...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, October 31, 2017

இன்று பணிநிறைவு கானும் தோழர்கள் --முன்னாள் தமிழ் மாநில சங்க நிர்வாகிகள் வேலூர் கோட்ட முன்னாள் செயலர் கருணாகரன் ---சீர்காழி கிளையின் ஈடுஇணையற்ற  செயலர் நடராசன் இருவரின் பணிநிறைவு காலங்கள் சிறக்க வாழ்த்துகிறோம் .
                        கருணாகரன் --வாழ்க 
பெயர்மட்டும் கருணா --போராட்ட 
குணத்தில் நீ ஒரு பிரபா 
கள்ளமில்லா உள்ளம் 
களங்கமில்லா நட்பு 
தமிழக தொழிற்சங்க வரலாற்றில் 
வேலூரை வெளிக்காட்டியவனே !
மாநில நிர்வாகத்தில் -பலமுறை 
பொறுப்பு செயாளராய் பணியாற்றியவனே !
உன் பணிநிறைவு 
நாட்கள் சிறக்க வாழ்த்துகிறோம் 
நாள்தோறும் இப்படி 
சிரித்து மகிழ வணங்குகிறேன் 
                             சீர்காழி நடராஜன் 
அசைக்கமுடியா  கொள்கை பிடித்தம் 
அதிசயிக்கும் மேடை முழக்கம் 
சீற்றத்தையும் -சிரிப்பையும் 
சரிசமமாய் பகிர்ந்தவனே 
படைநடத்த தம்பியை 
தனக்கு பின் தந்தவனே !
வாழ்க ! வாழ்க !
                   வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் 


                                  GDS பிரச்சினைகளில் கண்ணாமூச்சி காட்டும் நிர்வாகம் -GDS சொந்தங்களுக்கு வழிகாட்டுவோம் 

   PROVISIONAL APPOINTMENT என்ற காரணம் காட்டி GDS ஊழியர்களுக்கு போனஸ் மறுத்திடக்கூடாது மேலும் அவர்களுக்கு ரெகுலர் APPOINTMENT உத்தரவு எந்த தேதியில்  போடுகிறார்களா அந்த வருடத்தில் இருந்துதான் போனஸ் வழங்கப்படும் என திருநெல்வேலி (நெல்லையில் மட்டுமல்ல அனேக கோட்டங்களில் )கோட்டத்தில் தொடர்ந்து மறுக்கப்பட்டுவருகிறது .இது குறித்து நமது முன்னாள் மாநிலசெயலர் தோழர் சுந்தரமூர்த்தி அவர்களிடம் விசாரித்தபோது மதுரையில் எந்த தேதியில் GDS ஊழியர்களுக்கு நிரந்தர உத்தரவு வழங்கினார்கள் என்பதல்ல  எந்தத்தேதியில் இருந்து உத்தரவு என்பதை பார்த்து பழைய வருடங்களுக்கும் போனஸ் வழங்கப்பட்டுள்ளது மட்டுமல்ல -தான் (சுந்தரமூர்த்தி )தல்லாகுளம் போஸ்ட்மாஸ்டர் ஆக பணியாற்றிய போது  இந்த உத்தரவை GDS களுக்கு நிரந்தர உத்தரவு அமுலாக்க தேதிமுதல் வழங்கிவருவதாகவும் தெரிவித்தார்கள் .நமது கோட்டங்களிலும் GDS ஊழியர்களுக்கு பழையதேதியிட்ட CONFORMATION உத்தரவு இருந்தும்  நடப்பாண்டில் மட்டும்தான் போனஸ் பெற்ற தோழர்கள் கோட்ட சங்கத்தை தொடர்புகொள்ள கேட்டு கொள்கிறோம் .
                                            இதர செய்திகள் 
இன்று 31.10.2017 அன்று நடைபெறுவதாக இருந்த DEPAR TMENT அனோமோலி கமிட்டி கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது .
----------------------------------------------------------------------------------------------------------------------
புது டெல்லியில் வருகிற 09.11.2017 முதல் 11.11.2017 வரை அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் நடைபெறும் தொடர் தர்ணா போராட்டங்கள் வெல்லட்டும் 
--------------------------------------------------------------------------------------------------------------------------
CSI அமுலாக்கத்தை நிறுத்திவைத்திடக்கோரி நமது அகிலஇந்திய சங்கத்தின் சார்பாக அஞ்சல் வாரியத்திற்கு எழுதியுள்ள கடிதம் உங்கள் பார்வைக்கு 
CHQ writes to Member (Technology), Department of Posts.

 -------------------------------------------------------------------------------------------------------
NFPE சம்மேளன செயலர்கள் கூட்டம் 09.11.2017 அன்று புது டெல்லியில் கூடுகிறது .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Monday, October 30, 2017

                                                மணவாழ்த்துக்கள் 
தோழியர் AM .ராஜேஸ்வரி SPM சமாதானபுரம் அவர்கள் இல்ல மணவிழா சிறக்க வாழ்த்துக்கள் 
நாள் 30.10.2017
இடம் அன்னை கல்யாண மண்டபம் 
மணமகள்                                        மணமகன் 
S .செல்வபாரதி                         K .பழனிக்குமார் 
மணமக்கள் பல்லாண்டு வாழ நெல்லை NFPE வாழ்த்துகிறது 
--------------------------------------------------------------------------------------------------------------------------
அன்பார்ந்த தோழர்களே !
நவம்பர் 25 -முதல் 27 வரை செங்கல்பட்டில் நடைபெறும் மாநில மாநாட்டிற்கான நன்கொடைகளை விரைந்து தருக !நாளை 31.01.2017 அன்று நமது நிர்வாகிகள் பகுதிவாரியாக நன்கொடைகளை பிரிக்க வருகிறார்கள் .முழுமையான ஆதரவை நல்குமாறு கேட்டு கொள்கிறோம் 
--------------------------------------------------------------------------------------------------------------------------தென்மண்டல தலைவருடனான இரு மாதத்திற்கான பேட்டி 03.11.2017 அன்று மதுரையில் நடைபெறுகிறது .பேட்டிக்கு மாநிலசெயலர் மற்றும் நெல்லை கோட்ட செயலர் தோழர் SK .ஜேக்கப் ராஜ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள் .
மற்றவை அடுத்த பதிவில் -
வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 
----------------------------------------------------------------------------------------------------------------------------



Wednesday, October 25, 2017

                                அதிசயம் ..ஆனால் உண்மை 
அஞ்சலக ஆய்வாளர்களுக்கு தகுதி ஊதியம் 4600 ஆக உயர்கிறது .இந்த உயர்வு 01.01.2006 முதல் அமுலுக்கு வருகிறது .
ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைத்த ஆய்வாளர்களுக்கு உயர் ஊதியத்தை அன்றைய அரசு நிராகரித்தது .அதனால் ஆய்வாளர்கள் சங்கம் எர்ணாகுளம் நீதிமன்றத்தை அணுகி நீண்ட சட்ட போராட்டங்களை நடத்தி அஞ்சலக ஆய்வாளர்களுக்கு தகுதியூதியம் 4200 இல் இருந்து 4600 ஆக பெற்றுள்ளனர் .முன்னதாக இழுத்தடித்துக்கொண்டிருந்த அரசுமத்திய நிதியமைச்சகத்தையும் வழக்கில் ஒன்றாக சேர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் அஞ்சல் வாரியம் 24.10.2017 அன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது  .இனி IPO சம்பளம் HSG I க்கு நிகராக மாறுகிறது .ஆனாலும் இதில் இன்னொரு அம்சம் பார்க்கவேண்டியுள்ளது அதே உத்தரவில் ASP களின் ஊதியம் அதே 4600 .எது எப்படியோ நம்மை போல் களம் காணாமல் -பாதிப்புகள் இல்லாமல் -போராட்டம் இல்லாமல் -ஆர்ப்பாட்டம் நடத்தாமல் -தர்ணா நடத்தாமல் -பேரணி -ஊர்வலம் என எதுவும் இல்லாமல் இந்தவெற்றியை பெற்றிருக்கும் ஆய்வாளர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள் .களம் எதுவாக இருந்தாலும் அதை சரியாக பயன்படுத்துபவர்களுக்கு வெற்றி அவர்களது வாசற்கதவை தட்டும் என்பதற்கு இந்த வழக்கும் -உத்தரவும் மிகச்சிறந்த உதாரணம் .
குறைந்தபட்ச ஊதியம் --MACP குளறுபடிகள் - HRA மாற்றம் -போனஸ் பார்முலா திருத்தம் GDS கோரிக்கைகள் என்ற நமது களம் என்னானது ?சிந்திப்பீர் --தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் நெல்லை 












Monday, October 23, 2017

தோழியர் H.பொன்னம்மாள் அவர்கள் -
LSG PA   கோட்ட அலுவலகம் நெல்லை 
தன் விருப்ப ஓய்வு நாள் 25.10.2017 




  வாழ்த்தி வழியனுப்புகிறோம் வாழ்க !வாழ்க !

அஞ்சல் துறைக்கு கிடைத்திட்ட அதிசயமே !
அன்பு பணிவு கனிவு இவை ஒருசேர ஒருவரிடம் 
இருப்பது என்பது அபூர்வமே !

எங்களை விட சீனியர் -

எல்லாவற்றிலும்  ஜீ னியஸ் -ஆனாலும் 
எந்த வேறுபாட்டை யும் 
எப்பொழுதும் பார்த்ததில்லை 

பெயருக்கும் -குணத்திற்கும் 

அப்படி என்ன பொருத்தம் 
தங்கம்  ஒரு இடத்திலே தங்கி  விட்டதே !

 நீங்கள் தலைமையேற்று நடத்திய 

மகளீர் தின விழாதான் 
தோழியர்களை ஓரணியில் 
தொடர வைத்தது 
தோழமையை தோழிகள் மத்தியில் 
படர வைத்தது  

நீங்கள் வந்த புதிதில் -நெல்லையில் 

மருத்துவ விடுப்பு போராட்டம் 
மறுக்காமல் பங்கேற்றீர்கள் 
ஒருநாள் வேலைநிறுத்தம் ஒன்றில் 
கோட்ட அலுவலகம் முற்றிலும் 
மூட முதல் ஆளாய் முடிவெடுத்தீர்கள் 


கோட்ட அலுவலகத்திற்க்காக 

தவம் இருந்தவர்கள் மத்தியில் 
கோட்ட அலுவலகம்பலமுறை  
தவம் இருந்தது உங்களுக்கத்தான் 
கோபப்பட்டு பார்த்ததில்லை -எவரையும் 
கோபத்திற்கு ஆளாக்கியதில்லை 

அலைபேசி அவ்வளவாய் 

அறிமுகம் இல்லாத நாட்களிலும் 
அதிகாலைகளில் உங்கள் வீட்டிலிருந்தல்லவா 
டெபுடேஷன் கிடைக்கும் 
விடுப்பு விண்ணப்பத்த SPM கள் 
ஏமாறாமல் இருந்தது 
உங்கள் காலத்தில்தானே

அப்படி ஒரு ஆளுமை -

ஆங்கிலத்திலோ அசாத்திய வல்லமை 
கோப்புகளில் உங்கள் குறிப்புகளில் 
திருத்தங்கள் வராது -காரணம் 
தனிப்பட்ட விருப்பு -வெறுப்புகள் 
வருத்தங்கள் என்றுமே கிடையாது 

விருத்தாசலம் முதல்  சென்னை என 

விரிந்திருந்தது உங்கள் நட்பின் வட்டம் 
அவர்கள் பானுவை கேட்பார்கள் 
நாங்கள் பொன்னம்மாளை சொல்வோம் 

உண்மையை சொல்லவேண்டும் என்றால்  

அஞ்சலக உச்சரிப்புகளில் -அழைப்புகளில் 
அக்காக்கள் குறைந்துவருகிறார்கள் 
அம்மாக்கள் (மேடம் ) நிரம்பி வருகிறார்கள் 
இருந்தாலும் பழையகால 
குடும்ப உறவுகளை 
ஊழியர்கள் நெஞ்சங்களில் வளர்த்திடுவோம் 
தோழமையில் இணைந்திடுவோம் 

                        அன்புடன் தம்பி --ஜேக்கப் ராஜ் ------------------







Saturday, October 21, 2017

நெல்லையில் நடைபெற்ற அண்ணன் பாலு அவர்களின் இரண்டாமாண்டு நினைவேந்தல் -புதிய பென்ஷன் குறித்த சிறப்பு விவாதங்கள் 
அஞ்சாநெஞ்சன் அண்னன் பாலு அவர்களின் இரண்டாமாண்டு நினைவேந்தல் தோழர் SK .ஜேக்கப் ராஜ் அவர்கள் தலைமையில் 20.10.2017 அன்று பாளையம்கோட்டையில் சிறப்பாக நடைபெற்றது .அண்ணன் பாலு அவர்களின் திருஉருவ படத்திற்கு நமது மூத்த தோழர் N .கண்ணன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தார் .தோழர் C .வண்ணமுத்து அவர்கள் அண்ணனின் நினைவுகளை பகிர்ந்தார் .அதன் பின் புதிய பென்ஷன் குறித்த விவாதங்கள் நடைபெற்றது .தோழர் பூபாளன் அவர்கள் விவாதத்தை தொடங்கிவைத்தார் .அவரை தொடர்ந்து தோழர்கள் ருக்மணி கணேசன்அமைப்பாளர் G.சிவகுமார் தோழர் பாலகுருசாமி  நெல்லை மகிளா கமிட்டி உறுப்பினர் தோழியர் முத்துப்பேச்சி ஆகியோர் NPS குறித்து விவாதித்தனர் .இளைய தோழர்களின் பாஷையில் சொல்லவேண்டுமென்றால் NPS திட்டத்தை பிரித்து மேய்ந்தனர் .இறுதியாக கீழ்கண்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டன .
1.எதிர்வரும் மாநில மாநாட்டில் NPS குறித்த முக்கிய விவாதங்களை இளைய தோழர்களின் பங்களிப்போடு நடத்திடவும் -அதற்கான தனியாக ஒரு அமர்வை நடத்தவும் மாநிலசெயலரிடம் அனுமதி கோருவது 
2.NPS குறித்து அமைக்கப்பட்ட கமிட்டி என்னவானது -அதனையுடைய அறிக்கையை உடனடியாக வெளியிடக்கோரி அகிலஇந்திய அளவில் இயக்கங்களை நடத்த மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளனத்தை வலியுறுத்துவது 
3.மாநில -மத்திய சங்கங்களுக்கு NPS குறித்த புதிய கோரிக்கைமனுவை வடித்தெடுக்க ஒரு குழுஅமைப்பது (தோழர் பூபாளன் -சிவகுமார் -முத்துப்பேச்சி மேலும் ஆர்வம் உள்ள தோழர்கள் இணைந்து கொள்ளலாம் )
4.வருகிற 2018 ஜனவரியில் நெல்லையில் புதிய பென்ஷன் குறித்த மாபெரும் ஒருநாள் கருத்தரங்கம் நடத்துவது என்றும் -அதில் அகிலஇந்திய தலைவர்களை கலந்துகொள்ள வைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது .
5.23.10.2017 அன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் முழுஅளவில் தோழர்கள் பங்கேற்பது என்றும் -முகவர்கள் அனைவரையும் ஆர்ப்பாட்டத்தில் அழைப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது 
6.GDS கமிட்டி குறித்த இன்றைய நிலையும் விரிவாக விளக்கி பேசப்பட்டது .
  இறுதியாக மாநில மாநாட்டில் நமது பங்கு குறித்து தோழர் அழகுமுத்து அவர்களும் -இறுதியாக அஞ்சல் நான்கின் கோட்ட உதவி செயலர் தோழர் புஷ்பாக ரன் அவர்கள் உரையாற்றியபின் அஞ்சல் நான்கின் மாநில உதவி செயலரும் நெல்லை அஞ்சல் நான்கின் கோட்ட செயலருமான தோழர் SK .பாட்சா அவர்கள் நன்றிகூற பொதுக்குழு முடிவுற்றது .பொதுக்குழுவில் சுமார் 100 கும்மேற்பட்ட   தோழர்கள் ஆர்வமோடு கலந்துகொண்டு சிறப்பித்தது -குறிப்பாக தோழியர்கள் இளைய தோழர்கள் படையெடுத்து கருத்துக்களை பரிமாறியது எங்களுக்கு புதிய எழுச்சியையும் -நம்பிக்கையையும் கொடுத்துள்ளது .நன்றி 
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் 








Friday, October 20, 2017

அண்ணன் பாலு அவர்களின் நினைவுகளை குறித்து முன்னாள் நிர்வாக பிரிவின் தமிழ்மாநில செயலர் தோழர் அரவிந்தன் சிங்கப்பூரில் இருந்து பகிர்ந்த கவிதை 

ஒரு போராட்டம் முடிவுற்றது
---------------------------------------------------


பாலு-

அஞ்சல் ஊழியரின்
அரிமா!
அதிகாரவர்க்கத்திற்கு
அணுகுண்டு!
வெஞ்சினங்கொண்ட 
வேங்கை!
உன் 
வேட்டையில் கொழுத்தவை
கழுகுகள் !
வஞ்சனை வறுமையால் 
வளம் குறைந்தாய் -உடல் 
நலம் குறைத்தாய் !
அன்று-
2000 டிசம்பரில் 
நீ நடத்தியது போராட்டம்!
இன்று-
ஆண்டுதோறும்அறிவிக்கப்படும் 
காட்சித்தேரோட்டம் !
ஒரு போராட்டம் 
முடிவு பெற்றது!

வாழ்க பாலு !
(அரங்க அரவிந்தன் @சிங்கப்பூர்)

Thursday, October 19, 2017

                                         முக்கிய செய்திகள் 
PLI யில் சேருவதற்கான  வாடிக்கையாளர்கள் விரிவாக்கம் -------
            அஞ்சல் துறையின் அமுதசுரபி என வருணிக்கப்படும் PLI திட்டத்தில் சேருவதற்கான தகுதியை அஞ்சல் துறை விரிவுபடுத்தியிருக்கிறது .இதன்படி தனியார்பள்ளி ஆசிரியர்கள் -தனியார்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் -தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் -பொறியாளர்கள் -வழக்கறிஞ ர்கள் -PLI யில் சேரலாம் -என்று 18.10.2017 அன்று வெளியிடப்பட்ட அஞ்சல் வாரிய உத்தரவு தெரிவிக்கிறது 
---------------------------------------------------------------------------------------------------------------------------                 நெல்லையில் ஆர்ப்பாட்டம் -23.10.2017 
   அஞ்சலக சேமிப்புகளை வங்கிகளுக்கு தாரைவார்க்கும் நிதிஅமைச்சக உத்தரவை ரத்துசெய்ய கோரி நெல்லையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 

 மத்திய நிதியமைச்சக சமிபத் தியஉத்தரவு படி அஞ்சலக சேமிப்பு கணக்குகளின் சேவையை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் வெளிநாட்டு தனியார் வங்கிகளான ICICI -AXIS மற்றும் HDFCஆகிய வங்கிகளுக்கு  அனுமதித்திருப்பதை ஏற்பது நமக்கு நாமே அழிவை ஆராத்தி எடுத்து வரவேற்பதற்கு சமமாகும் .இதன்மூலம் பெரும்பான்மையான அஞ்சலகங்களின் வருவாய் குறைவதோடு GDS ஊழியர்களின் ஊதியங்களிலும் பாதிப்புகள் வரும் .மேலும் அஞ்சல் துறையை நம்பியிருக்கின்ற பல்லாயிரக்கணக்கான MPKBY முகவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் .
இந்த கொடுமைகளை எதிர்த்து நெல்லை NFPE சங்கமும் தமிழ்நாடு அஞ்சல் முகவர்கள் சங்கமும் இனைந்து 23.10.2017 திங்கள் அன்று பாளையம்கோட்டையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த முடிவுஎடுத்திருக்கிறோம் .ஆர்ப்பாட்டத்தில் அஞ்சல் ஊழியர்கள் மட்டுமல்ல அஞ்சலக முகவர்கள் அனைவரையும் கலந்துகொள்ள நமது முன்னணி தோழர்கள் விரைந்து பணியாற்றிட கேட்டுக்கொள்கிறோம் .
               20.10.2017  வெள்ளிக்கிழமை பொதுக்குழு வாரீர்! வாரீர் !
 நெல்லையில் 20.10.2017 அன்று நடைபெறும் தோழர் பாலு அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டம் அதனை தொடர்ந்து நடைபெறும் புதிய பென்ஷன் குறித்த கூட்டத்தில் அனைத்து இளைய தோழர்களும் குறிப்பாக தோழியர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம் .குறிப்பாக மகிளா கமிட்டி நிர்வாகிகள் தோழியர்களை பெருமளவில் கலந்துகொள்ள உதவிடுமாறு கேட்டு கொள்கிறோம் .
நெல்லையில் மட்டும் புதிய பென்ஷன் திட்டத்தில் உள்ளவர்கள் 106 பேர் .இது நமது கோட்டத்தில் உள்ள நிரந்தர ஊழியர்களில் 30 விழுக்காடு என்பது குறிப்பிடத்தக்கது .இதற்கான அமைப்பாளர்கள் தோழர் G.சிவகுமார் உள்ளிட்ட தோழர்கள் தங்கள் பகுதி தோழர்களை மட்டுமல்ல கோட்டம் முழுவதிலும் உள்ள தோழர்களை தொடர்பு கொள்ள கேட்டு கொள்கிறோம் .
வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ்  கோட்டசெயலர் P3         
                            SK பாட்சா  கோட்டசெயலர் P4

Wednesday, October 18, 2017

                 தமிழக NFPE தொழிற்சங்க வரலாற்றில்   மீண்டும் ஒரு மகத்தான சாதனை --
RMS மூன்றாம் பிரிவின் முன்னாள் மாநில தலைவர் தோழர் KR .கணேசன் அவர்கள் மற்றும் அவரோடு சதன்குமார்  என்றொரு MTS தோழர்கள் இருவரும் மீண்டும் பணிக்கு 
எடுத்துக்கொள்ள பட்டர்கள் .இந்த மாபெரும் உதவியை செய்துகொடுத்த  நமது தமிழக CPMG அவர்களுக்கும் கோவை மண்டல PMG அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .இந்த பிரச்சினையில் தொடர்ந்து ஈடுபட்டு வெற்றிக்கனியை பறித்துக்கொடுத்த தமிழக NFPE ஒருங்கிணைப்பு குழுவிற்கு எங்கள் வாழ்த்துக்கள் .
   பார்சல் தொலைந்துபோனதாக சொல்லப்பட்ட  வழக்கிற்க்காக -சம்பந்தம் சம்பந்தம் இல்லாத நிர்வாகிகள் வேண்டுமென்றே பணியில் இருந்து REMOVED FROM SERVICE செய்யப்பட்டவர்கள் இந்த குறுகிய காலத்திற்குள் மீண்டும் பணிக்கு வருவது சாத்தியமல்ல ..
ஆம் சாதித்தது சங்கம் ..கருணைகாட்டியது மேலதிகாரிகளின் நெஞ்சம் .
                                அன்று ஒரு சுடலைமுத்து ......
இதே போல் 1983 வேலைநிறுத்தம் அறிவித்து அது விலக்கி கொள்ளப்பட்டது தெரியாமல் மதுரை தோழர் சுடலைமுத்து அவர்கள் வேலைநிறுத்தம் செய்த குற்றச்சாட்டிற்காக   இதேபோல் REMOVED FROM SERVICE செய்யபட்டர்.அன்று மாநிலசெயலர் அண்ணன் பாலு .மதுரை மண்டலச்செயலர் தோழர் பாண்டியன் .இந்த அநியாய தண்டனையை எதிர்த்து மிக ராஜதந்திரமாக வாதாடி  மூன்றே மாதத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட தோழர் சுடலைமுத்து மதுரையில் அஞ்சல் மூன்றின் மாநிலசெயலர் அண்ணன் பாலு அவர்களால் மீண்டும் பணிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் .அன்று அஞ்சல் மூன்று மட்டும் தனித்து நின்று சாதித்துக்காட்டியது என்பது குறிப்பிடத்தக்கது .(பலமாநில  மாநாடுகளில் இது குறித்த கோஷங்கள்  அனல்  பறக்கும்-தெறிக்கும்  )
  ஆக REMOVED FROM SERVICE என்பது எவ்வளவு கொடூரமான ஆயுதம் .அதை ஏன் சில அதிகாரிகள் மிக சர்வசாதாரணமாக பிரயோகிக்கிறார்கள் என்பது தெரியவில்லை .இப்படி சொந்த விருப்பு -வெறுப்பு அடிப்படையில் தொழிற்சங்க நிர்வாகிகளை தண்டித்து மகிழும் அதிகாரிகளை ஏன் தவறான தண்டனை கொடுத்தாய் என்று நீதிமன்றமாவது மேலதிகாரியாவது கேள்விகேட்டு தண்டிக்கும் காலம் வந்தால்தான் இதுபோன்ற கொடூர அதிகாரிகள் திருந்துவார்கள் .தோழர் கணேசன் இன்று பணிக்கு வந்துவிட்டார் .இந்த இடைப்பட்ட காலங்களில் அவரது குடும்பமும் -அவரும் எந்த மனநிலையில் இருந்திருப்பார்கள் என்று யாருக்கு தெரியும் .இன்னும் ஒருநாள் வேலைநிறுத்தத்திற்க்காக RULE 16 இல் தண்டனைகளை சுமந்துள்ள 60 கும் மேற்பட்ட CB கோட்ட RMS தோழர்களுக்கும் முழு தண்டனைகளும் ரத்து செய்யப்படவேண்டும் என விரும்புகிறோம் .இந்த பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு சட்டரீதியான உதவிகளை செய்துவரும் அஞ்சல் மூன்றின் முன்னாள் தென்மண்டல செயலர் அண்ணன் சின்ராஜ் அவர்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள் .

  ஒன்று பட்ட போராட்டம் 
 வென்று காட்டும் நிச்சயம் ......
எவ்வளவு உன்னதமான -உயிரோட்டமான  வரிகள் 
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

NELLAI NFPE தோழர்கள் அனைவருக்கும் எங்கள் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் .
  நமது குழுவில் 250 உறுப்பினர்கள் உள்ளனர் . பல மூத்த தோழர்களான தோழர் S .சௌந்தரபாண்டியன் ACCOUNTS OFFICER (RETD) சென்னை மற்றும் தோழியர் மீனா APM ACCOUNTS NAGERCOIL (RETD) அண்ணன் ரெங்கசாமிபோன்ற முன்னாள் நிர்வாகிகள்  முதல் புதிய தோழர்கள் வரை ஆர்வமாக தங்கள் பதிவுகள் /பதில்களை செலுத்துவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது .
தோழர் L .சண்முகநாதன் (முன்னாள் மாநில உதவி தலைவர் ) விருதுநகர் அவர்கள் என்னிடம் நமது கோட்ட நடவடிக்கைகள் குறித்தும் நெல்லை   NFPE வாட்ஸாப்ப் பதிவுகள் குறித்தும் மிக பெருமையாக சொன்னார்கள் .குறிப்பாக தோழியர் ஹேனா அவர்களின் மகள் உடல்நலத்திற்காக 
நெல்லை   NFPE வாட்ஸாப்ப் இல் நீங்கள் காட்டிய முனைப்புகள் -பிராத்தனைகள் என அதிகபட்சமான சுமார் 200 கும் மேலான  பதிவுகள் உள்ளபடியே ஒரு குடும்ப உணர்வை பறைசாற்றியது என்றார்கள் .இதற்கெல்லாம் காரணம் இங்கே நம் முன் இருக்கும் ஒற்றுமை -ஒரே எண்ணம் -ஒரே நிலைப்பாடு -இந்த உறவுகள்--உணர்வுகள் என்றென்றும் தொடர வேண்டுகிறேன் .இது தான் நமது தீபாவளி செய்தி -மற்றும் வாழ்த்துக்கள் .
என்றும் உங்கள் SK .ஜேக்கப் ராஜ் 

Tuesday, October 17, 2017

                                               நவீன நரகாசுரன் 
தீபங்களின் அலங்காரமாம் 
வண்ணங்களின் ஊர்கோலமாம் 
தீபாவளி வந்துவிட்டது 
நம்மை சுற்றி 
நரகாசுரர்கள் 
யாரை முதலில் அழிப்பது -
யாரை அடுத்து அழைப்பது 

எந்த நோக்கங்கள் இல்லாமல் 
பட்டாசுக்கும் -பட்டாடைக்குள்ளும் 
நாம் இருப்பதால் 
அச்சங்கள் ஏதுமின்றி 
நரகாசுரன் இங்கே கோலோச்சுகிறான் 

அரசு ஊழியர்களுக்கு போனசோடு முடிகிறது 
அரசுக்கு ஒருநாள் விடுமுறையோடு கழிகிறது 
நம்மை வதம் செய்யும் 
நரகாசுரர்களை  நாம் மறந்ததால் 
பட்டாசு புகைகளில் மறைந்து 
பயமில்லாமல் நரகாசுரன் வருகிறான் 

இங்கே சிறுக சிறுக தொடங்கிய 
நம் கணக்குகள் மொத்தமாக 
போஸ்டல் வங்கி என்ற மாதவி 
சொந்தம்கொண்டாட தொடங்கிவிட்டாள் 
இங்கே நீதிகேட்டு என்னாகப்போகுது என்று 
கண்ணகியும்  மிச்ச  கொலுசை விற்க
கடைத்தெருவில் காத்திருக்கிறாள் 

அஞ்சல் துறைக்கென்று இருந்த 
அடையாளங்களை வங்கிகளுக்கு 
வேண்டும் என்று  -வஞ்சகத்தோடு 
கைகேகி வரமாக வாங்கி கொண்டாள் 
காட்டுக்கு வேண்டாமென்று  -நாட்டுக்குள்ளே -இனி 
வரிகட்டிவாழ முடிவெடுத்திருக்கும் தசரத செல்வங்கள்  

புதுப்புது திட்டங்களால் நம் எதிர்காலத்தை 
தொலைத்து  கொண்டிருக்கிறோம் -
துரியோதனன் சொல்லாமலே -இங்கு 
தனியார் எனும் துச்சாதனன் 
அஞ்சல் துறையின் 
துகில் உரிய  தயாராகிவிட்டான் 
இராவணன் வீழ்ச்சிக்கு பின் 
ஒரு கொண்ண்டாட்டம் -
பேயாட்சி நடத்திய நரகாசுரனை அழித்து 
பெண்களை விடுவித்த விடுதலை  விழா 
பாரதத்தில் சொன்னதைப்போல 
பாண்டவர்கள் மீண்டும் நாடு திரும்பும் விழா -என 
பல கலாச்சார காரணங்களை கொண்ட விழா 
சுருங்க சொன்னால் 
மக்களை துன்புறுத்தியவர்களிடம் இருந்து 
நாட்டை விடுவித்து நல்லாட்சிக்கு 
அடிகோல் நடும் விழா --இப்படி 
கலாச்சர கதைகள் -நமக்கு கொண்டாட்டங்களை 
மட்டுமல்ல -கொடுங்கோலர்களை 
எதிர்க்கவும் சொல்லிகொடுத்திருக்கிறது 

வாருங்கள் --முதலில் நம் 
சமூக பாதுகாப்பை சீரழித்த 
புதிய பென்ஷன் என்ற 
நவீன நரகாசுரனை வீழ்த்த 
புறப்படுவோம் --
தீபாவளி தீபங்கள் -நம் வருங்காலத்திற்கு 
வெளிச்சங்களை கொடுக்கட்டும் 
அனைவருக்கும் நெல்லை NFPE இன் 
தீபாவளி நல் வாழ்த்துக்கள் 
  வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் 

Saturday, October 14, 2017

நெல்லை கோட்ட சங்கங்களின் சார்பாக அஞ்சாநெஞ்சன் பாலு அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி -மற்றும் புதிய பென்ஷன் குறித்த ஒரு சிறப்பு விவாதம் 
நாள் -20.10.2017 வெள்ளிக்கிழமை 
நேரம் மாலை 6 மணி 
இடம் பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் 
கூட்டு தலைமை 

 தோழர்கள் KG குருசாமி தலைவர்  அஞ்சல் மூன்று 
                             A .சீனிவாச சொக்கலிங்கம் தலைவர்  அஞ்சல்                நான்கு 
                             I .ஞான பாலாசிங்  தலைவர் GDS சங்கம் 

பொருள் -1.அண்ணன் பாலு அவர்களின் நினைவுகளை பகிர்தல் 
                                தோழர் C .வண்ணமுத்து 
                         2.புதிய பென்ஷன் எதிர்கொள்ளும் சவால்கள் 
                            தோழர் G.சிவகுமார் தோழர் ருக்மணி கணேசன்                                           M .நமசிவாயம் தோழர் T.புஷ்பாக ரன் மற்றும் இளைய தோழர்கள் 
                          3.  மாநில மாநாடு -நமது பங்கு 
                           தோழர் T.அழகுமுத்து 
                              4.  GDS கமிட்டி  இன்றைய நிலை 
                                 தோழர் SK .ஜேக்கப் ராஜ் 
நன்றியுரை தோழர் G.நெல்லையப்பன் 
 அனைத்து தோழர்களும் இந்த சிறப்பு கூட்டத்தில் பங்கேற்குமாறு கூட்டு நடவடிக்கை குழு சார்பாக கேட்டு கொள்கிறோம் .
                                        வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ்                   SK .பாட்சா                                     S.காலப்பெருமாள் 
                         
                           

Thursday, October 12, 2017

தேசிய அஞ்சல் வாரத்தை முன்னிட்டு நெல்லையில் நடந்த விழாக்கள் 
திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்தில் நடைபெற்ற விழாவில் நமது தென்மண்டல PLI ADM திரு பாண்டியராஜன் -நெல்லை கோட்ட பொறுப்பு SSP திரு A .சொர்ணம் திருநெல்வேலி உபகோட்ட ASP திரு செந்தில்குமார் நெல்லை கோட்ட P 3செயலர் ஜேக்கப் ராஜ்  
P 4 கோட்ட செயலர் SK பாட்சா உள்ளிட்ட நமது இயக்க தோழர்களும் -பயனாளிகள் என சுமார் 250 பேர் கலந்துகொண்டு சிறப்பித்தனர் .இந்தவிழாவில் தொழிலதிபர் திரு சொக்கலிங்கத்தேவர் அவர்கள் 100 SSA கணக்குகளை தொடங்கவும் -நமது திருநெல்வேலி தலைமை அஞ்சலக தோழர்கள் 50 SSA கணக்குகளை தொடங்கவும் நன்கொடைகளை வழங்கினார்கள் .திரு சொக்கலிங்கத்தேவர் அவர்களை அனுகி இந்த இமாலய சாதனைகளை புரிந்த நமது அமைப்பு செயலர் தோழர் S .முத்துமாலை அவர்களுக்கும் நெல்லை NFPE இன் வாழ்த்துக்கள் .
ஒருவருக்கு ஒருவேளை சாப்பாட்டுக்கு உதவினால் நாள்முழுவதும் நம்மை நினைப்பான் -பாடப்புத்தகங்களை வாங்கிக்கொடுத்தால் வருடம் முழுவதும் நினைப்பான் -ஆனால் ஆயுள் முழுவதும் நான்செய்த உதவியை நன்றியோடு இந்த SSA பயனாளிகள் நினைப்பார்கள் -இந்தவாய்ப்பை எனக்கு தந்த அஞ்சல்துறைக்கு என் நன்றிகள் என பெருமிதத்தோடு பேசினார் கொடைவள்ளல் சொக்கலிங்கத்தேவர் .


இல்லறவாழ்வில் இருபத்தைந்து -இனிது முடிக்கும் 
எங்கள் இனிய மாமா செய்யது ஜாபர் ஷா (அலி ஜூவல்லர்ஸ் )அவர்களை வாழ்த்துகிறோம் 
இல்லறத்தில் இருபத்தைந்து -இனிய 
நல்லறத்தில் வெற்றிகண்டு 
அன்றுமுதல் இன்றுவரை 
அளவில்லா அன்போடு 
அல்லாஹ்வின் பேரருளால் -மாமாவின் 
இல்லறம் இருபத்தைந்து இனிதாய் சிறக்க வாழ்த்துகிறோம் 
மனைவி அமைவதெல்லாம் 
இறைவன் கொடுத்தவரமாம் --
தம்பதி சகிதமாய் தங்களை 
பார்த்தபிறகுதான் ஏற்றுக்கொண்டோம் 
விருந்தோம்பல் -நலம் 
விசாரிப்புகள் -என 
வந்தவர்களை உபசரிக்கும் பாங்கும் 
சொந்தங்களை அங்கீகரிக்கும் உன்னதமும் 
வேறெங்கும் பார்த்ததில்லை -
மாமா ஜாபர் ஷா அவர்களின் 
இல்லறம் இருபத்தைந்து 
இன்பமும் இனிமையும் சிறக்க நெல்லை NFPE இன் 
வாழ்த்துக்கள் 
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் 

Tuesday, October 10, 2017

Payment of Dearness Allowances to Gramin Dak sevak (GDS) effective from 01.07.2017 onwards




Saturday, October 7, 2017

                                               முக்கிய செய்திகள்
அஞ்சலக சேமிப்பு கணக்குகளுக்கு ஆதார் எண் இணைப்பு கட்டாயமாகிறது .சேமிப்புக்கணக்குகளை தொடங்கும்பொழுது ஆதார் இல்லையென்றால் -அதை பெறுவதற்கு விண்ணப்பித்த ஆதாரங்களை காட்டினாலும் போதும் .பழைய டெபாசிட்டர்களும் தங்கள் கணக்குகளில் ஆதார் எண் இணைக்காதவர்கள் 31.12.2017 குள் இணைத்திட வேண்டும் எனவும் 21.09.2017 நிதியமைச்சக உத்தரவு தெரிவிக்கிறது .
----------------------------------------------------------------------------------------------------------------------
   அஞ்சலக கணக்குகளின் முதிர்வுத்தொகை --மற்றும் மாதாந்திர வட்டிகளை சேமிப்பிக்கணக்குகள் மூலம் தான் கிரெடிட் செய்வது என்பது 01.12.2017 முதல் கட்டாயமாகிறது .இதற்கான அறிவிப்புகளை விரிவாக  செய்வது மேலும் தபால்காரர்களை கொண்டு வாடிக்கையாளர்களிடம் தெரிவிக்கவும் அறிவுறுத்த படுகிறது (

SB Order No. 15/2017 )

                                   வேலியே பயிரை மேயலாமா ?
              சமீபத்தில் நடைபெற்ற GDS சங்க அங்கீகாரத்திற்கு நடைபெற்ற உறுப்பினர் சரிபார்ப்பின் நடவடிக்கைகளை நிறுத்திவைக்க 03.102017 அன்று அஞ்சல் வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது .எந்த சம்மேளனங்களும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் கூட உறுப்பினர் சரிபார்ப்பின் முடிவுகள் ஆளும் அரசுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளதால் இந்த நடவடிக்கை என்று பேசப்படுகிறது .இது ஒன்றும் புதிதல்ல -ஏற்கனேவே 2015 இல் இலாகா ஊழியர் சங்கங்களுக்கு நடத்தப்பட்ட முடிவுகள் இன்றுவரை வெளியிட அரசுக்கு மனமில்லை காரணம் தங்கள் சங்கம் அதில் வெற்றிபெறவில்லை என்பதுதான் .சுருங்க சொல்ல வேண்டுமென்றால் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு  தயங்குவது மாதிரிதான் .தான் அறிவித்ததை தானே நிறுத்துவது ஒரு முன் மாதிரி நிர்வாகத்திற்கு அழகா ?  வேலியே பயிரை மேயலாமா ?
பானைக்கே பசிக்கலாமா ?
 வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Thursday, October 5, 2017

அன்பார்ந்த தோழர்களே !
பேரவை முரசு அக்டோபர் இதழ் தயாராகிவிட்டது .இன்று அல்லது நாளை உங்களுக்கு தனித்தனியாக அனுப்பிவைக்கப்படும் .இந்த இதழுக்கான நன்கொடையினை கோவை கோட்டம் ஏற்றிருந்தது .கோவை கோட்ட தோழர்களுக்கும் குறிப்பாக கோவை கோட்ட செயலர் அண்ணன் எபேணேசர் காந்தி அவர்களுக்கும் பேரவையின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் .இனி வரும் இதழுக்கான நன்கொடையினை வழங்க விரும்புகிறவர்கள் உடனே எங்களுக்கு தெரிவிக்கவும் .
                                                              இதர செய்திகள் 
நேற்று நமது மேல்மட்ட அதிகாரிகளை சந்தித்த நிகழ்வுகளை குறித்து மாநிலச்சங்கம் சார்பாக சிறப்பு அறிக்கையினை மாநிலசெயலர் வெளியிட்டிருக்கிறார் .கிட்டத்தட்ட அனைத்து விஷயங்களிலும் தனது செயல்பாட்டை பதிவு செய்திருக்கிறார் .மாநிலசெயலர் தோழர் JR அவர்களுக்கு நன்றிகளை பேரவை சார்பாக தெரிவித்து கொள்கிறோம் .
குறிப்பாக RULE 38 இடமாறுதல்களில் CPMG அவர்கள் ஒத்துக்கொண்டபடி 2 ஆண்டு சேவைமூடித்த ஊழியர்களுக்கும் அவர்களின் பிரச்சினைகளின் தன்மையை குறித்து அவர்களது இடமாறுதல்கள் பரிசீலிக்கப்பட்டால் பல புதிய /இளைய தோழர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் .
 நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் 
-------------------------------------------------------------------------------------------------------------------------------

அந்தநாள் ஞாபகம் – கடிதங்கள்! 
(அஞ்சல் ஊழியர்களுக்கு சமர்ப்பணம்...)



தபாலும் தந்தியும்
தடைகள் இன்றி 
தழுவிய காலம் அது!
ஊதா நிற காகிதத்தில் 
உள்ளத்தை அனுப்பிய
உலகம் அது!
காக்கி நிற உடையில்
கடிதம் சுமந்து வரும்
கண்கண்ட தெய்வம் -
தபால்காரர்!
வீட்டுக்கு அழையா
விருந்தாளியாய்...
வீட்டில் ஒருவராய்...
விரும்பியே கடிதத் தகவல்
விற்பவராய் ...
தபால்காரர்!
படிப்பற்ற பாமரனுக்கும்
பக்குவமாய் படித்துக்காட்டும்
பண்பும் பணிவும்
பாசத்தை பரிசாக்கும்!
கோடையிலும் குளிரிலும்
கொட்டும் மழையிலும்
கொணர்ந்த செய்தி
கொடுக்காமல் சென்றதில்லை
காக்கியாரின் கடமை !
மிதிவண்டி பயணம்
மிக தூரமெனினும்
கடிதம் காட்டும் முகவரியில்
மிதிவண்டி நிற்பது
கடமையின் உச்சம்!
கடிதமில்லை மிச்சம்!
பொங்கல் வாழ்த்தினை
பிரபலங்கள் பிம்பம் ஏந்திய  
அட்டைகள் கூறும்!
பிறப்பின் எதிர்சொல்லை
பெரும்பாலும் உச்சரிப்பது
தந்திகள்!
வீட்டு மூலையில்
வளைந்த கம்பியில்
வரிசையாய் கோர்த்த
கடிதக் கற்றை
(“)அன்புள்ள(”) வார்த்தைகளை
சுமந்து நிற்கும்!
முகவரி கோடுகள் வரை
முந்தி நிற்கும் கடிதவரிகள்
முழுமை பெற இடம் தேடி
மூச்சு திணறி ஒளியும்!
 “நலம்.நலமறிய ஆவல்.” இல்
  நனையும் மனது
மற்றவை நேரில்...” கண்டு
  மகிழ்ச்சியுறும்!
Thanks to :  பா.வெ. ,  sbvenkat2008@gmail.com

Wednesday, October 4, 2017

                           ---------- புதிய கோரிக்கைகள் ....
மழை நின்றாலும் 
தூவானம் விடுவதில்லை 
எத்தனை முறை -இயக்குனரகம் 
விளக்கங்கள் தந்தாலும் 
விடுமுறை நாட்களில் பயிற்சிகளை 
அறிவிப்பது ஏன் ?

எத்தனை முறை அதை நிறுத்தினாலும் 
மீண்டும் தலை தூக்குவது ஏன் ?
எத்தனை முறை 
மாநில சங்கத்திடம் முறையிடுவது ?
மாநிலச்சங்கமும் சளைக்காமல் 
நமக்காக எத்தனை முறை 
நிர்வாகத்தோடு மல்லுக்கு நிற்பது ?

ஆட்சிகள் மாறினாலும் -சில 
அற்ப காரியங்கள் அரங்கேறத்தான் செய்கிறது 
மன அழுத்தங்களில் இருந்து 
இப்போ தான் மீண்டிருக்கிறான் அஞ்சல் ஊழியன் 
மீண்டும் அவன் முதுகில் பாரங்கள் 
முகம் முழுவதும் கோரங்கள் 

அஞ்சல் ஊழியன் என்ன பொதி சுமக்காவா வந்தான் ?
மீண்டும் மீண்டும் டார்கெட் -
அப்பொழுதெல்லாம் மார்ச் 
வந்தால் தான் மேளா வரும் -
மேலிருந்து புது புது கேள்வி வரும் 
இப்பொழுதோ ஆண்டுமுழுவதும் மேளாகள் 
நித்தம் நித்தம் பத்து கட்டளைகள்

ஊதிய குழு -பதவியுயர்வு 
தனியார் மயம் -காலி இடங்கள் 
இவைமட்டுமல்ல நம் கோரிக்கை 
பணி செய்யும் இடத்தில்  நிம்மதி 
அரட்டல் -உருட்டல் இல்லாத நிர்வாகம் -
கெஞ்சாமல் கிடைக்க வேண்டும் விடுப்பு -எவருக்கும் 
அஞ்சாமல்  வாழும் அலுவலக  வாழ்க்கை -என்ற 
புதிய கோரிக்கைகளை ஏந்தியும் 
போராட புறப்படுவோம் 


                        --------------------------------SK .ஜேக்கப் ராஜ் -----------------------------------


Admissibility of DA for inhouse training

In all cases of Government sponsored training programs which are residential and where boarding & lodging at the training institute are compulsory and are provided at fixed rates, a special allowance in lieu of daily allowance will be admissible to Government servants deputed to undergo such training course. The special allowance irrespective of the period of training course, will be calculated as follows

a. Out station Participants - Actual expenditure on boarding and lodging plus 1/4th of full DA
b. Local Participants - Actual expenditure on boarding and lodging only


Tuesday, October 3, 2017

                           பணிநிறைவு வாழ்த்துக்கள் 
தோழியர் கலாதேவி GDSBPM நாரணம்மாள்புரம் -சங்கர்நகர் அவர்கள் இன்று பணிநிறைவு பெறுகிறார்கள் .அவர்கள் பணிநிறைவு காலங்களில் சிறப்புடன் வாழ நெல்லை NFPE வாழ்த்துகிறது .இவர்களது பணிநிறைவு விழா இன்று 03.10.2017 அன்று மாலை 4 மணிக்கு சங்கர்நகர் அஞ்சலகத்தில் நடைபெறுகிறது 
------------------------------------------------------------------------------------------------------------------
நமது முன்னாள் மாநிலசெயலர் அண்ணன் பாலு அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நெல்லையில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் 
நாள் 20.10.2017  வெள்ளிக்கிழமை 
நேரம் மாலை 6 மணி 
இடம் பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் 
தலைமை தோழர்கள் 
  KG குருசாமிP3                  -A.சீனிவாச சொக்கலிங்கம் P4
பொருள் 1.அண்ணன் பாலு நினைவாஞ்சலி 
                     2.மாநில மாநாடு 
                    3.புதிய பென்ஷன் குறித்த கலந்துரையாடல்
                    4.இன்னும் பிற (தலைவர் அனுமதியுடன் )
                                 தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ்                                                           SK .பாட்சா 
கோட்ட செயலர் P3                                           கோட்ட செயலர் P4
-------------------------------------------------------------------------------------------------------------------------

                                 தோழர் ஏழுமலை பணிநிறைவு 
(தருமபுரி கோட்டத்தில் பல்லாண்டுகளாக கோட்ட செயலராக --தலைவராக வலம்வந்த தோழர் ஏழுமலை அவர்கள் 03.10.2017 அன்று தன் விருப்ப ஓய்வில் செல்கிறார் அவர்களுக்கு பேரவையின் சார்பாக வாழ்த்துக்கள் )

தருமபுரி தந்திட்ட மற்றுமொரு தன்னிகரில்லா தலைவன் 
தான் ஏற்றிருந்த கொள்கையில் சறுக்காத தோழன் 
நிர்வாகத்திற்கு எரிமலை -எங்களுக்கும் 
இயக்கத்திற்கும் கிடைத்த பனிமலை 
 இளையவர்களை  பொறுப்பினில் 
ஏற்றி அழகுபார்த்த அழகுமலை  
எங்கள் ஏழுமலை வாழ்க !

சோர்ந்து பார்த்ததில்லை --அடுத்தவரை 
சார்ந்து வாழ்ந்ததில்லை 
சமரசம் இல்லா  கொள்கை உண்டு 
சாமரம் வீச தெரியாத சரித்திரம் உண்டு 

அதிகாரிகளிடம் வாதிடும் போதும் 
அயலாரிடம் மோதிடும் போதும் 
எத்தனை தெளிவு -எத்தனை உறுதி 

CSI அமுலாக்கத்திற்கு நீதான் முதல் பலி 
பட்டியல் நீளும் முன் காணவேண்டும் புது வழி 

நீ கோட்ட செயலராய் மிளிர்ந்த நாட்கள் 
தமிழகத்தில் தருமபுரி  ஒளிர்ந்த நாட்கள் 
தலைமை பொறுப்பை ஏற்றபிறகுதான் 
தடையின்றி இளைஞர்களை தவழ விட்டாய் 

நீ சுயமரியாதைக்காரன் 
ஒருநாள் விடுப்புக்கும் -எவர் 
காலையும் பிடிக்கவேண்டாம் என 
தன் விருப்ப ஓய்வை 
தானாகவே தரித்து கொண்டாய் 
உன் முடிவு நிர்வாகத்திற்கு எச்சரிக்கையாகவும் 
எங்களுக்கு எரிச்சலாகவும் இருக்கத்தான் செய்கிறது 
உன் முடிவை மாற்ற உன்னாலே முடியாது 
எனக்கு தெரியும் --
வாழ்க அண்ணன் ஏழுமலை --உன் வேள்வியில் 
எங்கள் நெஞ்சுள் பிறக்கும் புது எரிமலை 
                        ------------தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --------------------------