...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, March 31, 2017

அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் வழக்கம்போல் வட்டி குறைப்பு 

06:56 (1 hour ago)
t

                                    நெல்லை செய்திகள் 
நமது அஞ்சல் நான்கின் உறுப்பினரும் மஹாராஜநகர் அஞ்சலக தபால் காரரு மான தோழர் தர்மா அவர்கள் புதுடெல்லியில் நடைபெற்ற  சிவில் சர்வீஸ் தடகள போட்டியில் (800 மீட்டர் )பிரிவில் 
மூன்றாம் இடத்தை பிடித்து வெண்கல பதக்கத்தை வென்றார் .தோழர் தர்மா அவர்களை நெல்லை NFPE வாழ்த்துகிறது .
(நன்றி தோழர் சாக்ரடிஸ் NFPE விளையாட்டு வீரர்கள் பிரிவு )
            டிஜிட்டல் இந்தியா -திட்டத்தின் கீழ் பணமில்லா பரிவர்த்தனை தொடர்பான சிறப்பு கூட்டம் பாளை தலைமை அஞ்சலகத்தில்  நேற்று நடைபெற்றது .நிகழ்ச்சியின் இறுதியில் நமது கண்காணிப்பாளர் எழுதிய பாடல் ஒன்றுக்கு உடனே மெட்டு கெட்டி பாடி அசத்தினார் நம் கரிசல் குயில் 

              தோழர் KVS அவர்களின் விதி அறிவோம் என்ற நூல் நேற்று நமக்கு கிடைத்தது .மிகவும் பயனுள்ள நூல் .முதல் கட்டமாக 10நூல் வந்தது அனைத்தும் விநியோகிக்கப்பட்டது .மேலும் பல தோழர்கள் நூல் வேண்டி கேட்கிறார்கள் .ஆகவே மேலும் நூல் வேண்டுவோர் கோட்ட சங்கத்தை அனுகவும் ( 9442123416)அனைத்து விதிகளையும் தொகுப்பது எளிதல்ல அதைவிட அதை தமிழ்மொழியில் தந்திருப்பது என்பது மிக சிறந்த பணி --பாராட்டுதலுக்கு உரியது .தோழர் KVS அவர்களின் தொழிற்சங்க பணிகளோடு இந்த பணிகளும் தொடர நெல்லை NFPE வாழ்த்துகிறது .
    வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்டசெயலர் 

பஞ்சபடி 2 சதம் உயர்வு --நிதிஅமைச்சக உத்தரவு 

கேடர் சீரமைப்புக்கு பிறகு ஒவ்வொரு மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்ட பதவிகள் 
தமிழகத்தில் 11209 PA பதவிகள் இருந்தது .தற்சமயம் அது 7851 ஆக குறைக்கப்பட்டுள்ளது .(அதாவது 3358எழுத்தர் பதவிகளை இழந்திருக்கிறோம் என்பதை 3358 உயர் பதவிகளை பெற்றிருக்கிறோம் என பாருங்களேன் )  .அகில இந்திய அளவில் 30069 எழுத்தர் பதவிகளை இழந்திருக்கிறோம் .மாறாக 588LSG  பதவிகள் இன்று 2967 ஆகவும் 99 HSGII பதவிகள் 1126 ஆகவும் 147 HSGI பதவிகள் 238 ஆகவும் 26 (NFG )HSGI ஆகவும் மாற்றப்பட்டுள்ளன .தமிழகத்தில் மட்டும் 30 சத எழுத்தர் பதவிகள் உயர் பதவிக்கு மாற்றப்பட்டுள்ளன .உயர்பதவிகளில் தற்காலிகமாக பணியாற்றும் ஊழியர்களுக்கு அப்பதவிகளுக்குரிய உயர் ஊதியம் இனி வழங்கப்படும்  

Thursday, March 30, 2017

Letter to Cabinet Secretary - Grievances of the Central 

Government Employees\



                                      நெல்லை கோட்ட  செய்திகள் 
அன்பார்ந்த தோழர்களே !
                  நேற்று 29.03.2017 நடைபெற்ற மாதாந்திர பேட்டி குறித்து சில தகவல்களை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன் .
* பாளையம்கோட்டை மகளீர் புதிய டைனிங் அறைக்கு நாம் கேட்ட படி அனைத்து உபகரணங்களும் வழங்க  கொடுக்கபட்ட கொட்டேசன் ஒப்புக்கொள்ளப்பட்டது .ஏற்றுக்கொள்ளப்பட்டது .
*நெல்லை கோட்டத்திற்கு புதிதாக 68 பாஸ்புக் பிரிண்டர் வந்துள்ளது .இன்றுமுதல் அவைகள் SO களுக்கு அனுப்பப்படும் .
*புதிய கட்டிடத்திற்கு மாற்றலாகி செல்லும் நெல்லை டவுண் HSG I அலுவலகத்திற்கு ஊழியர்களின் விருப்பப்படியே அனைத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன .
*பாளையம்கோட்டை சைக்கிள் ஷெட் விரிவாக்க பணி சிவில் பணியில் சேர்க்கப்பட்டு மண்டல அலுவலகத்திற்கு சென்றுள்ளது .
*TR/ATR பதவிகளுக்கு பெறப்பட்ட விருப்ப விண்ணப்பங்கள் கேடர் சீரமைப்பு காரணத்தினால் ரத்து செய்ய படுகிறது 
* பஞ்சிங்  INCREMENT குறித்து  இன்று 30.03.2017  நல்ல முடிவு எடுக்க படும் .(நேற்று நேரமானதால் கோட்ட அலுவலக ஊழியர்களிடம் சில சந்தேகங்களுக்கு விளக்கம் பெற முடியவில்லை  )
*MTS குறைக்கப்பட்ட அலுவலகங்களில் முதற்கட்டமாக சேரன்மகாதேவி அலுவலகத்திற்கு  ஒரு GDS பேக்கர்  கொடுப்பதற்கான பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது .
*பொட்டல் புதூர்  GDS MD பதவி  உடேனே OUTSIDER மூலம் நிரப்பிட ASP அம்பைக்கு அறிவுறுத்த படும் .
*திருநெல்வேலி டெபுடேஷன் குறித்து நமது NFPE சங்கத்தின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு பழைய நிலையே தொடரும் என்று உறுதி செய்யப்பட்டது .இந்த விஷயத்தில் ASP HOS அவர்கள் தான் யார் பெயரையும் குறிப்பிட்டு திருநெல்வேலி போஸ்ட்மாஸ்டர் யிடம் தெரிவிக்கவில்லை என்று தெளிவு படுத்தினார் .
*ஒரு சங்கத்தின் நடைமுறை குறிப்புகளை காட்டி அலுவலகத்தை இயக்க முடியாது என்ற நமது வாதத்தை நிர்வாகம் ஏற்று கொண்டது .
*திருநெல்வேலி போஸ்ட்மாஸ்டர் குறித்த இலாகா பண முறைகேடு குறித்து கோட்ட சங்கம் சார்பாக எழுத்துப்பூர்வமான புகார் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது .அவர்மீது இலாகா விசாரணை வேண்டி வருகிற 04.04.2017 அன்று நடைபெறும் ஆர்ப்பாட்டம் குறித்தும் கடிதம் கொடுக்க பட்டுள்ளது .
(நேற்றைய பேட்டி மாலை 17.40 க்கு தொடங்கி இரவு 19.35 வரை நடந்தது) .
                                                     நன்றி 
                                                  தோழமை வாழ்த்துக்களுடன் 
                                                    SK .ஜேக்கப் ராஜ் கோட்டசெயலர் 

Wednesday, March 29, 2017

                               நெல்லை கோட்ட செய்திகள் 
ருகிற 04.04.2017 அன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நம்மோடு இணைந்து போராட அஞ்சல் நான்கு சங்கமும் -GDS சங்கமும் பங்கேற்கும் என அதன் செயலர்கள் அறிவித்திருப்பது மிக்க மகிழ்ச்சி .செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் நமது தீர்மானங்கள் அடங்கிய கடிதத்தை மாநில /மண்டல செயலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது .
                                        NPS குறித்த கருத்தரங்கம் 
நமது நெல்லை கோட்டத்தின் சார்பாக நடத்தப்படவிருக்கும் புதிய பென்ஷன் குறித்த கருத்தரங்கம் மே மூன்றாம் வாரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளோம் .அதன் அமைப்பாளர் தோழர் G.சிவகுமார் PA மானுர் அவர்களுக்கு அனைவரும் ஒத்துழைப்பை நல்கும் படி கேட்டு கொள்கிறோம் .
                                           மாதாந்திர பேட்டி 
  நெல்லை கோட்ட மாதாந்திர பேட்டி இன்று 29.03.2017 மாலை நடைபெறுகிறது .
                                         MUTUVAL   TRANSFER 
தோழர் S.சஜூ (SAGU )  PA போடிநாயக்கனுர் HO (தேனி கோட்டம் ) அவர்கள் நாகர்கோயில் அல்லது கோவில்பட்டிகோ ட்டத்திற்கு வர விரும்புகிறார் .தேனி கோட்டத்திற்கு (நெல்லை அல்லது நாகர்கோயில்) செல்லவிரும்புகிறவர்கள் தோழர் சஜூ அவர்களை தொடர்பு கொள்ளலாம் .8056453704  
                                           மற்றவை நாளை  
                                                                                தோழமையுடன் 
                                                                  SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் 

Request for payment of salary and pension on 01.04.2017 - TN 

Circle Union


Tuesday, March 28, 2017

VERY IMPORTANT JUDGEMENT FROM HON'BLE HIGH COURT OF MADRAS

IMPLEMENTATION OF MACP RETROSPECTIVELY W.E.F. 01-09-2008 AND DENYING PROMOTIONAL HIERARCHY UNDER ACP FOR THOSE WHO HAVE COMPLETED REQUIRED SERVICE DURING THE PERIOD BETWEEN 01-09-2009 TO 19-05-2009 HELD NOT LEGAL     

------------------

More than 2 dozen companies want collaboration with India Post Payments Bank

Press Information Bureau
Government of India
Ministry of Communications & Information Technology

27-March-2017 12:45 IST


More than 2 dozen companies want collaboration with India Post Payments Bank-Manoj Sinha 
Government has said that there are many companies who have approached the Department of Posts for collaboration with India Post Payments Bank. Replying to a question in the Rajya Sabha, the Minister of Communications Shri Manoj Sinha said that while the Department is in various stages of discussions with them, decision on formal partnerships will be taken after carefully evaluating the entire value proposition that they propose for the common man. The India Post Payments Bank had launched its two branches in Raipur (Chhattisgarh) and Ranchi (Jharkhand) on 30/01/2017 with basic products and banking services in partnership with Punjab National Bank.
Shri Sinha also said that the Payments Banks are different from regular Banks in the following fundamental   ways as per RBI guidelines for Licensing of Payments Banks:
 (i)     Payment Banks are not allowed to undertake lending activities directly. It can accept demand deposits only that is savings and current accounts and will initially be restricted to holding a maximum balance of Rs. 100,000(Rupees one lakh only) per individual customer.
(ii)    Payment Banks cannot accept Non Resident Indian (NRI) deposits.
(iii) The Payment Banks cannot set up subsidiaries to undertake non banking financial services activities.
A list of companies interested in partnering with India Post Payments Bank is attached at Annexure A.
Annexure A

List companies keen to partner with India Post Payments Bank.
1
YES Bank
2
Union Bank
3
Punjab National Bank
4
IDBI Bank (Industrial Development Bank of India)
5
SBI (State Bank of India)
6
Axis
7
Bank of Baroda
8
IDFC Bank (Industrial development finance company)
9
Deutshe Bank
10
Barclays Bank
11
Citibank
12
NABARD (National Bank For Agriculture & Rural Development)
13
HSBC (Hongkong and Shanghai Banking Corporation)
14
MICRO SAVE
15
Allahabad Bank
16
Indian Overseas Bank
17
Dena Bank
18
FIA (Financial Inclusion)
19
Kotak Mahindra Bank
20
United Bank of India
21
HDFC Life (Housing Development Finance Corporation)
22
Royal Sundaram
23
PNB Metlife (Punjab National Bank)
24
ICICI Lombard ( Industrial Credit and Investment Corporation of India Bank)
25
ICICI Prudential ( Industrial Credit and Investment Corporation of India Bank)
26
Bajaj Allianz Life
---------------------------------------------------------------

                                     கோட்ட சங்க செயற்குழு முடிவுகள் 
நமது கோட்ட சங்கத்தின் செயற்குழு கோட்டத்தலைவர் தோழர் KG.குருசாமி அவர்கள் தலைமையில் பாளையம்கோட்டையில் 27.03.2017 அன்று சிறப்பாக நடைபெற்றது .கீழ்கண்ட முடிவுகள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன .
1.NFPE GDS கோட்டசெயலர் தோழர் E .காசிவிஸ்வநாதன் அவர்களின் PUTOFFDUTY யை நமது வேண்டுகோளை ஏற்று ரத்து செய்து கொடுத்த நமது முதுநிலை கண்காணிப்பாளர் திரு .VPC  அவர்களுக்கு நன்றி தெரிவிக்க பட்டது .
2.திருநெல்வேலி போஸ்ட்மாஸ்டர் அவர்களின் நடைமுறை விதிமீறல் /இலாகா பணம் சுரண்டல் .பிராஞ்சு ஒதுக்குவதில் பாரபட்ச போக்கு ,அலுவலக வருகையில் தன்னை சார்ந்தவர்களுக்கு அதீத சலுகை , ஊழியர் மீது பொய்புகார்ஒருமையில் பெண் ஊழியர்களை அழைப்பது  ,மாலை 5.30 மணிக்கு மேல் ஊழியர்களை கட்டாயப்படுத்தி வெளியே அனுப்புவது இவைகள் கண்டித்து 04.04.2017 அன்று  
இரண்டு கட்ட ஆர்ப்பாட்டம் நடத்திடவும் --மாநில சங்கம் மூலம் இவரது முறைகேடுகளை மண்டல அலுவலகத்திற்கு கொண்டு செல்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது .(ஆர்ப்பாட்டத்தில் நெய்யூர்  பகுதி ஊழியர்களை அழைப்பது )
3.16.03.2017 ஒருநாள் வேலைநிறுத்தத்தை மிக சிறப்பாக செய்த அனைத்து ஊழியர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது .
4.புதிய பென்ஷன் குறித்த கருத்தரங்கம் வருகிற மே மாதத்தில் நெல்லையில் நடத்துவது என்றும் அதற்கு தோழர் G.சிவகுமார் PA மானுர் அவர்களை அமைப்பாளராகவும் நியமிக்க செயற்குழு அனுமதி அளித்தது .
5.2002 மற்றும் 2003 பணி இடங்களில் 2004 க்கு பிறகு நியமணம் பெற்ற அனைத்து ஊழியர்களுக்கும் வழக்கு சம்பந்தமாக உதவ தீர்மானிக்கப்பட்டது 
6.பாளையம்கோட்டையில் மகளிர்புதிய  டைனிங் அறைக்கு தேவையான உபகரணங்களை உடனே வழங்கவும் கோட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடப்பட்டது .
முன்னதாக தோழர்கள் அம்பலவாணன் ,M.இசக்கிமுத்து அவர்களின் மறைவிற்கு  இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற பட்டது .
                  போராட்ட வாழ்த்துக்களுடன் 
                        SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 









  புதிய பென்ஷன் குறித்த கருத்தரங்க அமைப்பாளர் G.சிவகுமார் 
                                                             தோழர் பாலாஜி 
                                      

Sunday, March 26, 2017

31 வது தேனி கோட்ட மாநாடு 26.03.2017 அன்று ஆண்டிபட்டியில் தோழர் C .நாகேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது 
மண்டல செயலர் தோழர் ஜோதி ,திண்டுக்கல் கோட்டசெயலர் 
மைக் கே ல்  சகாயராஜ் ,தேனி அஞ்சல் நான்கின் கோட்ட செயலர் தோழர் போஸ் ,மதுரை கோட்ட செயலர் தோழர் சுந்தர மூர்த்தி ,நெல்லை கோட்ட செயலர் தோழர் ஜேக்கப் ராஜ் கலந்துகொண்டனர் .மாநாட்டில் 
தலைவராக தோழர் C .நாகேந்திரன் அவர்களும் 
செயலராக தோழர் M .செல்லத்துரை அவர்களும்
பொருளாளராக தோழர் எழிலரசன் அவர்களும்  
தேர்ந்தெடுக்க பட்டனர் .முத்தாய்ப்பாக மாநில மாநாட்டு சார்பாளர்களாக தோழர்கள் C .நாகேந்திரன் மற்றும் கம்பம் மோகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டார்கள் .மாநாட்டினை சிறப்பாக நடத்தி முடித்த முன்னாள் கோட்ட செயலர் தோழர் சிவமூர்த்தி அவர்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள் 





தோழர் M .இசக்கி முத்து மறைந்தார் --26.03.2017
 எழுத்தே !
எழுத்தானியே!
எம்மை இயக்கிய இசக்கிமுத்துவே !
நீயு மா இவ்வளவு சீக்கிரத்தில் 
சென்றுவிட்டாய் ?

Saturday, March 25, 2017

Transfer/Postings in the Senior Administrative Grade (SAG) of India Postal Service, Group 'A' - Dte Order dtd 24/03/2017   


Transfer/Postings in the Senior Administrative Grade (SAG) of India Postal Service, Group 'A' -  Dte Order dtd 24/03/2017


முக்கிய செய்திகள் 

THURSDAY, MARCH 23, 2017

Circulation of Internship Guidelines of Department of Posts (Click the link below to view)
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அன்பார்ந்த தோழர்களே !
                               
தோழர்களே ! 
 நமது கோட்ட சங்க செயற்குழு அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முதல் கோரிக்கையான தோழர் E .காசிவிஸ்வநாதன் கோட்டசெயலர் NFPE (GDS) நெல்லை அவர்களின் PUTOFF DUTY நேற்று ரத்துசெய்யப்பட்டது  என்பதனை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறோம் . வழக்கின் தன்மை மற்றும் உண்மை நிலையை  ஆராய்ந்து நல்ல முடிவுகளை எடுத்த நமது கண்காணிப்பாளர் திரு .VP. சந்திரசேகர் அவர்களுக்கு எங்கள் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் .
              இருந்தாலும் இதர  பிரச்சினைகளை குறித்து விவாதிக்க 270.3.2017 அன்று பாளையம்கோட்டையில் நடைபெறும்  செயற்குழுவிற்கு அனைவரும் வருக !

                                       அம்பாசமுத்திரம் பொதுக்குழு கூட்டம் வெல்லட்டும் 
                                                 போராட்டத்தை  தூண்டுவது  நாங்கள் அல்ல !  
       குறைகளை சொன்னால் குற்றம் என்கிறார்கள் . நடந்ததை தெரிவித்தால்  தவறு 
என்கிறார்கள் .அப்படியென்றால்  நாங்கள் என்ன செய்ய ?
    கவிஞர் அப்துல் ரகுமான்  அவர்களின் கவிதை வரிகள் நினைவுக்கு வருகிறது 
            அலிபாபாவும் நாற்பது திருடர்களும் 
            பட சுவரொட்டியை  ஓட்டினேன் 
             சட்டமன்ற உறுப்பினர்களை 
            கேலி செய்ததாக என்னை 
           சிறையில் அடைத்தார்கள் 
                          தோழமைவாழ்த்துக்களுடன்  SK .ஜேக்கப் ராஜ் 

Friday, March 24, 2017

                                              முக்கிய செய்திகள் 
GDS பதவிகளுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம்   பதிந்துகொள்ள தமிழகத்தில் 25.03.2017 இல் தொடங்குகிறது .ஒரு விண்ணப்பத்திற்கு ரூபாய் 100 தேர்வு கட்டணம் -ஒரு விண்ணப்பத்திற்கு 5 இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் .மகளீர் /மற்றும் SC /ST பிரிவினருக்கு தேர்வு கட்டணம் கிடையாது .தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு அவருடைய செல் போனுக்கு தகவல் வரும் .இந்த அரிய வாய்ப்பை நமது தோழர்கள் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு தெரிவிக்கவும் .
---------------------------------------------------------------------------------------------------------------------
             HRA அரியர்ஸ் இன்று வரும் --நாளை வரும் என்பது வதந்தி 

DoPT Minister replied in Lok Sabha on 22nd March 2017 regarding the status of the Committee on Allowances.

Minister of State in the Ministry of Personnel, Public Grievances and Pensions and Minister of State in the Prime Minister’s Office Shri DR. JITENDRA SINGH said in a written reply to various questions regarding the report of allowance committee in Parliament on 22.3.2017 as follows…
The Committee has not yet submitted its report to the Government. Decisions on implementing the Report will be taken after the Report is submitted by the Committee.”
----------------------------------------------------------------------------------------------------------------------------
                                               GDS கமிட்டி நிலவரம் 

BREAKING NEWS OF GDS PAY COMMITTEE


There was a meeting with Committee formed for implementation of GDS Committee Report under the Chairmanship of Shri Tilak De - Hon’ble Member (P) on 17-3-2017 with all the Three Federations and GDS Unions in Dak Bhawan . 
Now we can say that Department as well as committee is going submit GDS committee report and suggestions of union to Hon’ble Minister of Communication for further approval from expenditure Department. on or upto 24-3-2017 (Friday) for its implementation. The attitude of Govt. is very positive for implementation of GDS Committee report.

                     தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ்  கோட்ட செயலர்
-------------------------------------------------------------------------------------------------------

இலாகா விதிகளை மீறி குறைந்த டெனாமினேசனில் ஒருவருக்கே பல கணக்குகள் தொடங்க வற்புறுத்துவதை குறித்து நாகப்பட்டினம் கோட்ட செயலர் மாநில சங்கத்திற்கு எழுதியுள்ள கடிதம் 

SPLITTING AMOUNT TO OPEN MULTIPLE NUMBER OF ACCOUNTS IN THE SAME PERSON

To

The Circle Seceretary,
AIPEU GROUP”C”  TN Circle,
T.Nagar HO
Chennai-600 017.

Sir,

Directorate vide letter dated 19.08.2015 has instructed Postal administrative officers to stop the practice of splitting amount to open multiple number of accounts in the name of same person in order to achieve the target. But the instructions are thrown to wind. It is learnt last week in Valivalam SO 100 RD accounts of Rs.10/- denominations in the name of single depositor were opened as per oral instructions from higher ups. Willful violation of Directorate instruction is clear misconduct and Disciplinary action should be caused to be initiated against erring OFFICERS.

Thanking you sir,

S. Meenakshisundaram
Divisional Secretary
AIPEU Group C
Nagapattinam 611 001


Copy to:
Regional Secretary AIPEU Group C CR @ Pudukkottai HO 622 001
Branch Secretary AIPEU Group C @ Tiruvarur HO 610 001
-------------------------------------------------------------------------------------------------

Thursday, March 23, 2017

    அன்பார்ந்த தோழர்களே !
                                     கோட்ட சங்க செயற்குழு-- 27.03.2017
நெல்லை NFPE அஞ்சல் மூன்றின் கோட்ட சங்க செயற்குழு வருகிற 27.03.2017 திங்கள் மாலை 6 மணிக்கு கோட்ட தலைவர் தோழர் KG.குருசாமி அவர்கள் தலைமையில் பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் நடைபெறும் .செயற்குழு உறுப்பினர்கள் யாவரும் தவறாது கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் மேலான கருத்துக்களை வழங்க வேண்டுகிறோம் .
பொருள்
1.அடிப்படை காரணங்கள் ஏதுமின்றி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட NFPE (GDS) நெல்லை கோட்ட செயலர் 
தோழர் E .காசிவிஸ்வநாதன் அவர்களின் PUTOFF DUTY சம்பந்தமாக நாம் எடுக்க வேண்டிய தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்து -
2.விதிகள் /நடைமுறை வழிகாட்டுதல்களை மீறி செயல்படும் திருநெல்வேலி போஸ்ட்மாஸ்டர் செயல்பாடுகள் குறித்து 
3.வெற்றிகரமாக நடந்து முடிந்த 16.03.2017 வேலைநிறுத்தம் குறித்த ஆய்வறிக்கை 
4.HRA &புதிய பென்ஷன் குறித்து இன்றைய நிலை 
5.2002-2003 பணியிடங்களில் 2004இல் நியமனமான ஊழியர்களுக்கு பழைய பென்ஷன்  வேண்டி வழக்கு தொடர்வது சம்பந்தமாக 6.இன்னும் பிற (தலைவர் அனுமதியுடன் )
                                     அனைவரும் வருக !
                                                                                                                       தோழமையுடன் 
21.03.2017                                                                                              SK .ஜேக்கப் ராஜ் 
பாளை                                                                                               கோட்ட செயலர்     
----------------------------------------------------------------------------------------------------------------------- 
                         தேனி கோட்ட மாநாடு சிறக்க வாழ்த்துகிறோம்