...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, March 31, 2021

 தோழர் தங்கமணி SPM முன்னீர்பள்ளம் அவர்களின் பணி நிறைவு விழா 

அங்கும் இங்கும் என சென்றாலும் 

மீண்டும் தாய் கோட்டத்தோடும் 

தாய் சங்கத்தோடும் இணைந்திட்ட 

தங்கமணி வாழ்கவே !

புலம் பெயர்ந்த நாட்களில் -NELLAI NFPE யின் 

புகழ் பாடி மகிழ்ந்தவர் 

எத்தனை சோதனைகள் வந்திட்டபோதிலும் 

தயங்காமல் சந்தித்தவர் --தன் விருப்ப மாறுதலில் 

சத்தமில்லாமல் சாதித்தவர் 

கவலைகள் சிறிதுமின்றி -தன் 

அலுவல்களை முடித்தவர் 

தங்களின் பணிஓய்வு காலங்கள் 

சிறக்க வாழ்த்துகிறோம் 

தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை  தோழர் சுவாமிநாதன் SSRM அவர்களின் பணி நிறைவு சிறக்க வாழ்த்துக்கள் 

மானாமதுரை தந்திட்ட மற்றுமொரு 

மகத்தான அதிகாரி தோழர் சுவாமிநாதன் 

கோட்ட அதிகாரியாக பொறுப்பேற்றாலும் 

கோட்ட செயலரை போல 

ஊழியர் நலன் காத்தவர் 

மனிதாபிமானம் மனசாட்சி எனும் 

அளவுகோலை கையில்வைத்துக்கொண்டு 

ஆட்சி செய்தவர் 

எளிமையும் எதார்த்தமுமாய் எப்பொழுதும் 

காட்சி தந்தவர் .

தன்னடக்கமும் புன்சிரிப்பும் -அவர் 

புகழை மேலும் அலங்கரித்தன 

தென்மண்டலத்தில் ஆளுமைமிக்க 

அதிகாரியாய் --தோழமை மிக்க 

நண்பராய் மிச்சமிருந்த அதிகாரிகளில் 

நீங்களும் ஒருவர் 

தங்களின் பணி நிறைவு நாட்கள் 

என்றும் சிறக்க வாழ்த்துகிறோம் 

வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை Tuesday, March 30, 2021

 அன்பார்ந்த  தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

*GDS TO போஸ்ட்மேன் தேர்வு முடிவுகள் குறித்த கமிட்டி கூடுவது குறித்து நேற்றுவரை தகவல் இல்லை .நிதியாண்டின் இறுதியென்பதால் ஏப்ரல் 1 ம் தேதிக்கு பிறகு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .நமது கோட்டத்தில் காலியிடங்கள் GDS TO POSTMAN --  UR 4 SC -1  MTS TO POSTMAN --VACANCY --3

*GDS TO PA 20.12.2020 மற்றும் 28.03.2020 தேர்வில் நிரப்பப்படாத ST பிரிவு காலியிடங்கள் 13 பதவிகள் நிரப்பிட அதற்கான செலெக்ஷன் உத்தரவுகள் வந்துள்ளன .இவைகள் எல்லாம் கடந்தகாலங்களில் கனவிலும் எவரும் கண்டிராத காட்சிகள் ..நமது தொழிற்சங்கத்தின் தொடர்முயற்சியால் தமிழகம் முழுவதும் உள்ள PA /SA  மற்றும் போஸ்ட்மேன் /MTSபதவிகள்  நிரப்பட்டுவருகின்றன என்பதனை நாம் பெருமையோடு சொல்லிக்கொள்வோம் 

*நமது கோட்ட சங்கத்தின் தொடர் வற்புறுத்தல் கோட்ட நிர்வாகத்தின் உடனடி தலையீடு காரணமாக முனைஞ்சிப்பட்டி SO NET ஒர்க் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்துள்ளது ..இதுவரை பொறுமை காத்த அண்ணன் ரகுமாதவன் அவர்களுக்கு கோட்ட சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் 

*நாளை பணிஓய்வு பெறுகின்ற தோழர் தங்கமணி SPM முன்னீர் பள்ளம் அவர்களுக்கு NELLAI NFPE யின் சார்பாக வாழ்த்துக்கள் ..

நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

Friday, March 26, 2021

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

இந்தமாதம் நமது கண்காணிப்பாளர் அவர்களுடனான மாதாந்திர பேட்டி ஏப்ரல்  மாதத்தில்  நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .அதுவரை நமது பிரச்சினைகளை குறித்து நாம் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்ல தோழர்கள் கொடுக்கின்ற பிரச்சினைகளை மாதாந்திர பேட்டி வரை தாமதிக்காமல் உடனுக்குடன் கடிதத்தை எழுதிட முடிவெடுக்கப்பட்டுள்ளது .அதன்படி முதற்கட்டமாக தச்சநல்லூர் பணகுடி மற்றும் முனைஞ்சிப்பட்டி அலுவலக பிரச்சினைகள் குறித்து நிர்வாகத்திற்கு நாம் எழுதிய கடிதங்கள் உங்கள் பார்வைக்கு -..                                   

                                                           NFPE

ALL INDIA POSTAL EMPLOYEES UNION GR- C –

TIRUNELVELI DIVISIONAL BRANCH ,

TIRUNELVELI – 627 002.

_____________________________________________________________________

No:                                                       dated at Palayankottai – 627 002 the 26.03.2021

To

      The Sr., Supdt of Post Offices,

       Tirunelveli  Division,

       Tirunelveli – 627 002.

 

Respected Sir,

                       Subject :  Dequarterisation of  Thachanallur SO reg.

                       Ref       :PMG SR VR dtd 05.02.2021 

                       The Thachanallur SO is functioning in a rental building with the establishment of  1SPM + 2Pas + 2Pmen + 2GDS officials and a separate quarters is available for the SPM on the first floor.

                       But the space provided for the office use is much inadequate . The counter arrangement is too congesting to accommodate more number of  customers visiting this office daily either for  Postal transactions or Adhar related works. The public hall  is very small that no proper waiting arrangements can be made even for Senior citizens. Also there is no enough space for the Delivery staff too and they find more difficult to do beat sorting daily and no space for placing system,printer and  no space for keeping vouchers .

                     Hence in order to manage the space efficiently , the Delivery and Sorting  branch may please be shifted to the upstairs by dequarterising , as the quarters is also inadequate for a family to live in this present life style and there is acute water scarcity prevails during summer season.

                   It is requested to consider the above facts and arrange for the dequarterisation of  thachanallur SO at the earliest please.

Palayankottai ,                                                                                  Yours faithfully,

26..03.2021.

                                                                                                      ( S. K. JACOB RAJ),

                                     ---------------                                           ----------------------

               NFPE

ALL INDIA POSTAL EMPLOYEES UNION GR- C –

TIRUNELVELI DIVISIONAL BRANCH ,

TIRUNELVELI – 627 002.

_____________________________________________________________________

No:                                                       dated at Palayankottai – 627 002 the 26.03.2021

To

      The Sr., Supdt of Post Offices,

       Tirunelveli  Division,

       Tirunelveli – 627 002.

 

Respected Sir,

                       Subject :  attachment of one PA to Panagudi and Munanjipatti sos-reg

                       Ref       :   Previous monthly meeting subjects     

 

This union wish to bring the following  few lines for favour of necessary action please

1. A PA who was posted @ Munanjipatti SO has got transferred to Chennai region and no one is posted yet.

 2.A PA posted at Panagudi was not yet relieved from Dindugul

Since the transactions in these offices  are much heavy, it is not able to complete the works one hand short regularly

Hence it is requested that one PA may be deputed immediately  to each of this office in order to manage the shortage of staff.Also it is requested that these two PA vacant posts may please be listed  in the ensuing RT2021 .

Palayankottai ,                                                                                  Yours faithfully,

26..03.2021.

                                                                                                      ( S. K. JACOB RAJ),

                                                                                

                                                                 

.

 

Monday, March 22, 2021

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                        நமது கோட்டத்தில் எழுத்தராக பதவிஉயர்வு பெற்ற தோழர்களில் கிட்டத்தட்ட 35 ஊழியர்க்ளுக்கு மேல் இன்றளவும் INDUCTION பயிற்சிஅளிக்கவில்லை .இதனால் எழுத்தராக பதவி ஏற்றும் அவர்களின் சேவையை முழுமையாக பயன்படுத்திட முடியவில்லை .ஆகவே அவர்களுக்கு விரைந்து PA INDUCTION பயிற்சிகளை கொடுத்திட நடவடிக்கை எடுக்கக்கோரி கோட்டநிர்வாகத்திற்கும் நமது மாநிலச்சங்கத்திற்கும் நாம் எழுதிய கடிதம் 

        NFPE

ALL INDIA POSTAL EMPLOYEES UNION –GR-C

TIRUNELVELI DIVISIONAL BRANCH

TIRUNELVELI—627002

No.P3 org  / dated at Tirunelveli - 627002 the  22.03.2021

 

To

The Sr. Supdt. of Post Offices,

Tirunelveli Division

Tirunelveli-627002

Sir,

Sub : Request to take action to utilise the newly promoted PA in a full-fledged manner - reg.

We wish to bring to your kind notice that around 35  newly promoted PAs from GDS/Postman cadre are kept idle on the ground that the officials cannot be used for financial counters/works without imparting training. Though such high number of PAs are available work load at all levels are not reduced on the other hand.

In this regard, we request the SSPOs to take action to

1. Impart training in the WCTC to all the officials as an interim measure or

2. No. of seats for online training may be increased.

We would request you to kindly look into the matter and ensure that the newly promoted PAs are optimally utilised.

                                                          Thanking you Sir

22.03.2020

Palayamkottai

                                                                                                                            Yours faithfully

[S.K.JACOBRAJ)]

 

 


Friday, March 19, 2021

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                                                        முக்கிய செய்திகள் 

*TA  பில்களுக்கான நிதி  மண்டல அலுவலகத்தால் அனைத்து கோட்டங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது .அதனை தொடர்ந்து நேற்றுமுதல் நமது  கோட்டத்திலும் நிலுவையில் உள்ள TA பில்கள் PASS பண்ணப்பட்டு வருகின்றன .இன்னும் 10 லட்சத்திற்கான பில்கள் சாங்க்ஷன் செய்யப்படும் .இதற்காக கூடுதல் எழுத்தர் டெபுடேஷன் அடிப்படையில் பாளையம்கோட்டையில் இருந்து  கொடுக்கப்பட்டுள்ளது .

*நமது நீண்டகால எதிர்பார்ப்புகளான மஹாராஜநகர் மற்றும் பெருமாள்புரம் அஞ்சலகத்தில் தபால்காரர்களுக்கு பணியாற்றிட கூடுதல் இடவசதி ஒதுக்கப்படவேண்டும் என்கின்ற அடிப்படையில் இந்த இரு அலுவலகங்களுக்கும் DE QUARTERISE செய்திட கோட்ட நிர்வாகத்தால் வரைவு திட்டங்கள் மண்டல அலுவலகத்திற்கு செல்ல முடிவெடுக்கப்பட்டுள்ளது 

*SURPLUS LGO ஊழியர்க்ளுக்கு சம்பந்தப்பட்ட கோட்ட /யூனிட் களில் இருந்து பயிற்சிக்கான உத்தரவுகள் இன்று வரும் என எதிர்பார்க்கப்படுகிறது .இதுகுறித்து திண்டுக்கல் மதுரை மற்றும் கோவில்பட்டி கோட்ட செயலர்களிடம் நாம் விரைந்து உத்தரவுகளை வழங்கிட  வற்புறுத்தும்படி  கேட்டுள்ளோம் .

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

Tuesday, March 16, 2021

 கருணை அடிப்படையிலான வேலை வழங்குவதில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மெரிட் குறித்து எழுப்பப்பட்ட  பல சந்தேகங்களுக்கு அஞ்சல் வாரியம் 03.03.2021 அன்று சில விளக்கங்களை வழங்கியுள்ளது 

*இதற்கு முந்தைய செலெக்ஷன் கமிட்டி (CRC) NOT RECOMMENDED என முடிவெடுத்த மனுவையும் 30.05.2013 கடிதத்தின் அடிப்படையில் மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளலாம் 

*.PA /SA பதவிகளுக்கு VACANCY இல்லை என்று REJECT செய்யப்பட்டவர்களுக்கு போஸ்ட்மேன் மட்டுமல்ல GROUP C பதவிகளில் ஒன்றான MTS பதவிக்கு கூட பரிசீலிக்கலாம் 

*.பழைய CRC யில் அடுத்த கமிட்டிக்கு பரிந்துரைக்கு அனுப்பட்ட மனுவினை புதிய RMPS அடிப்படையில் (01.10.2020-பிறகு CRC யில் பரிசீலிக்கலாம் 

*பழைய கமிட்டிகளில் NOT -RECOMMENDED மனுவினை மீண்டும் பரிசீலினைக்கு எடுத்துக்கொள்ளலாம் .இருந்தாலும் ரிஜெக்ட் செய்யப்பட்ட மனுவினை மீண்டும் ரிசீலினைக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது 

*ரூபாய் 9000இக்கும் குறைவான குடும்ப ஓய்வூதியம் பெறும் மனுதாரருக்கு மெரிட் புள்ளியில் முழுமையான 20 பாயிண்ட் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் 

*ஊழியரின் இறந்த தேதி அடிப்படையில் தான் மனுக்கள் கமிட்டிக்கு அனுப்பப்படும் 

*மாநில கமிட்டியில் நிராகரிக்கப்பட்டு நீதிமன்ற உத்தரவினால் பரிசீலனைக்கு எடுக்கப்படும் மனுக்கள் புதிய 01.10.2020 வழிகாட்டுதலின் அடிப்படையில் தான் பரிசீலிக்கப்படும் .

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                                                               முக்கிய செய்திகள் 

1.POSTINFO APP யின் புதிய பதிப்பில் உள்ள கூடுதல் வசதிகள் 

*PINCODE/மற்றும் POSTOFFICE விவரங்களை இனி OFFLINE மூலம் தெரிந்துகொள்ளலாம் 

*எப்பொழுதெல்லாம் சேமிப்பு திட்டங்களில் வட்டி மாற்றப்படுகிறதோ அவை தானாகவே மாறிவிடும் .VERSION மாற்ற தேவையில்லை 

*இன்சூரன்ஸ் (PLI /RPLI ) பிரிவுகளில் வயதினை கொண்டே கணக்கிடமுடியும் .இதற்கு முன்னர் பிறந்ததேதி அவசியமாக இருந்தது 

*புதிதாக ஏஜென்ட் லாகின் வசதி உள்ளது 

-------------------------------------------------------------------------------------------------------------

2.2014-2017 காலத்திற்கான LTC பயணத்தில் ஏர் இந்தியா டிக்கெட் தனியார் மூலமாக வாங்கியவர்க்ளுக்கு LTC சலுகைகட்டணம் பிடிக்கப்பட்ட தொகையினை மீண்டும் வழங்கிட மாநில நிர்வாகம் வழங்கிய புதிய தளர்வு உத்தரவுகள் 

*2014-2017 LTC பயணத்திற்காக AIRINDIA டிக்கெட் பிரைவேட் AGENCY மூலம் வாங்கப்பட்ட டிக்கெட் நிராகரிக்கப்பட்டு பல ஊழியர்க்ளுக்கு பிடிக்கப்பட்ட தொகையை ரெகுலரைஸ் செய்து மீண்டும் வழங்கிட 15.03.2021 அன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .இந்த பயணத்தின் போது பிடிக்கப்பட்ட EL ENCASHMENT தொகையும் வழங்கப்படும் .இதுகுறித்து யாராவது நிர்வாக தீர்பாயகத்தில் (CAT )வழக்கு தொடுத்திருந்தால் அவர்கள் இந்த புதிய தளர்வுகளை நீதிமன்றத்தில் தெரிவிக்கவும் ..இதற்காக கொடுக்கப்பட்ட தொகைக்கு பிடிக்கப்பட்ட PENAL INTREST தொகைகூட அதிகமாக பிடித்திருந்தால் அதையும் திருப்பி கொடுத்திடவேண்டும் ..இதனால் பல தோழர்கள் 2014-2017 காலகட்டத்தில் LTC சென்று பாதிக்கப்பட்டவர்கள் பயன்பெறுகிறார்கள் .இதுகுறித்து நமது மாநிலச்சங்கமும் பல்வேறு நிலைகளில் நமது CPMG அவர்களிடம் வலியுறுத்திவந்தது குறிப்பிடத்தக்கது .

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 


Monday, March 15, 2021

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

*நமது தமிழக NFPE தமிழ்மாநில சங்கத்தின் அடுத்தகட்ட ஆக்கபூர்வமான/தனித்துவமான  பணிகளில் ஒன்றான  எழுத்தர் தேர்வுக்கான ஆன்லைன் வகுப்புகள்  வருகிற 14.04.2021 முதல் தொடங்குகிறது .இந்த பயிற்சியில் கலந்துகொள்ள விரும்பும் தபால்காரர் /MTS தோழர்கள் தங்கள் பெயரினை பதிவுசெய்துகொள்ளும்படி மீண்டும் நினைவூட்டுகிறோம் .நெல்லையில் தொடர்புகொள்ள..SK .ஜேக்கப் ராஜ் -9442123416 .

*நமது முன்னாள் பொதுச்செயலர் அண்ணன் KVS அவர்களின் விதி அறிவோம் -அறிவு களஞ்சியம் என்ற நூல் குறித்து சில வரிகள்  ...மொத்தம் 688 பக்கங்கள் ஆறு பகுதிகள் 1.STAF FRULINGS 2.ஒழுங்குநடவடிக்கைகள் 3.ஓய்வூதிய பலன்கள் 4.GDS  குறித்த முழு  உத்தரவுகள் 180 பக்கம் 5.இலாகா விதிகளின் தமிழாக்கம் 6.தொழிற்சங்க செய்திகள் ..நெல்லையில் முதற்கட்டமாக 50 பிரதிகள் கேட்கப்பட்டுள்ளன ..மேலும் நெல்லை மட்டுமன்றி அண்டைக்கோட்ட தோழர்களுக்கு தேவைப்பட்டாலும் எங்களை தொடர்புகொள்ளலாம் .இந்தநூல் எழுத்தர் பிரிவினருக்கு மட்டுமன்றி தேர்வுக்கு தயாராகும் அனைத்து பிரிவு குறிப்பாக தபால்காரர் /MTS மற்றும் GDS ஊழியர்க்ளுக்கும் பயன்பட தக்க வகையில் முற்றிலும் தமிழாக்கம் செய்யப்பட்ட முதலாவது மற்றும் முதன்மையான நூல் என்பது குறிப்பிடத்தக்கது ..

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 


Saturday, March 13, 2021

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !  

  டெபுடேஷன் வழிகாட்டுதலில் நமது கோட்டத்தில் பின்பற்றப்பட்டுவரும் நடைமுறையே சரியானது என மீண்டும் நமது PMG அவர்கள் உறுதிசெய்துள்ளார்கள் ..மூத்த தோழர்களை குறிவைத்து தொடுத்த இந்த தாக்குதலும் தோல்வியில் .முடிந்தது .நமது PMG அவர்களுக்கு நன்றி ! நன்றி !

       திருநெல்வேலி கோட்டத்தில் பின்பற்றப்பட்டுவரும் டெபுடேஷன் வழிகாட்டுதலை மாற்றவேண்டும் என்றும் LSG தவிர அனைவரும் டெபுடேஷன் செல்லவேண்டும் என்றும் தற்சமயம் டெபுடேஷன் வழிமுறைகள் முற்றிலும் NFPE மூத்த ஊழியர்களை பாதுகாத்திட பிறப்பிக்கப்பட்ட உத்தரவு என்று புலம்பெயர்ந்த சங்கத்தின் மூலம் தென்மண்டல PMG அவர்களிடம் கடந்த BI MONTHLY கூட்டத்தில் எடுக்கப்பட்டு விவாதித்ததில்   டெபுடேஷன் வழிகாட்டுதலில் திருநெல்வேலி கோட்டத்தில் பின்பற்றப்பட்டுவரும் நடைமுறை  சரியானது எனவும் பதவியர்வு பெற்றதை கணக்கில் கொள்ளாமல் (LGO TO PA ) PA கேடெர் சேவையை கருத்தில்கொள்ளவும்  மீண்டும் நமது PMG அவர்கள் உறுதிசெய்துள்ளார்கள் .

தலைவர் KVS அவர்களின் நூலுக்கு இதுவரை பணம் அனுப்பியவர்கள் 1.முருகன் 2.செல்லம்மாள் 3.விஜயலக்ஷ்மி 4.சிவனருள்செல்வி 5.பேராட்சி(ACCOUNTANT) 6.முத்துலட்சுமி (கவிஞர் ) 7.சுப்ரமணியன் SPMVRP 8.சுபா 9.மஹாலட்சுமி சேரன்மகாதேவி 10.அருள்மொழி கடையம்11. VS .கிருஷ்ணன் 12-13 பவானி -2 14.மகேஸ்வரன் 15-16 RVT.பாண்டியன் 17-18 உஷா தேவி மானுர் -2 19-21 வேல்முருகன் -3 22.நியூட்டன் 23.சாவித்திரி 24.வள்ளிநாயகம் 25.பழனிவேல் 26.ஹரி (ACCOUNTANT)    27.வெங்கடாச்சலம் 28.விட்டல் DSM 29.ஆனந்தகோமதி 30.சுப்பிரமணியன் DSM -விடுபட்ட பெயர்கள் இருந்தால் உடனே தெரிவிக்கவும் .நேற்று மாநிலசெயலர் சகோதரர் வீரமணி அவர்களிடம் புத்தகம் மேலும் தேவைப்படும் என்றபொழுது திருநெல்வேலி கோட்டத்திற்கு மொத்தமாக 50 புத்தகங்கள் அனுப்பிவைக்கப்படும் என்று தெரிவித்தார்கள் ..மாநிலசெயலருக்கும் நன்றி நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 


Thursday, March 11, 2021

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

              நமது முன்னாள் பொதுச்செயலர் தோழர் KVS அவர்களின் இலாகா விதிகளின் தமிழாக்கம் நூல் வேண்டி 30 தோழர்கள் விருப்பம் தெரிவித்திருந்தார்கள். அதில்  16 தோழர்கள் ரூபாய்  450 அனுப்பியுள்ளனர் .மீதியுள்ளவர்கள் விரைந்து பணத்தை அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Wednesday, March 10, 2021

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                  பஞ்சப்படி முடக்கமும் ---ஊழியர்களின் மௌனமும் 

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு முடக்கப்பட்ட பஞ்சப்படி நிலைகுறித்து மாநிலங்களவையில் நேற்று குஜராத் மாநிலத்தை சார்ந்த ராஜ்யசபா உறுப்பினர் மாண்புமிகு நரன்பாய் J.ரத்வா அவர்களின் கேள்விக்கு மத்திய நிதியமைச்சகத்தின் பதில் ..அரசு எப்பொழுது பஞ்சபடியை கொடுக்கலாம் என முடிவெடுக்கிறதோ அப்பொழுது பஞ்சப்படி வழங்கப்படும் என்று எழுத்துபூர்வமான பதிலை தந்துள்ளது ...அவ்வளவுதான் நமது ஊழியர்கள் அனைவரும் ஜூலையில் பஞ்சப்படி அரசு கொடுத்துவிடும் என்ற முழு நம்பிக்கையோடு செய்திகளை படுவேகமாக பகிர்ந்துகொண்டுவருகிறார்கள் .சென்றமாதம் நமது NJCM தலைவர்கள் நிதிச்செயலரை சந்தித்து கோரிக்கைமனு கொடுத்திட்டபோது  பஞ்சபடி முடக்கம் என்பதை மேலும் நீட்டிக்கப்படுமா என்று அரசு இன்றளவு முடிவெடுத்திடவில்லை என்று கூறியிருக்கிறார் 

                    பஞ்சப்படி முடக்கத்தால் அரசுக்கு 37530.08 கோடி மிச்சமாக கிடைத்திருக்கிறது என்றால் இங்கே ஒவ்வொரு ஊழியர்களுக்கும் குறைந்தபட்சம் 1 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதனை நாம் கூட உணர்ந்ததாக தெரியவில்லை .இந்த இடைப்பட்ட காலத்தில் ஓய்வு பெற்ற ஊழியர்களின் பாதிப்பு இதைவிட அதிகம் .

                    மூன்று தவணை பஞ்சப்படி கொடுக்கப்பட்டிருந்தால் இன்று நாம் 28 சதம் பஞ்சப்படி உயர்வினை பெற்றிருப்போம் (4+3+4).ஆனால் இன்று வெறும் 18 சதம் பஞ்சபடியோடு நிற்கின்றோம் .பஞ்சப்படி முடக்கம் கூட ஏனைய பொதுத்துறை ஊழியர்களுக்கு இல்லை என்பதும் மத்தியஅரசு ஊழியர்களுக்கு மட்டுமே என்பதும் ஒரு கசப்பான உண்மைதான் ..

 தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா ? என்ற வரிகள் எவ்வளவு உண்மை .

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை  அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் 

SB Order No: 5/2021 dtd 9.3.21 சாராம்சம்:

1.வருமான வரி தாக்கல் செய்யாத வாடிக்கையாளர்கள்:

a.ஓர் நிதி ஆண்டில்  ₹.20,00,000 முதல்   ₹.ஒரு கோடி வரை Cash withdrawal  எடுத்திருந்தால்  -------)  ₹.20,00,000/-த்திற்கு மேல் எடுக்கப்படும் தொகைக்கு 2% TDS பிடிக்க வேண்டும்.

b.ஓர் நிதி ஆண்டில்  ₹.ஒரு கோடிக்கு மேல்  Cash withdrawal  எடுத்திருந்தால்  -------)  ₹.1,00,00,000/-மேல் எடுக்கப்படும் தொகைக்கு 5% TDS பிடிக்க வேண்டும்.

2. வருமான வரி தாக்கல் செய்த வாடிக்கையாளர்கள்:

a.ஓர் நிதி ஆண்டில்  ₹.ஒரு கோடிக்கு மேல்  Cash withdrawal  எடுத்திருந்தால்  -------)  ₹.1,00,00,000/-மேல் எடுக்கப்படும் தொகைக்கு 2% TDS பிடிக்க வேண்டும்.

இத்தகைய SB கணக்குகள் பற்றிய தகவல்கள் Finnacle Reports ல் கிடைக்கும் வரை,  CBS CPC யில் இருந்து அந்தந்த அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

TDS Office Account ID - SOL ID + 0033

Finnacle  ல்  TDS பிடிக்கும் முறை

CXFER Menu code enter செய்து 

Debit Account  ல் SB Account number டைப் செய்யவும்... ....  

Amount  ல்  TDS Amount டைப் செய்யவும்.

Credit  Account ல் SOL ID + 0033 டைப் செய்யவும்....

GL code for this TDS under section 194N is 

8002100140.

வருமான வரி தாக்கல் செய்துள்ளாரா என்பது பற்றிய தகவல் அறிய:

https://wwwl.incometaxindiaefiIing.gov.in/e-FilingGS/Services/ViewReturnStatusLink.html?lang=eng

என்ற லிங்க்கை பயன்படுத்தி

1.வாடிக்கையாளரின் PAN மற்றும் Mobile number  டைப் செய்யவும்.

2. Check box select  செய்து continue  click செய்யவும்.

3. TDS  எவ்வளவு பிடிக்க வேண்டும் என்ற தகவல் வெளிப்படும்.

நன்றி.தோழமையுடன்

S.K.ஜேக்கப்ராஜ் கோட்டச்செயலாளர் நெல்லை

Monday, March 8, 2021

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று மாலை 05.30 மணியளவில் பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் NELLAI -NFPE மகிளா கமிட்டி சார்பாக நடைபெறும் சிறப்பு கூட்டத்திற்கு நமது அஞ்சல் மூன்று ,அஞ்சல் நான்கு மற்றும் GDS சொந்தங்கள் அனைவரும் பங்கேற்றிடுமாறு NELLAI -NFPE சார்பாக அன்போடு அழைக்கின்றோம் ..நமது தோழியர்களின் தொழிற்சங்க உணர்விற்கு ஆதரவாய்  அனைத்து தோழர்களும் அவசியம் பங்கேற்றிடுங்கள் ...அனைவருக்கும் மகளிர் தின சிறப்பு வாழ்த்துக்கள் ..

தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

Saturday, March 6, 2021

அனைந்திந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் -மூன்றாம் பிரிவு ,தபால் காரர்  மற்றும் நான்காம் பிரிவு 

திருநெல்வேலி கோட்டம் --627002

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே 1

                                             சர்வதேச மகளிர் தினம் --08.03.2021 -சிறப்பு கூட்டம் 

நாள் --08.03..2021     நேரம் --மாலை 05.30 மணி 

இடம் -பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் 

தலைமை ==தோழியர் S.விஜயலட்சுமி தலைவர் மகிளா கமிட்டி நெல்லை 

விரிவான நிகழ்ச்சிநிரல் கொண்ட அழைப்பிதழ்  விரைவில் மகிளா கமிட்டி சார்பாக வெளியிடப்படும் .

நமது கோட்டத்தில் NFPE P3 யில் அம்பையையும் சேர்த்து மொத்தம் 260 உறுப்பினர்கள் இருக்கிறார்கள் .இதில் தோழியர்களின் எண்ணிக்கை 125 அஞ்சல் நான்கின் எண்ணிக்கை 110 இதில் தோழியர்களின் எண்ணிக்கை 30  GDS ஊழியர்களை பொறுத்தவரை பாதிக்கு மேல் தோழியர்கள் தான் ..இவர்களையும் ஒரு அமைப்பின் கீழ்கொண்டுவந்து அவர்களையும் நமது NFPE பேரியக்க நடவடிக்கைகளில் பங்கேற்க செய்திடும் வகையில் அமைக்கப்பட்ட NFPE மகிளா கமிட்டி சார்பாக நடைபெறும் சர்வதேச மகளிர் தினம் - கூட்டத்தில் அனைத்து தோழியர்கள் மட்டுமல்ல நமது தோழர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம் .

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 
Friday, March 5, 2021

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! 

                              உணமை சாகவிடாது ! பொய் வாழவிடாது !

தமிழக அஞ்சல் வரலாற்றில் சமீபகாலமாக GDSTO PA  GDS TO போஸ்ட்மேன் போஸ்ட்மேன் /MTS TO PA  என அதிக எண்ணிக்கையில் தேர்ச்சிபெற்றுவருவதற்கு அவர்களுக்காக தொழிற்சங்கங்கள் உருவாக்கி கொடுத்த /கண்டுபிடித்து கொடுத்த காலி பணியிடங்களே முக்கிய காரணம் என்பதை யாரும் மறந்துவிட முடியாது .

இது தொடர்பாக அன்றைய நமது NFPE -P 3 தமிழ்மாநில செயலர் அண்ணன் JR அவர்கள் 2017 யில் நடைபெற்ற RJCM கூட்டத்தில் விவாத பொருளாக    CPMG அவர்களிடம் வாதாடினார் (S ubject no.3/Aug/2015 , subject no. 2/July /2017 ) அப்பொழுது FNPO தோழர் சரவணன் அவர்கள் RJCM உறுப்பினராக இல்லை என்பதும் உண்மை -இதோ நமது அன்றைய மாநிலசெயலர்அண்ணன் JR  அவர்கள்  வைத்தகோரிக்கை 

Request to initiate action to have a thorough review on assessment of vacancies in PA cadre in all the Divisions, so as to fill up all the difference in vacancies between the sanctioned and working strength immediately. There is mismatch between the sanctioned and working strengths, despite taking into account of the announced current year vacancies, screening committee vacancies etc. For Example Namakkal, Kanchipuram, Chengalpattu, Arakkonam, Tiruvannamalai, Sivaganga, Kumbakonam, Mayiladuthurai, Dindigul, Dharmapuri and Salem East divisions. Item No.31 in RJCM DC meeting dt. 16.12.2014. No Divisionwise, information provided to the staff side till date as recorded.

இந்தப் பிரச்னை RJCM ஊழியர் தரப்பு செயலர் J.R. அவர்களால்  எடுக்கப்பட்டு தொடர்ந்துகடுமையான விவாதங்களின் அடிப்படையில்  கொள்கை அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதனை தொடர்ந்து 

ஜூலையில் வேலை நிறுத்த நோட்டீசில் இந்தக் கோரிக்கை எழுப்பப்பட்டு Regional Southern Labour Commissioner முன்னிலையில் Conciliatory talks நடத்தப்பட்டு, இப்படி 

தொடர் நடவடிக்கைகளால்  RJCM ஊழியர் தரப்பு செயலரை வைத்து முதலில் கமிட்டி அமைக்கப்பட்டது. அதில் முதலில் NFPE அஞ்சல் மூன்றின் தமிழ் மாநிலசெயலர் அண்ணன் JR மட்டுமே இடம்பெற்றிருந்தார் .

பின்னர் தன்னையும் சேர்த்துக் கொள்ள FNPO சரவணன் அன்றைய FNPO உதவி பொதுச்செயலர் )( 23.12.2017அன்று  கேட்டுக் கொண்டதால் J.R. அவர்கள் சரவணனையும் பெருந்தன்மையுடன் கமிட்டியில் சேர்த்துக் கொள்ள  CPMG யிடம் கோரினார் . இந்த உண்மைகளை தோழர். சரவணன் மறுக்க மாட்டார் . ஆனால் இங்கே உள்ள புலம்பெயர்வு தோழர்கள்  உண்மைகளை  மறைத்து பதிவிடுவது வேடிக்கையிலும் வேடிக்கையாகும்.(தோழர் சரவணன் அவர்கள் மீது இன்றும் எங்களுக்கு தனிப்பட்ட மரியாதை உண்டு  )

இது CPMG திரு  சார்ல்ஸ் லோபா அவர்கள் காலத்தில் தொடங்கி திரு .சம்பத் CPMG ஆக வந்த காலத்தில் நமது தென்மண்டல CPMG திரு UNNAM  UPENDER அவர்களை சேர்மன் ஆக கொண்டு அமைக்கப்பட்ட கமிட்டியில் அண்ணன் JR மற்றும் P4 மாநில செயலர் தோழர் கண்ணன் FNPO சார்பாக P3-P 4 மாநில செயலர்கள் அந்த கமிட்டியில் இடம்பெற்று நமது நீண்டகால கோரிக்கையான அதாவது 2015 முதல் எழுப்பப்பட்ட கோரிக்கைகள் வெற்றிபெற்றது ..இதுகுறித்து நமது NELLAI NFPE WEBSITE யில் டிசம்பர் 2017 யில் பதிவிட்ட செய்தி ..முடிந்தால் சரிபார்த்துக்கொள்ளலாம் 

மாநில அளவில் இருக்கும் காலியிடங்களை  மதிப்பீடு செய்ய மாநில அளவில் அமைக்கப்பட்ட   கமிட்டியில் ஊழியர் தரப்பு பிரதிநிதியாக RJCM ஊழியர்தரப்பு தலைவரான நமது மாநிலசெயலர் இடம் பெற்றிருக்கிறார்   .இது மாநில அளவில் உள்ள SANCTIONED STRENGTH மற்றும் WORKING STRENGTH இடையிலான ACTUAL வேறுபாட்டினை உறுதிப்படுத்த நமக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு .தமிழகத்தில் மூன்று சங்கங்கள் இருந்தாலும் NFPE க்கு மட்டும் இந்த வாய்ப்பு கிடைத்திருப்பது நமக்கு கிடைத்த வெற்றியே !dec 2017

சில வரலாறுகள் திரிக்கப்பட்டு பதிவிடும் போது தெரிந்த உண்மைகளை வெளியிடுவதில் தவறேதும் இல்லை என்ற அடிப்படையில் பதிவிட்டுஇருக்கிறேன் .....

அஸ்திவாரங்கள் என்றும் தங்களை அலங்கரித்துக்கொள்ள தேவையில்லை ஆம் ...இணையுங்கள் இளைய தோழர்களே ! போராடும் பேரியக்கமாம் NFPE யில் இணைவீர் ! உங்கள் போராட்ட உணர்வுகளை புதைத்துவிடாதீர்கள் !

வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் நெல்லை 
 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

நேற்று நடைபெற்ற மாதாந்திர பேட்டியில் கீழ்கண்ட பிரச்சினைகளில் நல்லதொரு தீர்வு எட்டப்பட்டுள்ளது 

1.தோழியர் A .அன்புச்செல்வி தபால்காரர் வண்ணார்பேட்டை அவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு மேலாக சென்னை மத்திய கோட்டத்தில் CONFORMATION உத்தரவு பிறப்பிக்கப்படாமல் இருந்தது .இந்த சூழ்நிலையில் தோழியர் நடந்துமுடிந்த எழுத்தர் தேர்விலும் தேர்ச்சிபெற்றுள்ளார்கள் .அவர்களுக்கு கடந்த 17.02.2021 அன்று நாம் கொடுத்த கடிதத்தை தொடர்ந்து நேற்று CONFORMATION உத்தரவு பிறப்பிக்கப்பட்டது .

2.நடந்துமுடிந்த எழுத்தர் தேர்வில் தோழியர் M.சுந்தரி தபால்காரர் அம்பாசமுத்திரம் அவர்களுக்கு விடுபட்ட /தவறுதலாக எடுத்துக்கொள்ளப்பட்ட விடைக்கு சரியான மதிப்பெண்களை வழங்கவேண்டி தோழியர் கொடுத்த விண்ணப்பமனுவினை  .இன்று மதுரையில் நடைபெறும் DPC யில் கமிட்டியின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்படும் என ஏற்றுக்கொள்ளப்பட்டது 

3.தோழியர் S.பார்வதி PA பாளையம்கோட்டை அவர்களுக்கு (முன்னாள் பாண்டிச்சேரி கோட்டம் ) மறுக்கப்பட்ட MACP கிடைப்பதற்கு வசதியாக APAR கிரேடிங் நகல் வழங்கப்படவேண்டும் என்ற தோழியரின் 11.02.2021 தேதியிட்ட கடிதத்திற்கு APAR நகல் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது 

4.மருத்துவ விடுப்பு விண்ணப்பித்த தோழியர் E.சுபா SPM ராஜவல்லிபுரம் அவர்களுக்கு தேவையில்லாமல் இரண்டாவது மருத்துவ ஒப்பீனியன் அனுப்ப கொடுத்த கடிதம் குறித்து கோட்ட சங்கம் சார்பாக நேற்று தனி கடிதம் கொடுத்து விவாதிக்கப்பட்டு மறு ஆய்வுக்கு செல்வது குறித்து மறுபரீசீலினை செய்ய ஏற்றுக்கொள்ளப்பட்டது .இதே போல் தோழியர் முத்துலட்சமி LRPA அம்பாசமுத்திரம் அவர்களின் பிரச்சினையும் பேசப்பட்டது .மேலும் மருத்துவ விடுப்பு கேட்கும் ஊழியர்களுக்கு பழைய நடைமுறையை பின்பற்றி விடுப்பு வழங்கிட வலியுறுத்தப்பட்டுள்ளது 

5.MACP பதவி உயர்வு மறுக்கப்பட்ட தோழர் லிங்கப்பாண்டி அவர்களுக்கு அடுத்துவரும் DPC யில் அவரது பெயர் சேர்க்கப்பட்டு பழைய தேதியில் இருந்து அவருக்கு MACP வழங்கப்படும் என தெரிவிக்க பட்டது 

6.தோழர் M.ஆசைத்தம்பி அவர்களின் TRANSFER TA  குறித்து மீண்டும் விவாதித்து TA பில் சமர்ப்பிக்க ஏற்பட்ட இரண்டு நாள் காலதாமதத்தை சரி செய்து  TA பில் வழங்கிட  வலியுறுத்தப்பட்டுள்ளது 

7.பாளையம்கோட்டை BPC பிரிவில் நிறுத்திவைக்கப்பட்ட ரூபாய் 2400 க்கான அச்சக செலவு வழங்கிட ஏற்றுக்கொள்ளப்பட்டது 

8.முனைஞ்சிப்பட்டி SO வில் நிலவும் நெட்ஒர்க் பிரச்சினை குறித்து ஏற்கனவே மேல் மட்ட அளவில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மீண்டும் ஒரு நினைவூட்டல் கடிதம் அனுப்பவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது 

9..நமது கோரிக்கையை ஏற்று அனைத்து துணை /தலைமை அலுவலகங்களுக்கும்திருத்தப்பட்ட  CBS SB MANUVAL வழங்கிட ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்காக 100 புத்தகங்கள் வாங்கிட ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது 

10.MMS ஊழியர்களின் பிரச்சினைகள் மீண்டும் எடுக்கப்பட்டு ஓட்டுனர்களின் நலன் கருதி காலை மற்றும் இரவு டிபன்க்கான நேரமும் --மிகுதிநேர படி வழங்குவது குறித்தும் விரைந்து முடிவெடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டது 

11.பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்திற்கு புதிதாக மூன்று கணினிகள் வழங்கிட ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டது .

12.பணகுடி மற்றும் முனைஞ்சிப்பட்டி அலுவலகங்களுக்கு RULE 38 யினல்  வரவேண்டிய ஊழியர்கள் வராததால் டெபுடேஷன் அடிப்படையில் ஊழியர்களை அனுப்பிட வலியுறுத்தப்பட்டுள்ளது .

13.CASH COUNTING மெஷின் தேவையான அலுவலகங்களுக்கு தரமான மெஷின் வாங்கிட ஒப்புக்கொள்ளப்பட்டது .சம்பந்தப்பட்ட SPM தோழர்கள் இதுகுறித்து கடிதங்களோ /மெயில் அனுப்பியிருந்தால் கோட்ட சங்கத்திற்கு தெரிவிக்கவும் .

14.பணகுடி அஞ்சலகத்திற்கு கூடுதல் ஒரு டெலிவரி ஊழியர் மற்றும்  வள்ளியூர் அலுவலகத்திற்கு ஒரு CASHOVESEER  இவைகளுக்கான பணிகள் நடைபெற்றுவருவதாகவும் வாய்ப்புள்ள ஊர்களில் BANK DRAWINGS  செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது 

15.இறுதியாக நமது மகிளா கமிட்டி சார்பாக கலந்துகொண்ட தோழியர் விஜயலட்சுமி அவர்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக சேவைமுடித்த ஊழியர்களை டெபுடேஷன் அனுப்புவதை கூடுமானவரை தவிர்க்கப்பட வேண்டும் என்றும் டெபுடேஷன் DIRECTION கொடுக்கும் பொழுதே கோட்ட நிர்வாகம் இதை கருத்தில்கொண்டு DIRECTION பிறப்பிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள் .

-------------------------------------------------------------------------------------------------------------------

                                         இதர செய்திகள் --மகளிர் தினம் 

வருகிற 08.03.2021 அன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வழக்கம் போல் நமது கோட்ட சங்கம் சார்பாக பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் மாலை 05.30 மணியளவில் ஒரு சிறப்பு மகளிர்  கூட்டம் நடத்திட முடிவெடுக்கப்பட்டுள்ளது .நமது கோட்ட மகிளா கமிட்டி நிர்வாகிகள் (P3-P 4-GDS ) விரைந்து செயல்பட கேட்டுக்கொள்ள படுகிறார்கள் 

                                                        வரவேற்கிறோம் 

நமது திருநெல்வேலி CGHS மருத்துவமனை மருத்துவராக இன்று பணியேற்கும் மருத்துவர் -நமது NFPE மகிளா கமிட்டியின் முன்னணி நிர்வாகி தோழியர் ஹைருனிஷா பேகம் அவர்களின் புதல்வி அவர்களை நெல்லை அஞ்சல் கோட்ட ஊழியர்கள் சார்பாகவும் நெல்லை மாவட்ட மத்தியஅரசு ஊழியர்கள் சார்பாகவும் வாழ்த்தி வரவேற்கிறோம் .

தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 


Thursday, March 4, 2021

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

இன்று நடைபெறும் மாதாந்திர பேட்டியில் அஞ்சல் மூன்று சார்பாக கீழ்கண்ட பிரச்சினைகளை விவாதித்திட கொடுத்துள்ளோம் .இவைகளை தவிர இதர பிரச்சினைகளையும் சேர்த்து விவாதிக்கவிருக்கிறோம் .இந்த மாதம் அஞ்சல் மூன்று மற்றும் அஞ்சல் நான்கின்  சார்பாக  தலா ஒரு தோழியர்  மாதாந்திர பேட்டியில் கலந்துகொள்கிறார்கள் .அஞ்சல் மூன்றின் சார்பாக நமது கோட்ட மகிளா கமிட்டி தலைவர் தோழியர் விஜயலக்ஷ்மி LSGPA  பேட்டை அவர்களும் அஞ்சல் நான்கின் சார்பாக தோழியர் ஜீவா பெல்சியா தபால்காரர் பாளையம்கோட்டை  அவர்களும் கலந்துகொள்கிறார்கள் .அதிகரித்துவரும் தோழியர்கள் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு தோழியர்கள் இதுபோன்ற அமைப்பு சார்ந்த கூட்டங்களில் பங்கேற்கவைக்கவேண்டும் என்ற நமது கோட்ட சங்க மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் ஆர்வத்தோடு பங்கேற்கும் இரண்டு தோழியர்களுக்கும் வாழ்த்துக்கள் --அஞ்சல் நான்கு சார்பாக எடுக்கப்பட்ட பிரச்சினைகள் தனியாக தரப்பட்டுள்ளன ...தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

NFPE

          ALL INDIA POSTAL EMPLOYEES UNION GR-C                   TIRUNELVELI DIVISIONAL BRANCH

TIRUNELVELI—627002

No.P3-MM/ dated at Palayankottai- 627002 the 17.02.2021

To

The Sr. Supdt. of Post Offices,

Tirunelveli Division

Tirunelveli-627002

Sir,

            Sir,

            Sub:    Subjects for monthly meeting -reg

            The following subjects may kindly be included for discussion during the monthly meeting.

1. Request to attach or depute one PA to Panagudi SO immediately . It is requested to consider the already increasing work burden and Adhar Enrollment/ updation works.

2. Since all the cash counting machines at Palayankottai HO are malfunctioning,  kindly arrange for the supply of 3 Cash counting machines.

3. Request for supply of  3 three new PCs for SB counters  and 1 PC for APM SB ll as the available PCs are quite old and worn out and in the stage of condemnation.

4. Network issues at Munanjipatti SO has to be resolved immediately. For months together,  the SPM completes his daily work at Palayankottai HO. Occupation of Quarters has to be suspended until Network connectivity get restored.

5. Request to safe guard the postal officials from the cruel hands of habitual complainants who are making complaints without any base/merit. Taking disciplinary action on the basis of petty complaints without providing proper infrastructure will demoralize the working force.

6. It is observed that the TA claims of the officials deputed from Vikramasingapuram and Ravanasamudram is being not considered on the ground that the distance between two stations is less than 8 kms. It is presumed sanctioning authority is relying on the distance through Google map. It shows the distance as less than 8 kms whereas the distance through public transport between the said station is more than 8 kms. It is requested to allow the TA Claim .

7. The pending transfer TA Bills has to be granted immediately (eg) C/o M.Asai Thambi .

8.. Revised schedule may be provided for the MMS drivers at the earliest , with suitable timings for breakfast and dinner breaks which was discussed and agreed by Divisional head  in previous meetings.

9.---------------------------------------------------------

10  OTA has to be granted for the MMS drivers for working over time

                      The following officials will attend the meeting.

1.         S.K.Jacobraj  Divisional Secretary &LSG PA Tirunelveli HO

2.         S.Vijayalakshmi LSG PA  Tvl Pettai

3.         R.V.ThiyagarrajaPandiyan Br.Sec &SPM Ravanasamudrm 

         

                         Yours faithfully

  

[S.K.JACOBRAJ]

 

 

 


Wednesday, March 3, 2021

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !

*எழுத்தர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து தோழர்களுக்கும் நெல்லை NFPE சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் ..இதற்கான செலச்சன்  கமிட்டி நாளை அல்லது நாளை மறுநாள் மதுரையில் கூடுகிறது .நமது கோட்டத்தை பொறுத்தவரை VACANCY ஏற்கனவே அறிவித்த UR-- 7 SC --1  ST --1  

*நாளை ஒருவேளை மதுரையில் எழுத்தர் தேர்வுக்கான DPC கூடினால் நமது கோட்டத்தில் மாதாந்திர பேட்டி மீண்டும் தள்ளிப்போக வாய்ப்புள்ளது 

*அஞ்சல் நான்கு அகிலஇந்திய மாநாட்டிற்கு (உடுப்பி ) வரவிரும்பும் தோழர்கள் நாளை மாலைக்குள் தங்கள் பெயர்களை பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம் 

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

Tuesday, March 2, 2021

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! 

*நமது முன்னாள் பொதுச்செயலாளர் அண்ணன் KVS அவர்களின் தமிழில் இலாகா விதிகள்  நூல் கேட்டு இதுவரை 27 தோழர்கள் விருப்பம் தெரிவித்துள்ளார்கள் .நமது கோட்ட சங்கத்தின் சார்பாக முதற்கட்டமாக 30 புத்தகங்கள் தேவை என மாநில செயலரிடம் கேட்டுள்ளோம் .இன்னும் 15 நாட்களுக்குள் புத்தகங்கள் கிடைக்கும் என மாநில செயலர் தெரிவித்துள்ளார்கள் .ஒரு புத்தகத்தின் விலை ரூபாய் 450. புத்தகம்  வேண்டி விருப்பம் தெரிவித்தவர்கள் நமது கோட்ட உதவி செயலர் தோழர் ஆனந்தராஜ் PA மஹாராஜாநகர் அவர்களின் POSB (4876043185) கணக்கில் பணத்தை செலுத்திவிட்டு கோட்ட சங்கத்திற்கு தகவல்களை தெரிவிக்கவும் .நேற்று இரண்டு தபால் காரர் தோழியர்க்ளும் புத்தகம் வேண்டி கேட்டுள்ளார்கள் .அதேபோல் அம்பை பகுதியில் இருந்து 5 புத்தகங்கள் கேட்டுள்ளார்கள் ..நாம் ஏற்கனவே தெரிவித்தபடி இது எழுத்தர்களுக்கு மட்டுமல்ல GDS முதல் MTS தபால்காரர் என அனைத்து பிரிவிற்கான உத்தரவுகளின் தமிழகத்தின் தொகுப்பு என்பதனை மீண்டும் நினைவூட்டுகிறோம் .விரைந்திடுவீர் ! உங்கள் பிரதிகளுக்கு முன் பதிவு செய்திடுங்கள் !

*அஞ்சல் நான்கின் அகில இந்திய மாநாடு --NFPE அஞ்சல் நான்கின் 28 வது அகில இந்திய மாநாடு 18.04.2021 முதல் 20.04.2021 வரை கர்நாடக மாநிலம் உடுப்பி  நகரில் நடைபெறுகிறது .நெல்லையில் இருந்து 17.04.2021 அதிகாலை 3 மணிக்கு தொடர்வண்டி மூலம் திருவனந்தபுரம் வழியாக செல்கிறோம் .பயணக்கட்டணம் நபர் ஒருவருக்கு ரூபாய் 1500.அகில இந்திய மாநாட்டிற்கு வரவிரும்பும் தோழர்கள் கோட்ட செயலரை தொடர்பு கொள்ள கேட்டு கொள்கிறோம் 

*கிளை அஞ்சலகங்களில் வித்ட்ராவல் செய்ய ரூபாய் 20000 வரை கணக்கு அலுவகத்தில் அனுமதி பெறவேண்டிய அவசியம் இல்லை என SBORDER 02/2021 DTD 26.02.2021 தேதியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளது .

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

Monday, March 1, 2021

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !

 நமது அஞ்சல் மூன்றின் முன்னாள் அகில இந்திய பொதுச்செயலர் அண்ணன் KVS அவர்களால் தொகுக்கப்பட்ட நமது இலாகா விதிகளின் தமிழாக்கம் செய்யப்பட்ட நூல் விற்பனைக்கு தயாராக உள்ளதாக நமது மாநில செயலர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள் .மொத்தம் 680 பக்கங்களை கொண்ட இந்த நூல் எழுத்தர்களுக்கு மட்டுமல்ல GDS முதல் MTS மற்றும் தபால்காரர் வரை பயன்பெறும் வகையில் தொகுக்கப்பட்ட அறிவு களஞ்சியம் .நமது கோட்டத்திற்கு எத்தனை நூல் தேவைப்படும் என மாநில செயலர் கேட்டு அறிக்கை அனுப்பியுள்ளார்கள் .உங்களது தேவைக்கேற்றபடி நாம் தெரிவிக்கவேண்டும் .இதுவரை  இரண்டு தோழியர்கள் நூல் வேண்டும் என கேட்டுள்ளார்கள் .விருப்பமுள்ளவர்கள் இன்று மாலைக்குள் தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம் .புத்தகத்தின் விலை ரூபாய் 450 மட்டுமே !

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை