...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, May 31, 2018

தோழியர் K .எழிலரசி PA  திருநெல்வேலி HO பணிநிறைவு நாட்கள் சிறக்க வாழ்த்துக்கள்


எழிலரசி அவர்களை வாழ்த்துகிறோம்
குமரி கோட்டம் தந்திட்ட
உறுதி மிக்க தோழியர் எழிலரசி
தோழமை சொந்தங்களோடு
சகஜமாக பழக கூடியவர்
தவறென்று தெரிந்தால்
யாரென்றும் பார்க்காமல்
வெடுக்கென்று கேட்பவர்
தோழியரை வாழ்த்தும் போது
அவரது கணவர்
அண்ணன் கோபால கிருஷ்ணனை
மறக்கமுடியாது
குடும்ப சகிதமாக -நம் இயக்க பணிகளில்
 இவர்களை போல் கலந்து கொள்வதில் 
இனி யாரையும் பார்க்க போவதில்லை
அன்றுமுதல் இன்றுவரை -நமது
ஆதரவு நிலையில் இருந்து விலகியதில்லை
பதவி உயர்வை ஏற்க முடியாத
வருத்தம் கடைசி நேரத்தில் இருந்தாலும்
அதையெல்லாம் போக்கும் வகையில்
மருத்துவரின் தாயார் என்ற
மகா பெருமையோடு வாழ்வெல்லாம்
மகிழவும் வாழ்வாங்கு வாழவும் வாழ்த்துகிறோம்
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் 

தோழர் KG .குருசாமி முன்னாள் கோட்டத்தலைவர் &PRI (P ) பாளையம்கோட்டை பணி நிறைவு விழா 




நீயல்லவா தலைவன் ! 
ஓய்வு பெறும் கடைசி நாட்களிலும் 
ஓடி ஒழிய மணமில்லாமல் -வேலைநிறுத்தத்தை 
தேடி வந்து சந்தித்த 
நீயல்லவா NFPE யின் தலைவன் 

முன்னாள் கோட்ட தலைவர் அல்ல -இனி 
என்னாளும் எங்கள் கூட்டத்தின் தலைவர் 
சொன்னாலும் சொல்லாவிட்டாலும் -இயக்கத்தில் 
உன் பங்கு சிறப்பானது -பழகுவதில் 
உன் பாங்கு மகத்துவமானது 

முத்துக்கள் வரிசையில் நீ விலை மதிப்பில்லாதவன் 
 மாற்றாருக்கு ஒரு நாளும் விலை போகாதவன் 
கொள்கையிலே நீ கோபுரம் தான் 
கொடுப்பதிலே குமணனும் நீ தான் 

நீ வந்த பிறகு தான் PRI பதவியும் 
மக்கள் தொடர்பானது 
தபால்காரர்களுக்கு 
பக்க பலமானது 

அடக்கம் உனது அடையாளம் 
அமைதி நீ தரித்திருந்த ஆபரணம் 
பொறுமை நீ கடைபிடித்த பக்குவம் 
புகழ் தானாக உனக்கு சேர்ந்த பொக்கிஷம் 

உதவி கேட்டு வந்தவர்களை 
வெறுமெனே அனுப்பியதில்லை 
பதவி ஆசை காட்டியபோதும் 
அணிமாறிட இசைந்ததில்லை 
ஆண்டுக்கு ஒரு சங்கமென -சமீபகால  
ஆசைக்கு நீ அசைந்ததில்லை 
ஆயுட்கால விசுவாசத்தை விட்டு விலக 
அணுஅளவும் நீ யோசித்ததில்லை 

உன் பணி நிறைவு காலம் சிறக்கவும் 
இனி வரும் நாட்களிலும் இன்பம் தொடரவும் 
வாழ்த்தி மகிழ்கின்றோம் 
                                                                                  SK .ஜேக்கப் ராஜ் 



Wednesday, May 30, 2018

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
 சுழல் மாறுதல் குறித்து புதிய Notification வரவிருக்கிறது .பழைய அலுவலகங்கள் மற்றும் பதவிகள் தவிர சென்சிடிவ் பதவிகளையும் சேர்த்து இடமாறுதலுக்கான அறிவிப்பு இடம்பெறும் .ஜூன் மாதம் தொடங்கவுள்ள நிலையில் குழந்தைகள் புதிய பள்ளிகளில் சேர்ப்பதில் ஊழியர்களுக்கு உள்ள சிரமங்களை நிர்வாகம் கருத்தில் கொண்டு விரைந்து அறிவிப்புகளை வெளியிடவும் மாறுதல் உத்தரவுகளை பிறப்பிக்கவும் நேற்று வலியுறுத்த பட்டுள்ளது .
---------------------------------------------------------------------------------------------------------------------
தேக்கமடைந்துள்ள தபால்களை பட்டுவாடா செய்ய மாவட்ட ஆட்சி தலைவர் நிர்ணயித்த குறைந்தபட்ச கூலி ரூபாய் 320 வழங்கவும் பெரிய அலுவலகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது ..மேலும் தேவைப்படும் அலுவலகங்கள் கோட்ட நிர்வாகத்திற்கு தகவல்கள் தெரிவிக்கவும்
-------------------------------------------------------------------------------------------------------------------------
Strike காலத்திற்கு முன் மற்றும் அதனை தொடர்ந்து விடுப்பில் உள்ளவர்களை Absent என கருத கூடாது என்றும் கோட்ட அலுவலகத்தால் Leave Sanction கிடைத்தவர்கள் இதுகுறித்து கவலை கொள்ள வேண்டியதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .(மருத்துவ விடுப்பு மற்றும் LTC யில் சென்றவர்களுக்கு  விலக்கு ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளது ) அஞ்சல் மூன்று அஞ்சல் நான்கு சங்கம் போராட்டத்தை விலக்கிக்கொண்டதற்கான அதிகாரப்பூர்வமான கடிதம் இன்று மண்டல அலுவலகத்திற்கு சேர்ந்துவிட்டால் விடுப்பு எடுப்பதில் உள்ளகட்டுப்பாடு தளர்த்தப்படும் .
--------------------------------------------------------------------------------------------------------------------
GDS தோழர்களின் வேலைநிறுத்தம் வீர வரலாற்றை படைத்துக்கொண்டிருக்கிறது .GDS சங்கத்தின் மூன்று பொதுச்செயலர்களும் தலைநகரிலே முகாமிட்டு ஒற்றுமையாக வழிநடத்தி கொண்டிருக்கிறார்கள் .மத்திய அரசு ஊழியர்கள் மகாசம்மேளனம் மற்றும் NFPE சம்மேளனமும் இன்று ஆதரவு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது மேலும் நமக்கு வலு சேர்க்கும் 
நன்றி .வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Tuesday, May 29, 2018

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
நமது கோட்ட மட்டத்தில் நிலவும் பிரச்சினைகள் குறித்து இன்று நமது SSP அவர்களை சந்திக்கவிருக்கிறோம் .குறிப்பாக RT மறு அறிவிப்பு -GDS வேலைநிறுத்தத்தை காரணம் காட்டி விடுப்பு மறுப்பு தேங்கிக்கிடக்கும் தபால்களை பட்டுவாடா செய்ய தபால்காரர்களுக்கு வழங்கவேண்டிய நிவாரணம் மற்றும் CSI அமுலாக்கத்திற்குமுன்பாக நிவிர்த்தி செய்யவேண்டிய உட்கட்டமைப்புகள் -இவைகள் குறித்து  விவாதிக்கப்படுகிறது .மேலும் CSI  குறித்த கிழ்கண்ட கடிதத்தில் குறிப்பிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் உடனடி தீர்வு ஏற்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கைகளில் செல்ல வேண்டிய நிர்பந்தம் நமக்கு ஏற்பட்டுள்ளது .ஆகவே கோட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் என கேட்டு கொள்கிறோம் .
NFPE
                  ALL INDIA POSTAL EMPLOYEES UNION GR-C                              TIRUNELVELI DIVISIONAL BRANCH
TIRUNELVELI—627002
No.P3-CSI/dlgs dated at Palayankottai- 627002 the29.05.2018

To

The Sr. Supdt. of Post Offices,
Tirunelveli Division
Tirunelveli-627002

Sir,

            Sub:    Roll out of CSI in Tirunelveli Division on 12.06.2018 - reg

            Kindly recall the discussions with this union on several occasions regarding non-working/improper working of hardware in the SOs.  Now, we bring the chronic issues to the personal notice of the SSPOs., for immediate remedial action.

Sl. No.
Name of the Office
Problems reported
1
Ittamozhi SO
UPS not working, Batteries to be replaced
2
Tirunelveli Town SO
UPS Batteries to be replaced
3
Karaikurichi SO
UPS Problem, batteries to be replaced.  Laser Printer not working.
4
Mavadi SO
UPS batteries to be replaced
5
Kudankulam SO
Frequent power cut. UPS and batteries to be replaced
6
Vallioor PerunthuNilayam SO
UPS and batteries to be replaced
7
Vijayanarayanam SO
Frequent power cut. UPS and batteries to be replaced.  Both Laser Printer and Dot Matrix Printer are not working properly
8
Mukkudal SO
UPS and batteries to be replaced
9
Dohnavur SO
UPS and batteries to be replaced.  Generator auto ignition fault and lady SPM is unable to start the genset by pulling rope.
10
Pettaikulam SO
UPS and batteries to be replaced. Laser printer toner to be replaced.
11
Gandhi Nagar SO
UPS and batteries to be replaced. Generator auto ignition fault and lady SPM is unable to start the genset by pulling rope. Dot matrix printer problem.
12
Tirunelveli Terku SO
UPS and batteries to be replaced. Generator auto ignition fault.  Dot matrix printer not working properly
13
Radhapuram SO
UPS and batteries to be replaced.

            Apart from the above, nearly in all single-handed post offices, the backup capacity of the batteries provided is almost meagre and could not run the office during  power cut.  The issues in these offices need to be addressed in a war-footing manner.

We request the Divisional Administration to settle the above issues before implementation of the CSI as unrest is prevailing among the staff which will have a negative impact on implementation of the CSI.  Hope, the SSPOs., will take note of the ground problems seriously.


                         Yours faithfully


[S.K.JACOBRAJ]




GDS ஊழியர்களின் போராட்டம் இன்று எட்டாவது நாள் தொடர்கிறது -போராடும் தோழர்களை வாழ்த்துகிறோம் .
நேற்று நமது துறை செயலருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது .கமேலேஷ் சந்திரா அமுலாக்கம் தொடர்பான கோப்புகள் அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டதில் வரிசை எண் 27 யில் இருக்கிறதாம் .ஒரு கூட்டத்திற்கு 4 அல்லது 5 கோப்புகளின் மீதுதான் அமைச்சரவை முடிவெடுக்கிறதாம் .ஆகவே விரைந்து நமது கோப்புகளை அரசாங்கம் ஒப்புதலுக்கு எடுக்க அமைச்சர்களின் கவனத்தை ஈர்க்க அரசியல் தலைவர்களின் /பாராளுமன்ற உறுப்பினர்களின் அழுத்தம் தேவைப்படுவதால் ஆங்காங்கே மக்களவை /மாநிலங்களவை உறுப்பினர்களை சந்திக்க வலியுறுத்த படுகிறது 
------------------------------------------------------------------------------------------------------------------------
நேற்று கர்நாடக தோழர்கள் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி சென்று ஆளுனரிடமும் கர்நாடக முதல்வரிடமும் மனு அளித்துள்ளனர் 
--------------------------------------------------------------------------------------------------------------------
கேரளாவில் தொடர்ந்து முழு வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது 
------------------------------------------------------------------------------------------------------------------
நமது தமிழ்மாநில COC சார்பாக 30.05.2018 அன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்துவது 31.05.2018 அன்று CPMG அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது 
--------------------------------------------------------------------------------------------------------------------
GDS கோரிக்கைகள் வெல்லும்வரை GDS அகிலஇந்திய சங்கங்கள் காட்டும் ஆர்வத்தையும் உறுதியையும் தொடர வேண்டுகிறோம் 
வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 
---------------------------------------------------------------------------------------------------------------------





Monday, May 28, 2018

வெல்லட்டும் ! வெல்லட்டும் ! 
இன்று GDS சங்கம் சார்பாக மதுரையில் நடைபெறவிருக்கும் ரயில் மறியல் போராட்டத்திற்கு செல்லும் நெல்லை GDS ஊழியர்களை வாழ்த்தி அனுப்பிய காட்சி 

அன்பார்ந்த தோழர்களே !
CSI அமுலாக்கம் என்பது நமது கோட்டத்திற்கு 12.06.2018 என குறிப்பிட்டிருக்கீறார்கள் .அதற்கு முன்பே அடிப்படை வசதிகளை செய்துதரவேண்டும் என்று நாம் மாதாந்திர பேட்டியின் போது தெரிவித்திருந்தோம் .அதுமட்டுமல்லாமல் தகவல் அறியும்   உரிமை சட்டத்தின் கீழும் நமது கோட்ட சங்கம் சார்பாக தகவல்களை கேட்டிருந்தோம் .குறிப்பாக ஜெனெரேட்டர் -UPS CSI பயிற்சிகள் குறித்த கேள்விகளுக்கு கோட்ட நிர்வாகம் பதில் தர மறுத்தது .அதனை எதிர்த்து நாம் மேல் முறையிடு செய்ததின் விளைவாக நமது DPS அவர்கள் கோட்ட சங்கம் கேட்கும் அனைத்து விவரங்களையும் கொடுக்க உத்தரவிட்டுள்ளது .
அதன்படி1. நமது கோட்டத்தில் 302 ஊழியர்களுக்கு CSI பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளது .இன்னும் 5 ஊழியர்களுக்கு மட்டுமே கொடுக்க வேண்டியுள்ளது .2.ஜெனெரேட்டரை பொறுத்தவரை 2.4 KV 5 KV 10 KV 15 KV என 104 ஜெனெரேட்டர்கள் (டிஸ்பென்சரி உள்பட ) இருப்பதாகவும் அனைத்தும் Working conditional யில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர் .3.UPS பொறுத்தவரை 95 அலுவலகங்களில் கிட்டத்தட்ட  C கிளாஸ் அலுவலகத்தில் உள்ள UPS பேட்டரிகள் அனைத்தும் சரியாக இயங்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதுகுறித்து கோட்ட நிர்வாகத்திடம் கேட்டபோது C கிளாஸ் அலுவலகத்தில் பேட்டரிகளை SSP வரம்பிற்குள் வாங்கப்படும் என்றும் அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .இதர அலுவலகங்களுக்கு மண்டல அலுவலக ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .இதுபோக ஏனைய பிரிண்டர் சம்பந்தமான விஷயங்கள் நாளை SSP அவர்களுடன் விவாதிக்கயிருக்கிறோம் .
உங்கள் அலுவலக குறைகளை கோட்ட செயலருக்கு  நேரிடையாக தெரிவிக்க கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி .வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 


Saturday, May 26, 2018

                                               நன்றி ! நன்றி ! நன்றி !
புறநிலை ஊழியர்களுக்கு ஆதரவாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அனைத்து அஞ்சல் மூன்று மற்றும் அஞ்சல் நான்கு தோழர்களுக்கு கோட்ட சங்கத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .பெரிய அளவில் வேலைநிறுத்தம் குறித்து பிரச்சார சுற்று பயணங்கள் போகாமலே ஒரு அறிக்கை ஒரு கூட்டம் வாட்ஸாப்ப் வேண்டுகோள் இவைகளை ஏற்று வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற அனைத்து தோழர்களுக்கும் நன்றிகளை உரிதாக்கிக்கொள்கிறோம் .முதல் நாள் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் இரண்டாம் நாள் வள்ளியூரில் நடைபெற்ற எழுச்சி மிகு ஊர்வலம் நேற்று அம்பாசமுத்திரத்தில் நடைபெற்ற உண்ணாவிரதம் இவைகளில் கலந்துகொண்ட தோழர்களுக்கும் பாராட்டுக்கள் .ஒரு வரலாற்று பதிவாக நெல்லை SC /ST நலச்சங்க கோட்ட செயலர் இரண்டு நாள் வேலைநிறுத்தம் செய்தது MMS தோழர்களின் உற்சாக பங்களிப்பு கோட்ட அலுவலக ஊழியர்களின் முழுமையான ஈடுபாடு இவைகளை நாம் நன்றியோடு நினைத்து பார்க்கிறோம் .அதுமட்டுமல்ல யூனியன் சொன்னால்தான் வேலைநிறுத்தத்தை விலக்கி கொள்வோம் என்று இறுதிவரை உறுதி காத்த அனைவருக்கும் நன்றி .நேற்றைய தமிழ்மாநில ஒருங்கிணைப்பு குழு நேற்று வேலைநிறுத்தத்தை விலக்கி கொண்டது .ஆகவே அனைவரும் இன்று பணிக்கு செல்லுமாறு கேட்டு கொள்கிறோம் .
தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 
--------------------------------------------------------------------------------------------------------------------
GDS சங்கங்களின் வேலைநிறுத்தம் தொடர்கிறது 

Wednesday, May 23, 2018







 GDS ஊழியர்களுக்கான ஆதரவு போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து அஞ்சல் மூன்று அஞ்சல் நான்கு தோழர்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிதனை தெரிவித்து கொள்கிறோம் .நெல்லையில் முதல் நாள் வேலைநிறுத்தத்தில் SC /ST சங்கம் பங்கேற்றது சிறப்பான ஒன்று .MMS தோழர்களின் முழு பங்களிப்பு நமக்கு புது வேகத்தை தந்தது .கோட்ட அலுவலகத்தில் பணியாற்றும் நமது தோழர் /தோழியர்களின் பங்கு மேலும் வலு சேர்த்தது .புறநகர் பகுதி தோழர்களின்பங்களிப்பு நெல்லை பழைய வரலாறுகளை நினைவூட்டியது .இன்றும் போராட்டம் தொடர்கிறது .நேற்று மத்திய தொழிலாளர் நல ஆணையருடன் நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தது .மீண்டும் 24.05.2018 அன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது .இந்த பேச்சு வார்த்தையை அழுத்தம் கொடுத்திட நாம் தொடர்ந்து போராடுவோம் .நெல்லையில் இன்று வள்ளியூரில் நமது கோரிக்கைகளை வலியுறுத்து அஞ்சல் ஊழியர்களின் எழுச்சி பேரணி காலை சரியாக 11 மணிக்கு நடைபெறுகிறது .காவல் துறையிடம் முறையான அனுமதி பெற்றுள்ளோம் .ஆகவே தோழர்கள் அனைவரும் வள்ளியூர் நோக்கி புறப்படுவீர் ! 
போராட்ட வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா --I.ஞானபாலசிங் -E.காசிவிஸ்வநாதன் 
கோட்ட செயலர்கள் நெல்லை 

Saturday, May 12, 2018

                         வெல்லட்டும் -வெல்லட்டும் 
 வா ! மற்றுமொரு போராட்ட களம் 
விரும்பி உன்னை அழைக்கிறது 
ஒட்டுமொத்த சங்கங்களும் 
ஒருசேர இணைகிறது !

ED அடிமை தலை அறுக்கும் 
லிங்கனும் நீதான் 
இனவேறுபாட்டை அகற்றும் 
லூதர் கிங்கும் நீ தான் 
இந்த சுதந்திரப்போரில் படை நடத்தும் 
நேதாஜியும் நீதான் 
ஜார்களின் கொட்டத்தை ஒடுக்கும் -உன்னத 
பாட்டாளி வர்க்கமும் நீதான் 

ED -சுதந்திர இந்தியாவின் 
அறிவிக்கப்படாத கொத்தடிமைகளா ?
ஊதிய மாற்றத்தை கூட
 ஊதியத்தை இழந்து பெறுவதற்காக 
பிறந்த சாபத்தின் சாட்சிகளா ?
அஞ்சல் துறையின் அட்சய பாத்திரத்தில் 
சிதறி விழும் பருக்கைகளுக்காக 
கையேந்தும் வறுமையின் அடையாளங்களா ?
ஒளிரும் இந்த தேசத்தில் 
ஒடுக்கப்பட்ட இனத்தின் பிறப்புகளா ?

ஆட்சியில் பங்கு கேட்டனா ?
அதிகாரத்தில் ஆசை பட்டானா ?
மல்லையாக்களை  போல் வங்கிளில் 
கடன் கேட்டனா !
கொடுத்த அறிக்கைகை கேட்கிறான் -நீ 
அமைத்த கமிட்டியின் முடிவை கேட்கிறான் 

அஞ்சல் துறையின் தயக்கம் புரியவில்லை -
தாமதம் ஏன் யாருக்கும் தெரியவில்லை 
அமைச்சரவைக்கு சென்ற கோப்பை கானவில்லை -
இனியும் பொறுப்பது யாருக்கும் லாபமில்லை 

தட்டி தட்டி பார்த்தோம் -திறப்பதற்கு ஆள் இல்லை 
கேட்டு கேட்டு பார்த்தோம் கொடுக்க நாதி இல்லை 
கிணற்றில் போட்ட கல்லாய் கிடக்கிறது -ED நிலை பார்த்து 
சுற்றமும் நட்பும் கூட சிரிப்பாய் சிரிக்கிறது 

அழுது வாழ அவசியமில்லை -எவரையும் 
தொழுது பிழைக்கவும் விருப்பமில்லை 
பழுது பட்ட இயக்க ஆயுதங்களை கூற்படுத்தி 
போர் பரணி பாடி இணைந்திடுவோம் 

வேலை நிறுத்த நாளை -திருவிழாபோல் 
எதிர்கொள்வோம் 
எதிர்ப்போரின் விலா ஓடிய 
வீறு கொண்டு எழுந்திடுவோம் 

கந்தர்வ வரிகளை போல் 
கடையடைப்பு நடத்தும் காலமல்ல 
படையெடுக்கும் காலம் 
முதல் சங்கம் -இடை சங்கம் 
கடை சங்கம் போய் -இன்று 
தொழிற்சங்க காலம் -அமைய போவது 
தொழிலாளியின் களம் 
                 போராட்ட வாழ்த்துக்கள் 
                                                                                   ஜேக்கப் ராஜ் -நெல்லை 




























11.05.2018 அன்று திசையன்விளையில் நடைபெற்ற போராட்ட விளக்க கூட்டத்திற்கு தோழர் ஜான்சன் GDS அவர்கள் தலைமை தாங்கினார்கள் .தோழர்கள் முரளி பிரகாஷ் அருணாசலம் ஐசக் டேனியல் பாலசிங் மற்றும் ஜேக்கப் ராஜ் உள்ளிட்டோர் வேலைநிறுத்தத்தின் அவசியம் குறித்து விளக்கி பேசினார்கள் .







Friday, May 11, 2018

                              நன்றி !நன்றி !!
  மறைந்த தோழர் காலப்பெருமாள் அவர்களின் குடும்ப நலநிதியாக இரண்டாவது மற்றும் இறுதி தவணையாக ரூபாய் 20000 இன்று காலப்பெருமாள் அவர்களின் துணைவியார் திருமதி முருகம்மாள் அவர்களின் 

                              நன்றி !நன்றி !!
  மறைந்த தோழர் காலப்பெருமாள் அவர்களின் குடும்ப நலநிதியாக இரண்டாவது மற்றும் இறுதி தவணையாக ரூபாய் 20000 இன்று காலப்பெருமாள் அவர்களின் துணைவியார் திருமதி முருகம்மாள் அவர்களின் 

Thursday, May 10, 2018

            அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
இந்த ஆண்டு RT அறிவிப்பு மீண்டும் அறிவிக்கப்படுகிறது .சென்சிடிவ் பதவிகள் 3 ஆண்டுகள் என அதிகாரப்பூர்வமாக மண்டல அலுவலகத்தில் இருந்து வந்துவிட்டது .
--------------------------------------------------------------------------------------------------------------------
 GDS ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் தமிழக NFPE ஒருங்கிணைப்பு குழு எடுத்த முடிவின் அடிப்படையில் அவர்களுக்கு ஆதரவாக NFPE உறுப்பு சங்கங்கள் அனைத்தும் பங்கேற்கின்றன .வேலை நிறுத்தம் குறித்து விளக்க கூட்டம் வருகிற 18.05.2018 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் P 3 P 4 சங்கங்கள் இனைந்து நடத்தவிருக்கின்றன .
தலைமை தோழர் T .அழகுமுத்து கோட்டத்தலைவர் P 3
முன்னிலை  தோழர் A .சீனிவாச சொக்கலிங்கம் கோட்ட தலைவர் P 4
அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டு கொள்கிறேன் .
வாழ்த்துக்களுடன் 
M.தளவாய்   SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

                                            வருந்துகிறோம் 
நமது இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் முன்னாள் Deputy Postmaster பாளையம்கோட்டை மற்றும் தென்கலம் GDSBPM அவர்களின் தந்தையருமான தென்கலம் சுப்பையா அவர்கள் 09.10.2018 அன்று இயற்கை எய்தினார்கள் .அன்னாரது இறுதி சடங்கு இன்று 10.05.2018  தென்கலத்தில் மதியம் 2 மணியளவில் நடைபெறுகிறது .மறைந்த தோழர் தம் குடும்பத்திற்கு நெல்லை NFPE சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் .

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
GDS ஊழியர்களின் கமிட்டியை அமுல்படுத்த கோரி மே 22 முதல் நடைபெறும் காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக இன்று 10.05.2018 மதியம் 1 மணியளவில் திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் .மேலும் NFPE -GDS  மற்றும் NUDAS  AIGDSU சங்கங்களின் சார்பாக நடைபெறும் வேலைநிறுத்த விளக்க கூட்டங்களிலும் அந்தந்த பகுதி தோழர்கள் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம் .
 தலைமை தோழர் .N .கண்ணன் செயல் தலைவர் அஞ்சல் மூன்று 
                                போராட்ட வாழ்த்துக்களுடன் 
M .தளவாய் NFPE P 3(பொ ) --SK .பாட்சா NFPE P 4 --L .முனியப்பன் R 3 G..சங்கரநாராயணன் R 4 ---S .செல்வபாரதி SBCO (NFPE )---
 E .காசிவிஸ்வநாதன் GDS (NFPE )
 NFPE ஒருங்கிணைப்புக்குழு நெல்லை 

நெல்லையில் GDS ஊழியர்களின் வேலைநிறுத்த விளக்க முதல் கூட்டம் 09.05.2018 அன்று அம்பாசமுத்திரம் தலைமை அஞ்சலகத்தில் நடைபெற்றது கூட்டத்திற்கு NFPE -GDS கோட்ட செயலர் தோழர் E .காசிவிஸ்வநாதன் அவர்கள் தலைமை தாங்கினார்கள் .AIGDSU கோட்ட செயலர் தோழர் ஞான பாலசிங் அம்பை அஞ்சல்நான்கின் தலைவர் தோழர் ஆவுடையப்பன் அஞ்சல் மூன்றின் கோட்ட செயலர் தோழர் ஜேக்கப் ராஜ் உள்ளிட்டோர் விளக்கவுரை நிகழ்த்தினார்கள் .தோழர் ராஜராஜன் கிளைசெயலர் ராஜராஜன் நன்றிகூறினார் .




Wednesday, May 9, 2018

தேவையில்லாத பதிவுகளை தவிர்ப்பீர் 
நெல்லை NFPE வாட்ஸாப் குழுவிலில் நமது உறுப்பினர்களுக்கு நன்மை பயக்கும் விசயங்களை மட்டுமே பதியுங்கள் .குறிப்பிட்ட பிரிவு ஊழியர்களை குற்றம்சாட்டுவது சீனியர் /ஜூனியர் என புது தேவையற்ற பார்வையோடு விமர்சிப்பது மறைமுக கேலி சித்திரங்கள் இவைகள் உறுப்பினர்களின் மனதை புண்படுத்துமே தவிர வேறு எந்த பிரயோஜனமும் இல்லை .கோட்ட சங்க செயல்பாடுகளை தாராளமாக விமர்சியுங்கள் -உங்கள் பார்வையில் தவறாக தெரிந்தால் சுட்டி காட்டுங்கள் . .ஒவ்வொரு RT யிலும் நம் உறுப்பினர்களின் விருப்ப இடத்தை ஏன் பிரிவை கூட அவர்களுக்கு வாங்கிக்கொடுக்கத்தான் கோட்ட சங்கம் இருக்கிறது .யார் வேலை செய்வார்கள் யார் வேலை செய்யமாட்டார்கள்  என்பதை கண்காணிக்க கண்காணிகள் இருக்கிறார்கள் .நமக்குஅதுவல்ல வேலை ..அஞ்சல் மூன்றின் முக்கிய பிரச்சினையே நான்கு ஆண்டுக்கு ஒருமுறை இடமாறுதல் தான் .இப்பொழுது அதுவும் சில பதவிகளுக்கு மூன்றாண்டுகள் .இது மேலும் நமது கோட்ட சங்கத்திற்கு கூடுதல் சுமைதான் .ஆனாலும் தொடர்ந்து முயற்சித்து ஊழியர் நலன் பாதுகாப்போம் .
                                                 உதவாவிட்டாலும் பரவாயில்லை 
                                                 உபத்திரம் செய்யாதீர்கள்  
வருத்தத்துடன் இந்த பதிவை பதிகிறேன் .தோழமையுடன் ஜேக்கப் ராஜ் 
                                                 
                                                

                                     முக்கிய செய்திகள் 
சென்சிடிவ் பதவிகளில் பணியாற்றுவோரின் TENURE மூன்று ஆண்டுகள் தான் என்ற உத்தரவு இந்த ஆண்டின்  சுழல் மாறுதலில் இருந்து அமுலாகிறது .இதன்படி ASP முதல் C &B கிளாஸ் போஸ்ட்மாஸ்டர்கள் மற்றும் In charge of CPC  BPC கோட்ட அலுவலகத்தில் விஜிலென்ஸ்  இடமாறுதல் நியமன பிரிவு மற்றும் சிஸ்டம் மேனேஜர்  மார்க்கெட்டிங் இவைகளில் பணிபுரிகிறவர்கள் SENSITIVE பதவிகளில் வருகிறார்கள் .இதன்படி 2015  முதல் பணியாற்றுகிறவர்கள் இந்த ஆண்டு சுழல் மாறுதலில் இடம் பெறுவார்கள் .ஏற்கனவே அறிவிக்கப்பட்ட RT NOTIFICATION போக புதிய அறிவிப்புகள் விரைவில் வரும் .LSG ஊழியர்களுக்கு கோட்ட அளவிலே இடமாற்றம் செய்திடவும் நேற்று ஒரு வழிகாட்டுதல்கள் மண்டல அலுவலகத்தில் இருந்து வந்துள்ளன .சில கோட்டங்களில் RT உத்தரவு அமுலாக்கப்பட்ட நிலையில்  ஒவ்வொரு கோட்டம் ஒவ்வொரு நிலைபாடு எடுப்பது சரியாகுமா ? ஆக அடுத்த ஆண்டில் 
இருந்து இந்த உத்தரவை அமுல்படுத்தினால் முறையாகவும் சரியாகவும் இருக்கும் என ஊழியர்கள் கருதுகின்றனர்  .
பள்ளி /கல்லூரிகளில் குழந்தைகளை சேர்ப்பது -இடமாற்றத்தினால் புதிய குடியிருப்புகளை தேடுவது இவையெல்லாம் பாவப்பட்ட எழுத்தர்களுக்கு தான் .அதிகாரிகளுக்கு அவ்வளவு சிரமங்கள் இருக்காது .மாநில நிர்வாகம் என்ன முடிவெடுக்கப்போகிறது தெரியவில்லை.
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Tuesday, May 8, 2018

                                                முக்கிய செய்திகள் 
அன்பார்ந்த தோழர்களே !
  நான் 12.05.2018 முதல் 22.05.2018 வரை LTC (ரோத்தன்பாஸ் )செல்லவிருப்பதால் இந்த இடைப்பட்ட காலத்திற்கு நமது கோட்ட செயலராக அன்பு தோழர் M .தளவாய் PA பாளையம்கோட்டை &கோட்ட உதவி செயலர் அவர்களை நியமித்திருக்கிறேன் .ஒரு முக்கியமான வேலைநிறுத்த காலங்களில் தோழர் M .தளவாய் அவர்கள் கோட்ட செயலர் என்ற பொறுப்பேற்கிறார்கள் .அவர்களுக்கு துணையாக நமது செயல் தலைவர் தோழர் N .கண்ணன் அவர்களும் முன்னாள் கோட்ட தலைவர் தோழர் KG.குருசாமி அவர்களும் உடனிருந்து பணியாற்றுவார்கள் .ஆகவே தோழர்கள் அனைவரும் அன்பு தம்பி M .தளவாய் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் .

NFPE
ALL INDIA POSTAL EMPLOYEES UNION GR-C                 
                   Tirunelveli Divisional Branch
TIRUNELVELI-627001
--------------------------------------------------------------------------------------------------------
No.P3-ORD / dated at TVL 627001 the 07.05.2018
To

The Sr .Supdt of Pos
Tirunelveli Division
627002

Sir,
            Sub:  Authorisation for functioning as Divisional Secretary of
                    AIPEU GR C, Tirunelveli Divisional Branch –reg

         
--------

The undersigned is going to visit Rothanpass under LTC  For the period  from 12.05.2018 to 22.05.208. Hence, Shri. M. Thalavai PA Palayankottai & Asst. Divisional Secretary of AIPEU GR C is authorised to function as Divisional Secretary for the Period from 11.05.2018 to 23.05.2018 and the required trade union facilities may kindly be extended to him.



Yours faithfully,


[S.K. JACOBRAJ]
DIVISIONAL SECRETARY


Monday, May 7, 2018

                                             முக்கிய செய்திகள் 
நமது நெல்லை கோட்டத்தில் CSI அமுலாக்கம் என்பது 29.05.2018 என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது .நமது கோட்ட சங்கத்தின் சார்பாக வெளியிடப்பட்ட CSI கையேடு கிடைக்காதவர்கள் கோட்ட செயலரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம் (94421-23416 அல்லது 8610067106 )
--------------------------------------------------------------------------------------------------------------------
PO &RMS ACCOUNTANT களுக்கான Special Allowance குறித்து Dept of  Posts   02.04.2018 கடிதத்தில்  Special Allowance கிடையாது என தெரிவித்துள்ளது .
-----------------------------------------------------------------------------------------------------------------------
RULE 38 இன் கீழ் இடமாறுதல் குறித்து பரீசீலிக்க 09.5.2018 அன்று மாநில நிர்வாக அலுவலகத்தில் கமிட்டி கூடுகிறது .முன்னதாக கோட்ட அலுவலகங்களில் இருந்து பதியப்பட்ட Inward /Outward விவரங்களை 07.05.2018 குள் அனுப்பவும் கோரப்பட்டுள்ளன 
-------------------------------------------------------------------------------------------------------------------------
GDS சங்கங்கள் அறிவித்துள்ள மே 22 முதலான காலவரையற்ற வேலைநிறுத்தம் குறித்து ஆலோசிக்க இன்று 07.05.2018 அன்று தமிழக NFPE ஒருங்கினைப்பு குழுவின் கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது 
--------------------------------------------------------------------------------------------------------------------------
GDS வேலை நிறுத்தம் குறித்து தமிழக தபால்காரர் சங்கம் சென்னையில் நடைபெற்ற மாநிலசெயற்குழுவில் GDS ஊழியர்களுக்கு ஆதரவாக வேலை நிறுத்தத்தில் பங்கேற்பது என்ற சிறப்பான முடிவை எடுத்துள்ளது .கேரள மாநிலத்தில் நடைபெற்ற கூட்டு மாநில மாநாட்டில் கேரளாவில் GDS ஊழியர்களுக்காக 100 சதம் போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது .
-----------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி .வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Saturday, May 5, 2018

                       உச்ச நீதி மன்றத்தின் உன்னத தீர்ப்பு 
நமது வழக்கறிஞர் திரு .R .மலைச்சாமி MSC BL அவர்கள் தந்திருக்கும் வெற்றி செய்தி 
2002 2003  ஆண்டிற்க்கான காலிப்பணியிடங்களில்  2004 க்கு பிறகு தேர்ச்சி பெற்றிருந்தாலும் எந்த ஆண்டிற்க்கான பணிஇடங்களோ அதன் அடிப்படையில் தான் பணிநியமனமாக கருத்தில்கொண்டு 2002 2003 ஆண்டிற்கான காலியிடங்களில் நிரப்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும் பழைய பென்ஷன் தான் பொருந்தும் என்று 25.04.2018 அன்று உச்ச நீதி மன்றம் உன்னத தீர்ப்பை வழங்கியுள்ளது .இந்த வழக்குகளுக்கு எதிராக நிர்வாகத்தால் கொடுக்கப்பட்ட அனைத்து SLP களையும் உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது .தீர்ப்பின் நகல் வந்தவுடன் வழக்கு தொடுத்த அனைத்து ஊழியர்களும் அந்தந்த கோட்ட அதிகாரிகளுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்த படுகிறார்கள் .நமது கோட்டத்தில் 8 தோழர்கள் இந்த வழக்கில் உள்ளார்கள் .அனைவருக்கும் வெற்றி வாழ்த்துக்கள் .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா நெல்லை 

அஞ்சல் துறையின் அனைத்து GDS சங்கங்களும் இனைந்து நடத்தும் காலவரையற்ற வேலை நிறுத்தம் வெல்லட்டும் 
                 இனி எத்தனை காலம் தான் ஏமாற்றும் இந்த அரசு 

விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டிருந்த GDS ஊழியர்களுக்கு வெற்றி செய்தி .
2012 முதல் பிரிந்த சங்கங்கள் ஒரு கோரிக்கையின் அடிப்படையில் ஒன்றாக சேர்ந்து வேலைநிறுத்தத்தை மே 22 முதல் நடத்துவதாக அறிவித்திருக்கிறது .முதலில் AIGDSU மற்றும் FNPO GDS சங்கமும் வேலைநிறுத்தத்தை அறிவித்திருந்தது .ஏற்கனவே  வேலைநிறுத்த தயாரிப்பில் இருந்த NFPE GDS சங்கமும் அதே மே 22 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது .இந்த பொன்னான வாய்ப்பை GDS ஊழியர்கள் தவறவிடக்கூடாது .பழைய கதைகளை பேசி யார் மனதையும் காயப்படுத்திடக்கூடாது .அமைப்பு ரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் எழுந்திட்ட பிரச்சினைகளை புறந்தள்ளிவிட்டு கமலேஷ் சந்திரா பரிந்துரையை  அமுல்படுத்தும் வரை நாம் ஒன்றினைந்து பணியாற்றுவது மிக மிக அவசியம் .தங்கள் கோரிக்கை சிறிதும் இல்லாத போராட்டங்களில் GDS ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்த வரலாறும் இங்கு உண்டு .ஒன்றாக நடைபெறும் வேலைநிறுத்தத்தை குலைக்க அரசும் -அதிகாரமும் செயல்படும் .சதிகளை முறியடித்து வெற்றி சரித்திரம் படைப்போம் .
                                            GDS இந்த இலாகாவின் 
                                           முதுகெலும்பு 
                                            GDS கிராமப்புற பகுதிகளில் 
                                            அரசாங்கத்தின் தூதுவன் 
                                             GDS அஞ்சல் துறையின் 
                                            அஸ்திவாரங்கள் 
                                            கோடிகோடியாய் கணக்குகளையும் 
                                            பாலிசிகளையும் பிடித்துக்கொடுத்த 
                                            அமுத சுரபி 
                                           GDS எவராலும் அலட்சியம் செய்ய முடியாத 
                                           உன்னத சக்தி 
                                          GDS அடிமைகள் அல்ல -இந்த 
                                          இலாகாவின் உடமைகள் 
                                          GDS களின் ஒன்றுபட்ட போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் .
தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை