...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, June 28, 2019

     அன்பார்ந்த தோழர்களே !
 நமது அகிலஇந்திய மாநாட்டிற்கு (ஹைதெராபாத்  20.010.2019-22.10.2019 )        வரவிரும்பும்    தோழர்கள் முதல்கட்டமாக ரயில் முன்பதிவிற்கு ரூபாய் 2000 என்னுடைய    POSB கணக்கில் 30.06.2019 க்குள் செலுத்திடுமாறு கேட்டுக்கொள்கிறோம் .நாம் செல்லுகிற நேரம் தீபாவளியை ஒட்டி வருவதால் முன்கூட்டியே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யவேண்டிய அவசியம் இருக்கிறது .
இதுவரை .உறுதி செய்யப்பட்டவர்கள் ..
தோழர் .ஜேக்கப் ராஜ் -வண்ணமுத்து -பிரபகாரன் -நமச்சிவாய மூர்த்தி .
திங்கள்கிழமை முதல்கட்ட முன்பதிவு செய்ய போகிறோம் .
ஆகவே மறவாமல் உங்கள் பயண கட்டணத்தை 0072773482 என்ற கணக்கில் செலுத்தவும் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்டசெயலர் அஞ்சல் மூன்று நெல்லை 

Thursday, June 27, 2019

                                  இன்றைய செய்திகள்      
                         HSGI  (NFG ) ஊழியர்களுக்கான   உத்தரவு        
  தற்போது உள்ள இரண்டு வருட அனுபவமுள்ள HSG I ஊழியர்களுக்கு NFG (from level 7 to level 8 pay) கொடுத்தால் தற்போது போஸ்ட் மாஸ்டர் grade உடன் merge பண்ணும் போது அவர்களை காட்டிலும் சீனியராக உள்ள போஸ்ட் மாஸ்டர் Grade III ஊழியர்  JSG I (NFG) யை விட சம்பளம் குறைவாக  வாங்குவார்கள். ஆகவே அதை நிறுத்தி வைக்க வேண்டும் அஞ்சல் வாரியம் 24.06.2019 தேதியிட்ட உத்தரவில் கூறியுள்ளது          
              -----------------------------------------------------------------------------
                  புதுகைக்கு பொதிகையில் இருந்து வாழ்துக்கள் 

இன்று பிறந்தநாள் கானும் மத்திய மண்டல செயலர் -புதுக்கோட்டை கோட்ட செயலர் தோழர் குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 

தொழிற்சங்க வரலாற்றில் 

புதுகைக்கு புத்துயிர் ஊட்டியவர் 

பதட்டமான காலத்திலும் -புதுகையில் 

பரபரப்பு ஏதுமின்றி மாநாடு நடத்தியவர் 

புதுகையை புரட்டிப்போட்ட கஜா புயலின் போது 

தமிழகமெங்கும் நிதி திரட்டி 

புயலைவிட வேகமாக 0பாதிக்கப்பட்ட 

அஞ்சல் குடும்பங்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்

மாநில சங்க நிர்வாகிகளில் 

மனமாச்சர்யத்திற்கு அப்பாற்பட்டு 

அனைவரோடும் அன்பொழுக பழகுபவர்களில் மூத்தவர் 

அண்ணன் குமார் அவர்கள் 

இன்று போல் என்றும் வாழ்க என வாழ்த்துகிறோம் 

                      ----------------------------------------  நெல்லை NFPE -------

                                                     முக்கிய செய்திகள் 
                         HSGI  (NFG ) ஊழியர்களுக்கான   உத்தரவு        
  தற்போது உள்ள இரண்டு வருட அனுபவமுள்ள HSG I ஊழியர்களுக்கு NFG (from level 7 to level 8 pay) கொடுத்தால் தற்போது போஸ்ட் மாஸ்டர் grade உடன் merge பண்ணும் போது அவர்களை காட்டிலும் சீனியராக உள்ள போஸ்ட் மாஸ்டர் Grade III ஊழியர்  JSG I (NFG) யை விட சம்பளம் குறைவாக  வாங்குவார்கள். ஆகவே அதை நிறுத்தி வைக்க வேண்டும் அஞ்சல் வாரியம் 24.06.2019 தேதியிட்ட உத்தரவில் கூறியுள்ளது                            

Wednesday, June 26, 2019


                            முழு வங்கியாக போகிறது IPPB 
CEO IPPB அவர்கள் 24.06.2019 அன்று வெளியிட்ட செய்தியில் RBI வழிகாட்டுதலின் படி IPPB SECOND SCHEDULED பட்டியலில் இடம்பெற்றுள்ளது .இன்னும் சில ஆண்டுகளில் IPPB முழு வங்கி என்ற அந்தஸ்தை பெற போகிறது என்பதின் வெளிப்பாடு தான் RBI யின் இந்த அறிவிப்பு .முதலீடுகள் டெபாசிட் களை POSB மூலம் பெற்று LOAN உள்ளிட்ட இதர வங்கி தொடர்பான பணிகளை IPPB செய்யும் என்ற நிலை உருவாகும் .
PAYMENT வங்கிகளிலேயே மற்றவைகளை பின்னுக்கு தள்ளி நமது கிராமப்புற அலுவலங்களின்  துணையோடு இந்த வளர்ச்சி வந்துள்ளது என்ற உண்மையை யாராலும் மறுக்கமுடியாது .
                                  -----------------------------------
தபால்காரர்/Mts  to எழுத்தர் தேர்விற்கான அறிவிப்பு நமது மாநில அஞ்சல் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது 
தேர்வு நாள் 04.08.2019(ஞாயிறு )
விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு இருக்க வேண்டிய கடைசி நாள் 10.07.2019 .
 தேர்விற்கு தயாராகும் தோழர் /தோழியர்களுக்கு நெல்லை NFPE யின் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் 
நன்றி .வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 
                                     

Tuesday, June 25, 2019

அன்பார்ந்த தோழர்களே !
         இந்த மாத மாதாந்திர பேட்டியில்(28.06.2019) கீழ்கண்ட தோழர்கள் பங்குபெறுகிறார்கள் .
அஞ்சல் மூன்று 1.தோழர் T .அழகுமுத்து கோட்ட தலைவர் 
                                     2. தோழர் V.சரவணன் உதவி செயலர் 
                                     3.தோழர் P .சுப்ரமணியன் அம்பாசமுத்திரம் 

அஞ்சல் நான்கு 1.தோழர் SK .பாட்சா கோட்ட செயலர் 
                                      2.தோழர் மோகன் MTS மகாராஜா நகர் 
                                      3. தோழர் V.தங்கராஜ் ரவணசமுத்திரம் 

 இந்த மாத பேட்டியில் 2019 ஆண்டிற்கான MACP I  II & III விரைந்து வழங்கிடவேண்டும் RULE 38 கீழ் வருகின்ற ஊழியர்களை விரைந்து அனுப்பிட சம்பந்தப்பட்ட கோட்ட அலுவலகங்களுக்கு வலியுறுத்துவது /சமீபத்தில் பதவி உயர்வு பெற்ற  LSG ஊழியர்களுக்கு அவர்களின் விருப்பமனுக்களை ஏற்று இடமாறுதல் வழங்குவது/CASH HANDLING தொடர்பாக அனைத்து SO களுக்கும் STATISTICS கேட்பது மற்றும் சுற்றறிக்கை அனுப்புவது   சுத்தமல்லி அலுவலக நெட்ஒர்க் வேகத்தை அதிகரிப்பது உள்ளிட்ட கோரிக்கைகள்  பிரதானப்படுத்தப்படுகிறது .வேறு கோரிக்கைகள் இருந்தாலும் உடனே தெரிவிக்க கேட்டுக்கொள்கிறோம் 
                                             நமது கோட்ட செயலர் மூன்று நாட்கள் விடுப்பில் செல்வதால் கோட்ட செயலர் பொறுப்பினை நமது கோட்ட உதவி செயலர் தோழர் V.சரவணன் PA பாளையம்கோட்டை அவர்கள் (27.06.2019-29.06.2019)கவனிப்பார்கள் .என்பதனையும் தெரிவித்து கொள்கிறேன் .
 நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Monday, June 24, 2019

  அன்பார்ந்த தோழர்களே !
                   இந்த மாத மாதாந்திர பேட்டி வருகிற 28.06.2019 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது .பேட்டியில் விவாதிக்கவேண்டிய உங்கள் பகுதி பிரச்சினைகள் இருந்தால் அதை கோட்ட செயலருக்கு தெரிவிக்கவும் .
                                                 --------------------------
அன்பார்ந்த தோழர்களே !
புதுக்கோட்டையில் இருந்து ஒரு  தோழர் எழுதியுள்ள எழுச்சி கவிதையினை பாருங்கள் --அந்த தம்பிக்கு நமது மத்திய மண்டல செயலர் அண்ணன் குமார் அவர்களின் பதில் பதிவுகளையும் (கடைசி வரி ) பாருங்கள் .இன்குலாப் ஜிந்தாபாத் 

பழமையான டிபார்ட்மெண்ட்டு தம்பி - இந்த
பெரும இன்னும் இருக்குதுடா தம்பி

உயர்மதிப்ப பெற்றிருந்தது தம்பி - பலர்
உசிரில் ஒன்னா கலந்திருந்தது தம்பி

Sanchay post'u இருந்த வர தம்பி - நாங்க
சிறப்பாதான் இருந்தோமடா தம்பி

யாரு கண்ணு பட்டுபோச்சோ தம்பி - இப்ப
கூறுபோட்டு மேயறாங்க தம்பி

Corporate கைகோர்த்ததும் தம்பி - எங்க
கஷ்டகாலம் தொடங்கிபோச்சி தம்பி

CSI வந்துச்சிடா தம்பி - எங்க
சித்தம் நித்தம் கலங்கிடுச்சி தம்பி

RICT வந்ததுமே தம்பி - எங்க
ஆவி மொத்தம் போயிடிச்சி தம்பி

Operative மட்டுமில்ல தம்பி - இப்போ
Administrative'வும் அப்படிதாண்டா தம்பி

இத்துபோன report'uகளால தம்பி - தெனம்
செத்து செத்து பிழைக்கிறோம்டா தம்பி

மாலை என்பதே மறந்துபோச்சி தம்பி - வீடடுல
மரியாதை கெட்டுபோச்சி தம்பி

Modernisation'னு சொன்னாங்கடா தம்பி - இப்போ
மொத்தமாவே மூழ்கிபோச்சி தம்பி

மெச்சி பாத்த நாட்கள் போச்சி தம்பி - நல்லா
வச்சி வச்சி செய்றாங்கடா தம்பி

நாட்கள தெனம் எண்ணுறோம்டா தம்பி -இந்த
நெலம எப்போ மாறுமோடா தம்பி

****

(சங்கம் நம்பி வந்திருக்க தம்பி - நல்ல
சங்கதி சீக்கிரம் தேடி வரும் தம்பி)
நன்றி நெல்லை NFPE 

                                                

Saturday, June 22, 2019

                                              இலாகா உத்தரவுகள் 
GDS ஊழியர்களுக்கான COMBINED DUTY குறித்து இலாகா 21.06.2019 அன்று ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது .COMBINED DUTY யை பொறுத்தவரை ஒரு ஊழியருக்கு அதே அலுவலகம் மற்றும் அதன் எல்லைக்குட்பட்ட அலுவகத்தில் மட்டும் அனுமதிக்கலாம் என்றும் கூடுமானவரை  COMBINED DUTY யை குறைத்திட கோட்டத்தில் உள்ள SURPLUS ஊழியர்களை கொண்டு ஒருவர் மட்டும் பணிபுரியும் அலுவலகத்திற்கு நிரப்பிடவும் உத்தரவிட்டுள்ளது .
                               -----------------------------------------
தமிழகத்தில் GDS ஆன்லைன் முடிவுகள் வெளியிடப்பட்டுவிட்டன .சராசரி 10 ம் வகுப்பில் 490-497 வரை மதிப்பெண்கள் பெற்றவர்களே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
                                ------------------------------------------------

Friday, June 21, 2019

                                           நெல்லை கோட்ட செய்திகள் 
GDS TO PA தேர்விற்கு நமது கோட்டத்தில் சுமார் 60 க்கும் மேற்பட்ட தோழர்கள் தயாராகிறார்கள் .அவர்களுக்கு நெல்லை NFPE சார்பாக வாழ்த்துக்கள் .
                              SC / ST  ஊழியர்களுக்கான சிறப்பு வகுப்புகள் 
இலாகா தேர்விற்கு தயாராகும்  SC / ST ஊழியர்களுக்கு நிர்வாகம் சார்பாக வழிகாட்டுதல்கள் மற்றும் பயிற்சி வகுப்புகளை எல்லா கோட்ட மட்டங்களிலும் நடத்த CPMG அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளளது .நமது கோட்டத்திலும் அதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது .
 நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 
                      

                          பற்றாக்குறையோடு IPPB .......
கடந்த 2018 ஆண்டு தொடங்கப்பட்ட INDIA POST  PAYMENT BANK முற்றிலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள நிறுவனம் என்ற அறிவிப்போடு ஆரம்பிக்கப்பட்டது . தனது முதல் ஆண்டிலேயே 165 கோடி பற்றாக்குறை என்றும் இனி வரும் ஆண்டுகளில் இன்னும் அதிகரிக்கும் என்றும்  IPPB  அறிவித்துள்ளது .
     ஆரம்பத்தில் இதற்காக மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த  தொகை 1435 கோடி ..இதை கொண்டுதான் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டன . .அலுவலகம்  முழுவதும் குளிரூட்டப்பட்ட அறை .அதற்கென  சாப்ட்வேர் இணையதள வசதி சுமார் 3500 ஊழியர்களுக்கு ஊதியம் அதுபோக மேல்மட்ட அளவில் நிர்வாக பொறுப்பெக்கென்று ஒப்பந்தஅடிப்படையில் தற்காலிக அதிகாரிகள் (குறைந்தபட்சம் நான்காண்டுகள் -அவர்களுக்கு மிக அதிகமான ஊதியம் ) மொபைல் போன்கள் RBI க்கு செக்யூரிட்டி என கொடுக்கப்பட்ட 400 கோடி போன்ற  நிர்வாக செலவுகள் ஒருபக்கம்  . இவை செலவினங்கள் .வருமானம் என்று பார்க்கும் போது  அதன் வருவாயை பெருக்கும் அளவிற்கு IPPB வளர்ந்திருக்கிறதா அல்லது பிரபல மாகியிருக்கிறதா என்று பார்க்கவேண்டும் .எடுத்த எடுப்பிலே 17 கோடி கணக்குகள் உள்ளதாக விளம்பரப்படுத்தப்பட்டது .ஆனால் இருக்கின்ற நமது ஊழியர்களுக்கு கணக்குகளை தொடங்குவதும் அதை POSB கணக்கோடு இணைப்பதோடு நின்றிருக்காமல் இன்னும் வெளி வாடிக்கையாளர்களை இழுக்க நமது துறை தவறிவிட்டதோ என நினைக்க தோன்றுகிறது .
         FUND TRANSFER -BILL PAYMENT  -INSURANCE -RECHARGE என இருந்தாலும் இவைகள் எல்லாம் எந்த அளவிற்கு முழுமை பெற்றிருக்கிறது என்பதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும் .உதாரணமாக இன்சூரன்ஸ் செலுத்தும் வசதி இருந்தாலும் நமது PLI -RPLI பிரிமியம் செலுத்தமுடியாத ஒரு அவலநிலை இன்றும் தொடர்கிறது .இன்றைய போட்டிநிறைந்த வங்கி துறைகளின் மத்தியில் நாம் என்ன புதுமையை கொடுக்கப்போகிறோம் .
பஜாஜ் அலைன்ஸ் ஒப்பந்தம் ,பஞ்சாப் நேஷனல் வங்கியோடு ஒப்பந்தம் என சொல்லப்பட்ட  ஒப்பந்தங்களை அமுல்படுத்தியிருக்க வேண்டாமா ? இந்த பற்றாக்குறையை தாண்டி லாபம் கிடைக்க போவது எப்போது ? DOOR STEP  சேவை எந்தஅளவிற்கு பொதுமக்களுக்கு சென்றிருக்கிறது என்பதை ஆய்வு செய்வது யார் ? இருக்கிற QR வசதிகளை மேம்படுத்த அந்தந்த பகுதிகளில் கோட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் கொடுத்தால்கூட போதும் .
                    கிளை அஞ்சலகங்களில் உங்கள் அலுவலகம் பற்றாக்குறையில் செயல்படுகிறது .கிளை அஞ்சலக வருவாயை பெருக்கவும் /உங்கள் அலுவலகத்தை நீட்டிக்கவும் என்ன செய்ய போகிறீர்கள் என பக்கம்பக்கமாக BPM தோழர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் விடும் இன்றைய காலகட்டத்தில்  முதல் ஆண்டே பற்றாக்குறையோடு 
நிற்கும் IPPB சேவையை உயர்த்த என்ன செய்ய திட்டமிட்டிருக்கிறார்களோ ? தெரியவில்லை .
                            அஞ்சல் துறையை காப்போம் !
                                அஞ்சல் சேவையை மேம்படுத்த துணை நிற்போம் !
நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் NELLAI NFPE 


Thursday, June 20, 2019

அன்பார்ந்த தோழர்களே !
                   நமது அகிலஇந்திய மாநாட்டிற்கு (20.10.2019-22.10.2019)செல்வதற்கு (ஹைதராபாத் )  உத்தேச பயண திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது .
18.10.2019 இரவு  நெல்லை  to சென்னை 
19.10.2019 மாலை 4.45  சென்னைசென்ட்ரல்  to ஹைதராபாத் வண்டி எண் 12603 
அதே போல் 21.10.2019 அன்று ஹைதராபாத் TO சென்னை 
22.10.2019 சென்னைTO நெல்லை ( 23.10.2019 காலை )
இது 20.10.2019 காலை 5.45 மணிக்கு ஹைதராபாத்  சென்றடையும் .
ரயில் கட்டணம் 
நெல்லை TO சென்னை ஸ்லீப்பர் RS 500  AC III 1210
சென்னை  TO  ஹைதராபாத்  ஸ்லீப்பர் RS 505 AC III 1270
ஆக இந்த அடிப்படையில் சென்று -வர பயண கட்டணங்களை நிர்ணயித்து கொள்ளவும் .
எனவே தோராயமாக ஸ்லீப்பர் வகுப்புக்கு ரூபாய்  2000  AC III ரூபாய் 5000 ஆகும் .
ஆகவே அகில இந்திய மாநாட்டிற்கு வரவிரும்புகிறவர்கள் ஒரு வார காலத்திற்குள் கோட்ட செயலருக்கு தகவல் தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி .வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 
--------------------------------------------------------------------------------------------------------------------


Wednesday, June 19, 2019

நெல்லையில் எழுச்சியோடு நடைபெற்ற ஆர்ப்பாட்டம் --
இளையோர் முதல் முதியோர் என ஆர்வத்தோடு கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் --கலந்துகொண்ட அனைவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
 ஊதியம் -ஓய்வூதியம் என Cycle Payment மற்றும் TA -GPF -CEA என 
OFF CYCLE PAYMENT இவைகள் கிடைப்பதில் நிலவும் காலதாமதத்தை கண்டித்து அஞ்சல் வாரியத்தின் கவனத்தை ஈர்க்க நாடுமுழுவதிலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் மாபெரும் வெற்றியை தந்தது .இனியாவது நிர்வாகம் சாக்கு போக்கு காரணங்களை சொல்லாமல் எல்லாம் உரிய நேரத்தில் கிடைத்திட வழி செய்திட வேண்டும் .இதனை ஒட்டி நெல்லையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் T.அழகுமுத்து கோட்டத்தலைவர் அஞ்சல் மூன்று தோழர் A .சீனிவாச சொக்கலிங்கம் கோட்ட தலைவர் அஞ்சல் நான்கு தோழர் G.கிருஷ்ணன் பொருளாளர் பென்சனர் சங்கம் கூட்டு தலைமை ஏற்று நடத்தி தந்தார்கள் .ஆர்ப்பாட்டத்திற்கு BSNL ஓய்வூதியர் சங்கத்தில் இருந்து தோழர் சம்மன்சு மற்றும் S.அருணாச்சலம் ஓய்வூதியர் சங்கத்தில் இருந்து தோழர்கள் உதவி செயலர் விஜயராஜா செயலர் சண்முகசுந்தரராஜா மற்றும் கிருஷ்ணன் அவர்களும் AIGDSU சங்க மாநில அமைப்பு செயலர் தோழர் ஞானபாலசிங் அஞ்சல் நான்கின் சார்பாக தோழர்கள் SK .பாட்சா தோழர் புஷ்பா கரன் அவர்களும் அஞ்சல் மூன்றின் சார்பாக கோட்டத்தலைவர் T.அழகுமுத்து செயல்தலைவர் தோழர் N.கண்ணன் தோழர் வண்ணமுத்து மற்றும் ஜேக்கப் ராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் .இறுதியாக தோழர் சீனிவாசசொக்கலிங்கம் கோட்டத்தலைவர் நன்றி கூற ஆர்ப்பாட்டம் இனிதே நிறைவுற்றது .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

                                                  

Tuesday, June 18, 2019

ஒரு இளைய தோழரின் இனிய கவிதை --தோழர் தினேஷ் நிதிச்செயலர் மத்திய சென்னை 
: மாதம் மும்மாரியும் பொய்யவில்லை
மாதக்கடைசியில் சம்பளமும் 
வந்த பாடியில்லை!
அஞ்சல் துறைகயை நவீனமாக்குவோமென்ற
TCS, SIFY ஐயும் காணவில்லை!

பணிவிடை பெற்றாலும் 
தளராத நம்பிக்கை மனதிலே - அவர்களின்
தள்ளாத வயதும் ஒரு குறையில்லை!
வற்றிய வயிற்றின் வன்பசி தீருமா?
பென்சன் ஒழுங்காய் வந்து சேருமா?
முற்றிய ஏழ்மையும் முழுதும் ஒழியுமா?

விடுமுறை நாளில் வீதிவர முடியலை!
வேலை நாளிலோ வீடுவர முடியலை!
இனிவரும் நாட்கள் எப்படி இருக்குமோ?
எண்ணினால் என்றைக்கும் தூங்கவும் முடியலை!

போர்டலும்(Portal)மாடுயுலும்(module) முட்டி மோதுது- இடையில் மாட்டிய
எங்க வேலை நேரம் சாகுது!

எனவே, நாளை வீதிக்கு வந்து போராடு
உரிய நீதிக்காக நடைப்போடு.!
நன்றி .தோழர் சுந்தர மூர்த்தி மத்திய சென்னை 

அன்பார்ந்த தோழர்களே !
           இன்று 18.06.2019 மாலை 6 மணிக்கு பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தாங்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என மீண்டும் நினைவு படுத்துகிறோம் .
                                                  வரவேற்கிறோம் 
நமது கோட்டத்திற்கு புதிதாக வந்துள்ள தோழர்கள் சிந்து (தாராபுரம் - தெற்கு கருங்குளம் ) செல்வி (தேனி -விஜயநாராயணம் ) 
மணிகண்டன் (பட்டுக்கோட்டை -பாளையம்கோட்டை ) ஆகியோர்களை நெல்லை NFPE வாழ்த்திவரவேற்கிறது .அதேபோல் 
பாளையம்கோட்டை உபகோட்ட உதவி கண்காணிப்பாளராக வந்திருக்கும் திரு. தீத்தாரப்பன் அவர்களையும் வாழ்த்தி வரவேற்கிறோம் .
                                    GDS ஊழியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் தினமும் மாலை 5 முதல் 8 மணி வரை நமது பயிற்சியாளர் திரு .பாலசுப்ரமணியன் (Retd ASP ) அவர்களது இல்லமான சமாதானபுரத்தில் நடைபெற்று வருகிறது .நமது வளாகத்திற்குள்  வைத்து நடத்த நாம் கேட்ட அனுமதி கிடைக்கவில்லை என்பதனையும் தெரிவித்து கொள்கிறோம் .தடையில்லாமல் இந்த பயிற்சிகள் தொடர வாழ்த்துகிறோம் 
                                        நமது கோட்டத்தில் GDS  ஊழியர்களுக்கான RPLI கமிஷன் நேற்று சாங்க்ஷன் ஆகிவிட்டது .ஓரிரு நாளில் அனைவருக்கும் கிடைக்கும் .
                                                   வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Monday, June 17, 2019

ஊதியம் /ஓய்வூதியம் கிடைப்பதில் தொடரும் தாமதத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் --
நாள் 18.06.2019 செவ்வாய் கிழமை
மாலை 6 மணி
இடம் பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு
            நாளை(18.06.2019) நடைபெறும் ஆர்ப்பாட்டம் குறித்து விரிவான சுற்றறிக்கை உங்கள் அனைவருக்கும் கிடைத்திருக்கும் என நம்புகிறோம் .அஞ்சல் வாரியத்தின் இந்த மெத்தனப்போக்கை தடுத்திட நாடு முழுவதும் நமது சம்மேளனமும் -ஓய்வூதியர் சங்கமும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த அறைகூவல் விடுத்துள்ளன .
                             IT -MODERNIZATION INDIAPOST -2012
பல்வேறு தொடர்பு   சேனல்கள் மூலம் வாடிக்கையாளர்களை அனுகுவது .சிறந்த வாடிக்கையாளர்கள் சேவை .புதிய வழிகளின் மூலம் வணிக வளர்ச்சி மற்றும் வணிக செயல்முறைகளில் தகவல் தொழில் நுட்பம் என்ற நோக்கத்தோடு பல்வேறு நிறுவனங்களோடு நமது துறை கைகோர்க்க தொடங்கியது .இதன் அடிப்படையில் தான் CSI பணிகளை TCS நிறுனத்தோடு ஒப்பந்தம் செய்துகொண்டது .இதில் COUNTER-BACKOFFICE =ACCOUNTS-HR MANAGEMENT உள்ளிட்ட பணிகள் இதில் அடங்கும் .நோக்கம் நல்ல நோக்கம் தான் .ஆனால் அதை செயல்படுத்தியதில் உள்ள குறைபாடுகளை களைவதற்கு நிர்வாகம் எனோ தயக்கம் காட்டுகிறது .
                  இதே போல் தான் இன்போசிஸ் நிறுவனத்தோடு FINACLE ,MCCAMISH மற்றும் ATM பணிகளை செய்திட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது நெட்ஒர்க் சர்வீஸுக்கு SIFY நிறுவனம் RICT க்கு M/S TCIL என கைகோர்த்துள்ளது .ஒப்பந்தம் போடும்பொழுது இருந்த பணி நிலைமை அதை அமுல்படுத்தும் போது நிலவிய பணி அளவு அதை அமுல்படுத்திடும் போது நிச்சயம் பன்மடங்காக அதிகரித்திருக்கும் .இதனால் சேவை குறைபாடு ஏற்படுகிறது .பொதுமக்கள் நம்மீது கொண்டிருந்த நம்பிக்கை மெல்லமெல்ல குறைய தொடங்குகிறது .ஊழியர்களும் குறித்த நேரத்தில் பணிகளை முடிக்கமுடியாமல் ஒருவித மண உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் .
               ஆக நமது நோக்கம் வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவை தடைபடாமல் கிடைக்கவேண்டும் என்றால் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் 
ஊழியர்கள் இயல்பான சூழலில் பணியாற்ற நெட் ஒர்க் பிரச்சினை சீர்படவேண்டும் .இவைகளை கருத்தில்கொண்டு நிர்வாகமும் கொள்கை முடிவுகளை எடுக்கும் பொழுது தொழிற்சங்கங்களிடமும் கருத்துக்களை கேட்டறிய வேண்டும் .
சேவைகளை பெருக்க தேவையான ஒத்துழைப்பை நல்க என்றும் நாங்கள் துணைநிற்போம் .
                                கோரிக்கைகளில் தெளிவு 
                                   போராட்டத்தில் உறுதி 
                                பேச்சுவார்த்தையில் உண்மை இவைகள் தான் தொழிலாளி வர்க்கத்தின் வெற்றிக்கு அடையாளங்கள் .நன்றி 
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Friday, June 14, 2019

அன்பார்ந்த தோழர்களே !
                                 LSG பதவி உயர்வு பட்டியல் -
1. LSG பதவி உயர்வின் அடுத்தப்பட்டியல் மாநில நிர்வாகத்தால் 12.06.2019 அன்று வெளியி டப்பட்டுள்ளது .மொத்தம் 237 பேர்களில் நமது கோட்டத்தில் 12 தோழர்கள் பதவி உயர்வு பெறுகிறார்கள் .அவர்களுக்கு கோட்ட சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள் ..தோழர்கள்1. S .ராமச்சந்திரன் 2.V.சரவணன் 3.A .சுப்ரமணியன் 
4.P .பார்வதி 5.R .எட்வர்ட் பொன்னையா 6.A .ரசூல் 7.J.பிரேமலதா 
8.M .ராம் சித்ரா 9.P .பாலசுப்ரமணியன் 10.P .அண்ணாமலை 
11.S .ஆனந்த கோமதி 
2. நமது சங்கத்தின் 32 வது அகிலஇந்திய மாநாடு தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத் பெருநகரத்தில் வருகிற அக்டோபர் 20ம் தேதி முதல் 22ம் தேதிவரை நடைபெறுகிறது .வரவிரும்பும் தோழர்கள் இன்றே தயாராவீர் .விரிவான பயண விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் .
.3.நமது கோட்டத்தில்  1986 க்கு முந்தைய தோழர்களுக்கு பயிற்சி காலத்தை TBOP /BCR பதவி உயர்விற்கு எடுப்பது சம்பந்தமாக DPC  கோவில்பட்டியில் இன்று கூடுகிறது .ஏற்கனவே பலமுறை ஒத்திவைக்கப்பட்ட கமிட்டி இன்று கூடுவது மகிழ்ச்சியே !.
          4.GDS TO PA தேர்விற்கு விண்ணப்பிக்க இன்று கடைசிநாள் .நமது பகுதி GDS ஊழியர்களுக்கு இதை நினைவூட்ட கேட்டுக்கொள்கிறோம் .
           5..RULE 38 யின் கீழ் தோழியர் துளசி அவர்கள் சேலம் கோட்டத்தில் இருந்து அனுவிஜய் அலுவலகத்தில் JOIN செய்துள்ளார்கள் .அவர்களை நெல்லை NFPE வாழ்த்திவரவேற்கிறது .
          6..எழுத்தர்களுக்கான INDUCTION இரண்டாவது BATCH  பயிற்சிகள் 17.06.2019 அன்று தொடங்குகிறது .நமது கோட்டத்தில் இருந்து தோழர் நாராயணன் PA களக்காடு அவர்கள் பயிற்சிக்கு செல்கிறார்கள் .அதே போல் முதல் BATCH பயிற்சி முடித்த தோழர்கள் நேற்று பணியில் சேர்ந்துவிட்டார்கள் .அவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் .
             7.மாநில சங்க பத்திரிக்கைக்கு இதுவரை 25 தோழர்கள் பணம் அனுப்பியுள்ளார்கள் .சங்கர்நகர் மற்றும் மஹாராஜநகர் தோழர்கள் முழுமையாக செலுத்தியுள்ளார்கள் .விடுபட்ட தோழர்கள் விரைந்து அனுப்பும் படி கேட்டுக்கொள்கிறோம் .பாளையம்கோட்டை தோழர்கள் நமது செயல் தலைவர் தோழர் கண்ணன் மற்றும் தோழியர் ஹைருனிசா பேகம் இவர்களில் யாரிடமாவது கொடுக்கவும் .நமது இலக்கு குறைந்தது 100 என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் 
           நன்றி .தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Thursday, June 13, 2019

GDS ஊழியர்களுக்காக நடைபெறும் இலாகா தேர்விற்கு நமது கோட்ட சங்கம் சார்பாக நடைபெறும் பயிற்சி வகுப்புகளை அலுவலக வளாகத்தில் நடத்த அனுமதி கேட்டு கோட்ட சங்கம் எழுதியுள்ள கடிதம் உங்கள் பார்வைக்கு 

NFPE
          ALL INDIA POSTAL EMPLOYEES UNION GR-C                         TIRUNELVELI DIVISIONAL BRANCH
TIRUNELVELI—627002
No.P3-LGO  / dated at Palayankottai- 627002 the 13.06.2019
To

The Sr. Supdt. of Post Offices,
Tirunelveli Division
Tirunelveli-627002

Sir,
            Sub:- Limited Departmental Competitive Examination for selection of                Postal Assistant from the GDS staff-Conducting coaching /                      contact class for the candidates appearing the above                              examination-seeking provision of accommodation for                                  conducting the above classes-requesting of-reg  
       
      The Divisional Administration is well aware that the Department is          going to conduct Limited Departmental Competitive Examination for selection    of  Postal  Assistant from among  the GDS staff.

          In Tirunelveli Division,  our Divisional Union  has decided to  conduct coaching / contact classes for the  eligible candidates appearing the above   examination during evening hours from 16.00 Hours to 20.00 hours  on working days.

                   It would be very helpful, if an accommodation is provided either  at      Palayankottai HO or at PSD Tirunelveli premises, so that the  classes could   be  conducted from 17.06.2019 to 12.07.2019.  

                   As such, the issue may kindly considered in the interest of our staffs .
                                        With profound regards.
                                                                   Yours Faithfully,

                                                                   /S.K.JACOB RAJ/


Wednesday, June 12, 2019

                                        நெல்லை செய்திகள் 
தேனி கோட்டத்தில் இருந்து நமது கோட்டம் விஜயநாராயணத்தில் SPM ஆக பொறுப்பேற்றிருக்கும் தோழியர் செல்வி அவர்களை NELLAI NFPE வாழ்த்தி வரவேற்கிறது 
                                          நினைவூட்டுகிறோம் 
நமது மாநிலச்சங்க பத்திரிகையான தமிழக அஞ்சல் முழக்கம் தேவைப்படுவோர் ரூபாய் 100 மட்டும் நமது கோட்ட சங்க POSB  0027867754 கணக்கில் செலுத்திவிட்டு தகவல்களை கோட்ட செயலருக்கு தெரிவிக்கவும் .நேற்று மஹாராஜநகர் மற்றும் டவுண் அலுவலகத்தில் இருந்து ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள் .நீங்களும் இன்றே அனுப்பிடுவீர் !
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Tuesday, June 11, 2019

                                                         சென்னை    C A T  மதுரைக்கு வரவேண்டும் -அதற்காக உங்கள் ஆதரவை தர வேண்டும் 
சென்னை  உயர்நீதிமன்றத்தின் மத்திய நிர்வாயக தீர்பாயகம்  மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு CIRCUIT BENCH ஆக வரவேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் சில வரிகள் உங்களுக்காக ........
     பல ஆண்டுகளுக்கு முன்பு  உயர்நீதிமன்ற கிளை மதுரைக்கு கொண்டுவரவேண்டும் என்ற போது அதை எதிர்த்தவர்கள் உண்டு ஆதரித்தவர்கள்உண்டு .  இறுதியாக  2004 ம் ஆண்டு மதுரையில் உயர்நீதிமன்ற கிளை செயல்படத்தொடங்கியது .இதில் 13 மாவட்டங்கள் அதாவது கன்னியாகுமரி திருநெல்வேலி தூத்துக்குடி மதுரை திண்டுக்கல் ராமநாதபுரம் விருதுநகர் தேனி சிவகங்கை போக மத்திய தமிழகத்தில் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருச்சி கரூர் மாவட்டங்களை உள்ளடக்கி தனது அதிகார எல்லையை வரையறுத்துக்கொண்டது .அதன் அடிப்படையில் தான் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மத்திய நிர்வாயக தீர்பாயகம்  (CAT ) பெஞ்ச் வரவேண்டும் என்றகோரிக்கையும் எழுந்தது .அகிலஇந்திய அளவிலே 17 மத்திய நிர்வாயக தீர்பாயகம்  தனக்குள் 20 CIRCUIT பெஞ்ச் என தனது அதிகார எல்லையை பகிர்ந்தளிக்கும் போது ஏன் தென் மற்றும் மத்திய தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களுக்காக CAT மதுரைக்கு வருவதில் என்ன தடை இருக்கிறது என்று வழக்கறிஞர்களே நீதிமன்றம் சென்றனர் .ஆனால் துரதிஷ்ட்டமாக சென்னை உயர்நநீதிமன்றம் மதுரை கிளைக்கு CAT செயல்பட தடை விதித்தது. .தடை விதிக்கப்பட்டு கிட்டத்தட்ட 13 வருடங்களுக்கு மேலாகியுள்ள நிலையில் மீண்டும் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் CAT க்கு ஒரு CIRCUIT பெஞ்ச் தேவை என்ற எண்ணம் பரவலாக எல்லாரது மனதிலும் எழுந்துள்ளது இந்த தடையை நீக்கிட வேண்டும் என எண்ணங்கள் இருந்தாலும் அதை முன்னெடுத்து செல்ல தேவைப்படும் செலவுகள் கருதியோ என்னவோ இந்த வழக்கு கிடப்பிலே கிடக்கிறது .இது குறித்து ஓய்வூதியர் சங்க பொதுச்செயலர் தோழர் K.ராகவேந்திரன் அவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தபோது இதே தடையை காரணம் காட்டி 22.08.2015 அன்று அரசு பதில் அளித்துள்ளது .இன்னும் எத்தனை ஆண்டுகள் என்றாலும் தடை இருந்துகொண்டே இருக்கும் .மீண்டும் ஏதாவது அமைப்பு அல்லது தொழிற்சங்கங்கள் இந்த வழக்கில் தங்களையும் வாதியாகஇணைத்து கொண்டு வழக்கை ஏற்றி நடத்தினால் மட்டுமே தீர்வு கிடைக்கும் .இதற்காக நமது மண்டலத்தில் உள்ள அமைப்புகள் இணைந்து செயல்படவேண்டிய சூழல் உருவாகவேண்டும்  .இன்றைய நிலையில் சென்னை CAT யில் நமது பகுதி ஊழியர்களின் வழக்கே சுமார் 500 யை  தாண்டும் .இது அஞ்சல் துறைக்கு  மட்டும் உள்ள எண்ணிக்கை .இதர துறைகளை சேர்த்து கணக்கிட்டால் ஆயிரத்தை தாண்டும் .
ஆகவே ஏற்கனவே நீதி துறைக்கு சம்பந்தமுள்ள முன்னனி தோழர்கள் குறிப்பாக முன்னாள் R3 மாநில தலைவர் தோழர் தியாகராஜன் முன்னாள் P3 மண்டல செயலர் அண்ணன் சின்ராஜ் போன்றவர்கள் நிலுவையில் உள்ள வழக்கில் நாமும் IN PLIED ஆக ஆலோசனைகளை  வழங்கிட கேட்டுக்கொள்கிறோம்  
   தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ்_ SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
                 கோடை வெயில் தணிந்து நேற்று முதல் இதமான காற்று -மிதமான மழை என நமது(நெல்லை )  ஊரும் உள்ளமும் குளிர தொடங்கிவிட்டது .வழக்கத்தை விட இந்த ஆண்டு அக்கினி தனது கோர முகத்தை காட்டியிருந்தது .எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு உண்டு -எல்லாருக்கும் நல்  விடியல் உண்டு என்ற உன்னத கோட்பாட்டின் அடிப்படையில் உறுதியோடு பயணிப்போம் .
                                                    முக்கிய செய்திகள் 
   பாளையம்கோட்டை தலைமை அஞ்சலக வளாகத்திற்குள் அலுவலக குடியிருப்பு கட்ட வேண்டும் என்ற நமது கோரிக்கை  
துளிர்க்க ஆரம்பித்துள்ளது .சென்றவாரம் திருச்சியில் இருந்து வந்த AE (CIVIL) அவர்கள் இது குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள் .
1.VM சத்திரத்தில் உள்ள குடியிருப்புகளை போல ஊழியர்கள் குடியிருக்காமல் இருந்திடக்கூடாது .இருக்கின்ற சுமார் 40 சென்ட் இடத்தில அடுக்குமாடி திட்டத்தில் சுமார் 40 வீடுகள் என்றால் குறைந்தபட்சம் 50 ஊழியர்களாவது அங்கு குடியிருக்க தயாராகவுள்ளார்கள் என்பதனை உறுதிப்படுத்தவேண்டும் .குடிநீர் பிரச்சினை தட்டுப்பாடில்லாமல் தடையின்றி கிடைத்திட உறுதிப்படுத்திடவேண்டும் போன்ற கருத்துக்களை POSITIVE ஆக  சொல்லிவிட்டு சென்றுள்ளார்கள் .கோட்ட அலுவலகத்தில் இருந்து PROPOSAL சென்றவுடன் நாமும் நமது பங்கிற்கு தீவிர முயற்சிகளை மேற்கொள்ளவிருக்கிறோம்  .
                                     CGHS  திட்டத்தை மூன்று மாவட்டங்களுக்கு விரிவு படுத்த வேண்டும் என்ற நமது புதிய கோரிக்கை எழுந்துள்ளது .ஏன் அதை குறிப்பிட்ட 8 கிலோ மீட்டர் தூரத்திற்குள் சுருக்கவேண்டும் .திருநெல்வேலி கன்னியாகுமரி தூத்துக்குடி மாவட்டங்கள் ( நம்மை பொறுத்தவரை திருநெல்வேலி -நாகர்கோவில் -தூத்துக்குடி -கோவில்பட்டி கோட்டங்கள் ) என விரிவு படுத்தினால் அனேக ஊழியர்கள் மத்தியஅரசு ஓய்வூதியர்கள் பயன்பெற முடியும் .இதையும் முக்கிய கோரிக்கையாக மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனம் சார்பாக எடுக்கவிருக்கிறோம் .
                                                  இதர செய்திகள் 
பணியின் போது GDS ஊழியர்கள் இறந்தால் அவர்களது குடும்பத்தில் தகுதியுள்ள ஒருவருக்கு வேலை விரைந்து வழங்கிட நமது CPMG அலுவலகம் 14.04.2019 அன்று ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது .அதன்படி இறந்த ஊழியர்களின் குடும்பத்தில் உள்ள தகுதி உள்ள ஒருவருக்கு 15 நாட்களுக்குள் காலியாக உள்ள இடத்தை குறிப்பிட்டு அவர்களிடம் விருப்பமனுவை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது .
         
                     நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா  கோட்ட செயலர்கள் நெல்லை 

Monday, June 10, 2019

அன்பார்ந்த தோழர்களே !
நமது மாநிலச்சங்க பத்திரிகையான தமிழக அஞ்சல் முழக்கம் தேவைப்படுவோர் ரூபாய் 100 மட்டும் நமது கோட்ட சங்க POSB  0027867754 கணக்கில் செலுத்திவிட்டு தகவல்களை கோட்ட செயலருக்கு தெரிவிக்கவும் .
நன்றி .தோழமையுடன் --ஜேக்கப் ராஜ் --

      அன்பார்ந்த தோழர்களே !
                                  
                   நமது அஞ்சல் மூன்று  தமிழ் மாநிலச்சங்கத்தின் சார்பாக இருமாதத்திற்கொருமுறை பத்திரிக்கை ஒன்றை வெளியிட மாநிலச்சங்கம் முடிவெடுத்துள்ளது ..இதழ் ஒன்றின் விலை ரூபாய் 10 மட்டுமே .நமது கோட்டசங்கத்தின் மூலம் எத்தனை இதழ் வேண்டும் என்ற விவரத்தை ஓரிருநாளில் நாம் தெரிவிக்கவேண்டியுள்ளது .தொழிற்சங்க செய்திகளை அறிந்துகொள்ள ஆர்வமுள்ள தோழர்கள் தங்கள் பெயர்களை கோட்ட செயலருக்கு வாட்ஸாப்ப் மூலமாகவோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க கேட்டுக்கொள்கிறோம் .ஏற்கனவே    நம்மிடம் உழைக்கும் வர்க்கம் மற்றும் திரு .மாலிக் அவர்களின் கலங்கரைவிளக்கம் ஏடுகள் வந்துகொண்டிருக்கின்றன .இருந்தாலும் மாநிலச்சங்கத்தின் அதிகாரபூர்வ ஏடான தமிழக அஞ்சல் முழக்கம்  பத்திரிக்கைக்கும் உங்கள் ஆதரவை நல்கும் படி கேட்டு கொள்கிறோம் 
                                    போஸ்டல் கிளார்க் 
அண்ணன் பாலு அவர்கள் மாநில செயலராக இருந்த காலத்தில் பல்வேறு தடைகளுக்கு இடையில் வெளிவந்த பத்திரிக்கை தான்  போஸ்டல் கிளார்க் எனும் மாத பத்திரிக்கை .அஞ்சல் ஊழியர்களின் கோரிக்கைகளை வென்றெடுக்கும்  போர்முரசாக  திகழ்ந்தது .கோட்ட மட்ட  அதிகாரிகள் முதல் மாநில மட்ட பெரிய அதிகாரிகளின் அதிகார அத்துமீறல்களை அடக்குமுறைகளை மிக துணிச்சலோடு வெளிக்கொண்டு வந்த பத்திரிக்கை தான் போஸ்டல் கிளார்க்  பத்திரிக்கை .நம்மைவிட பல அதிகாரிகள் மிகமிக ஆவலோடு படித்த பத்திரிக்கை அது .இந்த இதழில் எந்த அதிகாரி சிக்கியிருக்கிறார் அடுத்த இதழில் யார் என்ற அச்சம் கலந்த ஆர்வத்தோடு அதிகாரிகளும் வாங்கி படித்த பொற்காலம் அது .அஞ்சல் மூன்று ஊழியர்கள் தனி போர்க்கோலம் பூண்ட புரட்சி நாட்கள் அது .
                       இருமாதந்திர பேட்டி -நான்கு மாத த்திற்கொருமுறை பேட்டி என வாய்ப்பு கிடைக்கும் இடத்திலெல்லாம்  ஊழியர்நலனுக்காக களமாடிய சங்கம் -ஒட்டுமொத்த இளையவர்களின் நெஞ்சங்களை களவாடிய சங்கம் நமது அன்றைய மாநிலச்சங்கம் என்பதை நினைத்து பார்க்கிறேன் ..
                               மீண்டும் அந்த வரலாறு திரும்பவேண்டும் -அஞ்சல் மூன்றின் பிரச்சினைகள் தீர்வதற்கு எழுத்து மட்டுமல்ல எழுச்சி கலந்த இயக்கம் வேண்டும் என்று நிரூபித்த தலைமை அது 
50% Writing 50% Fighting என 100% வெற்றிகண்ட காலம் அது 
.ஆம் அந்த திசையில் நாமும் பயணிப்போம் .
                          வீரமும் -துணிச்சலும் அடுத்தவர் ஊட்டுவதல்ல -அது 
                          பிறப்பின் பாக்கியம் -இயல்பாய் வளர வேண்டியது 
                          இறுதிவரை உறுதியாய் தொடர வேண்டியது .
                                              தேனி கோட்ட மாநாடு 
                        தேனி கோட்ட புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள் 
09.06.2019 அன்று நடைபெற்ற தேனி கோட்ட மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் உமாபதி செயலர் பரமசிவம் நிதிச்செயலர் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கும் மாநாட்டை முன்னின்று நடத்தி காட்டிய தோழர் செல்லத்துரை மோகன் முன்னாள் தலைவர் நாகேந்திரன் அவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் 
வாழ்த்துக்களுடன் SK ஜேக்கப் ராஜ் நெல்லை 

Saturday, June 8, 2019

அன்பார்ந்த தோழர்களே !
 GDS TO PA தேர்விற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை தமிழக அஞ்சல் நிர்வாகம்  அறிவித்துள்ளது .
தேர்வு நாள் -14.07.2019 (ஞாயிறு )
விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய கடைசிநாள் 14.06.2019
தேர்வு மையங்கள் --சென்னை -கோவை -மதுரை -மற்றும் திருச்சி 
கல்வி தகுதி -10+2
சேவை தகுதி --GDS பணியில் 5 வருடசவை (5 YEARS AS ON 1TH APRIL OF THE RESPECTIVE VACANCY YEAR 
வயது - OC -30 OBC -33 -SC /ST 35 
 திருநெல்வேலி கோட்டத்தில் இந்த தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் 16.06.2019 முதல்நடத்தப்படுகிறது .புதிய பாடத்திட்டத்திற்கான Material அன்றே வழங்கப்படும் .ஆர்வமுள்ள தோழர்கள் நமது பயிற்சியாளர் M .பாலசுப்ரமணியம் (RETD ASP) அவர்களை (9442149339)தொடர்புகொள்ளலாம் .இதுபோக LGO தேர்விற்கு தயாராகும் தபால்காரர் /MTS தோழர்களும் பங்குபெறலாம் . \மேலும் தொடர்பிற்கு கோட்ட சங்க நிர்வாகிகளை தொடர்பு கொள்ளலாம் .ஜேக்கப் ராஜ் 9442123416-8610067106 
SK .பாட்சா 8667422851
ஏனைய தேர்வுகள் 
தபால்காரர் தேர்வு -21.07.2019
GDS TO MTS28.07.2019
LGO =04.08.2019
தேர்விற்கு தயாராகும் அனைத்து தோழர்களுக்கும் NELLAI NFPE தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது .
தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 


Friday, June 7, 2019

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
     மாத ஊதியம் -ஓய்வூதியம் கிடைப்பதில் தொடர்ந்து ஏற்படும் காலதாமதத்தை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் 
National Federation of Postal Employees
All India Postal & RMS Pensioners Association

HOLD JOINT PROTEST DEMONSTRATIONS ALL OVER INDIA
NFPE – AIPRPA JOINT CALL
18.06.2019

 நாள் -18.06.2019  செவ்வாய் கிழமை 
நேரம் -மாலை 6 மணி 
இடம் -பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு 

 CBS வந்தது மணிக்கணக்கில் பொதுமக்கள் காத்திருந்தார்கள் --CSI வந்தது அப்பொழுதும் பொதுமக்கள் காத்துக்கிடந்தார்கள் .சென்னை ஆடிட் அலுவலகம் மூலம் தான் சம்பளம் உள்ளிட்ட பணபயன்கள் என்றார்கள் நாள் கணக்கில் அஞ்சல் ஊழியர்களும் -ஓய்வூதியர்களும் காக்க வைக்கப்பட்டார்கள் .ஏதோ இனாம் கேட்டு காத்திருப்பதுபோல் ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியர்கள் ஏக்க பெருமூச் ச்சோடு காத்திருக்கும் சோகம் தொடர்ந்தது .
                      இலாகா ஊழியர்களுக்கும் ஊதியம் ஒருநாள் கழித்தும் GPF போன்றவைகள் பத்து முதல் பதினைந்து நாட்கள் கழித்தும் கிடைக்க பெற்றன .ஒவ்வொரு மாதமும் 20 ம் தேதியோடு அப்லோட் செய்யக்கூடாது என்ற ஆடிட் அலுவலக உத்தரவால் CEA மற்றும் TA பில்கள் கிடைப்பதில் ஏற்படும் காலதாமதம் -டெபுடேஷன்க்கு அனுப்பப்படும் ஊழியர்களுக்கு கிடைக்கவேண்டிய அட்வான்ஸ் டெபுடேஷன் முடிந்தபிறகும் கிடைப்பதில்லை .
                         மாத இறுதி நாளென்று சம்பளமும் -ஓய்வூதியமும் கிடைக்கவேண்டும் என்ற கட்டாயம் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது .இதற்கு காரணமான இன்போசிஸ் நிறுவனத்தோடு அஞ்சல் வாரியம் ஏன் இவ்வளவு இணக்கத்தோடு செயல்படவேண்டும் என்பது புதிராகவே உள்ளது .இப்படி ஒவ்வொரு மாதமும் சம்பளம் மற்றும் பென்ஷன் கிரெடிட் கொடுப்பதில் உள்ள காலதாமத்தை CPMG அவர்களின் கவனத்திற்கு கொண்டுசென்றால் அவர்கள் வழக்கமான பதிலாக இதுகுறித்து DIRECTORATE க்கு எழுதியுள்ளோம் என்கிறார்கள் .
                    அஞ்சல் நிர்வாகத்தின் இந்த  மெத்தன போக்கினை கண்டித்தும் இந்த விஷயத்தில் அஞ்சல் வாரியத்தின் உடனடி தலையீடு தேவை என கருதியும் நமது NFPE -ஓய்வூதியர்சங்கம் கூட்டாக இணைந்து வருகிற 18.06.2019 அன்று அகிலஇந்திய அளவில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்திட அறைகூவல் விடுத்துள்ளன .அதனை ஏற்று நமது நெல்லை கோட்டத்திலும் நடைபெறும் இணைந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனைவரும் வாரீர் ! என அழைக்கிறோம் .
                  உங்கள் கடிதங்கள் கருணைமனுக்கள் விண்ணப்பங்கள் ஒருநாளும் தீர்வினை தந்திடாது .ஒன்றுபட்டு போராடினால் மட்டுமே நாம் நமது கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும் என்ற நமது தலைவர் தோழர் பாபு தாரா பாதா அவர்களின் முழக்கத்திற்கேற்ப ஒன்றுபடுவோம் !
போராடுவோம் !வெற்றி  பெறுவோம் .
தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 



Tuesday, June 4, 2019

நமது துறை அமைச்சர்களை பற்றி ---
 பழைய நாட்களில் நமது துறைக்கு அமைச்சராக பொறுப்பேற்றவர்கள் எல்லாம் ஒரு தனித்துவம் பெற்ற அமைச்சராகவும் அவரவர் சார்ந்திருந்த கட்சிகளில் முக்கிய தலைவர்கள் ஆகவும் விளங்கினார்கள் .அவர்களில் முக்கியமானவர்கள் ஜெகஜீவன் ராம் -லால் பகதூர் சாஸ்திரி -சங்கர் தயாள் சர்மா -ஜார்ஜ் பெர்னாண்டஸ் --இவர்கள் எல்லாம் நமது துறையில் முன்னேற்றங்களை கொண்டுவந்தவர்கள் .1980 க்கு பிறகு அமைச்சராக பொறுப்பேற்ற ஸ்டிபன் காலத்தில் தான் RMS ரன்னிங் சேக்ஷன் ஒழிக்கப்பட்டு மெல்லமெல்ல துறையின் முக்கிய துவத்தை குறைக்க தொடங்கினார்கள் .அதன்பிறகு வந்த சுக்ராம் (1993) பாஸ்வன் (1998) சுஷ்மா (2000) போன்றவர்கள் காலத்தில் நாம் நடத்திய காலவரையற்ற வேலைநிறுத்தங்கள் எல்லாம் பேச்சுவார்த்தைகளின் அடிப்படையிலும் நம்பிக்கையின் அடிப்படையிலும் முடிக்கப்பட்டதே தவிர முன்னேற்றங்கள் ஏதும் இல்லை .அதை தொடர்ந்து தமிழகத்தை சார்ந்த அமைச்சர்கள்  தயாநிதி மாறன் --ராசா போன்றவர்களாலும் நமது கோரிக்கைகளில் முன்னேற்றங்கள் என்பது பெரிதாகஇல்லை .பிரமோத் மகாஜன் )(2001-2203) காலங்களில் தமிழகத்தில் 150 ADHOC ஊழியர்கள் பணி ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் அன்றைய பாராளுமன்ற உறுப்பினர் திரு .வைகோ அவர்கள் மூலம் 150 அஞ்சல் ஊழியர்கள் மீண்டும் பணிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்கள் .அதில் அன்றைய நமது தமிழ் மாநிலச்சங்கத்தின் பங்கும் சிறப்பானது .இப்படி வரலாற்று பின்னணி கொண்ட நமது துறைக்கு 
17 வது மக்களவை தேர்தலுக்கு பிறகு அமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில் நமது துறைக்கு மீண்டும் மாண்புமிகு ரவிசங்கர் பிரசாத் அவர்கள் கேபினட் அமைச்சராகவும்(கூடுதல் பொறுப்பு ) இணை அமைச்சராக மாண்புமி கு     சஞ்சய் சம்ரோ   அவர்களும் பொறுப்பேற்றுள்ளார் .
நமது துறைக்கு அமைச்சராக பொறுப்பேற்கும் திரு .ரவிசங்கர் பிரசாத் அவர்கள் கடந்த முறை போலவே சட்டத்துறை அமைச்சராகவும் நமது துறைக்கு கூடுதல் பொறுப்பேற்றும் இருக்கிறார் .இவர் .பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் .பாட்னா மக்களவை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் .முன்னதாக உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார் .அவருடைய முகவரி 21, Mother Teresa Crescent, New Delhi 110011
Telephone : 23793228, 23793691, Mobile: 9868181730
---------------------------------------------------------
இணை அமைச்சர் சஞ்சய் சம்ரோ அவர்கள் மகாராஷ்டிரா மாநிலம் அகோலோ மக்களவை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் .இவர் ஒரு BE பட்டதாரி ஆவார் .இவருடைய முகவரி B-701, MS Flats, BKS Marg, New Delhi Tels. (011) 23795656, 9822566673, 9868180257 (M)
 இந்த காலங்களிலாவது நமது புதிய அமைச்சர்கள் நமது துறையின் முக்கியதுவத்தை அறிந்து தடம் பதிக்க வேண்டும் என விரும்புகிறோம் .தோழமையுடன் நெல்லை NFPE 

Saturday, June 1, 2019

அன்பார்ந்த தோழர்களே !
 கடந்த மாதாந்திர பேட்டியில் அறிவித்தபடி 1986 க்கு முன் பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு பயிற்சிகாலத்தை TBOP /BCR பதவி உயர்விற்கு சேர்க்கும் பணி  துரித வேகத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது .இதன்  தொடர்ச்சியாக திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்தில்  இருந்து கீழ்கண்ட ஊழியர்களுக்கன தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன .ஆகவே ..திட்டமிட்டபடி இம்மாத மத்தியில் DPC கூடுகிறது
Counting of training period for financial upgradation under TBOP / BCR to who had undergone PA Induction trianing prior to 1986 - reg.           
  1. M.P. Vijaya, PA, Tirunelveli HO
  2. S. Vijayarani, SPM, Jawaharnagar SO
  3. M. Muthulakshmi, SPM, Maharajanagar SO
  4. R. Rajakumari, LSG TRR, Melapalayam SO
  5. S. Punkumari, LSG TRR, TVL Pettai SO
  6. KR Kannan, PA, Tirunelveli HO
  7. R. Ramathal, LSG TRR, Tirunelveli Collectorate SO
  8. P. Kumari, LSG TRR, Tirunelveli HO
  9. S. Rajendran, LSG APM, Tirunelveli HO
  10. S. Kanagasabapathy, LSG TRR, TVL Town SO
  11. N. Meenakumari, LSG TRR, Sankarnagar SO
  12. A.Pasumathi,APM (A/Cs),Tirunelveli HO
  13. N.Palanisivamaran,Supervisor,Tirunelveli HO
  14. S.Subramanian,TR,Vannarpettai SO
  15. S.Venkateswaran,Postmaster,Tirunelveli HO                                    நன்றி தோழமை வாழ்த்துக்களுடன் SKJ 


அன்பார்ந்த தோழர்களே !
                                   நமது கோட்ட அளவிலான டெபுடேஷன் குறித்த மேலும் ஒரு விளக்க கடிதம் .இது போஸ்ட் மாஸ்டர்களுக்கு மட்டுமல்ல நமது தோழர் /தோழியர்கள் ஒவ்வொருவரும் தெரிந்திருக்கவேண்டிய ஒன்று .
 பாரபட்சம் -சிலருக்கு சலுகை இவைகளை எதிர்த்திட தயாராகுவீர் !
இதில் ஏதேனும் மீறுதல் இருந்தால் உடனே நிர்வாகத்திற்கும் /கோட்ட சங்கத்திற்கும் தெரிவிக்கவும் .தோழமையுடன் SKJ 

அன்பார்ந்த தோழர்களே !
   நேற்று (31.05.2019 ) நடந்த மாதாந்திர பேட்டியில் விவாதிக்கப்பட்ட விசயங்களில் சில ....முழு விபரங்கள் நடைமுறை குறிப்புகள் வந்தவுடன் தெரிவிக்கப்படும் .சுமார் 25 க்கும் மேற்பட்ட பிரச்சினைகள் கிட்டத்தட்ட 1.40 மணிநேரம் நடந்த பேட்டி என்பது குறிப்பிடத்தக்கது .
1.நமது கோட்டத்தில் உள்ள அனைத்து ATR /TR பதவிகளை நிரப்பிட புதிய விருப்பமனுக்கள் கோரப்படும் .
2.PA INDUCTION பயிற்சிக்கு செல்பவர்களுக்கு அங்கு கட்டவேண்டிய தொகை +DA  முன்பணமாக வழங்கப்படும் 
3.அனைத்து SO களுக்கும் சிறுசேமிப்பு முகவர்களுக்கான NSI வழிகாட்டுதல்களை பின்பற்ற அறிவுறுத்தப்படும் .
4.CASH HANDLING ALLOWANCE இலாகாவின் 22.01.2019 உத்தரவு படி வழங்கப்படும் .இதற்கான STATISTICS வழங்குவது தொடர்பாக கோட்ட அலுவகலத்தில் இருந்து  சுற்றறிக்கை வெளியிடப்படும் .இதனால் ஜூலை 2017 முதல் TR/மற்றும் SPM(C&B) நிலுவை தொகை பெறுவார்கள் .
5.HSG 1 மற்றும் HSG II பதவிகளுக்கு ஏற்கனவே 21.12.2018 அன்று வெளியிடப்பட்ட விருப்ப கடிதங்கள் தொடர்பானஅறிவிப்பு ரத்து செய்யப்பட்டு புதிய அறிவிப்பு  வெளியிடப்படும் .
6.CEA 150 ஊழியர்களுக்கு சாங்க்ஷன் செய்யப்பட்டுள்ளது .நிர்வாக நடைமுறையினால் கிரெடிட் செய்யமுடியவில்லை .இந்த வாரத்தில் அனைவருக்கும் கிரெடிட் செய்யப்படுகிறது .மீதமுள்ள 30 பேருக்கும் படிப்படியாக BILL கள் சாங்க்ஷன் செய்யப்பட்டு அனுப்பப்படும் .
7.பாளையம்கோட்டை தலைமை அஞ்சலக பராமரிப்பு பணிகளுக்காக  ரூபாய் 3.70 சாங்க்ஷன் ஆகியுள்ளது .விரைவில் மண்டல அலுவலத்தில் இருந்து பணிகள் தொடங்கபடும் .
8.டெபுடேஷன் செல்பவர்களுக்கான முன்பணம் அதிகரித்து வழங்கப்படும் .ஏற்கனவே நிலுவையில் உள்ள TA தொகைகளுக்கு கூடுதல் ஒதுக்கீடு கேட்டு RO க்கு அனுப்பப்படும் .
9.DGL மற்றும் LRPA பட்டியலில் உள்ள குறைகள் சுட்டிக்காட்டப்பட்டது நிர்வாகமும் மிக வெளிப்படையாகவே LRPA பட்டியலில் இடையில் சில பெயர்கள் தவறுதலாக விடுபட்டத்தை .ஒத்துக்கொண்டு விரைவில் புதிய பட்டியல் வெளியிடப்படும் என்றுஏற்றுக்கொண்டது  பாராட்டுதலுக்குரியது .பொதுவாக நிர்வாக தவறுகளை அவ்வளவு எளிதாக எந்த அதிகாரிகளும் ஏற்றுக்கொள்ள தயங்குவார்கள் .நமது அதிகாரிகள் அதற்கு நமது SSP  அவர்கள் விதிவிலக்கு என்பது உள்ளபடியே சிறப்பான அம்சம்தான் .
10.இரண்டு தலைமை அஞ்சலக MDW மாற்ற 15 நாட்களுக்குள் அனுப்பிட தலைமை அஞ்சலக அதிகாரிகளுக்கு உத்தரவு இடப்படும்
11.TBOP /BCR பதவியுர்வுக்கு INDUCTION TRAINING காலத்தை சேர்ப்பதற்கான DPC ஜூன் மத்தியில் கூடுகிறது 
12.சங்கர்நகர் SO க்கு வருகிற திங்கள் கிழமை எலெக்ட்ரிசன் அனுப்பப்பட்டு ஓரிரு தினங்களுக்குள் புதிய இடத்தில் அலுவலகம் 
செயல்படும் .இத்தனை காலம் பல்வேறு இடர்களுக்கு மத்தியில் பணியாற்றிய தோழர்கள் இனி புதிய சூழலில் பணியாற்றுவார்கள் .
13.பாளையம்கோட்டை தோழியர்களுக்கான டைனிங் /ரெஸ்ட் ரூம் கான வரைவு திட்டங்கள் அனுப்பப்பட்டுள்ளன .முதல் தளத்தில் உள்ள பயிற்சி மையத்தில் அவர்களுக்கான இடமும் பயிற்சிமையம் போஸ்ட்மாஸ்டர் QUARTERS க்கு மாற்றப்படவுள்ளன .
14.தலைமை அஞ்சலகத்தில் ஜெனரல் பிரிவு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை மாற்றம்செய்திட வேண்டும் என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது .
16.நிலுவையில் உள்ள LTC  தொகை உரிய இருவருக்கு ஒருவாரத்திற்குள் திருப்பி கொடுக்கப்படும் 
15.இறுதியாக நமது கோட்ட சங்க பொருளாளருக்கு உடனே IMMUNITY அடிப்படையில் RELIEVE செய்யப்படுவார் என்ற நல்ல செய்தியோடு பேட்டி இனிதே முடிவுற்றது ..
அஞ்சல்நான்கின் பிரச்சினைகள் குறித்தமுடிவுகள் நாளை பதியப்படும் 
         நன்றி .தோழமையுடன் 

SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை  

 அன்பார்ந்த தோழர்களே !
   நேற்று (31.05.2019 ) நடந்த மாதாந்திர பேட்டியில் விவாதிக்கப்பட்ட விசயங்களில் சில ....முழு விபரங்கள் நடைமுறை குறிப்புகள் வந்தவுடன் தெரிவிக்கப்படும் .சுமார் 25 க்கும் மேற்பட்ட பிரச்சினைகள் கிட்டத்தட்ட 1.40 மணிநேரம் நடந்த பேட்டி என்பது குறிப்பிடத்தக்கது .
1.நமது கோட்டத்தில் உள்ள அனைத்து ATR /TR பதவிகளை நிரப்பிட புதிய விருப்பமனுக்கள் கோரப்படும் .
2.PA INDUCTION பயிற்சிக்கு செல்பவர்களுக்கு அங்கு கட்டவேண்டிய தொகை +DA  முன்பணமாக வழங்கப்படும் 
3.அனைத்து SO களுக்கும் சிறுசேமிப்பு முகவர்களுக்கான NSI வழிகாட்டுதல்களை பின்பற்ற அறிவுறுத்தப்படும் .
4.CASH HANDLING ALLOWANCE இலாகாவின் 22.01.2019 உத்தரவு படி வழங்கப்படும் .இதற்கான STATISTICS வழங்குவது தொடர்பாக கோட்ட அலுவகலத்தில் இருந்து  சுற்றறிக்கை வெளியிடப்படும் .இதனால் ஜூலை 2017 முதல் TR/மற்றும் SPM(C&B) நிலுவை தொகை பெறுவார்கள் .
5.HSG 1 மற்றும் HSG II பதவிகளுக்கு ஏற்கனவே 21.12.2018 அன்று வெளியிடப்பட்ட விருப்ப கடிதங்கள் தொடர்பானஅறிவிப்பு ரத்து செய்யப்பட்டு புதிய அறிவிப்பு  வெளியிடப்படும் .
6.CEA 150 ஊழியர்களுக்கு சாங்க்ஷன் செய்யப்பட்டுள்ளது .நிர்வாக நடைமுறையினால் கிரெடிட் செய்யமுடியவில்லை .இந்த வாரத்தில் அனைவருக்கும் கிரெடிட் செய்யப்படுகிறது .மீதமுள்ள 30 பேருக்கும் படிப்படியாக BILL கள் சாங்க்ஷன் செய்யப்பட்டு அனுப்பப்படும் .
7.பாளையம்கோட்டை தலைமை அஞ்சலக பராமரிப்பு பணிகளுக்காக  ரூபாய் 3.70 சாங்க்ஷன் ஆகியுள்ளது .விரைவில் மண்டல அலுவலத்தில் இருந்து பணிகள் தொடங்கபடும் .
8.டெபுடேஷன் செல்பவர்களுக்கான முன்பணம் அதிகரித்து வழங்கப்படும் .ஏற்கனவே நிலுவையில் உள்ள TA தொகைகளுக்கு கூடுதல் ஒதுக்கீடு கேட்டு RO க்கு அனுப்பப்படும் .
9.DGL மற்றும் LRPA பட்டியலில் உள்ள குறைகள் சுட்டிக்காட்டப்பட்டது நிர்வாகமும் மிக வெளிப்படையாகவே LRPA பட்டியலில் இடையில் சில பெயர்கள் தவறுதலாக விடுபட்டத்தை .ஒத்துக்கொண்டு விரைவில் புதிய பட்டியல் வெளியிடப்படும் என்றுஏற்றுக்கொண்டது  பாராட்டுதலுக்குரியது .பொதுவாக நிர்வாக தவறுகளை அவ்வளவு எளிதாக எந்த அதிகாரிகளும் ஏற்றுக்கொள்ள தயங்குவார்கள் .நமது அதிகாரிகள் அதற்கு நமது SSP  அவர்கள் விதிவிலக்கு என்பது உள்ளபடியே சிறப்பான அம்சம்தான் .
10.இரண்டு தலைமை அஞ்சலக MDW மாற்ற 15 நாட்களுக்குள் அனுப்பிட தலைமை அஞ்சலக அதிகாரிகளுக்கு உத்தரவு இடப்படும்
11.TBOP /BCR பதவியுர்வுக்கு INDUCTION TRAINING காலத்தை சேர்ப்பதற்கான DPC ஜூன் மத்தியில் கூடுகிறது 
12.சங்கர்நகர் SO க்கு வருகிற திங்கள் கிழமை எலெக்ட்ரிசன் அனுப்பப்பட்டு ஓரிரு தினங்களுக்குள் புதிய இடத்தில் அலுவலகம் 
செயல்படும் .இத்தனை காலம் பல்வேறு இடர்களுக்கு மத்தியில் பணியாற்றிய தோழர்கள் இனி புதிய சூழலில் பணியாற்றுவார்கள் .
13.பாளையம்கோட்டை தோழியர்களுக்கான டைனிங் /ரெஸ்ட் ரூம் கான வரைவு திட்டங்கள் அனுப்பப்பட்டுள்ளன .முதல் தளத்தில் உள்ள பயிற்சி மையத்தில் அவர்களுக்கான இடமும் பயிற்சிமையம் போஸ்ட்மாஸ்டர் QUARTERS க்கு மாற்றப்படவுள்ளன .
14.தலைமை அஞ்சலகத்தில் ஜெனரல் பிரிவு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை மாற்றம்செய்திட வேண்டும் என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது .
16.நிலுவையில் உள்ள LTC  தொகை உரிய இருவருக்கு ஒருவாரத்திற்குள் திருப்பி கொடுக்கப்படும் 
15.இறுதியாக நமது கோட்ட சங்க பொருளாளருக்கு உடனே IMMUNITY அடிப்படையில் RELIEVE செய்யப்படுவார் என்ற நல்ல செய்தியோடு பேட்டி இனிதே முடிவுற்றது ..
அஞ்சல்நான்கின் பிரச்சினைகள் குறித்தமுடிவுகள் நாளை பதியப்படும் 
         நன்றி .தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை