...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, August 31, 2017

                                                                   வாழ்த்துகிறோம்
இன்று 32 வது ஆண்டு இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கும் அன்பு மாமா அஞ்சல் நான்கின் மாநில உதவி தலைவர் தோழர் SK .பாட்சா -அனிதா பேகம்
தம்பதிகள் பல்லாண்டு வாழ நெல்லை NFPE சார்பாக வாழ்த்துகிறோம் .
 வாழ்த்துக்களுடன்  SKJ 

                                                    முக்கிய செய்திகள்
நெல்லையில்  கே டேர் இடமாறுதலில் மாற்றப்பட்ட இரு மாறுதல்கள் நேற்றுஅதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது .
தோழியர் S .தேவராணி --- Treasurer  பெருமாள்புரம்
தோழர் M .பாலசுப்ரமணியன் --SPM திருநெல்வேலி தெற்கு
இருவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.
------------------------------------------------------------------------------------------------------------------------
                     தோழர் நாகராஜ் மீண்டும் நெல்லை வருகை
நமது கோட்டம் திசையன்விளை பகுதியில் BPM ஆக பணியில் சேர்ந்து பின்னர் APS க்கு நேரடி எழுத்தராக  திருவண்ணாமலை கோட்ட ஒதுக்கீட்டில்  தேர்வாகி கொல்கொத்தாவில்  10ஆண்டுகள் பணியாற்றி மீண்டும் நமது கோட்டம் மானுர் SO வில் பணியாற்ற வரும் அன்பு தம்பி நாகராஜ் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம் .தோழர் நாகராஜ் அவர்கள் BPM ஆக இருந்தது முதல் இன்றுவரை நமது இயக்க பணியில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டட  ஒரு ஆற்றல் -ஆர்வம் மிக்க செயல்வீரர் என்பது குறிப்பிடத்தக்கது .
----------------------------------------------------------------------------------------------------------
 கேடேர் சீரமைப்பு -அமுலாக்கத்தின் இரண்டாவது கூட்டம் 01.09.2017 அன்று புதுடெல்லியில் நடக்கிறது .அதன் கமிட்டி உறுப்பினர்களில் ஒருவரான திரு JT.வெங்கடேஸ்வரா யலு அவர்களிடம் நேற்று சென்னையில் அவர்களிடம் மேலும் ஒரு கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது .இந்த கமிட்டி அறிக்கையினை தொடர்ந்து இரண்டாம்கட்ட அமுலாக்கம் தொடங்கும் .(தொடரும் ) 
-------------------------------------------------------------------------------------------------------------------
வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Wednesday, August 30, 2017

அன்பார்ந்த தோழர்களே !
  தென்மண்டல தலைவர் அவர்களுடன் நடைபெற்ற இருமாதந்திர பேட்டி 29.08.2017 அன்று நடைபெற்றது .அஞ்சல் மூன்றின் சார்பாக நமது மாநில செயலர் தோழர் JR -ராமநாதபுரம் கோட்ட செயலர் தோழர் அறிவழகன் ஆகியோர் கலந்து கொண்டனர் .பேட்டியை தொடர்ந்து அதே கூட்ட அரங்கிலேயே வந்திருந்த அனைத்து கோட்ட செயலர்களையும்
( கன்னியாகுமரி, நெல்லை,விருதுநகர் திண்டுக்கல் தேனி  பரமக்குடி )  உடனழைத்து கோட்ட வாரியான பிரச்சினைகளை விவாதிக்கப்பட்டது .உள்ளபடியே வந்திருந்த அனைத்து கோட்ட செயலர்களுக்கும் முழு திருப்தியை தந்தது .PMG அவர்களுடன் நமது இயக்குனர் அவர்களும் முழுமையாகா இருந்து கோட்ட செயலர்கள் தந்த கடிதங்களின் மேல் உடனடி குறிப்புகள் --உத்தரவுகளை -கொடுத்து கொண்டு வந்தார்கள் .சரியாக காலை 10 மணிக்கு தொடங்கிய கூட்டம் மதியம் 2 மணிவரை தொடர்ந்தது .ஊழியர் பிரச்சினைகள் மேல் நமது PMG அவர்கள் கேட்டு அறியும் விதமும் --PMG அவர்களுக்கு துணையாக நமது DPS அவர்கள் காட்டிய ஆர்வமும் பாராட்டுதலுக்கு உரியது .நேற்றைய கூட்டத்தில் தீர்க்கப்பட்ட முக்கிய பிரச்சினைகள் .
1.மதுரை PSD சம்பந்தமாக ஊழியர்தரப்பு பிரதிநிதிகள் அடங்கிய குழுவுடன் மீண்டும் ஆராய்ந்து முடிவுகள் எடுக்கப்படும் .அதுவரை PSD இணைப்பு என்பது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது இந்தக்குழுவில் PSD அஞ்சல்நான்கின் செயலர் தோழர் ஜெயராஜன் அவர்கள் இடம் பெறுகிறார் .
2.CSI ரோல்லவுட் தொடர்பாக விவாதிக்கையில் அணைத்து அலுவலகங்களிலும் பழைய கணினிகள் -பிரின்டர்கள் -UPS மாற்றுவதற்கான புதிய இன்டென்ட் இயக்குனரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது .
3.தேங்கிக்கிடந்த அனைத்து MACP உத்தரவுகள் வெளியிடப்பட்டுள்ளது .அடுத்த MACP (30.09.2017) கான உத்தரவுகள் நவம்பர் 30 குள் வெளிவரும் வகையில் அனைத்து கோட்ட அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .
4.LSG சம்பந்தமான இடமாறுதல்கள் குறித்த ஊழியர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டுசுமார்  22 ஊழியர்களுக்கான  உத்தரவுகள் 23.08.2017 அன்று வெளியிடப்பட்டது .
5.தோழர் சாகுல்( MMS திருநெல்வேலி ) அவர்களின் இடமாறுதலுக்கான உத்தரவுகள் நேற்று நம் நிர்வாகிகள் முன்னிலையிலே கோப்புகளை வரவழைத்து -உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட்து .இன்று உத்தரவு வெளிவரும் என்ற உறுதியை PMG அவர்கள் தந்தது நமக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும் ..
6.கன்னியாகுமரி கோட்டத்தில் இடப்பட்ட தவறான உத்தரவுகள் குறித்து சம்பந்தப்பட்ட கோட்ட அலுவலகத்தில் விளக்கம் கேட்டு தொலைபேசியிலும் -எழுத்துப்பூர்வமாகவும் வழிகாட்டுதல் குறிப்புகள்  கொடுக்கப்பட்டுள்ளது .
7.ஆலங்குளம் DE  QUARTARISE சம்பந்தமாக இறுதி முடிவுகள் எட்டப்படவுள்ளன .இந்த PROPOSAL என்று வந்ததோ அன்றிலிருந்து DEQUARTERS  ஆக்கப்படும் என்று நீண்ட விவாதங்களுக்கு பிறகு ஏற்றுக்கொள்ளப்பட்டது .
8.ACCOUNTS பிரிவில் தென்மண்டலத்தில் நான்கு தோழர்களுக்கு HSG II  பதவி உயர்வுகள் வந்துள்ளது .அவர்களிடம் விருப்பமனுக்கள் பெற்று .இடமாறுதல் பிறப்பிக்கப்படும் .
 விடுபட்ட இதர பிரச்சினைகள் குறித்து பேச மீண்டும் ஒருநாள் சிறப்பு பேட்டி வேண்டும் என்ற நமது மாநிலசெயலரின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு -பாராளுமன்ற குழு விசிட் முடிந்தவுடன் ஒருநாள் INFORMAL மீட்டிங் கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது .
ஒவ்வொரு கோரிக்கைகளை பேசும்போதும் நமது PMG அவர்கள்  காட்டிய ஆர்வமும் -அதை தீர்ப்பதற்கு உடனே இயக்குனர் அவர்களுக்கு கொடுத்த வழிக்காட்டுதல்களும் பெரிய நம்பிக்கையை கொடுத்தது .இதுபோன்ற உயர் அதிகாரிகள் எந்த அளவிற்கு ஊழியர்களின் பிரச்சினைகளைதீர்க்க மனிதாபிமானத்துடன் அணுகுகிறார்கள் என்பதனை   பார்த்தபிறகாவது கோட்ட மட்டங்களில் உள்ள ஒருசிலர் நிலைமையை உணர்ந்து தங்களை சரிசெய்துகொள்ளவேண்டும் என்பதே எங்களின் விருப்பம் மட்டுமல்ல -வேண்டுகோளும் கூட .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் நெல்லை 
----------------------------------------------------------------------------------------------------------------


Tuesday, August 29, 2017

                                       வணக்கம் சொல்லாதீர் !
வணக்கம் -என்ற 
வார்த்தை உன்னதமானது --
உயர்வானது 
சிலர் இதை கேட்டு பெறுகிறார்கள் --
சிலருக்கு கேட்டாலும் கிடைப்பதில்லை 
உதடுகளில் பிறப்பது வணக்கமல்ல -
உள்ளத்தில் இருந்து எழுவது தான்
உண்மையான வணக்கம் 
உங்கள்  வணக்கங்களை யாரும் 
அலட்சியம் செய்தால் அவர்களுக்கு 
வணக்கத்தை தவிர்ப்பீர் -
இணக்கத்தை குறைப்பீர் 
வணக்கம் தகுதியனாவர்களுக்கு மட்டுமே 
வழங்கப்படவேண்டியது ..
பைபிலில் ஒரு வசனம் உண்டு 
பரிசுத்தமானதை நாய்களுக்கு கொடாதீர்கள் -
பன்றிகள் முன் முத்துகளை சிதறவீடாதீர்கள் -
வணக்கத்தையும் வீணாக்காதீர்கள் 
                                     தோழமையுடன் SKJ 

Monday, August 28, 2017

                                                  முக்கிய செய்திகள்
மொபைல் மற்றும் நெட் வங்கி சேவைகளில் அடியெடுத்து வைக்கிறது நமது அஞ்சல் துறை
 CBS ,மற்றும் ATM வசதிகளை தொடர்ந்து அஞ்சல் துறையின் அடுத்த அவதாரமாக மொபைல் வங்கி சேவை விரைவில் தொடங்கவுள்ளது .இதற்காக முன்னோட்டமாக   30 USER ID உருவாக்கி சோதித்து பார்த்துள்ளது .
அதில் ஏற்பட்டுள்ள குறை /நிறைகளை ஆராய்ந்து மிக விரைவில் வாடிக்கையாளர் சேவைக்கு அர்பணிக்கவுள்ளது .இந்த ஆயத்த பணிகளில் ஈடுபட்டுவரும் CEPT குழுவினருக்கு நமது பாராட்டுக்கள் .
                     அஞ்சலகங்களில் ஜியோ போன் வாங்க முன்பதிவு
அஞ்சலங்களில் e-payment மூலமாக ஜியோ போன்கள் வாங்க முன்பதிவு செய்யும் ஒப்பந்தம் 2308.2017 அன்று டெல்லியில் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் கையெழுத்தானது .இந்த திட்டம் 24.08.2017 முதல் அமுலுக்கு வருகிறது .ஒவ்வொரு e payment கும் அதாவது ஒவ்வொரு முன்பதிவுக்கும் ரூபாய் 1000 வரை ஐந்து ரூபாயும் --1000 க்குமேல் ரூபாய்  10 ம் அஞ்சல் துறைக்கு கமிஷனாக கிடைக்கும்.
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Saturday, August 26, 2017

                                                        முக்கிய செய்திகள் 
 தென்மண்டல அஞ்சல் தலைவருடனான  இருமாதந்திர பேட்டி வருகிற 29.08.2017 அன்று நடைபெறுகிறது .பேட்டியில் நமது மாநிலசெயலர் தோழர் JR அவர்களும் -ராமநாதபுரம் கோட்ட செயலர் தோழர் அறிவழகன் அவர்களும் கலந்து கொள்கிறார்கள் .நமக்கு காலை 10 மணிக்கு நடைபெறுகிறது . 

-------------------------------------------------------------------------------------------------------------------------
                                          பேரவை முரசு - செப்டம்பர் 
இந்த மாத பேரவை முரசு இதழ் தயாராகிக்கொண்டிருக்கிறது .தங்கள் பகுதி செய்திகள் -குறிப்புகள் -நிகழ்வுகள் -இருந்தால் 26.07.2017 மாலைக்குள் அனுப்பிவைக்கவும் .இந்த இதழ் ஒவ்வொரு தோழர்களுக்கும் தனித்தனியாக அனுப்பிவைக்கப்படும் .இந்தமாத இதழுக்கான நன்கொடை வேலூர் கோட்டம் ஏற்றிருக்கிறது .அவர்களுக்கு பேரவையின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் .
 தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் நெல்லை 
-----------------------------------------------------------------------------------------------------------------------------

Thursday, August 24, 2017

 23.08.2017  ஒருநாள் வேலைநிறுத்தம் நெல்லையில் மாபெரும் வெற்றி !
பங்கேற்றவர்களுக்கு நன்றி !நன்றி !
அன்பார்ந்த தோழர்களே !
   10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நமது NFPE சம்மேளனம் நடத்திய ஒருநாள் வேலைநிறுத்தம் மாபெரும் வெற்றி .குறிப்பாக நமது நெல்லைக்கோட்டத்தில் பங்கேற்ற அனைத்து தோழர்களுக்கும் --தோழியர்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
கோட்ட அலுவலகம் முழுவதும் வேலைநிறுத்தம் 
நமது நெல்லை கோட்ட அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்று மீண்டும் ஒரு வரலாற்று சாதனையை செய்தனர் .
திருநெல்வேலி PSD மூடல் 
நீண்ட இடைவெளிக்கு பிறகு திருநெல்வேலி PSD 100 சத போராட்டத்தை தந்தது .
புதிய /இளைய தோழர்களின் பங்களிப்பு 
அஞ்சல் மூன்று -அஞ்சல் நான்கில் உள்ள அனைத்து புதிய தோழர்களும் --இளைய தோழர்களும் மிக ஆர்வமாக பங்கேற்று நமக்கு புதிய நம்பிக்கையை தந்தனர் .
தோழிர்கள் பங்கும் சிறப்பானதே !
இந்த வேலைநிறுத்தத்தில் தோழியர்களின் பங்கு மிகச்சிறப்பாக இருந்தது .குறிப்பாக இன்ச்சார்ஜ் இல் உள்ள அனைத்து தோழியார்களும் முதல்நாள் அன்றே வேலைநிறுத்தம் செய்யபோவதாக கோட்ட அலுவலகத்திற்கு தகவல் கொடுக்க கொடுக்க முதல் நாளே நமது போராட்டத்தின் வெற்றி தெரிய ஆரம்பித்தது .
மூத்ததோழர்களும் முக்கிய பங்காற்றினார் 
இவை எல்லாவற்றிற்கும் மேலாக பணிஓய்வுக்கு சில மாதங்களே உள்ளன என்ற சூழலிலும் மிக ஆர்வமாக பங்கேற்ற மூத்ததோழர்களுக்கும் நெல்லை NFPE நன்றியை தெரிவித்துக்கொள்கிறது 
                            மாநில செயலருக்கு நன்றி 
நேற்றைய பரபரப்பான சூழலிலும் நமது கோட்ட முன்னணி தோழர் ஒருவரின் பிரச்சினையை குறித்து நமது PMG அவர்களிடம் தொலைபேசியில் பேசி -மிக நம்பிக்கையான பதிலை பெற்று தந்த மாநிலசெயலர் தோழர் JR அவர்களுக்கு நெல்லை NFPE நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது .
 வேலைநிறுத்தம் குறித்து என்னுடைய 25 ஆண்டுகால அனுபவத்தில் இருந்து .......
அன்று முதல் இன்றுவரை வேலைநிறுத்தம் செய்பவர்கள் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள் ..சாக்கு -போக்கு சொல்கிறவர்கள் --வேலைநிறுத்தம் நடக்கும் போது முன்கூட்டியே அலுவலகம் வந்து தங்கள் விசுவாசத்தை காட்டுபவர்கள் இன்றும் அப்படித்தான் இருக்கிறார்கள் --அவர்கள் அப்படித்தான்  --
புலிவேசம் போட்டவரிடம் 
பரதத்தை  எதிர்பார்க்க கூடாது 
காகித  பூக்களிடம் நறுமணம் குறித்து 
பேச  கூடாது 
கானல் நீரிடம் --தாகம் தீர்க்க 
கையேந்த கூடாது 
அட்டையிடம் போய் -ரத்ததானம் குறித்து 
விளக்க கூடாது --
அவர்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள் 
தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ்             SK .பாட்சா நெல்லை 

Tuesday, August 22, 2017

ONE DAY STRIKE 23rd AUGUST-2017
A GRAND SUCCESS

          Congratulations and Revolutionary Greetings to all General Secretaries, NFPE Office Bearers, Circle/Divisional and Branch  Secretaries of All Unions of NFPE including GDS Union for making One Day Strike on dated 23.08.2017 a Grand Success.

          After a long gap NFPE has conducted strike alone and only for settlement of Postal Sectional demands and it is made grand success by our Comrades.

          Out of 10 demands, three demands have already been settled by the Department. One demand, Declaration of result of membership Verification has been submitted to Minister (C) by Secretary (P) for approval.

          GDS Committee Report: Some queries were raised by the Finance Ministry and reply has been sent by the department. It will be implemented very soon.

          On other demands Department has started action.

          The Position of strike, Circle wise is placed below:


VERY GOOD 
Kerala, West Bengal, Maharashtra, Assam, North East, Tamilnadu, Odisha, Jharkhand, Chhattisharg
GOOD   
Telangana , UP, M P ,AP, Punjab, Haryana, HP , Bihar
AVERAGE/PARTIAL 
Delhi, Rajasthan, Uttarakhand, J&K , Karnataka , Gujarat


      R.N. PARASHAR
SECRETARY GENERAL
             NFPE

Monday, August 21, 2017

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே ! 
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நமது NFPE சம்மேளனம் விடுத்துள்ள 23.08.2017 ஒரு நாள் வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம் .
அஞ்சல் அலுவலகங்களுக்கு வாரம் ஐந்து நாட்கள் வேலை -அதாவது எல்லா சனிக்கிழமைகளும் விடுமுறை --புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்தல் -தபால்காரர் ,MTS எழுத்தர் காலிப்பணியிடங்களை நிரப்புதல் GDS கமிட்டியை அமுல்படுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை மையப்படுத்தி இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது .SINGLEHAND SPMS மற்றும் INCHARGE இல் உள்ள போஸ்ட்மாஸ்டர் கள் நாளை கோட்ட அலுவலகத்திற்கு வேலைநிறுத்தம் செய்யப்போகிறோம் என்ற தகவல்களை ஈமெயில் அல்லது தொலைபேசிமூலம் தெரிவியுங்கள் .ஏனென்றல் நமது சங்கம் மட்டும் வேலைநிறுத்தம் செய்வதால் மற்றவர்கள் டெபுடேஷன் வர வாய்ப்புள்ளது .
போதிய காலஅவகாசம் இல்லாததால் அனைத்து பகுதிகளுக்கும் எங்களால் வரமுடியவில்லை .ஆகவே இதையே அழைப்பாக ஏற்று 23.08.2017 புதன் ஒருநாள் வேலைநிறுத்தத்தை வெற்றிபெறசெய்வீர் .
போராட்ட வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் --SK பாட்சா 

                                                           NFPE 
அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் 
மூன்றாம் பிரிவு -தபால்காரர் மற்றும் MTS
திருநெல்வேலி கோட்டம் --627001
-----------------------------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------------------------------
அன்பார்ந்த தோழர்களே !
                                    23.08.2017  ஒருநாள் வேலைநிறுத்தம் 
                                      பங்கேற்போம் ! பங்கேற்போம் !
நமது NFPE சம்மேளனத்தின் அறைகூவலுக்கு இனங்க வருகிற 23.08.2017 அன்று ஒருநாள் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது .நமது உறுப்பினர்கள் அனைவரும் முழுமையாகா இந்த அடையாள வேலைநிறுத்தத்தில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம் .
                                                 கோரிக்கைகள் 
அஞ்சல்பகுதியில் காலியாகவுள்ள PA -போஸ்ட்மேன் --MTS PASBCO --GDS உள்ளிட்ட காலியிடங்களை நிரப்பவேண்டும் 
கமேலேஷ் சந்திரா பரிந்துரையை அமுல்படுத்தவேண்டும் 
அஞ்சல் துறையில் 5நாள் நாள் கடைபிடிக்கப்பட்டு எல்லா சனிக்கிழமைகளும் விடுமுறை ஆக அறிவிக்கவேண்டும் 
தனியார் -காண்ட்ராக்ட் -மற்றும் வெளியாட்கள் முறையை நிறுத்தவேண்டும் 
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யவேண்டும் --குறைந்தபட்ச பென்ஷன்
கடைசி மாத ஊதியத்தில் 50 சதம் என்பதனை உறுதிப்படுத்த வேண்டும் .
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் வேலைநிறுத்தத்தை வெற்றி பெறச்செய்வோம் .
                       களம் காணும்வங்கி  ஊழியர்களுக்கு  வீர வாழ்த்துக்கள் 
வங்கிகளை தனியார்மயம் -வங்கிகள் இணைப்பு இவைகளை எதிர்த்து 22.08.2017 அன்று வேலைநிறுத்தம் செய்யும் 10 லட்ச வங்கி ஊழியர்களுக்கு நெல்லை NFPE இன் வீர வாழ்த்துக்கள் 
                   தமிழக அரசு ஊழியர்கள் -ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் 
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜாக்டோ -ஜியோ கூட்டமைப்பு சார்பில் 22.08.2017 அன்று ஆசிரியர்கள் -தமிழக அரசு ஊழியர்கள் நடத்தும் வேலைநிறுத்தம் வெற்றிபெற வாழ்த்துக்கள் .முன்னதாக இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி 05.08.2017 அன்று சென்னையில் சுமார் 1.5 லட்சம் ஊழியர்கள் கலந்துகொண்ட மாபெரும் பேரணி -ஆட்சியாளர்களை அதிர வைத்தது குறிப்பிடத்தக்கது .
அஞ்சல் புறநிலை ஊழியர்களின் தொடர்போராட்டம் வெல்லட்டும் 
கடந்த 16.08.2017 முதல் நமது அஞ்சல் பகுதியில் -கமலேஷ் சந்திரா அறிக்கையை அமுல்படுத்தக்கோரி 16.08.2017 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் பங்கேற்று வரும் GDS ஊழியர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள் .இதே கோரிக்கையை வலியுறுத்தி 2308.2017 அன்று நமது   சம்மேளனமும் ஒருநாள் வேலை நிறுத்தம் அறிவித்திருப்பது -போராடும் GDS ஊழியர்களின் கோரிக்கையை வலுப்படுத்தும் .
இப்படி அரசுக்கு எதிரான எல்லா தரப்பு உழைக்கும் வர்க்கத்தின் வேலைநிறுத்தங்கள் வெல்லட்டும் 
                                            வாழ்த்துக்களுடன் 
SK  .ஜேக்கப் ராஜ்                                                                                   SK .பாட்சா 
கோட்ட செயலர் P3                                                               கோட்ட செயலர் P4
------------------------------------------------------------------------------------------------------------------------------

Saturday, August 19, 2017

23.08.2017 ஒருநாள் வேலைநிறுத்த அறிவிப்பும் --அஞ்சல் துறையின் அமைதியும் 
பொதுவாக அஞ்சல் துறையில் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸ் கொடுக்கப்பட்ட நாளிலிருந்தே அஞ்சல் துறையின் அனைத்துமட்டங்களில் உள்ள அதிகாரிகள் ஒருவித பதட்டத்தோடு -பரப்பப்போடு இருந்த காலங்கள் உண்டு .குறிப்பாக 1984 -1988 -1989 அதன்பிறகு 1991 முதல் ஆண்டொன்றுக்கு சராசரியாக ஒரு வேலைநிறுத்தங்கள் என நாம் அறிவித்த நாட்களில் அதிகாரிகள் மத்தியில் எழுந்த ஒருவித பீதியை நாம் பார்த்திருக்கிறோம் .ஆனால் சமீபகாலமாக இதுபோன்ற ஒரு எந்த அதிர்வுகளையும் அதிகாரிகளிடம் பார்க்க முடியவில்லை .வேலைநிறுத்தத்தின் நோக்கமே ஊழியர்களின் கொதிப்புகள் -கொந்தளிப்புகள் -கோரிக்கைகளின் மீது தொழிலாளி கொண்டுள்ள பிடிப்புகள் --வேலைநிறுத்தம் வெற்றிபெற அவன் காட்டும் முனைப்புகள் என்ற பழைய அடையாளங்கள் கூட மெல்ல மெல்ல மறைய தொடங்கியுள்ளன .எத்தனைநாள் போராடினால் நமக்கென்ன என்ற எண்ணங்கள் வரத்தொடங்கிவிட்டதோ தெரியவில்லை .ஒப்புக்கு போராடுவோம் என்ற நிலையம் நமக்கு வந்துவிடக்கூடாது .
ஆகவே வேலைநிறுத்தம் என்பது பொழுதுபோக்கு நிகழ்ச்சியல்ல --இது நமது உரிமை -நமது கடமை -அறிவிக்கப்பட்ட வேலைநிறுத்தம் வாபஸ் ஆகுமா என ஆருடம் பார்க்காமல் களப்பணியாற்றிடுவோம் -வெற்றிக்கனி பறித்திடுவோம் 
வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் .கோட்டசெயலர் நெல்லை 

                   நெல்லை NFPE க்குதொடர்ந்து  கிடைக்கும் அங்கீகாரங்கள் 
நெல்லை மாவட்டம் மருதகுளத்தில் நடைபெற்ற மாநிலஅளவிலான மின்னொளி கபாடி போட்டியில் 18.08.2017 அன்றைய நான்காவது போட்டியை துவக்கி வைக்க தொழிற்சங்க தலைவர் என்ற அந்தஸ்தோடு  நமது கோட்டசெயலர் தோழர் SK .ஜேக்கப் ராஜ் அவர்களை விழாக்குழுவினர் அழைத்து பெருமைப்படுத்தினர் .எனது சொந்தக்கிராமத்தில் நமது இயக்கத்தின் பெருமை நிலைநாட்டப்பட்டது மற்றுமல்ல -பல முதலாளிகள் முன்னணியில் தொழிலாளர் பெருமை பேசப்பட்டது உண்மையிலேயே மிக்க மகிழ்ச்சியாக இருந்தது .
Friday, August 18, 2017

        அடுத்து வருகிறது 23.08.2017 ஒரு நாள் வேலைநிறுத்தம் 
அஞ்சல் துறையில் NFPE சம்மேளனம் கடந்த ஜூன் 20 முதல் மூன்று கட்ட இயக்கங்களை நடத்திவிட்டு இன்று நான்காம் கட்டமாக 23.08.2017 அன்று ஒருநாள் வேலைநிறுத்த தயாரிப்பில் இறங்கியிருக்கிறோம் .மேலோட்டமாக பார்த்தால் வழக்கமான தலைவர்களின் வேலைநிறுத்த பிரச்சார பயணங்களோ --கோட்டங்கள் தோறும் வெளியிடப்படும் சுற்றறிக்கைகளோ இந்த வேலைநிறுத்தம் குறித்து இன்னும் அதிகமாக வந்திடவில்லை .இன்றைய WHATSAPP காலங்களில் ஊழியர்களிடையே தகவல்களை பரிமாறிக்கொள்வதில் அதிக சிரமங்கள் இல்லையென்றாலும் --இது முழுக்க முழுக்க அஞ்சல் பகுதி பிரச்சினை என்பதற்காவது இன்னும் அதிகமான தயாரிப்பிகளில் நாம் ஈடுபட வேண்டும் .
வேலைநிறுத்தம் என்றால் ஊழியர்கள் துள்ளி குதிக்க வேண்டும் -வேலைநிறுத்த கோரிக்கைகள் தொழிலாளியின் உள்ளத்தை கவ்வி பிடிக்க வேண்டும் -அத்தகைய போராட்டங்கள் தான் மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறது .இந்த வேலைநிறுத்தங்களில் நாம் பிரதானப்படுத்தவேண்டிய முக்கிய கோரிக்கை அஞ்சல் துறைக்கும் வாரம் ஐந்து நாட்கள் வேலைநாட்கள் வேண்டும் .அதாவது சனிக்கிழமை விடுமுறைவேண்டும் என்பதே .
அகிலஇந்திய மாநாட்டில் கூட இந்த வேலைநிறுத்தம் குறித்து எத்தனை சார்பாளர்கள் பேசியிருப்பார்கள் --எத்தனை தலைவர்கள் வேலைநிறுத்த தயாரிப்புகளை குறித்து விளக்கமளித்தார்கள் என்பதை மாநாட்டில் கலந்துகொண்ட தோழர்களுக்கு தெ(பு )ரியும் .இதர கோரிக்கைகளில் ஒன்றான 2015 இல் நடந்த உறுப்பினர்  சரிபார்ப்பின் முடிவுகளை வெளியிடவேண்டும் என்பது -உறுப்பினர் சரிபார்ப்பு முடிவுகளுக்கு முன்பே பாரதிய சங்கம் --போஸ்ட்மாஸ்டர் கேடர் சங்கம் அங்கீகாரம் பெற்றுவிட்டது .2015 இல் இருந்து இன்றுவரை ஏன் இதை அனுமதித்தோம் என்று தெரியவில்லை .மற்றுமொரு கோரிக்கையான அஞ்சல் துறையில் புகுத்தப்படும் புதிய திட்டங்கள் என்ற பெயரில் ஊழியர்கள் துன்புறுத்தப்படுவதை நிறுத்த வேண்டும் .GDS பரிந்துரையை அமுல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் இருக்கிறது .நிச்சயம் இந்த வேலைநிறுத்தத்தில் நாம் முழுமையாக பங்கேற்போம் .
இதுகுறித்து நாம் கலந்து பேசிட நெல்லை கூட்டு பொதுக்குழுவிற்கு வாரீர் !
                                       நெல்லை கூட்டு பொதுக்குழு
நாள் -22.08.2017  செவ்வாய்  மாலை 6 மணி
இடம் திருநெல்வேலி தலைமைஅஞ்சலகம்
தலைமை     தோழர் KG குருசாமி
                          தோழர் .A.சீனிவாச சொக்கலிங்கம்
பொருள்   1. 23.08.2017 ஒருநாள் வேலைநிறுத்தம் குறித்து
                     2. HSG II மற்றும் HSG I  Officiating குறித்து ..
                      3.தலமட்ட பிரச்சினைகள் 
                  அனைவரும் வருக !உங்கள் உயிரோட்டமான கருத்துக்களை தருக !
                                                     போராட்ட வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ்                                                                                               SK .பாட்சா 

Thursday, August 17, 2017

அன்பார்ந்த தோழர்களே !
 கேடேர் சீரமைப்பில் இடமாறுதலில் மேல் முறையிடு செய்த ஊழியர்களுக்கு ,மீண்டும் ஒரு விருப்ப இடங்களை தெரிவு செய்ய சொல்லி நேற்று மதுரை மண்டல அலுவலகம் மூலம் நெல்லையில் விருப்பமனுக்கள் கேட்டு பெறப்பட்டுள்ளது .நமது PMG அவர்களின் இந்த உயரிய உள்ளம் உள்ளபடியே பாராட்டுதற்குரியது .போட்டது போட்டதுதான் --முடிந்தால் இரு -இல்லையென்றால் VR இல் போ என்று கொக்கரித்த மதுரை கோட்டத்தில் இன்று மனிதாபிமானம் பூத்து குலுங்குகிறது --ஊழியர்கள் மனமெல்லாம் குளிர்கிறது .நன்றி PMG அம்மா அவர்களுக்கு .
            HSG II --HSG I OFFCIATING போடுவதில் கோளாறு ஏன் ?
LSG பதவி உயர்வுக்கு பிறகு காலியாக உள்ள HSG I மற்றும் HSG II பதவிகளுக்கு தற்காலிகமாக நிரப்புவதற்கு தென்மண்டலத்தில் கோரப்பட்ட விருப்பமனுக்கள் அப்படியே இருக்கிறது .இதில் சிலகோட்டங்களில் இதுகுறித்து விளக்கங்கள் கேட்டு மண்டல அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது .நெல்லையிலும் இதுகுறித்து மண்டல அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது .ஆனால் கன்னியாகுமரி கோட்டத்தில் மட்டும் OFFICIATING உத்தரவு ஒருவருக்கு மட்டும் போடப்பட்டுள்ளது .இதில் விசேஷம் என்ன வென்றால் நெல்லைக்கு -கன்னியாகுமரி இரண்டுக்கும் தற்சமயம்  ஒருவர்தான் SSP .நெல்லைக்கு சுண்ணாம்பு --குமரிக்கு வெண்ணையை தடவச்சொன்னது யார் ?யார் ? இது குறித்து மாநில செயலரிடம் ஏற்கனேவே குமரி கோட்ட தோழர்கள் புகார் தெரிவித்துள்ளனர் .மாநில சங்கம் இதுபோன்ற முறைகேடுகளை உடனே களைய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம் .
நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Wednesday, August 16, 2017

                      அர்த்தமுள்ள சுதந்திர தினவிழா  கொண்டாட்டங்கள் 
முற்போக்கு கொள்கை கொண்ட தொழிற்சங்க காந்தி -கோவை கோட்ட அஞ்சல் மூன்றின் செயலாளர்எபெனேசர் காந்தி  அவர்களின் வழிகாட்டுதலில் கோவை பகுதி அணைக்கட்டு கிராம மக்களுக்கு கோவை அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பாக 75 SSA கணக்குகளை தொடங்கிக்கொடுத்துள்ளனர் .இவ்விழாவில் நமது PMG அம்மையார் திருமதி .சாராதா  சம்பத் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர் .மேலும் மகிளா கமிட்டி உறுப்பினர் தோழியர் வளர்மதி அவர்களுக்கும் PMG அவர்கள் பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார்கள் .இதுதான் தொழிற்சங்க அங்கீகாரம் .வாழ்த்துக்கள் 
---------------------------------------------------------------------------------------------------------------------
நெல்லையில் அஞ்சல் நான்கின் கோட்ட செயலர் தோழர் SK பாட்சா அவர்களின் ஏற்பாட்டில் காண்மியா பள்ளிவாசல்பகுதியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில்   கொடைவள்ளல்  ரொட்டேரியன் மயில் .பாலசுப்ரமணியன் .திருநெல்வேலி ASP திரு .G.செந்தில்குமார் மற்றும் நமது அமைப்பு செயலர் தோழர் S.முத்துமாலை ஆகியோர் கலந்துகொண்டு அப்பகுதிமக்களிடம் அஞ்சல் சேமிப்பு திட்டங்கள் குறித்து பிரச்சாரங்கள் செய்தனர் .முன்னதாக பாலமடை பகுதியில் 300 சேமிப்புக்கணக்குகளை தொடங்கிய தோழர் S.முத்துமாலை அவர்களுக்கும் பாராட்டுதல்கள தெரிவிக்கப்பட்டது .
இது கட்டாயத்தால் நடந்ததல்ல --தன்னார்வத்தால் நடந்தது --இச்சேவை தொடர வாழ்த்துக்கள் 
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 
--------------------------------------------------------------------------------------------------------------

Saturday, August 12, 2017

71 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 1942 விடுதலை இயக்கங்களை நினைவு கூறும் வகையில் வெளியிடப்பட்ட தபால் தலைகள் 

Friday, August 11, 2017

                                                   முக்கிய செய்திகள்
நேற்று 10.08.2017 அன்று தபால்காரர்களுக்கு வழங்கப்பட்டுவரும் காக்கி கலர் சீருடை குறித்து மறுஆய்வு செய்யும் கூட்டம் புதுடெல்லியில் நமது சங்கங்களுடன் நடைபெற்றது .இதில் NIFT என்று அழைக்கப்படும் (National Institute Of Fashion Technology ) உதவி இயக்குனரும் கலந்து கொண்டார்கள் .
                                                  வாழ்த்துகிறோம் 
Accounts பிரிவுக்கான LSG பதவி உயர்வு பட்டியல் வெளிவந்துள்ளது .நமது கோட்டத்தில் தோழியர் K .அனுராதா மற்றும் தோழியர் முத்துலதா சுப்பிரமணியன் ஆகியோர் இந்த பதவி உயர்வினை பெறுகிறார்கள் .தோழியர் இருவருக்கும் நெல்லை NFPE இன் நல் வாழ்த்துக்கள் .
                             தொழிற்சங்க மாநாடுகளில் அதிகரிக்கும் தோழியர் மற்றும் இளைய தோழர்களின் பங்களிப்பு உள்ளபடியே பாராட்டுதலுக்குஉரியது .இது கோட்ட கிளை மட்டங்களிலும் அதிகரிக்க வேண்டும் .அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள் .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் 

Women strength to surge ahead in Postal Movement! 

The 31 AIC of P3 at Bengaluru had a brief session of Mahila Convention also headed by the Chairperson comrade Nanda Sen. The members of the Mahila committee analyzed the growth of women participation in trade unions and other problems faced by working women. The convention resolved an increased participation of women comrades and called upon all levels of organization to work for such a growth:

THURSDAY, AUGUST 10, 2017

List of Newly Elected Office Bearers of AIPEU Group ‘C’ elected in the 31st AIC held at Bangalore (Karnataka) from 06.08.2017 to 09.08.2017


President
Com. J. Ramamurthy, PA, Thiruvallikeni, Chennai – 600005 (Tamilnadu)
Working Presidents
Com. S. A. R. MazgaonkarSPM, Taj Mahal PO, Mumbai - 400001 (Maharastra)

Com. G. Janakiram, Agaram PO- 560007, Bangalore (Karnataka)

Vice Presidents
Com. Nanda Sen, PA, Siliguri HO – 734001 (West Bengal)

Com. Jagdish Dhiman, Postmaster Grade – I, Sector – 20 PO, Chandigarh - 160020 (Punjab)
General Secretary
Com. R. N. Parashar, APM (A/Cs), Mathura HO - 281001 (Uttar Pradesh)
Deputy General Secretary
Com. Janardan Majumdar, PA, Princep Street PO, Kolkata – 700072 (West Bengal)
Assistant General Secretaries
Com. T. P. Abdul Rahiman, APM, Ottapalam HO - 679101 (Kerala)

Com. A. Veeramani, PA, Anna Road HPO, Chennai - 600002, (Tamilnadu)

Com. S. Raghupathy, PA, Park Town HPO, Chennai – 600003 (Tamilnadu)
Financial Secretary
Com. Balwinder Singh, PRI (P), Patel Nagar P.O. New Delhi – 110008
Assistant Financial Secretary
Com. Naresh Gupta, Asst. Manager, Postal Store Depot (PSD) Ambala - 133001 (Haryana)
Organizing General Secretaries
Com. U. K. Tiwari, P.A, Patna GPO - 800001 (Bihar)

Com. Prabhat Ranjan, SPM, BCCL Koyla Nagar, Dhanbad (Jharkhand)

Com. Mausumi Mazumdar, OA, Divisional Office, Dibrugarh - 786001 (Assam)

Thursday, August 10, 2017

                                               அகிலஇந்திய மாநாடு --
கடந்த 06.08.2017 முதல் 09.082017 வரை பெங்களுருவில் நடைபெற்ற நமது சங்கத்தின் அகிலஇந்திய மாநாடு பல சிறப்புகளை தந்தது .வரவேற்பு கமிட்டியின் அன்பான உபசரிப்புகள் --அகிலஇந்திய தலைவர்களின் உரை என இவைகளை தாண்டி தமிழகம் மீண்டும் எல்லாவகையிலும் முதலிடம் என்ற சிறப்பை பெற்றது .அதிகமான சார்பாளர்கள் /பார்வையாளர்கள்   தமிழகத்தில் இருந்து கலந்து கொண்டனர் .அகிலஇந்திய அளவில் நிர்வாகிகளை பெற்று தருவத்தில்கூட நமது தலைவர் KVS அவர்களின் பங்கு சிறப்பானது .தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும் என்பதைப்போல் தோழர் JR அவர்கள் அவையை நடத்திய விதம் இன்னும் அருமை .அதையெல்லாம் தாண்டி நிர்வாகிகள் தேர்தலில் அகிலஇந்திய தலைவர்பதவிக்கு தோழர் JR அவர்களை நெல்லை கோட்ட செயலர் தோழர் ஜேக்கப் ராஜ் முன்மொழிந்து மகிழ்ந்த விதமும் பாராட்டுதலுக்கு உரியது .Saturday, August 5, 2017

அன்பார்ந்த NFPE நண்பர்களே !
 நான் பலமுறை சொல்லியிருக்கிறேன் .அரசியல் நையாண்டிகள் -கேலி சித்திரங்கள்-- தனிமனித விமர்சனங்கள் --ஜாதி -மத ரீதியான பதிவுகளும் வேண்டாம் -பதிவுகளுக்கு பதில்களும் வேண்டாம் .NFPE என்பது ஒரு அரசியல் சார்பற்ற இயக்கம் .தனிப்பட்ட எந்த கட்சியின் அரசியல் வாடை இல்லாமல் நெல்லையில் நாங்கள் 25 வருடங்களுக்கு மேலாக ஊழியர்களின் நலன்களை மட்டுமே முன்னிறுத்தி நடத்திவருகிறோம் .-எனக்கு அரசியல் பிடிக்கும் -ஒரு கட்சியின் கொள்கை பிடிக்கும் .ஆனால் ஒருநாளும் என் அரசியல் பிரியத்தை நெல்லை NFPE யில் திணித்ததில்லை --திணிக்க போவதில்லை --என்னை ஒரு ஒரு இக்கட்டான நிலைக்கு தள்ளிவிடாதீர்கள் -அரசியல் வேண்டாம் என்று சொல்லவில்லை -நம் அரங்கத்திற்குள் வேண்டாம் .தோழர்களே !தயவு செய்து இனி அரசியல் நையாண்டிகள் -விமர்சனங்கள் --வாழ்க !-ஒழிக !கோசம் இங்கு வேண்டாம்
உங்கள் ஜேக்கப் ராஜ் 

Friday, August 4, 2017

தோழியர் ஹேனா SPM நான்குனேரி அவர்களை பாராட்டுகிறோம் -வாழ்த்துகிறோம் 
வழக்கமாக நமது இலாகா நடத்தும் விழாக்களில் அதிகமாகா Target achieve செய்த ஊழியர்களுக்கு ஒரு பாராட்டு பத்திரம் வழங்குவது வழக்கம் . அதிகம் போனால் இலாகா சார்பாக Cash award கொடுப்பது பழக்கம் .
ஆனால் சமீபத்தில் 01.08.2017 அன்று நான்குனேரியில் நடந்த மேளாவில் சென்ற காலத்திற்க்கான  13 கிராம் தங்க பத்திரத்தை விற்பனை செய்து தந்த சூரங்குடி கிளை அஞ்சலக அதிகாரி தோழர் C .ஆறுமுகம் அவர்களுக்கு  அவரது முயற்சியை பாராட்டி தனது சொந்த செலவில் ஒருகிராம் தங்க பத்திரம் வாங்கிக்கொடுத்த நம் அன்பிற்கினிய தோழியர் திருமதி ஹேனா அவர்களை நெல்லை NFPE வாழ்த்துகிறது 
                                                  முக்கிய செய்திகள் 
1.தபால்காரர் /MTS  ஊழியர்களுக்கு DRESS அலவன்ஸ் அறிமுகம் --ஆண்டொன்றுக்கு ரூபாய் 5000 வழங்கப்படும் .ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாத சம்பளத்தில் சேர்த்து வழங்கப்படும் .இந்த சலுகை 01.07.2017 முதல் அமுலுக்கு வருகிறது .இதுவரை UNIFORM சார்ந்த Washing allowance உள்ளிட்ட   அனைத்து  அலவன்ஸ் களும் ரத்து செய்யப்பட்டுள்ளது .
2.Bunching   OF Pay சம்பந்தமாக 07.09.2016 மற்றும் 13.06.2017 உத்தரவுகளை தொடர்ந்து  நிதியமைச்சகம் 03.08.2017 அன்று வெளியிட்ட விளக்க அணையின் சுருக்கம் 
Based on the above, it is clarified that the following shall be kept in view while determining the extent of bunching as also the benefits to be extended on account of bunching at the time of initial fixation of pay in the 7th CpC pay structure:
 (i) Benefit on account of bunching is to be extended when two or more stages get bunched.
 (ii) Benefit of one increment is to be extended on account of bunching of every two consecutive stages. 
(iii) As stipulated in MoF oM dated 07 09.2016, a difference of 3% to be reckoned for determination of consecutive pay stages, specific to each em ployee.
 (iv) All pay stages lower than the Entry pay in the 6th CpC pay structure as indicated in the pay Matrix contained in the 7th cpc Report are not to be taken into account for determining the extent of bunching.
3.விவாகரத்து பெற்ற மகளுக்கு குடும்ப ஓய்வூதியம் எந்தெந்த சூழ்நிலையில்  வழங்கப்படும் என்பதற்கான விளக்க ஆணை 
ஊழியர் உயிரோடு இருக்கும் போது அவரது மகள் விவாகரத்து கோரி ஏற்கனேவே வழக்கு தொடுக்கப்பட்டு இருந்து அவர் இறந்தபின் விவாகரத்து சம்பந்தப்பட்ட நிதிமன்றத்தால் கிடைக்கும் பட்சத்தில் அவரது மகளுக்கு குடும்ப ஓய்வூதியம் விரிவு படுத்தப்படும் 
4.போஸ்டல் WELFARE FUND மூலம் நிரந்தர /GDS ஊழியர்களுக்கு கிடைக்கும் பணபயன்களி
ன் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது .
Directorate memo No.Date
1Financial Assistance in case of death of departmental employeesRs. 7000.002-1/2001-WL/Sports26-04-2002
2Financial Assistance in case of prolonged illness/major surgical operations of departmental/GDS and full/part time Casual LaboursRs. 10000.001-01/2009-WL/Sports (Vol.II)19-03-2013
3Distance limit for Excursion Trip700 KM-do--do-
4Immediate death relief to the family /dependents on the death of departmental / GDS and full/part time Casual laboursRs. 10000.00-do--do-
5Financial Assistance in cases of death due to riots, attack by robbers and terrorists  while not on dutyRs. 12000.001-3/2008-Wel&Sports27/10/2008
6Financial Assistance to the victims of fire / floods and natural calamitiesRs. 1500/- of departmental  and Rs. 750/- to GDS10-34/2001-WL/Sports18-10-2001
நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர்  நெல்லை 

Thursday, August 3, 2017

              புது டெல்லியில் 02.08.2017 அன்று நடைபெற்ற கேடர் சீரமைப்பு கமிட்டியுடன் நடைபெற்ற பேச்சுவார்தைகளில் சில.....
LSG கோட்ட மட்ட பதவிகளாக மாற்ற முடியாது -இருந்தாலும் கோட்டத்திற்குள்ளாகவே இடமாற்றம் செய்ய படுவார்கள் 
காசாளர் பதவி இனி LSG ஆகாது .இருக்கிறவர்களை அனுமதிக்க ஏற்றுக்கொள்ளப்பட்டது
ME ,SM போன்ற   பதவிகள் LSG ஆக மாற்ற முடியாது .அந்த பதவிகளில் LSG ஊழியர்கள் பணியாற்றினால் அவர்கள் அதில் தொடர அனுமதிக்கப்படுவார்கள் 
தமிழகத்தில் இரண்டாம் கட்ட அமுலாக்கம் இந்த கமிட்டியின் முடிவுகள் வரும் வரை நிறுத்திவைக்கப்படும் 
.LSG TO HSG II மற்றும் HSG II  to HSG I பதவிகளுக்கு இடையே உள்ள தற்போதுள்ள குறைந்தபட்சசேவை காலம் குறித்து பரீசீலிக்கப்பட்டு ONE TIME MEASURE அடிப்படையில் உயர் பதவிகளை நிரப்ப பரிந்துரைக்கப்படும் .
தலைமை அஞ்சலக --கோட்ட அலுவலக கணக்காளர் பதவிகள் LSG பதவிகளாக அடையாளம் காட்டப்படும்  .இவைகள் அனைத்தும் postal JCA சார்பாக கொடுக்கப்பட்ட மனுவின் அடிப்படையில் விவாதிக்கப்பட்டது 

The gist of the meeting is as follows.

1.    After arguments and counter arguments, the Committee agreed to issue necessary orders and uniform guidelines  for maintaining uniformity amongst Circles in allotment  in distribution of Posts as follows in addition to Single and Double-handed post Offices. There may be alteration in allotment of LSG posts already allotted to the Circles

a.        Each Gazetted Head Post Offices needs to create 3 LSG posts.
b.        All pre-restructured HSG-I HOs and Grade – III HOs will have 2 LSG posts each.
c.        All pre-restructured HSG-II HOs and Grade – II HOs will have one LSG post each.
d.        All pre-restructured HSG-I MDGs and Grade – III Post Offices will have one LSG post each.
e.        All pre-restructured HSG-II MDGs/ SOs and Grade – II Post Offices will have 1 LSG post each.
f.         In-Charge of the PLI CPCs needs to upgraded to LSG.
g.        Accountants in Divisional Offices and Head Post Offices will be identified as LSG.’

2.    It was agreed that the Post of Treasurer will not be upgraded to LSG. In respect of the Circles where the proposal has already been implemented, the case will be reviewed.

3.    Since the numbers of non-functional HSG-I Posts have already been restricted to 235 only, it is not possible to grant all HSG-I officials completing 2 years of service to NFG. There will be no identification of Posts as NFG since its is person-based. Only those senior most HSG-I officials completing two years of service will be promoted to NFG.

4.    Directorate has not yet issued any general order for merger of IP Line HSG-I posts to General Line Posts. As such, the Committee cannot comment on such an aspect since beyond its terms of references. However, Staff Section will review and issue suitable orders.

5.    Regarding one time relaxation of existing Recruitment Rules for promotion of all existing LSG to HSG-II and HSG-II to HSG-I posts, it was agreed by the Committee to make necessary recommendations for onward transmission to the nodal ministry.

6.    No consensus was arrived for divisionalization of LSG cadre. However, it was agreed that all the LSG promoted officials will be allotted to Divisions instead of Regions for issuing posting orders within the Divisions by the respective Divisional heads.

7.    There will be no identification of Posts in LSG Cadre for SAs, PLI Group Leader, BEs, MEs etc. But the persons already working in such posts if promoted to LSG may be allowed to work there as LSG without any disturbance.

8.    Regarding amendment of norms for promotion to HSG-II (6 years in LSG) and to HSG-I (5 Years in HSG-II), the Committee opined that Recruitment Rules have to be changed which is not under the their purview. This may be examined by Staff Section.

9.    No officiating arrangement or adhoc posting on HSG-II & HSG-I can be made now since there is dearth of eligible LSG and HSG-II officials.

10.   Only Good bench mark will be applied for these promotions.

11.   Debarring promotion after declination is the policy of the Govt. which is applicable to all the cadres including the P As. The committee can not act on the issue.

12.   The issues of Postmaster Cadre will be dealt in separately.

13.   In respect of P As working in Foreign Post Offices, they have to treated at par with others based on concerned Recruitment Rules. There will be no separate treatment of such posts.

14.   The total present LSG posts and PA posts will be taken into account as a whole for deciding the strength of LR PAs.

15.   The second phase of implementation in Tamilnadu circle is now put on hold, till the matter is decided by directorate after getting the recommendation of the committee’s report.

16.   Sort fall in allotment of posts under cadre restructuring to Odisha circle will be made good.
நன்றி SK ஜேக்கப் ராஜ் கோட்டசெயலர் நெல்லை