NFPE -P3
தமிழ் மாநிலம்
627006
-------------------------------------
அன்பார்ந்த தோழர்களே!
தோழியர்களே!
NFPTE -சம்மேளன நாள்
24.11.1954
அனைவருக்கும் சம்மேளன நாள் வாழ்த்துக்கள்
---------------------------------------------
``இவ்வளவுக்குப் பிறகும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது?!’’ -
இந்த வரிகள் எழுத்தாளர் தோழர் பிரபஞ்சன் அவர்களின் வரிகள்.
இவ்வளவுக்குப் பிறகும் என்ற வார்த்தைகளில்
எவ்வளவு சோதனைகள் ,சவால்கள் ,சதிகள் ,தாக்குதல்கள் என அனைத்திற்கு பிறகும் ஓரு பூ பூப்பது என்பது எவ்வளவு நம்பிக்கை தரும் செய்தியாகும்.
அதைப்போலத் தான் நமது NFPE இயக்கமும் NFPTE என 24.11.1954 ல் உதயமான நாள் முதல் சந்தித்த சவால்கள் சாதாரனவைகள் அல்ல..
உயிர்பலி ,உடமைகள் இழப்பு ,பணி இடை நீக்கம் ,ஊதிய வெட்டு ,ஊதிய பிடித்தம் ,பழி வாங்கல்கள் ,தொலைதூர இடமாற்றங்கள் ,என எல்லா அம்புகளும் தாக்கிய பின்பும் இன்குலாப் ஜிந்தாபாத் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
ஏற்கனவே இரண்டு முறை நிர்வாகத்தால் அங்கீகாரத்தை இழந்தது முதல் கடைசியாக 26.04.2023 அன்று அங்கீகாரம் பறிக்கப்பட்ட பின்னனியிலும் இன்னும் ஊழியர்கள் நலன் சார்ந்த பிரச்சனைகள் குறித்து எழுதுவது ,விவாதிப்பது ,ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது என்பது இந்த NFPE சங்கத்திற்கு மட்டுமே சாத்தியம்.
நூற்றாண்டு கடந்த கவிதை இன்னறவும் சாகாவரம் பெற்ற கவிதை நினைவுக்கு வருகிறது.இது நமது NFPE க்கு எவ்வளவு பொருத்தமானது பாருங்கள் ..
தொழிலாளர் இயக்கம்
பத்தாயிரம் முறை
விழும்;எழும்; வடுபடும்;
மறுபடியும் எழும்!
அதன் குரல்வளை இறுக்கப்படும்!
உணர்வற்றுப்போகும் வரை தொண்டை அடைக்கப்படும்!
நீதிமன்றம் கேள்விக் கணைகளைத் தொடுக்கும்!
ஓடுகாலிகளால்
மறுப்புறைகள் கூறப்படும்!
சூதாடிகளால் பலி கொடுக்கப்படும்!
உளவாளிகளின் ஒற்றறியும் நோயால் பீடிக்கப்படும்!
கோழைகளால் நடு வீதியில் விடப்படும்!
துரோகிகளால் வஞ்சிக்கப்படும்!
அட்டைகளால் உறிஞ்சப்படும்!
தலைவர்களால் கூட விற்றுவிடப்படும்!
ஓ.........
*இத்தனை சோதனைகள் இருந்தாலும்
இதன் வெற்றி சர்வ நிச்சயமே!
-யூஜின் விடப்ஸ்
இந்த நம்பிக்கையில் தொடர்ந்து பயணிப்போம்.
ஆம்.இவ்வளவுக்குப் பிறகும் இந்த NFPE பூக்கத்தான் போகிறது
வாழ்க ! NFPTE
வெல்க NFPE
தோழமை வாழ்த்துக்களுடன்
S.K.ஜேக்கப் ராஜ்
மாநிலச் செயலாளர்
0 comments:
Post a Comment