி 
தென்மண்டல தலைவருடனான இருமாதந்திர பேட்டி 26.02.2019 அன்று மதுரையில் நடைபெற்றது .பேட்டியில் மாநிலத்தலைவர் தோழர் செல்வ கிருஷ்ணன் அவர்களும் மண்டலச்செயலர் தோழர் சுப்பிரமணியன் அவர்களும் கலந்துகொண்டனர் .நமது கோட்டம் சார்பாக கொடுக்கப்பட்ட பேட்டரிகள் மற்றும் புதிய கணினிகள் சம்பந்தமாக பிரச்சினைகள் உரியமுறையில் எடுத்துரைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது .அதற்காக மாநிலத்தலைவர் /மண்டலச்செயலர் ஆகியோருக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம் 
 தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்டசெயலர்கள் நெல்லை 
              

Tuesday, February 26, 2019

 FLASHNEWS .......FLASHNEWS---
நான்கு நாட்களாக நடைபெற்ற ESTABLISHMENT REVIEW கூட்டத்தில் நமது தென்மண்டலத்திற்கு மட்டும் சுமார்  560 பதவிகள் (அனைத்து பிரிவிற்கும் சேர்த்து ) விடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது .இது இயக்குனரகம் வரை சென்று நிரப்பப்படும் வரை கர்நாடகா மாநிலத்தில் உள்ளதைப்போல் தகுதியுள்ள GDS ஊழியர்களை /தபால்காரர்களை தற்காலிகமாக பணியமர்த்தினால் வேலைப்பளுவில் சிக்கித்தவிக்கும் ஊழியர்களுக்கு சிறந்த நிவாரணமாக இருக்கும் என்பது எங்கள் கருத்து -NELLAI NFPE 

பல்வேறு நிர்வாக தாமதத்தினால் நெல்லை கோட்டத்திற்கு வரவேண்டிய 28 கணினிகள் இன்றளவும் கிடைக்கவில்லை .ஏற்கனவே கடந்த ஜூன் மாதத்தில் ஒப்புதல் பெறப்பட்ட இந்த  புதிய கணினிகள் விரைவில் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டி நமது மண்டல செயலருக்கு நாம் எழுதிய கடிதத்தின் நகல் 

NFPE
ALL INDIA POSTAL EMPLOYEES UNION  GR-C                                        TIRUNELVELI DIVISIONAL BRANCH
TIRUNELVELI—627002
No.P3-org  / dated at Palayankottai- 627002 the 25.02.2019

To

The Regional Secretary
AIPEU GR C
Southern Region
@ Dindugal

Dear Com
           
Sub : Request to allot sufficient funds under Minor works and maintenance for procurement of additional systems - reg

It is to inform that approval for purchase of 28 new computers have been accorded to Tirunelveli Division whereas sufficient funds under Minor works and maintenance was not allotted.

Hence it is requested to take up the issue with Regional Adminstration to allot sufficient funds to Tirunelveli Division before this March.

             
                         Yours faithfully


[S.K.JACOBRAJ]




                                                   முக்கிய செய்திகள் 
கடந்த வாரம் மதுரை PTC யில் நடைபெற்ற ESTABLISHMENT REVIEW கூட்டமானது நிர்ணயிக்கப்பட்ட நாட்களை தாண்டி மேலும் ஒரு நாள் (ஞாயிறு ) நீட்டிக்கப்பட்டது .இதில் ஒருசில கோட்ட்டங்களுக்கு 
கூடுதல் இடங்களும் சில கோட்டங்களில் அதிகமாக கொடுக்கப்பட்டதை குறைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது .
               UNFILLED HSG II பதவிகளை LSG ஆக கணக்கிட்டு நிரப்புவது சம்பந்தமாக நமது தென் மண்டல அலுவலகத்தால் கடந்த வெள்ளியன்று சிலவிளக்கங்கள் கேட்டு மாநில நிர்வாக அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன .அவ்வாறு HSG II பதவிகளை LSG ஆக தகுதி இறக்கம் செய்து நிரப்பினால் ஒருவேளை ரெகுலர் HSG II வந்தவர் அந்த இடங்களை கேட்டு விண்ணப்பிக்கும் பொழுது ஏற்படும் நிலைக்குறித்தும் பரீசீலிக்கவேண்டும் எனவும் தொழிற்சங்கங்கள்  கோரிக்கை வைத்துள்ளன .
                              போஸ்ட்மாஸ்டர் கேடர் பதவிகளை மீண்டும் பொதுபிரிவோடு இணைக்க வகைசெய்வதற்காக அமைக்கப்பட்ட கமிட்டி ஊழியர் தரப்பு பிரதிநிதிகளிடம் கருத்துக்களை கேட்டு வருகின்றன .அன்று 1/3 LSG என்ற பெயரில்  மாநிலம் முழுவதும் தூக்கி அடிக்கப்பட்ட ஊழியர்கள் பிறகு FAST TRACK என்றபெயரில் தொலை தூர இடமாற்றங்கள் தற்போது நடைமுறையில் இருக்கும் POSTMASTER  GRADE என்ற பெயரில் மண்டலம் முழுவதும் இடமாற்றங்கள் இன்று மீண்டும் பொதுபிரிவோடு இணைப்பு என மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வந்துநிற்பது எதற்கு என்பது அதிகாரிகளுக்கே வெளிச்சம் .
              நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் 
 SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

                                   

Monday, February 25, 2019

            புதுடெல்லியில் 21.02.2019 அன்று நடைபெற்ற NFPE சம்மேளன குழு கூட்டத்தில் 24 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கீழ்கண்ட இயக்கங்களை நடத்துவதற்கு அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது .

 அதன்படி வருகிற 07.03.2019 அன்று தர்னா போராட்டம் நடைபெறுகிறது .விரைவில் அதற்கான சுற்றறிக்கைகள் வெளியிடப்படும் .தர்ணா போராட்டத்தில் கலந்துகொள்ள இன்றே தயாராகுவீர் !
                                                        கோரிக்கைகள் 
              1.    Withdraw NPS and Guarantee minimum pension 50% of last pay drawn.
2.    Implement all positive recommendations of Sri Kamlesh Chandra Committee report and grant Civil servant Status to GDS.
3.    Fill up all Vacant Posts in all cadres of Deptt of Post i.e P.A/S.A, Postmen, Mail Guard ,  Mailmen, MMS, MTS, GDS, Postal Acctts, P.A  Admn Offices, P.A SBCO & Civil Wing etc  within a time frame  and separate identity of all cadres.
4.    Settle all the problems arisen out of implementation of C.S.I & R.I.C.T.
5.    Membership verification of G.D.S and declaration of result of regular employees membership verification conducted in 2015.
6.    Implementation of orders of   payment of  revised wages and arrears to the casual , Part time, Contingent employees & daily rated mazdoors as per 6th and   7th CPC and Regularize Services of  casual Labourers.
7.    Implement Cadre Restructuring for left out categories i.e RMS, MMS, Postman/MTS, PACO, PASBCO, Postal Acctts, Postmaster Cadre and Civil Wing etc.
8.    Stop Privatization, Corporatization and out sourcing in Postal Services.
9.    Scrap Bench Mark in MACP .
10. Implement 5 days week in Postal and RMS
11. Enhancement of higher pay scales to those categories whose minimum qualification has been enhanced e.g Postmen, Mail guard.
12. Grant of pension to the promoted GDS based on Supreme Court Judgement in SLP No (C) 13042/2014
13. Withdraw orders of enhancement of cash conyance limit without security.
14.  Implement all High Court and Supreme Court decisions in C/W MACP, RTP and others.
15. Cash less treatment under CGHS  and allotment of adequate fund under head MR & T.A
16. Retention of Civil wing in the Deptt of Post.
17. Holding of Deptt. Council Meetings and periodical meetings at all levesl.
18. Stop Trade Union victimization and in the name of unscientific targets.
19. Provide 40 percent SCF quota promotion in AAO cadre and amend RR incorporating the modifications demanded by AIPAEA.
20. Status of audit to SBCO.
21. Restore Special Allowance to PO & RMS Accountants and OSA to RMS/MMS Staff.
22. All NSH and I.C. Speed Post Hubs should be under the administrative control of RMS and All L-2 Mail Offices should be identified as I.C. Speed Post Hubs and as Parcel Hubs.
23. Permission to all Staff of Circle Office, Postmaster Cadre, SBCO, Postal Accounts and RMS/MMS Staff to appear in Departmental Examination for promotion to PSS Group-B.
24. Amendment in Transfer Policy guide lines and under Rule-38 Transfer guidelines.  
                                    தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா  கோட்ட செயலர்கள் நெல்லை                                  

Friday, February 22, 2019

                                                         முக்கிய செய்திகள் 
மதுரை மண்டல அலுவலகத்தால் போடப்படும் இடமாறுதல்களில் உள்ள LSG, HSGI மற்றும் SBCO ஊழியர்கள் குறித்த விவரங்களை கேட்டு நேற்று மண்டல அலுவலகத்தில் இருந்து தாக்கீது வந்துள்ளது .அதன்படி HSG I யில் நெல்லை மற்றும் பாளை போஸ்ட்மாஸ்டர்களுக்கும் LSG யை பொறுத்தவரை தோழர்கள் 
N .கண்ணன் S .பாப்பா மற்றும் S .ராஜேந்திரன் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன .
                                1986 க்கு முந்தைய பயிற்சி காலங்களை TBOP /BCR கணக்கீட்டில் சேர்ப்பதற்கு நமது கோட்டத்தில் கிட்டத்தட்ட அநேக ஊழியர்களுக்கான பயிற்சி உத்தரவுகளை பெற்று கொடுத்துவிட்டோம் .இன்னும் விடுபட்டவர்களுக்கு இன்று மாலைக்குள் அனுப்ப கேட்டுக்கொள்ள படுகிறார்கள் .திட்டமிட்டபடி அதற்கான DPC வருகிற 26.02.2019 அன்று விருதுநகரில் நடைபெறுகிறது .
                                   நமது கோட்ட அலுவலக 19.02.2019  தேதியிட்ட சுற்றறிக்கையின் படி LSG ஊழியர்கள் தங்கள் விருப்ப விண்ணப்பங்களை 25.02.2019 குள் அனுப்பிவைக்க வேண்டும் .RO வழிகாட்டுதல்கள் வரும்வரை உத்தரவுகளை நிறுத்திவைக்கப்பட்டிருந்தாலும் விண்ணப்பங்களை அனுப்புவதில் தயக்கம் வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள் .
 நன்றி .தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Thursday, February 21, 2019

                                              முக்கிய செய்திகள்
1.LSG  இடமாறுதல்களை அமுல்படுத்துவதை  நிறுத்திவைக்கும்படி  மதுரை மண்டல அலுவலகத்தில் இருந்து நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்புகள் வந்துவிட்டன .முதலாவதாக LSG TR மற்றும் இந்த ஆண்டு TENURE முடியும் LSG ஊழியர்கள் அதனை தொடர்ந்து HSG II பதவிகளில் ஏற்கனவே இருக்கும் LSG ஊழியர்களின் இடமாறுதல்கள் அதன்பிறகு தான் புதிய LSG ஊழியர்களுக்கான இடமாறுதல்களை CIRCLE சீனியாரிட்டி அடிப்படையில் வழங்கிடவேண்டும் என்ற நமது தரப்பு கோரிக்கைகளை ஏற்று நமது PMG அவர்கள் இந்த அமுலாக்கத்தை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளார்கள் .நேற்றைய PMG அவர்களுடனான சந்திப்பில் நமது மண்டலச்செயலர் அண்ணன் சுப்பிரமணியன் மற்றும் முன்னாள் மாநிலசெயலர் அண்ணன் சுந்தரமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர் .
2. நமது தென்மண்டல அளவிலான ESTABLISHMENT REVIEW கூட்டம் மதுரை PTC யில் 21.02.2019 மற்றும் 22.02.2019 ஆகிய இருநாட்கள் நடைபெறுகிறது .2000 -ம் ஆண்டிலிருந்து கோட்ட அலுவலகத்தில் பராமரிக்கப்பட்ட ESTABLISHMENT கோப்புகள் இட ஒதுக்கீடு சம்பந்தமான ROSTER பின்பற்றப்பட்ட கோப்புகள் என அனைத்தையும் மூட்டை கட்டிக்கொண்டு வர ஒவ்வொரு கோட்டத்தில் இருந்தும் சம்பந்தப்பட்ட OA கள் ASP (HQS) யுடன் கலந்துகொள்ள உத்தரவு வந்துள்ளது .அதனை தொடர்ந்து 23.02.2019 அன்று அனைத்து கோட்ட கண்காணிப்பாளர்களுக்கும் பயிலரங்கம் ஒன்றும் நமது PMG அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது .இந்த கூட்டத்தில் புதிதாக அறிவிக்கப்பட்ட பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள உயர் வகுப்பினருக்கான 10 சதம் இடஒதுக்கீடு -VACANCY களை  கணக்கிடுவது விடுபட்ட VACANCY கள் இருந்தால் அதை அடுத்த நேரடி நியமனத்திற்கு கொண்டுவருவது என ESTABLISHMENT சம்பந்தமான அமர்வுகள் நடத்தப்பட உள்ளன .
3.நமது கோட்டத்திற்கு புதிதாக வரும் நமது தபால்காரர் தோழர்களை NELLAI NFPE வாழ்த்தி வரவேற்கிறது .
1.உதயகுமார் சேலம் கிழக்கு 
2.மார்ட்டின் தஞ்சாவூர் 
3.இசக்கியப்பன் கன்னியாகுமரி 
இவர்களுக்கான இடமாறுதல் கமிட்டி 18.02.2019 அன்று முடிவடைந்துவிட்டது .
                    நன்றி 
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Wednesday, February 20, 2019

இன்று காலை நமது PMG அவர்களை சந்தித்த நமது மண்டலச்செயலர் தெரிவித்த செய்திகள் 
1.தோழர் N .கண்ணன் அவர்களின் HRA சம்பந்தமாக GM பைனான்ஸ் ஒப்புதலுக்கு மண்டல அலுவலகத்தால் அனுப்பப்பட்டுள்ளது .
2.தோழியர் பூர்ணிமா PA நாகப்பட்டினம் அவர்களின் இடமாறுதல் விஷயத்தில் மாநில அலுவலகதிற்கு  விளக்கம் கேட்டு அனுப்பப்பட்டுள்ளது .
3.LSG பதவி உயர்வுகள் குறித்த புதிய வழிகாட்டுதல்கள் மண்டல அலுவலகத்தால் பிறப்பிக்கப்படும் என்றும் நமது கோட்டத்தில் பின்பற்றப்பட்ட கோட்ட அளவிலான சீனியாரிட்டி தவறு என்றும் CIRLE சீனியாரிட்டி தான் பின்பற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது .
நமது கோட்ட பிரச்சினையில் விரைந்து செயல்பட்ட நம் மண்டல செயலர் அண்ணன் சுப்ரமணியன் அவர்களுக்கு நெல்லை கோட்ட சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .நன்றி .தோழமையுடன் ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

                                                 முக்கிய செய்திகள் 
LSG பதவி உயர்வுகளை அமுல்படுத்திட கோட்ட அலுவலகத்தால் மீண்டும் Re -Notification கொடுக்கப்பட்டுள்ளது .இதில் நிரப்பப்படாத HSG II பதவிகளை LSG பதவிகளாக கணக்கில்கொண்டு நிரப்பபடவுள்ளன ...அதற்கு முன்னதாக  ஏற்கனவே  2017 யில் LSG பதவியுயர்வு பெற்றவர்களின் விருப்பங்களையும் கேட்டறிந்து (ஏற்கனவே HSG II வில் OFFICIATING பார்க்கின்ற தோழர்களையும் சேர்த்து )சீனியர் LSG ஊழியர்களுக்கு HSG II இடங்களில் முன்னுரிமை வழங்கிடவும் அவ்வாறு HSG II பதவிக்கு வருகிறவர்களிடம் ரெகுலர் HSG II பதவியுயர்வில் யாரேனும் வந்தால் (2022 வரை அதிகப்படியாக ரெகுலர் HSG II யாருக்கும் வரப்போவதில்லை ) இவர்கள் Revert ஆக சம்மதம் என்ற அடிப்படையில் மீண்டும் ஒரு விருப்பமனுக்களை இருக்கின்ற LSG ஊழியர்களிடம் கேட்டு அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்ற நமது கோரிக்கையை நேற்றைய சந்திப்பில் நமது SSP அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்  .இன்று அதுகுறித்த அறிவிப்புகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
                                        1986 க்கு முன் INDUCTION TRAINING முடித்தவர்களுக்கு அவர்களின் பயிற்சிக்காலத்தையும் சேவைக்காலமாக கணக்கிடவேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாத மாதாந்திர பேட்டியில் நாம் எடுத்துரைத்தோம் .பார்க்க MM சப்ஜெக்ட்  (Early implementation of  recent Dte .orders on counting of induction training period prior 01.01.1986 for grant of financial upgradation of TBOP/BCR) அதன் அடிப்படையில் அதற்கான DPC வருகிற 26.02.2019 அன்று நடைபெறுகிறது .ஆகவே விண்ணப்பித்தவர்கள் தங்களது INDUCTION TRAINING உத்தரவு  நகல் ஒன்றை உடனே கோட்ட அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கவும்.அநேக தோழர்களுக்கு TRANINIG ORDER இல்லை என தெரிகிறது . .TRAINING ORDER கிடைக்காமல் யாருக்கும் இந்த பலன்கள் தள்ளிப்போகாமல் பார்த்துக்கொள்ளவும் .மிகமுக்கியம் .அவசரம் .இதை நமது மூத்த தோழர்கள் /தோழியர்களிடம் தெரிவித்து முன்னணி தோழர்கள் விரைந்து செயல்பட்டு அந்த விவரங்களை கோட்ட சங்கத்திற்கு தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம் .
                               இந்த மாத மாதாந்திர பெட்டி வருகிற 28.02.2019 அன்று நடைபெறும் என்று தெரிகிறது .ஆகவே தங்கள் பிரச்சினைகள் எதுவாயினும் கோட்ட செயலருக்கு தெரிவிக்கவும் .DEPUTATION குறித்த புதிய வழிகாட்டுதல் மற்றும் குறிப்பிட்ட அலுவலகங்களுக்கே மீண்டும்...... மீண்டும்... DEPUTATION உள்ளிட்ட பிரச்சினைகள் விவாதிக்கப்படவுள்ளன .ஆகவே இன்றே உங்கள் பகுதி பிரச்சினைகளை தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம் 
       நன்றி .தோழமையுடன் 
        SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 


Tuesday, February 19, 2019

EXTENSION OF PROVISIONS OF OM NO.38/41/06-P&PW (A), DATED 05.05.2009 FOR FAMILY PENSION TO FAMILY TO MISSING EMPLOYEES COVERED UNDER NPS.
(Click the link below to view)

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
BSNL ஊழியர்களின் வேலைநிறுத்தம் வெல்லட்டும் 
பிஎஸ்என்எல் நிறுவனத்தை காப்பாற்றுவதற்காகவும், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்தும் பிஎஸ்என்எல் அனைத்து அதிகாரிகள் ஊழியர்கள் கூட்டமைப்பு(ஏயுஏபி) விடுத்த அழைப்பின் பேரில் மூன்று நாட்கள் வேலைநிறுத்தம், நாடு முழு வதும் பிரம்மாண்டமான வெற்றியுடன் துவங்கியுள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள ஊழியர்களில் 90சதவீதத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களும் அதிகாரிகளும், இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 95சதவீதத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர் சேவை மையங் களும், தொலைபேசி நிலையங்களும்,அலுவலகங்களூம் மூடப்பட்டுள்ளன. மத்திய அரசின் ‘எஸ்மா’ பிரயோகம்என்கிற தாக்குதலை புறந்தள்ளி விட்டு களத்தில் நிற்கும் தோழர்களுக்கு வீர வாழ்த்துக்கள் 
ஸ்டெர்லைட்டை திறக்கத் தடைஉச்சநீதிமன்றம் அதிரடி
 விரிவான வாதங்களுக்குப் பிறகு நீதிபதிகள் ஆர்.பாலிநாரிமன், நவீன்சின்கா ஆகிய இருவரும் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான தீர்ப்பை வெளியிட்டனர். அவர்கள் தீர்ப்புவிவரம் வருமாறு:-தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க இயலாது. அந்த ஆலையை திறக்க தடை விதிக்கப்படுகிறது. இந்த வி‌ஷயத்தில் தமிழக அரசு அடுத்தடுத்து நடவடிக்கை கள் மேற்கொள்ள உரிமை உள்ளது.தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை யை மீண்டும் திறக்க உத்தரவிடும் அதி காரம் தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு கிடையாது. எனவே தீர்ப்பாயம் வெளியிட்ட உத்தரவுக்கு தடை விதிக்கப்படு கிறது.தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் அனுமதி பெற்றதைஏற்க இயலாது. இந்த விவகாரத்தில் வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகிறது. தேவைப்பட்டால் வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகலாம். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Monday, February 18, 2019

மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் சுற்றறிக்கைகளில் இருந்து ....
  ஏழாவது ஊதியக்குழுவில் நாம் கோரிய எந்த மாற்றங்களையும் அரசு செய்திடவில்லை .HRA மாற்றம் MACP பெஞ்சுமார்க் நீக்கம் போன்ற எந்த கோரிக்கைகளிலும் முன்னேற்றம் இல்லை .மத்திய அரசு துறைகளிலே 6 லட்சம் பதவிகள் நிரப்பப்படாமல் இருக்கின்றன .பாதுகாப்பு துறை முதல் ரயில்வே வரை தனியாருக்கு அனுமதி அரசு அச்சகங்கள் மூடல் பணிபுரியும் ஊழியர்களுக்கு பல்வேறு வகையிலான மிரட்டல்கள் மற்றும் NPS திட்டத்தை கைவிடல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட இயக்கங்களை நடத்திட மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனம் அறைகூவல் விடுத்துள்ளன .
அதன்படி மாவட்ட தலைநகரங்களில் 
11.04.2019 அன்று தர்ணா 
23.04.2019 அன்று முழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் 
இவைகளுக்கு முன்னதாக NPS கோரிக்கைகளை மட்டும் வலியுறுத்தி புதுடெல்லியில் 13.03.2019 அன்று தர்ணா நடத்துவது என்று முடுவெடுக்கப்பட்டுள்ளது .
 நமது கோட்டங்களிலும் மத்திய அரசு ஊழியர்களை ஒன்று திரட்டி அதற்கான இயக்கங்களை நாம் நடத்திடுவோம் !
 நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Sunday, February 17, 2019

                                               வருந்துகிறோம் 
நமது கோட்ட சங்கத்தின் முன்னாள் செயலாளர் 
தோழர் K .செல்லக்கண்ணன் அவர்கள் நேற்றிரவு மைசூரில் வைத்து மாரடைப்பால் மரணமடைந்தார்கள் என்பதனை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறோம் .அன்னாரது இறுதி சடங்கு இன்று மாலை 17.02.2019 அன்று பெருமாள்புரம் டிரைவர்ஸ் காலனியில் நடைபெறுகிறது .நெல்லை கோட்ட சங்கத்திற்கு அட் காக் கமிட்டி போடப்பட்ட சோதனையான காலங்களில் நமது சார்பாக போட்டியிட்டு கோட்ட செயலராக பொறுப்பேற்றவர் .அவர் பொறுப்பேற்றவுடன் நெல்லையில் நீக்கப்பட்ட 177 உறுப்பினர்களை மீண்டும் NFPE எனும் பெரியக்கத்தில் உறுப்பினராக சேர்த்து வரலாற்று சாதனையை படைத்தவர் .அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு நெல்லை NFPE தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது 
       ---------------------------நெல்லை NFPE-------------------------------------------------

Saturday, February 16, 2019

                                    நாங்கள் சாக பிறந்தவர்கள் --ஒரு ராணுவவீரரின் தியாகம் நெஞ்சில் நிறுத்துவோம் -வீரவணக்கம் செலுத்துவோம் 

                        ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா நகர்ப் பகுதியில் ரிசர்வ் போலிசார் படை சென்ற பஸ் மீது 350 கிலோ வெடி மருந்து நிரப்பப் பட்ட காரை ஓட்டி வந்து தற்கொலைத் தீவிரவாதி ஒருவன் நிகழ்த்தியதை அடுத்து தீவிரவாதிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டு தாக்குதலிலும் 44 வீரர்கள் பலியாகி உள்ளனர்.


                                                 முக்கிய செய்திகள் 
1.NFPE சங்கத்தின் தொடர் முயற்சிக்கு கிடைத்த மற்றுமொரு வெற்றி 
பணமதிப்பிழப்பு சமயத்தில்   விடுமுறை  மற்றும் ஞாயிற்று  கிழமைகளில்  பணி செய்ததற்கான ஊக்க தொகை   ￰வழங்குவதற்கான உத்தரவு வந்துவிட்டது .
இதன் படி  ஒரு நாள் ஊதியம்  +DA  வழங்கிடவும் (  2 நாட்களுக்கு  ) ,
வேலை நாட்களில் கூடுதல் பணிக்கு  100 /  ஒரு நாளுக்கு  எனவும்  வழங்கிட வும் சிறப்பானதொரு  ஆணை .அதிகபட்சமாக ஒரு ஊழியருக்கு ரூபாய் 4000 என உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது 
சளைக்காமல் சலிக்காமல் மூன்று ஆண்டுகளாக விடா முயற்சிகளை ,ஏற்றுக்கொண்ட நமது மாநில சங்கத்திற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
2.SB /RPLI /டார்கெட் நிறைவேற்றாவிட்டால் APAR யில் கைவைப்போம் என பூ ச்சண்டி காட்ட இனி முடியாது .இதோ PMG CCR அவர்கள் கோட்ட அதிகாரிகளுக்கு வழங்கிய வழிகாட்டுதல் குறிப்பு இதோ !
APAR மதிப்பெண்கள் வழங்கிட. சம்பந்தப்பட்ட  ஊழியரின்  பணி , அவர்களின்  அலுவலக  பிரிவு  , அவர்களால்  செய்ய இயலும்  வேலை இவற்றை  மட்டுமே  கணக்கீட்டில்  எடுத்து  கொள்ள  வேண்டும் . அதாவது முதன்மை  காரணிகள்  என்பவை  இவை  மட்டுமே . SB/ RPLI target achievement  ஆகியவற்றை கூடுதல் காரணிகளாக  மட்டுமே எடுத்து  கொள்ள வேண்டும்  . அதாவது  மதிப்பெண்கள்  வழங்கிட achievement on allotted target  மட்டுமே என கோட்ட அதிகாரிகள் கூறுவது  முறையல்ல  .
       நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Friday, February 15, 2019

                                                   முக்கிய செய்திகள் 
அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                 நமது கோட்டத்தில் MACP உத்தரவுகள் நேற்று வெளியாகிவிட்டது .பதவி உயர்வு பெறும் அனைத்து தோழர் /தோழியர்களுக்கும் நெல்லை NFPE யின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் .
                                                     LSG இடமாறுதல்கள் 
LSG டிவிசன் ஒதுக்கீடு முடிந்துவிட்டது .நமது கோட்டத்தில் 58 கோவில்பட்டியில் இருந்து மீண்டும் தங்கமணி ( Re -allotment ) ஆக மொத்தம் 59 பேர்கள் .இவர்களுக்கான Transfer &Placement கமிட்டி விரைவில் கூடுகிறது  .நமது கோட்டத்திற்கு இடமாற்றல் கமிட்டிக்கு கோவில்பட்டி SSP க்கு பதிலாக வேறு ஒரு அதிகாரியை நியமிக்க மண்டல அலுவலகத்திற்கு கேட்கப்பட்டுள்ளது .இதற்கிடையில் இலாகா வின் 05.012.2018 உத்தரவு படி UNFILLED HSG II பதவிகளை LSG ஆக கணக்கில் கொள்ளவேண்டும் என்ற அடிப்படையில் அந்த பதவிகளை நிரப்புவதற்கு (உதாரணம் PRI -பாளை &திருநெல்வேலி  மற்றும் எல்லா தலைமைஅஞ்சலகங்களிலும் உள்ள APM SB -APM RD -GENERAL APM டவுண் ASPM உள்ளிட்ட பதவிகளை ) அனைத்து LSG ஊழியர்களிடமும் விருப்பங்கள் கேட்டு  நிரப்பிடவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது .
                                     DEPUTATION /MACP II ஊழியர்களுக்கு விலக்கு --
 டெபுடேஷன் குறித்த மேலும் ஒரு வலியுறுத்தல் கடிதம் சற்றேறக்குறைய முடியும் தருவாயில் இருக்கிறது .MACP II தான் வரையறையே  தவிர தகுதி ஊதியம் அளவுகோல் அல்ல என்பதை நேற்றைய SSP அவர்களுடனான சந்திப்பிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது .
                                     LSG அதனை தொடர்ந்து RULE 38 இடமாறுதல்கள் அதன் பின்னர் சுழல் மாறுதல் என இந்த வருடம் தான் மிக அதிகமான ஊழியர்களுக்கு இடமாறுதல்கள் செய்யவேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது .நிச்சயம் சீனியாரிட்டி முழுமையாக கடைபிடிக்கப்படும் என்ற கோட்ட நிர்வாகத்தின் நியாயமான நிலைப்பாடு பாராட்டுதலுக்குரியது .
நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Thursday, February 14, 2019

                                              முக்கிய செய்திகள் 
1.HSG 1 பதவி உயர்வு பட்டியல் இன்று வெளியாகிறது .பழைய முறைப்படி பார்த்தால் ஒற்றை இலக்கத்தில் தான் பதவி உயர்வு ஊழியர்களின் எண்ணிக்கை இருக்கும் 
2.HSG II மற்றும் போஸ்ட்மாஸ்டர் கிரேடு II பதவியுயர்விற்கான DPC நேற்று சென்னையில் கூடியது .நிர்வாக நடைமுறைகள் முடிந்து அடுத்த வாரத்தில் பதவி உயர்வு பட்டியல் வரும் என்று எதிர்பார்க்க படுகிறது .
3.சென்னை மண்டலத்தில் காலியாகஉள்ள   HSG II பதவிகள் LSG பதவிகளாக  கணக்கில் கொள்ளப்படும்  என்ற அடிப்படையில்  அதற்கான   உத்தரவை 12.2.19அன்று வெளியிட்ட  PMG CCR அவர்களுக்கு  மாநில சங்கத்தின் நன்றிகள்  .இத்துடன் அதன் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது .
                                     பேட்டரிகளும் --பிரச்சினைகளும் 
  நமது கோட்டத்தில் உள்ள பெரிய அலுவலகங்களில் பேட்டரி பிரச்சினைகள் தலைவிரித்தாடுகிறது .குறிப்பாக திருநெல்வேலி ,பாளையம்கோட்டை மற்றும் திருநெல்வேலி டவுண் போன்ற HSG I அலுவலகங்களிலும் பெரும்பாலான HSGII அலுவலகங்களிலும்  இதே நிலை தொடர்கிறது .ஒருமுறை மின்சாரம் தடைபட்டால் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப 10  நிமிடங்களுக்கு மேலாக காத்திருக்க வேண்டியுள்ளது .இதற்காக நடத்தப்பட்ட பிட்டிங் பலமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது .இந்த விஷயத்தில் மண்டல அலுவகத்திற்கும் -நமது கோட்ட அலுவலகத்திற்கும் சரியான புரிதல் தேவைப்படுகிறது ..நிர்வாக நடைமுறை சிக்கல்களில் சிக்கி தவிப்பது ஊழியர்களும் --பொதுமக்களும் தான் .இதுமட்டுமல்ல கடந்த ஜூன் 2018 யில் நமது கோட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 28 கணினிகள் இன்றுவரை கிடைக்கவில்லை என்பது கூடுதல் தகவல் .சாதாரணமாக ஒரு ரிப்போர்ட் அனுப்ப காலதாமதம் ஏற்பட்டால் அல்லது SMR அனுப்ப தாமதமானால் எத்தனை கடிதங்கள் எத்தனை தொலைபேசி அழைப்புகள் எத்தனை நினைவூ ட்டல்கள் ..எத்தனை 
.....எத்தனை ......அத்தனையும் எங்களுக்கு மட்டும் தானா ?
            நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Wednesday, February 13, 2019

முக்கிய செய்திகள் 
PLI  நீடிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள்  (Extended Clientele ) PROFESSIONAL தொழில்பூர்வமான பிரிவிவை சார்ந்தவர்கள் குறித்த மேலும் ஒரு விளக்க அணையை PLI இயக்குனரகம் 12.02.2019 அன்று பிறப்பித்துள்ளது

Tuesday, February 12, 2019

   தவறான கணக்கெடுப்பு -statistics குழப்பம்   இவைகளின் விளைவாக காந்திநகர் SO வில்     ஆட்குறைப்பு மண்டல அலுவலக   முடிவினை மறுபரிசீலனை செய்திட கோட்ட அலுவலகம் /மண்டல மாநில செயலர்களுக்கு நெல்லை அஞ்சல் நான்கின் கடிதம் 
                                                               NFPE 
                       ALL INDIA POSTAL EMPLOYEES UNION  POSTMAN&MTS            
                                     TIRUNELVELI DIVISIONAL BRRANCH -627001
_________________________________________________________________________________
                                           NO/ORG/Dtd at TVL 627001 THE 08.02.2019

To

The Sr Supdt of POs
Tirunelveli Division.
627002

Sir
  Sub: Request to drop the proposal of reducing the delivery staff of Gandhi Nagar SO - reg

We bring the following to the kind  notice of the SSPOs for immediate redressal.

The SSPOS Tirunelveli Division has instructed the GDSMD, Gandhinagar SO to give willingness for any one of the GDS vacant place which shows that there is proposal to abolish/redeploy the GDS MD Post of Gandhi Nagar SO.

Everybody knows about the delivery work load of Gandhi Nagar SO which is unbearable for both the Postman and GDS MD. Now, the proposal will not only increase the apathy of staff but also affect the delivery performance. 

In this connection, we bring the following facts and figures to kind notice of the SSPOs.

a)   At present Gandhinagar SO consists one Postman and One GDS MD [now Dak Sevak].

b) The followings offices/institutions are covered by the existing delivery staff apart from 21 number of delivery areas.

1.1. District live stock form 2. All India radio 3. Tami anna women's college  4. Joint director collegiate education  5. Little flower public school  6. Little flower main school  7.panchayat union primary school 8. Ooliyesthanam teacher training institute 9. Ooliyesthanam middle school 10. TNEB Palaiyapettai  11. Nivethitha metric hr sec school 12. Ooliyethanam primary school  13. Corporation primary school palaiyapettai  14. Corporation primary school lalupuram 15. Pandian gramma bank 16. Village administrative office  17. Athithiravidar ladies hostel  18. Primary urban health centre 19. Co-operative society 20. Gomathi type writing institute 21. Palaiyapettai kasba.
 (c)The distance travelled by the Postman is ..28 km ..and by GDS MD is .25.... kms.
Hence, there is clear justification for augmentation of one more GDS MD.
The Divisional Union has already taken up the issue related to heavy work load of delivery staff at Gandhinagar  during the previous meetings.
Hence we request the SSPOs to drop the proposal, if any, for the abolish/redeploy of GDS MD, Gandhi Nagar SO and to re-verify the delivery statistics of Gandhi Nagar SO to save the delivery staff from unbearable work load and to ensure better deliver performance. 

                                                                                                                               Yours faithfully

                                                                                                                                S.K.BATCHA

Saturday, February 9, 2019


                                              முக்கிய செய்திகள் 
1.நீண்ட இழுபறிக்கு பிறகு கடந்த வியாழன் அன்று MACP பதவியுயர்விற்கான கோப்புகள் முடிக்கப்பட்டு ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது .விரைவில் (SSP அவர்கள் தலைமையிடம் வந்தவுடன் )அதற்கான உத்தரவுகள் கோட்ட அலுவலகத்தால் பிறப்பிக்கப்படும் .பதவி உயர்வு பெறுகின்ற அனைவருக்கும் கோட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள் 
2.விதி 38 இன் கீழ் இடமாறுதல் உத்தரவுகள் கடந்தவாரம் நமது மண்டல அலுவலகம் மூலம் வந்துவிட்டது .இதில் CO உத்தரவில் இடம்பெற்ற தோழியர் பூர்ணிமா நாகப்பட்டினம் அவர்களது பெயர் RO உத்தரவில் இடம்பெறாதது குறித்து நமது திருச்சி மண்டல செயலர் அண்ணன் குமார் அவர்களிடம் இது குறித்து நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டுள்ளோம் 
3.SAP மூலம் ADVANCE OF TA பெறுவதில் உள்ள சிரமங்களை தோழர்கள் ஏற்கனவே கோட்ட சங்க கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்கள் .முதலில்  சம்பளம் கிடைப்பதில் தாமதம் பிறகு GPF தாமதம் இன்று TA என தொடரும் நிர்வாக சிக்கல்களை களைந்தெடுத்து ஊழியர் நலன் காக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் .இது குறித்து ஏற்கனவே   GM (PA & F) அவர்களிடம் மாநில நிர்வாகம் தொடர்ந்து வழிகாட்டுதல்களை பிறப்பித்துக்கொண்டுதான் இருக்கிறது .இருந்தாலும் பிரச்சினை முழுமையாக தீரவில்லை .
4.தோழர் பால்பாண்டி விஷயத்தில் சென்னை வங்கி நிர்வாகிகளிடம் தோழர் பால்பாண்டி முன்னிலையில் விவாதிக்கப்பட்டது .அவருக்கு பதில் மறு ஜாமின் போட சென்னை வங்கி கடன்தாரர் இருந்தால் தெரிவிக்கவும் .அல்லது பழைய கடன்தாரர்கள் யாரேனும் இவருடன் TRIANGLE ஜாமின் கொடுக்க முன்வந்தாலும் தெரிவிக்கவும் .மற்றபடி வங்கி குழப்பமே தவிர இதில் நிர்வாக தடை ஏதுமில்லை 
5.டெபுடேஷன் செல்பவர்கள் மீண்டும் தலைமையிடம் வந்தபிறகுதான் அடுத்த முறை வரும்போது அவர்கள் செல்லவேண்டும் என்ற உத்தரவையும் பதவியுயர்வில் MACP II பெற்றவர்களுக்கு ஒரு வழிகாட்டுதல் பிறப்பிக்கவும் மாதாந்திர பேட்டியில் ஒத்துக்கொண்ட ஒன்றுதான் .இருந்தாலும் நமது கோட்டத்தில் இடைவிடாமல் பெய்யும் மேளா மழையில் (மேளா -மினி மேளா -மெகா மேளா )  இந்த உத்தரவுகள் வெளிவர தாமதம் ஏற்படுகிறது .அடுத்த வாரங்களில் எல்லாம் சரியாகும் .
நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா 

Friday, February 8, 2019

துப்புரவு பணியாளர்கள் பணிக்கு பொறியியல் மற்றும் எம்பிஏ பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளமை, தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது( பத்திரிக்கை செய்தி )
தமிழக சட்டசபை செயலகத்தில் காலியாகவுள்ளன, துப்புரவு பணியாளர் பணிக்குத் தகுதி உடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டன. இதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதியாக, எழுதப்படிக்க தெரிந்தால் போதும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலோனோர் பொறியியல், எம்பிஏ மற்றும் கலை அறிவியல் படிப்புகளை படித்த பட்டதாரிகள், டிப்ளமோ, ஆசிரியர் பயிற்சி படித்தவர்கள் விண்ணப்பித்துள்ளதாகத் தெரிய வருகிறது.
வெற்றிடமாகவுள்ள 14 துப்புரவு பணியாளர் பணிக்காக சுமார் 4 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருப்பதாகவும், தகுதி உடைய, 3 ஆயிரத்து 930 பேரை நேர்காணலுக்கு வருமாறு அரசு அழைப்பு விடுத்திருப்பதாகவும் அறியவருகிறது. தமிழகத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு நிலை குறித்த அதிர்ச்சியான வெளிப்பாடாக இது அமைவதாகக் கூறப்படுகிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------

Thursday, February 7, 2019

                 இது தூத்துக்குடி கோட்ட சங்கத்தின் பதிவு 
SB DAY, PLI DAY, CLEANING DAY எனTARGET FIX   பண்ணி அதை முடிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டுகின்ற பாணியை கைவிட்டு, UPS DAY, GENSET DAY, PRINTER DAY, ACCESSORIES DAY  என வைத்து, ”குறைகளை சரி செய்து தருவதற்கு நிர்வாகம் தயாராக இருக்கிறது: உங்களுக்கு நிர்ணயிக்கபட்ட இலக்குகளை அடைவதற்கான முழு முயற்சிகளையும் மேற்கொள்ளுங்கள். உங்கள் முழுதிறமையையும் காட்டுங்கள்” என, உத்திரவாதம் கொடுத்து, உற்சாகபடுத்தினால் ஊழியர்கள் இன்னும் அதிக ஆர்வத்துடனும், அக்கறையோடும் இலக்கை அடைவதற்கான செயலில் ஈடுபாட்டோடும், இலட்சியத்தோடும் இறங்கி செயல்படுவார்கள் என்பது உறுதி. பதவி என்பது உதவி செய்வதற்கான வாய்ப்பு என்பதை பலமுறை சொல்லி இருக்கிறோம். ஆனால், ஊழியர்கள் தங்கள் அலுவலக குறைகளை பதிவிட்டால்,  ஊழியர்களின் குறைகளை சுட்டிக்காட்டி, ’நடவடிக்கை எடுக்கப்படும்’ என அதிகாரிகள் பதிவிடுவதும் வேதனையாக இருக்கிறது. தனிமனிதனாக யாரும் எதிர்ப்பை தெரிவிப்பதில் பலனில்லை. ஆர்ப்பாட்டம், போராட்டம், வேலைநிறுத்தம் என ஒட்டுமொத்த எதிர்ப்பை தெரிவிப்பதுதான் சரியாக இருக்கும்.  பல்வேறு பிரச்சனைகளோடு ஊழியர்கள் படும் அவஸ்தைகளையெல்லாம்புரிந்து கொண்டு, அதை தீர்ப்பதற்கான நடவடிக்கை எடுப்பதுதான் அதிகாரிகளின் வேலையாக இருக்க வேண்டுமே தவிர, ஊழியர்களை மன உளைச்சலுக்கும், மனவருத்தத்திற்கும் உள்ளாக்குவது எந்த வகையிலும் நியாயமல்ல. இலக்கை அடைவதற்கான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளுவோம். அதேசமயம் நாம் இதயமுள்ள மனிதர்கள் என்பதையும் உணர்த்துவோம்.

Wednesday, February 6, 2019

                                                  முக்கிய செய்திகள் 
   1.IPPB கணக்கு தொடங்கும் அஞ்சலக ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை (INCENTIVE ) ரூபாய் 7 வழங்கப்படும் .
இதன்படி சேமிப்பு கணக்குகளை 
POSB உடன் IPPB கணக்கை முப்பது நாட்களுக்குள் இணைத்திருக்கவேண்டும் .அல்லது 90 நாட்களுக்குள் IPPB கணக்கின் மூலம் பிற சேவைகளை நடத்தி (EB பில் உள்பட )வருமானத்தை ஈட்டியிருக்கவேண்டும் 
CURRENT ACCOUNT யை பொறுத்தவரை கணக்கு தொடங்கிய மாதத்தில் இருந்து அடுத்த மூன்று மாதங்களுக்கு ரூபாய் 1000 கணக்கில் இருப்பு இருக்கவேண்டும் மற்றும் 90 நாட்களுக்குள் வருவாய் ஈட்டியிருக்கவேண்டும் 
 2.    PLI /RPLI INCENTIVE பில் இனி மாதந்தோறும் வழங்கிட PLI இயக்குனரகம் 05.02.2019 தேதியிட்ட கடிதத்தின் மூலம் அனைத்து மாநில தலைமை அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளது .இதன்மூலம் மார்ச் 2019 வரையிலான பில் களை ஏப்ரல் 2019 குள் பட்டுவாடா செய்யவும் ஏப்ரல் முதல் மாதாமாதம் INCENTIVE வழங்கவும் அறிவுறுத்தியுள்ளது .
3.GDS ஊழியர்களுக்கு புதிதாக அறிமுகம் படுத்தப்பட்ட EMERGENCY விடுப்பு சம்பந்தமாக 01.02.2019 அன்று அஞ்சல் வாரியம் ஒரு பின்னிணைப்பு வழிகாட்டுதலை அறிவித்துள்ளது .அதாவது BPM தோழர்கள் EMERGENCY விடுப்பிற்கு கோட்ட அதிகாரிகளிடமும் இதர GDS அவர்களின் நியமன அதிகாரிகளிடமும் முன் அனுமதி பெற வேண்டும் .
4.நேற்றைய பதிவில்  PLI RPLI பிரிமியம் காசோலை மூலம் செலுத்தலாம் என்ற உத்தரவை சுட்டிக்காட்டியிருந்தோம் .ஒருவேளை காசோலை வங்கிகளால் திருப்பப்பட்டால் என்ற கேள்வியை நமது உறுப்பினர்கள்  கேட்டிருந்தார்கள்.அதற்காக  .PLI இயக்குனரகத்தின் அந்த முழு உத்தரவை இங்கே பதிவிட்டிருக்கிறோம் .
                                               கோட்ட மட்ட செய்திகள் 
டெபுடேஷன் நடைமுறையில் மாதாந்திர பேட்டியில் ஏற்றுக்கொண்ட விஷயங்கள் இன்னும் தலைமை அதிகாரிகளுக்கு வரவில்லை என்பதனையும் காந்திநகர் அஞ்சலகத்தில் ஆட்குறைப்பு விஷயத்தையும் குறித்தும் இன்று அல்லது DPS அவர்களின் வருகைக்கு பின்னர் நமது SSP அவர்களை சந்தித்து பேசவிருக்கிறோம் .
            நன்றி .தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் - SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Tuesday, February 5, 2019

                                            முக்கிய செய்திகள் 
அகிலஇந்திய அளவில் 33 தபால் மருத்துவமனைகள் CGHS திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டதை நாம் அறிவோம் .அதனை நிர்வகிப்போர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது .அதன் படி திருநெல்வேலி மற்றும் திருச்சி தபால் மருத்துவமனைகளை Addl. Directors சென்னை அவர்கள் நிர்வகிப்பார்கள் .
                                                      --------------------------------------------
RPLI -PLI பிரிமியம் செலுத்துவதற்கு காசோலை கொடுக்கப்பட்டால் அதை கவுண்டரில் செலுத்திய நாளில் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம் .அதாவது Date of Presentation of cheque is to be accounted for as premia payment என PLI இயக்குனரகம் தனது 01.02.2019 தேதியிட்ட கடிதத்தில் தெரிவித்துள்ளது 
                                        --------------------------------------------
NFPE தபால் காரர் மற்றும் MTS சங்கத்திற்கான மாதாந்திர உறுப்பினர் சந்தா ரூபாய் 40 யில் இருந்து 60 ஆக மாறுகிறது .கீழ்கண்ட அடிப்படையில் சந்தா மேல்மட்டங்களுக்கு அனுப்பப்படவேண்டும் .
சம்மேளனம் --ரூபாய் 4
அகில இந்திய சங்கம் ரூபாய் 12
மாநில சங்கம் ரூபாய் 16
கோட்ட சங்கம் ரூபாய் 28 
மேலும் சார்பாளர்கள் 
அகில இந்திய மாநாட்டிற்கு 40 உறுப்பினர்களுக்கு ஒரு சார்பாளர் 
மாநில மாநாட்டிற்கு 20 உறுப்பினர்களுக்கு ஒரு சார்பாளர் தகுதியானவர்கள் .இந்த நடைமுறைக்கு அஞ்சல் வாரியம் 27.12.2018 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளது .
                                  --------------------------------------------
நேற்று நமது கோட்டத்தில் இரண்டு தோழர்கள் பணிநிறைவு விழாவினை கொண்டாடினார்கள் .
தோழியர் ராணி அன்பரசி SPM மேலப்பாளையம் பஜார் 
தோழர் அனந்தன் GDS தச்சநல்லூர் 
இருவரது பணி ஓய்வு காலங்கள் சிறக்க நெல்லை NFPE வாழ்த்துகிறது .
  வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Friday, February 1, 2019

                                                தங்கம் வென்றார் தர்மா 
நெல்லை கோட்டத்திற்கு மென்மேலும் புகழ் சேர்க்கும் வகையில் விளையாட்டு வீரர்களின் பங்கு மகத்தானது .அந்த வகையில் ராய்ப்பூரில் நடைபெற்ற அகில இந்திய சிவில் சர்விஸ் தடகள போட்டியில்(400 மீட்டர் ) தங்கம் வென்ற தோழர் தர்மா தபால்காரர் மஹாராஜநகர் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் .தொடரட்டும் உந்தன் தங்க வேட்டை ......
வாழ்த்துக்களுடன் நெல்லை NFPE 

                                          முக்கிய செய்திகள் 
PLI /RPLI பிடிப்பதற்கு ஆதார் எண்ணை குறிப்பிடவேண்டும் என்பது கட்டாயமல்ல .ஆதார் ஒரு அடையாளமே தவிர ஆதார் இல்லை என்பதற்காக PLI /RPLI பாலிசிகளை மறுக்க கூடாது என்று PLI இயக்குனரகம் 24.01.2019 தேதியிட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
                     --------------------------------------------------------
PLI /RPLI நிர்வகிக்க தனி  separate business unit (SBU) அமைப்பதற்கான  ஒப்புதலை பெற அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டுள்ளது ..கிட்டத்தட்ட 15 நாட்களுக்குள் அதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கும் என்றும் நமது அமைச்சர் சின்கா தெரிவித்துள்ளார் .
                          

கண்களை விற்று சித்திரம் வாங்கினால் கை கொட்டி சிரியாரோ!

                                                                    தோழமையுடன் 
           SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை