...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, March 31, 2016

                                          பணிநிறைவு வாழ்த்துக்கள் 

                         தோழர் T.சுப்ரமணியன் சூப்பர்வைசர் SBCO பாளை   .
                          ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து 
                           சாதனைகளை தொட்டு பார்த்தவர் 
                           சவால்களை தன் 
                           சாமர்த்தியத்தால் சுட்டு பார்த்தவர் 
                          கையிலே அதிகாரம் கிடைத்தும் --அதை 
                          தவறாக  பயன்படுத்தாதவர் 
                         SBCO -SBBRANCH உறவை பணியாற்றிய 
                        அத்தனை இடத்திலும் காத்தவர் 
                         தொழிற்சங்க உறவையும்     பாதுகாத்தவர்  
                           அமைதியின் அடையாளம் 
                           அன்பின் பரிமானம் 
                        வாழ்க !தோழர் TS 
                                                                      அன்புடன் SK .ஜேக்கப்ராஜ்
----------------------------------------------------------------------------------------------------------------

                         தோழர் மீனாட்சி சுந்தரம் கிளைசெயலர் ஸ்ரீவைகுண்டம் 
    அண்ணன் மீனாட்சி --அன்னை தமிழின் 
    அருந்தவ புதல்வனாய் வளர்ந்தார்  என்பது அவரது 
   வார்த்தைகளே சாட்சி! 
   மேடைகளில் பாரதியை போற்றுவார் 
  சபைகளில் சைவத்தை மெருகேற்றுவார் 
  பணிநிறைவு வரை கிளைசெயலர் பதவியை 
 தக்க வைத்து கொண்டிருந்தார் -
அண்ணன் பாலுவின் பாசறையில் -எங்களோடு 
கள பயிர்சியும் முடித்திருந்தார் 
அஜானுகு தோற்றம் உடலில் உண்டு --ED களும் 
அடிமை இல்லை என்ற உணர்வு எப்போதும் உண்டு  
ஸ்ரீவை சின்ன கிளை என்றாலும் அதன் புகழை 
உச்சானிக்கு  உயர்த்தியவர் 
அண்ணன் ராஜகோபால் ,உள்ளிட்ட முத்துநகர் கோட்ட 
தோழர்களோடு முற்றிலுமாய் கலந்தவர் 
வெற்றிகளை குவித்தவர் --தனக்கு பின்னே 
வெற்றிடம் இல்லா வகையில் --தம்பி 
அய்யா துரையை அடையலாம் காட்டியவர் 
வாழ்க !பல்லாண்டு !
                     வாழ்த்துக்களுடன்  SK .ஜேக்கப்ராஜ் 
------------------------------------------------------------------------------------------------------------------------

                                              SB உத்தரவுகள்  --2016
SBORDER 1-2016 வட்டிவிகிதங்கள் மாற்றம் 

S B Order No. 02/2016 : Acceptance of POSB business in the case of Finacle CBS application is not accessible or slow to accept transactions presented at the counter - invoking of Business Continuity Plan (BCP) regardingWednesday, March 30, 2016

மீண்டும் தலை தூக்கும் டார்கெட் நெருக்கடி 
அன்பார்ந்த தோழர்களே !
                டார்கெட் விஷயமாக எந்த ஊழியர்களையும் அச்சுறுத்த கூடாது ,வீணாக மண உளைச்சலுக்கு ஆளாக்க கூடாது --கூடுமானவரை ஊழியர்களை Educate செய்து  business நடக்க முயற்சி எடுக்க வேண்டும் என்று CPMG அலுவலகம் எத்தனை முறை கூறினாலும் மேலிடத்தில்? நன்மதிப்பை பெறவேண்டும் என்கிற ஆர்வத்தில் இன்னும் சில உப கோட்டங்களில் சில அதிகாரிகள் சுதந்திர காலத்து முன் இருந்த பிரிட்டிஷ் அதிகாரிகள் போல் GDS ஊழியர்களை மிக அர்பமாக நடத்த தொடங்கி உள்ளார்கள் .
 என் அலுவலகத்திற்கு வராதே ! வெளியே போ ! நான் சொன்ன  50 கணக்குகளை பிடிக்காவிட்டால் நீ Officiating பார்க்க முடியாது என தன் கோபத்தை கொப்பளித்து இருக்கிறார் .
          மிரண்டு போன அந்த GDS ஊழியரோ நான் தீக்குளிக்க போகிறேன் என்றும் என் சாவாவது GDS ஊழியர்களின் கண்ணீரை  நிரந்தரமாக துடைக்கட்டும் என்று நம்மை அணுகினார் .உடனே நாமும் ,GDS கோட்ட தலைவர் திரு .பாலசிங் அவர்களும் மாலை நமது SSP அவர்களை சந்தித்து பேசினோம் .நமது SSP அவர்கள் சம்பந்தப்பட்ட ASP அவர்களிடம் Proper Guidelines கொடுப்பதாக உறுதி கூறினார்கள் .
 வேட்டை நாய் முயலை விரட்டுவதை போய் GDS ஊழியர்களின் இரத்தத்தை ருசி பார்க்க துரத்தலாமா  !
          மனித  பிறப்பில் ஒரு வஞ்சிக்கப்பட்ட பிறப்பு அஞ்சல் துறையில் ED என்ற பிழைப்பு ..கூலி தொழிலாளியை வீட  மிக கேவலமான ஊதியம் .
அரசு துறையில் பணியாற்றினாலும் அரை வயீறு நிரம்பாத ஒரு சாபக்கேடு -அவனும் இந்த  குறைந்த வருமானத்தை வைத்து கொண்டு மானத்தோடு வாழ விரும்புவது அவன் தவறா ?
      எத்தனை ஊழியர்கள் ASP களுக்கு டீ வங்கி கொடுக்கிறான் --இது சட்டத்தில் இருக்கிறதா ? அடிமை வேலை பார்ப்பதை அவன் சுயமரியாதை இன்னும் எத்தனை காலத்திற்கு ஏற்று கொள்ளும் ?
           ED களின்  உயிரோடு விளையாடா தீர்கள் !
 அன்பார்ந்த GDS தோழர்களே !
 எந்த அதிகாரியாவது டார்கெட் பிடிக்கவில்லை என்று ஒருமையில் பேசினாலும் /ஏசினாலும் உடனடியாக கோட்ட அலுவலகத்திற்கு எழுத்து பூர்வமாக எழுதிவிட்டு கோட்ட சங்கத்திற்கு தகவல் கொடுங்கள் .
        வாழ்த்துக்களுடன்   SK .ஜேக்கப்ராஜ் --------------------------------------------
                             

                                           முக்கிய செய்திகள் 
இந்த மாதம் அஞ்சல் ஊழியர்களுக்கான ஊதியம் 01.04.2016 அன்று பழைய முறையில் (Pay Roll ) வாங்கி கொள்ளலாம் .என CPMG அலுவலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது .

நம்முடைய மாநில சங்க  கடிதத்தின் அடிப்படியில் , எதிர்வரும் 1.4.2016 அன்று FINACLE  சரிவர  இயங்காத நிலையில், ஊழியரின்  ஊதியம் பணப் பட்டுவாடாவாக செய்திட உத்திரவு பெற்றுள்ளோம். கடந்த ஆண்டு போல அல்லாமல் விரைந்து முடிவெடுத்த  நம்முடைய  CPMG  அவர்களுக்கு நம்முடைய  நன்றி.  ஓய்வூதியர்களுக்கான முடிவினையும் விரைந்து எடுத்திட  வேண்டுகிறோம்..
--------------------------------------------------------------------------------------------------------------------------
தீராத நோய் !தீர்த்தத்தா ல் குனப் படுத்த  முயலுகிறது அஞ்சல் வாரியம்                         
                          CBS BUSINESS CONTINUITY PLAN ஒரு தற்காலிக ஏற்பாடே !
பொதுமக்களை திருப்திப் படுத்த , ஊழியரை ஏமாற்ற இது ஒரு கண்துடைப்பு  நாடகமே ! 

FINACLE  வேலை செய்யாதபோது இது ஒரு தற்காலிக  ஏற்பாடே ! "பகாளா பாத்" என்ற பெயரில் ஏற்கனவே உள்ள பழைய சோற்றில் தயிர் ஊற்றி தாளிதம் செய்து  கொடுப்பது போலத்தான். "DAY END" என்பது  END OF DAY " ஆனது போலத்தான் இதுவும். 

POWER CUT நேரத்தில் நாம் சாதாரணமாக DEPOSIT வாங்கி  வைத்து மின்சாரம் வந்தவுடன் ஏற்கனவே  SANCHAY POSTஇல் போடுவது போலத்தான் இதுவும். தனித் தனியே செய்திடாமல் XL FORMAT இல் UPLOAD செய்திட வசதி. DEPOSIT  வாங்குவதாக பத்திரிக்கைகளுக்கு செய்தி கொடுத்து நிர்வாகம் பொதுமக்களை  ஏமாற்றலாம். அவ்வளவே. WITHDRAWAL    நிச்சயம்  செய்ய முடியாது . ஏனெனில் BALANCE தெரியாது. 

இலாக்கா உயர்மட்ட அதிகாரிகள் கூறியபடி, புதிதாக இரண்டு SERVERகள் நிறுவப்பட்டு செயல்பாட்டிற்கு வந்தால் மட்டுமே இதில் உரிய   முன்னேற் றத்தை எதிர்பார்க்கலாம். இதற்கான வேலைகள் நடந்துகொண்டு இருப்பதாக உயர்மட்ட அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர். இந்தப் பிரச்சினை யைத் தாண்ட சில நாட்கள் ஆகலாம். இல்லையேல் வேலை நிறுத்தம் ஒன்றே வழி.

BCPயின் விளக்கம்  கீழே பார்க்கவும்.
=======================================================================
CBS Business Continuity Plan (BCP) DOCUMENTS

Q. What is BCP?

BCP is an alternative to accept some transactions from the customers when Finacle Application will not be accessible in all CBS Post Offices. 

 Q. When BCP is to be invoked?

BCP will be invoked through an order issued by F.S. Division of Postal Directorate to CEPT Team to enable special BCP Menus.

Q LIST OF transactions which can be accepted during BCP

Following type of transactions can be accepted during BCP:-
(1) Deposits in Savings Account.
(2) Deposits in RD Account opened and operated directly (not through MPKBY Agents)
(3) Deposits in PPF Accounts.

Q. Procedure for accepting transactions during BCP:-


¨ When mail is received from CEPT Team/Circle SPOC regarding use of BCP, deposit transactions by cash are to be accepted in Savings Accounts, RD Accounts (other than opened by MPKBY Agents) and PPF Accounts standing in the same post office (no Intersol transaction).


¨ On the Deposit Form (Pay-in-Slip), customer should be asked to write his/her mobile number or landline Number and last balance.


¨ While accepting cash, no entry should be made in Passbook but counterfoil of Deposit Form should be given to customer duly date stamped and signed by PA.


¨ Account number and amount deposited should be entered in Excel Format attached with this mail and also given in below.


¨ In the Excel sheet, scheme can be selected either as SB or Rd or PPF. After completion of data entry of transactions, print out of the excel file should be taken.


¨ When Finacle Access is restored or counter hours are over, click on “Generate File” in the excel format.


¨ It will create a .txt file showing scheme type i.e SB or RD or PPF, date in DDMMYY format and total amount of transactions in D/. 


¨ After this step, while browsing in the relevant menu, this file should be uploaded in the relevant menu as shown in the below screen shots. It is to ensured that only that day's file is uploaded by confirming date and total amount from the file name.


¨ Supervisor has to verify these transactions by using menu HTV.


¨ After verification, these transactions would appear in relevant LOT and consolidation.


¨ Report of success and rejected records can be seen from reports in HPR. If any transaction is rejected during upload, Deposit Slip of that transaction should be kept separately and customer should be contacted over phone (phone number written on the deposit slip).


¨ Cash of these transactions should be kept out of account alongwith vouchers.


¨ As and when customer comes, corrections should be got done in the Deposit Slip and transaction along with cash should be accounted for in Finacle.Monday, March 28, 2016

                                              முக்கிய அறிவிப்பு
நமது மாநில செயலர் தோழர் J  .ராமமூர்த்தி அவர்களின் வேண்டுகோளை ஏற்று நமது கோட்ட சங்கத்தின் 43 வது கோட்ட மாநாடு 01.05.2016  மே தினம் அன்று சிறப்பாக நடைபெறும் .நமது .மாநிலசெயலர் பங்குபெறுகிறார் .மற்றும் நமது முன்னாள் தலைவர்கள் திரு S .சௌந்திர பாண்டியன் (Accounts officer Rted )
தோழர் .T.வெங்கட்ராமன் உள்ளிட்ட தோழர்கள்  பங்கு பெறுகிறார்கள் என்பதனை மகிழ்வோடு தெரிவிக்கிறேன் .   

NFPE
ALL INDIA POSTAL EMPLOYEES UNION , GROUP ‘C’
TIRUNELVELI DIVISIONAL BRANCH, 
TIRUNELVELI--627002

                               
                                                                                  Dt. 28.03.2016
NOTIFICATION

Notice under  Article 48 of the Constitution of All India Postal Employees Union, Gr.C, read with  article 45 ,  is hereby  given that the 43th Divisional Conference of  this union will be held  at Palayamkottai  HPO premises on  Sunday, the  1 st may 2016  at 10.00 AM. Under the presiden ship of Com A.Athimoolam President.


The following shall be the agenda for the Branch Conference.

1. Submission of  Biennial report.
2. Submission of  Audited Accounts.
3. Organisational Review.
4. Election of office bearers.
5. Election of delegate  to Circle/ All India Conference.
6. Appointment of Auditor.
7. Any other item with the permission of the Chair.


                                                                                   /S.K.JACOBRAJ/    
                                                                                    Divisional Secretary
                                                                                     AIPEU GR. C,
                                                                              Tirunelveli Divisional Branch  
                                                                                    Tirunelveli-627002

Copy to:

1. The Divisional President, AIPEU GR.C, Tirunelveli Division, Tirunelveli 627004.
2. The Circle Secretary, AIPEU GR. C,  TN Circle  at Thenampet ., Chennai 600 018.
3. The General Secretary, AIPEU GR.C , CHQ at Dada Ghosh Bhavan, New Patel Road,
    New Delhi 110 008.
4. The Sr. Superintendent of Pos.,Tirunelveli Division, Tirunelveli 627002.
5. All members of Tirunelveli Divisional  Branch.
6. Notice Board.


அன்பார்ந்த தோழர்களே !
   29.03.2016 அன்று நடைபெறும் மாதாந்திர பேட்டியில் நாம் விவாதிக்க இருக்கும் பிரட்சினைகள் உங்கள் பார்வைக்கு ...
.
NFPE
ALL INDIA POSTAL EMPLOYEES UNION GROUP ‘C’ UNION,
TIRUNELVELI DIVISION,
TIRUNELVELI 627 002.

No PIII/Dlgs     dated      at    Tirunelveli  627 002           the    26.03.2016

To

The S r.  Supdt of Post Offices,
Tirunelveli Division,
Tirunelveli 627 002.

Sir,

Sub;-Monthly meeting subjects –reg.

 The following new subjects may kindly be included for discussion in the above meeting.

1.Request to supply of lazar printers to all needy offices.(eg)alredy requested for High grounds.

2.Request to supply of S type chair to SPM Melapalayam and PA Melapalayam

3.Request to delete the name of sri.Ganapathy PA Kalakadu,since he has not completed tenure.He has worked as  LRPA From 2013 to 2016

4.In the RT  Notification the following may be added/corrected
  (a) Maharajanagar PA Vacancies may be noted as Two  instead of OnePA.
 (b) At Thatchanallur SPM  post is vacant instead of PA
( c) APM (SB) TIRUNELVELI HO to be added.

5.Request to supply one small size cash counting machine to all SOs having more than two counters and one counting machine to two counters at All HOs.

6.Request to supply boards indicating non working of finacle at required time at SOs/HOs to the public place to avoid complaints.

7.Request to passing of pending T.A bills

8.Request to re-build the demolished gents toilet at Tirunelveli HO.

9.Request to issue ordersfor [posting of Tresurers since it is pending for a long time.

10.Request to train all PA s in CBS as per the postal training and policy.

11.Request to follow  uniform procedure in deputing PAs in our division

           The following official will attend the meeting

1.Shri.S.K.JACOBRAJ Divisional Secretary&PA Tirunelveli  HO

2.ShriC.Vannamuthu Asst sec &APM Tirunelveli HO

3.Shri.R.V.Thiyagarajapandiyan PA Kadayam Asst Sec.Ambasamuthiram.                                    
.

                                                            Thanking You,
                                                                                                Yours faithfully,
                                                                                                (S.K.JACOBRAJ)

                                                                                                Divisional Secretary.
----------------------------------------------------------------------------------------------------------------

Sunday, March 27, 2016

அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே !
        வணக்கம் .26.03.2016 அன்று பாளையில் நடைபெற்ற கோட்ட சங்க செயற்குழு  முடிவுகள் .
 1.நெல்லை கோட்ட சங்கத்தின் 43 வது கோட்டமாநாடு 17.04.2016 அன்று பாளையில் நடத்துவது .
2.மாநாட்டு நன்கொடையாக உறுப்பினர்களிடம் .குறைந்த பட்சம் ரூபாய் 100 வசூலிப்பது .
3.CBS /CIS பிரச்சினை குறித்து மாநிலசங்கம் அறிவிக்கும் வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்துவது என்றும் தீர்மானிக்க பட்டது .
4.சுழல் மாறுதல் 2016 குறித்து விவாதிக்கப்பட்டு நடப்பில் இருக்கும் சேவை கிரம பட்டியல் (Divisional Gradation list ) படி  Tenure முடியும் ஊழியர்களின் சீனியாரிட்டி   வெளியிடப்பட்டுள்ளது .தோழர்கள் தங்கள்  சீனியாரிட்டியை 
பார்த்துகொள்ளலாம் 
பெயர்                                         DGL.NO .                    பெயர்                                   DGL NO      
S.SUBRAMANIAN 7
S.RAMALAKSHMI 181
R.RAMATHAAL 19
O.MOOKIAH 185
S.MEENATCHI 42
S.DEVIESAKKIAMMAL         192  
C.NAMACIVAYAMOORTHY 45
M.SABARIMANIKANDAN 198
M.SANKARALINGAM 51
S.BARATHI 199
C.VANNAMUTHU 54
S.RAJALAKSHMI 201
N.MEENAKUMARI 65
C.JEYADOSS 202
P.JOHNSON 71
C.SIVAKUMAR 207
K.EZHILARASI 72
R.SUSEELA 210
K.CHELLAPANDI 82
K.KUTHALINGAM 215
S.VALLINAYAGAM 101
M.NAMATCHIVAYAM 222
M.AHAMED SHERIFF 106
V.POOMANICHELLATHAI     239
V.SARAVANAN 117
M.RAMESH 241
V.RAMASUBRAMANIAN 122
S.SUBBULAKSHMI 242
S.SANKARANARAYANAN 123
C.ULAGAMMAL 247
A.ALFRED JOE 131
P.N.JEYALAKSHMI 250
V.VIJAYALAKSHMI 137
S.VENKADAKRISHNAN         255
D.KALAVATHY 138
G.GANAPATHY 279
N.S.JAMUNA 139
S.GANESHSANKARAN          281
A.PARITHIMALINI 142
A.AMALAREENA 282
S.CHIDANBARAM 146
L.SIVASANKARI 293
P.DURAIRAJ 147
S.KARPAGAM 295
A.SENTHILNAYAKI 149
N.PADMAVATHY 296
A.MOHIDEEN MERAN 160
P.VIVEKANANDAN 297
B.KUMARI 178
V.CHELLAMMAL  299

                      வாழ்த்துக்களுடன்  SK .ஜேக்கப்ராஜ்  கோட்ட செயலர்  
--------------------------------------------------------------------------------------------------------------------------

Saturday, March 26, 2016

சில இடங்களில் பொதுமக்கள் நம்மை பரிதாபமாக பார்கிறார்கள் ---
சில நேரங்களில் வாடிக்கையாளர்கள் வருத்தப்பட்டு நிற்கிறார்கள் --
ஆனால் எல்லாநேரமும் நாம் பாடும் பல்லவியை கேட்டு கொண்டு இருப்பார்கள் என தப்பு கணக்கு போடாதீர்கள் --
நிர்வாகம் செய்ய வேண்டிய வேலையை தொழிற்சங்கம் சங்கம் செய்கிறது .
இது கோவை கோட்டத்தில் .

                                                              செய்திகள் 
அன்பார்ந்த தோழர்களே !
                நமது கோட்ட மாதாந்திர பேட்டி 29.03.2016 மதியம் 2மணிக்கு நடைபெறுகிறது .ஏதேனும் Subjects இருந்தால் கோட்ட செயலரை தொடர்பு கொள்ளவும் .
         நமது கோட்ட சங்க செயற்குழு நாம் ஏற்கனேவே அறிவித்தபடி 26.03.2016 மாலை 6 மணிக்கு பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் நடைபெறும் .
---------------------------------------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------------------------------------------

Thursday, March 24, 2016

அன்பார்ந்த தோழர்களே !

                              கோட்ட சங்க செயற்குழு  -

-வாரீர் ! வாரீர் ! நல் ஆலோசனைகளை தாரீர் ! தாரீர் !
    
நாள் .26.03.2016    சனிக்கிழமை 
நேரம்--- மாலை 6 மணி 
இடம் --பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் 
தலைமை--- தோழர் A .ஆதிமூலம் அவர்கள் ( கோட்ட தலைவர் )
பொருள் -- 1. 43 வது  நெல்லை கோட்டசங்க மாநாடு நடத்துவது   சம்பந்தமாக   ...                           
                      2. சுழல் மாறுதல் (2016)குறித்து ....
                     3. கோட்ட அளவில்  தேங்கி கிடக்கும் பிரட்சினைகள் .....
                    4. இன்னும் பிற (தலைவர் அனுமதியுடன் )....

குறிப்பு ( நமது கோட்டத்தில் 1991 முதல் இளைய தோழர்கள் தொழிற்சங்க பொறுப்புகள்  எடுத்து சிறப்பாக நடத்தி வருகின்றனர் .அவர்களை தொழிற்சங்க பொறுப்புக்கு கொண்டுவந்து வழிகாட்டிய மூத்த தோழர்களை மாநாட்டில் கௌரவிக்க இருக்கிறோம் . ஆகவே தங்கள் பகுதியில் இருக்கும் முன்னாள் முன்னணி தலைவர்களின் விவரங்களை சேகரித்து வரவும் .)
15.03.2016                                  நன்றி 
பாளை                                                             மாநாட்டு வாழ்த்துக்களுடன் 
                                                                                         SK .ஜேக்கப்ராஜ் 
                                                                            கோட்ட செயலர் -நெல்லை 

                                          ஊதியக்குழு  செய்திகள் 
எம்பவர் கமிட்டி முன் ஊழியர் தரப்பு வைத்துள்ள கோரிக்கைகள் 


New Delhi: The Joint Consultative Machinery of central government employees--the forum for amicable settlement of grievances of the Central Government employees relating to their service matters--seems to have turned more reasonable and have narrowed down the charter of demands seeking review of the seventh pay panel recommendations.


In February, the employees' forum had decided to proceed on an indefinite strike from April 11, if their charter of 26 demands was not met.

The demands also included no privatization of government functions, no FDI in Railways and Defence and no corporatization of Defence Production Units and Postal Department.

As per reports the Empowered Committee of Secretaries headed by the Cabinet Secretary assured that fair consideration will be given to all points brought out by the Joint Consultative Machinery​ before taking a final view.

Following are the narrowed demands presented by the Joint Consultative Machinery​ before the Empowered Committee of Secretaries:

1. Revision of the minimum pay of Rs. 18000 p.m. recommended by the Commission, taking into account commodities prices as on 01.07.2015 and appropriately factoring in for social obligations & housing.

2. Withdraw the New Pension Scheme. The Centre made made the NPS mandatory for employees who joined the service on or after January 1, 2004. It has since been adopted by most state governments also.

3. To re-examine the relevance of allowances and interest free advances in certain departments before taking a decision.

4. Should increase Fixed Medical Allowance from the existing Rs 500 per month to Rs 2000 per month, as large number of cities are not covered under central government health scheme.

5.Should discouraged outsourcing of services breed inefficiency and contractors exploit contract workers.

6. Enhancement in contribution towards Group Insurance Scheme has reduced the actual increase in take home salary considerably. If the rates are to be raised, the Government should bear the insurance premium

7. The recommendation regarding grant of only 80% of salary for the second year of Child Care Leave need not be accepted as this would deter women from availing of Child Care Leave, defeating the purpose of the welfare measure.

Annual increments be granted at the rate of 5% instead of existing 3% and increments may be granted on two dates i.e. 1 st of January and 1 st of July of every year against the current norm of granting of increment on 1 st July of every year.

9. The Commission’s recommendation of downgrading the Assistants of Central Secretariat for bringing in parity with their counterparts in the field offices is not appropriate.
10. Recommendation regarding Performance Related Incentive Scheme unacceptable as these could encourage favoritism.
                               இதர செய்திகள் 
ஊதியக்குழு அமுலாக்கம் மே  21 க்கு பிறகுதான் அறிவிக்கப்படுமாம் 
6 சதம் பஞ்சப்படி உயருகிறது 
-------------------------------------------------------------------------------------------------------------

Wednesday, March 23, 2016

                                                  வருந்துகிறோம் 
தோழர் வைகுண்ட பெருமாள்(62) GDS Packer  பெருமாள்புரம் அவர்கள் 22.03.2016 அன்று இரவு மரணமடைந்தார்கள் என்பதனை வருத்தத்தோடு தெரிவித்து கொள்கிறோம் .அன்னாரது இறுதி சடங்கு இன்று 23.03.2016 (பாளையம்கோட்டை சம்பகடைதெரு)  பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் .
    அன்னாரது ஆன்மா அமைதியுற இறைவனை வேண்டுகிறோம் '
                                      SKJ நெல்லை 
-----------------------------------------------------------------------
                                      இதர செய்திகள் 
 இந்த மாத மாதாந்திர பேட்டி 29.03.2016 அன்று நடைபெறுகிறது .SUBJECTS இருந்தால்  26.03.2016 நமது செயற்குழுவில் அல்லது அதற்கு முன்னரே தெரிவிக்கவும் .
-----------------------------------------------------------------------------------------------------------------
 ஏப்ரல் 14 வியாழன் DR .அம்பேத்கார் அவர்களின் பிறந்தநாள் விடுமுறைதினமாக அறிவிக்கப்பட்டுள்ளது 
----------------------------------------------------------------------------
         தோழர்களின் முக்கிய கவனத்திற்கு 
  நெட் கிடைக்கவில்லை என்பதற்காக நெடுநேரம் இரவில் தங்க வேண்டிய அவசியம் இல்லை என CPMG அலுவலகத்தில் இருந்து அனைத்து கோட்ட அலுவலகத்திற்கும் தாக்கீது அனுப்பட்டுள்ளதாக மாநில செயலர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் .அவரது அறிக்கை இதோ    

நேற்றைய தேதியில்  நம்முடைய  மாநிலச் சங்கத்தின் மூலம் பேசிய பின்னர்  CPMG  அவர்கள்  FINACLE  SLOWNESS  காரணமாக எந்த ஒரு ஊழியரையும்  இரவு  காத்திருப்பு  செய்யக்கூடாது என்று  கீழ் மட்ட அதிகாரிகளுக்கு  ஈமெயில்  மூலம்  அறிவிக்கை  செய்துள்ளார். எனவே VOUCHER  POST  செய்ய  இயலவில்லை எனின்  உரிய அறிவிப்பு செய்துவிட்டு  அவரவர்கள்  இல்லம்  திரும்பலாம். மறுநாள்  காலை அந்த வேலையை தொடரலாம்.  கோட்ட அதிகாரிகள் செல்லக் கூடாது  என்று கூறுவார்களேயானால்   தங்கள்  பகுதி செயலர் மூலம்  மாநிலச் சங்கத்திற்கு  உடனே  தெரிவிக்கவும்.  உரிய  நடவடிக்கை உடன்  மேற்கொள்ளப்படும்.

 ஆகவே  இன்று முதல் மாலை 5 மணிக்கு மேல் NET கிடைக்கவில்லை என்றால்  9442123416 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் . 

                             தானாய் எல்லாம் முடியும் என்றால் 
                             முடியாது ..
                              கண்ணை மூடி திறந்ததும் -- விடியும் 
                              என்றால் விடியாது 
                                       தோழமையுடன்  SKJ 


Tuesday, March 22, 2016

                                     வெல்லட்டும் !  வெல்லட்டும் !
 மாநில சங்கமே! முடிவெடுங்கள் !
 விரைந்து முடிவெடுங்கள் !
தொழிலாளி கையேந்தும்பிச்சைக்காரன் அல்ல ! 
இன்போசிஸ்  நமக்கு எஜமானும் அல்ல !

         அடிம(ப )ட்ட ஊழியர்களின் உணர்வுகளை ஏற்று உடனடியாக மாநில சங்க நிர்வாகிகள் கூட்டத்தை 24.03.2016 அன்று சென்னையில் கூட்டிய மாநில செயலர் தோழர் J .ராமமூர்த்தி அவர்களுக்கு நன்றிகள் ..கூட்டத்தில் நல்லதொரு முடிவினை எடுக்க வாழ்த்துகிறோம் .

குறிப்பு  :  எந்த ஊழியரும் இரவு நேரத்தில் காத்திருக்க வேண்டாம் என CPMG அனைத்து கோட்ட அதிகாரிகளுக்கும் உத்தரவு  கொடுத்துள்ளார்கள் .அந்தந்த கோட்ட செயலர்கள்  இதை உறுதிபடுத்தி ஊழியர்களை  மன  உளைச்சலில் இருந்து பாதுகாப்போம் .

நேற்றைய தேதியில்  நம்முடைய  மாநிலச் சங்கத்தின் மூலம் பேசிய பின்னர்  CPMG  அவர்கள்  FINACLE  SLOWNESS  காரணமாக எந்த ஒரு ஊழியரையும்  இரவு  காத்திருப்பு  செய்யக்கூடாது என்று  கீழ் மட்ட அதிகாரிகளுக்கு  ஈமெயில்  மூலம்  அறிவிக்கை  செய்துள்ளார். எனவே VOUCHER  POST  செய்ய  இயலவில்லை எனின்  உரிய அறிவிப்பு செய்துவிட்டு  அவரவர்கள்  இல்லம்  திரும்பலாம். மறுநாள்  காலை அந்த வேலையை தொடரலாம்.  கோட்ட அதிகாரிகள் செல்லக் கூடாது  என்று கூறுவார்களேயானால்   தங்கள்  பகுதி செயலர் மூலம்  மாநிலச் சங்கத்திற்கு  உடனே  தெரிவிக்கவும்.  உரிய  நடவடிக்கை உடன்  மேற்கொள்ளப்படும்.
                                         வாழ்த்துக்களுடன் 
                  SK .ஜேக்கப்ராஜ்  செயலர் நெல்லை 
--------------------------------------------------------------------------

                                           திருநெல்வேலி ATM திறப்பு விழா 
நமது SSPதிரு .VP சந்திரசேகர்  .நெல்லை போஸ்ட்மாஸ்டர் களங்கமில்லா கடற்கரை  ,வண்ணமுத்து .ரசூல் ,வடிவேல் மாலை ,உள்ளிட்டோர் 

 முதல் பரிமாற்றத்தை செய்பவர் நமது மூத்த தோழியர் தெய்வராணி 

                                                புரட்சி வெடிக்கட்டும் 

      கடந்த எட்டு நாட்களாக Finacle  வேலை செய்யவில்லை .ஊழியர்கள் வீடு திரும்ப இரவு எட்டு மணி என்பது சர்வ சாதாரணமாக போய் விட்டது .கோட்ட அலுவலகத்தில் முறையிட்டால்  சென்னையை கை காட்டு கி றார்கள் .சென்னையை கேட்டால் டெல்லியை சொல்கிறார்கள் .அவரவர் தனக்கு அடுத்தநிலையில் உள்ளவரை கை  கை காட்டு கி றார்கள் .ஊழியர்களோ கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் .தொழிற்சங்கங்கள் என்ன செய்கிறது என கேட்கிறார்கள் .மாநில சங்கம் கடிதம் எழுதியிருக்கிறது என்றால் ஒருவிதமாக நகைகிறார்கள் .எப்படி மீனவர் பிரட்சினையில் மாநில மாநில அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதை மாதிரியா ?என எதிர் கேள்வி    கேட்கிறார்கள் .
                                    தேவையில்லை  .அனுதாபம் 
 மாநிலசங்கம் தனது வலைத்தளத்தில் பக்கம் பக்கமாக நம் அவலங்களை எழுதுகிறது .கடிததுக்கு மேல் கடிதம்   எழுதுகிறது .எங்கள் எதிர்பார்ப்பு  ஆறுதல் அல்ல --ஆர்பரிக்கும் போராட்டம் .போராட்ட அறிவிப்பிற்கு பிறகு பிரட்சினைகள் கூடியிருக்கி றதே தவிர குறைய வில்லை 
                            கேரளாவை  பாருங்கள் 
    கேரளா இடுக்கியில் அஞ்சல் ஊழியர்கள் 5 மணிக்கு மேல் அலுவலகத்தில் இருக்க மாட்டோம் என முடிவெடுத்து போரட்ட பாதையை அறிவித்துள்ளனர் .
                           களம் சாதகமாக உள்ளது 
          .ஊழியர்களின் உணர்வை மதித்து Infoysis நிறுவனம் செய்துவரும் முறைகேடுகளை வெளி கொண்டுவரவும் .ஒரு 2G  போல் CBS லும் பல பரிமாற்றங்கள் நடந்துள்ளதை வெளி கொணரவும் மாநில சங்கம்  விரைந்து முடிவெடுக்க வேண்டும் என எதிர் பார்கிறோம் .
 செத்த பிறகு ஊழியர்களுக்கு மலர்மாலை வைப்பதை விட ,நித்தம் ,நித்தம் செத்து கொண்டிருக்கும் ஊழியர்களை காப்பாற்றுங்கள் 
                             --------------------  ஜேக்கப்ராஜ்  நெல்லை ----------------------
   

Monday, March 21, 2016

                                                போஸ்டல்  ATM  
பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் 21.03.2016 அன்று போஸ்டல் ATM வாடிக்கையாளர்களின் பயன்பாட்டிற்கு அர்பனிக்க பட்டது .இந்நிகழ்வில்
நெல்லைகோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் திரு VP .சந்திரசேகர் அவர்கள் தலைமை  தாங்கி நடத்தி வைத்தார்கள் .அருகில் திரு .N .கண்ணன் Postmaster  ,திரு .A .சொர்ணம் SP PSDதிருநெல்வேலி 
M .வீரபத்திரன் ASP (OD)  N .குமரன் ASP பாளையம்கோட்டை   Sunday, March 20, 2016

இன்னும் பொறுமையாய் இருந்தால் பொறுமைக்கு ஏதம்மா பெருமை !
இது மனோகரா  சினிமா வசனம் --
நெட் கிடைக்கவில்லை என்று  தினமும் வாடிக்கையாளர்களை சாதாரனமாக  திருப்பி அனுப்பிய மும்பை மட்டுங்கா   அஞ்சலகத்தை பாரீர் !பாரீர் !
                                         மட்டுங்கா  மட்டும் தானா ?
     
  அஞ்சல் வாரியமே! பல கோடிக்கு இன்போசிஸ் கம்பெனியோடு போட்ட ஒப்பந்தம் என்னவானது ? இன்போசிசை தட்டிகேட்க தயக்கம் ஏன் ? மயக்கம் ஏன் ?ஏன் ? ஏன் ?
                         -------       ஜேக்கப் ராஜ் கோட்டசெயலர் நெல்லை  ------------------
                                               
தோழர் P .சேதுராமலிங்கம் GDSMD தச்சநல்லூர் அவர்களின் பணிஓய்வு விழா 19.03.2016 அன்று  போஸ்ட் மாஸ்டர் தோழர் S .சங்கரலிங்கம் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .
கோட்ட தலைவர் A .ஆதிமூலம் அவர்கள் பொன்னாடை போர்த்துகிறார்கள் 
  தச்சநல்லூர் அலுவலக ஊழியர்கள் சார்பாக நினைவு பரிசு வழங்கபடுகிறது  

      GDS சங்க நிர்வாகிகள்  தோழர்கள் ஞானபாலசிங் ,கால பெருமாள் 
                                                          SKJ அவர்களின் சிறப்புரை 
  ஊழல் இல்லா துறையில் பணியாற்றுவது பெருமை ,உரிமைகாக்கும் இயக்கத்தில் இருப்பது பெருமை, கேடர் பாகுபாடுஇன்றி  செயல்படுவது பெருமை ,இதையெல்லாம் தாண்டி அண்ணனை  வாழ்த்த வாய்ப்பு கிடைத்தது  பெருமைக்கே பெருமை ...........

 தோழர்கள் ஆனந்தராஜ் ,ராம்குமார் .பொன்ராஜ் ஆகியோருடன் SKJ