...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, October 31, 2016

                                             நெல்லை கோட்ட செய்திகள் 
GDS ஊழியர்களுக்கு 01.07.2016 முதல் பஞ்சப்படி 5 சதம் உயர்வு இருக்கும் .
போனஸ் நிலுவைத்தொகை இன்று அவரவர் சேமிப்பு கணக்குகளில் கிரெடிட் ஆகும் .இதற்காக தனிக்கவனம் எடுத்து பணியாற்றிய அனைத்து கணக்கு பிரிவு தோழர்களுக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் . 

Post offices to go paperless in six months

ONGOLE, October 29, 2016

In a customer-centric initiative, India Post will go paperless shortly implementing Core System Integrator (CSI) Project across different channels, levels and locations, according to its Vijayawada Region Postal Services Director E. Veerabhadra Rao.

Addressing the media here on Friday night, he said, “A pilot project is being implemented in Machilipatnam in this region to lay down a robust IT infrastructure, implement software applications. All services of the Postal Department will go online in six months time.” Customer Interaction Channels would provide services through call centre, web portal and mobile devices.

The CSI also provided for IT-based mail operations with improved article tracking and technology-driven logistics network. Finance & Accounts as also Human Resources Management would be done online under CSI, he added.

“India Post is fully geared up to offer banking services from new fiscal,” he said, adding that the Reserve Bank of India had in principle agreed to inter-portability of its Automated Teller Machines (ATMs) with those of PSU banks. “Some ticklish issues like addressing the complaints of the customers of each other are being looked into,” he added.

             சமவேலைக்கு சம ஊதியம் -உழைப்பு சுரண்டலை தடுக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பு 
 EQUAL PAY FOR EQUAL WORK”என்ற அடிப்படையில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள உன்னத தீர்ப்பை வரவேற்போம் .இது உழைப்பு சுரண்டலை தடுக்கும் .தற்காலிகஊழியர் --காண்ட்ராக்ட் ஊழியர் --தனிமுறை நியமனம் என பல்வேறு பெயரில் தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டு குறைவான ஊதியத்தை பெறுகின்ற கொடுமை இனி முடிவுக்கு வரும் .உதாரணம் அஞ்சல் பகுதிகளில் கூட GDS மற்றும் அதன் பதிலிகளுக்கும் அந்த பதவிகளுக்கான ஆரம்பநிலையானா குறைந்த அளவு ஊதியம் தான் வழக்கப்படுகிறது  

LANDMARK JUDGMENT BY SUPREME COURT FOR PAYMENT OF “EQUAL PAY FOR EQUAL WORK” TO THE DAILY WAGE EMPLOYEES, ADHOC APPOINTEES, EMPLOYEES APPOINTED ON CASUAL BASIS, CONTRACTUAL EMPLOYEES AND THE LIKE.

The Hon’ble Supreme Court in its Historical 102 pages Judgment in Civil Appeal No. 2013 of 2013 dated 26.10.2016 has directed that Temporary Employees, Adhoc Appointees, employees appointed on Casual basis, contractual employees and the like, if the concerned employees are rendering similar duties and responsibilities as were being discharged by regular employees holding the same/corresponding posts are entitled “for equal pay for equal work” such employees are entitled for draw wages at the minimum of the payscale extended to regular employees holding the same posts. We will be representing to the Govt. To implement this Judgment and issue a common order in this regard. Full judgement is reproduced below:

IPPB operation through Postman


India Post Payment bank gives the facility for its customers especially in rural areas to deposit or withdraw the money from their IPPB account without going to the IPPB branch. The Postman will operate the accounts with help of bio metric device at the door step of customers.


Friday, October 28, 2016

         GDS ஊழியர்களுக்கு போனஸ் உச்சவரம்பு ரூபாய் 7000 ஆக உயர்வு .இது 2014 --2015 மற்றும் 2015-2016 ஆண்டிற்கும் பொருந்தும் 
    GDS எனும் புரட்சி படையினருக்கு வெற்றி வாழ்த்துக்கள் 
40 லட்சம் மத்திய அரசு ஊழியர்களை கண்டுகொள்ளாத மத்திய அரசு 
7வது உதியக்குழுவில் சிறு மாற்றத்தை கூட செய்யாமல் பிடிவாதம் செய்த அரசுக்கு கடிவாளம் போடாமல் திணறும் வேளையில் --
3லட்சம் நிரந்தர ஊழியர்களின் எந்த கோரிக்கையும் பரிசீலிக்கபடாமல் சாக்கு போக்கு காட்டும் அஞ்சல் நிர்வாகம் -இந்த இரண்டுக்கும் நடுவில் GDS என்ற   போராளிகளின் கூட்டம் மட்டும் தனது உரிமையை பெற்றிருப்பது சாதாரண விசயமல்ல --
தொடரட்டும் GDS தோழர்களின் வர்க்க உணர்வு 
வெல்லட்டும் GDS ஊழியர்களின் சமரசமில்லாத கொள்கை செயல்பாடு 
சொல்லட்டும் Enhancement of ceiling for calculation of ex-gratia Bonus payable to Gramin Dak Sevaks from Rs. 3500/- to Rs. 7000/- - Regd.

Vide Department of Posts (Establishment Division)/PAP Section it has been conveyed that the ceiling for calculation of ex-gratia Bonus payable to the GDSs has been raised from Rs.3,500/- to Rs.7,000/- per month from the accounting year 2014-15.

Arrears will be paid for the year 2014-2015. Orders already sent to all Heads of Circles.












          பஞ்சப்படி 2சதம் உயர்வு --இதற்கான முடிவுகள் 27.10.2016 அன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது .

Thursday, October 27, 2016

                                       நெல்லை கோட்ட செய்திகள் 
1.டிசம்பர்  15 புதுடெல்லியில் நடைபெறும் பாராளுமன்ற பேரணிக்கு செல்ல விரும்பும் தோழர்கள் நமது கோட்ட உதவி செயலர் 
தோழர் C .வண்ணமுத்து அவர்களை தொடர்பு கொள்ளவும் .(ரயில் கட்டணம் 860+ 860) 
2.அஞ்சல் நான்கின் தமிழ் மாநில மாநாடு டிசம்பர்  28மற்றும் 29.தேதிகளில் திண்டிவனத்தில் நடைபெறுகிறது .வரவிரும்பும் தோழர்கள் கோட்டசெயலர் தோழர் SK .பாட்சா அவர்களை அனுகவும் .இதற்கான நன்கொடை புத்தகங்கள் மாநில சங்கத்தின் மூலம் வந்துள்ளன .தேவைப்படுவோர் பெற்று கொள்ளவும் .ஏற்கனேவே நன்கொடை புத்தகங்களை வாங்கியவர்கள் டிசம்பர்  7ம் தேதிக்குள் பிரித்த தொகையுடன் திருப்பி செலுத்த கேட்டு கொள்கிறோம் .
3.பஞ்சபடி DA from July 2016--இன்று நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .
--------------------------------------------------------------------------------------------------------
                                              

 
இலாகாவின் உயர்வு எங்களின் வியர்வை அல்லவா !
இலக்கை எட்டியது ஊழியர்களா ? அதிகாரிகளா ?
விடுமுறை நாட்களையும் கபளீகரம் செய்யும் அளவிற்கு அமேசான் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன ? என்ன ? 

ஞாயிறு மற்றும் பண்டிகை விடுமுறை தினங்களில் E-COM/E-TAIL/SP பட்டுவாடா பணிக்கு ஊழியர்களை பணித்து இடப்பட்ட  அஞ்சல் இலாக்காவின்  தொழிலாளர் விரோத , மனித உரிமை மீறலான உத்திரவை ரத்து செய்திடக் கோரி  நடைபெற்ற முதற்கட்டப் போராட்டமான  கண்டன ஆர்ப்பாட்டம் 26.10.2016 அன்று பாளை தலைமைஅஞ்சலகம் முன்பு சிறப்பாக நடைபெற்றது .அஞ்சல் நான்கின் கோட்ட தலைவர்  தோழர் சீனிவாச சொக்கலிங்கம் தலைமை வகித்து  நடத்திக்கொடுத்தார்கள் .
                                          தோழர் சீனிவாச சொக்கலிங்கம் தலைவர் P 4
                                       தோழர் பாட்சா  கோட்டசெயலர்  P 4
                           தோழர்  C .வண்ணமுத்து  கோட்ட உதவி செயலர் 

                             தோழர் அழகுமுத்து  கோட்ட உதவி செயலர்   

               தோழர் ராம்குமார்  GDS சங்க பொறுப்பாளர்    (Admin whatsapp )
                                                   தோழர் ஜேக்கப் ராஜ்  கோட்டசெயலர்  P 3 



                                   தோழர் புஷ்பாகரன்  கோட்ட உதவி செயலர் P4  

Wednesday, October 26, 2016

                                    நெல்லை கோட்ட செய்திகள் 
1.RULE 38 ன் கீழ் இடமாற்றம் பெற்று நெல்லைக்கு வரும் முதல்பட்டியலில் உள்ள 9 தோழர்களுக்கும் இடமாறுதல் கமிட்டி 25.10.2016 மாலை நடைபெற்றது .நெல்லை மற்றும் நாகர்கோயில் SSP கள் மற்றும் ASP (HOS) கொண்ட இந்த இடமாறுதல்களை பரீசீலித்து முடிவெடுத்துள்ளது .இன்று  அதற்கான உத்தரவுகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
  2.தபால்காரர் /MTS பதவிகளில் Officiating பார்க்கும்  GDS ஊழியர்களுக்கு ஏழாவது சம்பளக்குழு அடிப்படையில் ஊதியம் வழங்க நேற்றும்  விவாதிக்கப்பட்டது .மதுரை RMS மற்றும் .மத்திய மண்டலங்களில் புதிய  ஊதியங்கள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது என்றாலும் தென் மண்டலத்தில் ஏனோ இது நடைமுறைப்படுத்த இயலவில்லை .மாநிலசங்கங்கள் இந்த பிரச்சினைகளை குறித்து விவாதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் .
3. GDS ஊழியர்களுக்கு அடையாள அட்டை வழங்க நமது கண்காணிப்பாளர் அவர்கள் ஒப்புதல்  கொடுத்துள்ளார்கள் .ஆகவே அடையாளஅட்டை வேண்டுவோர் தோழர் I. ஞானபாலாசிங் (9003479901 ) அவர்களை தொடர்பு கொள்ளவும் .
                  வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் நெல்லை  

ஞாயிறு /மற்றும் விடுமுறை தினங்களில் பணி செய்ய வற்புறுத்தும் தமிழக அஞ்சல் நிர்வாகத்தை கண்டித்து மாபெரும் கண்டன                                           ஆர்ப்பாட்டம் 
நவீன நரகாசுரர்களை அடையாளம் காண்போம் 
நாள் 26.10.2016 நேரம் மாலை 6 மணி 
இடம் பாளையம்கோட்டை HO
                     அனைவரும் வாரீர் !வாரீர் !
 
பன்னாட்டு கம்பெனிகளில் கூட அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு  சனி , ஞாயிறு விடுமுறை அளிக்கப்படுகிறது. கூரியர் நிறுவனங்கள் கூட  அமேசான், நாப்தால் பொருட்களை ஞாயிறு மற்றும் பண்டிகை தினங்களில் பட்டுவாடா செய்வதில்லை . அங்கெல்லாம் தொழிலாளர் நலச்  சட்டங்களுக்கு மதிப்பளித்து வார விடுமுறை அளிக்கிறார்கள். 
ஆனால் MODEL EMPLOYER என்று அரசியல் அமைப்புச் சட்டத்தில் சொல்லப்படும் மத்திய அரசுத் துறையான அஞ்சல் துறை அதிகாரிகள், தன்னுடைய இலாகாவில் பணி  புரியும் ஊழியர்களை கொத்தடிமையாக நினைத்து  வார விடுமுறை மற்றும் பண்டிகை தினங்களில் பணிக்கு வரச்சொல்லி  உத்திரவு இடுகிறார்கள். கேட்டால் ரயில்வே துறையில் 24 மணிநேர  பணி  செய்யவில்லையா ? அங்கெல்லாம் ஞாயிறு விடுமுறை விடப்படுகிறதா என்று விபரம் தெரியாமல் சில கீழ்மட்ட அதிகாரிகளும் கேட்கிறார்கள். 
CPMG  அவர்கள் கேரளா அஞ்சல் வட்ட பொறுப்பும் ஏற்றுள்ளதால் அவர் எதிர்வரும் 27.10.2016 மாலைக்கு பிறகுதான் வர இயலும் எனவும், எனவே எதிர்வரும் 28.10.16 அன்று காலை அவரை சந்திக்கலாம் என்றும் தெரிவித்தார்கள். மேலும் உடன் இது குறித்து பேசிட PMG ,MM  மற்றும் DPS, HQ ஆகிய இருவரையும்  CPMG  அவர்கள் பணித்துள்ளதால், நாளை 26.10.2016 காலை 10.30 மணிக்கு PJCA  பிரதிநிதிகளை அழைத்துள்ளார்கள். இதில் தீபாவளி பட்டுவாடா நிறுத்தம்  குறித்து முடிவு அறிவிக்கப்படும். இதனிடையே, தென்மண்டல மற்றும் கோவை மண்டல பொறுப்பேற்றுள்ள PMG அவர்கள் தன்னுடைய மண்டலங்களில் தீபாவளி பட்டுவாடாவை  நிறுத்திட உத்திரவை அளித்துள்ளார்கள். அவர்களுக்கு நம் நன்றி .
மேலும் இது குறித்து இன்று இரண்டுமுறை நம்முடைய சம்மேளன மாபொதுச் செயலருக்கு நம்முடைய மாநிலச் செயலர்  தகவல்களைத் தெரிவித்து தமிழகத்தில்  PJCA  போராட்ட களம்  அமைந்துள்ளதால் உடன் அஞ்சல் வாரிய உறுப்பினர் ( O ) அவர்களை சந்தித்து முடிவு காண வேண்டியுள்ளார். அவரும் உடன் சந்தித்து பிரச்சினையை பேசுவதாக நம்முடைய மாநிலச் செயலருக்கு உறுதி அளித்துள்ளார்.
எப்படி இருப்பினும், எந்தக் காரணம் கொண்டும் இது போன்ற கொடுமைகளை  நாம் அனுமதிக்க முடியாது. எனவே 26.10.2016 போராட்டத்தின் வீச்சு , ஊழியர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பு உணர்வை அஞ்சல் நிர்வாகத்திற்கு உணர்த்திட வேண்டும். அந்த வகையில் போராட்டத்தை அனைத்து பகுதிகளிலும்   சிறக்கச் செய்யுமாறு வேண்டுகிறோம். 
நம்முடைய கோரிக்கை எல்லாம் தீபாவளி பண்டிகைக்கானது மட்டுமல்ல. இந்த தொழிலாளர் விரோத உத்திரவு ஒட்டு மொத்தமாக ரத்து செய்யப்பட வேண்டியதே  ஆகும். 
                                                    போராட்ட வாழ்த்துக்களுடன் 
              SK .ஜேக்கப் ராஜ்                                            SK .பாட்சா 
           கோட்ட செயலர் P3                              கோட்ட செயலர் P4  
----------------------------------------------------------------------------------------------------------------------




Click Here for the Advertisement 

Click Here for the Detailed Notification 

Click Here for the Vacancies 

------------------------------------------------------------------------------------------------------------------------


Tuesday, October 25, 2016

AIGDSU சங்கம் நடத்தவிருந்த இரண்டுநாட்கள் வேலைநிறுத்தம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது .அஞ்சல் துறைஅமைச்சரின் சாதகமான பரிந்துரை மற்றும் நிதிச்செயலரின் உறுதிமொழி இவைகளை தொடர்ந்து வேலைநிறுத்தம் ஒருமாத காலத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது --நன்றி .SA போஸ்ட் 


ஞாயிறு மட்டும் விடுமுறை நாட்களில் ஏஜன்சி பணிகளையும் அதனோடு சேர்ந்து ஸ்பீட் போஸ்ட் பட்டுவாடா செய்யும் உத்தரவை ரத்து செய்திட கோரி ஆர்ப்பாட்டம் .
நாள் 26.10.2016 நேரம்  மாலை 6 மணி 
இடம் பாளையம்கோட்டை HO










Sunday, October 23, 2016

நெஞ்சம் நிறைந்த அன்பு தலைவருக்கு நாஞ்சில் நாட்டில் நடைபெற்ற நினைவேந்தல் 
நாள் 23.10.2016 இடம் செங்குந்தர் கல்யாணமண்டபம்  
தலைமை தோழர் C .அமிர்தலிங்கம் பேரவைத்தலைவர் 
முன்னிலை தோழர் SK .ஜேக்கப் ராஜ் பொதுச்செயலர் NCA பேரவை 




 தோழர் ஜேக்கப் ராஜ் தொகுத்துவழங்கிய நினைவு மலரை அண்ணன் BALM ஆனந்தராஜ் அவர்கள் வெளியிட  தோழர்கள் கண்ணையன் அவர்களும் தோழர் K .ராகவேந்திரன் அவர்களும் பெற்றுக்கொண்டனர் 

 வி .ராசேந்திரன் முன்னாள் மாநில செயலர் அஞ்சல் நான்கு 
     தோழர் ஸ்ரீ வெங்கடேஷ் முன்னாள் மாநில தலைவர் அஞ்சல் மூன்று 
                            தோழர் மோகன் தமிழ் மாநில தலைவர் 
  தோழர் NS முன்னாள் பொதுச்செயலர் அஞ்சல் மூன்று  
    தோழர் சுந்தரமூர்த்தி  முன்னாள் மாநில /சம்மேளன செயலர் 
                                தோழர் இரா .கணேசன் திண்டுக்கல் 

                                   தோழர் .K .ராகவேந்திரன் அவர்கள் 
          தோழர் A.இஸ்மாயில்  தமிழ் மாநில  செயலர் AIGDSU 

நேற்றைய வரவுகள் 
தோழர் ராமலிங்கம் -திருவாரூர் -                  -1000
தோழர் வடிவேல் மலை                                      200
தோழர் சிவஞானம்                                                 200
தோழர் சின்னிகிருஷ்ணன் சென்னை            500
தோழர் சுவாமிநாதன்                                            300
தோழர்  ஆசைத்தம்பி ராதாபுரம்                      500
தோழர் M .அந்தோணி சாமி                               500
தோழர் PR இளங்கோவன் திருச்சி                  500
தோழர் செய்யது ஜபர்       திருச்சி                   500
தேனி கோட்டம்                                                   1000
விருதுநகர்  கோட்டம்                                       1000
மணிவண்ணன்                                                      500
கலியமூர்த்தி  பாண்டிச்சேரி                            500
கணேசன்  திண்டுக்கல்                                     1000
தோழர் செம்பான்                                                 500
சென்னை பெருநகரம் சார்பாக                  12000 
குறிப்பு --தோழர் பாலு அவர்களின் இரண்டாமாண்டு நினைவஞ்சலி பாண்டிச்சேரி தோழர்கள் நடத்த வேண்டுகோள் வைத்துள்ளனர் .அவர்களுக்கு NCA பேரவை சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் .நேற்றைய நிகழ்வுகள் சிறப்புடன் அமைய உழைத்த /பங்கேற்ற குமரி கோட்ட அனைத்து முன்னணி தோழர்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளை காணிக்கையாக்குகிறோம் .
வாழ்த்துக்களுடன்  SK ஜேக்கப் ராஜ்  கோட்ட செயலர் நெல்லை 
பொதுச்செயலர் தலைவர் NCA பேரவை தமிழ்நாடு 

Saturday, October 22, 2016

                                       சென்னையில் GDS கமிட்டி  
GDS கமிட்டி நேற்று 20.10.2016 சென்னையில் GDS ஊழியர்களை சந்திக்க ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது .நமது கோட்டத்தில் இருந்து தோழர் S .காலப்பெருமாள் அவர்களும் ,மாடசாமி BPM வேப்பங்குளம் அவர்களும் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை GDS கமிட்டி முன் நேரடி சாட்சியமாக  அளித்தார்கள் .
   அன்றைய GDS பதவிகள்   கௌரவ பதவி அதனால் அன்று பிற சலுகைகள் தேவையில்லாமல் இருந்தது .இன்று GDS பதவி வாழ்க்கைக்கான பதவி -அரசு ஊழியர்களை போல் எல்லா நன்மைகளும் /சலுகைகளும் கொடுக்கவேண்டும் என்றும் இந்தியாவிலேயே ஒரு அரசு துறையில்  வேலைபார்க்கும் ஊழியர்களுக்கு வேலைப்பளுவை காரணம் காட்டி வாங்குகிற சம்பளத்தை குறைக்கும் ஒரு இழி நிலை GDS ஊழியர்களுக்கு மட்டும் தான் இருக்கிறது என்று தனக்கு கிடைத்த வாய்ப்பை நமது தோழர் காலப்பெருமாள் மிகச்சரியான இடத்திற்கு கொண்டுசென்றார்கள் .அவர்களுக்கு நெல்லை கோட்டம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் .
----------------------------------

தோழர் பாலு அவர்களின் நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு ந்ன்கொ டைகளை அனுப்புவோர் POSB எண் 0072773482 ஜேக்கப் ராஜ் கணக்கிற்கு அனுப்பவும் .


நேற்று  21.10.2016அனுப்பியவர்கள் 
தோழர்  பாலாஜி     பாளை                                                                 200
 தோழர்  TAP    சேக் மதார்  (BPC )                                                     200 
 தோழர்    M.தளவாய்                                                                           200  

தோழர்     ஜான் தேவதாஸ்                                                               200
தோழர்   S.கோமதிநாயகம்                                                              300  
  தூத்துக்குடி   கோட்டம்                                                                   3000
மதுரை  கோட்டம்                                                                             5000

                                              வாழ்த்துக்களுடன் 
  SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை ------------------------------------------------------------------------------------    

         RULE 38 இடமாறுதல்களும் --நமது பங்கும்  

நம்முடைய அஞ்சல் மூன்று சங்கத்தின்  விடா முயற்சி காரணமாக கடந்த 15.5.2013 முதல் மூன்று ஆண்டுகளாக தேங்கிக்கிடந்த  விதி 38 ன் கீழான இடமாறுதல் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு கிட்டத்தட்ட 200 எழுத்தர்களுக்கு இடமாறுதல்  உத்திரவு  தற்போது அளிக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து RJCM  கூட்டத்தில் நம்மால் இந்தப் பிரச்சினை எழுப்பப்பட்டு வந்ததும், கேடர்  சீரமைப்பு உத்திரவு காரணமாக  CPMG  அவர்கள் இதனை செய்ய இயலாது என்று பதில் அளித்ததும் உங்களுக்குத் தெரியும் . 

இதற்கான RJCM MINUTES பதிவு  ஏற்கனவே  நம் மாநிலச்  சங்க வலைத்தளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்தனையும் தாண்டி இன்று நாம் இந்த உத்திரவை பெற்றுள்ளோம்.  

இந்த உத்திரவை அளிக்க இறுதியாக முடிவெடுத்து கடந்த 21.9.2016 அன்று அதற்கான கூட்டத்தை கூட்டிய  நம்முடைய  CPMG, DR  . சார்லஸ் லோபோ அவர்களுக்கு நம்முடைய மாநிலச்  சங்கத்தின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஏற்கனவே  ,நமது கோட்டத்திற்கு 9 தோழர்கள் மறுதலாகிவருகிறார்கள் .மேலும் இரண்டாவது பட்டியலில்  2 தோழியர்கள் வருகிறார்கள் அவர்களையும் நெல்லை 
NFPE வாழ்த்தி  வரவேற்கிறது .
1. ஹரிசித்ரா  தூத்துக்குடி 
2.பார்வதி  பாண்டிச்சேரி  
                                                        வாழ்த்துக்களுடன்  SK .ஜேக்கப் ராஜ்  

 தபால்காரர் பதவிகளுக்கான நேரடி நியமன அறிவிப்பு 
தமிழக அஞ்சல்வட்டத்தில் தபால்காரர் பதவிகளுக்கு நேரடி விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன .ஆன் லைன் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யவேண்டிய கடைசி நாள் 15.11.2016 
நெல்லையில் காலியிடங்கள் UR 5 SC 4 ST 1 PH (HH )1 

முழுமையான அறிவிப்பு மற்றும் காலியிடங்களை தெரிந்து கொள்ள 

Online applications are invited from eligible Indian Citizens, to fill up the post of Postman/Mail Guard in Postal / Railway Mail Service (RMS) Divisions in Tamilnadu Circle in the Pay Matrix Pay level 3: Rs 21,700 – 69,100.
 
Pl. Click Here for the Detailed Notification 

Friday, October 21, 2016

தபால்காரரில்   இருந்து பதவி உயர்வு பெற்று புதிதாக எழுத்தராக பணியில் சேரும் தோழர்களை வாழ்த்திவரவேற்கிறோம் 
தோழர் ரமேஷ் --பாளையம்கோட்டை 
தோழர் மேஜர் நல்லையா   -அம்பாசமுத்திரம் 
தோழர் ராமையா @ராபர்ட்  சங்கர்நகர் 
தோழர் நாராயணன் வி .கே .புரம் 
தோழர் கண்ணன்  நான்குனேரி 
தோழர் பெருமாள்  நான்குனேரி 
தோழியர் உமாமகேஸ்வரி  வீரவநல்லூர் 
தோழியர் சுமதி  வள்ளியூர் 

  இவர்களுக்கு 24.10.2016 முதல் பணிஇடத்திலேயே பயிற்சி கொடுக்கப்பட்டு அந்தந்த அலுவலகங்களில் பணிகளை தொடர்வார்கள். .அனைவருக்கும் நெல்லை NFPE இன் அன்பு வாழ்த்துக்கள் 
                                       தோழமையுடன் 
                       SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர்  

                                            GDSD  போனஸ் செய்திகள் 

MEETING ON GDS BONUS ISSUE WITH THE DEPARTMENT OF POSTS

 

          A meeting on GDS bonus issue was convened by the Member (P) Shri A.K. Dash in his Chamber in the evening of 19.10.2016 with PJCA leaders Secretary Generals and Presidents of NFPE & FNPO attended the meeting.

 

          Member (P) told that the case of enhancement of bonus ceiling is being pursued by the Secretary Post. He has met with Finance Secretary personally and requested to expedite the matter.  Minister (C) has also written letter to Finance Minister to grant enhanced bonus to GDS. He assured that it will be approved by Finance Ministry soon. He appealed to defer the agitational  programmes  including  2 days  Strike on 9th &10th November,2016 . He assured to issue orders for casual labourers wage revision also.


 தோழர் பாலு அவர்களின் நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு ந்ன்கொ டைகளை அனுப்புவோர் POSB எண் 0072773482 ஜேக்கப் ராஜ் கணக்கிற்கு அனுப்பவும் .

நேற்று  20.10.2016அனுப்பியவர்கள் 
தோழர்  கணபதி  சேரன்மகாதேவி                                               200
 தோழர்  S.முருகன்  திருநெல்வேலி                                            500 
 தோழர்   G.செல்வராஜன்  (   Retd )பணகுடி                               500  

தோழர்    V.சரவணன்   பாளை கோர்ட்ஸ்                                   300
 தோழியர்  சிவனருள்செல்வி   BPC பாளை                              200

                                              வாழ்த்துக்களுடன் 
                          SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Thursday, October 20, 2016

        நினைவில் போற்றுவோம் 20.10.2016 தோழர் பாலு நினைவு தினம் 
அஞ்சல் மூன்றின் முன்னாள் மாநில செயலர் அஞ்சாநெஞ்சன் அண்ணன் பாலு அவர்களின் முதலாமாண்டு நினைவு தினம் --அவர் நினைவை போற்றுவோம் .
அஞ்சல்தொ ழிற்சங்க வரலாற்றில் அண்ணன் பாலுவின் காலம் பொற்காலம் 
  நெல்லைக்கும் அவருக்கும் ஏன் இத்தனை நெருக்கம் 
       1992 நெல்லையில்  அன்றைய கண்காணிப்பாளரை இடமாற்றம் செய்திட வேண்டி NFPE --FNPO  இனைந்து 26 நாட்களுக்கு மேல் நடத்திய மருத்துவ விடுப்பு போராட்டம் .போராட்ட முடிவில் அந்த அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டார் .ஆனால் மருத்துவ விடுப்பு எடுத்து விடுப்பில் சென்ற அனைத்து ஊழியர்களுக்கும் ஊதிய பிடித்தம் .இதை எதிர்த்து சென்னை நிர்வாக தீர்ப்பாயகத்தில் நாம் தொடுத்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது .இருந்தாலும் மனம் தளராத மாநிலசெயலர் அண்ணன் பாலு அன்றைய CPMG அவர்களிடம்  வாதாடி /போராடி அனைவருக்கும் பிடிக்கப்பட்ட ஊதியத்தை பெற்று தந்தார்கள் .நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கிலும் வெற்றி பெற வைத்தவர் பாலு .(தோழர்கள் சௌந்தர பாண்டியன் அன்றைய தலைவர் ,திரவியம் அன்றைய செயலர் மற்றும் FNPO தலைவர் /செயலர் இந்த நான்குபேருக்கு மட்டும் அவர்கள் பெயரில் வழக்கு நடந்ததற்காக அவர்களுக்கு மட்டும் ஊதியம் கிடைக்க வில்லை )
பாளையம்கோட்டை நோட்டீஸ் போர்டு நீக்கம் 1992 இல் திரு .பார்த்திபன் SSP ஆக இருந்தபொழுது நாட்டுநடப்புகள் என்ற தலைப்பில் நான் எழுதிவைத்த வாசகங்களுக்காக தொழிற்சங்க நோட்டீஸ் போர்டு அகற்றப்பட்டு எனக்கு Misuse of notice borad என்ற காரணத்தை காட்டிR rule  -16 இன் கீழ்  குற்றப்பத்திரிக்கை கொடுக்கப்பட்டது .அன்றைய PMGதிரு  பார்த்தசாரதி -அவர்களைசந்திக்க  என்னையும் அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி மறுநாளே நோட்டீஸ் போர்டு மாற்றப்பட்டது .மேலும் அன்றைய தினமே திரு .பார்த்திபன் SSP அவர்களின் கூடுதல் பொறுப்பு ரத்துசெய்யப்பட்டது . 
 PMG அலுவலகம் முன்பு தர்ணா என்றால் அன்றைய தினம் மண்டல ம் முழுவதிலும் இருந்து தோழர்கள்  பெருமளவில் கலந்துகொண்டு அங்கு  எழுப்பப்படும் கோஷங்களால் பல அதிகாரிகளின் வேஷங்கள் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டன .(குறிப்பாக நாகர்கோயில் தோழர் MMS திண்டுக்கல் அண்ணன் கணேசன்  ,பிரகஸ்பதி ,ஜேக்கப் ராஜ் என எங்கள் கோஷங்களுக்கு  தனி வரவேற்பு ஊழியர்களிடமும் -தனி கவனிப்பு அதிகாரிகளிடம் இருந்து வரும்  )  குறிப்பாக அன்றைய PMG க்கு எதிராக நாம் கொடுத்த கோஷங்கள் 
 மயக்கமா ? தயக்கமா ?
சங்கர்நகர் விருந்துக்கும் -
-DISPENSARY மருந்துக்கும் மயக்கமா ?
Rule 38 இடமாறுதல்களில் இன்றைக்கு இருக்கும் இத்தனை கட்டுப்பாடுகள் அன்றைக்கு கிடையாது .Rule 38 கேட்கும் ஊழியர்களின் விண்ணப்ப கடிதங்களை கோட்டசெயலர் பெற்று மாநிலசெயலருக்கு அனுப்பிய இரண்டாம் நாளே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு அதன் நகல் அந்தந்த ஊழியர்களுக்கும்  மாநிலசங்கத்தால் அனுப்பப்படும் .பல புதிய இளைய தோழர்களுக்கு சங்கத்தின் மேல் ஒரு பிடிப்பு வந்ததற்கு அதுவும் ஒரு காரணம் .
BCR பதவி உயர்வு அமுல்படுத்தப்பட்டதை தொடர்ந்து 1992  களில் நமது முன்னணி தோழர்கள் தொலைதூரத்திற்கு இடமாற்றங்கள் செய்யப்பட்டபோது ஒரு ஞாயிற்று கிழமை PMG அவர்களிடம் சிறப்பு அனுமதி பெற்று மதுரை IQ வில் PMG அவர்களை சந்தித்து இடமாற்றங்கள் ரத்து செய்யப்பட்டது. 
கருணைஅடிப்படையிலான பணிவாய்ப்பு தாமதப்படும் போது சம்பந்தப்பட்ட ஊழியர்களை Circle Office க்கு நேரிலேயே அழைத்து சென்று சம்பந்தப்பட்ட பிரிவில் இருந்து APMG வரை அழைத்துசென்று தீர்த்து வைப்பார் .                
மொத்தத்தில் பாலு விலைமதிப்பில்லாதர் -எதிலும்   
விலை போகாதவர் பாலு -                                                      (தொடரும் )
தோழர் பாலு அவர்களின் நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு ந்ன்கொ டைகளை அனுப்புவோர் POSB எண் 0072773482 ஜேக்கப் ராஜ் கணக்கிற்கு அனுப்பவும் .
நேற்று  19.10.2016அனுப்பியவர்கள் 

தோழர் S.முத்துமாலை                                                                                500
 தோழர்  முத்துகிருஷ்ணன்  நாங்குநேரி                                               200 
  தோழர்  கோபாலகிருஷ்ணன்                                                                  200  

தோழர் P.முத்துக்குமாரசாமி   செங்கோட்டை                                     200
தோழர்  கோபாலன்  களக்காடு                                                                100
தோழர்  S.சௌந்திர பாண்டியன்  Accounts officer  (Retd) 
மற்றும் முன்னாள் கோட்ட  . தலைவர்  )                                              1000

                                              வாழ்த்துக்களுடன் 
                          SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை