...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, January 16, 2013

எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு வீரவணக்கம் 

 நெருக்கடிகளின் போது நாட்டை பாதுகாக்க அரசுக்கு  முழு 

ஒத்துழைப்பு கொடுப்போம் . 


ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில், பாகிஸ்தான் இராணுவத்தினர் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை மீண்டும் அமைதி ஒப்பந்தத்தை மீறும் வகையில் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
உள்ளூர் நேரம் மாலை 5.45 மணியளவில், பாகிஸ்தான் இராணுவம் இந்திய படைகளை நோக்கி இத்துப்பாக்கிச்சூடு தாக்குதலை நடத்தியதாக, இந்திய இராணுவ தளபதிகளில் ஒருவரான ஆர்.கே.பட்லா தெரிவித்துள்ளார்.

எனினும் இத்தாக்குதலில் இந்திய தரப்பில் எவருக்கும் உயிர்ச்சேதமோ, காயமோ ஏற்பாடவில்லை என்பதால் பதில் தாக்குதல் நடத்தவில்லை எனவும் அவர் தெரிவித்தார். நேற்று பாகிஸ்தான் இராணுவ உயர்மட்ட வட்டாரங்களுடன் இந்தியா நடத்திய பேச்சுவார்த்தையின் போது,  பாகிஸ்தானின் அமைதி ஒப்பந்தத்தை மீறும் செயல்களை இந்திய தரப்பினர் பொருத்துக்கொண்டிருக்க மாட்டார்கள் எனவும் திருப்பி தாக்குதல் நடத்த உரிமை இருப்பதாகவும் இராணுவ தளபதி ஜெனரல் பிக்ராம் சிங் எச்சரிக்கை விடுத்திருந்தார். எனினும் இப்பேச்சுவார்த்தையின் பின்னரும் ஐந்து தடவைக்கு மேல் பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.

இதேவேளை பிரதமர் மன்மோகன் சிங்கும் பாகிஸ்தான் தாக்குதலுக்கு தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். கடந்த வாரம் இந்திய இராணுவ வீரர்களை படுகொலை செய்து அவர்களில் ஒருவரின் தலையை துண்டித்து எடுத்து சென்ற பாகிஸதான் இராணுவத்துடன், இனி வழமையான பேச்சுவார்த்தைக்கு இடமில்லை. இந்த அராஜகமான செயலுக்கு பொறுப்பானவர்களுக்காக பாகிஸ்தான் விரைவில் வருந்தும். குறித்துவைத்து கொள்ளுங்கள் என பிரதமர் தெரிவித்திருந்தார்.

0 comments:

Post a Comment