...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, July 31, 2019

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                     ஞாயிற்றுக்கிழமை கட்டாய பணிசெய்ய நிபந்த்திக்கும் 
கோட்டநிர்வாகத்தை கண்டித்து நடக்கும் 01.08.2019 ஆர்ப்பாட்டம் வெல்லட்டும் .
                               நமது செயற்குழுவின் முடிவுகளுக்கேற்ப நாம் கொடுத்த 22.07.2019 கடிதத்திற்கு நமது கோட்ட நிர்வாகம் கொடுத்த பதில் (29.07.2019) நேற்று நமக்கு கிடைத்தது .ஞாயிறு ஆதார் பணி ஒரு 
பரிட்சார்த்த முயற்சி என்று கூறியிருப்பதை நாம் ஏற்றுக்கொள்ளமுடியாது .அதேபோல் வேலைப்பளுவுள்ள அலுவலகங்களில் இருந்து ஆட்களை எடுத்து தலைமை அஞ்சலகங்களில் அட்டாச் செய்வதும் ஏற்கமுடியாது -மற்றதெற்கெல்லாம் CPMG /PMG  INSTRUCTIONS என கூறும் நிர்வாகம் HSG 11 மற்றும் HSG 1 OFFICIATING க்கு மட்டும் CPMG அலுவலக உத்தரவை அமுல்படுத்த தயங்குவது ஏன் ? 
                              ஆகவே நேற்றைய கோட்ட அலுவலக கடிதத்திற்கும் நமது கோட்ட சங்கம் சார்பாக பதில் இன்று அனுப்பப்படுகிறது .இதன் நகல்கள் நமது மாநில சங்கத்திற்கும் /மண்டல நிர்வாகத்திற்கும் அனுப்பப்படுகிறது .மாநிலச்சங்கம் உடனடியாக நெல்லை  கோட்ட பிரச்சினைகளில் தலையிட்டு எங்களின் நியாயமான கோரிக்கைகளின் தீர்விற்கு உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம் .
    நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
NFPE
                          ALL INDIA POSTAL EMPLOYEES UNION GR-C                                                                         TIRUNELVELI DIVISIONAL BRANCH
TIRUNELVELI-627002
No.P3-EC/dlgs dated at Palayankottai- 627002 the 31.07.2019

To

The Sr. Supdt. of Post Offices,
Tirunelveli Division
Tirunelveli-627002

Sir,

            Sub:    Resolution passed in the emergent executive committee
                        Meeting of AIPEU Group ‘C’ Tirunelveli Division – urges
                        Attention of the Divisional Administration – reg

            Ref:    1. This Union Lr No. P-3 Dlgs dated 22.07.2019
                        2. SSP, Tirunelveli Division Lr No. Union/Dlgs/Tvl dated 29.07.2019.

            We regret to place on record our disappointment on the approach of the Divisional Administration in dealing the demands of this union.

1.      It was informed that the Aadhaar Enrolment/updation is being carried during Sundays on experimental basis which is a clear violation of Directorate orders.  This is not adopted anywhere else.  Moreover, even it is told as experimental basis by the Administration, it is seen that more advertisement and distribution of pamphlets to households is being done to make it a permanent one.  Already submitted, the staff particularly female employees are deliberately forbidden to deliver their family duty/social obligation which created an unrest among the working force. Developing such negative attitude among the fellow employees will end in poor performance or non-performance.  This is a basic management theory.  Hence, we once again request the Divisional Administration to cancel the order for Sunday duty once for all as giving compensation off will not serve the purpose.

2.      It is informed that considering medical / humanitarian grounds only attachment of PAs were done which is also incorrect.  Such humanitarian or medical consideration was not extended to all instead a selective set of people are benefitted. Even a physically challenged person was thrown out ruthlessly which was set-aside by the Regional Office on appeal.. We can cite such several example for the in-human approach of the Divisional Administration against selective officials and human approach for other selective officials. Further, attachment of PA to the whim and fancy of the administration is against the rules on the subject.  After implementation of the Transfer and Placement Committee, such discretionary power was withdrawn from the SSPOs., and he can act only as per the recommendation of the TPC.  When the rule position is like this, how can the SSPOs., attach the staff through back door that too for a particular officials?  Hence, we would again request the SSPOs., to detach all such attachments and render justice for the suffering employees.

3.      Further, when establishment statistics is shown as a reason for detaching an official from Mundradaippu, why the same yardstick is not followed for all other offices.  Moreover, during melas hundreds of accounts are being opened and number of policies are being procured, due to utter failure of DARPAN, the officials are facing unexplained agony.   These facts are not considered by the Divisional Administration instead some old statistics is shown as reason is nothing but an insult to the officials who die-hard to get the name and fame for the Division by contributing to the achievement of the target.

4.      No one will accept the attachment of LR PA to Divisional Office as the LR PAs are posted specifically for the purpose of leave arrangement.  Moreover, no volunteers were called for.  After the intervention of this union only, volunteers have been called for to hide the violation on the part of the Divisional Administration.

5.      Instructions for local arrangement of HSG-I / HSG-II has been issued by the Circle Office long back.  Till citing one or other reason for implementing the said orders will definitely affect morality of the officials and will not be useful for the Administration to extract work from them.  Hence, this union requests the Divisional Administration to consider the request of the officials who worked more than 2 or 3 decades in this department and issue favourable orders.

6.      Further, the extended working hours of the POS Counter of Tirunelveli HO has not been modified/cancelled though this union brought to the notice of the SSPOs., about the practical difficulties and other problems.

7.      This association still believes that the SSPOs., Tirunelveli Division will consider the demands and issue favourable orders.  To attract the attention of the SSPOs., on the issues raised above, a demonstration will be held on 01.08.2019 in front of Palayankottai HO.

8.      If the issues are not settled, trade union action will be further intensified and the responsibility lies with the Divisional Administration.

Awaiting favourable response….
                                                                
                                              Yours faithfully


                                                                         [S.K.JACOBRAJ]Copy to : 1. Circle Secretary, AIPEU Group C, Tamilnadu Circle, Chennai-600018
                2. Regional Secretary, AIPEU Group C, Dindigul-624002


Tuesday, July 30, 2019

நெல்லையில் அஞ்சல் வாரிய விதிகளுக்கு புறம்பாக ஊழியர்களை ஞா யிற்றுக் கிழமைகளில் பணிசெய்ய உத்தரவிடும் நெல்லை கோட்ட நிர்வாகத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் 
நாள் 01.08.2019 வியாழக்கிழமை மாலை 6 மணி 
இடம் பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் 
தலைமை .தோழர் .SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் NFPE P 3  
                                                       சிறப்புரை 
தோழர் N .சுப்பையா கோட்ட உதவி தலைவர் SRMU  ரயில்வே 
தோழர் முத்துக்குமாரசாமி பொதுச்செயலர் காப்பீடு கழக சங்கம் AIIEA 
தோழர் முத்தையா வங்கி ஊழியர் சங்கம் BEFI
தோழர் N .கணேசன் மாவட்ட செயலர் NFPTE BSNL 
தோழர் கோபாலன் ஓய்வூதியர் சங்கம் BSNLEU  
தோழர் பார்த்தசாரதி TNGEA  நெல்லை
தோழர் SN .சுப்பையா செயலாளர் மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம்  நெல்லை 
தோழர் K .சண்முக சுந்தரராஜா மாவட்ட செயலாளர் AIPRPA 
தோழர் A .பாலசுப்ரமணியன் மாவட்ட தலைவர் AIPRPA 
தோழர் SK .பாட்சா மாநில உதவி தலைவர் NFPE P4
தோழர் .I .ஞான பாலசிங் மாநில அமைப்பு செயலர் AIGDSU 

  தோழர்களே ! நமது கோரிக்கைகளுக்காக ரயில்வே தொழிற்சங்கம் BSNL சங்கம் LIC சங்கம் வங்கி ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் என நெல்லையில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் நமக்கு ஆதரவாக களமிறங்குகின்றன .ஆகவே நெல்லை கோட்டநிர்வாகத்தின் தான்தோன்றி தனமாக ஞாயிறுகளில் பணிக்கு வரச்சொல்லும் துன்புறுத்தலை தடுத்து நிறுத்துவோம் .
      நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ்  கோட்ட செயலர் NFPE P3 நெல்லை 

Secretary Posts inaugurates 3 day’s Head of Circles Conference in Srinagar
July 29, 2019 :
SRINAGAR: A three day Conference of Heads of Circles, Department of Posts today commenced at Srinagar which was inaugurated by Secretary Posts, Government of India A N Nanda at Hotel Taj Vivanta.

Director General (Posts), Members of Postal Service Board, Chief Postmasters General from across the country alongwith others senior Officers of Department of Posts are participating in the Conference which is a platform for policy formulation of Department of Posts besides reviewing the last year's targets/ achievement and fixing targets for the current financial year.

While inaugurating the Conference by lighting the traditional lamp Secretary Posts, Government of India A N Nanda in his keynote address said the Department of Posts has emerged as a key player where it is not only doing its own business but also fulfilling in needs of others. Describing the network of Department of Posts as unparalleled and a Post Office as face of Central Government in remote areas, he said besides ensuring the target of last mile delivery, Department of Post has revamped its network at Branch Post Office level by way of technology induction for smooth implementation of various citizen centric schemes whether it is Aadhaar Enrolment, Passport, Direct Benefit Transfer (DBT) etc.

Secretary Posts also envisioned the plan for the Department for future with special focus on soft skills training, technology utilization aimed at customer satisfaction and tapping the business opportunities. A Special Cover on "Kashmir Mallow" was also released on the occasion by A N Nanda.

Earlier, Director General, Department of Posts, Meera Handa also spoke on the occasion and briefed about the various steps taken by the Department of Posts in the recent past. She described the launch of India Post Payments Bank (IPPB) as unprecedented which has resulted into the opening of over 85 lacs accounts so far.

P D Tshering, Chief Postmaster General, J&K Circle while welcoming the delegates said as the Conference is being held at Srinagar it is an opportunity for the J&K Circle to learn, make network with various stakeholders responsible for the postal operations throughout the country.

அன்பார்ந்த தோழர்களே !
                     24 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போஸ்டல் JCA அழைப்பினை ஏற்று நேற்று(29.07.2019)  திருநெல்வேலி தலைமை அஞ்சலகம் முன்பு மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .ஆர்ப்பாட்டத்திற்கு RMS -R 3 உதவி செயலர் தோழர் பழனி சுப்பிரமணியம் அவர்கள் தலைமை தாங்கினார்கள் .ஆர்ப்பாட்டத்தை விளக்கி தோழர் S .ராஜேந்திரன் (FNPO ) தோழர் SK .ஜேக்கப் ராஜ் ஆகியோர் பேசினார்கள் .தோழர் SK .பாட்சா மாநிலஉதவி தலைவர் நன்றிகூற ஆர்ப்பாட்டம் முடிவுற்றது .மிக குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட திருநெல்வேலி தலைமை அஞ்சலக ஊழியர்களுக்கும் குறிப்பாக SBCO மற்றும் SRO ஊழியர்களுக்கும் கூட்டு போராட்டக்குழுவின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .மேலும் நமது ஆர்ப்பாட்ட செய்திகளை வெளியிட்ட மாலைமலர் தினகரன் தினமலர் தினமணி மற்றும் தினத்தந்தி பத்திரிக்கை நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம் .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Monday, July 29, 2019

அன்பார்ந்த தோழர்களே !
அ ஞ்சல் பகுதியில் தேங்கி கிடக்கும் கோரிக்கைகளை வலியுறுத்தி NFPE -FNPO சம்மேளனங்கள் இனைந்து வெளியிட்ட போராட்ட திட்டங்கள்குறித்து ஏற்கனவே தெரிவித்திருந்தோம் . அதன் முதற்கட்டமாக வருகிற திங்கள் அன்று ஆர்ப்பாட்டம் நடத்திட கேட்டுகொள்ளபட்டுள்ளது அதன்படி இன்று 
மதியம் ஒருமணி அளவில் (உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் ) திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்தில் நடைபெறுகிறது இந்த ஆர்பாட்டத்தில் வாய்ப்புள்ள அனைத்து தோழர்களும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் 
                                                       கோரிக்கைகள் 
1.CBS/CSI/RICT /IPPB இவைகளால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை நீக்கிடவேண்டும் 
2.வாரத்தில் 5 நாள் வேலை நாளாக அறிவிக்கவேண்டும் 
3.MACP க்கன BENCHMARK நீக்கப்படவேண்டும் 
4.புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யவேண்டும் .
5.ஊழியர்களுக்கு சாதகமாக வழங்கப்பட்ட MACP மற்றும் GDS பென்ஷன் போன்ற உச்சநீதிமன்ற தீர்ப்புகளை அமுல்படுத்தவேண்டும் 
6.நிர்வாகப்பிரிவு /SBCO  ஊழியர்கள் அனைவருக்கும் குரூப் B தேர்வெழுத அனுமதிக்கவேண்டும் 
                 உள்ளிட்ட 24 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் உணவு இடைவேளை ஆர்பாட்டத்தில் தாங்கள் அனைவரும் கலந்து கொள்ளும் படி கேட்டுக்கொள்கிறோம் .
                               நன்றி .
               தோழமையுடன் கூட்டு போராட்டக்குழு  (POSTAL JCA )
                                 

Thursday, July 25, 2019

அஞ்சல் கூட்டு போராட்டக்குழு (NFPE -FNPO) அறிவித்துள்ள போராட்ட அறிவிப்புகள் 
                          அஞ்சல் துறையில் தேங்கிக்கிடக்கும் பிரச்சினைகளை தீர்த்திட வலியுறுத்த கடந்த 13.07.2019 அன்று புதுடெல்லியில் கூடிய போஸ்டல் JCA (NFPE -FNPO) கீழ்கண்ட போராட்ட திட்டங்களை அறிவித்துள்ளன .
29.07.2019  -ஆர்ப்பாட்டம் -PJCA தயாரித்துள்ள கோரிக்கை மனுவினை கோட்ட அதிகாரிகளிடம் அளிப்பது 
21.08.2019 கோட்ட அளவில் தர்ணா 
11.09.2019 மாநில அளவில் தர்ணா 
04.10.2019 டெல்லியில் தர்ணா 
                                            ஒவ்வொரு வருடமும் இதேபோல் ஆர்ப்பாட்டத்தில் தொடங்கி டெல்லிவரை தர்ணாவோடு முடிகிறது நமது போராட்டங்கள் .ஆனால் அஞ்சல் துறையில் ஊழியர்களின் கோரிக்கைகள் அப்படியே இருக்கிறது 
வாரத்தில்  5.நாள் வேலை -என நமது கோரிக்கை -ஆனால் வாரம் முழுவதும் நமக்கு வேலை 
MACP பதவிஉயர்விற்கான பெஞ்ச் மார்க் நீக்கப்பட வேண்டும் 
காலிப்பணி இடங்களை நிரப்பிடவேண்டும் 
விடுபட்ட பகுதியினருக்கு கேடர் சீரமைப்பை அமுல்படுத்து 
உள்ளிட்ட 24 அம்ச கோரிக்கைகளுக்கு உயிர் கொடுப்போம் .
இதுகுறித்தும் -நமது செயற்குழு முடிவுகள் குறித்தும் விரிவான அறிக்கைகள் விரைவில் வெளியிடப்படும் .
நன்றி .தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Wednesday, July 24, 2019

விடுமுறைகளில் ஆதார் சேவை -தொடர்கிறது நம் முயற்சி 
பாளையம்கோட்டையில் பணிபுரியும் ஊழியர்களின் குறிப்பாக பெண் ஊழியர்களின் நிம்மதியை குலைக்கும் ஆதார் பணி ஞாயிறன்றும் நடைபெறும் என்ற உத்தரவு இன்னும் தொடர்கிறது    மாநில சங்கம் வரை நாம் பிரச்சினையை எடுத்து சென்றிருக்கிறோம் .இதற்கிடையில் கடந்த 11.07.2019 அன்று மதுரை மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற கோட்ட அதிகாரிகளின் கூட்ட நடவடிக்கை குறிப்புகள் வந்துள்ளன .அதில் ஆதார் சேவைகுறித்து எடுக்கப்பட்ட முடிவுகள் கீழே தரப்பட்டுள்ளன .
AADHAAR -Wide publicity should be given in the public for the available service at pos toffices.Instruction "Aadhaar Enrolement and updation work are done here" should be displayed in all Aadhaar centres 5 Aadhaar enrolements and 16 updations  are to be done per day per centres
 1.ஞாயிற்று கிழமைகளில் ஆதார் சேவைக்குறித்து மாநிலநிர்வாகம் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது 
2.ஞாயிற்றுக்கிழமைகளில் ஊழியர்களை கட்டாயப்படுத்தி பணிக்கு வர சொல்வது ஒருவித Harassment  
3. ஆதார் திருத்தத்தில் ஏதேனும் தவறு நிகழ்ந்தால் அதன் இழப்பை ஊழியர்களின் தலையில் தான் நிர்வாகம் திணிக்கும் 
4.பாளையம்கோட்டை போன்ற பெரிய கட்டிடத்தில் ஒரு ஒதுக்கு புறத்தில்  பெண் ஊழியர்கள் தனியாக பணியாற்ற நிர்பந்திப்பது ஏற்புடையதல்ல .பாதுபாப்பும் இல்லை 
         நேற்றே தோழியர்கள் நமது SSP அவர்களிடம் நேரிடையாகவே சென்று முறையிடவேண்டும் என்ற நிலைக்கு வந்துள்ளனர் .இந்த நிலையில் நமது கோட்ட சங்கமும் அனைத்து சேனல்களையும் பயன்படுத்திவிட்டது .செயற்குழு தீர்மானம் -மண்டல மற்றும் மாநில செயலர்களுக்கு பிரச்சினையை தீர்திடக்கோரி கடிதங்கள் தொலைபேசி வேண்டுதல்கள் என நம் முயற்சியும் நடந்துகொண்டிருக்கிறது .இந்நிலையில் நமது பகுதி மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்களின் கவனத்திற்கும் இதை கொண்டுசெல்ல முடிவெடுத்திருக்கிறோம் .
                              நமது செயற்குழு தீர்மானத்திற்கு நமது கோட்ட அலுவகத்தில் இருந்து எழுத்துப்பூர்வமான பதில் வரும்வரை தோழர்கள் /தோழியர்கள் பொறுமைகாத்திட வேண்டுகிறோம் .

புதுப்புது சுமைகளுக்கு இடையில் கணக்கு பிரிவு ஊழியர்கள் .....(ஒரு .கணக்காளரிடமிருந்து )
தலைமை அஞ்சலகங்களில் கணக்கு பிரிவில் CSI தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு ஊழியர்களின் salary மற்றும் பிற பண  பட்டுவாடா இனங்கள்  சென்னையில் உள்ள ஆடிட் அலுவலகம் மூலமாக credit செய்யப்படுகிறது.  இதனால் accounts branch ல் வேலை குறைந்துள்ளது என்று நிர்வாகம் ஆள் குறைப்பு செய்ய  மணிலா நிர்வாகம் முனைப்பு காட்டுகிறது ஆனால் உண்மை நிலை வேறாக உள்ளது
ஒவ்வொரு மாதமும் மாஸ்டர் டேட்டா வில் மேற்கொள்ள வேண்டிய correction, addition மற்றும் deletion விபரங்களை தலைமை அஞ்சலக கணக்கு பிரிவில் இருந்து ஆடிட் office க்கு அனுப்புகிறார்கள்.  இவைகளை audit office ல்  upload செய்தபின் மீண்டும் தலைமை அஞ்சலக கணக்கு பிரிவுக்கு அனுப்பி சரி பார்க்க சொல்கிறார்கள். 
Audit officeல் செய்த வேலையை அஞ்சலகத்தில் சரி பார்க்க வேண்டியுள்ளது.   
ஒவ்வொரு மாதமும் 23 தேதியிலிருந்து simulation, correction, confirmation அண்ட் live run என்று HO கணக்கு பிரிவு ஊழியர்கள் அவதிக்குள்ளாக்க படுகிறார்கள்.
 இதற்கு பழைய நடைமுறை படி HO விலேயே drawal  செய்து credit கொடுத்து விடலாம். Salary bill லை audit office க்கு மெயில் செய்து upload செய்து கொள்ள செய்யலாம் .                    
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Tuesday, July 23, 2019

 அன்பார்ந்ததோழர்களே !
 20.07.2019 அன்று நடைபெற்ற நமது கோட்ட சங்க செயற்குழு முடிவுகள் நேற்று நமது SSP அவர்களிடம் .கொடுக்கப்பட்டுள்ளது .கூடியவிரைவில் இதற்கான முடிவுகளை எழுத்துப்பூர்வமாக நமக்கு அளிக்கப்படும் என்று நமது SSP அவர்கள் தெரிவித்துள்ளார்கள் .இதற்கிடையில் நமது மண்டல /மாநில செயலர்களுக்கும் தீர்மானம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது .தீர்வினை நோக்கி நம்பிக்கையோடு காத்திருப்போம் .இதோ தீர்மான நகல் உங்கள் பார்வைக்கு  ..தோழமையுடன் SKJ 

                  அகிலஇந்திய அளவில்  ஊழியர்களின் ஒட்டுமொத்த அங்கீகாரம் பெற்றது நமது NFPE  மட்டுமே !  
அஞ்சல் துறையில் நடைபெற்ற தொழிற்சங்கங்களுக்கான அங்கீகார தேர்தல் முடிவுகளை அஞ்சல் வாரியம் நேற்று பல்வேறு நிர்பந்தங்களுக்கு இடையே வெளியிட்டது .அதன்படி 
நமது NFPE சங்கம் மீண்டும் அகிலஇந்திய அளவில் முதலிடத்தை பெற்றது . FNPO சங்கமும் தனது அங்கீகாரத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளது .BPEF சங்கத்திற்கு எழுத்தர் மற்றும் தபால்காரர் சங்கம் என எதிலும் தேவைப்படும் குறைந்தபட்ச உறுப்பினர்களின் ஆதரவு பெறாததால் BPEF சங்கம் தனது அங்கீகாரத்தை இழக்கிறது .
                     புதிய தொழிற்சங்க அங்கீகார விதிப்படி 2015 யில் நடைபெற்ற உறுப்பினர் சேர்ப்பின் முடிவுகளை அஞ்சல் வாரியம் வெளியிட இருந்த தடைகள் முற்றிலுமாக விலக்கப்பட்டதன்பின்னணியில் அஞ்சல் வாரியம் நேற்று இந்த அறிவிப்பை வெளியிட்டது .
                   தமிழகம் தந்திட்ட மகத்தான வெற்றி -நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் முடிவுகளை போல் அஞ்சல் ஊழியர்களும் தீர்க்கமான தீர்ப்புகளை வழங்கியுள்ளனர் .
தமிழகத்தில் அஞ்சல் மூன்று மற்றும் அஞ்சல் நான்கு 
 பெற்ற ஆதரவை பாரீர் !
மொத்த எழுத்தர்கள் --                     9040 
NFPE-P3  பெற்ற வாக்குகள் ---------6721    
FNPO P3  பெற்ற வாக்குகள் -------- 1824    
BPEA P3  பெற்ற வாக்குகள்-------        94   

தபால்காரர் & MTS அஞ்சல்நான்கு 
மொத்தஉறுப்பினர்கள்  --             6136
NFPE-P4  பெற்ற வாக்குகள் ---------3770
FNPO P4பெற்ற வாக்குகள் --------    1371
BPEA  P4  பெற்ற வாக்குகள்-------      105
         இனி வருங்காலங்களில் இந்த வெற்றி பயணம் தொடர்வதற்கு உங்களின் ஆதரவை தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் .உறுப்பினர் சேர்ப்பில் கோட்ட சங்கத்தோடு இனைந்து பணியாற்றிய உங்கள் அனைவருக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

  


Monday, July 22, 2019

                          அம்பை கிளையின் 33 வது கிளை மாநாடு 
  அம்பாசமுத்திரம் அஞ்சல் மூன்றின் கிளை மாநாடு 21.07.2019 அன்று அம்பாசமுத்திரம் தலைமை அஞ்சலகத்தில் வைத்து சிறப்பாக  நடைபெற்றது .மாநாட்டில் நமது மாநில தலைவர் 
தோழர் செல்வ கிருஷ்ணன் மண்டலச்செயலர் தோழர் K .சுப்பிரமணியன் நெல்லை கோட்டசெயலர் தோழர் SK .ஜேக்கப் ராஜ் ஓய்வூதியர் சங்க மாநில உதவிசெயலர் தோழர் S .தியாகராஜன் உள்ளிட்ட முன்னனி நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார்கள் .இறுதியாக மாநாட்டில் புதிய நிர்வாகிகளாக 
தோழர் R .கண்ணன் தலைவராகவும் தோழர் தியாகராஜ பாண்டியன் செயலராகவும் தோழியர் காளீஸ்வரி அவர்கள் நிதிச்செயலராகவும் தேர்வு செய்யப்பட்டார்கள் .புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் நெல்லை கோட்டசங்கத்தின் சார்பாக வீர வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் .
                                நேற்றைய மாநாட்டில் தோழர்களின் விருப்பத்தின்படியே நெல்லைக்கு -அம்பைக்கும் உள்ள நெருக்கம் இன்னும் அதிகரித்துள்ளது .ஊழியர்களின் நலனுக்காக இணைந்து செயல்படுவோம் என்ற முடிவுக்கு மாநாட்டின் வெற்றி செய்திதான் சாட்சியாகும் .
இந்த வெற்றி பயணம் தொடர வாழ்த்துக்கள் 
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கொட்ட செயலர் அஞ்சல் மூன்று நெல்லை 

 அன்பார்ந்த தோழர்களே !
                              கோட்ட சங்க செயற்குழு கூட்டம் 
நமது கோட்ட சங்கத்தின் செயற்குழு கூட்டம் 20.07.2019 சனிக்கிழமை அன்று திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்தில் கோட்ட தலைவர் T .அழகுமுத்து அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது ..
   கூட்டத்தில் நாம் ஏற்கனவே அறிவித்தபடி நமது கோட்ட பிரச்சினைகள் அனைத்தும் விரிவாக விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது .தீர்மானத்தின் நகல் இன்று நமது கண்காணிப்பாளர் அவர்களிடம் நேரிடையாக கொடுக்கப்படும் ..நமது கோரிக்கைகளை நிச்சயம் நிர்வாகம் தீர்த்துவைக்கும் என நம்புகிறோம் .இதற்கிடையில் நேற்று அம்பாசமுத்திரம் கிளை மாநாட்டிற்கு வந்த நமது மண்டலச்செயலர் தோழர் K.சுப்ரமணியம் அவர்களிடம் நமது தீர்மானத்தின் நகல் கொடுக்கப்பட்டுள்ளது .அவர்கள் இன்று (22.07.2019)காலை 11 மணிக்கு  PMG அவர்களை சந்திப்பதாகவும் நிச்சயம் நமது பிரச்சினைகள் குறித்து PMG அவர்களிடம் எடுத்துப்பேசி நிறைவேற்றி தருவதாகவும் மேடையிலே உறுதி அளித்தார்கள் .தீர்மானங்கள் குறித்த முழுவிவரங்கள் விரைவில் வெளியிடப்படும் .இறுதியாக தோழர் 
G.புருஷோத்தன் அவர்கள் நன்றி கூற செயற்குழு இனிதே முடிவுற்றது .பல்வேறு வேலைப்பளுகளுக்கு இடையில் செயற்குழுவில் கலந்துகொண்ட அனைவருக்கும் கோட்ட சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம் .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Saturday, July 20, 2019

                                                முக்கிய செய்திகள் 
ஆதார் பணி பரபரப்பு முடிவடையாத நிலையில் மீண்டும் ஒரு  உத்தரவு நமது கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது .அதன்படி திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்தில் MPCM கவுண்டர் மேலும் ஒருமணிநேரம் நீட்டிக்க வேண்டுமாம் .அதாவது மாலை 3.30 மணிவரை இருந்த வேலைநேரம் மாலை 4.30 வரை என மாற்றப்பட்டுள்ளது .திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்தில் ஒரு கவுண்டர் மட்டும் தான் .மாலை 5.10 மணிக்கு மெயில் DESPATCH செய்யவேண்டும் .4.30 வரை புக்கிங் முடித்துவிட்டு BPC  உட்பட இரண்டு கவுண்டர் தபால்களை 30 நிமிடத்தில் DESPATCH செய்திடமுடியுமா ? ஏற்கனவே கடந்த 11.11.2017 யில் மண்டல உத்தரவு என வேலைநேரங்கள் அதிகப்படுத்தப்பட்டதும் பின்னர் அந்த உத்தரவு ரத்துசெய்யப்பதும் நினைவிருக்கும் .இன்று CO உத்தரவு என்கிறார்கள் .ஏற்கனவே பாளையம்கோட்டையில் இரவு 8 மணிவரை இருக்கிறது .பக்கத்தில் RMS யில் 24 மணிநேரமும் புக்கிங் இருக்கிறது .
-                                 ---------------------------------------------------------
  நமது கோட்டத்தில் உள்ள அனைத்து காசாளர் பதவிகளை நிரப்பிடவேண்டும் என்ற நமது தொடர் வேண்டுகோளுக்கிணங்க முதற்கட்டமாக தலைமை அஞ்சலகங்களில் உள்ள காசாளர் பதவிகளுக்கு விருப்பமனுக்கள் கோரப்பட்டுள்ளன .அதேபோல் கோட்ட அலுவலகத்தில் OA மற்றும் அக்கௌன்டன்ட் பதவிகளுக்கும் விருப்பமனுக்கள் கோரப்பட்டுள்ளன .
                                  -------------------------------------------
                              இன்று மாலை திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்தில் நடைபெறும் நமது கோட்ட சங்க செயற்குழுவிற்கு செயற்குழு உறுப்பினர்கள் மட்டுமல்ல நமது உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொள்ளவும் கேட்டுக்கொள்கிறோம் .
                                                           மரங்கள் ஓய்வை விரும்பினாலும் 
                                                            காற்று அதை அனுமதிப்பதில்லை 
நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்டசெயலர் நெல்லை Friday, July 19, 2019

                                                   முக்கிய செய்திகள் 
11.08.2019 அன்று நடைபெறவிருந்த LGO தேர்வுகள் மற்றும் 25.08.2019 அன்று நடைபெறவிருந்த தேர்வுகள் அடுத்த அறிவிப்பு வரும்வரை ரத்துசெய்யப்பட்டுள்ளது .

                          NFPE -அம்பாசமுத்திரம் கிளை மாநாடு வெல்லட்டும் 
அம்பாசமுத்திரம் அஞ்சல் மூன்றின் கிளை மாநாடு வருகிற 21.07.2019 அன்று அம்பை தலைமை அஞ்சலகத்தில் வைத்து நடைபெறுகிறது .மாநாடு சிறக்க நெல்லை NFPE வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது 
                           ஞாயிறன்று ஆதார் பணிகளை மேலும் மேலும் விரிவுபடுத்தநினைக்கும் மாநில நிர்வாகத்தின் முடிவினை கண்டித்து நமது மாநிலச்சங்கம் மீண்டும் CPMG அவர்களுக்கு 17.07.2019 அன்று கடிதம் எழுதியுள்ளது .விடுமுறைநாட்களில் ஊழியர்களை பணிக்கு கட்டாயப்படுத்தி அழைப்பது ஒருவித துன்புறுத்தல் தான் என மாநிலச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது .இதற்காக மாநிலம் தழுவிய இயக்கங்களை நடத்திட நெல்லை கோட்ட  சங்கம் மாநிலச்சங்கத்தை கேட்டுக்கொள்கிறது 
                                     இந்தநிலை தொடரக்கூடாது 
   மனஉளைச்சல் வேலைப்பளு ஓய்வின்மை என அடுத்தடுத்த தாக்குதல்களினால் நாம் நமது கோட்டத்தில் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் மூன்று தோழர்களை இழந்துநிற்கின்றோம் .
  அன்று நான்குனேரி ஞான சேகரன் _ அடுத்து களக்காடு கண்ணன் சமீபத்தில் தோழர் கோபாலகிருஷ்ணன் இந்த பட்டியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும் ..நம்மால் ஒரு மலர் மாலையை தவிர வேறன்ன அந்த குடும்பங்களுக்கு செய்திடமுடிந்தது !
                                       ஆட்பற்றாக்குறை -வேலைப்பளுவுள்ள அலுவலகங்களில் மேலும் ஆட்களை எடுப்பது அல்லது குறைப்பது /இரவு எட்டுமணிவரை அலுவகத்தில் காத்துக்கிடப்பது என்ற அவலநிலைகள் போக்கப்படவேண்டும்  சம்பந்தப்பட்ட ஊழியர்கள் தங்களது குறைகளை எழுத்துப்பூர்வமாக நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லவும் அதன் தகவல்களை கோட்ட சங்கத்திற்கும் தெரிவித்திட கேட்டுக்கொள்கிறோம் .தொழிலாளி கையேந்தும் பிச்சைக்காரன் அல்ல அவர்கள் இந்த மண்ணின் உயிர்சத்து என்பதனை உணர்ந்துகொள்வோம் .
                                               நிமிரும் பொழுதெல்லாம் 
                                              நசுக்க படுவதற்கு 
                                              தொழிலாளி சாக்கடை புழுக்கள் அல்ல 
                                             சரித்திர சக்கரங்கள் 
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்டசெயலர் நெல்லை 

Thursday, July 18, 2019

                                                                    NFPE
                                 அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் -குரூப் C
                                   திருநெல்வேலி கோட்டக்கிளை -627002
---------------------------------------------------------------------------------------------------------
                                            அவசர செயற்குழு கூட்டம்
நாள் -20.07.2019  மாலை 6 மணி
இடம் திருநெல்வேலி தலைமை அஞ்சலகம்
தலைமை .தோழர் T .அழகுமுத்து அவர்கள் கோட்டத்தலைவர்
பொருள் ; 1.ஞாயிறு அன்றும் ஆதார் பணிசெய்திடும் உத்தரவு
                     2.விதிகளுக்கு புறம்பாக PAகளை  அட்டச்மெண்ட் செய்வது
                     3. LRPA வை கோட்ட அலுவலகத்தில் பணியாற்றிட அனுமதிப்பது
                     4.MMM ஊழியர்களின் பிரச்சினைகள்
                     5.HSG II மற்றும் HSG I பதவிகளில் OFFICIATING
                     6.இன்னும் பிற (தலைவர் அனுமதியுடன் )
 தாங்கள் தவறாது செயற்குழுவில் கலந்து கொண்டு தங்கள் மேலான கருத்துக்களை வழங்கிடுமாறு கேட்டு கொள்கிறோம் .
                                                                நன்றி
                                                                                                               தோழமையுடன்

      15.07.2019                                                                                        SK .ஜேக்கப் ராஜ்
      நெல்லை   1                                                                                   கோட்ட செயலர்
                                                                                  


அன்பார்ந்த தோழர்களே !
                             கோட்ட சங்க அவசர செயற்குழு கூட்டம் 
நாள் 20.07.2019   நேரம் மாலை 6 மணி 
இடம் திருநெல்வேலி தலைமை அஞ்சலகம் 
தலைமை தோழர் T .அழகுமுத்து அவர்கள் கோட்டத்தலைவர் 

பொருள் : 1. ஞாயிறு அன்றும் ஆதார் பணிகள் செய்திட உத்தரவு     
                        2.இலாகா விதிகளுக்கு  முரனாக    அட்டாச்மெண்ட்                                          என்ற   பெயரில் இடமாறுதல்கள் 
                         3.LRPA வை கோட்ட அலுவலகத்தில்   நிரந்தர பிரிவில்                                           பணியாற்றிட அனுமதிப்பது 
                          4.MMS ஊழியர்களை மதுரைக்கு MMS மதுரை நிர்வாகம் 
                           கேட்காத நிலையிலும் அனுப்பிவைப்பது 
                          5.DGL/LRPA பட்டியல் திருத்தங்களை விரைந்து  
                           முடிப்பது 
                         6. இன்னும் பிற (தலைவர் அனுமதியுடன் )

             நமது கோட்டத்தில் ஒரு அசாதாரண சூழல் உருவாகியிருக்கிறது .மேலதிகாரிகள் பிறப்பித்த வாய்மொழி உத்தரவை ஏற்று ஞாயிற்று கிழமைகளிலும் ஆதார் பணிசெய்திட பாளையம்கோட்டை யில் உத்தரவு -இதுகுறித்து நமது மாநிலசெயலர் அவர்கள் மூலம் CPMG அலுவலகத்தில் விசாரித்ததில் எங்கெல்லாம் NPO செயல்படுகிறதோ அந்த தலைமை அஞ்சலகங்களில் ஆதார் சிறப்பு பிரிவு தொடங்கதான் சொல்லப்பட்டது என்றும் பாளையம்கோட்டையில் BPC இரவு 8 மணிவரை செயல்படுவதை இவர்கள் தவறாக புரிந்துகொண்டார்கள் என்ற தகவல்கள் நமக்கு கிடைத்திருக்கிறது .மேலும் மதுரைக்கு வந்த நமது CPMG அவர்களும் சீனியர் போஸ்ட்மாஸ்டர்உள்ள அலுவலகங்களில் ஆதார் பணிகளை செய்யலாம் என்ற ஆலோசனைகளை மட்டும் தெரிவித்துள்ளார்கள் .ஆகவே பாளையில் தொடங்கப்பட்ட ஞாயிறு பணிகளை ரத்து செய்திடவேண்டும் 
  2. இலாகா விதிகளுக்கு முரணாக பல தோழர்கள் ஒவ்வொரு அலுவலகத்தில் அட்டாச் செய்யப்பட்டுள்ளார்கள் .விளைவு அந்த அலுவலகங்களுக்கு வேறு அலுவலகத்தில் இருந்து டெபுடேஷன் .மேலும் வேலைப்பளு அதிகமுள்ள மூன்றடைப்பு அலுவலகத்தில் இருந்து பாளையங்கோட்டைக்கு ஊழியர்கள் அட்டாச் செய்வது ஏன் ?யாருக்கோ உதவி செய்வதாக மூன்றடைப்பு  போன்ற வேலைப்பளு அதிகமுள்ள அலுவகத்தில் தனி ஒரு ஆள் பணி செய்திடுவது .நியாயமா ?
 3. LRPA ஊழியர்களை கோட்ட அலுவகத்தில் நியமிக்கக்கூடாது என்ற இலாகா விதியை மீறி தொடர்ந்து LRPA வை DO வில் வைத்துக்கொண்டால் பாளையில் ஒரு LRPA மட்டுமே இருக்கிறார் அதனால் தொடர்ந்து பாளையங்கோட்டை யில் நிரந்தர சீனியர் ஊழியர்கள் அலைக்கழிக்க படுகிறார்கள் .
 4.நமது கோட்டத்திற்கு வரவேண்டிய RULE 38 ஊழியர்கள் இன்னும் முழுமையாக வந்துசேரவில்லை .இதுகுறித்தும் மாநில சங்கத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு RULE 38 ஊழியர்கள் அனைவரையும் விரைந்து நமது கோட்டத்திற்கு வந்திட நடவடிக்கை எடுக்கவேண்டும் .
5. MMS யில் இரண்டு வேன் களை ஆயுட்காலம் முடிவடைந்ததை காரணம் காட்டி மதுரைக்கு அனுப்பிவைத்ததும் அங்கே நமது  ஓட்டுனர்களை மதுரை MMS நிர்வாகம் கேட்காமலே நாமாகவே அவர்களை மதுரையில் இருக்கட்டும் என பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவேண்டும் 
                தோழர்களே ! மேற்கண்ட பிரச்சினைகள் போக மீதமிருக்கும் பிரச்சினைகளைம் செயற்குழுவில் விவாதித்து வருகிற 21.07.2019 அன்று அம்பாசமுத்திரம் கிளை மாநாட்டிற்கு வருகிற நமது மாநிலசெயலர் அவர்களிடம் ஒரு மெமோரண்டம் கொடுத்து வருகிற திங்கள்கிழமை PMG அவர்களை சந்தித்து நமது கோட்ட பிரச்சினைகளை விவாதித்து தீர்வு கண்டிட அனைவரும் தங்களின் 
மேலான கருத்துக்களை வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் .
          ஒன்றுபட்ட போராட்டம் -ஒன்றே நமது துயரோட்டும் .
வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Wednesday, July 17, 2019

                                       நெல்லை செய்திகள் 
நேற்று நடந்த LSG பதவி உயர்விற்கான இடமாறுதல் கலந்தாய்வு  கூட்டத்தில் 12 பேர் பங்கேற்றனர் .அதில் 5 பேர் பதவி உயர்வை ஏற்றுள்ளார் .
தோழர் சுப்ரமணியம் DSM -டோனவூர் 
தோழர் அண்ணாமலை பாப்பாக்குடி 
தோழியர் பிரேமலதா கங்கைகொண்டான் 
அம்பை பகுதியில் தோழர் பாலசுப்ரமணியன் மற்றும் பார்வதி 
அனைவருக்கும் NELLAI NFPE தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது 

                          தபால் துறை தேர்வுகள் இனி அனைத்தும் பிராந்திய மொழிகளில் நடத்தப்படும் --14.07.2019 அன்று இந்தி மற்றும் ஆங்கிலம் மூலம் நடைபெற்ற தேர்வு ரத்தாகிறது 
   ஒட்டுமொத்த தமிழக அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முயற்சிகளுக்கு நன்றி !நன்றி ! 
 நேற்று மட்டுமே மாநிலங்களவை நான்குமுறை நமக்காக ஒத்திவைக்கப்பட்டது .இதேபோல் மத்தியஅரசு மற்ற துறைகளின் தேர்வினையும் மாநில மொழிகளில் நடத்திட புதிய கோரிக்கை வலுபெற்றுவருகிறது .
                             தமிழா இருப்பாய் -நெருப்பாய் 
 கடந்த  11.7.2019 வியாழன் அன்று  அஞ்சல் வாரியம்   தேர்வு என்பது இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இனி நடைபெறும் என வெளியிட்டது .அதில் அறிவித்த இருமொழி என்பது ஆங்கிலம் மற்றும் ஹிந்தி என்பதுமட்டுமே .இந்த பின்னணியில் 
 தமிழகத்தில் உள்ள மக்கள்  பிரதிநிதிகளிடம்  இந்த பிரச்சினை கொண்டுசெல்லப்பட்டு பாராளுமன்ற இருஅவைகளிலும் தமிழக சட்டமன்றத்தில் கவனஈர்ப்பு தீர்மானம் என பிரச்சினை சூடு பிடித்தது 
பின்னர் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் கடுமையான கண்டனங்கள், அறிக்கைகள், 
 என ஒட்டுமொத்த தமிழினத்தின் குரலாக மாறியது .
இதற்கிடையே நேற்று ராஜ்யசபாவில் கடும் அமளி ஏற்பட்டது .முன்னதாக நேற்று காலை மாநிலங்களவை உறுப்பினர் திருமதி விஜிலா சத்தியானந்த் அவர்கள் தொலை பேசியில் தொடர்புகொண்டு அஞ்சல் துறை தேர்வு சம்பந்தமான அரசாங்க அறிவிப்புகள் கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்மொழியில் உள்ள வினாத்தாள் உள்ளிட்டவைகளை  உடனே அனுப்பிவைத்திட கோரினார்கள் .நானும் நமது நண்பர்கள் பலரிடம் தொடர்புகொண்டு இறுதியாக அண்ணன் இல .சண்முகநாதன் முன்னாள் மாநில உதவி தலைவர் மற்றும் தோழர் ராமேஸ்வரன் தபால்காரர் திருநெல்வேலி மற்றும் சில நண்பர்கள் அனுப்பிவைத்த நகல்களை வாட்ஸாப்ப் யில் அனுப்பிவைத்தேன் 
இன்று காலை பத்திரிக்கை செய்தியில் குறிப்பாக தினமணி செய்தியை படித்தபோது இந்த புனித யுத்தத்தில் உதவிட நமக்கும் சிறு வாய்ப்பு கிடைத்ததை நினைத்து மகிழ்தேன் .
                             இதோ பத்திரிக்கை செய்தி 
அதிமுக உறுப்பினர்கள் மைத்ரேயன் விஜிலா  சத்தியானந்த்உள்ளிட்டோர் அவையின் மைய பகுதியில் அமளியில் ஈடுபட்டனர் .தேர்வு தொடர்பாக தபால்துறை வெளியிட்ட அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியி டப்பட்ட தேர்வு தாள் இவைகளை கையில் வைத்தவாறு அவைத்தனை தலைவர் ஹரிவன்ஷ் முன்பாக விஜிலா 
சத்தியானந்த் கோரிக்கைகளை வலியுறுத்தி குரல் கொடுத்து கொண்டிருந்தார் .
                      நமது கோரிக்கைகளுக்காக குரல்கொடுத்து வெற்றியை பெற்று தந்த அனைத்து கட்சி MP களுக்கும் குறிப்பாக நம்முடைய கோட்ட மாநாடுகள் உள்ளிட்ட அனைத்து அஞ்சலக நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு நமக்கா உரிய இடத்தில உரிமைக்குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் மரியாதைக்குரிய 
மாநிலங்களவை உறுப்பினர் திருமதி விஜிலா சத்தியானந்த் அவர்களுக்கும் நெல்லை NFPE சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம் .
தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 
                 

Tuesday, July 16, 2019

                                          ஆதார் எனும் புது அவதார் 
 ஆதார் பணிகளை அனைத்து அஞ்சலகங்களிலும் நாம் பார்த்துக்கொண்டிருந்தாலும் விடுமுறை நாட்களிலும் அந்த பணியினை பார்த்திடவேண்டும் என்று நமது கோட்ட நிர்வாக உத்தரவை எதிர்த்து நமது ஊழியர்கள் கொதித்து போயுள்ளனர் என்பது உண்மை .ஏற்கனவே வேலைப்பளு எனும் கொடுமையில் ஆலையில் சிக்கிய கரும்பாக அஞ்சல் ஊழியர்கள் சிக்கி வெறும் சக்கையாகத்தான் வார இறுதியில் வீடு  திரும்புகிறார்கள் .அவர்களையம் விடுமுறைநாட்களில் ஆதார் பணிக்காக அலுவலகம் வர சொல்வதை ஏற்கமுடியாது என்று ஆணித்தரமாக கடிதம் மூலமாகவும் தொலைபேசி மூலமாகவும் நிர்வாகத்திடம் தெரிவித்தோம் .நிர்வாகமோ எதிர்கேள்வியாக நீங்கள் மட்டும் தான் எதிர்க்கீறீர்கள் .மற்ற கோட்டங்களில் இந்த பணி நடைபெறுகிறது என சிலகோட்டங்களின் பெயர்களை சொன்னார்கள் .நாம் விசாரித்து பார்த்ததில் அந்த சிலகோட்டங்களில் ஆதார் பணிகள் ஞாயிறன்றும்  நடைபெறுகிறது .நமது நிலைப்பாடும் விருப்பமுள்ள தோழர்கள் அவர்களுக்கு c-off கிடைக்கும் என்பதற்காக பணிக்கு வந்தால் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றும் கட்டாயமாக ஊழியர்களை விடுமுறை நாட்களில்  வரவழைக்கக்கூடாது என்ற கொள்கை ரீதியில் நாம் உறுதியாய் இருக்கிறோம் என்பதனை சுட்டிக்காட்டினோம் .
 ஆதார் பணிக்குறித்து சென்னை மண்டல நிர்வாக கருத்துக்களை பாரீர் 
ஆதார் பணிகளில் MTS மற்றும் ஸ்கெல்டன் யில் உள்ள GDS ஊழியர்களை பணியமர்த்த அனுமதிக்கவேண்டும் என்ற நமது மாநில சங்க கடிதத்திற்கு சென்னை மண்டல PMG அவர்கள் தனது 03.06.2019 தேதியிட்ட கடிதத்தில் இந்த பணிகளை செய்வதற்கு  ஸ்கெல்டன் யில் உள்ள GDSக்கு வழங்குகின்ற புதிய TRCA  ஆதார் மூலம் நமக்கு கிடைப்பதில்லை  என்றும் இருக்கின்ற ஊழியர்களை வைத்தே ஆதார் பணி செய்யவும்  ஸ்கெல்டன் யில் உள்ள GDS  பதவிகளை தேவையான அலுவலகங்களுக்கு வழங்கலாம் என்றும் CIFA அறிவுறுத்தியுள்ளதாக பதில்வந்துள்ளது .சென்னையில் GDS TRCA  கொடுத்துக்கூட ஆதார் பணி செய்யமுடியாது என நிர்வாகம் மறுக்கும் போது எப்படி இரண்டு PA ஒரு MTS ஊதியம் கொடுத்து விடுமுறைநாட்களில் ஆதார் பணி செய்து நாம் என்ன வருமானத்தை இலாகாவிற்கு கொடுக்கப்போகிறோம் .இந்த உண்மையை மாநில சங்கம் CPMG அவர்களின் கவனத்திற்குகொண்டுசென்று விடுமுறையில் ஊழியர்களை பணிக்கு  அழைப்பது இலாகாவிற்கு நட்டமே தவிர லாபம் அல்ல என எடுத்துச்சொல்லி இந்த உத்தரவை தமிழகமெங்கும் ரத்துசெய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் .
தோழமையுடன் நெல்லை NFPE 

Monday, July 15, 2019

                                      திருமண வாழ்த்துக்கள் 
காரைக்குடி கோட்ட கண்காணிப்பாளர் திரு .சுவாமிநாதன் அவர்களின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி 14.07.2019 ஞாயிறு அன்று மதுரையில் நடைபெற்றது .திரு .சுவாமிநாதன் அவர்கள் பணியாற்றிய அனைத்து கோட்ட / உபகோட்டங்களில் இருந்து நமது இயக்கத்தின் முன்னணி தோழர்கள்மற்றும்  தென்மண்டல அளவிலான பெரும்பாலான அதிகாரிகள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள் .
நமது நெல்லை NFPE சார்பாக நாமும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினோம் .மணமக்கள் பல்லாண்டு வாழ NELLAI NFPE வாழ்த்துகிறது 

Saturday, July 13, 2019

                                                   முக்கிய செய்திகள் 
கர்நாடகா மாநிலத்தில் 14.07.2019 அன்று நடைபெறவிருந்த GDS TO PA தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது .தமிழகத்தில் தமிழில் வினாத்தாள் இல்லை என்று பல நூறு ஊழியர்களின் வாழ்வில் கொள்ளிவைக்கப்பட்டுள்ளது .இது குறித்த மாநில சங்க அறிக்கை 
நாளை மறுதினம்(14.07.2019) நடைபெறவுள்ள GDS TO.PA தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் வினாத்தாட்கள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும் என்றும் GDS TO POSTMAN,  MTS ஊழியர்கள் தேர்வுக்கான வினாத்தாள்கள் குறித்து விளக்கங்கள் கேட்க பட்டுள்ளதாகவும் POSTMAN, MTS தேர்வு வினாத்தாள் குறித்து விளக்கமளிக்கப்படும் என  CPMG தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது 
                நெல்லை கோட்ட அலுவலகத்தில் உள்ள காலியிடம் மற்றும் தலைமை அஞ்சலகத்தில் உள்ள காசாளர் .உதவி காசாளர பதவிகளுக்கான விருப்பமனுக்கள் விரைவில் கோட்ட அலுவலகத்தில் இருந்து கேட்கப்படுகின்றன .
                            இன்று (13.07.2019 ) மாலை நடைபெறும் மதுரை PSD அஞ்சல் நான்கின் மாநாடு சிறக்க வாழ்த்துகிறோம் .
 நன்றி . தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 
.

                           
         

                                                                    மீண்டும் finacle .....ஒரு சாதாரண ஊழியனின் குமுறல் --நன்றி SA POST

Practical Difficulties faced in Finacle. Why the Unions are so silent in this issue?

Now a days, the Finacle Reports has been limited to only 5 numbers per hour per user and the same report could not be generated within the time period of 10 minutes
It is ascertained that the validation per hour is set in a Finacle Server from the generation of last Finacle report.
i.e If 1st report generated at 1100 AM and second one at 1110 AM, 1120,1130 and 1140, the next report can be generated by the user after one hour which means only by 1240 hours. This validation will extend the normal working hours and create new headache in the working environment.

At least 16 reports to be generated by the Sub Offices which the transactions being carried out in day today work (Normal Days : SB, RD, SSA, RD Bulk,MIS,TD & SI Entries - 2/3 Schemes) and atleast 6 Finacle Reports to be generated for Branch Post Offices. Totally  the minimum of 22 Reports.

This is very minimum no of reports generated by the Sub / Head Offices and the user needs to wait 4-5 hours to generate 22 reports. 

Now, please think about the situation in SBCO ?????

Union leaders may please expose the actual issue faced in operative side and explain the practical difficulties to concern authority for the valuable solution.


Friday, July 12, 2019

                                                முக்கிய செய்திகள் 
                 PA INDUCTION பயிற்சி வகுப்புகள் வருகிற 15.07.2019 முதல் மதுரை PTC யில் தொடங்குகிறது .நமது கோட்டத்தில் இருந்து தோழர் M .ஆசைத்தம்பி PA திசையன்விளை அவர்கள் பயிற்சிக்கு செல்கிறார்கள் .GDS ஆக இருந்த காலம் தொட்டே தொழிற்சங்கத்தில் மிகுந்த ஈடுபடுகொண்ட தோழர் ஆசைத்தம்பி அவர்களுக்கு NELLAI NFPE சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் .
        நமது கோட்டத்தில் புதிதாக LSG பதவி உயர்வு பெறுகின்ற 12 தோழர்களுக்கான இடமாறுதல் குறித்த கலந்தாய்வு கூட்டம் வருகிற 15.07.2019 அன்று நடைபெறுகிறது .பதவி உயர்வு பெறுகின்ற தோழர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்கிறோம் .கீழ்கண்ட தோழர்கள் LSG பதவி உயர்வு பெறுகிறார்கள் .
1. S .ராமச்சந்திரன் 2.V.சரவணன் 3.A .சுப்ரமணியன் 
4.P .பார்வதி 5.R .எட்வர்ட் பொன்னையா 6.A .ரசூல் 7.J.பிரேமலதா 
8.M .ராம் சித்ரா 9.P .பாலசுப்ரமணியன் 10.P .அண்ணாமலை 
11.S .ஆனந்த கோமதி 
 நன்றி .நெல்லை NFPE 

அன்பார்ந்த தோழர்களே !
  மாநில சங்க பத்திரிக்கையான தமிழக அஞ்சல் முழக்கம் இதழில் இருந்து ......
                                LSG நியமன விதிகளில் மாற்றம் 
LSG நியமன விதிகளில் மாற்றம் கொண்டுவர அஞ்சல் வாரியம் 10.06.2019 அன்று ஒரு வரைவு திட்டத்தை வெளியிட்டுள்ளது .அதன்படி 50 சதம் சீனியாரிட்டி 50 சதம் போட்டி தேர்வு மூலம் நிரப்பப்படும் .சீனியாரிட்டி 5 வருட சேவை தேர்விற்கு 3 வருடசேவை என அதில் கோரப்பட்டுள்ளது .இதில் மாற்றங்களை கோரி நமது மதியசங்கம் அஞ்சல் வாரியத்திற்கு கடிதம் எழுதியுள்ளது .
                                   HSG I மற்றும் HSG II விதிகளில் திருத்தம் கொண்டுவர 03.01.2019 அன்று அஞ்சல் வாரியம் ஒரு PROPOSAL யை தயாரித்துள்ளது .இதிலும் 100 சதம் சீனியாரிட்டி முறையில் நிரப்பப்படாத பதவிகளை LDCE தேர்வு மூலம் நிரப்பப்படும் .இதை மாற்றிடக்கோரியும் நமது மத்திய சங்கம் கடிதம் எழுதியுள்ளது 
                                             தபால்காரர் நியமன விதிகளில் மாற்றம் 
            தபால்காரர் /MTS நியமன விதிகளிலும் 23.03.2019 தேதியிட்ட ஆணைமூலம் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது .20.09.2018 முன்னர் பணி நியமனம் பெற்ற GDS தோழர்கள் தபால்காரர் தேர்வெழுத 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும் .
                                      காசாளர் படி 01.07.2007 முதல் உயர்த்தப்பட்டுள்ளதால் TREASURY ALLOWANCE பெற்றிட பழைய காலங்களில் ஜூலை 2017 யில்TREASURY பணியாற்றிய தோழர்கள் (LSG உட்பட ) விண்ணப்பிக்கலாம் .
                                  போஸ்ட்மேன் TO PA தேர்வு எழுத எட்டுமுறை வாய்ப்பு என்பது நீக்கப்பட்டு இனி எத்தனை முறை என்றாலும் தேர்வு எழுதலாம் .
                                 மாநிலச்சங்க பத்திரிக்கை   முதற்கட்டமாக நமது கோட்டத்திற்கு 50 பிரதிகள் வந்தன .இதழுக்கான சந்தா செலுத்திய அனைவருக்கும் பத்திரிக்கை அனுப்பட்டுவிட்டது .யாருக்காவது விடுபட்டிருந்தால் கோட்ட செயலரை அனுகவும் .மேலும் இதழ் தேவைப்படுவோரும் கோட்ட செயலரை தொடர்புகொள்ளவும் ..
 தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 
                                    
                      

Thursday, July 11, 2019

அன்பார்ந்த தோழர்களே !
                  போஸ்ட்மாஸ்டர் கிரேடு -பொது பிரிவோடு இணைப்பு லாபம் யாருக்கு ? சாபம் யாருக்கு ?
                              அஞ்சல் துறையில் வந்துள்ள /வரப்போகும் புதிய திட்டங்களை சிறப்பாகசெய்துமுடித்திட அதுவும் புதிய தொழில் நுட்பங்களில் இன்னும் அதிகமாக பணியாற்றிட -நமது வணிகத்தை பல்வேறு போட்டிகளுக்கு இடையே  கொண்டுசென்றிட (  professionally qualified, trained and meritorious officials head the key Post Offices ) தகுதியும்  திறமையும் வாய்ந்த ஊழியர்களை தெரிந்தெடுத்து அவர்களை அஞ்சலக அதிகாரியாக நியமித்திடவேண்டும் என்ற அறிவிப்போடு அன்றைய இலாகா முதல்வர் திருமதி ராதிகா துரைசாமி அவர்கள் இந்த திட்டத்தை 22.11.2010 அன்று அறிவித்தார்கள் .அதன்படி 2097 பதவிகள் போஸ்ட்மாஸ்டர் கிரேடு I (தமிழகத்தில் 270) என்றும் 511 பதவிகள் போஸ்ட்மாஸ்டர் கிரேடு II (தமிழகத்தில் 511) என்றும் 495 பதவிகள் போஸ்ட்மாஸ்டர் கிரேடு III (தமிழகத்தில் 495)  என்றும் 116 பதவிகள் சீனியர் போஸ்ட்மாஸ்டர் (குரூப் B எனவும் அடையாளம்காணப்பட்டு அதற்கான தேர்வுகள் நடந்து 31 நாட்கள் PTC யில் பயிற்சிகள் கொடுக்கப்பட்டு போஸ்ட்மாஸ்டர் கிரேடு என்றால் தனியாக தெரியவேண்டும் என்று அஞ்சல் ஊழியர்கள் மத்தியில் ஒரு பெரிய இடைவெளியை அஞ்சல் துறை ஏற்படுத்தியது .அதன் தொடர்ச்சியாக பழைய SUPERVISOR சங்கத்தில் அவர்கள் சேரவும் அமைப்பு ரீதியாக போராட்ட இயக்கங்களை மழுங்கடிக்கவும் முயற்சிகள் ஆங்காங்கே அரங்கேறவும் தொடங்கின .இந்த நிலையில் போஸ்ட்மாஸ்டர் கிரேடு -பொது பிரிவோடு இணைக்கும் வரைவு திட்டத்தை அஞ்சல் வாரியம் முன்னெடுத்து அதில் எல்லா சங்கங்களின் கருத்துக்களை கேட்டு இன்று இனைத்துவிட்டன .
இன்னும் அதில் சீனியாரிட்டி நிர்ணயம் குறித்து விளக்கங்கள் முறையாக அறிவிக்கப்படவில்லை ..இருந்தாலும் போஸ்ட்மாஸ்டர் கிரேடு ஊழியர்கள் பொதுப்பிரிவு ஊழியர்களை காட்டிலும் சீனியாரிட்டி முந்திச்செல்லவே வாய்ப்புகள் உள்ளன .நமது சம்மேளன கோரிக்கைகளான ONE -TIME MEASURE அடிப்படையில் HSG II &HSG I பதவிகளை நிரப்பிடவேண்டும் என்ற நமது கோரிக்கை குறித்து எந்த பதிலும் இல்லாமல் இணைப்பு அரங்கேறிவிட்டது .நாம் ஏற்கனவே சொன்னபடி பழைய FTP யின் நிலைதான் போஸ்ட்மாஸ்டர் கிரேடு க்கும் ஏற்படும் என்பது இன்று நிருபனமாகிவிட்டது .இனிமேல் HSG II  பதவிகள் GRADE II ஊழியர்கள் பணியாற்றுவார்கள் .HSG I பதவிகளில் GRADE III ஊழியர்கள் சீனியர்களாக இருப்பார்கள் .
        அஞ்சல் வாரியத்தின் இந்த தன்னிச்சையான முடிவுகளால் போஸ்ட்மேன்&MTS நியமனவிதிகளில் திருத்தம் LSG விதிகளில் திருத்தம் HSG II &HSG I நியமன விதிகளில் திருத்தம் என திருத்தத்திற்கு மேல் திருத்தங்களை அஞ்சல் வாரியம் அறிவித்த பிறகும் ஊழியர் பக்கங்களில் இருந்து பெரியஅளவில் விவாதங்களையோ /எதிர் ப்பையோ பார்க்கமுடியவில்லை .
குறிப்பாக LSG நியமனவிதிகளில் 50 சதம் தேர்வுமுறை அறிமுகம் என்ற திட்டத்தில் 50 யை 20 சதமாக மாற்றவேண்டும் என்ற நமது கோரிக்கை என்னானது ? FTP அறிமுகத்திலும் 33.34% சீனியாரிட்டி 66.66% மெரிட் என 2003 யில் அறிவிக்கப்பட்டு அமுல்படுத்தப்பட்டதும் நினைவிருக்கும் .
                        இன்று இதுபோல் நித்தம் ஒரு திட்டம் நித்தம் ஒரு சட்டம் என ஊழியர் தரப்பு கருத்துக்களை கேட்பதுபோல் கேட்டுவிட்டு அஞ்சல் வாரியம் தான் நினைத்ததை நடத்திக்கொண்டிருக்கும் மிக அசாதாரண சூழலில் நாம் பணியாற்றி கொண்டிருக்கிறோம் .
                     அஞ்சல் மூன்றின் கோரிக்கைகளை முன்னெடுத்து அஞ்சல் வாரியத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்வது என்றும் குறிப்பிட்ட காலத்திற்குள் கோரிக்கைகளில் முன்னேற்றம் இல்லையென்றால் அஞ்சல் மூன்று மட்டுமாவது தனியாக இயக்கங்களை முன்னெடுப்பது என்ற ஜான்சி CWC  முடிவை விரைவு படுத்தவேண்டும் என்பதே ஊழியர்களின் எதிர்பார்ப்புகள் .
 தோழமையுடன் நெல்லை NFPE 

Wednesday, July 10, 2019

அன்பார்ந்த தோழர்களே !
                                      மெகா மேளா --12 .07.2019 
நமது கோட்டத்தில் வருகிற 12.07.2019 அன்று மெகா மேளா நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது .அதில் நமது பெரும்மதிப்பிற்குரிய CPMG அவர்களும் மற்றும் PMG அவர்களும் கலந்துகொள்கிறார்கள் .அதை முன்னிட்டு ஒவ்வொரு உபகோட்ட அதிகாரிகளும் ஒவ்வொரு இலக்கை நிர்ணயித்து சுற்றறிக்கைகள் வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள் .இதற்காக கேன்வாஸ் செய்வதற்காக MTS முதல் PA வரை களத்தில் இறக்கப்பட்டுள்ளார்கள் .நமது கடமையும் கூடுதல் கணக்குகளை தொடங்க உதவுவது தான் .இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை .ஆனால் சில உப கோட்டங்களில் அதிகாரிகள் நடந்துகொள்வது மிகுந்த கவலையளிக்கிறது .குறிப்பாக OFFICIATING பார்க்கின்ற GDS ஊழியர்களுக்கு அதிகப்படியான நெருக்கடிகள் -நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடையாவிட்டால்  OFFICIATING வாய்ப்பு கிடையாது என்றெல்லாம் அன்புக்கட்டளை பிறப்பிப்பதாக OFFICIATING பார்க்கின்ற தோழர்கள் நம்மிடம் சொல்லிவருகிறார்கள் .
தன் சொந்த ஊரைவிட்டு கொஞ்சம் அதிகமாக கிடைக்கும் ஊதியத்திற்காக OFFICIATING பார்க்கின்ற ஊழியர்களின் மேல் மேலும் மேலும் சுமைகளை ஏற்றாதீர்கள் .என்று கேட்டுக்கொள்கிறோம் இதைவிட மேலாக இதில் OUTSIDER களும் தப்பவில்லை என்பது கொடுமையிலும் கொடுமை ..OFFCIATING பார்க்கின்ற தோழர்கள் என்ன அடிமைகளா  ? இந்த நிலை தொடர்ந்தால் நமது கோட்ட கண்காணிப்பாளர் அவர்களிடமும் மாநில சங்கங்கள் மூலம் மாநில நிர்வாக கவனத்திற்கு கொண்டுசெல்ல வேண்டிய நிலை உருவாகும் .
                                                  DIVISIONAL HEAD MEETING
           வருகிற 11..07.2019 தென்மண்டல கோட்ட அதிகாரிகளின் கூட்டம் மதுரையில் நடைபெறுகிறது .இந்த கூட்டத்தில் நமது CPMG அவர்களும் கலந்துகொள்கிறார்கள் .
                                   குரூப் B அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள் 
 அகிலஇந்திய அளவில் 76 ASP களுக்கு SP ஆக பதவி உயர்வு கிடைத்துள்ளது .தமிழகத்தில் 5 பேர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளார்கள் .அதில் குறிப்பாக நமது கோட்டத்தில் எழுத்தராக பணியில் சேர்ந்து NFPE கோட்ட பொருளாளராக பொறுப்பு வகித்த தோழர் சொர்ணம் அவர்களும் நமது கோட்டத்தில் ASPஆக பணியாற்றிய தோழர் உதயசிங் ஆகியோர் உள்ளனர் .இவர்களின் பணி சிறக்க வாழ்த்துகிறோம் 
                                     திருமண வரவேற்பு விழா 
 GDS சங்கத்தின் முன்னணி தோழர் SJS அமீர் அவர்களின் இல்ல திருமண வரவேற்பு விழா 10.07.2019 அன்று நண்பகல் சுத்தமல்லியில் நடைபெறுகிறது .
                                         மணமக்கள் 
                 A.அஜ்மல் -K.தௌலத் ஷபியா 
மணமக்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம் 
                                   தோழமையுடன் நெல்லை NFPE 

Tuesday, July 9, 2019

                அடுத்தடுத்து வந்த அதிரடி உத்தரவுகள் --உண்மையாகவே தேர்வுக்கு அனுமதி பெற்றது     யார் ?அதை தடுத்தது யார் ?
                               கடந்த வெள்ளிக்கிழமை கர்நாடக மாநில CPMG அவர்கள் GDS TO PA தேர்விற்கு சமீபத்தில் தேர்வான போஸ்ட்மேன் /MTS ஊழியர்கள் அந்தந்த       VACANCY  வருடத்தில்  5 ஆண்டுகள் GDS ஆக பணி முடித்திருந்தால் அவர்களை நேரடியாக PA தேர்விற்கு அனுமதிக்கலாம் என்ற உத்தரவை பிறப்பித்தது .இந்த செய்தியை முதன்முதலில் வெளிகொண்டுவந்தது கலங்கரை விளக்கம் ஆசிரியர் திரு .மாலிக் அவர்கள் தான் .இதோ அவரது பதிவு 
GDS தோழர்களுக்கு ஒரு மகிழ்ச்சி யான செய்தி கேள்விப்பட்டேன். தற்போது MTS,postmanஆக  பணியில் இருக்கும் ஏற்கனவே GDS ஆக பணிபுரிந்த 2015,2016,2017,2018 ஆண்டுகளில் 5 ஆண்டு பணி முடித்திருந்தால் வருகிற 14-7-2019 அன்று நடைபெறும் தேர்வில் கலந்து கொள்ளலாம் என்று மெயில் வந்ததாகக் கேள்விப்படுகிறேன். தயவுசெய்து R.O,C.Oஉள்ள இடங்களில் பணிபுரியும் தொழிற்சங்க தோழர்கள் இதில் உதவி செய்யவும்
  இதை தொடர்ந்து அடுத்தநாள் சனிக்கிழமை என்பதால் கூடுதல் பரபரப்பு ஏற்பட்டது .தேர்விற்கு இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில் எப்படி அத்தனை நடைமுறைகளும் கடைபிடிக்கப்பட்டு தேர்வு எழுதமுடியும் என்ற நிலையில் திங்கள் கிழமை நமது NFPE சம்மேளன நிர்வாகிகள் நமது CPMG யை சந்தித்து நல்லமுடிவு விரைவில் வரும் என்ற நல்லசெய்தியை பதிவிட்டனர் .அதன் படியே தமிழக நிர்வாகத்திடம் இருந்து உடனடி  உத்தரவு பிறப்பிக்கப்பட்டது .
 இந்த பின்னணியில் நமது கோட்ட அலுவலகத்தில் இருந்தும் நாளை காலை 09.30 மணிக்குள் அனைத்து விண்ணப்பங்களும் வந்துசேரவேண்டும் என்றும் அது மாலை நாலு மணிக்குள் RO வில் இருக்கவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது .
             ஆனாலும் குறைவான VACANCY குறைவான நாட்கள் உள்ள நிலையில் தகுதியிருந்தும் பல தோழர்கள் இதில் ஆர்வம் காட்டவில்லை என்ற எதார்த்தத்தை பார்க்கமுடிந்தது .
            இதற்கிடையில் தேர்வை தள்ளிவைக்கவேண்டும் என்றும் GDS கான VACANCY எப்படி இலாகா ஊழியர்களுக்கு மாற்றமுடியும் என்ற கருத்துக்களும்/எதிர்ப்புகளும்  இயக்குனரகத்தில் எழுந்தது .
                  இறுதியாக மாலை ஆறுமணிகெல்லாம் காலையில் பூத்து மாலையில் வாடும் மலர் போல் இந்த உத்தரவுகள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது .
                       துக்ளக் தர்பார் கதைகளிலும் நாடகத்திலும் மட்டுமல்ல இன்றும் நிஜத்தில் தொடர்கிறது என்பதை நேற்றைய குளறுபடி உத்தரவுகள் உணர்த்தியது .
                            அதிகாரவர்க்கம் பிறப்பிக்கும் உத்தரவுகளை மட்டுமே செய்தியாக பிரசுரிக்கும் போக்கு மாற்றப்பட்டு மனரீதியாக பாதிக்கப்பட்ட எங்கள் ஊழியர்களுக்கு ஆதரவாகவும் நிர்வாக குளறுபடிகளை கண்டித்து நாம் பழைய நாட்களை போல் ஒரு கண்டன ஆர்பாட்டத்தையாவது நடத்தியிருக்க வேண்டும் .நிர்வாக தவறுகளை துணிச்சலாக தட்டிக்கேட்காதவரை இதுபோன்ற துக்ளக் ராஜ்ஜியம் தொடரத்தான் செய்யும் .
  நன்றி தோழமையுடன் NELLAI NFPE