...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, April 27, 2017

                                                                 முக்கிய செய்திகள் 
நமது கோட்டத்தில் MACP கான DPC 28.04.2017 அன்று நடைபெறுகிறது .சுமார் 30 தோழர்கள் இதில் பதவிஉயர்வு பெறுகிறார்கள் .

                                                 பணிநிறைவு நிகழ்ச்சிகள்
தோழர் SPR சுப்ரமணியம் SPM மானுர் 
நாள் 29.04.2017 சனிக்கிழமை நேரம் மாலை 4 மணி இடம் மானுர் 
---------------------------------------------------------------------------------------------------------------------------
தோழர் D.பெருமாள் தபால்காரர் திருநெல்வேலி டவுன் 
நாள் 29.04.2017 சனிக்கிழமை நேரம் மாலை 5 மணி இடம் டவுண் 

------------------------------------------------------------------------------------------------------------------------
தோழர் A .எபனேசர் கோயில்பிள்ளை PA மேலப்பாளையம் 
நாள் 29.04.2017 சனிக்கிழமை நேரம் மாலை 7 மணி 
இடம் கொங்கதான் பாறை 
--------------------------------------------------------------------------------------------------------------
முன்னதாக 26.04.2017 அன்று தோழர் SPR.சுப்ரமணியம் அவர்கள் அளித்த இனிய விருந்தில் நமது தோழர்கள் அனைவரும் பங்கேற்று சிறப்பித்தனர் 



இலாகா தேர்வின் மூலம் வந்த தோழர்களுக்கு MACP III மறுக்கப்படுவதை தவறு என உச்சநீதிமன்றம் தோழர் சிவகுமார் அவர்களின் வழக்கில் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் பதவியுயர்வினால்  MACP III இழந்த அனைத்து ஊழியர்களுக்கும் MACP III வழங்க நமது சம்மேளனம் கோரிக்கை 

NFPE writes to Secretary (Posts) for grant of MACP ignoring promotion earned through Departmental competitive examination.

 NATIONAL FEDERATION OF POSTAL EMPLOYEES
1st Floor North Avenue Post Office Building, New Delhi-110 001
             Phone: 011.23092771                                                       e-mail: nfpehq@gmail.com
           Mob: 9868819295/9810853981                    website: http://www.nfpe.blogspot.com
 

Ref: PF/NFPE/MACP                                                        Dated – 10.04.2017

To,

Shri B. V. Sudhakar
Secretary (P)
Department of Posts
Dak Bhawan, New Delhi – 110001

Sub: -  Grant of MACP ignoring promotion earned through Departmental competitive examination.

Ref: -   Dte. No. 2-19/2015-PCC dated 01.03.20417.

Sir,

Your kind attention is invited towards Directorate letter No. referred above under which the instructions were issued to Chief PMG Tamilnadu Circle to grant MACP III to Sri. D. Siva Kumar Retd. SPM, Madras Medical College SO, Chennai ignoring his promotion earned through Departmental competitive examination based on the judgment given by Hon’ble Madras Tribunal in case No.1088/2011 vide order dated dated 14.03.2013 which was upheld by Supreme Court of India vide order in SLP No. 4848/2016 dated 16.08.2016.

As you are aware that in Department of Post about 50% of employees come through various departmental competitive examinations do not get the benefit of 3rd MACP as the promotion earned through departmental competitive examination is counted as one MACP.

It is therefore requested to kindly cause suitable instructions according to this verdict of Supreme Court, so that all similarly placed officials may get the benefit of it to meet the end of justice as per spirit of constitutions of India.

With regards,

Yours faithfully,

(R. N. Parashar)

நீண்ட இழுத்தடிப்பு --நிறைய கடிதங்கள் -பலமுறை பேச்சுவார்த்தைகள் --இதனை தொடர்ந்து வந்தது உத்தரவு .ஆம் 
தபால்காரர் மற்றும்MTS பணியிடங்களில்  officiating பார்க்கும் GDS ஊழியர்களுக்கு ஏழாவது சம்பளக்குழு அடிப்படையில் புதிய ஊதியம் 01.01.2016 முதல் வழங்க உத்தரவு .சராசரியாக மாதமொன்றுக்கு தபால்காரர் பணியில் 4000 யும் MTS பணியில் 2000யும் என 16 மாத நிலுவைத்தொகை கிடைக்கும் 

Wednesday, April 26, 2017

CADRE RESTRUCTURING
IMPLEMENTATION DEFERRED


          Today on dated 25th April-2017, Com. R.N. Parashar Secretary General NFPE & General Secretary P-III alongwith Com. Giriraj Singh, President NFPE & General Secretary, R-III met with Shri B.V. Sudhakar, Secretary (Posts) and discussed issues of Cadre Restructuring and appraised him the difficulties being faced by the staff and requested either to modify the Cadre Restructuring as per suggestions submitted by NFPE & P-III or defer till the issues are settled. Secretary called DDG (Estt) Smt. Smriti Sharan & Director Estt. Shri S.V. Rao and ordered to form a committee of officers of Directorate which will take views of all Chief PMGs and after that Convening a meeting with unions, issues will be settled. Till then he ordered to keep the Cadre Restructuring implementation in abeyance.

GDS DA ORDERS

           FILE SUBMITTED TO THE SECRETARY (POST) FOR APPROVAL AND ORDERS WILL BE RELEASED TODAY EVENING OR TOMORROW.

Tuesday, April 25, 2017

                       முக்கிய செய்தி -கேடேர் சீரமைப்பு உத்தரவுகள் நிறுத்திவைப்பு ........
ஊழியர் தரப்பு கோரும் மாற்றங்களை ஆராய தனி குழு அமைப்பு ...
மத்திய --மாநில சங்கங்களுக்கு நன்றி 
அஞ்சல் எழுத்தர்கள் மத்தியில் குறிப்பாக மூத்த தோழர்கள் மத்தியில் இருந்த ஒருவித பீதி களையப்பட்டு நிம்மதி பெருமூச்சோடு இன்று இருப்பதை பார்க்கிறோம் .பதவி உயர்வு என்ற பெயரால் உலாவந்த அச்சங்கள் இன்று விலக தொடங்கியிருக்கிறது .
 கோட்ட மட்டங்களில் ஒரு பக்கம் சுழல் மாறுதல் -மறுபக்கம் கேடெர் சீரமைப்பு பணிகள் -இந்த குழப்பங்களுக்கு இன்று விடைகிடைத்திருக்கிறது .
கேடெர் சீரமைப்பு நமது தலைவர்களின் கனவு திட்டம் தான் ஐயமில்லை .ஆனால் அதை அமுல் படுத்த தொடங்கும் போது ஏற்படும் நடைமுறை சிக்கல்களை கணக்கில் கொள்ளாமலும் இல்லை .இந்த அடிப்படையில் நடைபெற்ற நமது மத்திய சங்க செயற்குழுவில் (08.03.2017 முதல் 09.03.2017 வரை சட்டிஸ்கர் ) கேடெர் சீரமைப்பு குறித்து எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் நாம் கேட்கும் மாறுதல்களை பட்டியலிட்டு கோரிக்கைமனுவினை கடந்த 17.03.2017 அன்று நமது இலாகா முதல்வரை சந்தித்து வழங்கினார்கள் .இதற்கிடையே 18.03.2017 அன்று நமது NFPE சம்மேளனம் சார்பாகவும் விளக்கமான கடிதங்கள் கொடுக்கப்பட்டன .இதற்கிடையில் சில மாநிலங்களில் நிர்வாகம் காட்டிய வேகம் மேலும் ஊழியர்களை திகிலடைய செய்தது .நமது மாநில சங்கமும் தன் பங்கிற்கு மத்திய சங்கத்தையும் -மாநில நிர்வாகத்தையும் ஊழியர்களை பாதிக்காத வண்ணம் அமுல் படுத்த வேண்டும் என வற்புறுத்திவந்தது .இந்நிலையில் நமது அகிலஇந்திய பொதுச்செயலர் 25.04.2017 அன்று நமது இலாகா முதல்வரை சந்தித்து ஊழியர் தரப்பு கோரும் மாற்றங்களை செய்யாமல் அமுல்படுத்தினால் பெரிய பாதிப்பு வரும் என்றும்  பெயரளவிற்கு தான் பதவிஉயர்வு இருக்குமே தவிர பெரும்பாலான .ஊழியர்கள் பதவி உயர்வை மறுக்கத்தான் செய்வார்கள் என எடுத்துரைத்தார் .உண்மை நிலையை உணர்ந்துகொண்ட நமது இலாகா முதல்வர் அவர்கள் தற்சமயம் இதை அமுல்படுத்துவதை நிறுத்திவைக்க உத்தரவிட்டார்கள் .ஊழியர்களின் உணர்வை புரிந்து செயல்பட்ட மத்திய சங்கத்திற்கும் மாநில சங்கத்திற்கும் நமது நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .
நாம் கோரியுள்ள பிரதான மாற்றங்கள் 
1.LSG பதவிகள் கோட்ட மட்ட பதவிகளாக அறிவிக்க படவேண்டும் 
2.LSG TO HSG II மற்றும் HSGII TO HSG I பதவிஉயர்வுக்கான கால இடைவெளி நீக்கப்பட்டு ONETIME MEASURE அடிப்படையில்  பதவி உயர்வுகள் வழங்க வேண்டும் .
அதுவரை கேடேர் சீரமைப்பு உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது 
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

                                                   நெல்லை கோட்ட செய்திகள் 
                      இந்தமாதம் பணிநிறைவு   விழாக்கள் 

தோழர் A .எபேனேசர் கோயில்பிள்ளை PA மேலப்பாளையம் 
தோழர் SPR.சுப்ரமணியம் SPM மானுர் 
தோழர் பெருமாள் தபால்காரர் டவுண் 
இவர்களை வாழ்த்துகிறோம் .
முன்னதாக தோழர் SPR சுப்ரமணியன் அவர்களின் பணிநிறைவு விழா 26.04.2017 மாலை  பாளை  சாந்திநகர் காவலர் குடியிருப்பில் உள்ள சமுதாய கூடத்தில் நடைபெறுகிறது .தோழர்கள் அனைவரும் கலந்து கொள்ளும் படி கேட்டு கொள்கிறோம் .
                                          நன்றி !நன்றி ! நன்றி !
நமது நீண்ட நாள் கோரிக்கைகளான பொட்டல்புதூர் மற்றும் இடையன்குடி SPM பதவிகளை நிரப்பிய கோட்ட நிர்வாகத்திற்கும் அதற்கு துணை நின்ற ட்ரான்ஸபர் கமிட்டி உறுப்பினர்களுக்கும் எங்கள் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .
                                   மாதாந்திர பேட்டி 
நேற்று தவறுதலாக MONTHLY மீட்டிங் 24.04.2017 என்றுதெரிவித்திருந்தோம் .அதை திருத்திக்கொண்டு 26.04.2017 நண்பகல் 11.30 என எடுத்து கொள்ளவும் .
                         AIGDSU போராட்டம் தள்ளிவைப்பு 
  25.04.2017 முதல் நடைபெறவிருந்த GDS ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் தள்ளிவைக்கப்பட்டுள்ளன .
                                GDS கோரிக்கைகளுக்காக தர்ணா 
நமது சம்மேளன அறைகூவலின்படி 27.04.2017 அன்று நடைபெறவிருந்த தர்ணா நமது கோட்ட செயலர்களின் வெளியிட நிகழ்ச்சிகளை முன்னிட்டு 24.04.2017 நேற்று முன்கூட்டி நடைபெற்றது .மாலைநேர தர்ணா புகைப்படங்கள் 





காபி பிரியர்களுக்காக புதிய நறுமணம் வீசும் காபி வாசனையுடன் ஸ்டாம்ப்ஸ் அஞ்சல் துறை வெளியிட்டது 

India Post releases coffee scented stamps

 | Apr 23, 2017,


NEW DELHI: Any coffee connoisseur will agree that what makes a cup of the dark, rich brew truly great is its aroma. Now, coffee-lovers will be able to enjoy the heady aroma while going through their mail, thanks to the newly launched coffee scented postage stamps. 

At an event organised by the India Post, commerce and industry minister Nirmala Seetharaman and telecom minister Manoj Sinha released the coffee scented stamps at the General Post Office in Bengaluru on Sunday. 

Seetharaman also took to Twitter to celebrate the launch of the coffee-flavoured stamps. 


The stamps, which are being printed at the India Security Press, will be priced at Rs 100. Already, one lakh stamps have been printed for sale to collectors.

These stamps will be made available at the Philately Bureau, Bangalore General Post Office, and all other head post offices.

Bhutan was the first country to release aromatic stamps in 1973. New Zealand, Thailand and Switzerland joined in later.

In 2006, India introduced its first aromatic stamp, with a Rs. 15 sandalwood-scented stamp where 30 lakh of these sold out within two weeks.

In 2007, rose-scented stamps were released in four varieties of flower- Jawahar, Neelam, Delhi Princess and Bhim- each priced at five bucks and a jasmine fragrance in 2008. 

Issuance of MO/eMO for remittance of COD articles - Directorate Orders

Monday, April 24, 2017

அன்பார்ந்த தோழர்களே                  
          மாபெரும் ஆர்ப்பாட்டம் 24.04.2017
GDS ஊழியர்களின் ஊதிய விகிதங்களை மாற்றியமைக்க நியமிக்கப்பட்ட கமேலேஷ் சந்திரா கமிட்டி சிபாரிசுகளை தாமதமின்றி அமுல்படுத்த கோரி நெல்லையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் --அனைவரும் வருக !

நாள் --24.04.2017  நேரம் மாலை 6 மணி 
இடம் பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் 
தலைமை தோழர் KG.குருசாமி 
                         தோழர் ஸ்ரீனிவாச சோக்கலிங்கம் 
அஞ்சல் துறையே !

கமலேஷ் சந்திரா கமிட்டி பரிந்துரைகளை உடனே அமுல்படுத்து !
போராடும் GDS ஊழியர்களுக்காக நமது ஆதரவை தெரிவித்திட வாரீர் !வாரீர் !
                                             தோழமையுடன் 
SK ஜேக்கப் ராஜ்                                                   SK .பாட்சா 
                                              மாதாந்திர பேட்டி 
நமது கண்காணிப்பாளரு டனான மாதாந்திர பேட்டி 24.04.207 நண்பகல் 11.30 மணிக்கு நடைபெறுகிறது .
அஞ்சல் மூன்றின் சார்பாக 
தோழர்கள் SK .ஜேக்கப் ராஜ் ,T.அழகுமுத்து மற்றும் P.சுப்ரமணியன் அம்பை ஆகியோரும் அஞ்சல் நான்கின் சார்பாக தோழர்கள் SK .பாட்சா ,சாக்ரடீஸ் மற்றும் ஆதிநாராயணன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர் .
-----------------------------------------------------------------------------------------------------------------
                                   

Saturday, April 22, 2017

                                                            வாழ்த்துகிறோம் 
நெல்லை கோட்டத்தில் மிச்சமிருக்கும் மூன்று அலுவலகங்களில் ஒன்றான மூன்றடைப்பு அஞ்சலகம் 21.04.2017 அன்று CBS அலுவலகமானது .இந்த நிகழ்வில் நமது கண்காணிப்பாளர் உயர்திரு VP.சந்திரசேகர் அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்கள் .மூன்றடைப்பு SPM திருமதி பூர்ணகலா எழுத்தர் புஷ்பா மற்றும் அனைத்து GDS ஊழியர்களும் பங்கேற்றனர் திருநெல்வேலி ASP திரு G.செந்தில்குமார் மற்றும் நமது கோட்ட அனைத்து DSM களும் கலந்துகொண்டனர் .இறுதியாக கலந்துகொண்ட பஞ்சாயத்து எழுத்தர் திரு .பிரேம்குமார் தங்கள் பகுதியில் உள்ள அனைத்து நூறுநாள் திட்ட பயனாளிகளுக்கு சேமிப்பு கணக்கை தொடங்கி அவர்கள் ஊதியத்தை அஞ்சலகம் மூலம் பெற உதவி செய்வதாக கூறினார் .இது போன்ற பொதுமக்களோடு புது உறவுகளை மேற்கொள்ளும் மூன்றடைப்பு அஞ்சலக ஊழியர்களை பாராட்டுகிறோம் .



                                       முக்கிய செய்திகள் 
வேகவேகமாக ஏன் இந்தியாவிலேயே முதன்முதலாக கேடர் சீரமைப்பு அமுல்படுத்தப்பட்ட மாநிலம் ஒடிசா .அதில் மிகப்பெரிய அளவில் பதவிஉயர்வை மறுத்த /ஊழியர்கள் அதிகமாம் .இதிலும் சின்ன  ஒரு ஆறுதல் decline பண்ணின அனைத்து மனுக்களும் மாநில நிர்வாகத்தால் ஒத்துக்கொள்ள பட்டுள்ளன .

Declinations submitted by PAs promoted to LSG cadre accepted by C O, Bhubaneswar

54 representations accepted in the first phase.

Huge number of applications are still pending at Divisional levels.

Only 10 officials from Bhubaneswar Division have joined till date and 56 declinations are yet to be accepted. Out of 86 promoted in Bhubaneswar Division, others are yet to take a decision.

ITEMS FOR THE NATIONAL COUNCIL JCM STANDING COMMITTEE TO BE HELD ON 3rd MAY 2017 – CONFEDERATION ITEMS.

Com. K. K. N. Kutty, M. Krishnan and M. S. Raja will represent Confederation in the Standing Committee meeting.

1. Removing the anomalous situation in the representation in the JCM.

2. Recognition under CCS(RSA) Rules, 1993. Inordinate delay in the grant of recognition Streamlining procedure and fixing time frame for taking decision.

3. Central Government health Scheme. Empanelling of hospitals – streamlining the procedure to provide in-patient treatment to the beneficiaries.

4. Payment of equal pay to equal work to the workers/employees engaged in all Government officers either through contractors or directly as daily rated/contingent/casual workers as per the direction of the Supreme Court.

5. Extending the benefit of pension revision to the employees and officials who are absorbed in the Central Public Sector undertaking

6. Revision of Ex-gratia to CPF/SRPF (C)retirees.

7. Dispense with the practice of ignoring the fraction while computing the Dearness allowance.
8. Include unmarried sister in the definition of family for family pension

9. Removal of conditions of being at the CHQ for a few days in a month to claim the Transport allowance.

10. Fill up vacant posts. Restore the Regional level recruitment for lower level categories of employees say Up to Level. 6.

11. Delegation of authority to the State Welfare Co-ordination Committee to determine at least 5 holidays.

12. Grant of revised option under the CCS (Revised Pay) Rules, 2016

13. Transport allowance in the case of Physically handicapped person at the double rate and deduction of the same if one is on short leave. To be dispensed with.

14. DISCREPANCIES IN THE AMOUNT IN VARIOUS STAGES IN THE PAY LEVELS OF PAY MATRIX INTRODUCED AS PER CCS (Revised Pay) RULES 2016, CONSEQUENT ON IMPLEMENTATION OF 7th CPC RECOMMENDATIONS.

15. REMOVAL OF THE 3% CONDITION FOR GRANT OF BUNCHING INCREMENT IN THE PAY LEVELS OF 7th CPC PAY MATRIX

16. IMPLEMENTATION OF THE SUPREME COURT JUDGEMENT ON "EQUAL PAY FOR EQUAL WORK" IN ALL CENTRAL GOVERNMENT DEPARTMENTS.

17. EXTENSION OF BENEFITS OF REVISED PENSION RULES -2016 IN RESPECT OF PENSIONERS OF CENTRAL GOVERNMENT AUTONOMOUS BODIES.

18. ENSURE PARITY IN PAY SCALE OF ALL STENOGRAPHERS , ASSISTANTS AND MINISTERIAL STAFF IN SUBORDINATE OFFICES AND IN ALL ORGANISED ACCOUNTS CADRES WITH CENTRAL SECRETARIAT STAFF BY UPGRADING THEIR PAY SCALES.

19. GRANT OF ONE ADDITIONAL INCREMENT TO THOSE OFFICIALS WHO RETIRE FROM SERVICE ON 30th JUNE AND 31st DECEMBER AFTER COMPLETING ONE FULL YEAR SERVICE IN THEIR PAY SCALE.

20. Counting OF PRE-APPOINTMENT INDUCTION TRAINING PERIOD AS QUALIFYING SERVICE FOR GRANT OF FINANCIAL UPGRADATION UNDER MACP SCHEME

21. ENSURE CASHLESS MEDICAL TREATMENT FACILITIES TO ALL CENTRAL GOVERNMENT EMPLOYEES AND PENSIONERS IN ALL RECOGNISED GOVERNMENT AND PRIVATE HOSPITALS.

22.REVISION OF OVERTIME ALLOWANCE AND NIGHT DUTY ALLOWANCE WITH EFFECT FROM 01.01.2016 BASED ON 7th CPC PAY SCALES.

23.REJECT STIPULATION OF 7th CPC TO REDUCE THE SALARY TO 80% FOR THE SECONDLY YEAR OF CHILD CARE LEAVE (CCL) AND RETAIN THE EXISTING PROVISION

24. COUNTING OF LOSS OF PAY PERIOD (WITH OUT MEDICAL CERTIFICATE) AS QUALIFYING SERVICE FOR GRANT OF FINANCIAL UPGRADING UNDER MACPS.

25. ENHANCEMENT OF BONUS CEILING LIMIT OF CASUAL LABOURERS CONSEQUENT ON ENHANCEMENT OF BONUS CALCULATION CEILING OF CENTRAL GOVT EMPLOYEES.

26. NON-GRANT OF ELIGIBLE PAID WEEKLY OFF AND COMPENSATION FOR NATIONAL HOLIDAYS TO CASUAL LABOURERS - c/o SALAR JUNG MUSEUM HYDERABAD.
27. GRANT OF CORRESPONDING 7th CPC PAY SCALE TO THOSE OFFICIALS WHO ARE APPOINTED ON COMPASSIONATE GROUNDS AND DRAWING PRE-REVISED PAY (WITH OUT GRADE PAY) FOR WANT OF MATRICULATION QUALIFICATION.

28. GRANT OF PAY SCALE OF DRIVERS OF LOK SABHA SECRETARIAT TO DRIVERS WORKING IN OTHER CENTRAL GOVT DEPARTMENTS.
29. REVISION OF THE RESTORED ONE - THIRD PENSION AND NOTIONAL FULL PENSION OF CENTRAL GOVT EMPLOYEES WHO HAVE BEEN PERMANENTLY ABSORBED IN AUTONOMOUS BODIES AND HAVE DRAWN ONE TIME LUMPSUM TERMINAL BENEFITS EQUAL TO 100% OF THEIR PENSION AND HAVE GRANTED RESTORATION OF ONE - THIRD COMMUTTED PORTION OF PENSION.

I

Friday, April 21, 2017

Government of India to issue Sovereign Gold Bonds 2017-18 – Series I

The issue price of the Gold Bonds will be Rs. 50 per gram less than the nominal value 
The investors will be compensated at a fixed rate of 2.50 per cent per annum payable semi-annually on the nominal value 

Government of India, in consultation with the Reserve Bank of India, has decided to issue Sovereign Gold Bonds 2017-18 – Series I. Applications for the bond will be accepted from April 24, 2017 to April 28, 2017. The Bonds will be issued on May 12, 2017.
The Bonds will be sold through banks, Stock Holding Corporation of India Limited (SHCIL), designated post offices and recognised stock exchanges viz., National Stock Exchange of India Limited and Bombay Stock Exchange.

                                      நெல்லை கோட்ட செய்திகள் 
அன்பார்ந்த தோழர்களே !
நெல்லை கோட்டத்தில் சுழல் மாறுதலுக்கான அறிவிப்புகள் வெளியாகிவிட்டது .சுமார் 60 தோழர்கள் தங்களது TENNURE முடித்திருக்கிறார்கள் .இதில் 15 தோழர்கள் LSG பதவியுர்வுக்காக காத்திருக்கிறார்கள் .28.04.2017குள் கோட்ட அலுவலகத்தில் தங்கள் விருப்ப கடிதங்கள் சேர்ந்திருக்கவேண்டும் எனவும் -Extension விரும்புவோர் 25.04.2017 குள் PMG அவர்களுக்கு அனுப்பிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .கூட்டப்புளி.-மாவடி - முன்னிர் பள்ளம் -பத்மநேரி -தெற்கு கள்ளிகுளம் -வடக்கன்குளம் -காந்திநகர் -மானுர் -MS யுனிவர் சிட்டி --மேலப்பாளையம் பஜார் -தொண்டர்பஜார் --ஆழ்வார்குறிச்சி --கோபாலசமுத்திரம் --காரு குறிச்சி - மேலச்செவல் -நாலுமுக்கு --பாப்பாகுடி -பத்தமடை (பொட்டல் புதூர்--இடையன்குடி  -இதில் விடுபட்டுள்ளது இதை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் ) ஆகிய பதவிகள் LSG /HSG II ஊழியர்களால் நிரப்பப்படலாம் )ஆகவே கோட்ட சங்கத்திடம் கருத்துக்களை கேட்டு தங்கள் விண்ணப்பங்களை அனுப்ப கேட்டு கொள்கிறோம்     
                                                  கேடர் சீரமைப்பு 
20.04.2017 நேற்று நடைபெற்றCPMG அவர்களுடனான  FOURMONTHLY கூட்டத்தில் கேடர் சீரமைப்பு குறித்து விவாதிக்கப்படும் போது -இது குறித்து தனியாக வரும் வாரத்தில் ஒருநாள் விவாதிக்க வரும்படியாகவும் மாநில அளவில் தன்னால் எந்த அளவிற்கு ஊழியர்களுக்கு உதவ முடியுமோ அதை நிச்சயம் செய்வேன் என்ற நமது CPMG அவர்கள் உறுதிபட கூறினார்கள் என்று நமது மாநில செயலர் தோழர் JR அவர்கள் தெரிவித்தார்கள் .
                   நன்றி -தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்டசெயலர் 
------------------------------------------------------------------------------------------------------------------------

Thursday, April 20, 2017

அன்பார்ந்த தோழர்களே !
   அஞ்சல் துறையின் முதுகெலும்புகளாய் பணியாற்றும் எங்களருமை GDS ஊழியர்களின் வாழ்வில் ஏற்றம் காண --அவர்களுக்காக நடக்கும் போராட்டங்கள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துகிறோம் .மேலும் நமது சம்மேளன அறைகூவலின் படி 24.04.2017 அன்று மாலை நடைபெறும் மாலை நேர தர்னாவிற்கு தோழர்கள் அனைவரும் பங்கேற்கும் படி கேட்டு கொள்கிறோம் .
  அஞ்சல் துறையே !
   கமலேஷ் சந்திரா பரிந்துரையை விரைந்து அமுல்படுத்து ! இந்த கோரிக்கையை மட்டும் வலியுறுத்தி நடைபெறும் தர்ணாவில் அனைவரும்பங்கேற்பீர் .
   நாள் 24..04.2017  திங்கள் 
நேரம் மாலை 05.30 மணி முதல் 
இடம் .பாளையம்கோட்டை HO.
                                      அனைவரும் வருக !
                                        தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ்                                                        SK .பாட்சா 
கோட்ட செயலர் P3                              கோட்ட செயலர் P4                                                                     வாழ்த்துகிறோம்    
ACCOUNTS LINE LSG இடமாறுதலில் ஸ்ரீவைகுண்டம் APM A/CS      ஆக தன் விருப்ப இட மாறுதலில் செல்லும் நமது மூத்த தோழர் அண்ணன் S.கோமதிநாயகம் அவர்களுக்கு NELLAI NFPE இன்  நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் 
           அன்புடன்         SKJ .                                                         






                                                             வாழ்த்துகிறோம் 
அன்பிற்குரிய தோழர் S .ஆறுமுகம் தபால்காரர் பெருமாள்புரம் அவர்களின் 28 ஆண்டு கால சீரிய பணியை பாராட்டி திருநெல்வேலி டவர் லயன்ஸ் கிளப் சார்பாக 19.4.2017 அன்று பாராட்டு பத்திரம் வழங்கப்பட்டது .அமைதி பணிவு கடமை என எல்லா பரிமாணங்களிலும் ஜொலித்தவர் அண்ணன் ஆறுமுகம் அவர்கள் .அவர்களை நெல்லை NFPE பாராட்டி மகிழ்கிறது 


Wednesday, April 19, 2017

                                    நெல்லை கோட்ட செய்திகள் 
இந்த மாத மாதாந்திர பேட்டி 26.04.2017 அன்று நடைபெறுகிறது .அதற்கான சப்ஜெக்ட்ஸ் ஏதேனும் இருந்தால் 20.04.2017 குள் தெரிய படுத்தவும் .

 நமது அகிலஇந்திய மாநாடு பெங்களுருவில் 06.08.2017 முதல் 08.08.2017 வரை நடைபெறுவதை தாங்கள் அறீவீர்கள் .மாநாட்டில் கலந்து கொள்ள விரும்பும் தோழர்கள் தங்கள் பெயர்களை கோட்டசெயலரிடம் தெரிவிக்கவும் .மேலும் அதற்குரிய ரயில் கட்டணத்தையும் 30.04.2017 குள் செலுத்தவும் .SB A /C  ஜேக்கப் ராஜ் 0072773482 .கட்டண விவரங்கள் இரண்டாம் வகுப்பு =Rs 700 
AC III   TIRERs  1900                 AC II TIRE Rs 2700

புதிய பென்ஷன் குறித்த கருத்தரங்கம் நெல்லையில் மே இறுதியில் நடத்த முடிவு செய்துள்ளோம் .இன்னும் ஓரிரு நாளில் அதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்புகள் வெளிவரும் .எழுத்தர்கள் மட்டுமல்ல NPS திட்டத்தில் உள்ள அனைவரையும் ஒருங்கிணைக்கும் கருதரங்கமாக இது நடைபெறும் .இதை பொறுப்பேற்று நடத்தும் தோழர் G.சிவகுமார் மற்றும் M.நமச்சிவாயம் அவர்களுக்கு தாங்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டு கொள்கிறோம் .

GDS பரிந்துரைகளை விரைவில் அமுல்படுத்த கோரி வருகிற 24.04.2017 அன்று நெல்லையில் மாலைநேர தர்ணா பாளையங்கோட்டையில் நடைபெறும் .அனைவரும் மாலை தர்ணாவில் கலந்து கொள்ளும் படி கேட்டு கொள்கிறோம் .

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி AIGDSU சங்கம் சார்பாக 25.04.2017 முதல் நடைபெறவிருக்கும் காலவரையற்ற வேலைநிறுத்தம் வெற்றிபெற நெல்லை NFPE மனதார வாழ்த்துகிறது 
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் 

                                                       முக்கிய செய்திகள் 

Clarification regarding admissibility of flexi-fare in Shatabdi/Rajdhani/ Duronto trains while availing LTC.

--------------------------------------------------------------------------------


DoPT denies Media News about extension of working hours of Central Government employees

Press Information Bureau
Government of India
Ministry of Personnel, Public Grievances & Pensions 

18-April-2017 16:06 IST
DoPT denies Media News about extension of working hours of Central Government employees 

The attention is drawn to the media news about extension of working hours of Central Government employees by the Department of Personnel and Training (DoPT), Ministry of Personnel, Public Grievances and Pensions, Government of India. It has been stated in the news item that Central Government employees’ working hours will be changed from 09.00 AM to 07.00 PM. It was also stated that the holiday of Saturday will also be done away with for the Central Government employees.

In this regard, the DoPT clarifies that there is no such proposal under consideration of the Central Government. The media news regarding the extension of working hours and abolition of holiday on Saturday for Central Government employees is false and baseless. There is no oral or unwritten order issued in this regard.



Tuesday, April 18, 2017

                                            நெல்லை கோட்ட செய்திகள் 
1.நேற்று 17.04.2017 அன்று TRANSFER  கான கமிட்டி கூடியது .APS யில் இருந்து வரும் தோழர் வெண்ணிக்குமார் மற்றும் RULE 38 இல் வரும் ஊழியர்களுக்கான இடமாற்ற கமிட்டி இது .நம்மிடையே GDS ஆக பணியில் சேர்ந்து இன்று PA ஆக மீண்டும் நமது கோட்டத்திற்கு வரும் தோழர் வெண்ணிக்குமார் அவர்களை வரவேற்கிறோம் .
2.நெல்லை MMS பிரச்சினையில் நேற்று ஒரு நல்ல முடிவு எட்டப்பட்டுள்ளது பலமாத இழுத்தடிப்பிற்கு பிறகு நேற்று ஓட்டுனர்களின் கோரிக்கையில் தீர்வை தந்த கோட்ட நிர்வாகத்திற்கு எங்கள் நன்றிகளை ஹ=தெரிவித்து கொள்கிறோம் .
3.நமது கோட்டத்திலும் PA கேடர்களுக்கான இந்த ஆண்டின் சூழல்மாறுதல் பணி ஆரம்பமாகிவிட்டது .

     நன்றி -தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் 
----------------------------------------------------------------------------------------------------------------------------

                   மணமக்கள் பல்லாண்டு வாழ்க !வாழ்க !
தோழர் பர்வதராஜா சுப்ரமணியன் SPM மானுர் அவர்களின் இல்ல மணவிழா 17.04.2017 அன்று திருநெல்வேலி ராஜ் மஹாலில் சிறப்பாக நடைபெற்றது .நமது தோழர்கள் வாழ்த்திய காட்சி 
மணமகள்                                                             மணமகன் 
S .ஐஸ்வர்யா                                                         VS .அருணாச்சலம் 
மணமக்கள் நீடு வாழ நெல்லை NFPE வாழ்த்துகிறது 

போஸ்ட்மாஸ்டர் GRADE II பதவியுயர்விற்க்கான இரண்டாம் பட்டியல்தோழர் ரவிமோகன் மற்றும் தோழியர் கிளாடிஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் 

SBCO பிரிவில் LSG பதவியுயர்வு --நெல்லைகோட்டத்தில் பதவியுயர்வு பெறும் தோழியர் சகுந்தலா அவர்களுக்கு வாழ்த்துக்கள் 

Monday, April 17, 2017

தோழர் SPR. சுப்ரமணியன் SPM மானுர் அவர்களின் இல்ல மணவிழா சிறக்க நெல்லை NFPE வாழ்த்துகிறது .

Image result for marriage photos

  இன்று 16.04.2017 அன்று திருநெல்வேலி ராஜ்மஹாலில் நடைபெறும் நமது இயக்கத்தின் முன்னணி தோழர் SPR SPM மானுர் அவர்களின் இல்ல மணவிழாவில் கலந்து கொள்ளும் உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம் 
  தோழமையுடன் NELLAI NFPE 
-----------------------------------------------------------------------------

அன்பார்ந்த தோழர்களே !
          வாசற்படியில் நின்று கதவை தட்டுகிறது கேடர் சீரமைப்பு 
வரவேற்க்கவா ?வழியனுப்பவா ? 
 கேடர் சீரமைப்பு உத்தரவு படி எத்தனை PA  பதவிகள் LSG ஆக தரம் உயர்த்தப்படுகிறதோ அன்றைய நாளிலே அதாவது 15.04.2017 அன்றே அதே அளவிலான PA பதவிகள் ஒழிக்கப்படும் என்பது 27.05.2016 நாளிட்ட அஞ்சல் வாரிய உத்தரவு அதை அப்படியே ஏற்றுக்கொண்டு  தமிழகத்தில் முதன்முதலாக கோவைகோட்டத்தில் SSPOs memo No A-1/ Cadre Restructuring/LSG dated at Coimbatore 641001 the 11.04.2017 அன்று 77 LSG பதவிகள் உருவாக்கப்படுவதாகவும் 77 PA பதவிகள் ஒழிக்கப்படுவதாகும் உத்தரவு வந்துள்ளன .கோவையை தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து கோட்டங்களில் இருந்தும் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளிவரஇருக்கின்றன . மாநில அளவில் மட்டுமல்ல அகிலஇந்திய அளவில்  இது குறித்து வாத /பிரதிவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன .இயக்குனரகம் இதில் தலையிட்டு ஊழியர்தரப்பு கோரும் மாற்றங்களை செய்யும் என்று நமது சங்கங்கள் சொல்லிக்கொண்டிருந்தாலும் -இயக்குனராக27.05.2016 உத்தரவை அமுல்படுத்த நமது மாநிலமும் படு வேகத்தில் இருப்பதாக அறிகிறோம் . இனி நமது பார்வை பதவி உயர்வினால் ஊழியர்கள் தொலைதூர இடமாறுதலுக்கு செல்வதை தவிர்க்கவும் --அவர்களின் விருப்ப அடிப்படையில் இடமாறுதல் கிடைக்கும் பட்சத்தில் பல மூத்த தோழர்களின் தன்விருப்ப ஓய்வு எனும் திட்டத்தை தடுக்க முடியும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும் . இதனால் அகில இந்திய அளவில் 7851  PA பதவிகளை இழந்திருக்கும் வேலையில் இருப்பவர்களை தக்க வைத்தால் தான் ஆட்பற்றாக்குறை --பணிசுமைபோன்ற கொடுமைகளில் இருந்து ஊழியர்களை மீட்க முடியும் .
நிச்சயம் அந்த திசையில் நமது மாநிலச்சங்கம் பயணிக்கும் என்று நம்புகிறோம் .இதுகுறித்து மாநிலச்சங்கம் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாம் துணை நிற்போம் .
                                 தோழமையுடன் S K .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Saturday, April 15, 2017

அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....


------------------------------------------------------------------------------------------------------------------HAPPY AMBDEKAR JAYANTI

--

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளனத்தின் சார்பாக நிதி யமைச்சக அலுவலகம் முன்பு 23.05.2017 அன்று மாபெரும் தர்ணா 
22.06.2017 அன்று கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி இயக்கம் 
ONFEDERATION NATIONAL SECRETARIAT DECIDED TO INTENSIFY THE STRUGGLE

MASS DHARNA IN FRONT OF FINANCE MINISTER’S OFFICE
NORTH BLOCK, NEW DELHI
ON 23.05.2017 (TUESDAY 12 AM TO 04 PM)

NATIONWIDE DEMONSTRATION AT ALL IMPORTANT CENTRES ON SAME DAY

MORE THAN 2000 CENTRAL GOVERNMENT EMPLOYEES AND PENSIONERS WILL PARTICIPATE IN THE PROTEST DHARNA.

Demanding Honouring of assurance given by Group of Ministers including Finance Minister, settle the charter of demands submitted by Confederation, increase minimum pay and fitment formula, payment of revised allowances including HRA w.e.f 01.01.2016, implementation of option – I pension parity recommended by 7th CPC, Scrap New Contributory Pension Scheme and bring all employees appointed after 01.01.2004 under the purview of CCS (Pension) Rules 1972, Grant Civil Servant Status and revise the wages and allowances of Gramin Dak Sevaks, regularise all casual and contract workers, Revise pension of autonomous body pensioners and grant dearness relief due from 01.07.2016, withdraw “Very good” bench mark condition for MACP etc.


2nd PHASE OF AGITATION
HUMAN CHAIN OF CENTRAL GOVERNMENT EMPLOYEES & PENSIONERS

IN FRONT OF MAJOR CENTRAL GOVERNMENT OFFICES AT ALL IMPORTANT CENTRES THROUGHOUT THE COUNTRY DURING LUNCH HOUR
ON 22.06.2017 (THURSDAY)