...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, October 31, 2018

                                              நெல்லை கோட்ட செய்திகள்
அன்பார்ந்த தோழர்களே !
 கடந்த மாதாந்திர பேட்டியில் (26.10.2018) விவாதிக்கப்பட்ட அடிப்படையில் பாளையம்கோட்டை கேன்டீன் சம்பந்தமாக மீண்டும் ஒருகடிதம் கோட்ட நிர்வாகத்திற்கு நேற்று கொடுக்கப்பட்டுள்ளது .அதன் நகல் உங்கள் பார்வைக்கு 
NFPE
ALL INDIA POSTAL EMPLOYEES UNION GROUP “C’,
TIRUNELVELI DIVISION,TIRUNELVELI 627 002.

No PIII/Misc/Dlgs dated at  Palayankottai dated  29.10.2018

To
The SrSupdt of POs
Tirunelveli Division
Tirunelveli-627002

Sir,

    Sub: Request to take action to open Canteen at Palayankottai HO premises
            which was closed temporarily – reg
*****

     We wish to bring the following for the kind notice of the SSPOs., forfavourable orders please.

                 A canteen was functioning in the Palayankottai Head Post Office premises more than 2 decades by the employees of Tirunelveli Division and it was temporarily closed citing that the building in which the canteen was functioning was not suitable.

                 The issue was taken up with the Divisional Administration and the canteen was not opened though we got a positive reply.  The share capital of nearly Rs.60000/- was also credited under UCR.

                 We, further wish to state that nearly 150 employees are working at O/o SSPOs., Tirunelveli Division, Palayankottai HO and PSD, Tirunelveli, all are situated in the same complex.  Employees particularly female staffs have to cross the road to go for tea stall to take tea and other snacks by standing on the road side.  All other organizations which have such a huge staff strength have canteen facility like BSNL, LIC etc., Moreover, going outside during office time will affect the work and time consuming too.

                 The canteen was offering tea, snacks and meals at a cheaper rate with good quality when compared to the other hotels in and around Palayankottai HO.

                 Hence, we would request our SSPOs., to take action to open the canteen which was temporarily closed and his action will be remembered in the history of the Tirunelveli Postal Division for ever.
                                                                                                Yours faithfully,


                                                                                                (S.K.JACOBRAJ)
                                                                                                DIVISIONAL SECRETARY
                                                                                                AIPEU GR ‘C’,Tirunelveli Division
                                                                                                TIRUNELVELI-627002                                                                       

                       LSG எனும் சாதனைக்குள்    -  மறைந்திருக்கும் வேதனை 
எல்லோருக்கும் LSG எனும் சாதனையை கேடர் சீரமைப்பு மூலம் பெற்றுவிட்டதாக பறைசாற்றப்படுகிறது .கேடர் சீரமைப்பால்   வேண்டிய இடம் கிடை க்கவேண்டும் இல்லையென்றால் பதவியுயர்வை மறுத்துவிட்டு அங்கேயே பணியாற்றிட வாய்ப்பு கிடைத்தால் போதும் என்ற தற்காலிக சமரசத்தை நாம் தேடிக்கொண்டிருக்கிறோம் 
ஆனால் அதையெல்லாம் தாண்டி LSG பதவி உயர்வு என்பது HIGHER DUTIES AND RESPONSIBILITIES உள்ளடக்கியது என்றும் அதற்கு எந்தவித  பணபயன்களும் இன்றி பணியாற்றிட நிர்பந்திப்பது எந்தவகையில் நியாயம் .என்பதனை நாம் புரிந்தாக வேண்டும் .
 LSG   பதவி உயர்வால் எழுந்துள்ள எழுத்தர் காலிப்பணியிடங்களை கணக்கீடுவது எப்போது ?   RECRUITMENT விதிகளை தளர்த்தி HSG II மற்றும் HSG I பதவிகளை நிரப்புவது எப்போது ? ஒவ்வொரு கோட்டங்களிலும் கண்கூடாக சராசரி 50 எழுத்தர்பதவிகள்  காலியாக இருந்தும் போதும்  VACANCY NOTIFY பன்னும் பொழுது 50 எப்படி 5 ஆக மாறுகிறது-CHAIN OF VACANCY கணக்கீட்டை மறந்தது யார் ? இதையெல்லாம் தாண்டி இன்று IP ASP ஆக பதவியுயர்வு பெற்றால் SAME GP என்றாலும் அந்த பதவியுயர்வில் DUTIES AND RESPONSIBILITIES IP கேடரைவிட அதிகமாக இருக்கிறது என்று 3 சதம் FIXATION பெனிபிட் கொடுக்கப்பட்டுவிட்டது .அதைக்காட்டி இன்று போஸ்ட்மாஸ்டர் கிரேடு தோழர்களும் 3 சதம் FIXATION பயனை அடைந்துவிட்டார் .LSG பதவி உயர்வில் அரசாங்கம் சொல்லுகிற மாதிரி DUTIES AND RESPONSIBILITIES இல்லையா ? LSG என்பது PA  கேடரைவிட அதிக பொறுப்புள்ள பதவி கிடையாதா ?
           ASP களும் போஸ்ட்மாஸ்டர் கிரேடு ஊழியர்களுக்கு மட்டும் இந்த பயன் கிட்டியது எப்படி ? அவர்களது போராட்டமா ? அவர்கள் வைத்த வாதத்தின் வல்லமையா ? 
  சிந்தீப்பீர் !  வரவிருக்கின்ற நமது மத்திய சங்க செயற்குழுவில் இந்த கோரிக்கை தமிழ்மாநிலச்சங்கம் சார்பில் வலுவாக எழுப்பப்படட்டும் ! LSG கேடருக்கான பாரபட்சம் நீக்கப்பட்டு 3 சதம் உயர்வு கிடைக்கட்டும் .
வழக்கம்போல் தமிழகம் முன் கை எடுக்கட்டும் !
நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Tuesday, October 30, 2018

அன்பார்ந்த தோழர்களே !
       பற்றி எரியும் SAP/CSI/RICT தொடர்பான பிரச்னைகளைத் தீர்த்திட,
                            மூன்று கட்ட போராட்ட இயக்கங்கள் 
1. 29.10.18 முதல் 3.11.18 முதல் கருப்பு சின்னம் அணிந்து பணியாற்றுவது /உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் 
2.13.11.18 செவ்வாயன்று நான்கு மண்டல அலுவலகங்கள் முன்பு தர்ணா 
3.04.12.2018 செவ்வாயன்று மாநில நிர்வாக அலுவலகம் 
(o/o CPMG, TN) முன்பாக இதே கோரிக்கைகளை வலியுறுத்தி 03.12.2018 திங்கள்  மாலை 6.00 மணி முதல் மறுநாள் செவ்வாய் மாலை 6.00 மணி வரையிலான, 3ந் தேதி  இரவு அங்கேயே தங்கும் வண்ணம் 24 மணி நேர தொடர் தார்ணா 
 ( மதுரை மற்றும் சென்னை தர்ணாவில் கலந்துகொள்ள விரும்பும் தோழர்கள் இன்றே உங்கள் பெயரினை பதிவு செய்திட கேட்டுக்கொள்கிறோம் )
                                                              கோரிக்கைகள் 
 IPPB மற்றும் இதர 
BD பணிகளில் கண்மூடித்தனமான Target நிர்ணயித்து ஊழியர்கள் கசக்கிப் பிழியப்படுவதை உடனே தடுத்திட, 
ஊதியம், GPF, TA Advance மற்றும் இதர பணப்பயன்களை வழங்குவதில் 
CSI HR Module அறிமுகப்படுத்தி அனைத்துப் பணிகளையும் DPA வில் குவியப்படுத்தி வருவதால் ஏற்படும் தாமதம் மற்றும் பிரச்னைகளைத் தீர்த்திட, 
. அகில இந்திய 
PJCA (NFPE/FNPO) முடிவினை ஏற்று உத்திரப்பிரதேசம் அலகாபாத் தலைமை அஞ்சலகத்தில் SAP இயங்காததை எதிர்த்து இலாக்காவுக்கு எதிராக போராடுவதை விடுத்து - அங்கு பணிபுரிந்த அப்பாவி ஊழியர்களைத் தாக்கி அவர்களது 'பைக்' உள்ளிட்ட உடைமைப் பொருள்களை எரியூட்டி,  அலுவலகத்தை சூறையாடிய வழக்கறிஞர்கள் 
என்ற பெயரிலான வன்முறையாளர்களைகண்டித்தும், அவர்கள் மேல் உரிய 
சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டுமென வலியுறுத்தியும், 
இதன் தொடர்பான பிரச்னைகளை  உடன் தீர்த்து வைத்திட இலாக்காவை வலியுறுத்தியும் நடைபெறும் இயக்கங்களில் நாம் முழுமையாக பங்கேற்போம் .

பிரச்னைகள் பேச்சுவார்த்தை நடத்தி இதற்குள் தீர்க்கப்பட வில்லையெனில்,  மூன்றாவது கட்டப் போராட்டமாக தமிழகம் தழுவிய அளவில் அனைத்து NFPE உறுப்புச் சங்கங்களும் கலந்து கொள்ளும் வண்ணம் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்திட வேண்டும் எனவும் முடிவு எடுக்கப்பட்டது.

. வேலைநிறுத்த தேதி இரண்டாவது கட்ட போராட்டமாகிய 24 மணி நேர தொடர் தார்ணா போராட்ட முடிவில் அறிவிக்கப்படும். 
அதன் தொடர்ச்சியாக மண்டலங்கள் தோறும் வேலைநிறுத்த ஆயத்தக் கூட்டங்கள் நடத்தப்படும. 
                                         போராட்ட வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ்   SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 
~~~~~~Monday, October 29, 2018

                                                    நெல்லை கோட்ட செய்திகள் 
தபால்காரர் /MTS மூலம் எழுத்தர் பதவிக்கான தேர்வு டிசம்பர் 9 ம் தேதி நடைபெறுகிறது .தகுதியுள்ள தோழர் /தோழியர்கள் உடனே விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .இதற்கான பயிற்சி வகுப்புகள் முன்னாள் ASP OD (RETD) திரு .பாலசுப்ரமணியன் அவர்கள் பாளை சமாதானபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் தினமும் மாலை 4-7 வரை நடத்துகிறார்கள் .ஆர்வமுள்ள தோழர்கள் 94421 49339 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ள கேட்டு கொள்ள படுகிறார்கள் .ஏற்கனவே திரு .பாலசுப்ரமணியன் அவர்கள் ஞாயிறு தோறும் திருச்சியில் வகுப்புகளை நடத்திக்கொண்டிருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .
-------------------------------------------------------------------------------------------------------------------
அஞ்சல் நான்கின் தமிழ் மாநில மாநாடு டிசம்பர் திங்கள் 29 மற்றும் 30 (சனி மற்றும் ஞாயிறு ) ஆகிய நாட்களில் நடைபெறுகிறது .தோழர்கள் SK .பாட்சா புஷ்பகரன் முருகேசன் சாக்ரடீஸ் சுபாஷ் செல்வின் அமிர்தராஜ் மகேந்திரன் பாலகுருசாமி ஆகிய அஞ்சல் நான்கு தோழர்களும் அஞ்சல் மூன்று சார்பாக தோழர்கள் ஜேக்கப் ராஜ் பிரபாகர் குத்தாலிங்கம் சாகுல் இளங்கோ மற்றும் குருசாமி ஆகியோர் கலந்துகொள்கிறார்கள் .மாநாட்டில் கலந்துகொள்ள விருப்பமுள்ள தோழர்கள் இன்றே தங்கள் பெயரினை பதிவு செய்துகொள்ள கேட்டுக்கொள்கிறோம் 
-----------------------------------------------------------------------------------------------------------------
தஞ்சாவூர் கோட்ட செயலர் தோழர் செல்வகுமார் அவர்களின் பதிவு 
தோழர்களே epaymenல் TNEB bill கட்டினால் இணைப்பை துண்டிக்கிறான். அதற்கு அபராதம் வேறு TNBSNL bill கட்டினால் இணைப்பை துண்டிக்கிறான். eMo book பண்ணினால்  பணம் அனுப்பியவன் திட்டுறான்.  பண்ணாவிட்டால் நீ எதுக்கு ஒரு பெட்டியை(computer) வச்சுக்குட்டு சும்மா உட்கார்ந்து இருக்கேங்கிறான். அவன் எதிரே இருக்கும் SPM பாடு திண்டாட்டம் தான். இதுதான் இன்றைய இழிநிலை. இதற்கு தீர்வு யாரிடம் இருக்கு என்று நம் அலுவலர் எவருக்கும் தெரியவில்லை. இதில் இலாக்கா நஷ்டத்தில் ஓடுதுன்னு ஒப்பாரி வேறு. இருப்பதை கெடுப்பதுதான் இவர்களின் வேலை வருபவர்களிடம் ஏச்சு பேச்சுகளுக்கு ஆளாவது தான் நம் வேலை. நல்ல முன்னேற்றம் கடந்த பத்து வருடங்களில் இலாக்காவில் மாற்றங்கள் ஏராளம் ஆனால் ஊழியர்களின் மனகஷ்டங்கள் தாராளம். எல்லோரும் விடியலை தேடுவோம்.
-----------------------------------------------------------------------------------------------------------------------மாநில சங்க அறிக்கையில் இருந்து .......
ஆட்பற்றாக்குறை பிரச்னை தினந்தோறும் அதிகரித்து வருகிறது. ஆளெடுப்பு, உயர் பதவிகளை நிரப்புவதற்கு அடிப்படை விதிகளை தளர்த்துதல் ஆகியவற்றில் நாம் கடந்த 6.9.18 ல் DG அவர்களை நமது பொதுச்செயலருடன் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்து பிரச்னைகளை விளக்கிப் பேசிய பின்னும் இவற்றில் எதிர்பார்த்த வேகமான முன்னேற்றமில்லை.

ஆட்பற்றாக்குறை தீர்வுக்கு தற்காலிக தீர்வாக விருப்பமுள்ள,
தகுதியுள்ள  தபால் காரர், MTS, GDS இவர்களின் சேவையைப் பயன்படுத்திக் கொள்வதில் இவற்றில் ஏதாவது ஒன்றிற்கு உத்திரவு வழங்கிட 
DG யிடம்கடந்த 6.9.18 அன்று மனு அளித்துப் பேசினோம். அதில் முடிவெடுக்க இலாக்கா தயங்குகிறது.

இதனையே கடந்த 28.9.18 ல் நடைபெற்ற தமிழக RJCM கூட்டத்திலும் CPMG மற்றும்இதர PMG க்கள் அடங்கிய கூட்டத்தில் இதனை வலியுறுத்திப் பேசினோம். அப்போது பரிசீலிப்பதாக தெரிவித்தவர்கள் தற்போது அதற்கு சட்டரீதியாக Offg Pay வழங்குவதில் சிக்கல் இருப்பதாலும் CSI Environment ல் இவ்வாறு செய்திட பிரச்னை உள்ளதாகவும் அதனால் இந்த ஆலோசனையை செயல்படுத்த 
இயலாது என்றும் தெரிவித்துள்ளார்கள். 
ஆட்பற்றாக்குறையோ நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  பிரச்னைகளோ நாளுக்கு நாள் பெருகிவருகிறது. 

நம்முடைய மாநிலச் சங்கத்தின் தொடர் முயற்சியால் இந்த நிதியாண்டில் புதிய கணிகள் பெறுவதற்கு 2250 கணிகளுக்கு நிதி ஒதுக்கீடு நமது துறையிலிருந்து பெற்ற போதும் கணிணி வழங்குவதில் GeM Port ல் order place செய்து கணிணி பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. ஏப்ரலிலேயே நிதி ஒதுக்கீடு பெற்றதாக நமக்கு RJCM ல் பதில் அளித்திருந்தும் இதுவரை இதில் மெத்தன நடவடிக்கையே உள்ளது. முன்னேற்றமில்லை. 

நிலைமைகள் இவ்வாறிருக்க IPPB, RICT, Target என பிரச்னைகள் நாளுக்கு நாள் கண்மூடித்தனமாக பெருகிவருகின்றது. 

எனவே உடனடியாக இவையும், இவை போன்ற இதர  பிரச்னைகளின் மீதும் உடனடியாக தீர்வு கோரி மாநில அளவில் மீண்டும் நாம் போராட்டத்தைக் கையிலெடுக்க வேண்டுமென 
பல மாநிலச் சங்க நிர்வாகிகள் கோரியதன் அடிப்படையில் இன்று நமது அஞ்சல் மூன்று மாநிலத் தலைவருடன் கலந்து பேசினோம். அவரும் இதன்மீது உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆலோசனை வழங்கினார். எனவே நவம்பர் முதல் வாரம் முதல் நமது பிரச்னைகளின் மீது பல கட்ட போராட்டங்களை தமிழ் மாநில அஞ்சல் 
மூன்று சங்கம் அறிவித்து நடத்திட முடிவெடுத்துள்ளது.
---------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி .போராட்ட வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை அன்பார்ந்த தோழர்களே !
       NFPE சம்மேளன செயலரும் அஞ்சல் மூன்றின் உதவி பொதுச்செயலருமான தோழர் S .ரகுபதி அவர்களுக்கு 28.10.2018 அன்று சென்னை வடகோட்ட சங்கத்தின் சார்பாக நடைபெற்ற பணிஓய்வு பாராட்டு விழாவில் நமது NCA பேரவையின்  தலைவர் C .அமிர்தலிங்கம் முன்னாள் மாநிலசெயலர் தோழர் Vபார்த்திபன் வடசென்னை தோழர் முத்து பேரவையின் பொருளாளர் தோழர் சின்னி கிருஷ்ணன் உள்ளிட்டோர் நமது பேரவையின் சார்பாக கலந்துகொண்டு வாழ்த்தினார்கள் .அன்பார்ந்த தோழர்களே !
 நெல்லை அஞ்சல் மூன்றின் முக்கிய தளபதிகளில் ஒருவரும் 1991 முதல் இயக்கப்பணிகளில் என்னோடு இனைந்து பணியாற்றிக்கொண்டிருக்கின்ற என் இனிய நண்பர்களில் ஒருவருமான தோழர் C .வண்ணமுத்து அவர்களின் மகள் திருமண நிச்சயார்த்த விழா 28.10.2018 அன்று திருநெல்வேலி டவுனில் மிக சிறப்பாக நடைபெற்றது .விழாவிற்கு வந்து சிறப்பித்த நமது நண்பர்களோடு 
எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ..Saturday, October 27, 2018

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
      நேற்று 26.10.2018 அன்று நடைபெற்ற நமது கோட்ட மாதாந்திர பேட்டியில் எடுக்கப்பட்ட முடிவுகளை உங்களுக்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் .சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் கோட்டம் முழுவதுமுள்ள ஊழியர்களின் பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன .இதோ அதன் விவரங்கள்
1.பாளையம்கோட்டை தலைமை அஞ்சல் வளாகத்திற்குள் மீண்டும் கேன்டீன் தொடங்க ஏற்றுக்கொள்ளப்பட்டது .
2.நீதிமன்ற வழக்குகளுக்கு PA /APM கேடரில் இனி எந்த ஊழியர்களையும் வாய்தாவிற்கு அனுப்பக்கூடாது என்றும் இதுகுறித்து மண்டல அலுவலக LEGALCELL  வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படும் என்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டது .
3.பாளையம்கோட்டை சேமிப்பு கவுண்டர்களில் இணைக்கப்பட்ட கூடுதல் வேலைகளான CC பிரிட்ஜ் கமிஷன் ஷெடுல் மற்றும் KYC பணிகள் இவைகளை மீண்டும் BACK OFFICE க்கு திருப்பப்படும் என்றும் இதுகுறித்து புதிய MDW 12.11.2018 குகள் அனைத்து ஊழியர்களின் சம்மதத்தோடு தயாரிக்கப்பட்டு கோட்ட அலுவலகத்திற்கு அனுப்பவும் நேற்றே போஸ்ட்மாஸ்டர் பாளையம்கோட்டைக்கு தாக்கீது அனுப்பப்பட்டுவிட்டது .
4.திருநெல்வேலி HO விற்கு இரண்டு LRPA மற்றும் அம்பை HO விற்கு விருப்பத்தின் அடிப்படையில் ஒரு தோழியரும் இணைக்கப்படவுள்ளனர் .இதுகுறித்து நேற்றே உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது
5.01.01.2006 முதல் அந்தந்த கேடருக்கு உரிய ஆரம்பநிலை அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கவேண்டும் என்ற 03.10.2018 உத்தரவை விரைவில் அமுல்படுத்த உறுதியளிக்கப்பட்டது .இதனால் நமது தோழர்கள் ஹாஜி அலி நமசிவாயம் மந்திரமூர்த்தி கனகராஜேஸ்வரி உள்ளிட்ட எட்டுக்கும் மேற்பட்ட தோழர்கள் ஊதிய உயர்வு பெறுவார்கள் .
6.CEA வை பொறுத்தவரை மாதம் ரூபாய் 2250 என கணக்கிட்டு அனைவர்க்கும் கொடுக்கப்படும் .ஏற்கனவே CEA வாங்கிருந்தாலும் 17.07.2018 உத்தரவு படி அனைவர்க்கும் DIFFERENCE OF PAYMENT கணக்கிடப்பட்டு கோட்ட அலுவலகத்தில் இருந்தே PAYMENT குக்கான SANCTION வழங்கப்படும் .தனித்தனியாக யாரும் விண்ணப்பிக்க தேவையில்லை .
7.ATR நிரப்புவதற்கான TRANSFER கமிட்டி அடுத்தவாரம் கூடுகிறது .
TREASURY யில் பணியாற்றும் LSG ஊழியர்களின் இடமாறுதல் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் .
8.பாளையம்கோட்டை  தலைமை அஞ்சலக கட்டிட பராமரிப்பு பணிகள் குறித்து சிவில் விங் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது 
9.தொண்டர் பஜார் அலுவலகத்திற்கு இடம் கொடுக்க விரும்பும் உரிமையாளருக்கு வாடகை நிர்ணயம் சம்பந்தமாக கடிதம் அனுப்பப்படும் .
10.01.01.1986 க்கு முன்பு பயிற்சிக்கு சென்ற ஊழியர்களின் பயிற்சிக்காலத்தை TBOP /BCR கணக்கீட்டிற்கு எடுக்கும் உத்தரவிலும் துரித நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது .இதனால் பல மூத்த தோழர்கள் (குமாரி விஜயராணி ராஜகுமாரி சுடலையாண்டி சுப்ரமணியம் ) பயன்பெறுவார்கள் .
11.UPS பேட்டரி மற்றும் ஜெனெரேட்டர் பிரச்சினைகளை குறித்தும் விவாதிக்கப்பட்டது .விரைவில் புதிய பேட்டரிகள் கிடைக்கும் .
12 விடுபட்ட இரண்டு ஊழியர்களின் CEA BILL தோழர் சரவணன் தோழியர் கிருஷ்ணவேணி தபால்காரர்கள் சங்கர்நகர் ஆகியோருக்கு கோவில்பட்டி கோட்ட அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு விவரங்கள் பெறப்பட்டு ON THE SPOT  இருவருக்கும் BILL SANCTION செய்யப்பட்டுவிட்டது .
                  ஆட்பற்றாக்குறை டெபுடேஷன் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்தும் ஆழமாக விவாதிக்கப்பட்டது .இருந்தாலும் விடுப்பு வழங்குவதில் எந்த தாமதமும் இல்லாமல் வழங்கப்படுவதாகவும் RULE 38 யில் ஊழியர்கள் வரும்பொழுது புறநகர் பகுதிகளில் அவர்களை பணியிடமாற்றம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது .
            மேலும் முழு விவரங்கள் நடவடிக்கை குறிப்புகள் கிடைத்தவுடன் உங்கள் பார்வைக்கு அனுப்பிவைக்கப்படும் .
நன்றி .தோழமையுடன் SK ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 
  

Friday, October 26, 2018

                                                        முக்கிய செய்திகள் 
தபால்காரர் /MTS யில் இருந்து PA /SA பதவிக்கான தேர்வு 09.12.2018 அன்று நடைபெறுகிறது 2016-2017  & 2017-2018(01.04.2018-31.12.2018 ) காலிபணி இடங்களுக்கான தேர்வு இது .VACANCY  விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் .தேர்வு எழுதுவதற்கான வாய்ப்புகள் 8 மற்றும் 10 என உள்ளது .தேர்விற்கு தயாராகும் தோழர் /தோழியர்களுக்கு NELLAI NFPE யின் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் 
-----------------------------------------------------------------------------------------------------------------------                          RICT நெட் ஒர்க் தேடி அலையும் பரிதாப நிலை 

சில BO கள் இருக்கும் பகுதி முழுவதும் அஞ்சல் வாரியம் கொடுத்த SIM  கவரேஜ் இல்லை .சிலருக்கு தெருமுனையில் தான் கிடைக்கிறதாம் -சிலர் அலுவலகத்தை விட்டுவிட்டு மொட்டை மாடியில் தவம் கிடக்கின்றனர் .இதையெல்லாம் திட்டமிட்டு எந்தெந்த பகுதிகளில் எந்தெந்த நெட்ஒர்க் இருக்கிறது என்பதை பார்த்து அதற்கேற்றாற்போல் அந்தந்த கம்பெனி SIM வழங்கியிருக்கலாம் 
----------------------------------------------------------------------------------------------------------------------
                                                நீதி வென்றது !
மூலைக்கரைப்பட்டி அம்பலம் BO வில் ரூபாய் 1400 விவகாரத்தில் REMOVED FROM ENGAGEMENT என கோட்ட அலுவலகத்தால் வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல் முறையிடு செய்யப்பட்ட வழக்கில் நேற்று மீண்டும் அந்த ஊழியருக்கு REMOVAL என்பது நிறுத்தப்பட்டு மீண்டும் பணி வழங்க உத்தரவு நமது இயக்குனர் திரு .பவன்குமார் IPS அவர்களால் வழங்கப்பட்டுள்ளது .இந்த வழக்கை எடுத்து நடத்தி வெற்றி கண்ட தோழர் பாலசுப்ரமணியன் ASP OD (RETD) அவர்களுக்கும் நமது ஆலோசகர் அண்ணன் சின்ராஜ் முன்னாள் மண்டல செயலர் மதுரை அவர்களுக்கும் NELLAI NFPE யின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் 
-----------------------------------------------------------------------------------------------------------------
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Thursday, October 25, 2018

    அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
        நாளை 26.10.2018 அன்று நடைபெறும் மாதாந்திர பேட்டிக்கு கீழ்காணும் பிரச்சினைகளை நமது அஞ்சல்மூன்று சங்கம் சார்பாக கொடுத்துள்ளோம் .மீதமுள்ள பிரச்சினைகளை additional subject ஆக இன்று கொடுக்கப்படும் .இதற்கிடையில் கடந்த பேட்டியில் தீர்க்கப்பட்ட பிரச்சினைகள் .
1.டெபுடேஷன் பிரச்சினையில் 17.09.2018 அன்று கோட்ட அலுவலகம் பழைய உத்தரவை (06.04.2016) மாற்றி 17.09.2018 அன்று புதிய உத்தரவை பிறப்பித்தது  
 2.விடுபட்ட அலுவலகத்தில் இருந்தும் தற்போது டெபுடேஷன் அனுப்பப்படுகிறது 
3.ATR பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன 
4.LSG பதவிகளுக்கு ஆட்கள் நிரப்பப்பட்டுள்ளன  .

5.TVLRS க்கு SPPEDPOST INCENTIVE வழங்கப்பட்டுவிட்டது 
6.திருநெல்வேலி BPC க்கு நிரந்திர ஆள் நியமிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவிட்டது .
7...பணகுடி SO வில் 1+2 பதவிகள் பராமரிக்கப்படும் .
8..திருநெல்வேலி CPC க்கு ஒரு GDS பதவி(OUTSIDER ) 22.10.2018 முதல்  கொடுக்கப்பட்டுவிட்டது 
9.விருப்பமில்லாத ஊழியர்கள் கோட்ட அலுவலகத்தில் இருந்து மாற்றப்பட்டுள்ளனர் 


NFPE
ALL INDIA POSTAL EMPLOYEES UNION GR-C                                                                         TIRUNELVELI DIVISIONAL BRANCH
TIRUNELVELI—627002
No.P3-MM/ dated at Palayankottai- 627002 the 24.10.2018
                                                                               To

The Sr. Supdt. of Post Offices,
Tirunelveli Division
Tirunelveli-627002

Sir,
            Sub:    Subjects for monthly meeting -reg
****
              The following subjects may kindly be included for discussion during the monthly meeting.

1.        It is requested to take action for the functioning of the canteen at Palayankottai HO which was temporarily closed.

2.        Nowadays court attendance is entrusted to PA Cadre which is against the instructions of the R.O.  It is requested to entrust the court case monitoring to IP/ASP Cadre.

3.        SB Counters of Palayankottai HO are already overburdened and hence it is requested to withdraw the additional works viz., CC Bridge, KYC maintenance, Commission bills etc., which can be entrusted to the officials working in back office.

4.        MDW of SB Branch of Palayankottai HO has not been revised even after introduction of several new works.  Hence, it is requested to take action to revise the MDW of SB Branch of Palayankottai HO which is obsolete now.

5.        Request for early passing of MIS Honorarium bills.  It is requested to kindly sanction the same which will also be a motivating factor for the hard working staff.

6.        It is seen that the LRPA of Palayankottai HO is attached to Divisional Office which results in hindrance to deputation for the very purpose LRs are designated/ordered.

7.        Request to attach one more LR PA to Tirunelveli HO to manage the frequent deputations ordered by the D.O.

8.        During rainy season, major portion of the Tirunelveli HO is immersed in water accumulation.  It is requested to take action to provide drainage facility for smooth flowing of rain water and to raise the ground level to prevent water stagnation.


9.        Request to re-fix the pay of the officials w.e.f 01.01.2006 who are promoted in the light of the Directorate Lr No. 7-2/2016-PCC(Pt.)  dated 03.10.2018 communicated in RO Lr No. EST/121-21/CPC-Rlg/2016 dated 11.10.2018

10.    Request to replace the exhausted UPS batteries of the following offices.(a) Ittamozhi (b)Jawaharnagar (c)Gandhunagar (d)Delivery branch Palayamkottai

11.    Request to supply of UPS Batteries for the following offices(a)VKPuram (b)Cheranmahadevi (c) Kadayam

12.    Request to improve the staff position of Ambasamudram HO

13.    Request to supply of sufficient stock of SBPassbooks.which isnot available in months together.

14.    Request to shift the PO Building of Kadayam SO

15.    Request for early passing of pending TA bills of MMS Tirunelveli

16.    Request to grant of remaining amount of CEA as per the latest orders of Ministry of Personnel (Dept of personnel &Training ) OM no A-27012/02/2017 –Est (AL)dtd 16.08.2017&OM NO-A-27012/02/2017dtd 17.07.2018 to all  eligible staffs of Tirunelveli Division

17Non-functioning of gen-set at TKallikulam

18..Request to supply of additional system to Delivery branch Palayamkottai

 The following officials will attend the meeting.
1.      S.K.Jacobraj  Divisional Secretary &LSG PA CPC Tirunelveli HO
2.      V.Sharavanan PA Palayamkottai HO
3.      R.V.Thiyagarajapandiyan Branch Secretary & SPM Alwarkurichi


             
                         Yours faithfully

SK.JACOBRAJ 

Wednesday, October 24, 2018

அன்பார்ந்த தோழர்களே !
    மீண்டும் அஞ்சலகத்தில் நெட்ஒர்க் பிரச்சினை தலைவிரித்தாட தொடங்கிவிட்டது .SAP கிடைக்கவில்லை என்றால் EXCELL மூலம் பணிசெய்ய ஊழியர்கள் பணிக்கப்படுகிறார்கள் .வழக்கம்போலவே நிர்வாகமும் TCS TEAM அதை சரிசெய்து கொண்டிருகிறார்கள் என்ற ரெடிமேட் பதிலை தந்துகொண்டிருக்கிறது .ஊழியர்களின் மனஉளைச்சல் ஒருபுறம் -அஞ்சல் துறையின் மீதுள்ள நம்பிக்கை பொதுமக்களிடம் இருந்து மெல்ல மெல்ல தகர்ந்து வருவது ஒருபுறம் --TCS நிர்வாகத்தை தட்டிக்கேட்கவோ உத்தரவிடவோ அஞ்சல்துறையின் மேல்மட்டங்கள் தயங்குவது ஏன் ?ஏன் ?
------------------------------------------------------------------------------------------------------------------
பதவி உயர்வில் வந்தவர்களுக்கு புதிய பதவியில் உள்ள ஆரம்பநிலை ஊதியத்தில் தான் சம்பளம் நிர்ணயம் செய்ய வேண்டும் Dop order no 7-2/2016-pcc regarding entry pay dated at dak bhawan the 03.10.2018
இதன் அடிப்படையில் திருப்பூர் கோட்டத்தில் இரண்டு ஊழியர்களுக்கு ஊதியம் மறுநிர்ணயம் செய்யப்பட்டுள்ளது -6வது ஊதியகுழு 01.01.2006 முதல் அமலாக்கப்பட்டபோது 01.01.2006க்கு முன்பு 2004,2005 ஆண்டுகளில்  தபால்காரரர்களாக பணிநியமனம் செய்யப்பட்டவர்கள் 01.01.2006 பின் பணிநியமனம் செய்யப்பட்ட தபால்காரர்களை விட குறைவான ஊதியம் பெற்று வந்தனர். அதாவது 01.01.2006 பிறகு பணிநியமனம் பெற்ற  தபால்காரர்களுக்கான தொடக்க ஊதியம் ரூ8460. ஆனால் 30.12.2005 க்கு முன்பு பணிநியமனம் செய்யப்பட்ட தபால்காரர்களுக்கான ஊதியம் ரூ8060 மட்டுமே. இதனால் சீனியர்கள் ஜூனியர்களை விட குறைவான ஊதியம் கடந்த 12 ஆண்டுகளாக பெற்று வந்தனர். இது குறித்து 6வது ஊதியக்குழுவின் ANOMALY COMMITTE யிடம் NFPE சார்பில் பலமுறை கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது. பல ஊழியர்கள் நியாயம் கேட்டு நிர்வாக தீர்ப்பாயம் , நீதிமன்றங்களை நாடி சாதகமான தீர்ப்பு பெற்றும்  ஊதிய முரண்பாடுகள் களையப்படாமல் இருந்து வந்தது.  ஊழியர்கள் தரப்பின் கோரிக்கையின் பயனாக ஊதிய முரண்பாடுகளை தீர்க்க
28.09.2018ல் மத்தியநிதி அமைச்சகம் அனைத்து மத்திய அரசு துறைகளுக்கும் பொருந்தக்கூடிய உத்தரவு வெளியிட்டது. நமது கோட்டத்தில் ஏற்கனவே நாம் STEPPING UP மூலம் சில உயர்வுகளை பெற்றிருந்தாலும் ஆரம்ப ஊதியமே இங்கு மாற்றப்படவிருக்கிறது .இது குறித்து இந்த மாத மாதாந்திர பேட்டியில் இது குறித்து விவாதிக்கப்படவிருக்கிறது 
-----------------------------------------------------------------------------------------------------------------------
இந்தமாத மாதாந்திர பேட்டி 26.10.2018 மாலை 3 மணிக்கு நடைபெறவிருக்கிறது .அஞ்சல் மூன்றின் சார்பாக 
தோழர்கள் SK .ஜேக்கப் ராஜ் -V .சரவணன் பாளை --RV.தியாகராஜ பாண்டியன் அம்பை ஆகியோர் கலந்து கொள்கிறார்கள் .
-----------------------------------------------------------------------------------------------------------------
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை Tuesday, October 23, 2018

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
  நமது நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்றான திருநெல்வேலி CPC க்கு தனியாக ஒரு GDS பதவியை  REDEPLOYMENT மூலம் பெற்றுத்தர வேண்டும் என்ற கோரிக்கைகளில் அதன் கோப்புகள் RO வில் இருந்து மீண்டும் மீண்டும் ஒவ்வொரு காரணங்களுக்காக திருப்பி அனுப்பப்பட்டு கொண்டிருந்த வேளையில் நமது திருநெல்வேலி HO இதர MTS வேலைச்சுமைகளை குறைத்திடும் பொருட்டு TIRUNELVELI CPC  பிரிவிற்கு 22.10.2018 முதல் OUTSIDER  ஒருவரை 5 மணிநேரத்திற்கு 
பணியாற்றிட அனுமதித்த நமது கோட்ட கண்காணிப்பாளர்
 திரு R .சாந்தகுமார் அவர்களுக்கு கோட்ட சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம் 
----------------------------------------------------------------------------------------------------------------------
                        அஞ்சல் நான்கின் கோட்ட சங்க செயற்குழு 
நாள் 25.10.2018 வியாழன்  மாலை 05.30 மணி 
இடம் பாளையம்கோட்டை HO
தலைமை தோழர் A .சீனிவாசசொக்கலிங்கம் அவர்கள் 
பொருள் 1.டிசம்பர் 29.12.2018 & 30.12.2018 அன்று கோவையில் நடைபெறும் மாநிலமாநாடு 
                     .2. 01.01.1996 முதல்  விடுபட்ட  தகுதியுள்ள அனைத்து தபால்காரர்களுக்கும் வழங்கவேண்டிய நிலுவைத்தொகை குறித்து 
 இன்னும் பிற ( தலைவர் அனுமதியுடன் ) 
                    அனைவரும் வருக ! 
                                     தோழமையுடன் SK .பாட்சா கோட்ட செயலர் அஞ்சல் நான்கு 
---------------------------------------------------------------------------------------------------------------------- 

Saturday, October 20, 2018

                                                     முக்கிய செய்திகள் 
அனைத்து GDS ஊழியர்களுக்கும்  இலாகா அடையாள அட்டை வழங்கிட அஞ்சல் வாரியம் 17.10.2018 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளது .அடையாள அட்டை பெற்றிட ஒரு வெள்ளைக்காகிதத்தில் விவரங்களை குறிப்பிட்டு இரன்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் சம்பந்த்ப்பட்ட SAS மூலம் கோட்ட அலுவலகத்திற்கு அனுப்பவேண்டும் .
-------------------------------------------------------------------------------------------------------------------------
 MACP பதவியுயர்வு என்பது ஆறாவது சம்பளக்குழு அமுலாக்கதேதியில் இருந்து பொருந்தும் என்று மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது .MACP என்பது ஊதியம் மற்றும் கிரேடு ஊதியதோடு தொடர்புடையது .அதை ALLOWANCE  பிரிவில் சேர்க்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது 
---------------------------------------------
-DOPT: OFFICIAL DEALINGS BETWEEN THE ADMINISTRATION AND MEMBERS OF PARLIAMENT AND STATE LEGISLATURES - OBSERVANCE OF PROPER PROCEDURE

F.No. 11013/4/2018-Estt.A-III
Government of India
Ministry of Personnel, Public Grievances and Pensions
Department of Personnel & Training
Establishment Division
North Block, New Delhi
Dated 11 October, 2018
OFFICE MEMORANDUM

Subject: Official dealings between the Administration and Members of Parliament and State legislatures - Observance of proper procedure.

The undersigned is directed to refer to this Department’s Office Memorandum No. 11013/4/2011-Estt.(A) dated 1st December 2011 subsequently reiterated vide D.O. letter dated the October 9, 2012 from Secretary (Personnel), O.M. No. 11013/2/2012-Estt.A. dated 19.11.2014 and O.M. of even No. dated 7.02.2018 (copies enclosed) on the subject mentioned above and to reiterate these instructions for strict compliance on the recommendations of the Committee of Privileges, Lok Sabha in its Sixth Report tabled in the Lok Sabha on 20.12.2017 and Committee on Violation of Protocol Norms and Contemptuous Behaviour of Government Officers with Members of Lok Sabha in its Fourth and Fifth Report tabled in the Lok Sabha on 01.08.2018.

2.         All Ministries/ Departments are requested to ensure that instructions issued through aforementioned communications are followed by all officials concerned, both in letter and spirit. Violation of these guidelines will be viewed seriously.

3.         Chief Secretaries of all States/ UTs are requested circulate these instructions to all State Government officials at the State/ Division and District levels and sensitize them with regard to their duties and obligations in so far as the movement of Members of Parliament in general and more particularly during Parliament sessions. It is also requested to periodically review implementation of these instructions.

4.         Hindi version will follow
(Nitin Gupta)
Under Secretary to the Government of India
Tel: 011-23040264
Source: DoPT-----------------------------------------------------------------------

Tuesday, October 16, 2018

                                          முக்கிய செய்திகள் 
PRODUCTIVITY LINKED BONUS FOR THE ACCOUNTING YEAR 2017-18  CLICK HERE TO VIEW
--------------------------------------------------------------------------------------------------------------------

Important judgement in favor of terminated officials based on false certificate (ST)


IMPORTANT JUDGEMENT 
CLICK HERE  FOR FULL COPY OF THE JUDGEMENT
--------------------------------------------------------------------------------------------------------------------------

DATE OF BIRTH IN AADHAAR CAN BE CHANGED MORE THAN ONCE

PROCEDURE FOR UPDATING DATE OF BIRTH, NAME AND GENDER IN AADHAAR CARD MORE THAN ONCE – AADHAAR CARD HOLDER SHOULD APPROACH REGIONAL OFFICE ALONG WITH SUPPORTING DOCUMENT

--------------------------------------------------------------------------------------------------
GPF INTEREST RATE 8% FROM OCTOBER 2018


 INTEREST RATE FOR GENERAL PROVIDENT FUND HAS BEEN INCREASED TO 8% FROM OCTOBER 2018

Monday, October 15, 2018

                                         நெஞ்சின்  நீங்கா  நினைவலைகள் -3
அண்ணன் பாலு அவர்கள் மாநிலசெயலராக இருந்தபோது இலாகா விதிகளை மதிக்காமல் செயல்பட்ட அன்றைய CPMG  ஒருவருக்கு ஏற்பட்ட நிலையினை பாரீர் ! பாரீர் !
 1996 யில் தமிழகம்  முழுவதும்  அ லுவலக மூடல் ஆட்குறைப்பு வாய்மொழி உத்தரவில் சட்டத்திற்கு புறம்பான செயல் என தான்தோன்றி தனமாக செயல்பட்ட  அன்றைய CPMG  அவர்களை கண்டித்து தமிழக அஞ்சல் மூன்று மாநிலச்சங்கம் மட்டும் களமிறங்கியது .NFPE யில் உள்ள பிற அனைத்துசங்கங்களும் ஏனைய சங்கங்களும் CPMG க்கு ஆதரவு நிலையெடுத்தது .இலாகா முதல்வரின் ஒப்புதல் இல்லாமலேயே தாம்பரம் கோட்டத்தில் இருந்து சுமார் 26 அலுவலகங்களை சென்னையில் உள்ள பிற கோட்டங்களில் இணைத்தது -விதிகளுக்கு புறம்பாக இட மாறுதல் உத்தரவுகள் -வேலைவாய்ப்பு அலுவலக மூலமல்லாமல் காசுவால் ஊழியர் நியமனம் -விளையாட்டு வீரர் ஒதுக்கீட்டில் முறைகேடு என காட்டுதர்பார் நடந்த நேரம் .அண்ணன் பாலு மட்டும் தனியாளாக நின்று போராடி வெற்றி பெற்றார் .போராட்ட அறிவிப்பை அறிவித்துவிட்டு ஓய்வெடுக்கும் தலைவரல்ல அண்ணன் பாலு -தொடர் முயற்சியில் இறங்கினார் .அஞ்சல் வாரிய தலைவரிடம் மனு -பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சகங்களுக்கு நேரில் சென்று ஊழல் பட்டியல் -நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வராசு மற்றும் அழகர் சாமி அவர்கள் துணையுடன் டெல்லியில் முகாமிட்டு டெல்லியில் உள்ள விஜிலென்ஸ் கமிஷன் முன்பு சாட்சியம் மற்றும் சென்னையில் உள்ள CBI அலுவலகம் மூலம் மனு எனஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை எ டுத்து அந்த அதிகாரியை திக்குமுக்காட வைத்தவர் அண்ணன் பாலு .அதன் விளைவு அந்த அதிகாரி BLACK LIST யில் கொணரப்பட்ட  அச்சு கம்பெனிக்கு அச்சுப்பணிகள் வழங்கியது விளையாட்டு மலர் வெளியிட தேவையான பேப்பர்களை வாங்கியதில்  விதிமீறல் நடந்தன என்று  நிரூபிக்கப்பட்டு அவரிடம் ரூபாய் 75000 UCR கட்ட அறிவுறுத்தப்பட்டு அவரும் பணத்தை UCR யில் பணத்தை கட்டினார் .  .மேலும் அவருக்கு கிடைக்கவேண்டிய பதவி நீட்டிப்பு மறுக்கப்பட்டது இறுதியாக ஓய்வூதியத்தில் ஒருபகுதி தடை செய்ய பட்டது .ஊழியர் நலனுக்கு எதிராக செயல்படும் அதிகாரி அவர் எந்த பொறுப்பில் இருந்தாலும் தயங்காமல் தட்டிக்கேட்கும் போர்க்குணம் அண்ணன் பாலு ஒருவருக்கே உண்டு ...
 நன்றி .இந்த கட்டுரையை வடித்தவர் மாயவரம் தந்திட்ட மகத்தான தலைவர் தோழர் மருது சாமி --முன்னாள் மாநில உதவி செயலர் மயிலாடுதுறை .