...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, December 18, 2021

 அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !

அஞ்சல் மூன்றின் அகிலஇந்திய மாநாடு வருகிற 28.03.2022 முதல் 30.03.2022 வரை பஞ்சாப் மாநிலம் அனந்தப்பூர் சாகிப் --ரோபர் யில் நடைபெறுகிறது .மாநாட்டில் நமது கோட்டத்தில் இருந்து கலந்து கொள்ள விரும்புகின்ற தோழர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நமது பயண திட்டங்கள் வகுக்கப்படும் .

இந்த மாத மாதாந்திர பேட்டியில் சேர்க்கவேண்டிய பிரச்சினைகள் இருந்தால் வருகிற 27.12.2021 க்குள் தெரிவிக்கவும் 

நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Monday, December 6, 2021

 அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே ! 

சீரோடும் சிறப்போடும் நடைபெற்ற நெல்லை அஞ்சல் நான்கு --மாநாடு 

      இளையோர் கூட்டம் தலைமை ஏற்றது ..மூத்த தோழர்களின் வழிகாட்டுதலில் 13 பேர் இளைய மற்றும் புதியவர்கள் பொறுப்பை இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டனர் .

நெல்லை கோட்டத்தின் 39வது  அஞ்சல் நான்கின் மாநாடு 05.12.2021 அன்று கோட்ட தலைவர் A .சீனிவாசசொக்கலிங்கம் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .மாநாட்டில் தலைவராக தோழர் P .செல்வின்துரை (மெயில் ஓவர்சியர் வள்ளியூர் உபகோட்டம் ) கோட்ட செயலராக தோழர் I.உதயகுமார் (தபால்காரர் பாளையம்கோட்டை HO)  பொருளாளராக தோழர் K.செல்வரத்தினம் (தபால் காரர் மஹாராஜநகர் ) ஆகியோர் ஏகமனதாக தேர்வுசெய்ப்பட்டனர் .

புதிய நிர்வாகிகள் பணி சிறக்கNELLAI -NFPE வாழ்த்துகிறது 

தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 


Saturday, December 4, 2021

 அன்பார்ந்த GDS தோழர்களே !

திருநெல்வேலி உப கோட்ட அதிகாரிக்கு எதிராக நமது கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு பிறகு நாம் வைத்த கோரிக்கையில் நமக்கு வெற்றி கிடைத்திருந்தாலும் சம்பந்தப்பட்ட அதிகாரி எந்த மனநிலையில் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை .அவர்கள் எப்பொழுதும் ஊழியர்களை ஒரு குற்றவாளி என்கின்ற எண்ணத்தோடு பார்ப்பதும் சிரிய தவறையும் பெரியதாக எடுத்து தண்டனை வாங்கிக்கொடுப்பதும் அவர்களது இயல்பு . ஆகவே திருநெல்வேலி உபகோட்டத்தில் பணியாற்றும் GDS ஊழியர்களுக்கு சில வழிகாட்டுதல்கள் ..

1.உபகோட்டம் விட்டு உபகோட்டம் யாராவது பணியாற்ற விரும்பினால் நீங்கள் SSP அவர்களுக்கு உங்களது ASP  மூலமாக விருப்ப கடிதங்களை அனுப்பவும் .

2.கிளை அஞ்சலக எல்கைக்குள் குடியிருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள் .

3.விடுப்பு எடுக்கும் பட்சத்தில் அவசியம் விடுப்பு விண்ணப்பத்தில் OUTSIDER யார் என்பதை பூர்த்திசெய்துவிட்டு அந்தந்த SO வில் தகவல் தெரிவித்துவிட்டு செல்லவும் .விடுப்பு விண்ணப்பிக்காமல் OUTSIDER யை வைத்துவிட்டு செல்லக்கூடாது .

4.அலுவலக நேரத்தில் சரியாக செல்லவும் வேலைநேரம் முடிந்தபிறகுதான் அலுவலகத்தை விட்டு திரும்பவும் கேட்டுக்கொள்கிறோம் 

5.DEVICE வேலை செய்யவில்லை அல்லது நெட் கிடைக்காத நாட்களில் யாரிடமும் பாஸ்புக் RPLI புக் என எதையும் வாங்கி அலுவகத்தில் வைக்காதீர்கள் .

6. எந்த காரணத்திற்காகவாவது உங்களிடம் STATEMENTகேட்டல் உடனே கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை .மெயில் ஓவர்சியர் சொல்லுகிறபடி அல்லது ASPசொல்லுகிறபடி எழுதிக்கொடுத்தல் பிரச்சினை தீரும் என்று நம்பி எழுதிக்கொடுக்காதீர்கள் .அதை படித்துப்பார்த்துவிட்டு அவர்களிடமே இன்று என்னால் ஸ்டேட்மெண்ட கொடுக்கும் மனநிலையில் இல்லை .நாளை தருகிறேன் என்பதையே ஸ்டேட்மெண்ட ஆக கொடுத்துவிடுங்கள் 

7.ஆய்வின் போது உங்களை அவர்கள் ஒருமையில் பேசினாலோ அல்லது ஏசினாலோ தயங்காமல் உங்கள் மொபைல் மூலம் ரெகார்ட் செய்து கொள்ளுங்கள 

8.IR மற்றும் VR இவைகளுக்கு பதில் எழுத உதவி தேவைப்பட்டால் எங்கள் உதவியை நீங்கள் எப்பொழுதுவேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம் 

9.குறிப்பிட்ட நேரத்திற்கு மேளா ஆரம்பிக்காமல் எத்தனை மணிநேரம் தாமதமாக மேளா ஆரம்பிக்கப்பட்டதோ அதை எஙக்ளுக்கு தெரியப்படுத்துங்கள் 

10.முக்கியமாக CASH மற்றும் STAMPS மிக சரியாக வைத்திருக்கவேண்டும் 

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் 94421-23416


அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !

                         ஸ்பீட் போஸ்ட் பதிவு செய்திட அந்த COUNTER  PA மற்றும் SINGLE HANDED SPM ஆகியோருக்கு தலா .050  காசு ஊக்கத்தொகை வழக்கப்படுகிறது .நமது கோட்டத்தில் நெடுங்காலமாக இந்த ஊக்கத்தொகை குறித்து யாரும் பெரிய அளவில் விண்ணப்பிக்கவும் இல்லை .காரணம் அதற்கான தொகை பைசா விகிதத்தில் இருப்பதும் ஒரு காரணம் . இருந்தாலும் அதிகமாக ஸ்பீட் போஸ்ட்  புக்கிங் இருக்கின்ற அலுவலகத்தில் இந்த தொகை கணிசமாக கிடைக்கும் .இதை நமது கோட்டத்தில் நமது NFPE பேரியக்கம் சார்பில் 2018யில் மாதாந்திர பேட்டியில் வைத்து விவாதித்து ஸ்பீட் போஸ்ட் ஊக்கத்தொகை பெற்றுக்கொடுத்தோம் .பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் கூட   நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தாண்டு ஜூலை மாதம் முதல் தான்  ஸ்பீட் போஸ்ட்  INCENTIVE CLAIM செய்து வாங்கிவருகிறார்கள் .ஆனால் இன்றைய சூழ்நிலையில் பாளை மற்றும் TVLRS தவிர வேறெங்கும் ஊழியர்கள் ஸ்பீட் போஸ்ட்  INCENTIVE CLAIM  செய்வதில்லை .காரணம் தொகையும் குறைவு ...வேலையும் அதிகம் என நினைத்திருக்கலாம் .இருந்தாலும் உஙக்ளுக்கு இது குறித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ,இனி வரும் நாட்களிலாவது மாதாமாதம் ஸ்பீட் போஸ்ட்  INCENTIVE CLAIM   செய்திட கேட்டுக்கொள்கிறோம் .அதற்கான மாதிரி படிவம் உங்கள் பார்வைக்கு தரப்பட்டுள்ளது .இரண்டு REPORTS இணைத்து அனுப்பவேண்டும் .

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 


Friday, December 3, 2021

 அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !

நேற்று நடைபெற்ற (02.12.2021)  மாதாந்திர பேட்டியில் விவாதிக்கப்பட்ட  முக்கிய பிரச்சினைகள் 

1.ஆன்லைன் பயிற்சிக்கு வருகின்ற ஊழியர்கள் தங்கள் பயிற்சிக்காலத்தில் பயன்படுத்த DATA ரிச்சார்ஜ் முன்பணம் வழங்கிட ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது .ஆகவே பயிற்சிக்கு உத்தரவு வந்தவுடன் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் முன்பணம் கேட்டு விண்ணப்பிக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 

2.பல வருடங்களாக இழுத்தடிக்கப்பட்ட இட்டமொழி CASH OFFICE வள்ளியூரில் இருந்து திசையன்விளைக்கு மாற்றம் செய்யப்பட்டுவிட்டது 

3.வள்ளியூர் அலுவலக மெயில் சம்பந்தமான பிரட்சினையும் வேலைநேரத்திற்கு மேல் ஊழியர்கள்  பலமணிநேரம் காத்திருக்கவேண்டிய நிலைக்குறித்தும் விவாதிக்கப்பட்டது .நிர்வாகம் இரண்டு முன்மொழிதல்களை மண்டல அலுவலகத்திற்கு அனுப்பிவைத்துள்ளது .இதற்கிடையில் வள்ளியூருக்கு இணைக்கப்ட்டுள்ள துணை அஞ்சலகஙக்ளுக்கு SAMEDAY TRANSIT என்பதை மாற்றி ONEDAY TRANSIT என்பதை குறித்து பரீசீலிக்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது 

4.GDSஊழியர்களின் OFFICIATING பொறுத்தவரை உபகோட்டம் விட்டு உபகோட்டம் பார்த்திடஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .

5.தோழர் ராஜ சூரிய கண்ணன் தபால் காரர் பாளை அவர்க்ளின் DCCS மாற்றப்பட்டுவிட்டது .

6.முன்னீர்பள்ளம் நெட்ஒர்க் ,தச்சநல்லூர் மற்றும் தெற்கு கருங்குளம் அலுவலக பிரச்சினைகள் விவாதிக்கப்ட்டது 

7.NDC ஊழியர்களுக்கு பெட்ரோல் அலவன்ஸ் ரூபாய் 150 என உயர்த்த மண்டல அலுவலகத்திற்கு பரிந்துரைக்கப்படும் 

8.பாளை தலைமை அஞ்சகத்தில் கூடுதலாக ஒரு GDSPACKER  REDEPLOY செய்யப்படும் 

              தோழர்களே !நாம் ஏற்கனவே தெரிவித்தபடி தங்கள் அலுவலக பிரச்சினைகளை முதலில் கோட்ட அலுவலகத்திற்கு எழுத்துபூர்வமாக எழுதிவிட்டு அதன் நகலை கோட்ட சங்கத்திற்கு அனுப்பிவைக்கவும் .பொதுவாக நிர்வாகம் யூனியன் மூலம் தான் பிரச்சினை எடுக்கப்பட வேண்டுமா ?எங்களிடம் நேரடியாக தெரிவித்தால் நாங்கள் செய்யமாட்டோமா ?என்ற பழைய மனநிலையில் இருந்து சற்றும் மாறவில்லை .பிரச்சினைகளை தேடி நாம் அலையவில்லை பிரச்சினைகளின் தீர்வை நோக்கித்தான் நாம் முயற்சிக்கிறோம் என்பதை அழுத்தமாக நேற்று பதிவுசெய்தோம் .

நேற்றைய மாதாந்திர பேட்டிக்கு புதிய தோழர்கள் நியூட்டன் PA வள்ளியூர் மோகன் தபால் காரர் ஆகியோர்களை அழைத்து சென்றோம் .வருகிற நாட்களிலும் மாதம் ஒரு புதிய குறிப்பாக இளைய தோழர்களை அழைத்து செல்லவிருக்கிறோம் ...

நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !

நெல்லை கோட்ட அஞ்சல் நான்கின் மாநாடு ---05.12.2021  ஞாயிறென்று பாளையம்கோட்டை தலைமை  அஞ்சலகத்தில் நடைபெறுகிறது .இந்த மாநாட்டில் அஞ்சல் நான்கின் மாநிலசெயலர் தோழர் G.கண்ணன் ,நெல்லை கோட்ட அஞ்சல் மூன்றின் செயலர் நெல்லை கோட்டத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக கோட்ட செயலராக பணியாற்றிவரும் நமது சங்க ஆலோசகர் ஜேக்கப் ராஜ் மற்றும் மாநில சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகின்றார்கள் .மாநாட்டில் கலந்துகொள்ளும் அஞ்சல் நான்கு உறுப்பினர்களுக்கு சிறப்பு நினைவு பரிசு வழங்கப்படவுள்ளது .அதேபோல் காலை சிற்றுண்டியும் மதியம் மதுரம் அறுசுவை உணவும் உண்டு .அஞ்சல் நான்கின் உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் கலந்துகொள்ளுமாறு உங்களை அன்போடு அழைக்கிறோம் நன்றி தோழமையுடன் T .புஷ்பாகரன் கோட்ட செயலர் &மாநில அமைப்பு செயலர் நெல்லை 

Wednesday, December 1, 2021

 இம்சை அரசிக்கு ஒரு தொழிலாளியின் ரத்தம் கசிந்த பதில்கள் 

சீ ..சீ .....

 சூரியன் நீ என்றால்

 நாங்கள் பிரபஞ்சம் தான் 

 ராட்சசி நீ என்றால் 

நாங்களும் (NFPE )ரட்சகன் தான் 


நீ சக்தியல்ல --சூர்பனகை தான் 

ஆதாரம் எங்களிடம் ஆயிரம் இருக்கு !


தொழிலாளியின் கண்ணீர் வடிப்புக்கு 

நீ காரணம் என்றால் 

கண்ணீரை துடைக்கும் 

கைக்குட்டை NFPE தான் 

இன்று நீ வடிக்கும் நீலி கண்ணீர் உன் 

சகாக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை 


கருணை அடிப்படையில்

வேலை கேட்டு வந்தவரிடம்  நீ 

காட்டிய கொடுமை 

ஊர் அறியும் -உன் 

பேர் தெரியும் 


OUTSIDER முதுகில் சவாரி 

செய்துவிட்டு -நீ 

விண்ணப்பித்த மைலேஜ் தொகை 

குஷ்டரோகி கையில் 

வடிந்த தேனுக்கு சமமல்லவா ?


வறுமையின் விளிம்பில் நின்ற 

OUTSIDER யிடம் நீ பேசிய பேரம் 

5 லட்சம் பாலிசியாம் --100கணக்கு

உனது பாலிசியாம் !


ஒருமையில் பேசுவதும் 

பெருமையில் வாழ்வதும் 

உன் பிழைப்பு என்றால் 

பிழைத்து போ  !

உழைத்து வாழும் எங்களிடம் ஏன் 

உரசி  பார்க்கிறாய் ?எங்களிடம் ஏன் 

அரசியல் செய்கிறாய் ?


ஆய்வு நடத்தும் இடம் உன்

அரண்மனை என்றால் என்ன ?

அலுவலகம் என்றால் எமக்கென்ன ?

TA பில் போடாமலா இருந்தாயா  !


உன் அலுவலகத்தில் சதிகார 

கூட்டம் என்றால் ?

அதனை வேட்டையாட 

எங்களுக்கென்றும் அவகாசம் 

தேவையில்லை !


உன் உப கோட்டத்தில் 

எத்தனை தொழிலாளி செத்து போனான் 

என்றாவது இறுதி சடங்கில் போனதுண்டா ?

எத்தனை குடும்பங்கள் கள் கணவனை 

இழந்து வாடியபோதும் 

கைம் பெண்களை அலையவிட்டு 

அலைக்கழித்ததை மறக்கமுடியுமா ?


எங்களின் கண்ணீர் இன்னும் இருக்கு 

அம்மாவை ஆதரிப்போர் இனியாவது 

கேட்டு பார் !

உன் சகாக்களின் சாவின் போது 

சக்தி எங்கே போனது ? 

சூரியன் எங்கே ஒழிந்து கொண்டது ?

தொடரும் ..........ஜேக்கப் ராஜ் ------











 அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !

COMBINED DUTYபிரச்சினை ,பாளை பார்சல் பிரிவில் நிர்வாகத்தால் கொடுக்கப்பட்ட நெருக்கடிகள் ,திருநெல்வேலி உபகோட்ட அதிகாரியின் அத்துமீறல்கள் மற்றும் பழிவாங்குதல்கள் இவைகளை கண்டித்து நேற்று நெல்லையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் மாபெரும் வெற்றியை பதிவாக்கியுள்ளது தொடர்மழை கூட நமக்காக சிறிதுநேரம் ஓய்வெடுத்து  ஆதரவு தந்தது .என்றே சொல்லலாம் .ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட அத்தனை உறுப்பினர்களுக்கும் ஆதரவு அளித்த இரண்டு ஓய்வூதியர் சங்க அமைப்புகளுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .

இதுகுறித்து நாளை 02.12.2021அன்று நடைபெறும் மாதாந்திர பேட்டியில் முக்கிய பிரச்சினையாக விவாதிக்கப்பட்டு நல்ல முடிவு எடுக்கப்படும் என நம்புகிறோம் .இதன் அடிப்படையில் தான் நமது அடுத்தகட்ட நடவடிக்கைகள் அமையும் .

நெல்லை அஞ்சல் நான்கின் 39வது கோட்ட மாநாடு வருகிற 05.12.2021அன்று பாளையம்கோட்டையில் நடைபெறுகிறது .அஞ்சல் நான்கின் உறுப்பினர்கள் மட்டுமல்ல NFPE சொந்தங்கள் அனைவரும் மாநாட்டில் குடும்பத்தோடு பங்கேற்றிட NELLAI -NFPE சார்பாக அழைக்கிறோம் 

மாநாட்டில் காலை சிற்றுண்டி ,மதியம் சாப்பாடு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது .

மாநாட்டு நன்கொடை அஞ்சல் நான்கு உறுப்பினர்களுக்கு ரூபாய் 500 என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது .இன்று நமது நிர்வாகிகள் மாநகர பகுதிக்கு ஊழியர்களை சந்திக்க வருகிறார்கள் .அந்தந்த அலுவலக முன்னனி தோழர்கள் நன்கொடைகளை பிரித்து வைத்திருக்குமாறு நினைவூட்டுகிறோம் .மாநாட்டு வாழ்த்துக்களுடன் 

SK .ஜேக்கப் ராஜ் --T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை