...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, January 29, 2021

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !

                                        பஞ்சப்படி முடக்கத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் 

நாள் --01.02.2021         திங்கள்  மாலை 6 மணி 

இடம் --பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு 

 மத்திய அரசு ஊழியர்கள் மகாசம்மேளனம் மற்றும் நேஷனல் JCM அமைப்புகளின் சார்பாக மத்திய அரசு ஊழியர்களுக்கு மறுக்கப்பட்ட மூன்று பஞ்சப்படி உயர்வுகள் அதாவது நிறுத்திவைக்கப்பட்ட 11 சத பஞ்சபடியை உடனே வழங்கிட வலியுறுத்தி நடைபெறும் மத்திய அரசுக்கெதிரான ஆர்பாட்டத்தில் தாங்கள் அனைவரும் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம் .

ஏற்கனவே இதற்காக ஒருநாள் வேலைநிறுத்தத்தை நாம் செய்துள்ளோம் -இரண்டுமுறை ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருக்கிறோம் ..இதுபோன்ற பொது பிரச்சினைகளை முன்வைத்து போராடும் ஆற்றலும் வல்லமையும் நமது NFPE பேரியக்க உறுப்பினர்களுக்கு மட்டுமே உண்டு .என்பதனை .மறந்துவிடாதீர்கள் ...

பஞ்சப்படி முடக்கம் என்பது நமக்குமட்டுமல்ல --நம்முடன் பணிபுரிகின்ற GDS ஊழியர்கள் ஓய்வூதியர்கள் என அனைவருக்கும் இந்த பாதிப்புகள் உண்டு ..

11சதம் பஞ்சப்படி கிடைக்காததால் ஒவ்வொரு ஊழியருக்கும் ஒவ்வொரு மாதத்திலும் எவ்வளவு தொகை பாதிப்பு --ஓய்வு பெறுகின்ற ஊழியர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு --தினந்தோறும்  ஏற்றம் கானும் விலைவாசி என நேர்முக மற்றும் மறைமுக தாக்குதலுக்கு  உள்ளானபிறகும் இதுபோன்ற  போராட்டங்களை நாம் இன்னும்  தீவிர படுத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது ....வாருங்கள் அரசுக்கு எதிராக நமது எதிர்ப்பு குரலை இன்னும் உரக்க முழங்கிடுவோம் ---

                                                 வா தோழா ! போராட உன்னால் மட்டுமே முடியும் --போராட்டத்தாலே நம் வாழ்க்கை இங்கே விடியும் --பொது பிரச்சினைகளில் பங்கேற்கும் வாய்ப்பு உனக்கு மட்டுமே சொந்தம் -பெருமைகொள்வோம் இந்த மாபெரும் இயக்கத்தில் உறுப்பினர் என்பதிலும் அடுத்தவர்களுக்காக நாம் போராட அவதாரம் எடுத்துள்ளோம் என்பதை நினைத்தும் பெருமை கொள்வோம் ..      

ஆர்ப்பாட்ட வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 





Friday, January 22, 2021

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

     ஒவ்வொரு ஆண்டும் நமது இலாகா சார்பாக விநியோகிக்கப்பட்டு வந்த காலண்டர் இந்த ஆண்டு சிக்கனத்தை காரணத்தை காட்டி நிறுத்தப்பட்டுள்ளது .அஞ்சலக விடுமுறைகள் RH வங்கி விடுமுறை நாட்கள் என பல தகவல்களை தாங்கி அந்த காலண்டர்கள் வரும் .ஆய்வுக்கு வரும் அதிகாரிகள் கூட நமது DEPARTMENT காலண்டர்யை தவிர வேறு காலண்டர்களை அலுவகத்தில் மாட்டிட கூடாது என பார்த்தவுடன் அகற்றிட உத்தரவு போட்டதுண்டு .ஆனால் செலவினங்களை குறைத்திடும் நோக்கத்தோடு அந்த பாரம்பரியம் நிறுத்தப்பட்டுளது. இதை உணர்ந்த நமது மாநில செயலர் இலாகா நிறுத்தினால்  நமக்கென்ன அதை நமது மாநில சங்கம் தொடரும் என புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் .அதன் படி ஒரு காலண்டரின் விலை 40 என்றும் தேவைப்படுவோர் அந்தந்த கோட்ட /கிளை செயலர்கள் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளார்கள் .ஆகவே நமது கோட்டத்தில் அலுவலக பயன்பாட்டிற்காக காலண்டர் தேவைப்படுவோர் கோட்ட சங்கத்தை  தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் .

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Thursday, January 21, 2021

அன்பார்ந்த தோழர்களே !
வருகிற 24.01.2021 அன்றுகாலை 10 மணிக்கு  நெல்லை ராஜ் மஹால் (பூர்ணகலா தியேட்டர் எதிரில் ) ஓய்வூதியர் சங்க மாநாடு நடைபெறுகிறது .தாங்கள் அனைவரும் மாநாட்டில் பங்கேற்று நெல்லை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த ஓய்வூதியர் அமைப்பினை உருவாக்கிட ஒத்துழைப்பினை நல்கிட கேட்டுக்கொள்கிறோம் .நமது அஞ்சல் மூன்று மற்றும் அஞ்சல் நான்கின் முன்னனி தோழர்களும் அவசியம் கலந்துகொண்டு சிறப்பித்திட கேட்டுக்கொள்கிறோம் .மதிய உணவுடன் மாநாடு முடிவுறும் .வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் அஞ்சல் மூன்று நெல்லை 

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !

    நேற்று 20.01.2021 அன்று நடைபெற்ற மாதாந்திர பேட்டி --முடிவுகள் 

கொரானா காலத்திற்கு பிறகு நேற்று நடந்த மாதாந்திர பேட்டியில் நமது வேண்டுகோளை ஏற்று அஞ்சல் மூன்று மற்றும் அஞ்சல் நான்கு சங்கங்களை சேர்த்து ஒரே நேரத்தில் பேட்டி நடைபெற்றது மட்டுமல்ல ஒரு சங்கத்திற்கு மூன்று நிர்வாகிகள் கலந்துகொள்ளவும் அனுமதித்த நமது கோட்ட கண்காணிப்பாளர் அவர்களுக்கும் தலைமையிட உதவி கண்காணிப்பாளர் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .கூட்டத்தில் பேசப்பட்ட விஷயங்கள் 

1.புதிய LRPA பட்டியல் இறுதிசெய்யப்பட்டு மண்டல அலுவலக ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது .

2.PSD திருநெல்வேலிக்கு இரண்டு அல்லது மூன்று OA  பதவிகளை டெபுடேஷன் அடிப்படையில் நிரப்புவது 

3.MMS ஓட்டுனர்கள் பிரச்சினைகள் நாளுக்குநாள் வேண்டுமென்றே சம்பந்தப்பட்ட OA ஒருவரால் அதிகரிப்பதையும் தேவையில்லாமல் ஓட்டுனர்களை குறிவைத்தே கோப்புகள் நகர்த்தப்படுவதை சுட்டிக்காட்டினோம் .மேலும் ஓட்டுனர்களுக்கு உணவு இடைவேளை கொடுப்பதுமுதல் அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலிக்க ஓட்டுனர்களை உள்ளடக்கி ஒரு ஆலோசனை கூட்டம் நடத்திடவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது 

4.அனைத்து துணை மற்றும் தலைமை அஞ்சலகங்களுக்கு CBS SB MANUVAL (திருத்தப்பட்டது ) வழங்கிடவும் அதன் விலை ஒன்று ரூபாய் 750 என்பதால் மண்டல அலுவகத்தில் அனுமதி பெற்று வாங்குவது 

5.பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் பிற்பகல் அனைத்து கவுண்டர்களிலும் ஸ்டாம்ப் விற்பனை செய்வதை பரீசீலித்து பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் இருக்கும் GDS ஒருவருக்கு கூடுதலாக ஸ்டாம்ப் விற்பனை கொடுத்திட விவாதிக்கப்பட்டுள்ளது 

6.வள்ளியூர் அஞ்சலகத்தில் இருந்து RMS அலுவகத்திற்கு மாலை மெயில் பைகளை அனுப்ப நிரந்தர வழித்தட பேருந்தை அனுமதிக்கவேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட மெயில் பிரிவு இதுபோன்ற ஆக்கப்பூர்வமான வேலைகளை கோட்ட அலுவகத்தில் செய்திடவேண்டும் என்றும் முறையிடப்பட்டது 

7.நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்ட LTC பில் மீதும் துரித நடவடிக்கை எடுக்க கேட்கப்பட்டது 

அஞ்சல் நான்கினை பொறுத்தவரை வள்ளியூர் அஞ்சலகத்திற்கு விரைந்து ஒரு CO வழங்கிட துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பாளையம்கோட்டையில் காலதாமதாகும் மாலை மெயில் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல அனுமதிக்கவேண்டும் வலியுறுத்தபட்டது 

இறுதியாக LSG இடமாறுதல்கள் அம்பை பகுதியில் சென்றமுறை பரிசீலிக்கப்படாத விருப்ப இடமாறுதல்கள் குறித்தும் பேசப்பட்டது .முழு விவரங்கள் மினிட்ஸ் வந்தவுடன் உங்கள் பார்வைக்கு தரப்படும் .

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 



Saturday, January 16, 2021

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

அஞ்சல் நான்கின் மாநில மாநாடு --சென்னை பிப்ரவரி 25.26--2021 

தபால்காரர் சங்கத்தின் மாநில மாநாடு வருகிற 25.02.2021 முதல் 26.02.2021 ஆகிய இரண்டு நாட்கள் சென்னையில் நடைபெறுகிறது .நமது கோட்டத்தில் இருந்து 14 தோழர்கள்  மாநாட்டில் கலந்துகொள்கிறார்கள் 

1.T .புஷ்பாகரன்2.ரெங்கநாதன் (நான்குனேரி )3. பாலகுருசாமி (மகாராஜநகர் ) 4.சீனிவாச சொக்கலிங்கம்  (மகாராஜநகர் ) 5.முருகேசன் 6.அருண்குமார் 7.கங்காதரன் (பாளையம்கோட்டை ) 8.அருணாச்சலம் (திருநெல்வேலி ) 9.மகேஸ்வரன் (IC பேட்டை ) மற்றும் தோழமைக்காக ஜேக்கப் ராஜ் குருசாமி சாகுல் இளங்கோ SK .பாட்சா .அனைவருக்கும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது .24.02.2021 இரவு  NELLAI EXP நெல்லை -சென்னை 26.02.2021 இரவு NELLAI EXP சென்னை -NELLAI . மேலும் வரவிரும்புகிறவர்கள் இதே வண்டியில் முன்பதிவு செய்திடலாம் .மாநாடு சிறக்க வாழ்த்துக்கள் 

தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T .புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 


Friday, January 15, 2021

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! 

நமது தேசிய அஞ்சல் ஆர்.எம். எஸ் .ஓய்வூதியர் முன்னனி சங்கத்தின் முதலாவது மாநாடு ஜனவரி 30 மற்றும் 31 ,2021 யில் மதுரையில் நடைபெறுவதை தாங்கள் அறீவீர்கள் .மாநாட்டில் கலந்துகொள்ள விரும்பும் தோழர்கள் நமது ஓய்வூதியர் சங்க கன்வீனர் திரு .KG .குருசாமி அவர்களிடம் தங்கள் வருகையை உறுதிசெய்யவும் .

30..01.2021 சனிக்கிழமை 9442951585  காலை சரியாக 8 மணிக்கு பாளையம்கோட்டையில் இருந்து புறப்படுகிறோம் .மறுநாள் மதியம் 31.01.2021 ஞாயிறு பிற்பகல் மதுரையில் இருந்து கிளம்பி நெல்லை வருகிறோம் .

நன்றி தோழமையுடன் KG.குருசாமி  கன்வீனர் நெல்லை 

SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் அஞ்சல் மூன்று நெல்லை 

Monday, January 11, 2021

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !

                           தமிழக மாநில சங்கங்களின் அறைகூவலின் படி நாளை 12.01.2021 அன்று நடைபெறும் ஆர்பாட்டத்தில் தாங்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம் .

                               அஞ்சல் நான்கின் மாநில மாநாட்டிற்கு வரவிருக்கும் தோழர்கள் உடனடியாக தங்கள் பெயர்களை பதிவிடுமாறு மீண்டும் நினைவூட்டுகிறோம் .

கடந்த 01.01.2020 முதல் நிறுத்திவைக்கப்பட்ட பஞ்ச்சபடி உயர்வினால் 2020 ஆண்டுகளில் பணிஓய்வு பெறுகின்ற ஊழியர்களின் ஓய்வூதிய பலன்களில் குறிப்பாக விடுப்பு மற்றும் கிராஜூடி இவைகளில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை கலைந்திட வேண்டி மாநிலங்களவை உறுப்பினர் திரு .பினோய் விஸ்வம் அவர்கள் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் .

அஞ்சலகங்களுக்கு வரும் ஓய்வூதியர்களை மிகவும் உரிய மரியாதையுடன் நடத்தப்படவேண்டும் என்றும் சில ஓய்வூதியர்களை தேவைல்லாமல் அலைக்கழிக்கப்படுவதாக வந்த புகாரினை தொடர்ந்து  நமது தென்மண்டல PMG அவர்கள் 07.01.2021 அன்று அணைத்து கோட்டங்களுக்கும் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்கள் 

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 



Saturday, January 9, 2021

 நாளை தபால்காரர் தேர்வுக்கு நமது வேன் மூலம் செல்லுகின்ற தோழர்கள் 10.01.2021 ஞாயிறு காலை சரியாக 4.30 மணிக்கு செல்வதற்கு தயாராக வரும்படி கேட்டுக்கொள்கிறேன் .

வேன் no -TN 74 AA 6622 ரோஷன் டிரைவர் பெயர் இஸ்ரவேல் 9443182453 

புறப்படும் இடம் -பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் 

இந்த பயணத்தை ஒருங்கிணைத்து உங்களோடு வருபவர் தோழர் ஐயப்பன் GDS மஹாராஜநகர் 9600556395 

கீழ்கண்ட தோழர்கள் முன்பதிவு செய்துள்ளார்கள் 

தோழியர் B .பிரேமா பிரியா ,மணிமேகலை சிவசங்கரி காந்திமதி மகேஸ்வரி கிருஷ்ணவேணி மணியம்மை வேணி 

தோழர்கள் ஹரிஹர சுதன் ஐயப்பன் சாய் ராம் 

மேலும் உதவிக்கு ஜேக்கப் ராஜ் --9442123416

Friday, January 8, 2021

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! 
                                         நமது கோட்டத்திற்கு  RULE  38 யின் மூலம் வருகின்ற 10 தோழர்களும் நமது NFPE பேரியக்கத்தின் உறுப்பினர்கள் என்பதனை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்வதோடு அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம் .
                                             நேற்றைய இடமாறுதலில் நமது தோழர்களின் விருப்ப விண்ணப்பங்களை பரிசீலித்து அதில் 7 /8 நமது உறுப்பினர்களுக்கு இடமாறுதல்களை அளித்த நமது கோட்ட    கண்காணிப்பாளர் அவர்களுக்கும் நமது கோட்ட அலுவலக தலைமை யிட ASP(OS ) அவர்களுக்கும் NELLAI NFPE சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .மேலும் விடுபட்ட ஊழியர்களின் விருப்பமனுக்களை (அம்பை உட்பட } விரைந்து பரீசிலித்து தந்திடுமாறு நேற்று மாலை மீண்டும் வலியுறுத்தியிருக்கிறோம் .
                          LSG கோட்ட ஒதுக்கீடு வந்தவுடன் அனைத்தும் பரிசீலிக்கப்படும்(சமூகரெங்கபுரம் உட்பட ) என எதிர்பார்க்கிறோம் .
                             நேற்று நடைபெற்ற தபால்கார்களுக்கான சந்திப்பில் நமது SSP அவர்கள் பேசும்போது யாரையும் நாங்கள் டார்ச்சர் செய்யும் எண்ணம் இல்லை அனைத்தும் அன்பின் வேண்டுகோள்கள் தான் என மிக வெளிப்படையாக பேசியது குறித்து கூட்டத்தில் கலந்துகொண்ட தோழர்கள் தெரிவித்தது உள்ளபடியே நாங்கள் வரவேற்கிறோம் .நிர்வாகத்தின் இந்த அணுகுமுறையைத்தான் நாங்கள் (NFPE ) எதிர்பார்க்கிறோம் .
நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Wednesday, January 6, 2021

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

*இலாகா தேர்வுகள் அனைத்தும் மண்டல அளவில் ஒரே மையத்தில் நடத்திடவேண்டும் என்பது இலாகாவின் புதியவிதி .காரணம் கோட்ட அளவில் நடைபெறும் போது முறைகேடுகளுக்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கருதித்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலாகா நமது சங்கஙக்ளுக்கு விளக்கம் அளித்துள்ளது .ஆனால் தற்சமயம் ஒரே மையத்தில் நடத்தப்படவில்லை .கடந்த தேர்வு கூட மதுரையில் மூன்று மையங்களில் நடைபெற்றது .புதிய நியமண விதிகளின் படி 150 பேருக்கு ஒருமையம் என்று கூறப்படுகிறது .இன்றைய தேதியில் மதுரை தேர்விற்கு செல்ல கன்னியாகுமரியில் இருந்து செல்ல குறைந்தபட்சம் 6 மணிநேரம் நெல்லையில் இருந்துசெல்ல 4 மணிநேரம் பயணிக்கவேண்டியுள்ளது .குறைந்தபட்சம் குமரி நெல்லை தூத்துக்குடி கோட்டங்களை இணைத்து ஒரு தேர்வு மையத்தை ஏற்படுத்திதர வேண்டும் என நமது மாநில சங்கத்தின்மூலம் அகிலஇந்திய சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லுவோம் .இந்த முறை GDS TO POSTMAN தேர்வுக்கு மதுரைக்கு செல்லும் ஊழியர்களுக்காக நமது கோட்ட சங்கம் சார்பாக தனி வாகனம் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது .இதுவரை 8 GDS ஊழியர்கள் தங்கள் வருகையை உறுதிசெய்துள்ளார்கள் .மேலும் வரவிரும்பும் GDS தோழர்கள் இருந்தால் நமது SPM தோழர்கள் தங்கள் அலுவலக GDS ஊழியர்களிடம் இந்த தகவல்களை தெரிவித்து வருகிற 07.01.2021 குள் கோட்ட செயலருக்கு தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம் .

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 


Monday, January 4, 2021

 

Saturday, January 2, 2021

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! அனைவருக்கும் வணக்கம் .

புத்தாண்டினை நாம் கொண்டாடி மகிந்திருக்கிறோம் .இந்த புதிய ஆண்டு அனைத்து ஊழியர்க்ளுக்கும் நல்லதொரு ஆண்டாக அமையட்டும் .நமது கோட்ட சங்கத்தின் கையேடு -2021 அனைவருக்கும் கிடைத்திருக்கும் என நம்புகிறோம் .கிடைக்காதவர்கள் கோட்ட சங்கத்தை அணுகவும் .

நமது கோட்டத்தில் MTS ஆக பதிவு உயர்வு பெற்றவர்களில் இதுவரை 10 /14 தோழர்கள் நமது NFPE பேரியக்கத்தில் இணைந்திருக்கிறார்கள் .மீதமுள்ள தோழர்களை நமது இயக்கத்தில் இணைத்திட அந்தந்த அலுவலக முன்னனி தோழர்கள் உதவிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

தமிழகம் முழுவதும் நடைபெற்றுவரும் டார்கெட் /டார்ச்சர் இவைகளை கண்டித்து வருகிற 12.01.2020 அன்று முதற்கட்ட ஆர்ப்பாட்டத்தை நடத்திட அஞ்சல் மூன்று ,அஞ்சல் நான்கு மற்றும் GDS சங்கங்கள் கூட்டாக அழைப்புவிடுத்துள்ளது நமது கோட்டத்தில் பெரியஅளவிற்கு நெருக்கடிகள் இல்லை என்றாலும் பழைய நாட்களில் தோழர் லிங்கபண்டி  தபால்காரர் ஏர்வாடி அவர்களுக்கு APAR யில் குறைவான மதிப்பெண்களை போட்டுவிட்டு அதை ஊழியருக்கு தெரிவிக்காமலே மறைத்த கயம தனத்தை மாநில சங்க கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளோம் .அதேபோல் பாண்டிச்சேரி கோட்டத்தில் இருந்து நமது கோட்டத்திற்கு இடமாறுதல் பெற்று வந்த தோழியர் பார்வதி அவர்களின் APAR மதிப்பீடு குறைவு என்று MACP  நிறுத்திவைக்கப்பட்டுள்ளதை கோட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம் .இந்த நிலை தொடராமல் இருக்க நாம் ஆரம்பத்திலே அதை கட்டுப்படுத்திடுவோம் .

அதேபோல் ஆய்வுக்கு வந்து சென்றபின் வருகிற INSPECTION REPORT  என்பது குறைகளை /விடுதல்களை சுட்டிக்காட்டி அதை நிவிர்த்திசெய்ய அறிவுறுத்தவேண்டுமே தவிர (நமது புதிய கண்காணிப்பாளர் அவர்கள் வருவதற்க்கு முன்புவரை) IR என்பது சில குறிப்பிட்ட ஊழியர்களை குறிவைத்து விளக்கம் கேட்கும் குற்றப்பத்திரிக்கைக்கு இணையாக வந்திருப்பதையும் நாம் கட்டுப்படுத்தவேண்டும் .ஆகவே பெரிய அளவில் நமது கோட்டத்தில் பாதிப்புகள் இல்லையென்றாலும் மாநிலச்சங்கங்களின் அழைப்பினை ஏற்று 12.01.2020 அன்று நடைபெறும் ஆர்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்கும்படி கேட்டுக்கொள்கிறோம் .

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் ---T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை