...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, November 23, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் 

                     26.11.2020 வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச்செய்வோம் 

மத்திய அரசு கடைபிடித்துவரும் பொருளாதார கொள்கைகளின் தாக்கத்தினால் தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகவாகும்  பாதிக்கப்பட்டுவருவதை நாம் இன்று கண்கூடாக பார்த்துவருகிறோம் .அதையும் தாண்டி இன்று மத்தியஅரசின் கொளகை முடிவுகளால் நடைமுறைப்படுத்திட துடிக்கும் திட்டங்களிலானால் நாம் மட்டுமல்ல நமது சந்ததியினரும் பாதிக்கப்பட போவது என்பதும்  திண்ணம் .இந்த கொடுமைகளை களைய கடுமையான நடவடிக்ககைகளை நாமும் எடுத்தாக வேண்டும் .ஆம் தொழிலாளியின் முன் இருக்கும் ஒரே ஆயுதம் வேலைநிறுத்தம் மட்டும் தான் .இந்த வேலைநிறுத்தத்தை ஒன்றுபட்ட இயக்கமாக நடந்திடும் போது வேலைநிறுத்தத்தின் தாக்கம் அதிகரிக்கும் போது பல சந்தர்ப்பக்கங்களில் அரசு தனது முடிவை தளர்த்தியிருக்கிறது அல்லது தள்ளிப்போட்டிருக்கிறது .புதிய சலுகைகளை பெறப்போகிறோமோ இல்லையோ பெற்ற சலுகைகளை பேணிப்பாதுகாக்கவேண்டிய பொறுப்பில் நாம் இருக்கிறோம் .

1.கொரானா வை காரணம் காட்டி மூன்று பஞ்சபடிகள் ஜூலை 2021 வரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது .இதில் நாம் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளோம் .

2.அரசு ஊழியர்க்ளுக்கு TOUR TA /TRANSFER TA  தவிர்க்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது (இது அதிகாரிகளுக்கு ஏனோ பொருந்தாது )

3.மத்திய அரசு ஊழியர்களுக்கான கட்டாய ஓய்வு எனும் பழைய ஆயுதத்தை புதிதாக ஆயத்தம் செய்து வைத்ததைப்போல சுற்றறிக்கையை அனுப்பி ஊழியர்களை அச்சத்தில் வைத்திருப்பது 

4.வாரிசு அடிப்படையில் பணிவழங்குவதில் கடைபிடிக்கப்படும் இறுக்கமான நிபந்தனைகள் .நேற்றுகூட நமது கோட்டத்தில் மட்டும் 10 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது .

5.அஞ்சல் துறையிலும் முதன்மை சேவைகளை பின்தள்ளிவிட்டு கமிஷன் அடிப்படையில் நடக்கும் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது 

6.2004 க்கு பிறகு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு புதிய பென்ஷன் எனும் சமூகப்பாதுகாப்பை சீரழித்தது 

7.இன்னமும் வேலைநேரத்தை 12 மணிநேரமாக உயர்த்துவது தொடர்பான அறிவிப்புகள் 

8.தொழிற்சங்கங்களை நசுக்கும் வகையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தொழிலாளர் சட்டங்களில் மாற்றம் -நமக்கு கூட யூனியன் என்பதை அஸோசியேஷன் என மாற்றம் செய்திட கொடுத்துக்கொண்டிருக்கும் நிபந்தனைகள் /நிர்பந்தங்கள் 

9.DOPT வரை சென்றும் கூட HSG II மற்றும் HSG I பதிவுயர்வில் ONETIME RELAXATION தள்ளிவைப்பு /அலட்சியம் 

10.GDS ஊழியர்களுக்கான WEIGTAGE ,EL சேமிப்பு .பதவிஉயர்வு /மருத்துவ காப்பீடு இவைகளை வழங்குவதில் இழுத்தடிப்பு  

                   இதுபோன்ற நம்மை பாதிக்கின்ற விஷயங்களில் நாம் போராடவில்லை என்றால் வேறு யார் போராடுவார்கள் ? தமிழகம் என்றுமே இதுபோன்ற பொதுவேலைநிறுத்தங்களில் பங்கேற்றிட  தயங்கியதில்லை .நமது மாநில சங்கமும்/மாநில செயலரும்  வேலைநிறுத்தத்தை பழைய நாட்களை போல வெற்றிகரமாக நடத்திட அழைப்பு விடுத்திருக்கிறார் .

நேற்று பணியில் சேர்ந்த ஊழியர்கள் முதல் நாளை பணி ஓய்வு பெறும் ஊழியர்கள் வரை வேலைநிறுத்தத்தில் பங்கேற்கலாம் .மேலும் சமீபத்தில் MACP பதவி உயர்வினை பெற்று ஜனவரி 2021 யில் INCREMENT OPTION கொடுத்த ஊழியர்கள் கோட்ட செயலரிடம் அதற்கான விளக்கங்களை கேட்கவும் .

வழக்கம் போல் கடைசி நேரத்தில் நிர்வாகம் கொடுக்கும் வேண்டுகோள்கள் /அச்சுறுத்தல்களை புறக்கணிப்போம் .

வேலைநிறுத்தத்தில் பங்கேற்போம் !அஞ்சல் துறையை பாதுகாப்போம் !

தோழமை வாழ்த்துக்களுடன் 

SK .ஜேக்கப் ராஜ் --T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை Saturday, November 21, 2020

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் 

                                                        முக்கிய செய்திகள் 

.*வருகிற 26.11.2020 அன்று நடைபெறும் ஒருநாள் பொதுவேலைநிறுத்ததை முன்னிட்டு நமது கோட்ட சங்கங்களின் சார்பாக 23.11.2020 அன்று தென்பகுதியில் 24.11.2020 அன்று மாநகர் பகுதியிலும் வேலைநிறுத்த பிரச்சார  பயணங்கள் நடைபெறுகிறது ..வேலைநிறுத்தத்தை வெற்றிபெற செய்வோம் .

*அஞ்சல் துறையில் ரோஸ்டர் முறை பின்பற்றுவது நவம்பர் வரை நீட்டிக்கப்ட்டுள்ளது என்றும் சூழ்நிலைக்குகளுக்கேற்ப அந்தந்த கோட்ட நிர்வாகமே முடிவெடுத்துக்கொள்ளலாம் என்றும் அஞ்சல் வாரியம் உத்தரவிட்டுள்ளது .

*Retirement ஆகும் பணியாளரின் service book ஆடிட்க்கு (audit) சரி பார்த்தலுக்கு அனுப்பபடும். service புக்கியில் retirement ஆகும் தேதியில் இருந்து 24 மாதங்களுக்கு முன்னர் இருக்கும் குறைபாடுகள் மட்டும் சுட்டி காட்டி சரி செய்யபட வேண்டும். அதற்கு முந்தைய காலத்தில் உள்ள எதையும் சுட்டி காட்ட வேண்டிய அவசியம் தேவையில்லை என்று 27.07.2020 தேதியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளது  .

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T .புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை Friday, November 20, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                     நேற்று நமது கோட்ட கண்காணிப்பாளர் அவர்களை சந்தித்து பல்வேறு ஊழியர்கள்  பிரச்சினைகள் குறித்து பேசினோம் .ஒருசில பிரச்சினைகளுக்கு உடனடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது .அதற்காக நமது SSP அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் தோழர் ரமேஷ் அவர்களின் Relief  குறித்தும் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது .இறுதியாக MMS ஓட்டுனர்களுக்கு கொடுக்கப்பட்ட தேவையற்ற விளக்க கடிதங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது .ஓட்டுனர்களை தொடர்ந்து மனஉளைச்சலுக்கு ஆளாக்கும் செயல்களை SSP அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம் .சம்பந்தப்பட்டவர்கள் இனியாவது தங்களுக்கு  கீழ் பணிபுரியம் ஊழியர்களை மனிதாபிமானத்தோடு நடத்திடவேண்டும் என்பதே எங்கள் விருப்பம் .

                 26.11.2020 வேலைநிறுத்தம் குறித்த சுற்றறிக்கைகள் இன்று உங்கள் அனைவருக்கும் கிடைத்திருக்கும் .வருகிற 23.11.2020 மற்றும் 24.11.2020 அன்று கோட்ட அளவிலான அமைப்பு சார்ந்த சுற்றுப்பயணங்கள் நடத்திடவுள்ளோம் .

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

Thursday, November 19, 2020

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                              வேலைநிறுத்த கோரிக்கையும் -அஞ்சல் துறையின் வழக்கமான விளக்கமும் 

வருகிற 26.11.2020 அன்று நடைபெறவிருக்கும் நாடுதழுவிய வேலைநிறுத்தத்தை ஓட்டி நமது NFPE சம்மேளனம் கொடுத்துள்ள வேலைநிறுத்த கோரிக்கைகளுக்கு அஞ்சல் வாரியம் 17.11.2020 அன்று வழக்கமான சம்பிரதாய வேண்டுகோளை விடுத்துள்ளது .கொரானா பெருந்தொற்று காலத்தில் வேலைநிறுத்தம் என்பது அஞ்சல் துறையை வெகுவாக பாதிக்கும் என்பதால் வேலைநிறுத்த முடிவை கைவிடவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது .ஆனால் கோரிக்கைகளுக்கு நிர்வாகம் கொடுத்துள்ள பதிலினை பார்த்தால் அடையாள வேலைநிறுத்தம் போதாது அழுத்தமான போராட்டம் தேவை என்பதை உணர்த்துகிறது ..

                                                  வேலைநிறுத்த விளக்க கூட்டம் 

நாள் -24.11.2020  செவ்வாய் கிழமை 

நேரம் மாலை 6 மணி 

இடம் -பாளையம்கோட்டை HO

கூட்டு தலைமை -தோழர்கள் T.அழகுமுத்து கோட்ட தலைவர் அஞ்சல் மூன்று 

                                           A.சீனிவாச சொக்கலிங்கம் கோட்ட தலைவர் அஞ்சல் நான்கு 

                                  வேலைநிறுத்தம் வெற்றிபெற இன்றே தயாராகுவோம் .

                                                     முக்கிய செய்திகள் 

லக்ஷ்மி விலாஸ் வங்கி  காசோலைகளை CHEQUE கலெக்ஷன்க்கு  வாங்க வேண்டாம் என அஞ்சல் வாரியம் அறிவுறுத்தியு ள்ளது .ஆகவே துணை /தலைமை அஞ்சலகத்தில் பணிபுரிகின்ற ஊழியர்களை இதை கவண த்தில் கொண்டிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 

தோழமையுடன் 

SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 


Monday, November 16, 2020

 

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                                               26.11.2020 வேலைநிறுத்தம் வெல்லட்டும்

மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்புவிடுத்துள்ள 26.11.2020  பொதுவேலை நிறுத்தத்தில் பங்கேற்போம் .அஞ்சல் துறையில் NFPE- FNPO மற்றும் AIGDSU சங்கங்கள் தனித்தனியாக வேலைநிறுத்த அறிவிப்பை அஞ்சல் வாரியத்திற்கு கொடுத்து பொதுவேலைநிறுத்ததோடு தங்களது பகுதி கோரிக்கைகளையம் இணைத்து போராட்ட அறிவிப்பை அறிவித்துள்ளது ..நாடு கடைபிடித்துவந்த கலப்பு பொருளாதார முறை கைவிடப்பட்டு முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் 1990 முதல்  கொண்டுவரப்பட்ட புதிய பொருளாதார கொள்கைகளை எதிர்த்து 1991 முதல் 2020 வரை 19 பொதுவேலைநிறுத்தங்கள் நடைபெற்றுள்ளன .மத்திய அரசு துறையில் நமது அஞ்சல் துறையை தவிர வேறு எந்த துறையும் இதுபோன்ற பொதுவேலைநிறுத்ததில் முழுமையக பங்கேற்றிடவில்லை .ரயில்வே துறையில் கூட பொதுவேலைநிறுத்ததின் தடம் கூட இன்னும் பதியவில்லை .ஆகவே பொதுவேலைநிறுத்தங்களில் தொடர்ந்து முழுமையாக பங்கேற்ற பெருமை நமக்கிருந்தாலும் இந்த பொதுவேலைநிறுத்ததோடு நின்று விடாமல் நமது துறைசார்ந்த கோரிக்கைகளை முன்னெடுத்து போராடிடவேண்டும் என்று நமது சம்மேளன மற்றும் அகிலஇந்திய தலைமையை வலியுறுதுவதிலும் நமது தமிழ்மாநில சங்கம் என்றும் தயங்கியதில்லை .ஆரம்பத்தில் NFPE சம்மேளனம் மட்டுமே தனித்து போராட்டங்களை நடத்திவந்தது .அதன்பிறகு FNPO சங்கமம் இந்த பொதுவேலைநிறுத்ததில் பங்கேற்று வருகிறது .இன்று AIGDSU சங்கமும் போராட்டத்தில் பங்கேற்கிறது .இந்த பின்னணியில் 26.11.2020 பொதுவேலைநிறுத்தத்தை வெற்றிபெறச்செய்வோம் .நமது கோட்டத்தில் அஞ்சல் மூன்று அஞ்சல் நான்கு சங்கங்களின் சார்பாக வேலைநிறுத்த சுற்றுப்பயணம் வருகிற 23.11.2020 தென்பகுதியிலும் 24.11.2020 அன்று நெல்லை மாநகர் பகுதிகளிலும் நடைபெற திட்டமிட்டுள்ளோம் .வரவிரும்புகிற தோழர்கள் கோட்ட செயலர்களிடம் தெரிவிக்கவும் .

நன்றி .போராட்ட வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

                                                      

Thursday, November 12, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                                  26.11.2020 ஒருநாள்  வேலைநிறுத்தம் --

மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்புவிடுதிருக்கும் நாடுதழுவிய ஒருநாள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றிட நமது NFPE சம்மேளனமும் அழைப்புவிடுத்திருந்தது தாங்கள் அறிந்ததே .அதனை தொடர்ந்து நமது துறையில் GDS ஊழியர்களின் AIGDSU சங்கமும் இறுதியாக FNPO சங்கமும் இந்த பொது வேலைநிறுத்தத்தில் பங்கேற்கப்போவதாக அறிவித்திருக்கிறது .12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நடைபெறும் இந்த பொதுவேலைநிறுத்ததில் நமது அஞ்சல் பகுதியில் உள்ள  10  கோரிகைகளும்  சேர்த்து கொடுக்கப்பட்டுள்ளது.ஆகவே நமது உறுப்பினர்கள் இந்த பொதுவேலைநிறுத்தத்தில்  பங்கேற்றிடுவோம் .

                                     பொதுக்கோரிக்கைகள் 

1.புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய் .கடைசிமாத  ஊதியத்தில் 50 சதம்  குறைந்தபட்ச பென்ஷன் என்பதை உறுதிப்படுத்து !

2. ஊழியர்சங்கங்களின் தகுதியை குறைக்கும் ASSOCCIATION முடிவை கைவிடு!

3.நிறுத்திவைக்கப்பட்ட பஞ்சபடியை வழங்கிடு !

4. ஆள் நியமன தடை  சட்டத்தை ரத்துசெய் !

5.அஞ்சல் பாதுகாப்பு  ரயில்வேயில் கார்ப்பரேஷன் மற்றும் தனியார் முயற்சியை கைவிடு !

6.GDS ஊழியர்களுக்கு சிவில் அந்தஸ்தை வழங்கிடு !

7.கோவிட்-19 கால விடுப்புகளை சிறப்பு விடுப்புகளாக அறிவித்திடு !

8.கருணை அடிப்படையில் வேலை வழங்குவதில் உள்ள 5 சத கட்டுப்பாட்டை நீக்கிடு !

9.5 கட்ட பதவி உயர்வினை வழங்கிடு 

10.தொழிற்சங்கத்திற்கு வழங்கப்பட்டுவந்த JCM அமைப்பை முறையாக நடத்திடு !

                                         PART -B பகுதி கோரிக்கைகள் 

1.கோவிட் -19 காலத்திற்கான சிறப்பு விடுப்பு -கொரானா பாதிப்பில் இறந்த ஊழியர் குடும்பங்களுக்கு நிவாரணமாக ரூபாய் 10 லட்சம் -குடும்ப உறுப்பினருக்கு கருணை அடிப்படையிலான வேலை வழங்கிட வேண்டும் ..ரோஸ்டர் முறையை தொடர்ந்திட வேண்டும் 

2.PSD/CSD இணைப்பு -ஒழிப்பு திட்டத்தை கைவிடு !

3.போஸ்டல் கணக்கு அலுவலர்களை Decentralization மற்றும் SBCO ஊழியர்களை PA கேடருடன் இணைக்கும் முயற்சியை கைவிடு !

4.IPPB மற்றும் ஆதார் பணிகளுக்கு கொடுக்கும் இலக்கை நிறுத்திடு !

5.Common Service Centres  திட்டத்தை நிறுத்திடு !

6.வெளியாட்களை OUTSOURCE  முறையில் பணியமர்த்தாதே !

7.தொழிற்சங்க உறுப்பினர் சரிபார்ப்பினை பழைய முறையில் நடத்திடு !

8.கமலேஷ் சந்திரா கமிட்டியில் உள்ள பயனுள்ள சிபாரிசுகளை அமுல்படுத்து !

9.கேடர் சீரமைப்பை அனைத்து பிரிவிலும் அமுல்படுத்து !

10.அஞ்சல் RMS அலுவலகங்களுக்கு வாரம் 5 நாட்கள் வேலைநாட்களாக மாற்றிடு 

அஞ்சல்  பகுதிகளில் இந்த வேலைநிறுத்தத்தை சிறப்பாக நடத்திடுவோம் .

போராட்ட வாழ்த்துக்களுடன் 

SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலாளர்கள் நெல்லை 
Wednesday, November 11, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

நேற்று (10.11.2020 ) நடைபெற்ற தென்மண்டல அதிகாரிகளுடனான இருமாதந்திர பேட்டியியில் நமது மாநிலசெயலர் சகோதரர் வீரமணி அவர்களும் தென்மண்டல செயலர் தோழர் .R .கிருஷ்ணமூர்த்தி அவர்களும் கலந்துகொண்டனர் .முன்னதாக நமது கோட்ட பிரச்சினைகள் சம்பந்தமாக குறிப்பாக திருமதி .பாப்பா  திருநெல்வேலி HO அவர்களின் இடமாறுதல் குறித்த மேல்முறையீட் டை  விரைந்து முடித்திட வலியுறுத்தினார் .நமது கோட்டத்தில் இருந்து மண்டல அலுவலகத்திற்கு கொடுக்கப்பட்ட தகவலில் மறைக்கப்பட்ட உண்மைகளை விளக்கமாக எடுத்துரைத்த பின் மீண்டும் AD STAFF அவர்கள் இதுகுறித்து  விரைந்து முடிவெடுக்கப்படும் என்று பதிலளித்தார்கள் .அதேபோல் LSG அக்கௌன்டன்ட் பதவிகளுக்கான கோட்ட ஒதுக்கீட்டை விரைந்து வழங்கிடவும் வலியுறுத்தப்பட்டது .மேலும் பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்திற்க்கான 65 KV GENENSET மற்றும் திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்தில் ஆண் ஊழியர்களுக்கான புதிய கழிப்பறை கட்டுவது சம்பந்தமாகவும் வலியுறுத்தப்பட்டது . நமது கோட்ட பிரச்சினைகளை மண்டல அளவில் எடுத்துச்சென்று தீர்விற்கு தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்துவரும் நமது  மாநிலசெயலர் சகோதரர் வீரமணிமற்றும் மண்டலச்செயலர் தோழர் .R .கிருஷ்ணமூர்த்தி இருவருக்கும்  நெல்லை கோட்ட சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .

        மீண்டும் நமது PMG அவர்களுடனான ஒரு இனிய சந்திப்பு 

BI -MONTHLY கூட்டம் முடிந்து உணவு இடைவேளைக்கு பிறகு நமது கோட்ட சங்க முன்னணி நிர்வாகிகள் தோழர்கள் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட தலைவர் T.அழகுமுத்து மாநில சுப்ரிம் கவுன்சிலர் தோழர் C .வண்ணமுத்து மற்றும் நமது கோட்ட சங்க நிதிச்செயலர் தோழர் D.பிரபாகர் ஆகியோர் நமது PMG அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினோம் .அடுத்தடுத்து கூட்டங்கள் இருந்தாலும் அதற்கிடையில் நம்மை சந்தித்து தனது நெல்லை கோட்ட பழைய நினைவுகளை மகிழ்வோடு நினைவுகூர்ந்த நமது PMG திரு .G.நடராஜன் IPOS அவர்களுக்கு எனது தனிப்பட்ட முறையிலும் NELLAI NFPE சார்பிலும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .நன்றி .தோழமையுடன் SK.ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை   

                              

Thursday, November 5, 2020

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                                                                 முக்கிய செய்திகள் 

*நமது தென்மண்டல தலைவருடனான (PMG ) இருமாதந்திர பேட்டி வருகிற 10.11.2020 அன்று காலை 10 மணிக்கு தென்மண்டல அலுவலகத்தில் நடைபெறுகிறது .நமது மாநில செயலாளர் மற்றும் தென்மண்டல செயலாளர் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள் .

*ஆதார் பணிகளுக்கு OUTSOURCE முறையை நடைமுறைப்படுத்த அஞ்சல் வாரியம் ஏற்றுக்கொண்டுள்ளது 

*பண்டிகைக்கால முன்பணம் வழங்கிட தேவையான ப்ரீபெய்டு UTSAV கார்டு தீபாவளிக்கு முன் வழங்கிட அனைத்து DDO களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .

*SCSS கணக்குகளில் வட்டி  காலாண்டின் முதல் நாளில் (ஏப்ரல் ஜூலை அக்டோபர் ஜனவரி )  பெற்றிட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது .இது 01.11.2020 முதல் நடைமுறைக்குவருகிறது .

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 


Wednesday, November 4, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! 

                             26.11.2020 ஒருநாள் வேலைநிறுத்தமும் -நமது மத்திய சங்க செயற்குழுவில் தமிழக அஞ்சல் மூன்றின் பங்கும் --

வருகிற 26.11.2020 அன்று மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள ஒருநாள் பொதுவேலை நிறுத்தத்தில் பங்கேற்றிட நமது சம்மேளனமும் அழைப்புவிடுத்த பின்னணியில் நேற்று 03.011.2020 அன்று காணொளி மூலம் நடைபெற்ற மத்திய சங்க செயற்குழுவில் நமது மாநிலச்சங்கத்தின் சார்பாக வெளிப்படையான கருத்துக்களை முன்வைத்து விவாதித்தது வரவேற்கத்தக்கது .நமது மாநில செயலர் சகோதரர் வீரமணி அவர்களின் கருத்துக்களில் இருந்து சில ---

இன்றைய சூழலில் தமிழக அஞ்சல் மூன்றை பொறுத்தவரை போராட்டத்தைக்கண்டு முகம் சுளிப்பவர்கள் அல்ல -பொதுக்கோரிக்கைகளையோடு நமது பகுதி (துறை ) சார்ந்த கோரிக்கைகளில் முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்பதே ஒவ்வொரு அடிமட்ட ஊழியர்களின் எதிர்பார்ப்பு .குறிப்பாக அஞ்சல் எழுத்தர்களின் பிரதான கோரிக்கைகளான அஞ்சல் எழுத்தர்களுக்கான உயர் ஊதியம் ,LSG ,HSG உட்பட ,ஆட்பற்றாக்குறை ,HSG II மற்றும் HSG I  பதவிகளை ONE TIME RELAXATION அடிப்படையில் நிரப்புதல் ,நெட்ஒர்க் பிரச்சினைகள் .அஞ்சல் வாரியம் கட்டவிழ்த்துவிடும் வணிக டார்ச்சர் ,ஆதார் பணிகளுக்கு நிர்ணயிக்கப்படும் இலக்குகள் என நமது எழுத்தர் பிரிவு ஊழியர்களின் பிரச்சினைகளை சொல்லிக்கொண்டே போகலாம் .இன்றைய சூழலில் தமிழகத்தில் இருக்கும் 25 சத கோட்ட /கிளை செயலர்கள் இந்த பொது வேலைநிறுத்தம் குறித்து பல்வேறு வினாக்களை கேட்கத்தொடங்கிவிட்டார்கள். தங்களது பகுதி கோரிக்கைகளை முன்னிறுத்தி சம்மேளனம் /மத்திய சங்கங்கள் செய்தது என்ன என்று விவாதிக்க தொடங்கியிருக்கிறார்கள் .மேலும் வேலைநிறுத்த பாதிப்புகளில் ஒன்றான MACP பதவி உயர்வின் போது தங்களது ஆண்டு ஊதிய உயர்வை ஜூலையில் இருந்து ஜனவரிக்கு மாற்றிய தோழர்களுக்கு 2017 வேலைநிறுத்ததினால் ஏற்பட்ட  பாதிப்புகள் அதிகம் .இன்றும்கூட சமீபத்தில் MACP வாங்கிய தோழர்கள் தங்கள் ஆண்டு ஊதிய உயர்வினை ஜனவரிக்கு மாற்ற OPTION கொடுத்தவர்களுக்கு ஒருநாள் சம்பள பிடிப்போடு நிற்கப்போவதில்லை மாறாக ஆண்டு ஊதிய உயர்வும் தள்ளிப்போகும்  .இருந்தாலும் நாங்கள் மத்திய தொழிற்சங்க பொதுவேலைநிறுத்தத்திற்கு எதிரானவர்கள் அல்ல என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் .

1991 முதல் தொடங்கிய இந்த பொதுவேலைநிறுத்தம் இன்று 19 வது வேலைநிறுத்தமாகும் .இதில் நமது NFPE சம்மேளனமும் முழுமையாக பங்கேற்றுவருகிறது .பொருளாதாரா கோரிக்கைகளில் நேரடி பாதிப்புகள் மற்றும் .இன்றைய ஆட்சியாளர்களின் தொழிலாளர் நல விரோத சட்டங்களுக்கு எதிராக மத்திய அரசு ஊழியர்களில் இன்று போராடிக்கொண்டிருக்கும் துறைகளில்  நமது அஞ்சல் துறையின்  பங்கு  முக்கியமானது -அஞ்சலிலும் NFPE யின் பங்களிப்பு என்பதும் பெரிதானது .பொதுவேலைநிறுத்ததோடு இணைத்து நமது பகுதிவாரியான கோரிக்கைளை முன்வைத்து போராடுவதால் எந்தளவிற்கு நமது கோரிக்கைகளின் மீது அரசின் கவனம் திரும்பும் என்ற ஒரு சராசரி உறுப்பினரின் கேள்விகளுக்கு பதில்சொல்ல வேண்டிய பொறுப்பும் நமக்கிருக்கிறது .வங்கிகள் தங்கள் கோரிக்கைகளுக்குகாக மட்டுமே எத்தனை போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறது .நமது வரலாறு 1993 ,1998, 2000 .2008 என்று நிற்கப்போகிறதா ? நமது துறைசார்ந்த கோரிகளுக்காக போராட இன்றும் ஊழியர்கள் தயாராக இருக்கிறார்கள் ..என்றும் ஊழியர்கள் தயாராக இருக்கிறார்கள் ..ஊழியர்களின் நியாமான கோரிக்கையில் இருக்கும் உண்மையை எடுத்துசசொல்லுவோம் ..

போராட்டங்கள் வெல்லட்டும் --வெல்லட்டும் 

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Tuesday, November 3, 2020

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

*நமது கோட்ட சங்க பிரச்சினைகளை உடனுக்குடன் மண்டல /மாநில நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்கின்ற மாநில சங்கத்திற்கு குறிப்பாக மாநில செயலர் சகோதரர் வீரமணி அவர்களுக்கு நெல்லை கோட்ட சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .நேற்று மட்டும் மூன்று கடிதங்கள் நமது கோட்ட பிரச்சினைகள் குறித்து எழுதப்பட்ட கடிதங்களை உங்கள் பார்வைக்கு தந்திருக்கிறோம் .

*நேற்று நமது கோட்ட அலுவலகத்தால் வெளியிடப்பட்ட LSG இடமாறுதல்களில் ஊழியர்களின் விருப்பங்களின் அடிப்படையில் இடமாறுதல்கள் தந்திட்ட கோட்ட நிர்வாகத்திற்கு மீண்டும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .பதவி உயர்வு பெற்று செல்கின்ற அனைத்து தோழர்களையும் /தோழியர்களையும் NELLAI NFPE வாழ்த்துகிறது ..LSG இடமாறுதல்களினால் ஏற்பட்டிற்குக்கும் இடங்களுக்கு உடனே T/S ஊழியர்களை விருப்பத்தின் அடிப்படையில் பணியாற்றிட அனுமதிக்கவேண்டும் என் நேற்று நமது ASP(HOS ) அவர்களை சந்தித்து கேட்டுள்ளோம் .இன்று அதற்கான உத்தரவுகள் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்கள் .

*நமது கோட்ட சங்க உறுப்பினர் தோழியர் JAB .மேரி PA மேலப்பாளையம் அவர்க்ளின் கணவர் திரு .கிறிஸ்டோபர் (இந்தியன் வங்கி) அவர்க்ளின் இசை பயணத்தை ஆதரிப்போம் .அவர்களின்  இசையினை கேட்க  

https://www.youtube.com/channel/UCWhEYsNhbuWHNKH3xSLCalw என்ற YOUTUBE சேனலுக்கு SUBSCRIBE செய்து ஆதரவு தந்திடுவோம் .

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

Monday, November 2, 2020

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !வணக்கம் .

                                                           முக்கிய செய்திகள் 

*நமது கோட்டத்தின் புதிய SSP ஆக (கூடுதல் பொறுப்பு ) திரு .K .லட்சுமணன் SSPOS மதுரை அவர்கள் கடந்த 29.10.2020 அன்று பொறுப்பேற்றுக்கொண்டார்கள் .அவர்களை மீண்டும் NELLAI NFPE சார்பாக வாழ்த்திவரவேற்கிறோம் .

*இன்று நமது கோட்டத்திற்கு தென்மண்டல இயக்குனர் அவர்கள் வருகை தருகிறார்கள் .

*LSG RE-ALLOTMENT கிடைத்த ஊழியர்களுக்கான இடமாறுதல் உத்தரவுகள் இன்று வெளியாகிறது .விருப்பம் தெரிவிக்காத இரண்டு ஊழியர்களை தவிர அனைவருக்கும் அவர்களின் விருப்ப இடங்களில் ஒன்று கிடைத்திருக்கிறது 

*நமது நெல்லை கோட்டத்தில் ஓய்வூதியர்களின் தாய் அமைப்பான நமது தொழிற்சங்க ஆசான் திரு .M.பேச்சிமுத்து அவர்கள் நடத்திவந்த மத்தியஅரசு ஓய்வூதியர்கள் சங்கம் நேற்று தேசிய அஞ்சல் RMS ஓய்வூதியர் முன்னணி என்ற அமைப்போடு இணைக்கப்பட்டு ஒன்றுபட்ட இயக்கமாக செயல்பட தொடங்கியிருப்பது மகிழ்ச்சியான ஒன்று .வெளியில் இருந்தோ அல்லது மேலோட்டமாக பார்த்தால்  ஏதோஇருக்கின்ற சங்கத்தை உடைத்துவிட்டார்களோ என எண்ண தோன்றும் அதுவல்ல உண்மை .ஏற்கனவே ஆறு ஆண்டுகளுக்கு முன் உடைக்கப்பட்ட சங்கத்தை நாம் மீண்டும் இணைத்திருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்  அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு NELLAI NFPE தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு நிச்சயம் ஓய்வூதியர்களின் பிரச்சினைகளை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்ல நாங்களும் துணைநிற்போம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் .

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

அன்பார்ந்த  ஓய்வூதியர்களே ! வணக்கம் .

நெல்லை கோட்ட தேசிய அஞ்சல்  ஆர் .எம் .எஸ் ஓய்வூதியர்கள் முன்னனி (NATIONAL FRONT OF POSTAL RMS  PENSIONERS ) துவக்கம் .

அஞ்சல் RMS ஓய்வூதியர்கள் மற்றும் குடும்பஒய்வூதியர்க்ளுக்கான NFPRP எனும் புதிய அமைப்பு நேற்று நெல்லையில் தொடங்கப்பட்டது .இந்த அமைப்பு ஏதோ புதிய அமைப்போ அல்லது வேறு எந்த அமைப்பிற்கோ போட்டியாக துவங்கப்பட்டதல்ல .ஏற்கனவே நெல்லையில் நம்முடைய ஆசான் தோழர் M .பேச்சிமுத்து அவர்கள் தலைமையில் இயங்கி வந்த ஓய்வூதியர் சங்கமான மத்திய அரசு ஊழியர்கள் அமைப்பு நம்மோடு இணைக்கப்பட்டு அனைவரையும் ஒரு குடையின் கீழ் அரசியல் கேடர் வேறுபாடுகளைக்கடந்து தொழிற்சங்கத்தில் அணிசாரா கொள்கையான நடுநிலையாளர்களின் கொள்கைவழி நடக்கின்ற பேரமைப்பாகும் என்பதை நமது தோழர்கள் புரிந்துகொள்ளவேண்டும் .நேற்றைய துவக்க நாளிலே பெருமைப்பாண்மை தோழர்கள் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டதை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறோம் .

                                        NELLAI NFPRP புதிய நிர்வாகிகள் 

தலைவர் .தோழர் A.ஆதிமூலம் 

உதவி தலைவர்கள் -A.ராமசுந்தரம் (RMS)-O.மூக்கையா -R.நடராஜன் M.கலிய பெருமாள் E.சுப்ரமணியன் (RMS) I.மகாராஜன் 

கன்வீனர் --KG.குருசாமி (PRIP ---RETD )

துணைகன்வீனர்கள்  -T.சுடலையாண்டி A.அமிர்தராஜ் -S .நமச்சிவாயம் (RMS)

பொருளாளர் -SK .பாட்சா 

உதவி பொருளாளர் -A.அந்தோணி 

நிர்வாக குழு உறுப்பினர்கள் -S.முருகன் V.சீனிவாசன் M.அந்தோணி சாமி E.மாணிக்க வாசகம் (RMS) PK .சுடலைக்கண்ணு A.பிரான்சிஸ் சேவியர் A.நீல்வின் M.பேச்சியப்பன் 

மகிளா கமிட்டி -கன்வீனர் -கிரேஸ் எலிசபெத் 

தலைமை ஆலோசகர் -தோழர் SN .சுப்பையா (RMS)

கவுரவ ஆலோசகர்கள் -தோழர்கள் S.சௌந்தரபாண்டியன் T.வெங்கட்ராமன் S.முத்துகிருஷ்ணன் 

                                                             தீர்மானங்கள் 

1.நெல்லை கோட்டத்தின் ஒருங்கினைந்த மாநாடு வருகிற ஜனவரியில் நடத்துவது 

2.மதுரையில் நடைபெறும் மாநில மாநாட்டிற்கு திரளாக பங்கேற்பது 

3.ஓய்வூதியர்களுக்கு பண்டிகைக்கால முன்பணம் /LTC வசதிகள் அறிமுகப்படுத்தவேண்டும் 

4.ஓய்வூதியர்கள் /குடும்ப ஓய்வூதியர்களை CGHS திட்டத்தில் இணைப்பது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வது 

5.நிறுத்தி வைக்கப்பட்ட பஞ்சபடியை உடனே வழங்கிட வேண்டும் 

6..ஓய்வுபெற்ற தபால்காரர்கள் பிரச்சினைகளான 3050 அடிப்படை ஊதியத்தில் இன்னும் நிலுவைத்தொகை கிடைக்காதவர்களுக்காக மீண்டும் இயக்கங்களை நடத்துவது -அதேபோல் ஓய்வுபெற்ற GDS ஊழியர்களுக்கும் 01.01.2016 முதல் உயர்த்தப்பட்ட பணிக்கொடையினை விரைந்து வழங்கிட முயற்சிகள் எடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .புதிய உறுப்பினர்களை சேர்ப்பதில் அதிககவனம் கொண்டு மேற்கொண்டு எங்களோடு ஒத்துழைக்க உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம் .

நன்றி .தோழமையுடன் KG.குருசாமி  கன்வீனர் NFPRP-நெல்லை