...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, February 22, 2022

    அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !GDSஊழியர்களுக்கு இலாகா கொடுக்கும் இன்னுமொரு நெருக்கடி 

கமேலேஷ் சந்திரா கமிட்டியின் சாதகமான பரிந்துரைகளான கிராஜூட்டி 5 லட்சம் SEVARANCE தொகை 5லட்சம் என சாதகமான பரிந்துரைகளை    அமுல்படுத்துவதை விட்டுவிட்டு ஊழியர்களுக்கு பாதகமான பரிந்துரைகளை அமுல்படுத்திட அஞ்சல் வாரியம் காட்டும் வேகத்தை பார்த்தீர்களா ? 

GDS.பணியிடங்களில் ஏற்படும் காலியிடங்களில் மாற்றுஆட்களை நியமித்திட .SHORT TERM  VACANCY  மற்றும் LONG TERM  VACANCY  என இருவகையாக பிரிக்கப்பட்டு அதில் பதிலிகளை நியமனம் செய்திட அஞ்சல் வாரியம் 11.02.20222அன்று பிறப்பித்துள்ள வழிகாட்டுதல் உத்தரவின் சாராம்சம் 

*GDS ஊழியர்கள் விடுப்பு எடுக்கும் காலங்கள் 45  நாட்களுக்குள் இருப்பின் அது   குறுகிய கால VACANCY ஆக  எடுத்துக்கொள்ளப்பட்டு பின்வரும்   நடைமுறைகள் பின்பற்றப்படும் 

.SHORT TERM  VACANCY   களுக்கு எந்த மாற்றுஆளும் நியமிக்கக்கூடாது .முடிந்தவரை பணிகளை இணைத்து பார்த்திடவேண்டும் .அவ்வாறு பணிகளை இணைத்து பார்க்க சாத்தியமில்லாத இடங்களில் பதிலிகளை 45நாட்களுக்கு மிகாமல்   அனுமதிக்கலாம் .இலாகா அலுவலகங்களில் ஏற்படும்  SHORT TERM  VACANCY  கள் இருக்கின்ற இடத்தில் MTSஇருந்தால் அவரை கொண்டு அந்த வேலையை பார்த்திட பணிக்கவேண்டும் ..மேற்சொன்ன எந்த சாத்தியக்கூறும் இல்லாத பட்சத்தில் பதிலிகளை அனுமதிக்கலாம் 

*45நாட்களுக்கு மேல் செல்லும் VACANCY அதாவது LONG TERM  VACANCYயிலும் கூடுமானவரை காம்பினேஷன் டூட்டி போடவேண்டும் .அது இல்லாத பட்சத்தில் பதிலிகளை அனுமதிக்கும் போது அந்த கிளை அஞ்சலகத்தின் வருவாய் மற்றும் பரிவர்த்தனைகள் போதுமானதாக இருந்திடவேண்டும் .45 நாட்களுக்கு மேல் LEAVE SANCATION அதிகாரி அதற்கு மேல் உள்ள அதிகாரிகளிடம் அனுமதி பெறவேண்டும் .90நாட்களுக்கு மேல் என்றால் மண்டல அதிகாரியிடம் அனுமதி பெறவேண்டும் ...

APS /மற்றும் IPPB டெபுடேஷன் செல்லுகின்ற GDS இடங்களும் இனி நிரப்பப்படும் .அவ்வாறு நிரப்பப்படும் போது அதை ப்ரொவிஷியனால் நியமனமாக எடுத்துக்கொள்ளப்பட்டு DEPUTATION சென்ற GDSவரும்பொழுது அவருக்கு வசதியான இடம் கிடைக்கவில்லை என்றால் அந்த புதிய நியமனம் டெரிமினட் செய்யப்பட்டு பழைய GDS அந்த பதவியில் நிரப்பப்படுவார் 

கூடுமானவரை 90 நாட்களுக்குள் காலியாகவுள் ள பதவிகளை நிரப்பிடவேண்டும் .சம்பளம் வினியோகிக்கும் அதிகாரி பதிலிகளுக்கு சம்பளம் வழங்கும் போது நியமன அதிகாரி கொடுக்கின்ற பதிலிகள் குறித்த தகுதிகள் அடங்கிய CERTIFICATE இணைக்கப்பட்டிருக்கிறதாஎன்பதை உறுதி செய்ய வேண்டும் .........பார்ப்போம் 90நாட்களுக்குள் எல்லா பதவிகளும் நிரப்பப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டில் அஞ்சல் வாரியம் காட்ட போகும் வேகத்தை ?

தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 



Monday, February 14, 2022

 அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !வணக்கம் 

                                                       முக்கிய செய்திகள் 

எழுத்தர்களுக்கான கேடேர் மேனேஜ்மென்ட் 31.01.2021 சொல்வதென்ன ? 

 *இதுவரை VACANCY என்பது கோட்ட அளவில் இருந்தது இனி மாநில அளவில் என மாற்றப்படுகிறது 

*மாநில அளவில் மெரிட் பட்டியல் தயாரிக்கப்பட்டு மாநிலம் முழுவதும் உள்ள காலியிடங்கள் நிரப்பப்படும் .இனிமேல் கோட்ட அளவில் VACANCY இல்லை என்பதால் ஒருவரின் பதவி உயர்வின் வாய்ப்புகள் பறிபோகாது 

*மாநில அதிகாரி  RECRUITING அதிகாரியாகவும் மாநில அலுவலகம் RECRUITING யுனிட் ஆகவும் இருக்கும் 

கோட்ட அதிகாரி நியமன அதிகாரியாகவும் ஒழுங்கு நடவடிக்கை அதிகாரியாகவும் செயல்படுவார்கள் 

*இதுகாறும் தேர்வு அறிவிப்பு வரை எழுகின்ற காலியிடங்கள் தான் எடுத்துக்கொள்ளப்படும் என்கின்ற நிலை மாறி தேர்வு முடிவுகள் அறிவிப்பு வரும்வரை எழுகின்ற காலியிடங்கள் நிரப்பப்படும் 

*வெளிக்கோட்டங்களுக்கு தேர்வாகும் ஊழியர்கள் விதி 38 இன் படி விண்ணப்பித்து மீண்டும் தாய் கோட்டத்திற்கு வரலாம் 

இந்த உத்தரவுகள் 2022 நியமன வருடம் அதாவது 01.01.2022 முதல் அமுலுக்கு வருகிறது

தகவல் மற்றும் விளக்கம் --YOURS KVS தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது ......

Friday, February 11, 2022

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !வணக்கம் .

                       எழுத்தர் தேர்வில் வெற்றி பெற்ற தோழமை சொந்தங்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் .தேர்ச்சி பெற்றும் போதுமான Vacancy இல்லாமல் எழுத்தர் வாய்ப்பை இழந்த தோழர்கள் அடுத்துவரும் தேர்வில் தேர்ச்சிபெற உங்களையும் வாழ்த்துகிறோம் 

            .2018 க்கு முன்பெல்லாம்  தேவைக்கு குறைவான ஊழியர்கள் தேர்ச்சி பெற்ற வரலாறுகள்  உண்டு ..Vacancy என்பதும் ஒவ்வொரு கோட்டத்திலும் ஒன்று அல்லது இரண்டு என்றெல்லாம் வந்ததுண்டு ....இல்லை VACANCY  இல்லை என நிர்வாகம் அறிவித்தபோதிலும் VACANCY களை கண்டுபிடித்து இமாலய சாதனையை படைத்தது நமது பேரியக்கம் ஆம் நமது NFPE பேரியக்கம் எடுத்திட்ட தொடர் முயற்சியின் காரணமாக தமிழகத்தில் எழுத்தர் தேர்விற்க்கான எண்ணிக்கைகள் பெருமளவில் உயர தொடங்கின ..CADER சீரமைப்பு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் கோட்டங்களில் எழுத்தர் பதவிகள் உயர்ந்தன ..எழுத்தர் பதவிகள் உயர உயர எழுத்தர் தேர்வில் தேர்ச்சி விகிதத்தையும் அதிகரிக்க வேண்டியது அவசியம் என்கின்ற அடிப்படையில் நமது NFPE அஞ்சல் மூன்று தமிழ்மாநில சங்கம் எடுத்திட்ட மாபெரும் முயற்சியால் அன்புத்தலைவர் அண்ணன் KVS மாநிலசெயலர் சகோதரர் வீரமணி அவர்களின் வழிகாட்டுதலில் நடைபெற்ற இலாகா தேர்விற்க்கான பயிற்சி வகுப்புகள் இன்று பெருமளவிற்கு கைகொடுக்க எந்த கோட்டத்திலும் VACANCY க்கு குறைவான தேர்ச்சி இல்லாமல் பங்கேற்ற அனைவரும் தேர்ச்சி பெற்றிருப்பது நமது NFPE பேரியக்கம் காட்டிய வழிகாட்டுதல்கள் என்பது மிகையாகாது .தேர்ச்சி பெற்ற அனைவரையும் மீண்டும் NELLAI --NFPE வாழ்த்துகிறது ..அஞ்சல் மூன்று சங்கத்திற்கு உங்களை அன்போடு அழைக்கிறது வாருங்கள் ---வாழ்த்துக்கள் 

தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Wednesday, February 9, 2022

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே ! வணக்கம் 

                              நேற்று 08.02.2022அன்று நடைபெற்ற மாதாந்திர பேட்டியில் விவாதிக்கப்பட்ட விசயங்கள் உங்கள் பார்வைக்கு தரப்பட்டுள்ளன .

1.தோழர் R .சண்முக சுப்ரமணியன் (APS  ) LSG PA பாளை அவர்களுக்கு முன்னதாக மறுக்கப்பட்ட TRANSFER  TA  மண்டல நிர்வாக பரிந்துரையை அடுத்து TRANSFER  TA    BILL ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது ..

2.வள்ளியூர் அஞ்சலகத்தில் நிலவிவந்த மெயில் பிரச்சினைக்கு தீர்வு கானும் வகையில் வள்ளியூர் உள்ளிட்ட தென்பகுதிகளுக்கு புதிய மெயில் வேன் SCHEDULE மண்டல நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்டுள்ளது ..விரைவில் முதல்கட்டமாக வாடகை குறித்த டெண்டர் கோரப்பட்டு அறிமுகப்படுத்தப்படுகிறது 

\3.சமீபத்தில் வெளியிடப்பட்ட LSG ஊழியர்களுக்கான கோட்ட அளவிலான வரைவு  சீனியாரிட்டி பட்டியல் குறித்து விவாதிக்கப்பட்டு கேடெர் சீரமைப்பு வந்தபின் மாநில அளவிலான சீனியாரிட்டி தான் நடைமுறையில் இருக்கிறது என்றும் கோட்ட அளவிலானLSG  சீனியாரிட்டி பட்டியலை ரத்துசெய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது 

4.கோவிட் மூன்றாம் அலையில் கொரானாவால் பாதிக்கப்பட்ட ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களால் தனிமைப்படுத்திக்கொண்ட நமது தோழியர்களுக்கு வழங்கப்பட்ட விடுப்பினை CCL ஆக மாற்றிக்கொள்ள ஏற்றுக்கொள்ளப்பட்டது 

.5புதிய .DSM நியமிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது .ஆனால் தற்சமயம் இருக்கின்ற DSM நான்குபேர் போதுமென்று கோட்டநிர்வாகம் விடாப்பிடியாக இருந்தது .நீண்ட விவாதத்திற்கு பிறகு DSM தரப்பில் இருந்து REPRESENTATION ஏதும் வந்தால் பின்னர் பரிசீலிக்கப்படும் என முடிக்கப்பட்டது 

6.சங்கர்நகர்  SO விற்கு புதிய PASSBOOK பிரிண்டர் வழங்கப்படும் 

7.களக்காடு SO விற்கு சேமிப்பு பிரிவு வேலைநேரம் மாற்றம் குறித்து ASP   TVL அவர்களின் ரிப்போர்ட் வந்தவுடன் முடிவெடுக்கப்படும் 

8.திருநெல்வேலி HO அக்கௌன்டன்ட் பதவி விரைவில் நிரப்பப்படும் 

              பேட்டி முடிந்தபின் SSP அவர்களும் கணக்குகள் பிடிப்பது சம்பந்தமாக உங்களிடம் நான் பேசவேண்டும் என்று டார்கெட் குறித்த விளக்கங்களை கூறினார்கள் .நாமும் நமது NFPE யை பொறுத்தவரை டார்கெட் புதியவணிகம் இவைகளுக்கு நாங்கள் எதிரிகள் அல்ல என்றும் ஆனால் டார்கெட் என்கின்ற பெயரில் ஊழியர்க்ளுக்கு மனஉளைச்சல் ஏற்படுத்தும் அதிகாரிகளின் நடவடிக்கைகளை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்கின்ற நமது நிலைப்பாட்டை எடுத்து கூறினோம் .SSP அவர்களும் அதை ஏற்றுக்கொண்டு WELFARE விசயத்தில் தான் எப்பொழுதும் ஊழியர்க்ளுக்கு சாதகமாக இருப்பேன் என்றும் தெரிவித்தார்கள் ...அதையே தான் நாங்களும் விரும்புகிறோம் என்கின்ற ஒரு புரிந்துணர்வோடு மாதாந்திர பேட்டி சுமுகமாக முடிவுற்றது ...இந்தமாதம் தோழர் ராமேஸ்வரன் புதிதாக பேட்டிக்கு அழைத்து செல்லப்பட்டார் ..அடுத்த மாத பேட்டி  09.03.2022 அன்று நடைபெறுகிறது .மகளீர் தினத்தை முன்னிட்டு முற்றிலும் தோழியர்களுக்கு பேட்டியில் கலந்துகொள்ள வாய்ப்புகள் வழங்கப்படும் --

நன்றி ..தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் 


Friday, February 4, 2022

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் 

                                                             முக்கிய செய்திகள் 

நமது துறைக்கு IT Modernisation Project 2.0 திட்டத்தின் கீழ் ரூபாய் 5785 கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளது .இதன்மூலம் நமது நெட்ஒர்க் ,சேமிப்பு , இன்சூரன்ஸ் ,டேட்டா சென்டர் மற்றும் CSI உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலிலும் நவீனமயமா க்கப்படுகின்றன .தற்சமயம் நம்மிடம் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் உள்ள ஒப்பந்தங்கள் முடிவுக்கு வரும் சூழலில் இந்த  மாற்றங்கள் செய்யப்படவுள்ளன .

                                       ஏற்கனவே e -PAN  UPDATION நாம் மேற்கொண்டுவருகிறோம் .இனி  e -TDS  முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது .நமது சேமிப்பு கணக்குளில் ஈட்டப்படும் அனைத்து வகையான வட்டிகளும் சாதாரண SB உட்பட அனைத்தும் வாடிக்கையாளரின் TDS கணக்கில் பிரதிபலிக்கும் ....

                                 மேலும் நிதி அமைச்சர் அறிவித்தபடி அஞ்சலகங்கள் வங்கிகளோடு இணைக்கப்படும் என்கின்ற அறிவிப்பு நமது IPPB யை மனதில் வைத்துக்கொண்டு அறிவிக்கப்பட்ட திட்டமாக கூட இருக்கலாம் .அஞ்சலக சேமிப்பு கணக்குகள் எல்லாம் IPPB க்கு மடைமாற்றம் செய்யக்கூடிய அறிகுறிகள் தெரிகின்றன 

பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ? – நாங்கள் சாகவோ?’என்று கேட்டார் மகாகவி பாரதி.

அந்த அடிப்படையில் தான் நவீனப்படுத்துதல் என்ற பெயரில் அஞ்சல் துறையை அழகு படுத்துவது எதற்க்காக ?என்பதையும் நாம் சிந்திக்கவேண்டிய விசயங்கள் ...நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 


Thursday, February 3, 2022

 அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !  வணக்கம் .

இந்த ஆண்டிற்க்கான சுழல் மாறுதல் அறிவிப்பு வந்துள்ளதை தாங்கள் அறிவீர்கள் .PA கேடரில் 47ஊழியர்களும் LSG கேடரில் 17 பேரும் இந்த ஆண்டு TENURE முடிக்கிறார்கள் PA கேடரில் நமது கோட்ட பணிமூப்பு பட்டியலின் படி சீனியாரிட்டி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது .தோழர்கள் தங்கள் சீனியாரிட்டி அடிப்படையில் தங்கள் விருப்ப தேர்வை தேர்வு செய்துகொள்ள அறிவுறுத்த படுகிறார்கள் ...கொரானா பாதிப்புக்குள்ளானவர்கள்/பிற மருத்துவ காரணங்கள் உள்ளவர்கள்  EXTENSION கேட்டு பெறலாம் .

நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை